16.12.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தூய்மையாகுவதற்கான இக் கல்வி ஏனைய அனைத்துக் கல்விகளையும் விட இலகுவானதாகும். இளம் குழந்தைகள், வயது வந்தோர், முதியவர்கள் ஆகிய அனைவரும் இதனைக் கற்க முடியும். நீங்கள் உங்கள் 84 பிறவிகளையும் அறிந்திருக்க வேண்டும்.

கேள்வி:
இளையவர்களும், முதியவர்களுமாகிய நீங்கள் ஒவ்வொருவரும் எதனைப் பயிற்சி செய்ய வேண்டும்?

பதில்:
நீங்கள் முரளிதரரின் குழந்தைகள் என்பதால் நீங்கள் ஒவ்வொருவரும் ஞானத்தைப் பேசுகின்ற பயிற்சியைச் செய்ய வேண்டும். நீங்கள் ஞானத்தைப் பேசாமலிருந்தால், உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது. எவருக்காவது ஞானத்தைக் கொடுத்துக் கொண்டேயிருங்கள். அப்பொழுது உங்கள் வாய் திறக்கப்படும். (நீங்கள் ஞானத்தைப் பேசுவதற்கான நம்பிக்கையைப் பெறுவீர்கள்.) நீங்கள் ஒவ்வொருவரும் தந்தையைப் போன்று ஓர் ஆசிரியராக வேண்டும். நீங்கள் கற்பதை, பிறருக்கும் கற்பிக்க வேண்டும். சிறு குழந்தைகளுக்கும் இக் கல்விக்கான உரிமை உள்ளது. அவர்களும் எல்லையற்ற தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைப் பெறும் உரிமையைக் கொண்டிருக்கிறார்கள்.

ஓம் சாந்தி.
சிவபாபாவின் பிறப்பின் ஆண்டுவிழா (சிவ ஜெயந்தி) விரைவில் இங்கு இடம்பெறும். நீங்கள் அதனைப் பற்றி எவ்வாறு ஏனையோருக்குக் கூறப் போகிறீர்கள்? தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தும் விதத்தில் நீங்களும், ஏனையோருக்கு விளங்கப்படுத்த வேண்டும். உங்களுக்குக் கற்பிப்பது போன்று ஏனைய அனைவருக்கும் பாபா கற்பிக்க வேண்டும் என்றில்லை. சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் உங்களுக்கு இந்தச் சரீரத்தின் மூலம் கற்பிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். நிச்சயமாக நீங்கள் சிவனின் பிறப்பைக் கொண்டாடுகிறீர்கள். நீங்கள் சிவனின் பெயரையும் குறிப்பிட வேண்டும். அவர் அசரீரியானவர். அவரை சிவன் என அழைக்கிறார்கள். அம்மக்கள் கூறுகின்றார்கள்: சிவன் பிறப்பு இறப்புச் சக்கரத்திற்கு அப்பாற்பட்டவர். எனவே அவரின் பிறந்த நாளை நீங்கள் எவ்வாறு கொண்டாட முடியும்? அதனை நீங்கள் எவ்வாறு வெவ்வேறு வழிகளில் கொண்டாடுகிறீர்கள் என்பதையும், நீங்கள் அதனை எவ்வாறு தொடர்ந்தும் கொண்டாடுவீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆகையால் இதனை நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். தந்தை வந்து இந்தச் சரீரத்தை ஆதாரமாக எடுக்கிறார். உங்களுடன் பேசுவதற்கு நிச்சயமாக அவருக்கு ஒரு வாய் தேவைப்படுகிறது, அதனாலேயே பசுவின் வாய் புகழப்படுகிறது. எவ்வாறாயினும், இது ஒரு சிக்கலான இரகசியம் ஆகும். சிவபாபாவின் தொழிலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் எல்லையற்ற தந்தை வந்துவிட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவரிடமிருந்து மாத்திரமே நாங்கள் எங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றோம். நிச்சயமாக பாரதமக்கள் ஓர் எல்லையற்ற ஆஸ்தியைக் கொண்டிருந்தார்கள். அதை