16.07.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, அனைவருக்கும் சற்கதியை அருளி, ஜீவன்முக்தியை கொடுப்பவர் இப்பொழுது உங்கள் தந்தையாகி உள்ளார். நீங்கள் அவரின் குழந்தைகள் ஆவீர்கள். ஆகவே, நீங்கள் அதிகளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும்.
கேள்வி:
எக்குழந்தைகளின் புத்தியால் சதா பாபாவின் நினைவைக் கொண்டிருக்க இயலாதுள்ளது?பதில்:
முழுமையான நம்பிக்கை இல்லாதவர்களின் புத்தியால், பாபாவின் நினைவை சதா கொண்டிருக்க முடியாமல் உள்ளது. தமக்குக் கற்பிப்பவர் யார் என்பது அவர்களுக்குத் தெரியாவிட்டால், அவர்கள் யாரை நினைவு செய்வார்கள்? அவரை மிகச் சரியாக இனங்கண்டு, நினைவு செய்பவர்களின் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. தந்தை தானே வந்து, தன்னைப் பற்றியும், தனது வீட்டைப் பற்றியும் மிகச்சரியான அறிமுகத்தைக் கொடுக்கின்றார்.ஓம் சாந்தி.
‘ஓம் சாந்தி’ என்பதன் அர்த்தத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் சதா நினைவு செய்கின்றீர்கள். நான் ஓர் ஆத்மா, அசரீரி உலகமான நிர்வாணா, எனது வீடாகும். பக்தி மார்க்கத்தில் மக்கள் முயற்சி செய்கின்ற போதிலும், தாம் எங்கே செல்லவேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாது. எது சந்தோஷத்தைக் கொடுக்கின்றது என்பதையும், எது துன்பத்தைக் கொடுக்கின்றது என்பதையும் அவர்கள் அறியாது உள்ளார்கள். அவர்கள் யாகங்கள் வளர்க்கின்றார்கள், தபஸ்யா செய்கின்றார்கள், தான தர்மங்கள் போன்றவற்றைச் செய்கின்றார்கள். இருப்பினும் அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழே இறங்குகின்றார்கள். நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். ஆகையால், உங்கள் பக்தி முடிவிற்கு வந்துள்ளது. பெரிதாக மணியோசை கேட்பது போன்ற அனைத்தும் முடிவடைந்து விட்டன. அந்தப் புதிய உலகிற்கும் இந்தப் பழைய உலகிற்கும் இடையில் நிச்சயமாக வேறுபாடிருக்கும். அந்தப் புதிய உலகம் தூய்மையானது. குழந்தைகளாகிய உங்களது புத்தியில் இப்பொழுது சந்தோஷ உலகமே உள்ளது. சந்தோஷ உலகம் சுவர்க்கம் என்றும், இந்தத் துன்ப உலகம் நரகம் என்றும் அழைக்கப்படுகின்றது. மனிதர்களுக்கு அமைதி தேவைப்படுகிறது. ஆனால், எவராலும் அமைதி தாமத்திற்குச் செல்ல முடியாது. தந்தை கூறுகின்றார்: நான் பாரதத்திற்கு வரும்வரை, நான் இல்லாமல் குழந்தைகளாகிய உங்களால் வீடு திரும்ப முடியாது. பாரதத்தில் மாத்திரமே சிவனின் பிறப்பு நினைவு கூரப்படுகின்றது. அசரீரியானவர் நிச்சயமாகச் சரீரதாரியாக வருகின்றார். ஓர் ஆத்மாவால் சரீரம் இல்லாது என்ன செய்யமுடியும்? ஓர் ஆத்மாவிற்குச் சரீரம் கிடைக்கும்வரை அந்த ஆத்மா அலைந்து திரிகின்றார். அவரால் இன்னொருவரின் சரீரத்திற்குள் பிரவேசிக்க முடியாது. சில ஆத்மாக்கள் நல்லவர்கள். எனினும், சிலரோ மிகவும் விஷமத்தனம் நிறைந்தவர்கள் என்பதால் அவர்களால் பிறரைப் பித்துப் பிடிக்கச் செய்ய முடியும். ஓர் ஆத்மாவிற்கு நிச்சயமாக ஒரு சரீரம் தேவை. அவ்வாறே பரமாத்மாவான பரமதந்தைக்குச் சரீரம் இல்லாதிருந்தால், அவரால் பாரதத்திற்கு வந்து என்ன செய்ய முடியும்? பாரதம் அழியாத தேசமாகும். சத்திய யுகத்தில் ஒரேயொரு பாரத தேசம் மாத்திரமே உள்ளது. ஏனைய தேசங்கள் அனைத்துமே அழிந்துவிடும். ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இருந்தது என்று நினைவு கூரப்பட்டுள்ளது. அவர்கள் ஆதியும் அநாதியுமான இந்து தர்மத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். உண்மையில், ஆரம்பத்தில் இந்துக்கள் இருக்கவில்லை. தேவர்கள் மாத்திரமே இருந்தார்கள். ஐரோப்பாவில் வாழ்பவர்கள் தம்மைக் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கின்றார்கள். அவர்கள் ஐரோப்பிய சமயத்தைச் சேர்ந்தவர்கள் என நீங்கள் அழைப்பதில்லை. இந்துஸ்தானில் வாழ்பவர்கள் மாத்திரமே தாம் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்கின்றார்கள். மேன்மையான தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்ததால், அவர்கள் தமது சமயத்தில் சீரழிந்துள்ளார்கள். தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இங்கே வருவார்கள். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாதிருந்தால், அவர்கள் இந்த தர்மத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். அவர்கள் இங்கே அமர்ந்திருந்த போதிலும், அவர்களால் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் அங்கிருக்கும் பிரஜைகளின் மத்தியில் குறைந்தளவு அந்தஸ்தைக் கோருபவர்களாக இருக்கலாம். அனைவருமே அமைதியையும், சந்தோஷத்தையுமே விரும்புகின்றார்கள். ஆனால், சத்தியயுகத்தில் மாத்திரமே அது உள்ளது. அனைவராலும் சந்தோஷ தாமத்திற்குச் செல்ல முடியும் என்றில்லை. சகல சமயங்களும் தத்தமது நேரத்திற்கு ஏற்ப வருகின்றன. எண்ணற்ற சமயங்கள் உள்ளன. விருட்சம் தொடர்ந்தும் வளர்கின்றது. பிரதான பகுதியான அடிமரம் தேவதர்மம் ஆகும். அத்துடன் மூன்று பிரிவுகளும் உள்ளன. ஏனைய சமயங்கள் சுவர்க்கத்தில் இருக்க முடியாது. துவாபரயுகம் ஆரம்பிக்கும்போதே புதிய சமயங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. இது பல்வகை மனித விருட்சம் என அழைக்கப்படுகின்றது. பல்ரூப வடிவம் என்பது பல்வகை சமயங்களின் விருட்சம் என்பதில் இருந்து வேறுபட்டதாகும். பல்வேறு வகையான மனிதர்கள் உள்ளனர். எத்தனை சமயங்கள் உள்ளன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகத்தின் ஆரம்பத்தில், ஒரேயொரு தர்மம் மாத்திரமே இருந்தது. அது புதிய உலகம். புராதன பாரதம் வைகுந்தமாக இருந்தது என்பதையும், அது மிகவும் செல்வம் நிறைந்ததாக இருந்தது என்பதையும் வெளிநாட்டில் வாழ்பவர்களும் அறிவார்கள். ஆகையாலேயே பாரதம் பெரும் மரியாதைக்கு உரியதாக உள்ளது. ஒரு செல்வந்தர் ஏழையாகினால், ஏனையவர்கள் அவரின் மீது இரக்கம் காட்டுவார்கள். பாரதம் எவ்வளவு ஏழ்மை நிறைந்ததாகி உள்ளது எனப் பாருங்கள்! இது நாடகத்தின் ஒரு பாகமாகும். ‘கடவுளே அதிகபட்சக் கருணையை உடையவர் என்பதாலேயே அவர் பாரதத்திற்கு வருகின்றார்’ என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். செல்வந்தர்களே நிச்சயமாக ஏழைகள்மீது பரிவு காட்டுவார்கள். தந்தையிடம் எல்லையற்ற செல்வம் உள்ளது. அவர் எங்களை அதிமேலானவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் யாருடைய