17.03.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, கல்வியே உங்களுடைய வருமானமாகும். இந்தக் கல்வியே உங்களுடைய வருமானத்திற்கான மூலாதாரம். இக்கல்வியின் மூலமே உங்களால் 21 பிறவிகளுக்கு ஒரு வருமானத்தைச் சேமிக்கமுடியும்.

கேள்வி:
வியாழ சகுனத்தை அனுபவம் செய்கின்ற குழந்தைகளின் வெளிப்படையான அடையாளம் என்ன?

பதில்:
அவர்கள் ஸ்ரீமத்தில் முழுக்கவனம் செலுத்துவார்கள். அவர்கள் மிக நன்றாகக் கற்பார்கள். அவர்கள் ஒருபோதும் சித்தியெய்தாமல் விடுவதில்லை. ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள் தமது கல்வியில் சித்தி அடைய மாட்டார்கள். அவர்களின் மீது இராகுவின் சகுனங்கள் உள்ளன. இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் மீது விருட்சத்தின் பிரபுவாகிய வியாழ சகுனங்கள் உள்ளன.

பாடல்:
எங்களை இந்தப் பாவ உலகிலிருந்து ஓய்வும் சௌகரியமும் நிறைந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

ஓம் சாந்தி.
இது பாவாத்மாக்களின் அழைப்பு. நீங்கள் இனிமேலும் அழைக்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில், நீங்கள் தூய்மை ஆகுகின்றீர்கள். இவை கிரகிக்கப்பட வேண்டிய விடயங்கள். ஒரு பாடசாலையில் கல்வி எவ்வாறு பொக்கிஷமாக இருக்கின்றதோ, அதேபோன்று இந்தக்கல்வி பெறுமதி வாய்ந்த பொக்கிஷம் ஆகும். உங்கள் வாழ்க்கைக்கான வருமானத்தை நீங்கள் கற்பதில் இருந்து உங்களால் சம்பாதிக்க முடியும். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இது மிகவும் உயர்ந்த வருமானம். ஏனெனில் உங்களுடைய இலட்சியமும் குறிக்கோளும் உங்கள் முன்னால் உள்ளன. உண்மையான சத்சங்கம் (சத்தியத்தின் சகவாசம்) கல்பம் முழுவதிலும் ஒரு தடவை மட்டுமே இடம்பெறுகிறது. “ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்!” என நீங்கள் அழைத்தீர்கள். அவர்கள் இன்னமும் அழைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள், ஆனால் அவரோ உங்களின் முன்னால் இருக்கின்றார். துன்பத்தின் பெயரோ அல்லது சுவடோ இல்லாத புதிய உலகிற்காக நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் சுவர்க்கத்தில் ஓய்வும், சௌகரியமும் பெறுவீர்கள். நரகத்தில் எந்தவித ஓய்வோ அல்லது சௌகரியமோ இல்லை. இது கலியுகமாகிய நச்சுக்கடலாகும். அனைவரும் சந்தோஷமற்று இருக்கின்றார்கள். அனைவரும் விகாரத்தின் மூலமே பிறக்கின்றார்கள். இதனாலேயே ஆத்மாக்கள் ‘பாபா, நாங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டோம்’ என்று அழைக்கின்றனர். அவர்கள் தூய்மை ஆகுவதற்காக கங்கையில் நீராடுகின்றார்கள். அச்சா, அவர்கள் ஒருமுறை நீராடியதுமே, தூய்மையாக வேண்டும். அப்படியென்றால், ஏன் அவர்கள் மீண்டும், மீண்டும் நீராடுகின்றார்கள்? அலைந்து திரிகையில், அவர்கள் ஏணியில் கீழிறங்கி பாவாத்மாக்கள் ஆகுகின்றார்கள். தந்தையே இங்கிருந்து உங்களின் 84 பிறவிகளின் முக்கியத்துவத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்கள் 84 பிறவிகள் எடுப்பதில்லை. நீங்கள் 84 பிறவிகள்(ஏணிப்படம்) பற்றிய மிக நல்ல படங்களை உருவாக்கி உள்ளீர்கள். கீதையிலும் கல்ப விருட்சத்தின் படம் இருக்கின்றது. எவ்வாறாயினும் கடவுள் எப்பொழுது கீதையை உரைத்தார் என்றோ அல்லது அவர் வந்தபொழுது என்ன செய்தார் என்றோ எவருக்கும் தெரியாது. ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களுடைய சொந்த சமய நூல்கள் பற்றித் தெரியும். ஆனால் பாரத மக்களுக்கு முற்றிலும் எதுவுமே தெரியாது. தந்தை கூறுகின்றார்: நான் சங்கம யுகத்தில் மாத்திரமே, சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்காக வருகிறேன். நாடகத்தில் எந்தவித மாற்றமும் இருக்கமுடியாது. நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டவை யாவும் மறுபடியும் அதேபோன்று இடம்பெற வேண்டும். ஒருமுறை இடம்பெற்ற பின்னர் அது மாறும் என்றில்லை. நாடகச் சக்கரம் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் மிக நன்றாகப் பதிந்துள்ளது. நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்திலிருந்து ஒருபோதும் விடுபட முடியாது. இந்த உலகச் சக்கரம் ஒருபோதும் முடிவதில்லை என்பதே அதன் அர்த்தமாகும். இந்த உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் இடம்பெறும். இந்த 84 பிறவிச் சக்கரத்தின் ஏணிப் படமும் அதி முக்கியமானதாகும். திரிமூர்த்தி படமும், உலகச் சக்கரத்தின் படமும் முக்கியமானவையாகும். அனைத்துமே சக்கரத்தில் மிகத் தெளிவாக் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு யுகமும் 1250 வருடங்களைக் கொண்டவை. இது குருடர்களுக்கு கண்ணாடி போன்றதாகும். இது 84 பிறவிகளின் ஜாதகத்தின் கண்ணாடியாகும். தந்தை குழந்தைகளாகிய உங்களின் சகுனம் பற்றிப் பேசுகின்றார். தந்தை எல்லையற்ற சகுனத்தை உங்களுக்குக் காட்டுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அழியாத வியாழ சகுனத்தின் பார்வையில் இருக்கின்றீர்கள். அனைத்தும் நீங்கள் கற்பதிலேயே தங்கியுள்ளது. சிலரின் மீது வியாழ திசையும், மற்றவர்கள் மீது சுக்கிர திசையும் ஏனையோர் மீது இராகு திசையும் உள்ளன. தோல்வி இருந்தால் அங்கே இராகு திசை இருக்கும். இங்கும் அதே விடயமே இடம்பெறுகின்றது. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாவிடின், அழியாத இராகு திசை இருக்கும். அவை அழியாத வியாழ சகுனங்கள், இவை அழியாத இராகுவின் சகுனங்கள். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவைக் கற்கின்றீர்கள் என்பதில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய நிலையம் வெகுதொலைவில் உள்ளது என்று சாக்குப்போக்கு கூறக்கூடாது. நீங்கள் நடந்துசென்று நிலையத்தை அடைவதற்கு ஆறு மணித்தியாலங்கள் எடுத்தாலும், நீங்கள் செல்லத்தான் வேண்டும். மக்கள் யாத்திரைக்குச் செல்லும்போது அவர்கள் அதிகளவு அலைகின்றார்கள். முன்னர் பலர் கால்நடையாகவே சென்றார்கள். சிலர் மாட்டு