வேறு எவரும் கொண்டிருக்கவில்லை. பாரதம் சத்திய பூமி என அழைக்கப்படுகிறது, தந்தையும் சத்தியம் என்று அழைக்கப்படுகின்றார். நீங்கள் இவ்விடயங்களை விளங்கப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், சிலர் ஏனையோரைப் போன்று விரைவில் இதனைப் புரிந்து கொள்வதில்லை. இங்கு யோகம், கல்வி ஆகிய இரண்டும் மிக இலகுவாக (புத்தியிலிருந்து) நழுவி விடுகிறது. இவற்றில் யோகமே கூடுதலாக நழுவி விடுகின்றது. ஞானம் புத்தியில் நிலைத்திருக்கிறது, ஆனால் நினைவு மீண்டும் மீண்டும் மறக்கப்பட்டு விடுகின்றது. நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளையும் எடுக்கின்றீர்கள் என்ற ஞானம் உங்கள் புத்தியில் இருக்கின்றது. முதல் இலக்கத்தில் வருபவர்கள் மாத்திரமே 84 பிறவிகளையும் எடுப்பார்கள் என்பதை இந்த ஞானத்தைக் கொண்டிருப்பவர்களின் புத்தி புரிந்து கொள்ள முடியும். இலக்ஷ்மி நாராயணனே முதலாவதும், அதி மேன்மையானவர்களுமாகிய தேவர்கள் எனக் கூறப்படுகின்றார்கள். சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுகின்ற கதையும் மிகவும் பிரபல்யமானது. பல இடங்களில், பௌர்ணமி தினத்தன்று சத்திய நாராயணன் ஆகுகின்ற கதையை வாசிக்கிறார்கள். ஒரு சாதாரண மனிதரிலிருந்து எவ்வாறு நாராயணனாக மாறுவது என்பதை நீங்கள் உண்மையிலேயே இப்பொழுது பாபாவிடம் கற்கின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இது தூய்மையாகுவதற்கான கல்வியாகும். இது அனைத்துக் கல்விகளிலும் மிக இலகுவானதுமாகும். 84 பிறவிகளின் சக்கரத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இக் கல்வி இளையவர், முதியவர் அனைவருக்கும் ஒன்றே ஆகும். சிறு குழந்தைகளுக்கும் இக்கல்விக்கான உரிமை உள்ளது. சிறிது சிறிதாகத் தொடர்ந்தும் அவர்களுக்குக் கற்பிப்பதற்கு அவர்களுடைய பெற்றோருக்குப் போதியளவு நேரம் உள்ளது. சிவபாபாவை நினைவு செய்வதற்குக் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். ஆத்மாக்களின் தந்தை சரீரங்களின் தந்தையிலிருந்து வேறுபட்டவராவார். ஆத்மாக்கள் அசரீரியான குழந்தைகள், தந்தையும் அசரீரியானவர். அசரீரியான சிவபாபாவே உங்கள் தந்தை என்பதையும், அவர் அளவில் மிகவும் சின்னஞ்சிறியவர் என்பதையும் குழந்தைகளாகிய உங்கள் புத்தி அறிந்து கொள்கின்றது. நீங்கள் இதனை நன்றாக நினைவுசெய்ய வேண்டும், நீங்கள் மறந்து விடக்கூடாது. ஆத்மாக்களாகிய நாங்களும் ஒரு புள்ளியைப் போன்று சின்னஞ்சிறியவர்களே. நீங்கள் மேலே செல்லும் போது பெரியதாகத் தோன்றுவீர்கள் என்றோ அல்லது கீழே நீங்கள் இருக்கும் போது சிறியதாகத் தோன்றுவீர்கள் என்பதோ இல்லை. இல்லை. அது (ஆத்மா) எப்பொழுதும் ஒரு புள்ளியே. நீங்கள் மேலே செல்லும் போது, நீங்கள் ஒரு புள்ளி என்பதால் உங்களைப் பார்க்க முடியாததைப் போன்றுள்ளது. எவ்வாறு உங்களால் ஒரு புள்ளியைப் பார்க்க முடியும்? குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்களைப் பற்றி மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். இந்த ஆத்மாவாகிய நான், மேலிருந்து எனது பாகத்தை ஒரு