17.02.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை உங்களுடைய விருந்தாளியாக வந்துள்ளார். எனவே நீங்கள் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். நீங்கள் அவரை அன்புடன் இங்கு அழைத்தீர்கள். நீங்கள் அவருக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அவமரியாதை செய்யக்கூடாது.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் சதா கொண்டிருக்க வேண்டிய போதை என்ன? உங்களுடைய போதை உயரவில்லை என்றால் என்ன கூறப்படும்?

பதில்:
அதிமேன்மையான ஆளுமையுள்ளவர் எமது விருந்தாளியாக இந்தத் தூய்மையற்ற உலகினுள் வந்துள்ளார். இந்த போதை தொடர்ச்சியாக உயர்ந்திருக்க வேண்டும். எவ்வாறாயினும் உங்களுடைய போதை வரிசைக்கிரமமாகவே உயர்கின்றது. தந்தைக்கு சொந்தமாகிய பின்னரும் சிலர் சந்தேகமான புத்தியைக் கொண்டுள்ளனர். அவர்கள் அவருடைய கையை விட்டுவிடுகின்றார்கள். பின்னர் அது அவர்களின் பாக்கியமே எனக் கூறப்படுகின்றது.

ஓம் சாந்தி.
ஓம் சாந்தி. இது இரண்டு முறை சொல்லப்படவேண்டும். ஒருவர் பாபா என்றும் மற்றையவர் தாதா என்றும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இருவரும் ஒன்றாக இருக்கின்றார்கள். மக்கள் கடவுளின் அதியுயர்ந்த புகழைப் பாடுகின்றார்கள். ஆனால் “இறை தந்தை” என்ற வார்த்தை மிக இலகுவானது. நீங்கள் “தந்தை” என்றல்லாது “இறை தந்தை” என்றே கூறவேண்டும். அவருடைய புகழும் அதி உயர்வானது. அவர் நிச்சயமாக தூய்மையற்ற உலகிலேயே அழைக்கப்படுகின்றார். நான் தூய்மையற்ற உலகிற்கு மட்டுமே அழைக்கப்படுகின்றேன் என அவரே வந்து உங்களுக்குக் கூறுகின்றார். எவ்வாறாயினும் அவர் எவ்வாறு தூய்மையாக்குகின்றார் என்றோ எப்பொழுது வருகின்றார் என்றோ எவருக்கும் தெரியாது. சத்திய, திரேதா யுகங்களில் அரைக் கல்பத்துக்கு யாருடைய இராச்சியம் இருந்தது, எவ்வாறு அது ஸ்தாபிக்கப்பட்டது என்று எவருக்குமே தெரியாது. தூய்மையாக்குகின்ற தந்தை நிச்சயமாக வருகின்றார். சிலர் அவரைத் தூய்மையாக்குபவர் எனவும் சிலர் விடுதலையாக்குபவர் எனவும் அழைக்கின்றனர். எங்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என அவர்கள் அழைக்கின்றனர். அவர்தான் அனைவரிலும் அதிமேலானவர். பாரதமக்களாகிய எங்களை வந்து மேன்மையானவர்கள் ஆக்குங்கள் என நீங்கள் அவரைத் தூய்மையற்ற உலகிற்கு வருமாறு அழைத்தீர்கள். அவருடைய நிலை அதி உயர்ந்தது. அவர் உயர்ந்த அதிகாரம் உடையவர். இது இராவண இராச்சியம் ஆகையால் நீங்கள் அவரை அழைத்தீர்கள். அல்லாவிடில் உங்களை இந்த இராவண இராச்சியத்தில் இருந்து விடுவிப்பது யார்? இந்த விடயங்களை செவிமடுக்கின்ற பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய போதை உயர வேண்டும். எவ்வாறாயினும் அது அந்தளவாக உயர்வதில்லை. அனைவரும் மதுபானத்தைக் குடிப்பதன் மூலம் போதை அடைகின்றனர். ஆனால் நீங்கள் இதை உள்ளெடுப்பதன் மூலம் போதை