வண்டியில்கூடச் சென்றார்கள். அது ஒரு நகரத்திற்குச் செல்வதற்கான கேள்வியாகும். நீங்கள் இலக்ஷ்மி அல்லது நாராயணனைப் போல் ஆகுகின்ற தந்தையினுடைய பல்கலைக்கழகம் மிகவும் மகத்துவமானது. இருந்தும் அவ்வாறான மேன்மையான கல்விக்கு சிலர் தொலைவில் உள்ளது என்றோ, அல்லது தங்களுக்கு நேரம் இல்லை என்றோ கூறுகின்றார்கள். தந்தையால் என்ன கூறமுடியும்? அவ்வாறான குழந்தை தகுதியற்றவர். தந்தை உங்களை ஈடேற்ற வந்துள்ளார். நீங்கள் பின்னர் உங்களின் சொந்த சத்தியத்தையே அழிக்கின்றீர்கள். ஸ்ரீமத் கூறுகின்றது: தூய்மையாகி, தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். நீங்கள் ஒன்றாக வாழும்போதும், விகாரத்தில் ஈடுபடக்கூடாது. உங்களுக்கிடையே இந்த ஞான வாளும், யோகமும் இருக்கவேண்டும். நாங்கள் அந்தத் தூய உலகின் அதிபதிகளாக வேண்டும். தற்போது, நாங்கள் இந்தத் தூய்மையற்ற உலகின் அதிபதிகள் ஆவோம். அந்தத் தேவர்கள் இரட்டைக் கிரீடம் உள்ளவர்களாக இருந்தார்கள். அரைக் கல்பத்தின் பின்னர் அவர்கள் ஒளிக்கிரீடத்தை இழந்தார்கள். தற்பொழுது ஒளிக்கிரீடம் எவரிடமும் இல்லை. மத ஸ்தாபகர்கள் ஒளிவட்டத்துடன் காட்டப்பட்டுள்ளார்கள். ஏனெனில் அவர்கள் சரீரத்தினுள் அவதாரம் செய்த தூய ஆத்மாக்கள் ஆவார்கள். பாரதத்திலே இரட்டைக் கிரீடம் உள்ளவர்களும் ஒற்றைக் கிரீடம் உள்ளவர்களும் இருக்கின்றார்கள். இன்றும்கூட, ஒற்றைக்கிரீடம் உள்ளவர்கள் இரட்டைக் கிரீடம் உள்ளவர்களின் சிலைகளின் முன்னால் தலைவணங்குகிறார்கள். ஏனெனில் அவர்கள் தூய சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினியாக இருந்தார்கள். சக்கரவர்த்திகள் அரசர்களிலும் பார்க்க மகத்தானவர்களாகவும், பெருமளவு சொத்துக்களைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள். சபையிலே, சக்கரவர்த்திகள் முன்வரிசையிலும் அரசர்கள் வரிசைக்கிரமமாக, பின்வரிசையிலும் இருப்பார்கள். அவர்களின் சபை மிகவும் ஒழுங்குமுறையானதாகவும் இருக்கும். இதுவும்கூட இறைவனின் சபையாகும். இது இந்திரசபை என்றும் நினைவுகூரப்படுகின்றது. இந்த ஞானத்தைக் கற்பதன் மூலம் நீங்கள் தேவதைகள் ஆகுகின்றீர்கள். ஓர் அழகான நபர் தேவதை என்று அழைக்கப்படுகின்றார். ராதையும், கிருஷ்ணரும் இயற்கையழகு கொண்டவர்கள். இதனாலேயே அவர்கள் அழகானவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் காமச் சிதையில் அமரும்பொழுது, பல்வேறு பெயர் ரூபங்களில் அவலட்சணமானவர்கள் ஆகுகின்றார்கள். இந்த விடயங்கள் புராணங்களில் குறிப்பிடப்படவில்லை. மூன்று விடயங்கள் உள்ளன: ஞானம், பக்தி, விருப்பமின்மை. இந்த ஞானமே அனைத்திலும் மேலானது. நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் உங்களுக்கு எந்தவித ஆர்வமும் இல்லை. இப்பொழுது முழுத் தமோபிரதான் உலகமும் அழிக்கப்படப் போகின்றது. எனவே உங்களுக்கு அதில் ஆர்வம் இல்லை. புதிய கட்டடம் கட்டப்படும் பொழுது, பழையதில் எந்தவித ஆர்வமும் இருக்கமாட்டாது. அது எல்லைக்குட்பட்ட