16.09.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையை நினைவு செய்வதற்கும், எச்சரிக்கையாக இருப்பதற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் சமிக்ஞை கொடுப்பதன் மூலம் தொடர்ந்தும் முன்னேறிச் செல்லுங்கள்.
கேள்வி:
தந்தையைப் போன்று ஞானம் நிரம்பியவராகும் குழந்தைகள், தங்கள் வாழ்க்கையில் கிரகித்துக் கொள்ளும் பிரதான விடயம் என்ன?பதில்:
அவர்கள் சதா புன்னகைத்தவாறே இருப்பார்கள். அவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒருபோதும் அழமாட்டார்கள். நடப்பவை எதுவுமே புதியதல்ல. இவ்வாறாக இப்பொழுது ஞானம் நிரம்பியவர்களாக இருப்பவர்கள், அதாவது, எதற்கும் அழாதவர்களும் எந்தச் சந்தர்ப்பத்திலும் எப்பொழுதும் அமைதியற்றவர் ஆகாமல் இருப்பவர்களுமே சுவர்க்க இராச்சிய உரிமையைப் பெறுபவர்கள். அழுபவர்கள் அனைத்தையும் இழப்பதுடன், தங்களது அந்தஸ்தையும் இழப்பார்கள்.பாடல்:
உங்களைக் கண்டுகொண்டதால் முழு உலகையுமே கண்டுகொண்டேன். ஆகாயம், பூமி அனைத்தும் எனக்கே உரியது….ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் நீங்களே பாடும் பாடலைச் செவிமடுத்தீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற தந்தையின் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை அறிந்திருக்கின்றீர்கள். ஆகையால் நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, உங்களிடம் இருந்து நாங்கள் பெற்ற உலக இராச்சிய உரிமையை நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒரு தடவை பெறுகின்றோம். இதனை நீங்கள் சத்தியயுகத்தில் பாடமாட்டீர்கள். சங்கமயுகத்திலேயே நீங்கள் இதனைப் பாடமுடியும். வீட்டில் அல்லது வேலையில் இருந்தவாறே நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து மீண்டும் ஒருமுறை உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்பதை அறிந்துள்ளீர்கள். நிலையங்களில் கூட தந்தையை நினைவு செய்வதற்கும், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பதை நினைப்பதற்கும் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது. இது எதுவும் புதிதல்ல. நாங்கள் உலக இராச்சிய உரிமையைக் கல்பம் கல்பமாக தந்தையிடம் இருந்து பெறுகிறோம். புதிய நபர் ஒருவர் இதனைச் செவிமடுக்கும் போது, இவரை (பிரம்மாவை) நீங்கள் சிவபாபா என்று அழைக்கிறீர்கள் என எண்ணுவார். அவர் அசரீரி ஆத்மாக்களின் தந்தை ஆவார். ஆத்மா அசரீரியானவர். பரமாத்மாவான தந்தையும் அசரீரியானவரே. ஒரு சரீர ரூபத்தை எடுக்காத ஆத்மா, அசரீரியானவர் என அழைக்கப்படுகிறார். எல்லையற்ற தந்தையிடம் இருந்து இந்த ஞானத்தை நீங்கள் செவிமடுக்கிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆன்மீக ஆசிரியர் உங்களுக்குக் கற்பிப்பதால் நீங்கள் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை செய்ய முடியும். ஆரம்பத்தில் நீங்கள் இந்த ஆன்மீக எச்சரிக்கையைப் பெறுகிறீர்கள். நீங்கள் அனைவருமே எல்லையற்ற தந்தையின் நினைவில் இருந்தவாறே சமிக்ஞை செய்கிறீர்கள்: தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். உங்கள் புத்தியை வேறெங்கும் அலைய விடாதீர்கள். