17.01.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்களே பாரதத்தின் அதி பெறுமதிவாய்ந்த சேவையாளர்கள். ஸ்ரீமத்தின் அடிப்படையில் அதனை இராம இராச்சியமாக ஆக்குவதற்கு, நீங்கள் உங்களுடைய சரீரங்கள், மனங்கள், செல்வத்தைப் பயன்படுத்துகின்றீர்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது செய்யும் உண்மையான ஆன்மீக சேவை என்ன?

பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், தூய சந்தோஷ பூமியை மறைமுகமான முறையில் ஸ்தாபிக்கின்றீர்கள். இதுவே பாரதத்தின் உண்மையான ஆன்மீக சேவை. எல்லையற்ற தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இராவணனின் சிறையில் இருந்து அனைவரையும் விடுதலை செய்கின்றீர்கள். இதற்கு நீங்கள் தூய்மையாகி ஏனையோரையும் தூய்மை ஆக்குகிறீர்கள்.

பாடல்:
ஓ கடவுளே! குருடர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்.

ஓம் சாந்தி.
“ஓ பிரபுவே, ஓ கடவுளே, ஓ பரமாத்மாவே” என்ற வார்த்தைகளைக் கூறுவதற்கும் “தந்தை” என்ற வார்த்தைளைக் கூறுவதற்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. “ஓ கடவுளே, ஓ பிரபுவே” எனக் கூறும்போது, அதிகளவு மரியாதை உள்ளது. ஆனால் “தந்தை” என்ற வார்த்தை மிகவும் சாதாரணமானது. பல தந்தையர் உள்ளனர். பிரார்த்தனை செய்யும்போதும் மக்கள் “பிரபு”, “ஓ கடவுளே” எனக் கூறுகின்றனர். ஏன் அவர்கள் “பாபா” எனக் கூறுவதில்லை? எவ்வாறாயினும் அவரே பரமாத்மா. “தந்தை” என்ற வார்த்தை மறைக்கப்பட்டு “பரமாத்மா” என்ற வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதைப் போன்றுள்ளது. மக்கள் அழைக்கின்றனர்: “ஓ கடவுளே, குருடர்களுக்கு பாதையைக் காட்டுங்கள்”. ஆத்மாக்கள் கூறுகின்றனர்: “பாபா, முக்திக்கும், ஜீவன்முக்திக்குமான பாதையை எங்களுக்குக் காட்டுங்கள்”. “பிரபு” என்ற வார்த்தை மிகவும் மகத்தானது, ஆனால் “தந்தை” என்ற வார்த்தை மிகவும் சாதாரணமானது. தந்தை வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பௌதீக உலகில் பல தந்தையர்கள் உள்ளனர். மக்கள் அழைக்கின்றனர்: “நீங்களே தாயும் தந்தையுமானவர்”. இந்த வார்த்தைகள் மிக சாதாரணமானவை‚ “கடவுள்” அல்லது “பிரபு” எனக் கூறும்போது, அவரால் எதனைத்தான் செய்யமுடியாது என மக்கள் நினைக்கின்றார்கள். தந்தை இப்பொழுது வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை உங்களுக்கு மிக மேன்மையான, இலகுவான பாதையைக் காட்டுகின்றார். தந்தை கூறுகின்றார்: ஓ எனது குழந்தைகளே, இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றியதன் மூலமும், காமச்சிதையில் அமர்ந்ததன் மூலமும் நீங்கள் முற்றிலும் எரிந்துவிட்டீர்கள். நான் இப்பொழுது உங்களைத் தூய்மையாக்கி வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்வதற்காகவே வந்துள்ளேன். இதனாலேயே, தூய்மையற்ற உங்களைத் தூய்மையாக்குவதற்கு வருமாறு நீங்கள் தந்தையை அழைத்தீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்குச் சேவை செய்யவே வந்துள்ளேன். குழந்தைகளாகிய நீங்கள் கூட அனைவரும் பாரதத்தின் ஆன்மீகச் சேவையில் உள்ளீர்கள். உங்களைத் தவிர வேறு எவராலும் இந்தச் சேவையைச் செய்ய முடியாது. பாரதத்திற்காகவே நீங்கள் அதனைச் செய்கின்றீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் தூய்மை ஆகுவதுடன் பாரதத்தையும் தூய்மை ஆக்குகின்றீர்கள். பாபு காந்திஜியும் இராம இராச்சியம் வர வேண்டும் என விரும்பினார். இப்பொழுது எந்த