அடைவதில்லை. இங்கே இது தாரணை பற்றிய விடயம். இது பாக்கியத்துக்குரிய விடயம். தந்தையே மிகப்பெரிய ஆளுமையுடையவர். உங்களுக்குள்ளேயும் சிலர் முற்றிலும் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றனர். நீங்கள் அனைவரும் நம்பிக்கை உடையவர்களாக இருந்திருந்தால் ஏன் சிலர் சந்தேகம் வந்தவுடன் ஓடிவிடுகின்றார்கள்? அவர்கள் தந்தையை மறந்து விடுகிறார்கள். தந்தைக்கு ஒருமுறை சொந்தமாகிய பின்னர் உங்களுடைய புத்தியில் தந்தையைப் பற்றிய எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. இந்தத் தந்தை அற்புதமானவர். ஒரு கூற்று இருக்கின்றது: அவர்கள் பாபாவை அடையாளம் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் ‘பாபா’ என்று கூறினார்கள். அவர்கள் ஞானத்தைச் செவிமடுத்து மற்றவர்களுக்கும் கூறினார்கள். பின்னர் ஓ மாயா! நீ அவர்களின் புத்தியை சந்தேகத்தால் நிரப்பிவிட்டாய். பக்தி மார்க்கத்தில் உள்ள புராணங்களில் எந்த சாரமும் இல்லை எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். தந்தை கூறுகின்றார்: எவருமே என்னை அறியமாட்டார்கள். குழந்தைகளாகிய உங்களுக்குள்ளேயும் சிலர் மட்டுமே நினைவில் இருக்கிறீர்கள். அதுவும் சிரமப்பட்டே இருக்கின்றீர்கள். உங்களுடைய நினைவும் ஸ்திரமாக இருப்பதில்லை என்பதை நீங்களும் உணர்கின்றீர்கள். ஆத்மாவாகிய நான் ஒரு புள்ளி. பாபாவும் ஒரு புள்ளியே. அவர் எங்களின் தந்தையாவார். அவருக்கென சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. அவர் கூறுகிறார்: நான் இந்த சரீரத்தை ஆதாரமாக எடுக்கின்றேன். என்னுடைய பெயர் சிவன். எனது பெயர், இந்த ஆத்மாவின் பெயர் ஒருபோதும் மாறுவதில்லை. உங்களுடைய சரீரங்களின் பெயர் தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கும். சரீரங்களுக்கே பெயர் வைக்கப்படுகின்றது. ஒரு திருமணம் இடம் பெறும் பொழுது மணமகளின் பெயர் மாறுகின்றது. பின்னர் அந்தப் பெயர் நிச்சயமாகின்றது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது “நான் ஓர் ஆத்மா” என்பதை உறுதியாக்குங்கள். தந்தையே உங்களுக்கு இந்த அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறார். தர்மத்தில் இருந்து விலகி இகழ்ச்சி ஏற்பட்ட பின்னரே நான் வருகின்றேன். எந்த வார்த்தைகளிலும் நீங்கள் தங்கியிருக்க வேண்டியதில்லை. தந்தை தானே கூறுகின்றார்: அவர்கள் என்னைக் கற்களிலும் கூழாங்கற்களிலும் இட்டு பெருமளவு அவமரியாதை செய்துள்ளார்கள். இது ஒரு புதிய விடயமல்ல. கல்பம் கல்பமாக இதே முறையில் அவர்கள் முற்றிலும் தூய்மை அற்றவர்களாகி என்னை அவமரியாதை செய்த பின்னரே நான் வருகின்றேன். இதுவே கல்பம் கல்பமாக எனது பாகமாகும். இதில் எந்தமாற்றமும் இருக்க முடியாது. இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பலர் உங்களிடம் கேட்கிறார்கள்: அவர் பாரதத்தில் மாத்திரம் வருகின்றார் என்றால் பாரதம் மாத்திரமே