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: ஆத்ம உணர்வு உடையவர்களாகித் தந்தையை நினைவு செய்வீர்களாக! அவரே தூய்மையாக்குபவராகிய தந்தை. அவர் உங்கள் நேர் முன்னிலையில் அமர்ந்து தன்னை நினைவு செய்யுமாறு உங்களுக்குக் கூறுகிறார். இது மிகவும் சுலபமான ஒரு வழிமுறையாகும். “மன்மனாபவ” என்றொரு வார்த்தையும் உள்ளது, ஆனால் அது புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒரேயொரு தந்தையே உங்களுக்கு நினைவு யாத்திரையைக் கற்பிக்கிறார். நீங்கள் நினைவு யாத்திரையில் இருக்கிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே தெரியும். அவை பௌதீக யாத்திரைகள். ஆனால் நீங்கள் இப்பொழுது பௌதீக யாத்திரீகர்கள் அல்லர். நீங்கள் ஆன்மீக யாத்திரீகர்கள். இந்த நினைவு செய்தலின் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், நீங்கள் பாவச் செயல்களை வென்றவர்களும் ஆகுவீர்கள். நீங்கள் பாவச் செயல்களை வென்றவர்கள் ஆகுவதற்கு வேறெந்த வழியும் இல்லை. ஒன்று பாவச் செயல்களை வென்றவர்களின் காலப்பகுதி, மற்றையதோ பாவச் செயல்களைச் செய்பவர்களின் காலப்பகுதி ஆகும். இந்தக் காலப்பகுதியிலேயே பாவச் செயல்கள் செய்ய ஆரம்பிக்கப்படுகின்றன. இராவண இராச்சியம் ஆரம்பித்ததும் விகாரங்கள் ஆரம்பமாகின்றன. நீங்கள் இப்பொழுது பாவங்களை வென்றவர்கள் ஆகுவதற்கான முயற்சியைச் செய்கின்றீர்கள். இராவணன் அங்கே இல்லாததால் அங்கே பாவச் செயல்கள் செய்யப்படுவதில்லை. உலகிலுள்ள எவருக்குமே இது தெரியாது. இப்பொழுது நீங்கள் தந்தையிடம் இருந்தே அனைத்தையும் தெரிந்து கொள்கிறீர்கள். தந்தையே ஞானம் நிரம்பியவர் என்று அழைக்கப்படுகிறார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். தந்தையாகிய கடவுளின் பெயரும் இருக்க வேண்டும். அவர் பெயருக்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் அல்ல. மக்கள் அவரை வழிபடுகிறார்கள். அவரது பெயர் சிவன். அவரே தூய்மையாக்குபவரும், ஞானக்கடலும் ஆவார். ஆத்மாக்கள் அந்த பரமாத்மா, பரம தந்தையான தந்தையை நினைவு செய்கிறார்கள். ஆத்மாக்கள் தந்தையின் புகழ் பாடுகிறார்கள். அவரே அமைதிக் கடலும், சந்தோஷக் கடலும் ஆவார். தந்தை நிச்சயமாகத் தன் குழந்தைகளுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுப்பார். அவர்கள் வாழ்ந்து முடிந்தவர்களின் ஞாபகார்த்தங்களை உருவாக்குகின்றனர். சிவபாபா மாத்திரமே புகழப்படுபவரும், பூஜிக்கப்படுபவரும் ஆவார். அவர் நிச்சயமாக ஒரு சரீரத்தின் மூலமாக செயற்படுவதாலேயே அவர் நினைவு செய்யப்படுகிறார். அவர் என்றென்றும் தூய்மையானவர். தந்தை ஒருபோதுமே பூஜிப்பவர் ஆகுவதில்லை. அவர் எப்பொழுதுமே பூஜிக்கத் தகுதி வாய்ந்தவராகவே இருக்கிறார். தந்தை கூறுகிறார்: நான் ஒருபோதும் பூஜிப்பவர் ஆகுவதில்லை. நான் பூஜிக்கப்படுகிறேன். பக்தர்கள் என்னை வழிபடுகிறார்கள். நீங்கள் சத்திய யுகத்தி;ல் என்னை வழிபடுவதில்லை. பக்தி மார்க்கத்திலேயே தூய்மையாக்குபவரான தந்தையாகிய என்னை நீங்கள் நினைவு