மனிதராலும் இராம இராச்சியத்தை உருவாக்க முடியாது. இல்லாவிடின், அவர்கள் ஏன் கடவுளைத் தூய்மையாக்குபவர் என அழைக்கின்றனர்? இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் பாரதத்தின் மீது அதிகளவு அன்பைக் கொண்டுள்ளீர்கள். நீங்களே குறிப்பாக பாரதத்திற்கும், பொதுவாக முழு உலகிற்கும் உண்மையான சேவையைச் செய்கின்றீர்கள். காந்திஜி விரும்பியவாறு நீங்கள் பாரதத்தை மீண்டும் ஒருமுறை இராம இராச்சியமாக ஆக்குகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் எல்லைக்குட்பட்ட ஒரு தேசத்தின் தந்தை, ஆனால் அந்த ஒரேயொருவரோ எல்லையற்றதன் தந்தை. அவர் எல்லையற்ற சேவையைச் செய்கின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். உங்களிற் சிலருக்கு இராம இராச்சியத்தை உருவாக்குகின்றோம் என்ற போதை வரிசைக்கிரமமாகவே உள்ளது. நீங்கள் அரசாங்க சேவையாளர்கள். நீங்கள் தெய்வீக அரசாங்கத்தை உருவாக்குகிறீர்கள். உங்களுக்குப் பாரதத்தின் மீது போதை உள்ளது. சத்திய உலகில் தூயபூமியாக இருந்த பாரதமே இப்பொழுது தூய்மை அற்றுள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது சந்தோஷ பூமியாகிய தூய உலகைத் தந்தையின் மூலம் மறைமுகமான முறையில் உருவாக்குகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஸ்ரீமத்தையும் மறைமுகமான முறையிலேயே பெறுகின்றீர்கள். நீங்கள் இதனைப் பாரதத்தின் அரசாங்கத்திற்காகச் செய்கின்றீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றி உங்கள் சரீரம், மனம், செல்வத்தின் மூலம் பாரதத்திற்கு அதி மேன்மையான சேவையைச் செய்கிறீர்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்து பலர் சிறைக்குச் சென்றனர். ஆனால் நீங்கள் சிறைக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லை. உங்கள் விடயம் ஆன்மீகமானது. உங்கள் யுத்தம் முழு உலக இராச்சியத்தையும் ஆட்சிசெய்கின்ற ஐந்து விகாரங்களாகிய இராவணனுக்கு எதிரானது ஆகும். இதுவே உங்கள் சேனை. அந்த இலங்கை ஒரு சிறிய தீவு. ஆனால் இந்த உலகம் எல்லையற்ற தீவாகும். நீங்கள் எல்லையற்ற தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் அனைவரையும் இராவணனின் சிறையிலிருந்து விடுதலை செய்கின்றீர்கள். எவ்வாறாயினும் தூய்மையற்ற உலகம் அழிக்கப்பட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் சிவ சக்திகள். கோபர்களாகிய (சகோதரர்கள்) நீங்களும் சிவசக்திகள். நீங்கள் மறைமுகமான முறையில் பாரதத்தில் மகத்தான சேவையைச் செய்கிறீர்கள். நீங்கள் முன்னேறிச் செல்கையில் அனைவரும் இதனைப் பற்றி அறிந்து கொள்வார்கள். ஸ்ரீமத்தின் அடிப்படையில் இடம்பெறும் உங்கள் சேவை ஆன்மீகமானது. நீங்கள் மறைமுகமானவர்கள். பிரம்மாகுமாரிகளாகிய நீங்கள் உங்கள் மனம், சரீரம், செல்வத்தின் மூலம் பாரதத்தை அதிமேன்மையான சத்திய பூமி ஆக்குகிறீர்கள் என்பது அரசாங்கத்திற்குத் தெரியாது. பாரதம் சத்திய பூமியாகவே இருந்தது, ஆனால் அது இப்பொழுது பொய்மையான பூமி ஆகியுள்ளது. ஒரெயொரு தந்தையே சத்தியமானவர். “கடவுள் சத்தியமானவர்” எனக் கூறப்படுகிறது. அவர் உங்களைச் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாற்றுவதற்காக உண்மையான கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் உங்களைச் சென்ற கல்பத்திலும் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக ஆக்கினேன். அவர்கள் அத்தகைய கட்டுக் கதைகளை இராமாயணத்தில் எழுதியுள்ளனர். இராமர் குரங்குகளின் சேனையை