விடயம். ஆனால் இதுவோ எல்லையற்ற விடயமாகும். இப்பொழுது உங்களுடைய புத்தி புதிய உலகுடன் தொடர்புபட்டுள்ளது. இது பழைய உலகமாகிய, நரகமாகும். சத்திய, திரேதா யுகங்கள் சிவபூமி என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் அவை சிவபாபாவினால் ஸ்தாபிக்கப்பட்டவை. நீங்கள் இப்பொழுது இந்த விலைமாதர் இல்லத்தை வெறுக்கின்றீர்கள். பலர் அதனை வெறுப்பதில்லை. அவர்கள் திருமணம் செய்வதன் மூலம் சாக்கடைக்குள் வீழ்ந்து தங்களையே அழித்துக் கொள்ள விரும்புகின்றார்கள். அனைத்து மனிதர்களும் நச்சுக்கடலில் மூழ்குகின்றார்கள். அவர்கள் அந்த அழுக்கில் இருக்கின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் சந்தோஷம் அற்றவர்கள் ஆக்குகின்றனர். ‘நீங்கள் ஏன் அமிர்தத்தைத் துறந்து நஞ்சை அருந்துகின்றீர்கள்?’ எனக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் கூறுவனவற்றின் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய நீங்களும் வரிசைக்கிரமமானவர்கள். ஒரு விவேகமான ஆசிரியரால் சிலருடைய புத்தி எங்கேயாவது அலைபாயும் பொழுது உடனடியாகவே கூறமுடியும். வகுப்பின் நடுவிலே எவராவது கொட்டாவி விட்டாலோ அல்லது தூங்கி விழுந்தாலோ அவரது புத்தியானது வீட்டையோ அல்லது வியாபாரத்தையோ நோக்கி அலைபாய்கின்றது என்று புரிந்து கொள்ளப்படும். கொட்டாவி விடுவதும் களைப்பின் அடையாளமாகும். மக்கள் தமது வியாபாரத்தில் வருமானம் சம்பாதிக்கும் பொழுது அதிகாலை ஒன்று அல்லது இரண்டு மணிவரை கொட்டாவி விடாமல் அமர்ந்திருப்பார்கள். தந்தை அவ்வாறான பொக்கிஷங்களை உங்களுக்குக் கொடுக்கின்றார். ஆகையினால் கொட்டாவி விடுதல் இழப்பின் அடையாளமே. கடனாளிகள் ஆகியவர்கள் தொடர்ந்து அதிக கொட்டாவி விட்டுத் தூங்கி விழுவார்கள். நீங்கள் தொடர்ந்தும் பெருமளவு பொக்கிஷங்களுக்கு மேல் பொக்கிஷங்களைப் பெறுகின்றீர்கள். ஆகையினால் நீங்கள் பெருமளவு கவனம் செலுத்தவேண்டும். கற்கின்ற நேரத்தில் எவராவது கொட்டாவி விட்டால், அவருடைய புத்தியின் யோகம் எங்கேயாவது அலைபாய்கின்றது என விவேகமான ஆசிரியரால் புரிந்து கொள்ளமுடியும். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் பொழுது உங்களுடைய வீட்டையோ அல்லது குழந்தைகளையோ நினைவு செய்கின்றீர்கள். இங்கே நீங்கள் பத்தியில் இருக்கின்றீர்கள். வேறு எவரையுமே நினைவு செய்யக்கூடாது. ஆறு நாட்களுக்கு பத்தியில் இருந்துவிட்டு பின்னர் எவரையாவது நினைவு செய்து அவருக்குக் கடிதம் எழுதினால் அவர்கள் தோல்வி அடைந்தவர்கள் என்றே கூறப்படும். அவர்கள் மீண்டும் ஏழு நாட்களுக்கு ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் ஏழு நாட்களுக்கு பத்தியில் அமர்த்தப்படுகின்றீர்கள். அதனால், உங்களது அனைத்து நோய்களும் அகற்றப்பட முடியும். அரைக் கல்பமாக நீங்கள் அதிக நோய்வாய்ப்பட்டுள்ளீர்கள். எங்கேயாவது அமர்ந்திருக்கும்போதே சிலர் அகாலமரணம் அடைகின்றார்கள். இது சத்தியயுகத்தில் ஒருபோதும் இடம்பெற மாட்டாது. இங்கே