சரீரத்தின் மூலம் நடிப்பதற்கு, இங்கே வருகிறேன். ஆத்மாக்கள் அளவில் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ ஆகுவதில்லை. அவர்களின் பௌதீக உறுப்புக்கள் முதலில் சிறிதாக இருந்து, பின்னர் வளர்ந்து பெரிதாக ஆகுகின்றன. இப்பொழுது இவ்விடயங்களை நீங்கள் புரிந்து கொண்டவாறு, பிறருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். இந்த ஞானத்தை நீங்கள் வரிசைக்கிரமமாக அதனைக் கற்ற விதத்திலேயே கற்பிப்பீர்கள் என்பது நிச்சயம். நீங்கள் அனைவரும் நிச்சயமாக ஆசிரியர்களாகி, இந்த ஞானத்தை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும். தந்தையிடம் இந்த ஞானம் அனைத்தும் உள்ளது. அவரே மிகச் சின்னஞ்சிறியவரும் பரமாத்மாவும் ஆவார். அவர் எப்பொழுதுமே பரந்தாமத்தில் வசிப்பவர் ஆவார். அவர் இந்தச் சங்கம யுகத்தில் இங்கு ஒருமுறை மாத்திரமே வருகின்றார். மக்கள் சந்தோஷமின்றி இருக்கும் போது, தந்தையை ௮ழைக்கிறார்கள்: வந்து எங்களைச் சந்தோஷமானவர் ஆக்குங்கள்! நீங்கள் ௮ழைத்துக் கொண்டிருந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டுள்ளீர்கள்: பாபா வந்து எங்களை இந்தத் தூய்மையற்ற உலகிலிருந்து, சத்தியயுகத்து, தூய சந்தோஷ உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு செல்வதற்கான பாதையை எங்களுக்குக் காட்டுங்கள். அவர் வரும் போது மாத்திரமே அவரால் உங்களுக்குப் பாதையைக் காட்ட முடியும். அவர் உலகம் மாற்றமடைய வேண்டியுள்ள போதே வருகிறார். இது புரிந்து கொள்வதற்கு மிகவும் எளிமையான விடயமாகும். தினமும் பாபா என்ன விளங்கப்படுத்துகின்றார் என்பதைக் குறித்துக் கொள்வதனால், உங்களாலும் அதனை அவ்விதமாக விளங்கப்படுத்த முடியும். இவ்வாறாகப் பயிற்சி செய்வதனால், உங்கள் வாய் திறக்கப்படும். (ஞானத்தைப் பேசுவதற்கு உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும்) நீங்கள் முரளிதரரின் குழந்தைகள், நீங்கள் நிச்சயமாக முரளிதரர்கள் ஆகவேண்டும். இவ்வாறாகப் பிறருக்கு நன்மையை ஏற்படுத்துவதனால், நீங்கள் புதிய உலகில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். ஏனைய கல்விகள், இந்த உலகிற்கானதாகும். ஆனால் இக்கல்வியோ நிலையான சந்தோஷமுள்ள எதிர்கால, புதிய உலகிற்கானதாகும். அங்கு அனைவருக்கும் விரக்தியை விளைவிக்கின்ற ஐந்து விகாரங்களும் இருப்பதில்லை. இங்கு நீங்கள், அந்நிய இராச்சியமான, இராவணனின் இராச்சியத்தில் இருக்கின்றீர்கள். நீங்களே ஆரம்பத்தில் உங்கள் இராச்சியத்தில் இருந்தவர்கள், அதனை நீங்கள் புதிய உலகம் என்று அழைப்பீர்கள். பின்னர் பாரதம் பழைய உலகம் என அழைக்கப்படுகின்றது. பாரதம் புதிய உலகில் இருக்கிறது எனக் கூறப்படுகின்றது. முஸ்லிம்களும், பௌத்தர்களும் புதிய உலகில் உள்ளார்கள் என நீங்கள் கூறமாட்டீர்கள், இல்லை. தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களை விழித்தெழச் செய்துள்ளார் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. நாடகத்தில் அவருடைய பாகம் அத்தகையதாகும். அவர் பாரதத்தைச் சுவர்க்கமாக மாற்றுவதற்காகவே வருகிறார். முதற் தேசமான