அழைத்துச் சென்றார் என அதில் கூறப்படுகிறது. முன்னர், நீங்கள் அனைவரும் குரங்குகளைப் போன்றே இருந்தீர்கள். அது ஒரு சீதை பற்றிய விடயமில்லை. தந்தை எவ்வாறு இராவண இராச்சியத்தை அழித்து இராம இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார் என்பதை விளங்கப்படுத்துகின்றார். இதில் சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. மக்கள் அதிகளவு செலவு செய்து இராவணனின் கொடும்பாவியை உருவாக்கிப் பின்னர் எரிக்கின்றார்கள். அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. பல பிரபல்யமான மக்கள் சென்று அதைப் பார்க்கிறார்கள். வெளிநாட்டவர்களும் அதைப் பார்ப்பதற்கு அழைக்கப்படுகிறார்கள். ஆனாலும் அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. தந்தை இப்பொழுது இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். ஆகவே குழந்தைகளாகிய உங்களின் இதயத்தில் பாரதத்தின் உண்மையான ஆன்மீக சேவையை நீங்களே செய்கிறீர்கள் என்ற உற்சாகம் இருக்கின்றது. உலகத்திலுள்ள ஏனையோர் இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இராமரின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறீர்கள். நீங்கள் இராமர் எனக் கூறினாலும், அல்லது சிவன் எனக் கூறினாலும் இரண்டும் ஒரே விடயமே. கடவுளுக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்ற, பாரதத்தின் அதி பெறுமதிவாய்ந்த சேவையாளர்கள். ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள் என மக்கள் அழைக்கின்றனர். நீங்கள் சத்தியயுகத்தில் எவ்வளவு சந்தோஷத்தைப் பெறுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் எல்லையற்ற பொக்கிஷங்களைப் பெறுகிறீர்கள். அங்கு சராசரி ஆயுட்காலங்களும் மிக நீண்டவை. அங்கு அனைவரும் யோகிகள், ஆனால் இங்கு அனைவரும் போகிகள் (இந்திரிய சுகங்களில் ஈடுபடுபவர்கள்). அவர்கள் தூய்மையானவர்கள்‚ ஆனால் இங்கு இவர்கள் தூய்மை அற்றவர்கள். இரவிற்கும் பகலிற்குமான வேறுபாடு இருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணரும் ஒரு யோகி என அழைக்கப்படுகிறார். அவர்கள் இவரை (ஸ்ரீ கிருஷ்ணர்) மகாத்மா எனவும் அழைக்கின்றனர். ஆனால் இவரே உண்மையான மகாத்மா. தெய்வீகக் குணங்கள் அனைத்தினாலும் நிரம்பியவர் என்ற அவரது புகழ் பாடப்படுகின்றது. அவருடைய ஆத்மா, அவருடைய சரீரம் ஆகிய இரண்டும் தூய்மையானவை. சந்நியாசிகள் இல்லறத்தவர்களுக்கு விகாரத்தினூடாகப் பிறந்து, பின்னர் சந்நியாசிகள் ஆகுகின்றனர். தந்தை இப்பொழுது இவ்விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இந்த நேரத்தில் மக்கள் நேர்மை அற்றவர்களாகவும் சந்தோஷம் அற்றவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் சத்தியயுகத்தில் எவ்வாறிருந்தனர்? அவர்கள் தர்மமானவர்களாகவும் நியாயமானவர்களாகவும் இருந்தனர். அவர்கள் 100வீதம் செழிப்பானவர்களாகவும் எப்போதும் சந்தோஷமானவர்களாகவும் இருந்தனர். பகலுக்கும் இரவிற்குமான வேறுபாடு உள்ளது. நீங்கள் மாத்திரமே இவற்றை மிகச்சரியாக அறிவீர்கள். பாரதம் எவ்வாறு சுவர்க்கத்திலிருந்து நரகமாகியது என்பதை எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் இலக்ஷ்மி நாராயணனை வணங்குவதுடன் அவர்களுக்கு ஆலயங்களையும் கட்டுகின்றனர், ஆனால் அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் நல்ல பதவி வகிப்பவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். அத்துடன் பிர்லாவிற்கும் எவ்வாறு