குழந்தைகள் ஆகியுள்ளீர்கள் என்பதையிட்டு அதிகளவு போதை கொண்டிருக்கின்றீர்கள். நாங்கள் பரமாத்மாவான பரமதந்தை சிவனின் குழந்தைகள் ஆவோம். அவரே ஜீவன்முக்தியை அருள்பவரும் சற்கதியை அருள்பவரும் என்று அழைக்கப்படுகின்றார். சத்திய யுகத்திலேயே முதலில் ஜீவன்முக்தி உள்ளது. இங்கே பந்தன வாழ்வே உள்ளது. ‘பாபா பந்தனத்தில் இருந்து எங்களை விடுவியுங்கள்’ என்று பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் கேட்கின்றார்கள். நீங்கள் இவ்வாறு இனிமேலும் அழைக்க முடியாது. தந்தையே ஞானக்கடல் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் உலக வரலாற்றினதும், புவியியலினதும் சாராம்சத்தை விளங்கப்படுத்துகின்றார். அவரே ஞானம் நிறைந்தவர் ஆவார். இவர் கூறுகிறார்: நான் கடவுள் அல்ல. நீங்கள் உங்கள் சரீரத்திலிருந்து பற்றற்றவராகி, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகவேண்டும். உங்கள் சரீரம் உட்பட முழு உலகையும் நீங்கள் மறக்க வேண்டும். இவர் கடவுள் அல்ல. நாங்கள் பாப்தாதா என்று அழைக்கப்படுகின்றோம். தந்தையே அதிமேலானவர். இது பழைய தூய்மையற்ற சரீரமாகும். ஒரேயொருவருக்கு மாத்திரமே புகழ் உள்ளது. அவருடனேயே நீங்கள் யோகம் செய்யவேண்டும். அப்பொழுது மாத்திரமே நீங்கள் தூய்மையாக முடியும். இல்லாவிட்டால், உங்களால் என்றுமே தூய்மையாக முடியாது. பின்னர் இறுதியில், தண்டனை அனுபவம் செய்யப்படுவதன் மூலம், உங்கள் பாவங்கள் எரிக்கப்பட்டு நீங்கள் வீடு திரும்புவீர்கள். பக்தி மார்க்கத்தில், நீங்கள் தொடர்ந்தும் ‘ஹம்சோ சோஹம்’ என்ற மந்திரத்தை, அதாவது ‘ஆத்மாவாகிய நானே பரமதந்தையான பரமாத்மா, அதாவது ஆத்மா ஆவேன்’ எனத் தொடர்;ந்தும் நீங்கள் செவிமடுத்திருக்கின்றீர்கள். அந்தப் பிழையான மந்திரம் உங்களைப் பரமாத்மாவான கடவுளிடம் இருந்து திசைதிருப்பி உள்ளது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே ‘ஆத்மாவாகிய நானே பரமாத்மா’ என்று கூறுவது முற்றிலும் பிழையாகும். பல்வேறு குலங்களின் முக்கியத்துவமும், குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் பிராமணர்கள், நாங்கள் தேவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்கின்றோம். தேவர்கள் ஆகிய பின்னர், நாங்கள் சத்திரிய குலத்தினர் ஆகுகின்றோம். எவருக்குமே நாங்கள் 84 பிறவிகள் எடுப்பதோ, எக்குலத்தில் எடுக்கின்றோம் என்பதோ தெரியாது. இப்பொழுது நீங்கள் பிராமணர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பாபா ஒரு பிராமணர் அல்ல. நீங்கள் மாத்திரமே அந்தக் குலங்களினூடாகச் செல்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது பிராமண தர்மத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் சிவபாபாவின் ஊடாக பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாகி உள்ளீர்கள். அசரீரியான ஆத்மாக்கள் ஆதியில் இறை குடும்பத்தினரே என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் அசரீரி உலகத்தைச் சேர்ந்தவர்கள். அதன் பின்னர், நாங்கள் சரீர உலகிற்குச் செல்கின்றோம். நாங்கள் எங்கள் பாகத்தை நடிப்பதற்கு இங்கே வரவேண்டும். நாங்கள் மேலிருந்து இங்கே வரும்போது, தேவ குலத்தில் எட்டுப் பிறவிகளை எடுக்கின்றோம். அதன் பின்னர் நாங்கள் சத்திரிய குலத்தினர் ஆகுகின்றோம். அதன் பின்னர் வைசிய குலத்தினர் ஆகுகின்றோம். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் தேவ குலத்தில் இத்தனை பிறவிகளையும், சத்திரிய குலத்தில் இத்தனை பிறவிகளையும் எடுத்தீர்கள். இந்தச் சக்கரம் 84 பிறவிகளை உள்ளடக்கியது. உங்களைத் தவிர வேறு எவராலும் இந்த ஞானத்தைப் பெறமுடியாது. இந்த தர்மத்திற்கு உரியவர்கள் இங்கே வருவார்கள். இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. சிலர் இராஜாக்களாகவும், சிலர் இராணிகளாகவும், ஏனையோர் பிரஜைகளாகவும் ஆகுவார்கள். சூரிய வம்சம் எட்டுப் பேரின் வம்சமாகும். அதாவது முதலாம் இலக்ஷ்மி நாராயணன், இராண்டாம் இலக்ஷ்மி நாராயணன், மூன்றாவது போன்றனவாகும். அதன் பின்னர் சத்திரிய தர்மத்தில் முதலாம், இரண்டாம், மூன்றாம் போன்றன இருக்கும். தந்தை இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். ஞானக்கடல் வரும்போது, பக்தி முடிவடைகின்றது. இரவு முடிவடைந்து பகல் ஆரம்பம் ஆகுகின்றது. அங்கு எந்தத் தடுமாறித் திரிதலும் இருக்க மாட்டாது. அங்கே ஓய்வும் சௌகரியமும் மாத்திரமே இருக்கும். அங்கே குழப்பங்களும் இருக்க மாட்டாது. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. பக்தி மார்க்கத்தின் இறுதியிலேயே தந்தை வருகின்றார். அனைவரும் நிச்சயமாக வீடு திரும்ப வேண்டும். அதன் பின்னர் அனைவரும் வரிசைக்கிரமமாகக் கீழே வருகின்றார்கள். கிறிஸ்து வரும்போது, அவரது சமயத்தைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து வருவார்கள். கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்று பாருங்கள்! கிறிஸ்துவே கிறிஸ்தவ சமயத்தின் விதை ஆவார். பரமாத்மாவான பரமதந்தை சிவன் தேவ தர்மத்தின் விதை ஆவார். பரமாத்மா பரமதந்தை உங்களது தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். பிராமண தர்மத்திற்கு உங்களை அழைத்து வந்தவர் யார்? தந்தை உங்களைத் தத்து எடுத்துள்ளார். ஆகையால், அதன் மூலமாகச் இந்தச் சிறிய பிராமண தர்மம் உருவாக்கப்பட்டது. பிராமணர்களின் உச்சிக்குடுமிகள் நினைவு கூரப்பட்டுள்ளன. உச்சிக்குடுமி ஓர் அடையாளம் மாத்திரமேயாகும். ஏனைய குலங்கள் அதனைத் தொடர்ந்து வருகின்றன, பின்னர் அவை வளர்ச்சி அடைகின்றன. தந்தை மாத்திரமே இங்கே அமர்ந்திருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். தந்தையே உபகாரி என்பதால், அவர் பாரதத்திற்கு உபகாரம் செய்ய வருகின்றார். அவர் அதிகபட்ச நன்மையை உங்களுக்கே உருவாக்குகின்றார். எவ்வாறாக இருந்த நீங்கள் எவ்வாறு ஆகியுள்ளீர்கள் என்று பாருங்கள்! நீங்கள் அமரத்துவ உலகிற்கு அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது காமத்தை வெற்றி கொள்கின்றீர்கள். அங்கே அகால மரணம் ஏற்படுவதில்லை. அங்கே மரணம் அடைவது என்ற கேள்விக்கு இடமில்லை. ஆனால் நீங்கள் உங்கள் ஆடையை மாற்றுகின்றீர்கள். ஒரு பாம்பு தனது தோலை நீக்கி இன்னொன்றை எடுப்பதைப் போன்றே, நீங்கள் இங்கே உங்கள் பழைய தோலை நீக்கிப் புதிய