பாரதமே சுவர்க்கம் என அழைக்கப்படுகிறது. பாரதத்தின் ஆயுட்காலம் எல்லைக்குட்பட்டதாகும். அது நூறாயிரக்கணக்கான வருடங்கள் எனக் கூறுவது அதனை எல்லையற்றதாக ஆக்குகின்றது. நூறாயிரக்கணக்கான வருடங்களின் விடயங்களை எவரது புத்தியினாலும் நினைவு செய்ய முடியாது. பாரதம் புதிதாக இருந்தது, அது இப்பொழுது பழையதாக உள்ளது என நீங்கள் கூறுவீர்கள். பாரதம் மீண்டும் புதிய உலகமாக ஆகவுள்ளது. நீங்கள் இப்பொழுது புதிய உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பாபா ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தன்னை நினைவுசெய்யுமாறு புத்திமதி கூறுகிறார், அதனால் நீங்கள் புதியவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் ஆகுவதுடன், புதிய சரீரங்களையும் பெறுவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்களும், உங்கள் சரீரங்களும் முற்றிலும் சதோபிரதானாக ஆகுகின்றன. நீங்கள் சந்தோஷத்திற்காகவே இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். இந்த நாடகம் அநாதியாக ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. புதிய உலகில் சந்தோஷமும் அமைதியும் இருக்கின்றன. அங்கு புயல்கள் போன்ற எதுவும் இல்லை. எல்லையற்ற அமைதி உலகில் அனைவரும் அமைதி நிறைந்தவர்களாக உள்ளனர். ஆனால் இங்கு அமைதியின்மை இருப்பதால், அனைவரும் அமைதியற்றுள்ளனர். சத்தியயுகத்தில் உள்ள அனைவரும் அமைதிநிறைந்தவர்களாக உள்ளார்கள். இது ஓர் அற்புதமான விடயமாகும். இந்த நாடகம் அநாதியாக, ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. இது ஓர் எல்லையற்ற விடயமாகும். ஏனையவர்கள் கற்கும் பொறியியல், சட்டம் போன்றன எல்லைக்குட்பட்டவை. இப்பொழுது உங்கள் புத்தி எல்லையற்ற ஞானத்தைக் கொண்டுள்ளது. தந்தை ஒருமுறை மாத்திரமே வந்து இந்த எல்லையற்ற நாடகத்தின் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். இந்த எல்லையற்ற நாடகம் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பதை நீங்கள் முன்னர் ஒருபோதும் கேள்விப்படவில்லை. சத்திய, திரேதா யுகங்கள் எவ்வாறு கடந்து செல்கின்றன என்றும், எவ்வாறு அது அந்நேரத்தில் தேவர்களின் இராச்சியமாக இருந்தது என்பதையும் இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். திரேதாயுகத்தில் அது இராமரின் இராச்சியமாக இருந்தது. ஏனைய அனைத்துச் சமயங்களும் பின்னரே வந்தன. உங்களுக்கு இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவம் போன்ற சமயங்கள் அனைத்தைப் பற்றியும் தெரியும். அவை அனைத்தும் 2500 வருடங்களின் பிற்பகுதியிலேயே வந்தன. கலியுகம் 1250 வருடங்களுக்கு நீடிக்கிறது அனைத்திற்கும் கணக்கு உள்ளது. உலகம் 2500 வருடங்களுக்கு நீடிக்கிறது என்றில்லை, இல்லை. அச்சா. வேறு யார் அங்கிருந்தார்கள்? இதனைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். அவர்கள் (பல்வேறு சமயங்கள்) வரும் முன்னர், நிச்சயமாக அங்கு தேவர்கள் இருந்தார்கள். அவர்களும் மனிதர்களே, ஆனாலும் அவர்களிடம் தெய்வீகக் குணங்கள் இருந்தன. சூரிய, சந்திர வம்சங்கள் 2500 