இலக்ஷ்மியும் நாராயணனும் தங்கள் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டார்கள் எனவும், அவர்களுக்காக ஆலயங்கள் கட்டப்படுவதற்கு அவர்கள் என்ன செய்தார்கள் எனவும் உங்களால் விளங்கப்படுத்த முடியுமென்று தந்தை தொடர்ந்தும் கூறுகிறார். ஒருவரது தொழிலைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அவரை வணங்குவது கற்சிலையை வணங்குவது போன்றது; அது பொம்மைகளின் வழிபாடு. ஏனைய மதத்தவர்கள், கிறிஸ்து இன்ன நேரத்திலேயே வந்தார் என்பதைத் தெரிந்து கொண்டதுடன் அவர் மீண்டும் வருவார் என்றும் நம்புகின்றார்கள். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு உள்ளார்த்தமான ஆன்மீக போதையைக் கொண்டிருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் இந்தச் சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அரைக் கல்பமாகச் சரீர உணர்விலேயே இருந்தீர்கள். .தந்தை கூறுகிறார்: இப்பொழுது சரீரமற்றவர்கள் ஆகுங்கள். உங்களை ஓர் ஆத்மா எனக் கருதிக் கொள்ளுங்கள். “ஆத்மாவாகிய நான் தந்தை கூறுவதைச் செவிமடுக்கிறேன்” ஆன்மீகத் தந்தை அங்கு அமர்ந்திருந்து ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என ஏனைய சத்சங்கங்களில் ஒருபோதும் எண்ணுவதில்லை. ஆத்மாவே அனைத்தையும் செவிமடுக்கிறார். ஆத்மா கூறுகிறார்: நான் ஒரு பிரதம மந்திரி, நான் இன்ன-இன்னார். ஆத்மா தனது சரீரத்தினூடாக நான் பிரதம மந்திரி, நான் இன்ன இன்னார் எனக் கூறுகிறார். ஆத்மாக்களாகிய நாங்கள் சுவர்க்கத்தின் தேவர்கள் ஆகுவதற்காகவே முயற்சி செய்கிறோம் என இப்பொழுது நீங்கள் கூறுகிறீர்கள். நான் ஓர் ஆத்மா, இது எனது சரீரம். ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு பெரும் முயற்சி தேவைப்படுகிறது. நீங்கள் தொடர்ந்தும் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்களே அதி கீழ்ப்படிவான சேவதாரிகள். நீங்கள் இப் பணியை மறைமுகமான முறையில் செய்கிறீர்கள். ஆகவே, நீங்களே இந்த அரசாங்கத்தின் ஆன்மீகச் சேவகர்கள் என்ற மறைமுகமான போதையையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகிறீர்கள். பாபுஜியும் புதிய உலகில் புதிய பாரதம் இருக்க வேண்டும் என விரும்பினார்; புதுடெல்கியை அவர் விரும்பினார். இது இப்பொழுது புதிய உலகம் அல்ல. இந்தப் பழைய டெல்கி இடுகாடு ஆகப் போகின்றது. அதன் பின்னர் அது தேவதைகளின் பூமியாகும். நீங்கள் அதை இப்பொழுது தேவதைகளின் பூமி என அழைக்க முடியாது. நீங்கள் புதிய உலகிற்காக தேவதைகளின் பூமியாகிய புது டெல்கியை உருவாக்குகின்றீர்கள். இவ்விடயங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இவ்விடயங்களை நீங்கள் மறந்துவிடக் கூடாது. பாரதத்தை மீண்டும் சந்தோஷ பூமியாக்குவது அத்தகைய மிக மேன்மையான பணியாகும். நாடகத் திட்டத்திற்கேற்ப உலகம் பழையதாக வேண்டும். இப்பொழுது இது துன்ப பூமியாகும். ஒரேயொரு தந்தையே துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருள்பவர் என அழைக்கப்படுகிறார். துன்பமிக்க பாரதத்தைச் சந்தோஷமானதாக ஆக்குவதற்குத் தந்தை ஒவ்வொரு 5000 வருடமும் வருகின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் சந்தோஷத்தையும், அமைதியையும் கொடுக்கின்றார். எவ்வாறு மன அமைதியைக் கொண்டிருப்பது என மக்களும் கேட்கின்றார்கள். இப்பொழுது, இனிய வீடாகிய அமைதி தாமத்தில் மாத்திரமே அமைதி இருக்க முடியும். துன்பமோ சப்தமோ அற்ற அதுவே