17.01.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, பாரதம் சுவர்க்கமாக இருந்த போது, நீங்கள் முழுமையான ஒளிக்குள் இருந்தீர்கள். இப்பொழுது இருள் சூழ்ந்துள்ளது, நாங்கள் மீண்டும் ஒருமுறை ஒளிக்குள் செல்வோம்.
கேள்வி:
தந்தை தனது குழந்தைகளுக்கு என்ன கதையைக் கூறுவதற்காக வந்திருக்கின்றார்?பதில்:
பாபா கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, உங்களுடைய 84 பிறவிகளின் கதையை நான் உங்களுக்குக் கூறுகின்றேன். உங்கள் முதல் பிறவியை நீங்கள் எடுத்த போது, தேவ தர்மம் மாத்திரமே இருந்தது. இரண்டு யுகங்களின் பின்னர், நீங்கள் பக்தி செய்ய ஆரம்பித்து மிகப் பெரிய ஆலங்களைக் கட்டினீர்கள். இப்பொழுது இது உங்களுடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியாகும். நீங்கள் அழைத்தீர்கள்: ஓ துன்பத்தை நீக்கி சந்தோஷத்தை அருள்பவரே, வாருங்கள்! ஆகையால் நான் இப்பொழுது வந்துவிட்டேன்.பாடல்:
இன்றைய மக்கள் இருளில் உள்ளனர்.ஓம் சாந்தி.
இப்பொழுது இது அனைவரும் இருளில் இருக்கின்ற கலியுகம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். முதலில், பாரதம் சுவரக்கமாக இருந்த போது, நீங்கள் ஒளியில் இருந்தீர்கள். இந்துக்கள் எனத் தம்மைக் கூறிக் கொண்டிருக்கும் இதே பாரத மக்களே ஆரம்பத்திலே தேவர்களாக இருந்தார்கள். அவர்கள் பாரதத்தில் சுவர்க்கவாசிகளாக இருந்த போது, வேறு எந்தச் சமயமும் இருக்கவில்லை. அப்பொழுது ஒரேயொரு தர்மம் மாத்திரமே இருந்தது. சுவர்க்கம், வைகுந்தம் பாகிஸ்ட் போன்ற அனைத்தும் அந்த பாரதத்திற்கான பெயர்களே. புராதன பாரதம் ஆதியில் தூய்மையாகவும் செல்வம் மிக்கதாகவும் இருந்தது. இப்பொழுது இது கலியுகம் என்பதால் பாரதம் ஏழ்மையில் உள்ளது. நீங்கள் இப்பொழுது காரிருளில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் சுவர்க்கத்தில் இருந்த போது ஒளியில் இருந்தீர்கள். சுவர்க்கத்தின் சக்கரவர்த்தியாகவும் சக்கரவர்த்தினியாகவும், ஸ்ரீலக்ஷ்மியும் ஸ்ரீநாராயணனும் இருந்தார்கள். அது சந்தோஷ உலகம் என்று அழைக்கப்பட்டது. நீங்கள் தந்தையிடம் இருந்து சுவர்க்க ஆஸ்தியைப் பெற வேண்டும். அதுவே ஜீவன்முக்தி என்று அழைக்கப்படுகின்றது. இப்பொழுது அனைவரும் பந்தன வாழ்வில் உள்ளனர். குறிப்பாக பாரதமும் பொதுவாக உலகமும் இராவணனின் சிறையில், அதாவது துன்பக் குடிலில் உள்ளார்கள். இலங்கையில் இராவணன் இருந்தான் என்றோ பாரதத்தில் இராமர் இருந்தார் என்றோ அவன் வந்து சீதையைக் கடத்திச் சென்றான் என்றோ அல்ல. அவை அனைத்தும் கற்பனைக் கதைகள் ஆகும். கீதையே பிரதான சமயநூல் ஆகும். அதுவே பாரதத்தில் கடவுளால் பேசப்படுகின்ற, சகல சமயநூல்களினதும் இரத்தினமாகும். மனிதர்களால் எவருக்கும் ஜீவன்முக்தியை அருள முடியாது. சத்தியயுகத்தில் ஜீவன்முக்தி அடைந்த தேவர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் தமக்குரிய ஆஸ்தியைக் கலியுகத்தின் இறுதியில் பெற்றார்கள். பாரதத்தைச் சேர்ந்தவர்கள், இதனை அறிந்துள்ளார்கள் என்றோ அல்லது எந்தச் சமயநூல்களிலும் இது குறிப்பிடப்படவோ இல்லை. சமயநூல்களில் பக்தி மார்க்கத்திற்கான ஞானமே உள்ளது. சற்கதிக்கான இந்த ஞானம் முற்றாக எந்த மனிதரிடமும் இல்லை. அவர்கள் அனைவரும் பக்தியையே