உலகில் புதியதொன்றை எடுப்பீர்கள். சத்தியயுகம் பூந்தோட்டம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கே எந்தக் கெட்ட வார்த்தைகளும் பேசப்படுவதில்லை. இங்கே, தீய சகவாசம் மாத்திரமே உள்ளது. அதாவது மாயையின் சகவாசம் மாத்திரமே உள்ளது. ஆகையாலேயே இது ஆழ் நரகம் என்று அழைக்கப்படுகின்றது. ஒரு கட்டடம் மிகவும் பழையதாகும் போது, நகரசபை அக்கட்டடத்தில் இருந்து வெளியேறுமாறு கட்டளையிடும். தந்தையும் கூறுகின்றார்: நான் உலகம் பழையதாகும் போதே வருகின்றேன். இந்த ஞானத்தின் மூலம் சத்கதி கிடைக்கின்றது. உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கப்படுகின்றது. பக்தியில் எதுவும் கிடையாது. ஆம், தான தர்மங்கள் செய்வதனால் தற்காலிகச் சந்தோஷமே பெறப்படுகின்றது. அரசர்கள் உலகின்மீது ஆர்வமின்மையைக் கொண்டிருப்பதற்கு சந்தியாசிகள் தூண்டுகின்றார்கள். இங்கிருக்கும் சந்தோஷம் காகத்தின் எச்சத்தைப் போன்றதாகும். குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற ஆர்வமின்மையைக் கொண்டிருப்பதற்கு இப்போது கற்பிக்கப்படுகிறது. இந்த உலகம் பழையது. இப்பொழுது சந்தோஷ உலகை நினைவு செய்யுங்கள். அதன் பின்னர் நீங்கள் அமைதி தாமத்தினூடாக அங்கே செல்வீர்கள். இந்த நேரத்திற்கான உங்கள் மிகச்சரியான ஞாபகார்த்தம் தில்வாலா ஆலயத்தில் உள்ளது. நீங்கள் தவத்தில் அமர்ந்திருப்பதைப் போன்று காட்டப்பட்டுள்ளது. உங்களுக்கு மேல் சுவர்க்கம் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. இல்லாவிட்டால் சுவர்க்கம் எங்கு காட்டப்பட முடியும்? ஒருவர் மரணிக்கும்போது, அவர் சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்டார் என்று கூறப்படுகின்றது. ஏனெனில், சுவர்க்கம் மேலிருப்பதாக அவர்கள் கருதுகின்றார்கள். எவ்வாறாயினும், மேலே எதுவுமே இல்லை. பாரதமே சுவர்க்கமாகவும், பாரதமே நரகமாகவும் ஆகுகின்றது. அந்த ஆலயம் மிகச்சரியான ஞாபகார்த்தமாகும். அந்த ஆலயங்கள் அனைத்தும் பின்னரே கட்டப்படுகின்றன. சுவர்க்கத்தில் பக்தி இருக்க மாட்டாது. அங்கே, சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. தந்தை வந்து உங்களுக்கு அந்த இரகசியங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்கள் அனைவரின் பெயர்களும் தொடர்ந்து மாறுகின்றன. சிவனின் பெயர் என்றுமே மாறுவதில்லை. அவருக்கென ஒரு சரீரமும் இல்லை. ஒரு சரீரம் இல்லாமல் அவரால் எவ்வாறு கற்பிக்க முடியும்? இதில் தூண்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. தூண்டுதல் என்றால் எண்ணங்கள் ஆகும். அவர் மேலிருந்து தூண்டுதல் அளித்து, அவை உங்களை வந்தடைகின்றன என்றில்லை. இதில் தூண்டுதல் அளித்தல் என்ற கேள்விக்கு இடமில்லை. தந்தையின் முழுமையான அறிமுகத்தைக் கொண்டிருக்காதவர்களாலும் முழுமையான நம்பிக்கையைக் கொண்டிருக்காதவர்களாலும் தமது புத்தியில் அவரின் நினைவை நிலைத்திருக்கச் செய்ய முடியாது. யார் தமக்குக் கற்பிக்கின்றார் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆகையால் அவர்கள் யாரை நினைவுசெய்ய முடியும்? தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதன் மூலம் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும். மக்கள் பிறவிபிறவியாகக் கோள