செய்கிறீர்கள். ஆரம்பத்தில் ஒரேயொருவரின் மீது கலப்படமற்ற பக்தியே இருந்தது. பின்னர் பக்தி கலப்படம் ஆகுகிறது. சிவபாபா, பிரம்மாவையும் சரஸ்வதியையும் உலக அதிபதிகள் ஆக்குகிறார். பக்தி அதிகளவு விரிவடைகின்றது. விதை விரிவடைவதில்லை. தந்தை கூறுகிறார்: என்னையும் உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். அவ்வளவுதான். விருட்சம் வளர்ச்சி அடைவதைப் போன்றே, பக்தியும் அதிகளவு வளர்;ச்சி அடைகின்றது. இந்த ஞானமே விதையாகும். உங்களுக்கு இந்த ஞானம் கிடைக்கும் போது, நீங்கள் சற்கதி அடைகின்றீர்கள். நீங்கள் எதனையிட்டும் உங்கள் புத்தியை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஞானமும் பக்தியும் உள்ளன. சத்திய, திரேதா யுகங்களில் பக்தியின் விருட்சம் இல்லை. பக்தியின் விருட்சம் அரைக்கல்பத்திற்கு வளர்கிறது. சமயங்கள் அனைத்திற்கும் அவற்றிற்குரிய வழக்கங்கள், சம்பிரதாயங்கள் உள்ளன. பக்தி மார்க்கம் அதிகளவு பரந்தது! இந்த ஞானமோ அனைவருக்கும் ஒன்றே: மன்மனாபவ, அவ்வளவுதான்! அல்பாவான தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்யும்பொழுது நிச்சயமாக உங்கள் ஆஸ்தியை நினைவு செய்வீர்கள். ஆஸ்தியின் விரிவும் உள்ளது. அந்தச் சொத்து எல்லைக்கு உட்பட்டது. இங்கே உங்கள் எல்லையற்ற சொத்தை நினைவு செய்கிறீர்கள். எல்லையற்ற தந்தை வந்து பாரத மக்களாகிய உங்களுக்கு ஓர் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அவரது பிறப்பும் இங்கேயே நினைவு கூரப்படுகிறது. இது நாடகத்தில் அநாதியாகவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடவுள் எவ்வாறு அதி மேலானவராக இருக்கிறாரோ அவ்வாறே பாரத தேசமும் அதிமேலானதாகும். அதுவே தந்தை வந்து முழு உலகிற்கும் சற்கதி அருளும் இடமாகும். ஆகையால் அதுவே அனைத்திலும் அதி மகத்துவமான யாத்திரைத் தலமாகும். நீங்கள் கூறுகிறீர்கள்: ஓ தந்தையாகிய கடவுளே, எங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்! உங்கள் அனைவருக்கும் பாரதத்தின் மீது அன்பு உள்ளது. தந்தை வருவதும் பாரதத்திலேயே. நீங்கள் இப்பொழுது முயற்சி செய்கிறீர்கள். நீங்களே கோபிவல்லபரின் கோபர்களும் கோபியர்களும் ஆவீர்கள். சத்தியயுகத்தில் கோபரும் கோபிகைகளும் இருப்பதில்லை. அங்கே முறைப்படி இராச்சியம் தொடரும். ஸ்ரீகிருஷ்ணரின் தெய்வீகச் செயல்கள் எதுவுமே இல்லை. ஆனால் ஒரேயொரு தந்தையின் திருவிளையாடல்களே உள்ளன. அவரின் தெய்வீகச் செயற்பாடுகள் மிக மேன்மையானவை! அவர் முழு உலகையும் தூய்மை ஆக்குகிறார். இது அவரது புத்திசாலித்தனமே! தற்சமயம் மனிதர்கள் அனைவரும் அஜாமிலைப் போல பாவிகளாக இருக்கிறார்கள். மக்கள் சாதுக்கள் முதலானோரை மேன்மையானவர்களாகக் கருதுகிறார்கள். தந்தை கூறுகிறார்: அவர்களையும் கூட நானே ஈடேற்ற வேண்டும். நீங்கள் நடிகர்களாக இருப்பதுபோல தந்தையும் ஒரு நடிகரே! நீங்கள் 84 பிறவிகளை எடுத்து உங்கள் பாகத்தை நடிக்கிறீர்கள். அவரே படைப்பவர், இயக்குனர், பிரதான நடிகரும் ஆவார். அவரே கரன்கரவன்ஹார். அவர் எதனைச் செய்கிறார்? அவர் தூய்மை அற்றதைத் தூய்மை ஆக்குகிறார். தந்தை கூறுகிறார்: எங்களைத் தூய்மையாக்க வாருங்கள் என நீங்கள் என்னை அழைத்தீர்கள். நானும் இந்தப் பாகத்திற்கு கட்டுப்பட்டவன். இந்த நாடகம் ஏன் உருவாக்கப்பட்டது அல்லது எப்பொழுது உருவாக்கப்பட்டது என எவரும் வினவ முடியாது. இந்த நாடகம் அநாதியாக முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. அதற்கு ஆரம்பம், மத்தி, இறுதியோ இல்லை. பிரளயம் இடம்பெறுவதில்லை. ஆத்மாக்கள் அழியாதவர்கள். அவர்கள் ஒருபோதுமே அழிக்கப்படுவதில்லை. அவர்கள் ஒரு அழியாத பாகத்தைப் பெற்றுள்ளனர். இந்த நாடகம் எல்லையற்றது. எவ்வாறு நாடகத்தின் பாகம் தொடர்கிறது என்பதை இரத்தினச் சுருக்கமாக தந்தை இங்கே அமர்ந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் கடவுள் என்பதனால் அவரால் இறந்தவருக்கு உயிர் கொடுக்க முடியும் என்பதல்ல. இங்கே எந்த குருட்டு நம்பிக்கையோ அல்லது மாயசக்தியோ இல்லை. நீங்கள் என்னை அழைக்கிறீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! வந்து, தூய்;மை அற்றவர்களாகிய எங்களைத் தூய்மையாக்குங்கள்! எனவே அவர் நிச்சயமாக வருகின்றார். கீதையே சகல சமய நூல்களிலும் மிக மேன்மையான இரத்தினம் ஆகும். கடவுளே கீதையைப் பேசினார். நல்லது, அவர் எப்பொழுது இலகு இராஜயோகத்தைக் கற்பித்தார்? உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். தூய, புதிய உலக இராச்சியத்தை ஸ்தாபிக்கும் பொழுதே கல்பத்தின் சங்கமயுகத்தில் தந்தை வருகிறார். அவர் அதனை சத்தியயுகத்தில் ஸ்தாபிப்பதில்லை. அது தூய உலகம். இந்த மகா சந்திப்பு (கும்பமேளா) சங்கமயுகத்தில் மாத்திரமே இடம்பெறுகிறது. அந்தக் கும்பமேளா 12 வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறுகிறது. இந்த மகத்தான கும்பமேளா 5000 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறுகிறது. இது ஆத்மாக்களினதும், பரமாத்மாவான பரமதந்தையினதும் சந்திப்பாகும். அவர் சகல ஆத்மாக்களையும் தூய்மையாக்கித் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்கிறார். அவர்கள் கல்பத்தின் கால எல்லையை நீட்டியிருப்பதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். நீங்கள் இப்பொழுது அனைத்தையும் புரிந்துள்ளீர்கள். நீங்கள் அச்சிட்ட சஞ்சிகைகளையும் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறெவருமே புரிந்து கொள்ள மாட்டார்கள். தந்தை கூறியுள்ளார்: இற்றைக்கு 5000 ஆண்டுகளின் முன்னர் இடம்பெற்றதே இப்பொழுதும் இடம்பெறுகின்றது, இது எதுவும் புதியதல்ல என்று எழுதுங்கள். 5000 ஆண்டுகளின் முன்னர் இடம்பெற்றவை எல்லாம் இப்பொழுது மீண்டும் இடம்பெறுகின்றது. இதைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் வந்து புரிந்து கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளை உருவாக்குங்கள். பத்திரிகைகளில் நாங்கள் என்ன அச்சிட வேண்டும்? நீங்கள் இவ்வாறு எழுதலாம்: இந்த மகாபாரத யுத்தம் எவ்வாறு தூய உலகிற்கான வாசலைத் திறக்கின்றது என்பதையும் சென்ற கல்பத்தில் நடந்ததைப் போல், தேவர்களின் இராச்சியமான சத்தியயுகம் எவ்வாறு ஸ்தாபிக்கப்படுகிறது