மௌன தாமம் என அழைக்கப்படுகின்றது. சூரியன், சந்திரன் போன்றவையும் அங்கு இருப்பதில்லை. குழந்தைகளாகிய உங்களிடம் இப்பொழுது இந்த ஞானம் அனைத்தும் உள்ளன. தந்தை உங்கள் கீழ்ப்படிவான சேவகனாக வந்துள்ளார். எவ்வாறாயினும், எவருக்குமே தந்தையைத் தெரியாது. மக்கள் எவரையாவது மகாத்மா என அழைத்தாலும், இப்பொழுது எவரும் மகாத்மாவாக இருக்க முடியாது - சுவர்க்கத்திலேயே மகாத்மாக்கள் இருக்க முடியும். அங்கு ஆத்மாக்கள் தூய்மையானவர்கள், அவர்கள் தூய்மையாக இருப்பதனால் அவர்கள் அமைதியையும் செழிப்பையும் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது அவர்களிடம் தூய்மை இல்லாததால் அவர்களிடம் எதுவும் இல்லை. தூய்மைக்கு மரியாதை உண்டு. தேவர்கள் தூய்மையானவர்கள், இதனாலேயே மக்கள் அவர்களின் சிலைகளின் முன் தலை வணங்குகிறார்கள். தூய்மையானவர்கள் தூய்மையாகவும், தூய்மை அற்றவர்கள் தூய்மையற்றும் இருக்கின்றனர். அந்த ஒரேயொருவர் உலகிலுள்ள அனைவரதும் எல்லையற்ற பாபுஜி ஆவார். ஒரு மேயரும் நகரபிதா என அழைக்கப்படலாம். அவ்வாறான விடயங்கள் அங்கு இருப்பதில்லை. அங்கு இராச்சியம் சட்டத்திற்கமையவே செயற்படுகிறது. “ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!” என மக்கள் அழைக்கிறார்கள். “இப்பொழுது தூய்மை ஆகுங்கள்” எனத் தந்தை கூறுகின்றார். பின்னர் அவர்கள் கேட்கிறார்கள்: இது எப்படிச் சாத்தியம்? எப்படிக் குழந்தைகள் பிறப்பார்கள்? எப்படி உலக சனத்தொகை அதிகரிக்கும்? இலக்ஷ்மியும் நாராயணனும் முற்றிலும் விகாரமற்றவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு எதிர்ப்பைச் சகித்துக்கொள்ள வேண்டும். கடந்த சக்கரத்தில், நாடகத்தில் எது இடம்பெற்றதோ அது மீண்டும் இடம்பெறும். நீங்கள் எதுவுமே செய்யாமல் இருக்கலாம் என்றில்லை. நாடகத்தில் இருந்தால் உங்களுக்கு கிடைக்கும், இது நாடகம்தானே என எண்ணி நீங்கள் நின்றுவிடக்கூடாது. நீங்கள் அவ்வாறு முயற்சி செய்யாமல் இருந்தால் பாடசாலையில் சித்தியடைவீர்களா? மக்கள் அனைத்திற்கும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். முயற்சி செய்யாமல் நீரையும் உங்களால் பெற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் விநாடிக்கு விநாடி எந்த முயற்சியைச் செய்தாலும் அது உங்களின் வெகுமதிக்கானதாகும். எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருப்பதற்கு நீங்கள் எல்லையற்ற முயற்சியைச் செய்ய வேண்டும். இப்பொழுது இது பிரம்மாவின் இரவு, ஆகவே இது பிராமணர்களின் இரவும் ஆகும். பின்னர் அது பிராமணர்களின் பகல் ஆகும். நீங்கள் இதனைச் சமயநூல்களில் கற்றாலும் நீங்கள் எதனையும் புரிந்து கொள்ளவில்லை. இந்த பாபாவும் இராமாயணத்தையும், பாகவதத்தையும் உரைத்திருக்கிறார். அவர் பண்டிதரைப் போல் அமர்வதுண்டு. அது பக்திமார்க்கம் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். பக்தி இந்த ஞானத்திலிருந்து வேறுபட்டது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் அனைவரும் காமச் சிதையில் அமர்ந்ததன் மூலம் அவலட்சணம் ஆகிவிட்டீர்கள். ஸ்ரீகிருஷ்ணரும் “அழகானவரும் அவலட்சணமானவரும்” என அழைக்கப்படுகின்றார். வழிபடுபவர்கள் மூட நம்பிக்கை உடையவர்கள். தீய சக்தியின் வழிபாடு அதிகமாக உள்ளது. ஒருவரின் சரீரத்தை வழிபடுதல், பஞ்ச தத்துவங்களையும் வழிபடுதல் என்பதாகும். அது கலப்படமான வழிபாடு என அழைக்கப்படுகிறது. பக்தி ஆரம்பத்தில் கலப்படம் அற்றிருந்தது; அப்பொழுது