17.04.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த ஆன்மீக வைத்தியசாலை, உங்களை அரைக்கல்பத்திற்கு என்றென்றும் ஆரோக்கியமானவர் ஆக்குகின்றது. இங்கே ஆத்ம உணர்வுடன் அமர்ந்திருங்கள்.
கேள்வி:
உங்கள் வியாபாரம் போன்றவற்றில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் போதும், எந்த வழிகாட்டலை உங்கள் புத்தி நினைவு செய்ய வேண்டும்?பதில்:
தந்தையின் வழிகாட்டல்: நீங்கள் எந்தச் சரீரதாரிகளையோ அல்லது சூட்சுமதாரிகளையோ நினைவு செய்யக் கூடாது. நீங்கள் ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருந்தால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழியும். இதற்கு உங்களுக்கு நேரம் இல்லை என உங்களில் எவருமே கூற முடியாது. நீங்கள் அனைத்தையும் செய்யும் பொழுதும் உங்களால் நினைவில் நிலைத்திருக்க முடியும்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு ‘காலை வணக்கங்கள்’ எனத் தந்தை கூறுகின்றார். ‘காலை வணக்கங்கள்’ கூறிய பின்னர், குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்யுமாறு கேட்கப்படுகின்றீர்கள். ‘ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்!’ என்று நீங்கள் அழைத்தீர்கள். ஆகையால் அனைத்திற்கும் முதலில் தந்தை கூறுகின்றார்: ஆன்மீகத் தந்தையை நினைவு செய்யுங்கள். அனைவரதும் ஆன்மீகத் தந்தை ஒரேயொருவரே ஆவார். ஒரு தந்தை (லௌகீக) சர்வவியாபி எனக் கருதப்படுவதில்லை. எனவே குழந்தைகளே, இயன்றவரை, முதலில் தந்தையை நினைவு செய்யுங்கள். எந்தத் சரீரதாரியையும், சூட்சுமதாரியையும் நினைவு செய்யாதீர்கள். ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவு செய்யுங்கள். இது மிகவும் இலகுவானது. தாம் மும்முரமாக இருப்பதாகவும், தமக்கு நேரம் இல்லை என்றும் மக்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், எப்பொழுதுமே உங்களுக்கு இதற்கு நேரம் உள்ளது. தந்தை அதற்கான வழிகாட்டலை உங்களுக்குக் காட்டுகின்றார். தந்தையை நினைவு செய்வதனால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழியும் என்பதும் உங்களுக்குத் தெரியும். இதுவே பிரதானமான விடயம். உங்கள் தொழிலை நீங்கள் தொடர்ந்தும் செய்வதை எவரும் உங்களைத் தடுப்பதில்லை. அவை அனைத்தையும் செய்யும் அதேவேளையில், தந்தையையும் நீங்கள் நினைவு செய்தால் உங்கள் பாவங்களை அழித்துக் கொள்ள முடியும். நீங்கள் தூய்மையற்றவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். சாதுக்கள், புனிதர்கள், ரிஷிகள், முனிவர்கள் போன்ற அனைவருமே ஆன்மீக முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். கடவுளைச் சந்திப்பதற்காகவே ஒருவர் ஆன்மீக முயற்சியைச் செய்கின்றார். அவரது அறிமுகம் கிடைக்கும் வரை, உங்களால் அவரைச் சந்திக்க முடியாது. உலகில் உள்ள எவருக்குமே தந்தையின் அறிமுகம் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். சரீரத்தின் அறிமுகம் அனைவருக்கும் உள்ளது. பெரிதாக உள்ள ஒன்றை எவராலும் விரைவாக அறிந்து கொள்ள முடியும். தந்தை வரும் போது மாத்திரமே ஆத்மாவின் அறிமுகத்தை அவர் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இரண்டு விடயங்கள் உள்ளன: ஆத்மாவும், சரீரமும். ஒவ்வோர் ஆத்மாவும் ஒரு நட்சத்திரம் ஆவார். அத்துடன் மிகவும் சூட்சுமமானவர். ஆத்மாவை