கற்பிக்கின்றார்கள். அவர்கள் உங்களிடம் சமயநூல்களைக் கற்கும் படியும், தான தர்மம் செய்யுங்கள் என்றும் கூறுகின்றார்கள். அந்த பக்தி துவாபரயுகத்தில் இருந்து தொடருகின்றது. சத்தியயுகத்திலும் திரேதாயுகத்திலும் இந்த ஞானத்தின் வெகுமதி உள்ளது. இந்த ஞானம் அங்கும் தொடர்ந்திருக்கும் என்றில்லை. பாரதம் பெற்ற ஆஸ்தி, சங்கமயுகத்தில் தந்தையிடம் இருந்து பெற்றுக் கொண்டதாகும், அதனை மீண்டும் ஒரு தடவை நீங்கள் பெறுகின்றீர்கள். பாரத மக்கள் எல்லையற்ற துன்பத்தை அனுபவம் செய்து, நரகவாசிகள் ஆகும் பொழுது அவர்கள் அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே! துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவரே! யாருக்காக? தங்களுக்காக. ஏனெனில், குறிப்பாக பாரதத்திலும் பொதுவாக முழு உலகிலும் உள்ள அனைவரிடமும் ஐந்து விகாரங்கள் இருக்கின்றன. தந்தையே தூய்மையாக்குபவர் ஆவார். அவர் கூறுகின்றார்: நான் சக்கரங்களின் சங்கமத்திலேயே வருகின்றேன். நான் அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஆகுகின்றேன். நான் கல்லுப்புத்தி உடையவர்கள், நற்குணங்கள் அற்றவர்கள், குருமார் போன்றோரையும் ஈடேற்றுகின்றேன். ஏனெனில் இது தூய்மையற்ற உலகமாகும். சத்தியயுகம் தூய உலகம் எனப்படுகின்றது. அது பாரதத்தின் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது. பாரத மக்களுக்கு தாம் சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தோம் என்பது தெரியாது. ‘தூய்மையற்ற உலகம்’ என்றால் பொய்மை நிறைந்த உலகமாகும். ‘தூய உலகம்’ என்றால் சத்திய உலகமாகும். பாரதம் தூய தேசமாக இருந்தது. இந்த பாரதம் என்றுமே அழிக்கப்பட முடியாத, அழியாத தேசமாகும். அது அவர்களின் (இலக்ஷ்மி நாராயணனின்) இராச்சியமாக இருக்கும் போது, வேறு எந்த தேசமும் இருக்கவில்லை. அவை பின்னரே வருகின்றன. சக்கரம் நூறாயிரம் ஆண்டுகளைக் கொண்டுள்ளது என மக்கள் எழுதி உள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: ஒரு சக்கரம் 5000 ஆண்டுகளுக்கான எல்லையைக் கொண்டது. மனிதர்கள் 8.4 மில்லியன் பிறவிகளை எடுப்பதாகக் அம்மக்கள் கூறுகின்றார்கள். அவர்கள் மனிதர்களை நாய்கள், பூனைகள், குரங்குகள் போன்றவைகளாக ஆக்கியுள்ளார்கள். எவ்வாறாயினும் நாய்களும், பூனைகளும் வேறு வகையான பிறவிகளையே எடுக்கின்றன. அவற்றில் 8.4 மில்லியன் உயிரினங்கள் உள்ளன. ஆனால் மனித உயிரினம் ஒன்று மட்டுமே உள்ளது. அவர்கள் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நாடகத்திற்கு ஏற்ப, பாரதமக்கள் தமது தர்மத்தை மறந்து விட்டார்கள். கலியுகத்தின் இறுதியில், அவர்கள் முற்றாகத் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றார்கள். தந்தை சங்கமயுகத்தில் உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காக வருகின்றார். இது துன்ப உலகம் எனப்படுகின்றது. அதன் பின்னர் பாரதம் சந்தோஷ உலகமாக மாறுகின்றது. தந்தை கூறுகின்றார்: ஓ குழந்தைகளே! பாரதத்தைச் சேர்ந்த குழந்தைகளாகிய நீங்களே சுவர்க்கவாசிகளாக இருந்தீர்கள். அதன் பின்னர் நீங்கள் 84 பிறவிகளின் ஏணியில் கீழே இறங்கினீர்கள். நீங்கள் நிச்சயமாக சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்ல