16.07.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நாடகத்தின் மிகச்சரியான ஞானத்தைக் கொண்டிருப்பதனால் மாத்திரமே, உங்களால் அசைக்க முடியாதவராகவும், ஸ்திரமாகவும் இருப்;பதுடன் நிலையானதொரு ஸ்திதியையும் கொண்டிருக்க முடியும்: மாயையின் புயல்களால் உங்களை அசைக்க முடியாது.
பாடல்:
தேவர்களின் எந்தப் பிரதான தெய்வீகக்குணம் குழந்தைகளாகிய உங்களில் எப்போதும் புலப்பட வேண்டும்?பதில்:
முகமலர்ச்சியுடன் இருப்பது. தேவர்கள் எப்போதும் முகமலர்ச்சியுடனும் புன்னகையுடனும் காட்டப்படுகின்றார்கள். அதேபோன்று, குழந்தைகளாகிய நீங்களும் சதா முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும். என்ன நிகழ்ந்தாலும், தொடர்;ந்து புன்னகைத்தவாறு இருங்கள். ஒருபோதும் துக்கத்தையோ, கோபத்தையோ அனுமதிக்காதீர்கள். தந்தை உங்களுக்கு எது சரி, எது பிழை என்பனவற்றின் புரிந்துணர்வைக் கொடுக்கின்றார். அவர் ஒருபோதும் உங்களுடன் கோபப்படுவதோ, சந்தோஷமற்றிருப்பதோ இல்லை. எனவே குழந்தைகளாகிய நீங்களும் சந்தோஷமற்றவர் ஆகக்கூடாது.ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தை எல்லையற்ற குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஒரு லௌகீகத் தந்தை இவ்வாறு கூறமாட்டார். அவருக்கு 5 அல்லது 7 குழந்தைகள் இருக்கலாம். இங்கே, ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்களே. அவர்கள் அனைவருக்கும் நிச்சயமாகத் தந்தை இருக்க வேண்டும். தாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்று மக்கள் கூறுகிறார்கள். அவர்கள் இதனை அனைவருக்குமாகக் கூறுகிறார்கள். எவர் வந்தாலும் அவர்கள் ‘நாங்கள் சகோதரர்கள்’ என்றே கூறுகின்றார்கள். நாடகத்தில் அனைவரும் கட்டுண்டுள்ளார்கள். இதனை எவருமே அறியமாட்டார்கள். அறியாமல் இருப்பதும் நாடகத்திலே நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை மாத்திரமே வந்து இவை அனைத்தையும் உங்களுக்குக் கூறுகிறார். மக்கள் சமயக்கதைகளைக் கூறும்போது, அவர்கள் கூறுகிறார்கள்: பரமாத்மாவான பரமதந்தைக்கு வந்தனங்கள். ஆனால், அவர் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் கூறியிருக்கிறார்கள்: பிரம்மதேவர், விஷ்ணுதேவர், சங்கர்தேவர், ஆனால் அவர்கள் இதனைப் புரிந்துணர்வுடன் கூறுவதில்லை. உண்மையில், பிரம்மாவைத் தேவர் என்று அழைக்க முடியாது. ஆனால் விஷ்ணு தேவர் என்று அழைக்கப்படுகின்றார். பிரம்மாவைப்பற்றி எவருக்குமே தெரியாது. ‘விஷ்ணுதேவர்!’ எனக் கூறுவது சரியாகும். ஆனால் சங்கரருக்குப் பாகம் இல்லை. அவருக்குச் சுயசரிதையும் இல்லை. ஆனால் சிவபாபாவின் சுயசரிதை உள்ளது. அவர் இங்கு வந்து தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கிப் புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். ஒரேயொரு ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் இப்பொழுது ஸ்தாபிக்கப்பட்டு, ஏனைய சமயங்கள் அனைத்தும் அழிக்கப்படவுள்ளது. அனைவரும் எங்கே செல்கின்றார்கள்? அமைதிதாமத்திற்கே. அனைவரது சரீரங்களும் அழிக்கப்படும். புதிய உலகில் நீங்கள் மாத்திரமே இருப்பீர்கள். நீங்கள்; அனைத்துப் பிரதான சமயங்களையும் அறிவீர்கள். அவை