சிவனின் வழிபாடு மாத்திரமே இருந்தது. மக்கள் இப்பொழுது வழிபாடு செய்யும் விடயங்களைப் பாருங்கள். தந்தை பல அற்புதங்களைக் காட்டுவதுடன், அவர் உங்களுக்கு இந்த ஞானத்தையும் விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களை முட்களிலிருந்து மலர்களாக ஆக்குகின்றார். அது மலர்களின் தோட்டம் என அழைக்கப்படுகிறது. கராச்சியில், திரான்ஸில் செல்லும் பதன் என்ற காவலாளி இருந்தார். அவர் கூறுவார்: நான் சுவர்க்கத்திற்குச் சென்றேன், அங்கு குதா(கடவுள்) எனக்கு ஒரு மலரைக்; கொடுத்தார். அவர் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்தார். அது ஓர் அதிசயமே. மக்கள் உலகின் ஏழு அதிசயங்களைப் பற்றிப் பேசுகின்றனர். உண்மையில், சுவர்க்கமே உலகின் அதிசயம் ஆகும். எவருக்கும் இது தெரியாது. நீங்கள் அத்தகைய முதற்தரமான ஞானத்தைப் பெற்றிருப்பதனால் நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். பாப்தாதாவே அதியுயர்வானவர். இருப்பினும் அவர் மிகவும் எளிமையாக இருக்கிறார். அவர் அசரீரியானவர், ஆணவமற்றவர் என அவர்கள் பாடும்போது தந்தையின் புகழே பாடப்படுகின்றது. உங்களுக்குச் சேவை செய்வதற்காக தந்தை வரவேண்டியுள்ளது. தந்தை எப்போதும் தனது குழந்தைகளுக்குச் சேவை செய்து, அவர்களுக்குச் செல்வத்தையும், சொத்தையும் கொடுத்து விட்டுப் பின்னர் ஓய்வு ஸ்திதிக்குச் சென்று விடுகின்றார். அவர் தனது குழந்தைகளைத் தனது தலையில் அமர்த்துகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் உங்களது இனிய வீட்டிற்குச் சென்று, பின்னர் உங்கள் இனிய இராச்சியத்தைப் பெறுவதற்காகக் கீழே இறங்கி வருவீர்கள். தந்தை கூறுகிறார்: நான் ஓர் இராச்சியத்தைப் பெறுவதில்லை. ஒரேயொரு தந்தையே உண்மையான, தன்னலமற்ற சேவையாளர். ஆகவே, குழந்தைகளாகிய உங்களிடம் அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். எவ்வாறாயினும், மாயை உங்களை மறக்கச் செய்துவிடுகிறாள். நீங்கள் இத்தகைய மகத்துவம் வாய்ந்தவரான பாப்தாதாவை மறந்துவிடக் கூடாது. பாட்டனாரின் சொத்தைக் கொண்டிருப்பதில் அதிகளவு போதை உள்ளது. நீங்கள் சிவபாபாவை இனங்கண்டுள்ளீர்கள். அது அவரது சொத்தாகும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்து, தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். நீங்கள் அனைத்து அசுர குணங்களையும் அகற்ற வேண்டும். அவர்கள் பாடுகிறார்கள்: நான் நற்குணங்கள் அற்றவன்;, என்னிடம் நற்குணங்கள் இல்லை. “நற்குணங்கள் அற்றவர்களுக்கான சங்கம்” என அழைக்கப்படும் ஒரு ஸ்தாபனம் உள்ளது. இப்பொழுது எவரும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. நற்குணங்கள் அற்றிருத்தல் என்றால், நற்குணங்கள் இல்லை என்பதேயாகும். ஆனால் அவர்கள் அதைப் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் ஒரேயொரு விடயத்தை மாத்திரம் விளங்கப்படுத்த வேண்டும் எனத் தந்தை கூறுகிறார். கூறுங்கள்: “நாங்கள் பாரதத்தின் சேவையில் உள்ளோம்”. அனைவரதும் பாபுஜியான ஒரேயொருவரின் ஸ்ரீமத்தையே நாங்கள் பின்பற்றுகின்றோம். இதனாலேயே ஸ்ரீமத் பாகவத்கீதை நினைவு கூரப்படுகிறது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அதியுயர்வான பாப்தாதா எவ்வாறு எளிமையாக உள்ளாரோ, அவ்வாறே நீங்களும் மிகவும் எளிமையானவர் ஆகுவதுடன், அசரீரியானவராகவும் ஆணவமற்றவராகவும் ஆகவேண்டும். தந்தையிடமிருந்து நீங்கள் பெறுகின்ற இந்த முதற்தரமான ஞானத்தைக் கடையுங்கள்.