வேண்டும். நீங்கள் தேவர்களாக இருந்த போது, என்றென்றும் சந்தோஷமாகவும் என்றென்றும் ஆரோக்கியமாகவும் செல்வந்தவராகவும் இருந்தது போன்று வேறு எவருமே இருப்பதில்லை. பாரதத்தில் பெருமளவு செல்வம் நிறைந்திருந்தது! வைரங்களும், இரத்தினங்களும், கற்களைப் போன்று அளவற்றிருந்தன. இரு யுகங்களின் பின்னர் அவர்கள் பக்தி மார்க்கத்தில் மிகப் பெரிய ஆலயங்களைக் கட்டினார்கள். அவர்கள் மிகவும் ஆடம்பரமான ஆலயங்களைக் கட்டினார்கள். சோமநாதர் ஆலயமே அனைத்திலும் மிகப் பெரியதாகும். ஒரேயொரு ஆலயம் மாத்திரம் இருந்திருக்க முடியாது. ஏனைய பல அரசர்களுக்கும் ஆலயங்கள் இருந்தன. அவற்றில் இருந்து, அதிகளவு கொள்ளையிடப்பட்டன. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார்: நீங்கள் மிகப் பெரிய செல்வந்தர்கள் ஆக்கப்பட்டீர்கள். சக்கரவர்த்தியும், சக்கரவர்த்தினியும் போலவே நீங்களும் சகல நற்குணங்களும் நிறைந்தவர்களாகவும், பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாகவும் இருந்தீர்கள். அவர்களை இறைவன் இறைவி என்றும் அழைக்கலாம். ஆனால், கடவுள் ஒருவரே என்றும் அவரே தந்தை என்றும் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். நீங்கள் “ஈஸ்வர்” அல்லது “பிரபு” எனக் கூறும் போது, அவரை நீங்கள் ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையாக நினைவு செய்வதில்லை. தந்தை இங்கே அமர்ந்திருந்து, ‘இது உங்களது பல பிறவிகளின் இறுதிப்பிறவி’ என்ற கதையைக் கூறுகின்றார். இது ஒருவரை மாத்திரமே குறிப்பதில்லை. போர்க்களம் போன்ற எதுவும் இல்லை. அதுவே தமது இராச்சியமாக இருந்தது என்பதை மக்கள் மறந்து விட்டார்கள். அவர்கள் சத்தியயுகத்தின் கால எல்லையை அதிகளவு நீடித்துள்ளதால், அது மிகவும் தொலைவிற்குச் சென்று விட்டது. மனிதர்களைக் கடவுள் என்று அழைக்க முடியாது எனத் தந்தை வந்து விளங்கப்படுத்துகின்றார். மனிதர்களால் எவருக்கும் சற்கதியை அருள முடியாது. “தூய்மையற்ற அனைவரையும் தூய்மை ஆக்குகின்ற, சற்கதி அருள்பவர் ஒரேயொருவரே” எனக் கூறப்பட்டுள்ளது. ஒரேயொரு உண்மையான பாபா மாத்திரமே சத்திய உலகத்தை ஸ்தாபிப்பவர் ஆவார். மக்கள் பக்தி மார்க்கத்தில் வழிபடுகின்றார்கள், ஆனால் வழிபடுகின்ற எவரது வாழ்க்கைச் சரிதமும் அவர்களுக்குத் தெரியாது. ஆகையாலேயே தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் சிவனின் பிறப்பைக் கொண்டாடுகின்றீர்கள், அப்படித்தானே? தந்தையே புதிய உலகைப் படைப்பவர் அதாவது தந்தையான சுவர்க்கக் கடவுள் ஆவார். அவர் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். சத்தியயுகத்தில் அதிகளவு சந்தோஷம் இருந்தது. அது எவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டது? அதனை ஸ்தாபித்தவர் யார்? தந்தை மாத்திரமே இதனை அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். நரகவாசிகளை சுவர்க்க வாசிகளாக, அதாவது, சீரழிந்தவர்களை மேன்மையான தேவர்கள் ஆக்குவது, தந்தையின் பணி மாத்திரமே ஆகும். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளான உங்களைத் தூய்மை ஆக்குகின்றேன். நீங்களே சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். உங்களைத் தூய்மை அற்றவர்கள் ஆக்குவது யார்? இராவணன்! கடவுளே துன்பத்தையும் கொடுக்கின்றார் என மனிதர்கள் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அரைக்கல்பத்திற்கு கடவுளையே நினைவு செய்யாத அளவிற்கு நான் உங்களுக்கு அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றேன். அதன் பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பம் ஆனதும் நீங்கள் அனைவரையும் வழிபட ஆரம்பிக்கின்றீர்கள். இதுவே உங்களது பல பிறவிகளின் இறுதிப்பிறவி ஆகும். சிலர் கேட்கின்றார்கள்: பாபா, நாங்கள் எத்தனை பிறவிகள் எடுத்துள்ளோம்? பாபா கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான பாரதத்தைச் சேர்ந்த குழந்தைகளே, ஓ ஆத்மாக்களே, நான் உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றேன். குழந்தைகளே, நீங்கள் 84 பிறவிகளை எடுத்திருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைப் பெறவே வந்திருக்கின்றீர்கள். ஒரே நேரத்தில் அனைவருமே வருவார்கள் என்றில்லை. மீண்டும் ஒருமுறை சத்தியயுகத்தின் சூரிய வம்சத்தை நீங்கள் மாத்திரமே கோருகின்றீர்கள். நீங்கள் மாத்திரமே சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆகுகின்ற உண்மையான ஞானத்தை, உண்மையான தந்தையிடம் இருந்து செவிமடுக்கின்றீர்கள். இது ஞானம், அது பக்தி ஆகும். சமயநூல்கள் போன்ற அனைத்தும் பக்திமார்க்கத்திற்கு உரியவை ஆகும். அவை ஞான மார்க்கத்திற்கு உரியவை அல்ல. இது ஆன்மிக ஞானமாகும். பரமாத்மா அமர்ந்திருந்து, உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக வேண்டும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஆத்மாவே நல்ல, தீய சம்ஸ்காரங்களைக் கொண்டிருக்கின்றார். அவற்றிற்கு ஏற்பவே மனிதர்கள் நல்ல, தீய பிறவிகளை எடுக்கின்றார்கள். தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார்: இவர் தூய்மையாக இருந்தார், இப்பொழுது இறுதிப் பிறவியில் அவர் தூய்மையற்றவர் ஆகியுள்ளார். உங்களுக்கும் இது பொருந்தும். தந்தையான நான் இராவணனின் பழைய தூய்மையற்ற உலகிற்கு வரவேண்டி உள்ளது. பின்னர் முதல் இலக்கத்திற்கு உரியவர் ஆகுகின்றவரின் சரீரத்திற்குள்ளேயே நான் வரவேண்டும். சூரிய வம்சத்திற்கு உரியவர்களே, 84 பிறவிகளையும் முழுமையாக எடுக்கின்றார்கள். அதாவது பிரம்மாவும், பிரம்மாவின் படைப்புகளுமான பிராமணர்களும் ஆவார்கள். தந்தை இதனை ஒவ்வொரு நாளும் விளங்கப்படுத்துகின்றார். கல்லுப்புத்தி உடையவர்களை தெய்வீகப் புத்தி உடையவர்களாக மாற்றுவது உங்கள் மாமியாரின் வீட்டிற்குச் செல்வது போன்றதல்ல! ஓ ஆத்மாக்களே, இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள். ஓ ஆத்மாக்களே, ஒரேயொரு தந்தையையும் இராச்சியத்தையுமே நினைவு செய்யுங்கள்! சரீர உறவினர்களைத் துறந்திடுங்கள்! அனைவரும் மரணிக்க வேண்டும். இது அனைவருக்குமான ஓய்வு ஸ்திதியாகும். ஒரேயொரு சற்குருவைத் தவிர வேறு எவரும் அனைவருக்கும் சற்கதியை அருள்பவராக இருக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: ஓ பாரதத்தைச் சேர்ந்த குழந்தைகளே, நீங்களே என்னிடம் இருந்து முதலில் பிரிந்து சென்றவர்கள். ஆத்மாக்கள் பரமாத்மாவான பரமதந்தையை விட்டு நீண்டகாலம் பிரிந்திருந்தார்கள் என நினைவு கூரப்படுகின்றது. முதலில், தேவ தர்மத்தின் பாரத மக்களாகிய நீங்களே வந்தீர்கள். ஏனைய சமயத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்தளவு பிறவிகளையே எடுக்கின்றார்கள். தந்தை இங்கு அமர்ந்திருந்து சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என விளங்கப்படுத்துகின்றார். பொதுவாகக் கிரகிக்க முடியாதவர்களால் கூட, இதனைக் கிரகிப்பது இலகுவாக இருக்கும். ஆத்மாக்கள் அனைத்தையும் கிரகிக்கின்றார்கள். ஆத்மாக்கள் புண்ணிய, பாவ ஆத்மாக்கள் ஆகுகின்றார்கள். இது உங்களுடைய 84 பிறவிகளின் இறுதிப்பிறவி ஆகும். நீங்கள் அனைவரும் ஓய்வு ஸ்த்தியில் இருக்கிறீர்கள். ஓய்வு ஸ்திதியில் இருப்பவர்கள், ஒரு மந்திரத்தைப் பெறுவதற்காக ஒரு குருவை ஏற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் பௌதீகமாக ஒரு குருவை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. நான் உங்கள் அனைவருக்கும் தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவேன். ‘ஓ தூய்மையாக்குபவரே! சிவபாபா!’ என நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் என்னை நினைவு செய்கிறீர்கள். அவரே ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை ஆவார். ஆத்மாக்களே உண்மையானவர்களும், உயிருள்ளவர்களும் ஆவார்கள். ஏனெனில், அவர்கள் அமரத்துவமானவர்கள். ஆத்மாக்கள் அனைவரிலும் ஒரு பாகம் பதியப்பட்டுள்ளது. தந்தையும், சத்தியமானவரும் உயிருள்ளவரும் ஆவார். அவர் மனித விருட்சத்தின் விதை என்பதால், அவர் கூறுகின்றார்: எனக்கு முழு விருட்சத்தினதும் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றித் தெரியும். ஆகையாலேயே நான் ஞானம் நிறைந்தவர் என அழைக்கப்படுகின்றேன். விதையில் இருந்து எவ்வாறு விருட்சம் தோன்றுகின்றது என்ற இந்த ஞானம் உங்களிடமும் உள்ளது. விருட்சம் வளர்வதற்கு காலம் எடுக்கின்றது. தந்தை கூறுகின்றார்: நானே விதை ஆவேன். இறுதி நேரத்தின் பொழுது விருட்சம் முற்றாக உக்கிய நிலையை அடைகின்றது. தேவர்களின் அத்திவாரம் இப்பொழுது இல்லை. அது இப்பொழுது மீண்டும் ஒருமுறை மறைந்துள்ளது. தேவ தர்மம் மறையும் பொழுது தந்தை வரவேண்டும். அவர் ஒரே தர்மத்தை ஸ்தாபித்து ஏனைய சமயங்கள் அனைத்தினதும் விநாசத்தைத் தூண்டுகின்றார். தந்தை ஆதி சனாதன தேவ தேவியர் தர்மத்தை, பிரஜாபிதா பிரம்மா மூலம் ஸ்தாபிக்கின்றார். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அதற்கு முடிவில்லை. தந்தை உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இந்த ஞானத்தைக் கூற வேண்டிய நேரமான சக்கரத்தின் இறுதியில் வருகின்றார். ஆகையால் அவர் நிச்சயமாகச் சங்கமயுகத்திலேயே வரவேண்டும். உங்களுக்கு ஒரு தந்தையே உள்ளார். ஆத்மாக்கள் அனைவரும் அசரீரியான உலகவாசிகளான சகோதரர்கள் ஆவார்கள். அனைவரும் அவரையே நினைவு செய்கின்றார்கள். அனைவரும் அவரைத் துன்பத்தின் பொழுதே நினைவு செய்கின்றார்கள். இராவண இராச்சியத்தில் துன்பம் உள்ளது. இங்கே, அனைவரும் அந்த ஒரு தந்தையையே நினைவு செய்கின்றார்கள். ஆகையால் அனைவருக்கும் சற்கதியை அருள்பவரான தந்தை ஒரேயொருவரே ஆவார். அவருக்கான புகழ் மாத்திரமே உள்ளது. தந்தை வராதிருந்தால், யாரால் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்க