அனைத்தினது பெயர்களையும் உங்களால் குறிப்பிட முடியாது. பல சிறிய கிளைகளும், கொப்புகளும் உள்ளன. அனைத்திற்கும் முதலில் தேவதர்மமும் பின்னர் இஸ்லாம் மதமும் உள்ளது. இவ்விடயங்கள் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவரது புத்தியிலும் இல்லை. அந்த ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இப்பொழுது மறைந்து விட்டது. இதனாலேயே ஆலமரத்தின் உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமரமும் இருந்த போதிலும், அதன் அத்திவாரம் இல்லை. ஓர் ஆலமரம் நீண்ட ஆயுட்காலத்தைக் கொண்டது. இங்கே, தேவதர்மம் மிகவும் நீண்ட காலஎல்லையைக் கொண்டுள்ளது. அது மறையும் போதே தந்தையால் வந்து கூறமுடியும்: இப்பொழுது ஒரு தர்மம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதால் ஏனைய சமயங்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். இதனாலேயே திரிமூர்த்தி உருவாக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. கடவுளே அதிமேலானவர் என்றும் அதன் பின்னர் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் உள்ளார் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பின்பு நீங்கள் பூமிக்கு வரும் போது, தேவர்களைத் தவிர வேறு எந்த தர்மமும் இருக்க மாட்டாது. பக்தி மார்க்கமும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. முதன்; முதலில் மக்கள் சிவனை வழிபடுகிறார்கள், அதன் பின்னர் தேவர்களை வழிபடுகின்றார்கள். இது பாரதத்திற்கு மாத்திரமே பொருந்தும், ஏனெனில் ஏனைய மக்களுக்கு தங்கள் சமயம் அல்லது பிரிவு எப்பொழுது ஸ்தாபிக்கப்பட்டது என்பது தெரியும். ஆரியர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் மிகவும் புராதனமானவர்கள். உண்மையில், ஆதிசனாதன தேவிதேவதா தர்மமே மிகப்பழையதாகும். நீங்கள் விருட்சத்தின் படத்தை விளங்கப்படுத்தும் போது, தங்கள் சமயம் இன்ன இன்னநேரத்தில் ஆரம்பமாகியது என்பதை அவர்களாகவே புரிந்து கொள்ள முடியும். முன்னரே நிச்சயிக்கப்பட்ட, ஆதி அநாதியாகத் தாங்கள் பெற்ற பாகங்களை ஒவ்வொருவரும் நடிக்க வேண்டும். நீங்கள் எவர் மீதும் குற்றம் சுமத்தவோ, அல்லது இது இன்னாரது தவறு என்று கூறவோ முடியாது. நீங்கள் ஏன் பாவ ஆத்மாக்கள் ஆகினீர்கள் என்பது விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தாங்கள் அனைவருமே, எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்று மக்கள் கூறுகிறார்கள். அவ்வாறாயின், சகோதரர்கள் அனைவரும் ஏன் சத்தியயுகத்தில் இருப்பதில்லை? எவ்வாறாயினும், அது நாடகத்தின் பாகம் அல்ல. இந்த அநாதியான நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அதன் மீது நம்பிக்கை கொண்டிருங்கள். வேறு எதனையும் கூறாதீர்கள்! சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பது உங்களுக்குக் காட்டப்பட்டுள்ளது. கல்பவிருட்சத்தின் படமும் உள்ளது. எனினும் அதன் கால எல்லை என்னவென்பது எவருக்கும் தெரியாது. தந்தை எவரையும் இகழ்வதில்லை. ஆனால் அவர் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் எந்தளவு தூய்மையாக இருந்தீர்கள் என்பதையும் அவர் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இப்பொழுது