உருவத்தையே நினைவு செய்கின்றார்கள். ஏனெனில் அதனையே அவர்கள் கடவுள் எனக் கருதுகின்றார்கள். அவர் அசரீரியானவர் என்பதையும், சரீரமற்றவர் என்பதையும் அந்த உருவம் உணர்த்துகின்றது. தந்தை கூறுகின்றார்: நானும் சடப்பொருளின் உதவியைப் பெற வேண்டியுள்ளது. அல்லது என்னால் எவ்வாறு உலகச் சக்கரத்தின் இரகசியத்தை உங்களுக்கு விளங்கப்படுத்த முடியும்? இது ஆன்மீக ஞானம். ஆத்மாக்களாகிய நீங்கள் மாத்திரமே இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். ஒரு தந்தையால் மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும். நீங்கள் மறுபிறவி எடுக்க வேண்டும். நடிகர்கள் அனைவரும் நடிப்பதற்குத் தத்தமது பாகங்களைப் பெறுகின்றார்கள். எவராலும் நிர்வாணா உலகிற்குச் செல்ல முடியாது. எவராலும் அநாதியான முக்தியைப் பெறமுடியாது. முதலாம் இலக்க உலக அதிபதிகள் ஆகுபவர்களே 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வருகின்றார்கள். அவர்கள் நிச்சயமாகச் சக்கரத்தைச் சுற்றி வரவேண்டும். மக்கள் தமக்கு அநாதியான முக்தியைப் பெற முடியும் என நம்புகின்றார்கள். பல்வேறுபட்ட அபிப்பிராயங்கள் உள்ளன. விரிவாக்கம் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. எவராலும் வீடு திரும்ப முடியாது. தந்தை உங்களுக்கு 84 பிறவிகளின் கதையைக் கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் கற்று, பின்னர் பிறருக்குக் கற்பிக்க வேண்;டும். உங்களைத் தவிர வேறு எவராலும் இந்த ஆன்மீக ஞானத்தைக் கொடுக்க முடியாது. சூத்திரர்களாலோ அல்லது தேவர்களாலோ இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. சத்தியயுகத்தில் சீரழிவு இல்லாததால், அங்கே எவரும் இந்த ஞானத்தைப் பெறுவதில்லை. இந்த ஞானம் சத்கதியைப் பெறுவதற்கானதாகும். சத்கதியை அளிப்பவரும், முக்தியளிப்பவரும், வழிகாட்டியும் அனைவரும் ஒருவரே. எவராலும் நினைவு யாத்திரை மூலமே அல்லாது தூய்மையாக முடியாது. அல்லது நீங்கள் நிச்சயமாகத் தண்டனையை அனுபவம் செய்வதுடன் உங்களின் அந்தஸ்தும் அழிக்கப்படும். அனைவரது கணக்கும் தீர்க்கப்பட வேண்டும். உங்களைப் பற்றிய அனைத்துமே உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஏனைய சமயங்களைப் பற்றி ஆராய்வதற்கான அவசியம் என்ன? பாரத மக்கள் மாத்திரமே இந்த ஞானத்தைப் பெறுகின்றார்கள். தந்தை பாரதத்திற்கு மாத்திரமே வந்து மூன்று தர்மங்களையும் ஸ்தாபிக்கின்றார். நீங்கள் இப்பொழுது சூத்திர சமயத்திலிருந்து வெளியேறி, மிகவும் மேன்மையான குலத்தினர் ஆக்கப்பட்டிருக்கின்றீர்கள். அது சீரழிந்த, தூய்மையற்ற குலமாகும். பிராமணர்களாகிய நீங்கள் இப்பொழுது அனைவரையும் தூய்மை ஆக்குவதற்கான கருவிகள் ஆக்கப்பட்டிருக்கின்றீர்கள். இது உருத்திரனின் ஞான யாகம் என அழைக்கப்படுகின்றது. உருத்திர சிவாபாபா இதனை உருவாக்கி உள்ளார். இந்த எல்லையற்ற யாகத்தில், பழைய தூய்மையற்ற உலகம் முழுவதும் அர்ப்பணிக்கப்படும். அதன் பின்னர் புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட்டு, பழைய உலகம் அழிக்கப்படும். நீங்கள் இந்த