முடியும்? இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் தமோபிரதானாகவே உள்ளார்கள். அனைவரும் நிச்சயமாக மறுபிறவி எடுக்கவே வேண்டும். இப்பொழுது மறுபிறவி நரகத்திலேயே எடுக்கப்படுகின்றது. அனைவருமே சுவர்க்கத்திற்குச் செல்கின்றார்கள் என்றில்லை. இன்னார் சுவர்க்கத்திற்கு சென்றுவிட்டார் என இந்துக்கள் கூறுகின்றார்கள். அவர் இப்பொழுது சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார் என்றால் அவர் இதுவரையில் நரகத்திலேயே இருந்திருக்கின்றார் என்றே அர்த்தமாகும். உங்கள் வாயில் ஒரு ரோஜா இருக்கட்டும். (அது உண்மை ஆகட்டும்)! அவர் சுவர்க்கவாசி ஆகிவிட்டாராயின், அவருக்கு நீங்கள் ஏன் நரகத்து உணவைப் படைக்கின்றீர்கள்? வங்காளத்தில் அவர்கள் மீன் போன்றவற்றைக் கூட படைக்கின்றார்கள். ஏன் அவர்கள் அத்தகைய உணவை உண்ண வேண்டும்? அவர்கள் கூறுகின்றார்கள்: இன்னார் நிர்வாணா தாமத்திற்கு சென்றுவிட்டார். தந்தை கூறுகின்றார்: அவை அனைத்தும் பொய்யாகும். முதல் இலக்கத்தைச் சேர்ந்தவரே 84 பிறவிகளை எடுக்க வேண்டி இருப்பதால், எவராலும் இப்பொழுது வீடு திரும்ப முடியாது. தந்தை கூறுகின்றார்: இதில் எந்தச் சிரமமும் இல்லை. பக்தி மார்க்கத்தில் பல சிரமங்கள் உள்ளன. இராமரின் பெயரை உச்சரிக்கும் போது, அவர்களுக்கு மெய்சிலிர்க்கின்றது. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவையாகும். சூரியனும் சந்திரனும் பிரகாசமான ஒளியென்பது உங்களுக்குத் தெரியும். அவை தேவர்கள் அல்ல. உண்மையில் ஞான சூரியனும் ஞானச்சந்திரனும் ஞான நட்சத்திரங்களும் உள்ளனர். அவற்றிற்கான புகழ் உள்ளது. அதன் பின்னர் அவர்கள் கூறுகின்றார்கள்: சூரிய தேவனுக்கு வணக்கம்! சூரியனை அவர்கள் ஒரு தேவன் எனக்கருதி அதற்கு நீரைப் படைக்கின்றார்கள். ஆகையால், தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அவை அனைத்தும் பக்தி மார்க்கம் ஆகும். அது மீண்டும் இடம்பெறும். முதலில் கலப்படமற்ற சிவபக்தியும் அதன் பின்னர் தேவர்களுக்கான பக்தியும் உள்ளன. அதன் பின்னர் நீங்கள் கீழிறங்குகிறீர்கள். இப்பொழுது அவர்கள் முச்சந்திகளிலும் சிட்டிவிளக்கை ஏற்றி வைக்கின்றார்கள். அவர்கள் எள்ளு, மற்றும் தானியங்களையும் நாலா திசைகளிலும் வீசி அங்கெல்லாம் பக்தி செய்கின்றார்கள். அவர்கள் பஞ்சதத்துவங்களையும் வழிபடுகின்றார்கள். அவர்கள் மனிதர்களின் உருவங்களையும் செய்து, அவற்றை வழிபடுகின்றார்கள். அவை எவற்றில் இருந்தும் அவர்கள் எதனையும் அடையப் போவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனைப் புரிந்து கொள்கிறீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஆத்மாவின் தீய சம்ஸ்காரங்களை அகற்றுவதற்கு, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதைப் பயிற்சி செய்யுங்கள். இது உங்களுடைய 84 பிறவிகளின் இறுதிப் பிறவியாகும். இப்பொழுது இது உங்களுடைய ஓய்வு ஸ்திதியாகும். ஆகையால் ஒரு புண்ணியாத்மா ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.2. சகல சரீர உறவினர்களையும் துறந்து, ஒரேயொரு தந்தையையும் இராச்சியத்தையும் நினைவு செய்யுங்கள். விதையினதும் விருட்சத்தினதும் ஞானத்தைக் கடைந்து, சதா முகமலர்ச்சியுடன் இருங்கள்.