தூய்மையற்றவராகியதால், நீங்கள் கூவியழைக்கிறீர்கள்: ஓ! தூய்மையாக்குபவரே வாருங்கள்! அனைத்திற்கும் முதலில் நீங்கள் அனைவரும் தூய்மையாக வேண்டும். அதன்பின் வரிசைக்கிரமமாக கீழிறங்கி, உங்கள் பாகங்களை நடிக்கிறீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் மேலேயே வசிக்கிறார்கள். தந்தையும் மேலேயே வசிக்கின்றார். பின்னர் நீங்கள் அவரை வருமாறு கூவியழைக்கிறீhகள். நீங்கள் அவரைக்கூவி அழைப்பதால், அவர் வருவதில்லை. தந்தை கூறுகிறாhர்: என்னுடைய பாகமும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஒரு எல்லைக்குட்பட்;ட நாடகத்தில், கதாநாயக நடிகர்களுக்கு ஒரு பிரதான பாகம் உள்ளதைப் போன்று இதுவும் ஓர் எல்லையற்ற நாடகமாகும். அனைவரும் நாடகம் என்ற பந்தனத்தில் கட்டுண்டுள்ளார்கள். நீங்கள் ஒரு நூல் இழையினால்; கட்டுண்டுளீர்கள் என்பது இதன் அர்த்தம் அல்ல. இல்லை, அது ஓர் உயிரற்ற விருட்சம் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். விதை உயிருள்ளதாக இருந்தால், எவ்வாறு மரம் வளர்கிறது என்றும் அது எவ்வாறு பழங்களைக் கொடுக்கின்றது என்பதும் அதற்குத் தெரியும். அந்த ஒரேயொருவரே இந்த மனித உலக விருட்சத்தின் உயிருள்ள விதையாவார். இது தலைகீழான விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. தந்தை ஞானம் நிறைந்தவர் ஆவார். அவர் முழுவிருட்சத்தினதும் ஞானத்தைக் கொண்டுள்ளார். இது கீதையின் அதே ஞானமாகும். இது எதுவும் புதியது அல்ல. பாபா இங்கு வாசகங்கள் எதனையும் கூறுவதில்லை. அம்மக்கள் கிரந்தத்தைக் கற்றபின் அமர்ந்திருந்து அதன் அர்த்தத்தை விளங்கப்படுத்துகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இது ஒரு கல்வி ஆகும். இதற்கு வாசகங்களுக்கான அவசியமில்லை. அந்த சமயநூல்களின் கல்வியில் எந்த இலக்கோ இலட்சியமோ இல்லை. அவர்கள் ஞர்னத்தையும், பக்தியையும் விருப்பமின்மையைப் பற்றியும் பேசுகிறார்கள். இப்பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. சந்நியாசிகள் எல்லைக்குட்பட்ட விருப்பமின்மையைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருக்கிறீர்கள். சங்கராச்சாரியார் வரும் போது, வீட்டின் மீதும், குடும்பத்தின் மீதும் விருப்பமின்மையைக் கொண்டிருங்கள் என்று அவர் மக்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் முதலில், சமய நூல்கள் போன்றவற்றைக் கற்பிப்பதில்லை. பெருமளவு விரிவாக்கம் ஏற்பட்டபோதே மக்கள் சமயநூல்களை எழுத ஆரம்பித்தார்கள். ஒரு சமயம் ஸ்தாபிக்கப்படும் பொழுது, ஒரேயொருவர் மாத்திரமே இருப்பார், பின்னர் படிப்படியாக விரிவாக்கம் இடம்பெறுகிறது. உலகின் முதலாவது தர்மம் எதுவென்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது பல சமயங்கள் உள்ளன. சுவர்க்கம் என்று அழைக்கப்பட்ட ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் இருந்தது. படைப்பவரையும் படைப்பையும் அறிந்து கொள்வதனால், குழந்தைகளாகிய நீங்கள் ஆஸ்திகர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் நாஸ்திகர்கள் ஆகும்போது, பெருமளவு துன்பம் உள்ளது. நீங்கள் அநாதைகளாகி உங்கள் மத்தியில் நீங்கள் தொடர்ந்தும் சண்டை