வருடங்களுக்கு நீடித்தன. ஏனைய அனைவரும் சக்கரத்தின் இரண்டாவது அரைப்பகுதியின் போதே வந்தார்கள். அதைவிட அதிகளவு வருடங்களை எவருக்கும் கணக்கிட முடியாது. நான்கு பகுதிகள் உள்ளன: முழுமையானது, முக்கால்வாசி, அரைவாசி, கால்வாசி. அவை சமமாகவே பிரிக்கப்பட்டுள்ளன. தேவர்கள் சக்கரத்தின் முதலாவது அரைப்பகுதியிலேயே இருந்தனர். சத்தியயுகத்தில் சூரிய, வம்ச இராச்சியம் இருந்தது என்றும், திரேதாயுகத்தில் இராமரின் சந்திர வம்சம் இருந்தது என்றும் கூறப்படுகிறது. சத்தியயுக ஆரம்பத்தில் வருபவர்களே, நீண்ட ஆயுளைக் கொண்டிருந்தார்கள் என நீங்கள் நிரூபிக்கலாம். சக்கரம் 5000 வருடங்களாக இருந்த போதிலும் அம்மக்கள் 8.4 மில்லியன் உயிரினங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் இச்சக்கரம் நூறாயிரக்கணக்கான வருடங்களுக்கு நீடிக்கிறது எனவும் கூறுகிறார்கள். எவராலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. உலக சனத்தொகை அந்தளவு பெரியதாக இருக்க முடியாது. ஆகையால் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார்: அவை அனைத்தும் அறியாமை ஆகும், ஆனால் இதுவோ ஞானமாகும். இந்த ஞானம் எங்கிருந்து வந்தது? அதுவும் எவருக்கும் தெரியாது. ஒரேயொரு தந்தையே ஞானக்கடலாவார். அவரே இந்த வாயின் மூலம் ஞானத்தைக் கொடுப்பவர் ஆவார். அவர்கள் “பசுவின் வாய்” பற்றிப் பேசுகிறார்கள். இது பசுவாகிய இத்தாய் மூலம் நீங்கள் அனைவரும் தத்தெடுக்கப்படுவதைக் குறிக்கின்றது. இச்சிறிய விடயத்தை விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவாகும். நீங்கள் ஒருநாள் மாத்திரம் விளங்கப்படுத்திய பின் நிறுத்திவிட்டால், அவர்களின் புத்தி வேறு விடயங்களில் ஈடுபடுகிறது. பாடசாலையில் குழந்தைகள் ஒருநாள் மாத்திரமா கற்கிறார்கள் அல்லது ஒவ்வொருநாளும் முறையாக கற்கிறார்களா? ஞானம் ஒருநாளில் கற்று விடக் கூடியதல்ல. எல்லையற்ற தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதால் அவர் கற்பிக்கும் கல்வியும் எல்லையற்றதாக இருக்கவேண்டும். அவர் உங்களுக்கு ஓர் எல்லையற்ற இராச்சியத்தைக் கொடுக்கின்றார். பாரதத்தில் அந்த எல்லையற்ற இராச்சியம் இருந்தது. இலக்ஷ்மியும், நாராயணனும் அந்த எல்லையற்ற இராச்சியத்தை ஆட்சி செய்தார்கள். எவருமே இவ்விடயங்களைப் பற்றிக் கனவுகூட கண்டிருக்க மாட்டார்கள். எனவே, அவர்கள் தங்கள் இராச்சியத்தை எவ்வாறு பெற்றார்கள் என வினவுவதும் இல்லை. அவர்கள் யோகி ஆத்மாக்களாக இருந்ததால், அவர்களிடம் பெருமளவில் தூய்மை இருந்ததுடன், அதனால் அவர்களுடைய ஆயுட்காலமும் நீண்டதாக இருந்தது. நாங்களும் யோகிகளாக இருந்தோம், ஆனால் பின்னர் 84 பிறவிகளை எடுக்கும் போது, நாங்கள் நிச்சயமாக இந்திரிய சுகத்தில் ஈடுபடுபவர்கள் ஆகவேண்டியிருந்தது. தாங்களும் மறுபிறவி எடுத்துள்ளார்கள் என்பதை மக்கள் அறியாதுள்ளார்கள். அவர்களை இறைவன், இறைவி என அழைக்க முடியாது. 