உண்மையில் சுவர்க்கம் ஆகுமா? ஆம் இதுவே ஆதியான அநாதியான பாகமாகும். தந்தையே அதிமேலானவர். தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குகின்ற தந்தை கூறுகின்றார்: அவர்கள் என்னை இந்த தூய்மையற்ற உலகிற்கே அழைத்தார்கள். நான் என்றென்றும் தூய்மையானவர். நான் தூய உலகிற்கே அழைக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் தூய உலகில் எனக்கு வரவேண்டிய தேவையில்லை. வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! என அவர்கள் தூய்மையற்ற உலகிற்கே என்னை அழைக்கின்றனர். நான் அத்தகைய மகத்துவமான விருந்தாளி. நீங்கள் அரைக் கல்பமாகத் தொடர்ந்து என்னை நினைவு செய்கிறீர்கள். இங்கு நீங்கள் ஒரு முக்கிய பிரமுகரை அழைத்தால் அந்த அழைப்பு அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு நீடிக்கும். இந்த வருடம் இல்லாவிடில் இன்னார் இன்னார் அடுத்த வருடம் வருவார்கள். நீங்கள் அந்த ஒருவரை அரைக் கல்பமாக நினைவு செய்தீர்கள். அந்த ஒருவரின் வருகின்ற பாகமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அது முன்னரே நிச்சயிக்கப்பட்டது. எவருக்கும் இது தெரியாது. அவரே அதிமேலான தந்தையாவார். ஒரு புறத்தில் மனிதர்கள் தந்தையை அன்புடன் அழைக்கின்றார்கள். மறுபுறத்தில் அவரது புகழை களங்கப்படுத்துகின்றார்கள். உண்மையில் இவரே அதியுயர்ந்த கௌரவ விருந்தினர். ஆனால் அவர்கள் அவரின் மதிப்பை களங்கப்படுத்தி விட்டார்கள். அவர் கற்களிலும் கூழாங்கற்களிலும் அனைத்திலும் உள்ளார் என அவர்கள் கூறுகின்றனர். அவரே அதி உயர்ந்த அதிகாரி ஆவார். அவர்கள் என்னை மிகுந்த அன்புடனேயே வருமாறு அழைக்கின்றனர். ஆனால் அவர்கள் முற்றிலும் விவேகமற்றவர்கள். நான் வந்து உங்களுக்கு எனது அறிமுகத்தைக் கொடுத்து நான் உங்களின் தந்தை எனக் கூறுகின்றேன். நான் தந்தையாகிய கடவுள் என அழைக்கப்படுகின்றேன். அனைவரும் இராவணனால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பொழுது மாத்திரம் தந்தை வரவேண்டியுள்ளது. ஏனெனில் அனைத்து பக்தர்களும் அவரது மணவாட்டிகளான சீதைகள் ஆவார்கள். தந்தையே மணவாளனான இராமர் ஆவார். இது ஒரு சீதையைப் பற்றிய விடயமல்ல. அவர் சீதைகள் அனைவரையும் இராவணனின் சிறையிலிருந்து விடுவிக்கின்றார். இது ஓர் எல்லையற்ற விடயமாகும். இது பழைய தூய்மையற்ற உலகம். இது பழையது ஆகிப் பின்னர் புதியது ஆகுவதும் சரியானதே. சில சரீரங்கள் விரைவாக வயதாகி விடுகின்றன, மற்றையவை நீண்டகாலம் நீடிக்கின்றன. இதுவும் நாடகத்தில் மிகச் சரியாக நிச்சயிக்கப்பட்டுள்ளது. 