சச்சரவுகள் செய்கின்றீர்கள். கூறப்பட்டுள்ளது: நீங்கள் உங்கள் மத்தியில் தொடர்ந்தும் சண்டை இடுகின்றீர்கள், “ஒரு பிரவுவையும், அதிபதியையும் நீங்கள் கொண்டிருக்கவில்லையா?” இந்நேரத்தில் அனைவரும் அநாதைகள். புதிய உலகில் தூய்மை, அமைதி, சந்தோஷம் ஆகியன இருந்தன. உண்மையில் அனைத்தும் இருந்தன. அங்கு அளவற்ற சந்தோஷம் இருந்தது. ஆனால் இங்கு அளவற்ற துன்பமே உள்ளது. அது சத்தியயுகத்திலும், இது கலியுகத்திலும் உள்ளது. இப்பொழுது இது உங்கள் அதி மங்களகரமான சங்கமயுகம் ஆகும். ஒரேயொரு மங்களகரமான சங்கமயுகமே உள்ளது. சத்திய திரேதாயுகங்களின் சங்கமத்தை, மங்களகரமானது என்று அழைக்க முடியாது. அங்கே தேவர்கள் உள்ளார்கள். ஆனால் இங்கு அசுரர்களே உள்ளார்கள். இது இராவண இராச்சியம் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் இராவணனின் தலையென ஒரு கழுதையின் தலையைக் காட்டுகிறார்கள். ஒரு கழுதையை எவ்வளவுதான் சுத்தமாக்கி ஆடைகளை அதன்மேல் வைத்தாலும், அது புழுதியில் உருண்டு ஆடைகளை அழுக்காக்கிவிடும். தந்தை உங்கள் ஆடைகளைச் சுத்தமாக்குவதுடன். உங்களை அழகானவாராகவும் ஆக்குகின்றார். பின்னர், நீங்கள் இராவண இராச்சியத்தில் உருண்டு தூய்மையற்றவராகுகிறீர்கள். ஆத்மா, சரீரம் ஆகிய இரண்டும் தூய்மையற்றதாகுகின்றது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்கள் அலங்காரம் அனைத்தையும் இழந்துவிட்டீர்கள். தந்தை தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுகிறார். நீங்கள் சத்தியயுகத்தில் இருந்தபோது, எவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்தீர்கள் என்பதை, நீங்கள் முழு ஒன்றுகூடலின் முன்னிலையிலும் கூறலாம். அத்தகைய முதற்தரமான இராச்சிய பாக்கியத்தைக் கொண்டிருந்த நீங்கள், பின்னர் மாயையின் புழுதியில் உருண்டு அழுக்காகிவிட்டீர்கள். தந்தை கூறுகிறார்: இது இருள் சூழ்ந்த நகரம். அவர்கள் கடவுள் சர்வவியாபி எனக் கூறியுள்ளார்கள். என்னென்ன நிகழ்ந்ததோ அது மீண்டும் அதேபோன்றே இடம்பெறும். இதையிட்டுக் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை. 5000 வருடங்களில், ஒவ்வொரு சமயத்திலும், எத்தனை மணித்தியாலங்கள், நிமிடங்கள், வினாடிகள் உள்ளன என்பதை ஒரு குழந்தை கணக்கிட்டார். அதில் அவர் தனது புத்தியை வீணாக்கியுள்ளார். உலகம் எவ்வாறு தொடர்கிறது என்று பாபா விளங்கப்படுத்துகின்றார். பிரஜாபிதா பிரம்மா முப்பாட்டானார். அவரது தொழில் என்னவென்பது எவருக்குமே தெரியாது. அவர்கள் பல்ரூப வடிவங்களை உருவாக்கியுள்ளார்கள், ஆனால் அதில் பிரஜாபிதா பிரம்மாவை ஒதுக்கி விட்டார்கள். அவர்கள் தந்தையையோ அல்லது பிராமணர்களையோ மிகச்சரியாக அறியமாட்டார்கள். அவர்கள் அவரை ஆதிதேவ் என்று அழைக்கிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நானே இவ் விருட்சத்தின் உயிருள்ள விதையாவேன். இது ஒரு தலைகீழான விருட்சமாகும். சத்தியமானவரும் உயிருள்ளவரும், ஞானக்கடலுமான தந்தையே புகழப்படுகின்றார். சரீரத்தில் ஓர் ஆத்மா இல்லாவிட்டால், அந்த சரீரத்தினால், அசைய முடியாது. ஓர் ஆத்மா ஒரு கருப்பையினுள் 4, 5 மாதத்தின் பின்னர் பிரவேசிக்கின்றார். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. பின்னர், ஆத்மா சரீரத்தைவிட்டு நீங்கும்போது, அனைத்தும் முடிவடைந்துவிடும். ஆத்மா அழிவற்றவர். அவர் தனது பாகத்தை நடிக்கின்றார். தந்தை வந்து, ஓர் ஆத்மா சின்னஞ்சிறிய புள்ளி என்றும் அவருக்குள்; அழியாத ஒரு பாகம் பதியப்பட்டுள்ளது என்றும் உங்களை உணரச் செய்கின்றார். பரமதந்தையும் ஓர் ஆத்மாவே, அவர் ஞானக்கடல் என்று அழைக்கப்படுகிறார். நீங்கள் ஓர் ஆத்மா என்று உங்களை உணரச் செய்கின்றார். கடவுள் சர்வசக்திவான் என்றும், அவர் ஆயிரம் சூரியன்களிலும் பார்க்க பிரகாசமானவர் என்று அம்மக்கள் கூறியபோதிலும், அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. தந்தை கூறுகின்றார்: அவர்கள் அவை அனைத்தையும் பக்திமார்க்கத்தில் விபரித்துள்ளதுடன் சமயநூல்களிலும் எழுதியுள்ளார்கள். அர்ச்சுனனுக்கு ஒரு காட்சி கொடுக்கப்பட்டபோது, அவர் கூறினார்: அந்தளவு பிரகாசத்தை என்னால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. எனவே அந்தக் கருத்து, மக்களின் புத்தியில் நிலைத்துள்ளது. பிரகாசமானதொன்று எவரிலேனும் பிரவேசித்தால், அவர் வெடித்து விடுவார்! அவர்களுக்கு ஞானம் எதுவும் இல்லை. எனவே, கடவுள் ஆயிரம் சூரியன்களையும் விட, பிரகாசமானவர் என்று எண்ணுவதால், அவரின் காட்சியைப் பெற அவர்கள் விரும்புகின்றார்கள். அந்த பக்திப் பரவசத்தில் அவர்கள் இருக்கின்றார்கள். அப்பொழுது அவர்களுக்கு அக் காட்சியும் கிடைக்கின்றது. ஆரம்பத்தில் உங்களிடம் வந்த பலர், காட்சிகளைப் பெற்றார்கள். அப்பொழுது அவர்களின் கண்கள் சிவந்து விடுவதுண்டு. அவர்கள் காட்சிகளைப் பெற்ற போதிலும், அவர்கள் இப்பொழுது எங்கே? அவை அனைத்தும் பக்திமார்க்கத்திற்கு உரிய விடயங்களாகும். தந்தை இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். இதில் இகழ்ச்சி என்ற கேள்விக்கே இடமில்லை. குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுதும் முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும். இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. மக்கள் என்னை அதிகளவில் அவமதித்த போதிலும், நான் என்ன செய்கின்றேன்? நான் கோபமடைகின்றேனா? அவர்கள் அனைவரும் நாடகத்திற்கு ஏற்ப, பக்திமார்க்கத்தில் சிக்குண்டுவிட்;டார்கள் என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். எனவே குழப்பமடைய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறாகவே நாடகம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அன்புடன் விளங்கப்படுத்த வேண்டும். அப்பாவி மக்கள் அறியாமை என்னும் காரிருளில் உள்ளார்கள். அவர்கள் புரிந்து கொள்ளாதிருப்பதால் நீங்கள் அவர்கள் மீது கருணை கொண்டிருங்கள். நீங்கள் சதா புன்னகைத்தவாறு இருக்கவேண்டும். அந்த அப்பாவி மக்களால் சுவர்க்க வாசலுக்கே வர முடியாதிருக்கும். அவர்கள் அனைவரும் அமைதிதாமத்திற்குச் செல்வதற்கு உள்ளார்கள். அனைவரும் அமைதியையே விரும்புகிறார்கள். எனவே தந்தை நிஜமான விடயங்களையே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கபட்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஒவ்வொருவரும் நாடகத்தில் ஒரு