எப்பொழுதும் ஏதாவதொரு நோய் இருந்துகொண்டே இருக்கும். மரணிக்கின்றபோதும் அவர்கள் அந்த நோயினால் அழுவார்கள். சுவர்க்கத்தில் சிறிதளவு துன்பமும் இருக்கமாட்டாது. அங்கே சரியான நேரத்தில் சரீரத்தின் காலம் முடிவடைகின்றது என அவர்கள் புரிந்து கொள்வார்கள். ‘நான் இந்த சரீரத்தைவிட்டு ஒரு குழந்தை ஆகுவேன்’. நீங்கள் அங்கே என்னவாக ஆகுவீர்கள் என்ற காட்சியை இங்கே காண்பீர்கள். பலர் இவ்வாறான காட்சிகளைக் கண்டுள்ளார்கள். இந்த ஞானத்தின் மூலம் நீங்கள் பிச்சைக்காரர்களில் இருந்து இளவரசர்களாக மாறுகின்றீர்கள் எனப் புரிந்து கொள்கின்றீர்கள். உங்களுடைய இலட்சியமும் குறிக்கோளும் ராதை, கிருஷ்ணர் ஆகுவதேயன்றி இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவது அல்ல. ராதையும், ஸ்ரீகிருஷ்ணரும் முழுமையாக 5000 வருடங்களினூடாகச் செல்கின்றார்கள். இலக்ஷ்மி, நாராயணனின் காலம் குறைந்தது 20, 25 வருடங்கள் குறைவாகவே உள்ளன. இதனாலேயே ஸ்ரீகிருஷ்ணருக்கு அதிக புகழ் உள்ளது. ராதையும் கிருஷ்ணருமே இலக்ஷ்மி, நாராயணன் ஆகுகின்றார்கள் என எவருக்கும் தெரியாது. இது ஒரு கல்வி என நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் தொடர்ந்தும் ஒவ்வொரு கிராமங்களிலும் நிலையங்களைத் திறக்கின்றீர்கள். இது பல்கலைக்கழகத்துடன் கூடிய வைத்தியசாலை ஆகும். உங்களுக்கு இதற்கு 3 அடி நிலம் மாத்திரமே தேவை. இது ஓர் அற்புதமே! இது ஒருவரின் பாக்கியத்தில் இருந்தால், அவர் தனது அறையிலேயே ஒரு சத்சங்கம் நடத்துவார். இங்கே பல செல்வந்தர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களின் செல்வம் தூசாக மாறிவிடும். நீங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கு உங்களுடைய ஆஸ்தியைக் கோரிக் கொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இந்தப் பழைய உலகைப் பார்க்கின்றபோதும், உங்கள் புத்தியின் யோகம் அங்கேயே இருக்கவேண்டும். செயல்களைச் செய்யும்பொழுது இதைப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் அனைத்தையும் கருத்திற் கொள்ள வேண்டும். நீங்கள் இப்பொழுது இதைப் பயிற்சி செய்கின்றீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: எப்பொழுதும் தூய்மையான செயல்களையே செய்யுங்கள். தூய்மையற்ற செயல்களை ஒருபோதும் செய்யாதீர்கள். உங்களுக்கு ஏதாவது நோய் இருந்தால் சத்திரசிகிச்சை நிபுணர் இங்கே அமர்ந்திருக்கின்றார். அவரிடம் ஆலோசனை பெறுங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்த நோய் உள்ளது. நீங்கள் சத்திரசிகிச்சை நிபுணரிடம் இருந்து நல்ல அறிவுரையைப் பெறுகின்றீர்கள். உங்களுடைய சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்யவேண்டும் என நீங்கள் கேட்கலாம். நீங்கள் பாவச்செயல் எதையும் செய்யாதிருப்பதில் கவனம் செலுத்துங்கள். ‘உணவு எவ்வாறோ, அவ்வாறே மனோநிலையும்’ எனக் கூறப்பட்டுள்ளது. இறைச்சியை வாங்குபவர்கள், அதை விற்பவர்கள் அல்லது மற்றவர்களுக்கு