5000 வருடங்களுக்குப் பின்னர் நான் மீண்டும் வரவேண்டும். நான் வருகின்றபோது மாத்திரமே என்னுடைய அறிமுகத்தைக் கொடுப்பதுடன் சக்கரத்தின் இரகசியத்தையும் விளங்கப்படுத்த முடியும். எவருமே என்னை அடையாளங் கண்டு கொள்ளவும் இல்லை. அவர்களுக்கு பிரம்மா விஷ்ணு சங்கரையோ இலக்ஷ்மி நாராயணனையோ இராமர் சீதையையோ பற்றித் தெரிவதும் இல்லை. இவர்களே நாடகத்தில் அனைவரிலும் மிக முக்கியமான நடிகர்கள். இது மனிதர்களுக்குப் பொருந்தும். எட்டு அல்லது பத்து கைகளுடன் எந்த ஒரு மனிதரும் இல்லை. விஷ்ணு ஏன் 4 கரங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார்? இராவணனின் 10 தலைகளும் என்ன? எவருக்குமே இது தெரியாது. தந்தை மாத்திரமே வந்து இந்த உலகின் ஆரம்பம், மத்தி இறுதியின் ஞானத்தைப் பேசுகின்றார். அவர் கூறுகின்றார்: நானே அனைவரிலும் மகத்துவமான விருந்தாளி. ஆனால் நான் மறைமுகமானவர். உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். எவ்வாறாயினும் நீங்கள் தெரிந்தும்கூட மறந்து விடுகின்றீர்கள். நீங்கள் அவரின்மீது பெருமளவு மரியாதை வைத்திருக்க வேண்டும். நீங்கள் அவரை நினைவு செய்ய வேண்டும். ஆத்மாக்கள் அசரீரியானவர்கள், பரமாத்மாவும் அசரீரியானவரே. இதற்கு ஒரு புகைப்படத்தை வைத்திருப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். தந்தையை நினைவு செய்து சரீர உணர்வை விட்டுவிடுங்கள். நீங்கள் சதா அழியாதவற்றையே பார்க்க வேண்டும். ஏன் அழியக்கூடிய சரீரத்தைப் பார்க்கின்றீர்கள்? ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! இதற்கு முயற்சி தேவை. எவ்வளவிற்கு நினைவில் நிலைத்து இருக்கின்றீர்களோ அதற்கேற்ப நீங்கள் உங்களுடைய கர்மாதீத நிலையை அடைந்து உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். தந்தை மிக இலகுவான யோகத்தையும் நினைவையும் கற்பிக்கின்றார். பல விதமான யோகங்கள் இருக்கின்றன. நினைவு என்ற பதம் சரியானதே. தந்தையாகிய பரமாத்மாவை நினைவு செய்வதற்கு முயற்சி தேவை. அவர்கள் இவ்வளவு நேரம் நினைவிலே இருந்தோம் எனக் கூறும்போது வெகுசிலரே உண்மை பேசுகிறார்கள். அவர்கள் நினைவையே கொண்டிருக்காவிட்டால் அதைச் சொல்வதற்கு வெட்கப்படுவார்கள். அவர்கள் எழுதுகின்றார்கள்: முழுநாளிலும் நான் ஒரு மணிநேரம் நினைவில் இருந்தேன். ஆகையினால் அவர்கள் வெட்கப்பட வேண்டும். இரவுபகலாக அவ்வாறான தந்தையை நினைவு செய்ய வேண்டும். இருந்தும் நீங்கள் ஒரு மணிநேரமே அவரை நினைவு செய்தீர்கள். இதற்கு பெருமளவு மறைமுகமான முயற்சி தேவை. நீங்கள் தந்தையை வருமாறு அழைத்தீர்கள். எனவே வெகுதொலைவில் இருந்து வந்த அவரே விருந்தினர் ஆவார். தந்தை கூறுகின்றார்: நான் புதிய உலகிற்கு விருந்தினராகச் செல்வதில்லை. நான் பழைய உலகிற்கு மாத்திரமே வருகின்றேன். நான் வந்து புதிய உலகை ஸ்தாபிக்கின்றேன். இந்த உலகம் பழையது. எவருக்கும் இது சரியாகத் தெரியாது. புதிய உலகின் ஆயுட்காலமும் அவர்களுக்குத் தெரியாது. தந்தை கூறுகின்றார்: நான் மாத்திரம் வந்து இந்த ஞானத்தைக் கொடுக்கிறேன். பின்னர் நாடகத்திற்கேற்ப இந்த ஞானம் மறைந்துவிடும். பின்னர் ஒரு கல்பத்தின் பின்னர் இந்தப் பாகம் மறுபடியும் இடம் பெறும். அவர்கள் என்னை அழைக்கின்றார்கள். வருடா