பாகத்தையும் பெற்றுள்ளார்கள். இதில் உங்களுக்கு அசைக்கமுடியாத ஸ்திரமான புத்தி தேவை. ஒரு ஆட்ட அசைக்க முடியாத ஒரு நிலையான ஸ்தியை நீங்கள் கொண்டிருக்கும் வரை உங்களால் எவ்வாறு முயற்சி செய்ய முடியும்? என்னதான் நிகழ்ந்தாலும், புயல்கள் வந்தாலும் நீங்கள் ஸ்திரமாக இருக்க வேண்டும். மாயையின் புயல்கள் பல வரும். அவை இறுதிவரை வரும். ஆனால், உங்கள் ஸ்திதி உறுதியாக இருக்க வேண்டும். இது ஒரு மறைமுகமான முயற்சியாகும். குழந்தைகளில் சிலர் முயற்சி செய்து, புயல்களைத் தொடர்ந்தம் விரட்டுகின்றார்கள். ஒருவர் இதில் எந்தளவு சித்தி அடைகின்றாரோ, அந்தளவிற்கு அவர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார். இராச்சியத்தில் பல வேறு மட்டத்தில் அந்தஸ்துகள் உள்ளன. திரிமூர்த்தியும் சக்கரமும் (ஒரு படம்), விருட்சமுமே சிறந்த படங்களாகும். இவை ஆரம்பத்திலே தயாரிக்கப்பட்டன. இந்த இரண்டு படங்களையும் நீங்கள் சேவைக்காக வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லலாம். அவர்களால் அதனை மிக நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். இப்படங்கள் துணியில் செய்யப்படுவதையே பாபா விரும்புகின்றார். அதுவும் நாளடைவில் நடக்கும். ஸ்தாபனை எவ்வாறு இடம்பெறுகிறது என்று நீங்கள் விளங்கப்படுத்தலாம். இதனை, நீங்களும் புரிந்துகொண்டால், உங்கள் சொந்த சமயத்தில் நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியும். கிறிஸ்தவ சமயத்தில் நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறவிரும்பினால், இதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த அதிமங்களகரமான சங்கமயுகத்தில் தூய்மையாகி உங்களை அலங்கரியுங்கள். மாயையின் புழுதியில் உருளுவதனால், உங்கள் அலங்காரத்தை ஒருபோதும் அழித்து விடாதீர்கள்.2. இந்த நாடகத்தை மிகச்சரியாகப் புரிந்துகொண்டு, உங்கள் ஸ்திதியை ஆட்ட அசைக்கமுடியாததாகவும், ஸ்திரமாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள். ஒருபோதும் குழப்பமடையாதீர்கள். எப்போதும் முகமலர்ச்சியுடன் இருங்கள்.
ஆசீர்வாதம்:
ஒவ்வொரு செயலையும் நன்றாகச் சிந்தித்து செயலாற்றுவதால், வருத்தப்படுவதில் இருந்து விடுபட்டிருக்கின்ற ஓர் ஞானம் நிறைந்த ஆத்மா ஆகுவீர்களாக.உலகில் சொல்லப்படுகின்றது: முதலில் சிந்தியுங்கள், பின்னர் செயலாற்றுங்கள். ஒரு செயலை செய்வதற்கு முன்னர் சிந்திக்காது செய்பவர்களும், செய்த பின்னர் அதனைப் பற்றி சிந்திப்பவர்களும் பின்னர் வருத்தப்பட நேரிடும். ஒன்றைச் செய்த பின்னர் அதனைப் பற்றி சிந்திப்பது என்றால் அதுவும் வருத்தப்படுவதன் வடிவமேயாகும், ஆனால் செய்வதற்கு முன்னர் சிந்திப்பது ஞானம் நிறைந்த ஆத்மாவின் குணாதிசியமாகும். துவாபர மற்றும் கலியுகங்களில் பலவிதமான வருத்தப்படுதல் இருந்தது. எவ்வாறாயினும், இப்பொழுது சங்கமயுகத்தில், நீங்கள் கவனமாக சிந்தித்த பின்னர் செயலாற்றுகிறீர்கள். உங்கள் மனதில் ஒரு விநாடியேனும், எவ்வகையான வருத்தமும் இல்லாத போதே, நீங்கள் ஒரு ஞானி ஆத்மா என அழைக்கப்படுவீர்கள்.
சுலோகம்:
கருணை நிறைந்தவராகவிருந்து, சகல தெய்வீகக் குணங்களையும் சக்திகளையும் தானம் செயபவர்களே மாஸ்ரர் அருள்பவர்கள் ஆவார்கள்.