ஆசீர்வாதம்:
உங்கள் புத்தியினால் சரீரமற்றவராக இருப்பதையும், அப்பால் இருப்பதையும், எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பதனையும் பயிற்சி செய்வதன் மூலம் சகல கலைகளிலும் சம்பூர்ணம் அடைவீர்களாக.ஒரு சர்க்கஸில் தமது திறமைகளை வெளிப்படுத்துபவர்களின் ஒவ்வொரு செயலும் ஒரு கலை ஆகின்றது. அந்தக் கலைஞர்கள் தாம் விரும்பியவாறு, தாம் விரும்பிய இடத்தில். தாம் விரும்பிய நேரத்திற்கு அவர்களின் சரீரங்களின் எந்தவொரு பாகத்தையும் வடிவமைக்கத்தக்க வகையில் அவர்களின் சரீரங்கள் வளைந்து கொடுக்கின்றன. குழந்தைகளாகிய உங்களால் நீங்கள் விரும்பும் போது, நீங்கள் விரும்பும் இடத்தில், நீங்கள் விரும்பிய நேரத்திற்கு உங்கள் புத்தியை நிலைத்திருக்கச் செய்ய முடியும். இது மிகப் பெரிய திறமையாகும். இந்த ஒரு திறமையினால், நீங்கள் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆகுவீர்கள். இதற்கு, நீங்கள் அப்பால் இருப்பதுடன் எப்பொழுதும் ஆயத்தமாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதே நீங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படுகின்ற கட்டளைகளுக்கு ஏற்ப ஒரு விநாடியில் சரீரமற்றவர் ஆக முடியும். அப்பொழுது இதனை அடைவதற்குப் போராடுவதில் உங்கள் நேரம் வீணாக மாட்டாது.
சுலோகம்:
இலகுத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை என்ற தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பவர்கள் உண்மையில் அன்பானவர்களும் ஒத்துழைப்பவர்களும் ஆவார்கள்.அவ்யக்த சமிக்ஞை: இந்த அவ்யக்த மாதத்தில், பந்தனத்திலிருந்து விடுபட்டிருந்து, ஜீவன் முக்தி ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
இறை ஞானத்தைக் கொண்டிருக்கின்ற குழந்தைகள் சங்கமயுகத்திலேயே இந்த ஞானத்தின் பலனாக முக்தி, ஜீவன்முக்தி என்ற ஆஸ்தியைப் பெறுகிறார்கள். ஞானம் என்றால் புரிந்துணர்வாகும். ஒரு விவேகமான நபர் செயல்களைச் செய்கின்ற போது, பந்தனத்தில் இருந்தும், சகல கவர்ச்சிகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்ற புரிந்துணர்வைக் கொண்டிருப்பார். அவர் தனது ஒவ்வொரு எண்ணத்திலும், வார்த்தையிலும், உறவுமுறையிலும் தொடர்பிலும் முக்தி, ஜீவன்முக்தி ஸ்திதியைக் கொண்டிருப்பார். இதுவே பற்றற்றும் அன்பாகவும் இருப்பது என்று அழைக்கப்படுகின்றது.