வருடம் அவர்கள் சிவனின் பிறந்ததினத்தைக் கொண்டாடுகின்றார்கள். வருடா வருடமாக அவர்கள் இங்கு வாழ்ந்து சென்றவர்களின் நினைவு தினங்களைக் கொண்டாடுகிறார்கள். சிவபாபாவின் பிறந்த தினத்தையும் 12 மாதங்களுக்கு ஒருமுறை கொண்டாடுகின்றார்கள். ஆனால் எப்போது அதை கொண்டாடத் தொடங்கினர் என எவருக்கும் தெரியாது. அதை நூறாயிரக்கணக்கான வருடங்களாகச் செய்கிறோம் என அவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் கலியுகத்தின் காலப்பகுதியை நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் என எழுதியுள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: இந்த சக்கரம் 5000 வருடங்களுக்கான விடயமாகும். பாரதத்தில் இந்தத் தேவர்களின் இராச்சியம் நிச்சயமாக இருந்தது. ஆகையினால் தந்தை கூறுகின்றார்: நானே பாரதத்தின் மகத்துவமான விருந்தாளி. அரைக்கல்பமாக நீங்கள் தொடர்ந்து எனக்குப் பல அழைப்பிதழ்களைக் கொடுத்துக் கொண்டு இருந்தீர்கள். நீங்கள் மிகவும் துன்பம் அடைகின்றபோது, ஓ தூய்மையாக்குபரே வாருங்கள்! எனக் கூறினீர்கள். நான் தூய்மையற்ற உலகிற்கே வரவேண்டியுள்ளது. எனக்கும்கூட ஓர் இரதம் தேவை. இந்த ஆத்மா அமரத்துவ ரூபமாவார், இது அவரது சிம்மாசனம். தந்தையும் அமரத்துவமான ரூபமேயாவார். அவர் இங்கு வந்து இந்த சிம்மாசனத்தில் அமர்கின்றார். இவை களிப்பூட்டும் விடயங்களாகும். வேறு எவராவது இதைக் கேட்டால் ஆச்சரியம் அடைவார். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது எனது கட்டளைகளைப் பின்பற்றுங்கள்! சிவபாபாவே வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார், சிவபாபாவே முரளியைப் பேசுகின்றார் எனப் புரிந்து கொள்ளுங்கள். இவர் கூறுகின்றார்: நானும் அவரது முரளியை ஒலிநாடாவில் கேட்பேன். அவரே இதைப் பேசுகின்றார். முதலாம் இலக்க பூஜிக்கத்தக்கவர், பின்னர் முதலாம் இலக்கப் பூஜிப்பவர் ஆகிவிட்டார். இப்பொழுது இவர் முயற்சியாளர். குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுதும் சிவபாபாவின் ஸ்ரீமத்தையே பெறுவதாகக் கருதவேண்டும். ஏதாவது தவறாகிப் போனாலும்கூட அவர் சரிப்படுத்துவார். இந்த அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும்போது சிவபாபாவே பொறுப்பாவார். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தடைகள் வரும். மிகக் கடினமான தடைகள் வரும். உங்களுடைய சொந்தக் குழந்தைகளும் உங்களைத் தடுப்பார்கள். ஆகையினால் எப்பொழுதும் சிவபாபாவே விளங்கப்படுத்துகிறார் எனப் புரிந்து கொள்ளுங்கள். பின்னர் உங்களால் அவரின் நினைவில் இருக்க முடியும். பல குழந்தைகள் பிரம்மபாபாவே இந்த வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார் என நினைக்கின்றார்கள். அது அவ்வாறு இல்லை. சிவபாபாவே பொறுப்பானவர் ஆவார். அவர்கள் மறுபடியும் சரீர உணர்விற்கு வருவதனால் அவர்கள் தொடர்ந்தும் இவரையே