2. மீண்டும் மீண்டும் அதேபோன்று இடம்பெறும் இந்த நாடகத்தில் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருப்பதற்கு எல்லையற்ற முயற்சியைச் செய்யுங்கள். முயற்சி செய்வதை நிறுத்திவிடாதீர்கள் அல்லது அனைத்தையும் நாடகத்திடம் விட்டு விடாதீர்கள். உங்கள் வெகுமதிக்காக நீங்கள் நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு தேவதை ரூபத்தைக் கொண்டிருப்பதற்கான உங்கள் ஆன்மீக முயற்சி மூலம் சக்திவாய்ந்த சூழலை உருவாக்குவதால், ஓர் அவ்யக்த தேவதை ஆகுவீர்களாக.

உங்கள் தேவதை ரூபத்தின் மூலம் ஆன்மீக முயற்சியைச் செய்வதே, சக்திவாய்ந்த சூழலை உருவாக்குவதற்கான வழி ஆகும். மீண்டும் மீண்டும் இதில் கவனம் செலுத்துங்கள், ஏனெனில் நீங்கள் எவ்வளவுதான் ஆன்மீக முயற்சியைச் செய்தாலும், இதில் கவனம் செலுத்த வேண்டும். ஆகவே, அவ்யக்த ரூபத்தின் ஆன்மீக முயற்சியைச் செய்வது எனில், கவனம் செலுத்துகின்ற தபஸ்யாவை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என்பதாகும். ஆகவே, உங்கள் விழிப்புணர்வில் ஓர் அவ்யக்த தேவதை ஆகுகின்ற ஆசீர்வாதத்தை வைத்திருங்கள். உங்கள் முன்னிலையில் வருகின்ற எவரும் பௌதீகமான மற்றும் வீணான விடயங்கள் அனைத்திற்கும் அப்பால் செல்வார்கள்.

சுலோகம்:
சர்வசக்திவான் தந்தையை வெளிப்படுத்துவதற்கு, உங்கள் மனஒருமைப்பாட்டுச் சக்தியை அதிகரியுங்கள்.

உங்களின் சக்திவாய்ந்த மனதால் சகாஷைக் கொடுக்கின்ற சேவையைச் செய்யுங்கள்.

நாளாந்த நிகழ்ச்சிக்கு அமைய, உங்கள் பௌதீகச் செயற்பாடுகளுக்கான நேர அட்டவணையை அமைப்பதைப் போலவே, உங்கள் மனதின் சக்திவாய்ந்த ஸ்திதிக்கான ஒரு நிகழ்ச்சியையும் அமைத்துக் கொள்ளுங்கள். சக்திவாய்ந்த எண்ணங்களைக் கொண்டிருப்பதில் உங்கள் மனதை மும்முரமாக வைத்திருக்கும் அளவிற்கேற்ப, உங்கள் மனம் குழப்பம் அடைகின்ற நேரம் குறைவாக இருக்கும். சதா ஒரு நிலைநிறுத்தப்பட்ட மனம் என்றால், மனஒருமைப்பாட்டுடன் இருப்பதே. அதனால் உங்கள் நல்ல அதிர்வலைகள் எங்கும் இயல்பாகவே பரவுவதுடன், சேவையும் இடம்பெறும்.