என்பதையும் வந்து புரிந்து கொள்ளுங்கள். மகாபாரத யுத்தத்தின் மூலம் சத்தியயுக ஸ்தாபனை எவ்வாறு இடம்பெறுகிறது என்பதை வந்து புரிந்து கொள்ளுங்கள். தந்தையாகிய கடவுளிடம் இருந்து உங்கள் பிறப்புரிமையை பெற விரும்பினால் வந்து அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இவ்வாறு இந்த ஞானக் கடலைக் கடையவேண்டும். அவர்கள் எழுதும் கதைகளும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தொடர்ந்தும் தங்கள் பாகத்தை நடிக்கிறார்கள். நாடகத் திட்டத்தின்படி வியாசர் வேத சாஸ்திரங்களை உருவாக்கினார். அவருக்கு அத்தகைய ஒரு பாகம் கிடைத்தது. நீங்கள் இப்பொழுது நாடகத்தைப் புரிந்துள்ளீர்கள். அதே நாடகம் மீண்டும் இடம்பெறும். நீங்கள் இப்பொழுது திரும்பவும் வந்து மீண்டும் ஒருமுறை இந்த ஞானத்தைச் செவிமடுக்கிறீர்கள். இந்த இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் மீண்டும் ஒருமுறை வரும் என்பதும் மற்றைய சமயங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்பொழுது ஞானம் நிரம்பியவர் ஆகுகின்றீர்கள். பாபா உங்களைத் தனக்குச் சமமாக ஞானம் நிரம்பியவர்கள் ஆக்குகிறார். நீங்கள் அரைக் கல்பத்திற்கு அமைதியாக இருப்பீர்கள் என்றும், அங்கே எவ்வித அமைதியின்மையும் இருக்காது என்பதும் உங்களுக்குத் தெரியும். அங்கேயுள்ள குழந்தைகள் அழுவதில்லை. அவர்கள் சதா புன்னகை பூத்தவாறே இருக்கிறார்கள். நீங்கள் இங்கே அழக் கூடாது. உங்கள் தாயார் இறந்தாலுமே நீங்கள் “அல்வா” உண்ண வேண்டும் என நினைவு கூரப்படுகிறது. அழுபவர்கள் அனைத்தையுமே இழப்பதுடன், அவர்கள் அந்தஸ்தும் அழிக்கப்படுகிறது. சுவர்க்க இராச்சியத்தை உங்களுக்குக் கொடுக்கின்ற கணவருக்கெல்லாம் கணவரை நீங்கள் கண்டுள்ளீர்கள். அவர் ஒருபோதும் மரணிப்பதில்லை. ஆதலால் நீங்கள் அழுவதற்கான அவசியம் என்ன? எதற்கும் அழாதவர்களே இராச்சிய உரிமையைப் பெறுகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் பிரஜைகள் ஆகுகின்றார்கள். இந்த நிலையில், நீங்கள் என்ன ஆகுவீர்கள் என பாபாவிடம் நீங்கள் கேட்டால் அவரால் உங்களுக்குக் கூற முடியும். பாபா உங்களுக்குக் கூறுவார்: குழந்தைகளாகிய உங்கள் எல்லோருக்கும் இறுதியில் இக்காட்சிகள் கிடைக்கும். ஒரு பாடசாலையில் அனைவரும் தங்கள் பெறுபேறுகளை அறிந்து கொள்வதைப் போன்றே, உருத்திரனின் மாலையில் யார் உள்ளார்கள் என்பதை நீங்களும் இறுதியில் அறிந்து கொள்வீர்கள். பரீட்சைக்கு முன்னர், இறுதி நாட்களில் மாணவர்கள் அதிகளவு முயற்சி செய்கிறார்கள், ஏனென்றால் அப்படிச் செய்யாவிட்டால் குறிப்பிட்ட ஒரு பாடத்தில் தாம் சித்தி அடையாமல் போகக்கூடும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நீங்களும் அனைத்தையும் அறிந்து கொள்வீர்கள். தங்கள் குழந்தைகளின் மீது தாம் பற்று வைத்திருப்பதாகப் பலர் கூறுகிறார்கள். அந்தப் பற்று நீக்கப்பட வேண்டும். நீங்கள் ஒரேயொருவர் மீதே பற்று வைக்க வேண்டும். அவர்களை ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக இருந்து பராமரியுங்கள். தந்தையினாலேயே உங்களுக்கு அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது என நீங்கள் கூறுகிறீர்;கள். ஆதலால் அவர்களை ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் எனும் ரீதியிலே தொடர்ந்தும் பராமரியுங்கள். அவர்கள் மீதுள்ள உங்கள் பற்றை அகற்றுங்கள். அவர்கள் மீதுள்ள உங்கள் பற்றை அகற்றும்படி தந்தையே வந்து உங்களுக்குக் கூறுகிறார். அனைத்தும் அவருக்கே உரியது எனக் கருதி அவரின் வழிகாட்டல்களை மாத்திரமே பின்பற்றுங்கள். அவரின் பணியில் ஈடுபடுங்கள். தொடர்ந்தும் இந்த அழியாத ஞான இரத்தினங்களைத் தானம் செய்யுங்கள். இங்கே தந்தை குமாரிகளின் மீது அதிகளவு மரியாதை வைத்திருக்கிறார். ஒரு குமாரி கர்ம பந்தனத்தில் இருந்து விடுபட்டவள். லௌகீகத் தந்தையிடம் இருந்து கிடைக்கின்ற ஆஸ்தியின் போதை புதல்வருக்கு உண்டு. ஒரு குமாரி தனது லௌகீகத் தந்தையிடம் இருந்து எந்தவோர் ஆஸ்தியையும் பெறுவதில்லை. இங்கே இந்தத் தந்தை ஆண், பெண் எனும் பிரிவினை காட்டுவதில்லை. தந்தை இங்கே அமர்ந்து ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் அனைவரும் சகோதரர்களே என்றும், நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்களாகிய நீங்கள் கற்று உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்களோ, அந்தளவு உயர்ந்த அந்தஸ்தை நீங்கள் பெறுகிறீர்கள். பாபா வந்து உங்களுக்கு அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். சிவபாபா அசரீரியானவர். அவரே வழிபடப்படுகிறார். அவருக்கே சோமநாதர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. சிவபாபா வந்து என்ன செய்தார் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். அவரின் ஞாபகார்த்தமாக ஏன் ஓர் ஆலயம் கட்டப்பட்டது? நீங்கள் இதனை இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும் இது இவ்வாறே நடைபெறும். நாடகத்தில் எது நிச்சயிக்கப்பட்டுள்ளதோ அது மீண்டும் நடைபெறும். தந்தை வரவேண்டும். பழைய உலகும் அழிக்கப்பட வேண்டும். இதில் துன்பப்படுவதற்கான கேள்விக்கே இடமில்லை. இவை அனைத்துமே காரணமின்றி இரத்தம் சிந்தப்படுவதற்கான ஒரு நாடகமாகும். காரணம் எதுவுமின்றி அனைவருமே கொல்லப்படுவார்கள். இல்லாவிடின் எவரேனும் ஒருவர் இன்னொருவரைக் கொன்றால் அவருக்கு தூக்கு மேடையில் தூக்குத் தண்டனை கிடைக்கும். இப்பொழுது நீங்கள் யாரை இதற்குப் பொறுப்பாளர் ஆக்குவது? இயற்கை அனர்த்தங்கள் வரவேண்டும். விநாசமும் நடைபெற வேண்டும். அமரத்துவ பூமி, மரணபூமி என்பவற்றின் அர்த்தம் எவருக்குமே புரிவதில்லை. இன்று நீங்கள் மரண உலகில் உள்ளீர்கள். நாளை நீங்கள் அமரத்துவ உலகிற்குச் செல்வீர்கள், அதற்காகவே நீங்கள் கற்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். மக்களோ காரிருளினுள் இருக்கின்றனர். நீங்கள் அவர்களுக்கு இந்த ஞானாமிர்தத்தைப் பருகக் கொடுக்கிறீர்கள். நீங்கள் கூறுவனவற்றை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவர்கள் தலையை அசைத்துவிட்டுப் பின்னர் மறுபடியும் உறக்கத்தில் ஆழ்கிறார்கள். எல்லையற்ற தந்தை ஓர் ஆஸ்தியைக் கொடுக்கிறார் என்றும், சுவர்க்க