84 பிறவிகளை எடுக்கின்ற வேறு எவராலும் அங்கு அவர்களுக்கு முன்னதாகச் செல்ல முடியாது. ஆரம்பத்தில் சத்திய யுகத்தில் ஆட்சி புரிபவர்களே 84 பிறவிகளை எடுப்பவர்கள். பின்னர் ஏனையோர் வரிசைக்கிரமமாகக் கீழிறங்குகின்றார்கள். தேவர்களாக ஆகுகின்ற ஆத்மாக்களாகிய நீங்களே பின்னர் உங்கள் சுவர்க்கக் கலைகள் தொடர்ந்தும் குறைவடைவதனால், சத்திரியர்கள் ஆகுகின்றீர்கள். பூஜிக்கத் தகுதியுடையவராக இருந்தவர்களே பூஜிப்பவர்களாக ஆகுகின்றார்கள் என்பது நினைவு கூரப்படுகின்றது. நீங்கள் சதோபிரதானிலிருந்து தமோபிரதானாக மாறுகின்றீர்கள். மறுபிறவி எடுக்கையில் நீங்கள் கீழிறங்குகின்றீர்கள். இவை அனைத்தும் நினைவு செய்வதற்கு இலகுவானதாக இருந்த போதிலும், மாயை உங்களை அனைத்தையும் மறக்கச் செய்து விடுகிறாள். நீங்கள் இந்த ஞானக் குறிப்புக்கள் அனைத்தையும் சேகரித்து, அவற்றின் புத்தகமொன்றை ஆக்க முடியும். எவ்வாறாயினும், இது எதுவுமே இருக்கப் போவதில்லை; அது தற்காலிகமானது. தந்தை எந்தக் கீதையையும் பேசவில்லை. தந்தை, உங்களுக்கு அவர் முன்னைய கல்பத்தில் செய்ததைப் போலவே, அனைத்தையும் இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார். அந்த வேதங்கள், சமயநூல்கள் போன்ற அனைத்தும் பின்னர் உருவாக்கப்பட்டன. விநாசம் இடம்பெறும் பொழுது அவை அனைத்தும் மொத்தமாக எரிக்கப்பட்டு விடும். சத்திய, திரேதா யுகங்களில் சமயப் புத்தகங்கள் எதுவும் இருப்பதில்லை. அவை பக்தி மார்க்கத்தில் மீண்டும் உருவாக்கப்படுகின்றன. பக்தி மார்க்கத்தில் அனேக விடயங்கள் உருவாக்கப்படுகின்றன. அவர்கள் ஏன் எனப் புரிந்து கொள்ளாமலே இராவணனின் கொடும்பாவியை உருவாக்குவதால், அவர்களால் எதனையும் விளங்கப்படுத்த முடிவதில்லை. அவர்கள் ஏன் இந்தக் கொடும்பாவியை ஒவ்வொரு வருடமும் உருவாக்கி, எரிக்கின்றார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். இராவணன் நிச்சயமாகக் கொடிய எதிரியாவான். ஆனால் அவன் எந்த விதத்தில் அனைவருக்கும் எதிரி என்பதை எவரும் அறிந்திருப்பதில்லை. ஒருவேளை அவன் சீதையைக் கடத்தியதால் தங்கள் எதிரியாக இருக்கலாம் என அவர்கள் நினைக்கின்றார்கள். அவன் இராமரின் சீதையைக் கடத்தியிருந்தால், அவன் ஒரு பெரிய கொள்ளைக்காரனாக இருக்க வேண்டும். அவன் எப்பொழுது சீதையைக் கடத்தினான்? திரேதாயுகத்தின் ஆரம்பத்திலா அல்லது திரேதாயுகத்தின் இறுதியிலா என்று உங்களால் கூற முடியுமா? இந்த விடயங்களைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். அவர் கடத்தப்பட்டிருக்க முடியுமா? எந்த இராமருடைய சீதை கடத்தப்பட்டார்? அங்கே இராமர் சீதையின் இராச்சியம் இருந்ததா? அங்கே ஒரு இராமர் சீதை மாத்திரமா இருந்தார்கள்? இது சமயநூல்களில் உள்ள கதை போன்றதாகும்! அவர் எந்தச் சீதை என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். அங்கே 12 இராமரும் சீதைகளும் இருந்தார்கள். எனவே எந்தச் சீதை கடத்தப்பட்டார்? அது இறுதியில் இருந்தவராகவே இருக்க வேண்டும். இராமரின் சீதையை கடத்தப்பட்டதைப் பற்றி நீங்கள் பேசுகின்றீர்கள். இராமருடைய இராச்சியத்தில் ஒரேயொரு இராச்சியம் மாத்திரமே இருந்திருக்க முடியாது. அங்கே ஒரு வம்சம் இருந்திருக்க வேண்டும். எனவே எந்த இலக்கச் சீதை கடத்தப்பட்டார்? இவ் விடயங்கள் அனைத்தும் மிக