ஞானத்தைப் புதிய உலகிற்காகவே பெறுகின்றீர்கள். தேவர்களின் நிழல்கூட பழைய உலகில் பட முடியாது. முன்னைய கல்பத்தில் வந்தவர்கள், மீண்டும் வந்து இந்த ஞானத்தை எடுப்பார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர்கள் தாம் எடுக்கும் முயற்சிக்கு ஏற்ப இதனை வரிசைக்கிரமமாகக் கற்பார்கள். இங்கே மனிதர்கள் அமைதியை விரும்புகின்றார்கள். எவ்வாறாயினும் ஆத்மாக்கள் அமைதி தாமவாசிகள் ஆவார்கள். இங்கே எவ்வாறு அமைதி இருக்க முடியும்? இந்நேரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் அமைதியின்மையே உள்ளது. இதுவே இராவண இராச்சியம். சத்தியயுகத்தில், முழுமையான அமைதி நிறைந்த இராச்சியம் இருக்கும். அங்கே ஒரேயொரு தர்மமும் ஒரேயொரு மொழியுமே இருக்கும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்தப் பழைய உலகில் எல்லையற்ற ஆர்வமின்மையைக் கொண்டிருங்கள். உங்களுடைய சொந்த சரீரத்தையும்கூட மறந்து, அமைதி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்யுங்கள். புத்தியில் நம்பிக்கை கொண்டிருந்து, நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள்.2. நீங்கள் ‘ஹம்சோ சோஹம்’ என்ற மந்திரத்தை மிகச்சரியாகப் புரிந்து கொண்டு, பிராமணர்களில் இருந்து தேவர்களாக மாறுவதற்கு முயற்சி செய்யுங்கள். இந்த மந்திரத்தின் மிகச்சரியான அர்த்தத்தை அனைவருக்கும் கூறுங்கள்.
ஆசீர்வாதம்:
அலௌகீக மொழிகளைப் புரிந்து கொள்வதற்கு சுயபரிசோதனையைப் பயிற்சி செய்து, வெற்றி நிறைந்தவர் ஆகுவீர்களாக.எந்தளவிற்கு அதிகமாகக் குழந்தைகளான நீங்கள், உங்களை சுயபரிசோதனையிலும் இனிமையான மௌனத்திலும் ஸ்திரமாக்குகிறீர்களோ, அந்தளவிற்கு இலகுவாக உங்களால் கண்களின் மொழியை, உணர்வுகளின் மொழியை, எண்ணங்களின் மொழியைப் புரிந்து கொள்ள முடியும். இந்த மூன்று மொழிகளும் ஆன்மீக யோகி வாழ்க்கையின் மொழிகள் ஆகும். இந்த அலௌகீக மொழிகள் மிகவும் சக்திவாய்ந்தவை. காலத்திற்கேற்ப, இந்த மூன்று மொழிகளால் மட்டுமே, உங்களால் இலகுவாக வெற்றி பெற முடியும். ஆகவே, இப்போது அந்த ஆன்மீக மொழிகளைப் பயிற்சி செய்வதை வளர்த்துக் கொள்ளுங்கள்.
சுலோகம்:
தந்தை உங்களைத் தனது கண்மடலில் வைத்து அவருடன் திரும்பவும் எடுத்துச் செல்லும் வகையில் மிகவும் இலேசானவர் ஆகுங்கள்.அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியைச் சேமித்து, மேன்மையான சேவைக்குக் கருவி ஆகுங்கள்.
தற்சமயம், உலகிற்கு நன்மை செய்வதற்கான இலகுவான வழிமுறை, உங்களின் மேன்மையான எண்ணங்களில் ஒருமுகப்படுவதாகும். இந்த முறையால் மட்டுமே, உங்களால் சகல ஆத்மாக்களினதும் அலைபாயும் புத்திகளை ஸ்திரப்படுத்த முடியும். ஆத்மாக்கள் எல்லோருக்கும் குறிப்பாக ஓர் ஆசை உள்ளது. அதாவது, தமது அலைபாயும் புத்திகள் ஸ்திரமடைய வேண்டும், தமது மனங்கள் விஷமத்தனம் செய்வதில் இருந்து விடுபட்டு ஒருமுகப்பட வேண்டும். இதற்கு, குறிப்பாக ஒருமுகப்படுவதை, அதாவது, வேறு எவருக்கும் அன்றி ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாக இருக்கும் விழிப்புணர்வுடன் சதா ஸ்திரமான ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சிசெய்யுங்கள்.