வழங்குபவர்கள் சுமையைச் சேர்த்துக் கொள்வார்கள். தூய்மையாக்குபவரான தந்தையிடமிருந்து எதையும் மறைக்காதீர்கள். சத்திரசிகிச்சை நிபுணரிடமிருந்து எதையும் மறைத்தீர்களாயின் அந்த நோயை அகற்ற முடியாது. இவர் எல்லையற்ற அநாதியான சத்திரசிகிச்சை நிபுணராவார். உலகிலுள்ள மக்களுக்கு அவரைத் தெரியாது. நீங்கள் இப்பொழுது ஞானத்தைப் பெறுகின்றீர்கள். ஆனால் யோகத்தில் பெருமளவு குறைபாடுள்ளது. நீங்கள் நினைவில் நிலைத்திருப்பதே இல்லை. உங்களால் உடனடியாகவே உங்களை நினைவில் நிலைநிறுத்த முடிவதில்லை என பாபாவுக்குத் தெரியும். அதுவும் வரிசைக்கிரமமானது. நீங்கள் நினைவு யாத்திரையை முடிக்கும்பொழுது, நீங்கள் கர்மாதீத நிலையை அடைந்து விட்டதாகக் கூறப்படும். பின்னர் யுத்தம் இடம்பெறும். அதுவரைக்கும் ஏதாவதொன்று நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். யுத்தம் எந்த நேரமும் ஆரம்பிக்கலாம். பின்னர் அனைத்துமே ஒரு முடிவுக்கு வரும். எவ்வாறாயினும், புதிய உலகம் ஸ்தாபிக்கப்படும்வரை பெரிய யுத்தம் ஆரம்பிக்க மாட்டாது என உள்ளுணர்வு கூறுகின்றது. சிறிய யுத்தங்கள் இருக்கும், அவை முடிவடைந்து விடும். இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என எவருக்குமே தெரியாது. சதோபிரதான், சதோ, ரஜோ, தமோ புத்தியைக் கொண்ட மக்கள் இருக்கின்றார்கள். உங்களுக்குள் சதோபிரதான் புத்தியைக் கொண்டவர்கள் தொடர்ந்து மிக நல்ல நினைவைக் கொண்டிருக்கின்றார்கள். நூறாயிரக்கணக்கான பிராமணர்கள் இருக்கவேண்டும். எவ்வாறாயினும் சிலர் உண்மையான குழந்தைகள், ஏனையோர் மாற்றாந்தாய்க் குழந்தைகள். உண்மையானவர்கள் நல்ல சேவை செய்கின்றார்கள். அவர்கள் தாய், தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றார்கள். ஆனால் மாற்றாந்தாய்க் குழந்தைகளோ இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றார்கள். அவர்கள் சிலவேளைகளில் இராவணனின் வழிகாட்டல்களையும், சிலவேளைகளில் இராமரின் வழிகாட்டல்களையும் பின்பற்றி தொடர்ந்தும் நொண்டிக் கொண்டிருக்கின்றார்கள். பாபா, எங்களை ஓய்வும் சௌகரியமும் உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்ற பாடலைக் குழந்தைகளாகிய நீங்கள் செவிமடுத்தீர்கள். சுவர்க்கத்தில் மாத்திரமே ஓய்வும், சௌகரியமும் உள்ளன. அங்கே துன்பம் என்ற பெயரே இருக்கமாட்டாது. சுவர்க்கம் சத்தியயுகம் என அழைக்கப்படுகின்றது. இப்பொழுது இது கலியுகம். எனவே எவ்வாறு இங்கே சுவர்க்கம் இருக்கமுடியும்? உங்களுடைய புத்தி இப்பொழுது சுத்தமாகின்றது. சீரழிந்த புத்தியைக் கொண்டவர்கள் சுத்தமான புத்தியைக் கொண்டவர்களின் முன்னால் தலை வணங்குகிறார்கள். தூய்மையாக இருப்பவர்களுக்கே மரியாதை வழங்கப்படுகின்றது. சந்நியாசிகள் தூய்மையாக இருக்கின்றார்கள். இதனாலேயே குடும்பத்தவர்கள் அவர்களுக்குத் தலை வணங்கிறார்கள். எவ்வாறாயினும், சந்நியாசிகள் விகாரத்தின் மூலமே பிறப்பெடுத்து சந்நியாசிகள் ஆகின்றார்கள். ஆனால் தேவர்களோ முற்றிலும் விகாரமற்றவர்கள். சந்நியாசிகளை முற்றிலும் விகாரமற்றவர்கள் என அழைக்க முடியாது. ஆகையால் குழந்தைகளாகிய உங்களுடைய சந்தோஷப் பாதரசம் உயரவேண்டும். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: “அதீந்திரிய சுகத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமாயின், கற்று, ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெறுகின்ற, கோப, கோபியரைக் கேளுங்கள்”. உங்களுடைய போதை இங்கே அதிகரிக்கின்றது. ஏனெனில் நீங்கள் பாபாவிடம் இருந்து நேரடியாகவே செவிமடுக்கின்றீர்கள். சிலருக்கு போதை நிரந்தரமாகவே உயர்ந்திருக்கின்றது. ஏனையோருக்கு அது விரைவில் மறைந்து விடுகின்றது. ஏனெனில் அவர்கள் தீய சகவாசத்தின் ஆதிக்கத்திற்குள் வருவதனால் அவர்களுடைய போதை நிலையாக இருப்பதில்லை. அவ்வாறான பலர் நிலையங்களுக்கு வருகின்றார்கள். அவர்களுக்கு சிறிதளவு போதை இருக்கின்றது. பின்னர் அவர்கள் விருந்துகளுக்குச் சென்று மதுவருந்தி, புகைத்து தங்களுக்கான அனைத்தையும் முடித்து விடுகின்றார்கள். தீய சகவாசத்தின் ஆதிக்கம் மிகவும் எதிர்மறையானது. அன்னமும், நாரையும் ஒன்றாக வாழமுடியாது. சில இடங்களில் கணவன் அன்னமாகவும், மனைவி நாரையாகவும் இருப்பதும், மற்றைய இடங்களில் மனைவி அன்னமாகி, கணவன் நாரையாக இருப்பதும் உள்ளன. அவர்களில் ஒருவர் தூய்மையைப் பேண விரும்புவதாகக் கூறினால் அவனோ அல்லது அவளோ அடிக்கப்படுகின்றார். சில வீடுகளில் அனைவரும் அன்னம் ஆகின்றார்கள். பின்னர் முன்னேறிச் செல்கையில் அவர்கள் திரும்பவும் அன்னத்திலிருந்து நாரைகளாக மாறி விடுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் அனைவரும் உங்களை சந்தோஷத்தை அருள்பவர்கள் ஆக்கிக் கொள்ள வேண்டும். உங்களுடைய குழந்தைகளையும் சந்தோஷத்தை அருள்பவர்கள் ஆக்குங்கள். இது துன்ப பூமியாகும். இன்னமும் பல அனர்த்தங்கள் வர இருக்கின்றன. அந்த நேரத்தில் எத்தனை மக்கள் துன்பத்தில் கதறியழுவார்கள் என நீங்கள் பார்ப்பீர்கள், ஏனெனில் தந்தை வந்த பின்னரும் அவர்கள் அவரிடமிருந்து ஆஸ்தியைக் கோரிக் கொள்ளவில்லை. பின்னர் அது மிகவும் தாமதம் ஆகிவிடும்! தந்தை அவர்களுக்கு சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்க வந்துள்ளார். ஆனால் அவர்கள் பின்னர் இழந்து விடுகின்றார்கள். ஆகையினால் பாபா கூறுகின்றார்: நீங்கள் பாபாவுக்கு முன்னால் வரும்போது, தாங்களும் விளங்கிக்கொண்டு மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்தக் கூடிய பலமான, உறுதியானவர்களையே கொண்டுவர வேண்டும். பாபா, மக்கள் இலகுவாக வந்து ஒரு கணநேர தரிசனத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒருவர் அல்லர். சிவபாபாவை எங்கும் பார்க்க முடியாது. நீங்கள் ஆத்மாவாகிய உங்களைப் பார்த்திருக்கின்றீர்களா? நீங்கள் இலகுவாக அதைத் தெரிந்து கொள்வீர்கள். அதேபோன்று நீங்கள் பரமாத்மாவையும் தெரிந்துகொள்ள வேண்டும். தெய்வீகப் பார்வையைக் கொண்டிருக்காத வரைக்கும், உங்களால் ஆத்மாவைப் பார்க்க முடியாது. இப்பொழுது தெய்வீகப் பார்வையைக் கொண்டிருப்பதால் நீங்கள் சத்திய யுகத்தைக் காண்பீர்கள். பின்னர் நடைமுறையில் அங்கே செல்வீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் கர்மாதீத நிலையை அடைந்ததும் இந்தக் கலியுகம் அழிக்கப்படும். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்தப் பழைய உலகைப் பார்க்கும்போதும், உங்களுடைய புத்தியின் யோகம் தந்தையுடனும், புதிய உலகுடனுமே இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உங்களுடைய புலனங்கங்கள் மூலம் எந்தவிதமான பாவச்செயல்களையும் செய்யாதிருப்பதில் கவனம் செலுத்துங்கள். எப்பொழுதும் தூய செயல்களையே செய்யுங்கள். உங்களுக்குள்ளே ஏதாவது நோய் இருக்குமாயின், சத்திரசிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள்.

2. தீய சகவாசத்தின் ஆதிக்கம் மிகவும் எதிர்மறையானது. இதற்கு எதிராக உங்களை எச்சரிக்கை செய்யுங்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் சந்தோஷத்தை அருள்பவர்கள் ஆக்குங்கள். கற்காமல் இருப்பதற்கு ஒருபோதும் சாக்குப்போக்கு கூறாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் உலக உபகாரியாகி, உங்களின் மேன்மையான உணர்வுகளால் எல்லோருக்கும் அமைதி மற்றும் சக்தியின் கதிர்களை வழங்குவீர்களாக.

தந்தையின் எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் எப்போதும் நன்மை செய்யும் உணர்வுகளும் நல்லாசிகளும் இருப்பதைப் போல், குழந்தைகளான உங்களின் எண்ணங்களும் உலகிற்கான நலம் தரும் உணர்வுகளாலும் நல்லாசிகளாலும் நிறைந்திருக்க வேண்டும். நீங்கள் இந்தப் பணியைச் செய்யும்போது, உலகிலுள்ள ஆத்மாக்கள் எல்லோரும் உங்களின் முன்னால் இருக்க வேண்டும். மாஸ்ரர் ஞான சூரியனாகி, உங்களின் தூய உணர்வுகளினதும் மேன்மையான நல்லாசிகளினதும் அடிப்படையில், தொடர்ந்தும் அவர்களுக்கு அமைதி மற்றும் சக்தியின் கதிர்களை வழங்குங்கள். அப்போது நீங்கள் உலக உபகாரி எனப்படுவீர்கள். எவ்வாறாயினும், இதற்கு, நீங்கள் சகல பந்தனங்களில் இருந்தும் விடுபட்டிருக்க வேண்டும்.

சுலோகம்:
‘நான்’ மற்றும் ‘எனது’ என்ற உணர்வானது சரீர உணர்வின் கதவுகள். இப்போது அந்தக் கதவுகளை மூடிவிடுங்கள்.

அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.

உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளில் தெய்வீகத்தை அனுபவம் செய்வதன் மூலம் சத்தியம் இனங்காணப்படுகிறது. நான் எப்போதும் சத்தியத்தையே பேசுகிறேன் என யாராவது சொன்னாலும் அவரின் வார்த்தைகள் அல்லது செயல்களில் தெய்வீகத் தன்மை இல்லாவிட்டால், மற்றவர்கள் அந்த சத்தியத்தை சத்தியமாக உணர மாட்டார்கள். ஆகவே, சத்தியத்தின் சக்தியால் தெய்வீகத் தன்மையைக் கிரகியுங்கள். நீங்கள் எதைச் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தாலும், பயப்படாதீர்கள். காலத்திற்கேற்ப சத்தியம் இயல்பாகவே நிரூபிக்கப்படும்.