நன்றாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியவையாகும். இந்த இரகசியங்கள் அனைத்தையும், எவருக்கும் குழந்தைகளாகிய உங்களால் மிகவும் ஆறுதலாக விளங்கப்படுத்த முடியும். மக்கள் பக்தி மார்க்கத்தில் அதிகளவு அலைந்து திரிந்ததால் சந்தோஷமற்றவர்களாகி விட்டார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் உச்சளவு சந்தோஷமற்றிருக்கும் போது கதறி அழுகின்றார்கள்: பாபா இந்தத் துன்பத்தில் இருந்து எங்களை அகற்றி விடுங்கள்! இராவணன் பௌதீகமானவன் அல்ல. அவன் இருந்தால், நீங்கள் ஏன் ஒவ்வொரு வருடமும் உங்கள் அரசனைக் கொல்லுகின்றீர்கள்? இராவணனுக்கு ஒரு மனைவியும் இருக்க வேண்டும். அவர்கள் மண்டோதரியை அவன் மனைவியாகக் காட்டுகின்றார்கள். எவராவது மண்டோதரியின் கொடும்பாவியைச் செய்து எரித்ததை நீங்கள் எப்பொழுதாவது பார்த்திருக்கின்றீர்களா? ஆகவே தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: அவை அனைத்தும் பொய்யான மாயையும், பொய்யான சரீரங்களும் ஆகும். நீங்கள் பொய்யான மனிதர்களில் இருந்து உண்மையான தேவர்களாக மாறுவதற்காக இப்பொழுது இங்கு அமர்ந்திருக்கிறீர்கள். அதில் அந்தளவு வித்தியாசம் உள்ளது! அங்கே நீங்கள் எப்பொழுதும் உண்மையையே பேசுவீர்கள். அது சத்திய பூமியாகும், ஆனால் இது மக்கள் கூறும் அனைத்தும் பொய்யானவையாகவே உள்ள பொய்யான உலகம் ஆகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஞானக்கடலான தந்தை தினமும் உங்களுக்குக் கற்பிக்கின்ற, இந்த எல்லையற்ற கல்வியைக் கடையுங்கள். நீங்கள் கற்பவற்றை, மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

2. இந்த எல்லையற்ற நாடகம் எவ்வாறு தொடர்ந்து செல்கின்றது என்றும், அது எவ்வாறு அநாதியாக நிச்சயிக்கப்பட்ட, அற்புதமான நாடகம் என்பதையும் நீங்கள் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். பின்னர், இதன் முக்கியத்துவத்தை பிறருக்கு விளங்கப்படுத்துங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தூய்மையின் மேன்மையான தாரணையையும் ஒரேயொரு தர்மத்தின் சம்ஸ்காரங்களையும் கிரகித்து, ஒரு சக்திவாய்ந்த சக்கரவர்த்தி ஆகுவீர்களாக.

சுய இராச்சியத்தின் தர்மம், அதாவது, தாரணை தூய்மையாகும். ஒரே தர்மம் என்றால் ஒரே தாரணை என்று அர்த்தம். உங்களின் எண்ணங்களிலோ அல்லது கனவுகளிலோ எந்தவிதமான தூய்மையின்மையும், அதாவது, வேறெந்த தர்மமோ இருக்கக்கூடாது. எங்கே தூய்மை இருக்கிறதோ, அங்கே எந்தவிதமான தூய்மையின்மையின் பெயரோ அல்லது சுவடோ இருக்க முடியாது. அதாவது, வீணானவை அல்லது பாவகரமான எதுவும் இருக்க முடியாது. சம்பூரணமான தூய்மைக்கான இத்தகைய சம்ஸ்காரங்களால் தங்களை நிரப்பிக் கொள்பவர்கள், சக்திவாய்ந்த சக்கரவர்த்திகள் ஆகுவார்கள். தற்சமயம் நீங்கள் கிரகிக்கும் மேன்மையான சம்ஸ்காரங்களின் அடிப்படையிலேயே எதிர்கால உலகம் உருவாக்கப்படுகிறது. இப்போது நீங்கள் கிரகிக்கும் சம்ஸ்காரங்கள், எதிர்கால உலகின் அத்திவாரம் ஆகுகின்றன.

சுலோகம்:
ஒரேயொரு இறைவனிடம் உண்மையான அன்பு வைத்திருப்பவர்கள், வெற்றி இரத்தினங்கள் ஆகுவார்கள்.