எவராலும் பார்க்க முடியாது. நீங்கள் இங்கே வந்து அமரும் போது, ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்க வேண்டும். இதுவும் வைத்தியசாலை ஆகும். இது உங்களை அரைக்கல்பத்திற்கு ஆரோக்கியமாக ஆக்குகின்ற ஒரு வைத்தியசாலை ஆகும். ஆத்மாக்கள் அழியாதவர்கள், ஆத்மாக்கள் என்றும் அழிவதில்லை. ஒவ்வோர் ஆத்மாவிலும் முழுப் பாகமும் உள்ளது. ஆத்மா கூறுகின்றார்: என்னை என்றுமே அழிக்க முடியாது. இந்த ஆத்மாக்கள் அனைவருமே அழியாதவர்கள். சரீரங்கள் அழியக் கூடியன. ஆத்மாக்களான நீங்கள் அழியாதவர்கள் என்பதும், நீங்கள் 84 பிறவிகள் எடுக்கின்றீர்கள் என்பதும், இது ஒரு நாடகம் என்பதும் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. எந்த நேரத்தில் எந்தச் சமய ஸ்தாபகர் வருகின்றார் என்பதும், அவர்கள் எத்தனை பிறவிகளை எடுக்கின்றார்கள் என்பதும் இப்பொழுது உங்களுக்குத் தெரியும். நினைவு கூரப்பட்டுள்ள 84 பிறவிகள் நிச்சயமாக ஒரு தர்மத்திற்கு உரியவை. அது அனைவருக்குமானதாக இருக்க முடியாது. எல்லாச் சமயங்களும் ஒரே நேரத்தில் வருவதில்லை. பிறருக்குரிய எதனையும் நாம் ஏன் கணக்கிட வேண்டும்? ஒரு சமயத்தை ஸ்தாபிப்பதற்காக இன்னார், இந்த நேரத்தில் வந்தார் என்பது எங்களுக்குத் தெரியும். அதன் பின்னர் அச் சமயம் விரிவடைகின்றது. அனைவருமே தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆக வேண்டும். உலகம் தமோபிரதானாக இருக்கும் போதே, தந்தை வந்து, அதனை சதோபிரதான் சத்தியயுகமாக ஆக்குகின்றார். பாரதமக்களாகிய நீங்களே புதிய உலகை ஆட்சி செய்ய வருவீர்கள் என்பதை இப்போது நீங்கள் அறிந்துள்ளீர்கள். அங்கு வேறு எந்தச் சமயங்களும் இருக்க மாட்டாது. குழந்தைகளாகிய உங்கள் மத்தியிலும், உயர்ந்த அந்தஸ்தைக் கோருபவர்கள் நினைவில் நிலைத்திருப்பதற்கு அதிகளவு முயற்சி செய்வதுடன் அவர்கள் தமது செய்தியையும் அறிவிப்பார்கள்: பாபா, நான் இவ்வளவு நேரத்திற்கு நினைவில் நிலைத்திருக்கின்றேன். சிலர் வெட்கப்படுவதால் தமது செய்திகளை அறிவிப்பதே இல்லை. அவர்கள் நினைக்கின்றார்கள்: பாபா என்ன கூறுவாரோ? இருப்பினும், பாபாவிற்கு அது தெரியும். ஒரு பாடசாலையிலும் ஆசிரியர் மாணவர்களிடம் கூறுவதுண்டு: நீங்கள் கற்காது விட்டால், சித்தியடைய மாட்டீர்கள். லௌகீகப் பெற்றோரும் தமது பிள்ளைகள் எவ்வாறு கற்கின்றார்கள் என்பதிலிருந்து இதனைப் புரிந்து கொள்கின்றார்கள். இது மிகவும் பெரியதொரு பாடசாலையாகும். இங்கே நீங்கள் வரிசைக்கிரமமாக அமர வைக்கப்படுவதில்லை. அது வரிசைக்கிரமம் என்பதை உங்கள் புத்தி புரிந்து கொண்டுள்ளது. பாபா இப்பொழுது நல்ல குழந்தைகளை வேறு இடங்களுக்கு அனுப்புகின்றார். அவர்கள் வேறு எங்காவது செல்லும் போது, பிறரும் எழுதுகின்றார்கள்: எங்களுக்கும் ஒரு மகாரத்தி வேண்டும்;. எனவே அவர்கள் திறமைசாலிகள் என்பதும் பிறர் அவர்களைப் பற்றி அதிகளவு அறிந்துள்ளார்கள் என்பதும் நிச்சயமாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. அது வரிசைக்கிரமமாக உள்ளது. கண்காட்சிகளுக்கும் பலவிதமான மக்கள் வருகின்றார்கள். எனவே அவர்களை அவதானிப்பதற்கு வழிகாட்டிகள் நிறுத்தப்பட வேண்டும். வரவேற்பதற்காக நிற்பவர்களுக்கு எத்தகையவர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடியும். அதற்கேற்ப