வாசல் திறக்கப்படுவதற்கான அதே மகாபாரத யுத்தமே இது என்பதையும்கூட அவர்கள் செவி மடுக்கிறார்கள். இந்த ஞானம் மிகவும் நல்லது, வேறெவராலும் இதனைத் தரமுடியாது எனவும் எழுதுகிறார்கள். அவை அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள், ஆனால் அவ்வளவுதான். அவர்கள் இந்த ஞானம் எதையும் உட்கிரகிப்பதில்லை. ஆனால் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள். அவர்கள் கும்பகர்ணன் என்று அழைக்கப் படுகிறார்கள். நீங்கள் இதனை எங்களுக்கு எழுத்தில் தருவதால் வீடு சென்றபின்னர் உறக்கம் அடையாதீர்கள் என நீங்கள் அவர்களுக்குக் கூற முடியும். கும்பகர்ணனின் படத்தை அவர்களுக்குக் காட்டி, அதனைப் போல நீங்களும் உறங்காதீர்கள் எனக் கூறுங்கள். நீங்கள் அவர்களுக்கு மிகவும் சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டும். பாபா கூறுகிறார்: குழந்தைகளே, இந்தப் பிரதான படங்களை உங்கள் கடைகளில் வைத்தீர்கள் என்றால் அங்கே வருபவர்களுக்கு உங்களால் விளங்கப்படுத்த முடியும். அவர்களுடன் அந்தப் பேரம் பேசும்பொழுது இந்த உண்மையான பேரத்தையும் பேசுங்கள். இதன் மூலம் நீங்கள் பலருக்கு நன்மை செய்ய முடியும். இதில் சங்கடப்படுவது என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் பிரம்மா குமாரர்களும், குமாரிகளும் ஆகிவிட்டீர்கள் எனச் சிலர் கூறுகின்றனர். அவர்களிடம் கூறுங்கள்: ஓ! ஆனால் நீங்களும் பிரஜாபிதா பிரம்மாவின் குமாரர்களும், குமாரிகளும்தான். தந்தை புதிய உலகை உருவாக்குகிறார். பழைய உலகம் தீக்கிரையாகப் போகின்றது. நீங்கள் பிரம்மா குமாரர்களும், பிரம்மா குமாரிகளும் ஆகாவிடின் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. இவ்வாறாகக் கடைகளில் சேவை செய்தீர்களேயானால் எல்லையற்ற சேவை நடைபெறும். இதனைப்பற்றி உங்கள் மத்தியில் கலந்துரையாடுங்கள். கடை சிறியதாக இருந்தாலும் படங்களைச் சுவரில் தொங்கவிட முடியும். புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பிக்கிறது. அனைத்திற்கும் முதலில் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். தந்தை கூறுகிறர்: இப்போது எந்தச் சரீராதாரியையும் நினைவு செய்யாதீர்கள். உங்கள் ஆஸ்தியை நீங்கள் பெறுகின்ற சிவபாபாவையே நினைவு செய்யுங்கள். அப்பாவி மனிதர்கள் மிகவும் குழப்பம் அடைந்துள்ளனர்! நீங்கள் அவர்களுக்குக் கூறவேண்டும்: தேவ உலக இராச்சிய உரிமையைப் பெறுவதற்கும், ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுவதற்கும் விரும்பினால் நீங்கள் வந்து அதனை அடையலாம். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரேயொரு தந்தைமீது உண்மையான, தூய பற்றைக் கொண்டிருங்கள். அவரை மாத்திரம் நினைவு செய்யுங்கள். சரீரதாரிகள் மீதுள்ள உங்கள் பற்றை அகற்றுங்கள். அவர்களை நீங்கள் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் என்ற ரீதியில் பராமரியுங்கள்.2. நீங்கள் பாவச் செயல்களை வென்றவர்களாக வேண்டும் என்பதால் உங்கள் பௌதீகப் புலன்களினால் எவ்வித பாவச் செயல்களையும் செய்யாதிருப்பதில் பெரும் கவனம் செலுத்துங்கள்.