பார்க்கின்றனர். சிவபாபா அவ்வாறான மகத்துவமான விருந்தினர் ஆவார்! அப்படியிருந்தும் புகையிரத ஊழியர்கள் போன்றோர் அவரை அடையாளம் கண்டுகொள்வது இல்லை. அவர்கள் எப்படி அசரீரியானவரை அடையாளம் கண்டு கொள்வார்கள் அல்லது புரிந்து கொள்வார்கள்? அவர் நோய் வராது. எனவே நோய்கள் போன்றனவற்றிற்கு காரணங்கள் இருப்பின் அது இவருக்கே ஆகும். இவரினுள் இருக்கும் அவரைப்பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? குழந்தைகாளகிய நீங்களும் இதை வரிசைக்கிரமமாகவே புரிந்து கொள்கிறீர்கள். அவர் அனைத்து ஆத்மாக்களினதும் தந்தையாவார். இவர் மனித குலத்தின் தந்தையாவார். எனவே இந்த இருவரும் அவ்வாறான மகத்தான விருந்தாளிகள் ஆகியுள்ளனர். தந்தை கூறுகின்றார்: நடப்பவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நானும் நாடகத்தால் கட்டப்பட்டுள்ளேன். ஏனெனில் அது நிச்சயிக்கப்பட்டது, நான் அதில் எதுவுமே செய்ய முடியாது. மாயையும் மிகவும் சக்தி வாய்ந்தவள். இராமர், இராவணன் இருவருமே பாகங்களைக் கொண்டுள்ளார்கள். நாடகத்தில் இராவணனும் ஓர் உயிர் வாழ்பவனாக இருந்திருந்தால் நானும் நாடகத்திற்கு ஏற்பவே வருகின்றேன் என அவனும் கூறுவான். இது சந்தோஷத்தையும் துன்பத்தையும் கொண்ட நாடகமாகும். புதிய உலகில் சந்தோஷமும் பழைய உலகில் துன்பமும் இருக்கின்றன. புதிய உலகில் வெகுசில மக்களே இருப்பார்கள். ஆனால் பழைய உலகில் பல மனிதர்கள் இருக்கின்றனர். அவர்கள் தூய்மையாக்குகின்ற தந்தையை வந்து உலகைத் தூய்மையாக்குமாறு அழைக்கின்றார்கள். தூய உலகில் பெருமளவு சந்தோஷம் இருந்ததால் அவர்கள் அவரைக் கல்பம் கல்பமாக அழைக்கின்றார்கள். தந்தை அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்துவிட்டு பின்னர் சென்றுவிடுவார். இந்தப் பாகம் மறுபடியும் இப்பொழுது இடம்பெறுகின்றது. உலகம் ஒரு முடிவுக்கு வரமாட்டாது. அது முடிவுக்கு வருவது அசாத்தியமானது. இந்த உலகிலேயே கடலும் இருக்கின்றது. இது மூன்றாவது மாடியாகும். அனைத்து இடமும் வெள்ளம் பெருக்கெடுத்து எங்கும் தண்ணீர் மாத்திரமே இருக்கும் என அவர்கள் கூறுகின்றார்கள். இருந்தபோதிலும் பூமி ஒரு நிலமாகும். அங்கு தண்ணீர் இருக்கின்றது. இந்தப் பூமியாகிய நிலத்தை ஒருபோதும் அழிக்க முடியாது. தண்ணீரும் இந்த நிலத்திலேயே இருக்கின்றது. எவ்வாறாயினும் முதலாவது, இரண்டாவது மாடியில் அதாவது சூட்சும உலகிலும் அசரீரி உலகிலும் தண்ணீர் இல்லை. இந்த எல்லையற்ற உலகம் மூன்று மாடிகளைக் கொண்டது. குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவருக்கும் இது தெரியாது. இந்த சந்தோஷமான விடயத்தை மிகுந்த களிப்புடன் அனைவருக்கும் கூறுங்கள். முழுமையாக சித்தி அடைந்தவர்களின் இந்த அதீந்திரிய சுகத்தின் ஞாபகார்த்தம் நினைவு கூரப்படுகின்றது. பகல் இரவாக சேவையில் ஈடுபடுபவர்களும் தொடர்ந்து சேவையைத் தவிர வேறெதுவும் செய்யாதவர்களுமே பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். மனிதர்கள் இரவில் விழித்திருக்கின்ற சில நாட்கள் இருக்கின்றன. எவ்வாறாயினும் ஆத்மா களைப்படையும் போது அவர் தூங்கவேண்டும். ஆத்மா தூங்கச் செல்லும் பொழுது சரீரமும் தூங்கச் செல்கிறது. ஆத்மா தூங்காவிடில் சரீரமும் தூங்கமாட்டாது. ஆத்மாவே களைப்படைகின்றது. இன்று நான் உண்மையில் களைப்படைந்து விட்டேன் என யார் கூறியது? ஆத்மா. குழந்தைகளாகிய நீங்கள் ஆத்மீக உணர்வில் இருக்கவேண்டும். நீங்கள் இதிலேயே முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் தந்தையை நினைவு செய்யாது ஆத்ம உணர்வில் இல்லாதுவிடின் உங்களின் சரீர உறவினர்கள் போன்றோர் நினைவு செய்யப்படுவர். தந்தை கூறுகிறார்: நீங்கள் சரீரமற்றே வந்தீர்கள், சரீரமற்றே திரும்ப வேண்டும். சரீர சம்பந்தமான உறவினர்களை மறவுங்கள். இந்த உடலில் வாழும் பொழுதே என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் பின்னர் சதோபிரதான் ஆகுவீர்கள். தந்தை அவ்வாறான மகத்துவமான அதிகாரியாவார். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவருக்கும் அவரைத் தெரியாது. தந்தை கூறுகின்றார்: நானே ஏழைகளின் பிரபு. அனைவரும் சாதாரணமானவர்கள். தூய்மையாக்குகின்ற தந்தை வந்துள்ளார். இது அவர்களுக்குத் தெரிந்திருந்தால் எவ்வளவு கூட்டம் இருக்கும் என யாருக்குத் தெரியும்? முக்கிய பிரமுகர்கள் இங்கே வரும்போது அதிக கூட்டம் உள்ளது. ஆகையினால் நாடகத்துக்கேற்ப அவருடைய பாகம் மறைமுகமாக உள்ளது. நீங்கள் முன்னேறிச் செல்லும்போது ஆதிக்கம் படிப்படியாக அதிகரித்து விநாசம் இடம்பெறும். அனைவரும் பாபாவை சந்திப்பார்கள் என்றில்லை. அவர்கள் தந்தையை நினைவு செய்வார்கள். ஆகையினால் அவர்கள் அவரின் அறிமுகத்தைப் பெறுவார்கள். எஞ்சி இருப்பவர்களால் இங்கு வரமுடியாது. உதாரணமாக பந்தனத்திலுள்ள புத்திரிகளால் அவர்கள் பல துன்புறுத்தல்களை சகித்துக்கொண்ட போதிலும் அவர்களால் பாபாவை சந்திக்க முடியாது. மக்களால் விகாரத்தை விட முடியாமல் இருக்கின்றது. எனவே அது இல்லாமல் உலகம் எவ்வாறு தொடரும் என அவர்கள் கேட்கின்றார்கள். ஓ ஆனால் உலகின் சுமை தந்தையின் மீதா அல்லது உங்களின் மீதா இருக்கின்றது? அவர்கள் தந்தையை தெரிந்து கொண்டால் இவ்வாறான கேள்விகளைக் கேட்க மாட்டார்கள். அவர்களிடம் கூறுங்கள்: குறைந்தது தந்தையையாவது அடையாளம் கண்டு கொள்ளுங்கள், பின்னர் நீங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்வீர்கள். நீங்கள் விளங்கப்படுத்துவதற்கு திறமையான வழிமுறைகள் தேவை. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அதியுயர்ந்த அதிகாரமுடைய தந்தையின் நினைவில் சதா நிலைத்திருங்கள். எவருடைய அழியக்கூடிய சரீரத்தையும் பார்க்காதீர்கள். ஆனால் ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களுடைய நினைவின் நேர்மையான அட்டவணையை வைத்திருங்கள்.