ஆசீர்வாதம்:
அகநோக்கில் இருப்பதுடன் அலௌகீகமான உங்களின் மேன்மையான ரூபத்தில் ஸ்திரமாகுவதன் மூலம் மேன்மையான போதையை அனுபவம் செய்வீர்களாக.நட்சத்திரங்களின் கூட்டத்தில், விசேடமான நட்சத்திரங்களின் பிரகாசம், தொலைவில் இருந்தே அழகானதாகவும் தனித்துவமானதாகவும் தெரிகின்றது. அதேபோல், சாதாரணமான ஆத்மாக்களின் ஒன்றுகூடலில் நட்சத்திரங்களான நீங்கள் விசேடமான ஆத்மாக்களாகத் தோற்றம் அளிக்க வேண்டும். உங்களின் சாதாரணமான ரூபத்தில் இருக்கும்போதே, உங்களின் ஸ்திதி அசாதாரணமாகவும் அலௌகீகமாகவும் இருக்க வேண்டும். அப்போது நீங்கள் அந்த ஒன்றுகூடலில் இறைவனுக்குச் சொந்தமான மக்களாகத் தென்படுவீர்கள். இதற்கு, நீங்கள் புற நோக்கில் வருவதற்கு முன்னர், அகநோக்கில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். முதலில் உங்களின் மேன்மையான ரூபத்தில் போதையுடன் ஸ்திரமாகுங்கள். அத்துடன் சக்திசாலியாகவும் ஞானம் நிறைந்தவராகவும் ஆகிப் பின்னர் ஞானத்தைக் கொடுங்கள். அப்போது உங்களால் ஆத்மாக்கள் பலரையும் இதை அனுபவம் அடையச் செய்ய முடியும்.
சுலோகம்:
இராவணனின் சொத்தை நீங்கள் உங்களுடன் வைத்திருந்தால், திலாராமினால் (இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவர்) உங்களின் இதயத்தில் குடியிருக்க முடியாது.அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
அருள்பவரின் குழந்தைகளான நீங்கள் மாஸ்ரர் அருள்பவர்கள், அனைவருக்கும் அருள்பவர்கள். உங்களின் ஒரு விநாடி திருஷ்டியாலும் உங்களின் விலைமதிப்பற்ற வார்த்தைகளாலும் தாகத்துடன் இருக்கும் ஆத்மாக்களின் தாகத்தை உங்களால் தணிக்க முடியும். உங்களின் வாசலுக்குப் பசியுடன் வருகின்ற எந்தவோர் ஆத்மாவும் வெறுங்கையுடன் திரும்பிச் செல்லக்கூடாது. சாகார் பாபா இதைச் செய்து காட்டினார்: ஓர் ஆத்மாவேனும் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றதில்லை. ஒருவர் எத்தகைய ஆத்மாவாக இருந்தாலும் அவர் திருப்தியுடன் திரும்பிச் செல்ல வேண்டும்.