2. இரவு பகலாக சேவையில் ஈடுபட்டு அதன் மூலம் எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்யுங்கள். மூன்று உலகினதும் இரகசியங்களை ஒவ்வொருவருக்கும் சந்தோஷத்துடன் விளங்கப்படுத்துங்கள். சிவபாபா கொடுக்கின்ற ஸ்ரீமத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து முன்னேறிச் செல்லுங்கள். தடைகள் வருகின்ற பொழுது பயப்படாதீர்கள். சிவபாபாவே பொறுப்பாளி ஆவார். ஆகையினால் எதைப்பற்றியும் சந்தேகம் கொள்ளாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் பலமில்லியன் தடவைகள் பாக்கியசாலியாகி இந்த மேன்மையான வேளையில் சகல பேறுகளுக்குமான உரிமையை அனுபவம் செய்வீர்களாக.

இந்த மேன்மையான வேளையில் பிறப்பு எடுக்கும் பாக்கியசாலிக் குழந்தைகளான நீங்கள் சென்ற கல்பத்தின் தொடுகையால் நீங்கள் பிறப்பு எடுத்தவுடனேயே சொந்தமாக இருப்பதை அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் பிறப்பு எடுத்தவுடனேயே சொத்துக்கள் அனைத்திற்கும் உரிமை உள்ளவர்கள் ஆகுகின்றீர்கள். எப்படி ஒரு விதையில் மரம் முழுவதும் அமிழ்ந்துள்ளதோ, அப்படியே முதலாம் இலக்க நேரத்தில் வருகின்ற ஆத்மாக்களான நீங்கள் வந்தவுடனேயே சகல ரூபங்களிலும் உள்ள பேறுகளின் பொக்கிஷங்களை அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள், ஆனால் அமைதி இல்லை அல்லது நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள், ஆனால் சக்தி இல்லை என ஒருபோதும் நீங்கள் சொல்ல மாட்டீர்கள். நீங்கள் சகல அனுபங்களாலும் நிறைந்திருக்கிறீர்கள்.

சுலோகம்:
உங்களின் சந்தோஷ நிழலில் குளிர்மையின் அனுபவத்தைக் கொடுப்பதற்கு சுத்தமாகவும் பணிவாகவும் ஆகுங்கள்.

ஏகாந்தத்தின் மீது அன்பு வைத்து, ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.

ஒரேயொருவருடன் சகல உறவுமுறைகளையும் வைத்திருந்து அந்த ஒரேயொருவரிடம் இருந்து சகல வகையான இனிமையையும் அனுபவம் செய்பவர்கள் ஏகாந்தத்திற்கான விருப்பத்தைக் கொண்டிருப்பார்கள். ஒரேயொருவரிடம் இருந்து உங்களால் சகல இனிமையையும் அனுபவம் செய்யக் கூடியதாக இருக்கும்போது பல திசைகளில் நீங்கள் செல்வதற்கான தேவை என்ன? ஒரேயொருவர் என்ற வார்த்தையை நினையுங்கள். ஏனென்றால் இந்த ஞானம், விழிப்புணர்வு, உறவுமுறைகள், உங்களின் ஸ்திதி அனைத்தும் அதில் அடங்கியுள்ளன. அத்துடன் அந்த ஒரு வார்த்தையினூடாக உங்களின் பேறுகள் அனைத்தும் மிகவும் தெளிவாகின்றன. ஒரேயொருவரின் நினைவையும் நிலையான ஸ்திதியையும் கொண்டிருங்கள். நீங்கள் பெறுகின்ற ஞானம் ஒரேயொருவரின் நினைவிற்கே ஆகும். நீங்கள் பெறுகின்ற பேறுகளும் நிலையாக இருக்கும்.