விளங்கப்படுத்துபவர்களிடம் சமிக்கை கொடுக்கலாம்: இவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். முதற்தரமானவர்கள், இரண்டாந் தரமானவர்கள், மூன்றாந் தரமானவர் போன்றோர் உள்ளனர் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அங்கு, நீங்கள் அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும். முக்கியஸ்தர் ஒருவர் வரும் போது, அனைவரும் நிச்சயமாக அவரை நன்கு உபசரிக்கின்றார்கள். இது நியதி. ஒரு தந்தையோ அல்லது ஆசிரியரோ குழந்தைகளை வகுப்பிலேயே பாராட்டுகின்றார். இதுவும் ஒரு விசேட கவனிப்பாகும். பெயரைப் பெருமைப்படுத்தும் குழந்தைகள் விடேசமாகக் கவனிக்கப்படுவதுடன் போற்றப்படுகின்றார்கள். இன்னார் செல்வந்தர், இன்னார் சமயப் பற்றுள்ளவர் என்று கூறுவதும் அவரைப் போற்றுவதேயாகும். அதிமேலானவர் கடவுள் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். அவர் உண்மையில் அதிமேலானவர் என்பதை மக்கள் அறிந்திருந்த போதும், அவரது சுயசரிதையைப் பற்றி அவர்களிடம் வினவும் போது, அவர் சர்வவியாபி என்று அவர்கள் கூறுகின்றார்கள். முற்றாக அவரின் தரத்தை அவர்கள் குறைத்து விடுகின்றார்கள். அதிமேலானவர் கடவுளே என்றும், அவர் பரந்தாமவாசி என்றும், ஆனால் தேவர்கள் சூட்சுமவாசிகள் என்றும் நீங்கள் இப்பொழுது விளங்கப்படுத்தலாம். இங்கே மனிதர்கள் வாழ்கின்றார்கள். எனவே அசரீரியான கடவுளே அதிமேலானவர் ஆவார். நீங்கள் வைரங்கள் போன்றவர்களாக இருந்தீர்கள் என்பதும், இப்பொழுது சிப்பிகளைப் போல் ஆகி விட்டீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். எனவே உங்களை விடக் கடவுளை நீங்கள் தரம் குறைந்தவராக காட்டியிருக்கின்றீர்கள். நீங்கள் அவரை இனங்காணவும் இல்லை. பாரத மக்களாகிய நீங்கள் அவரை இனங்கண்டிருந்த போதிலும் பின்னர் அது குறைவடைகின்றது. இப்பொழுது நீங்கள் அனைவருக்கும் தொடர்ந்தும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கின்றீர்கள். பலரும் தந்தையின் அறிமுகத்தைப் பெறுவார்கள். திரிமூர்த்தி, சக்கரம் மற்றும் விருட்சமுமே உங்கள் பிரதான படங்களாகும். அவற்றின் மூலம் அதிகளவு ஞானோதயம் பெற முடியும். இலக்ஷ்மியும், நாராயணனுமே சத்தியயுகத்தின் அதிபதிகளாக இருந்தனர் என்று எவராலும் கூற முடியும். நல்லது, அவ்வாறாயின், சத்தியயுகத்திற்கு முன்னர் என்ன இருந்தது? இந்த நேரத்தில் மாத்திரமே உங்களுக்கு இது தெரியும். இப்பொழுது இது கலியுகத்தின் இறுதியும், மக்களே மக்களை ஆட்சி செய்யும் காலமுமாகும். இப்பொழுது எந்த இராச்சியமும் கிடையாது. அதிகளவு வேறுபாடு உள்ளது. சத்தியயுக ஆரம்பத்தில் அரசர்கள் இருந்தார்கள். கலியுகத்தில், இப்பொழுதும் அரசர்கள் இருக்கின்றார்கள். எனினும் அவர்கள் தூய்மையானவர்கள் அல்ல. சிலர் வெறுமனே அப் பட்டங்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஒருவருமே உண்மையான மகாராஜாக்கள் அல்ல. அவர்கள் அந்தப் பட்டங்களை வாங்கிக் கொள்கின்றார்கள். உதாரணத்திற்கு பட்டியலாவில், ஜோத்பூரில், பிக்கானீரில் மகாராஜாக்கள் உள்ளனர். அவர்கள் அப் பெயர்களைக் குறிப்பிடுகின்றார்கள். அப் பெயர்கள் அநாதியாகத் தொடர்ந்துள்ளன. முதன் முதலில் தூய்மையான சக்கரவர்த்திகள் இருந்தனர். இப்பொழுது தூய்மையற்றவர்கள் உள்ளனர். ‘அரசர்கள்’ ‘சக்கரவர்த்திகள்’ போன்ற வார்த்தைகள் தொடர்கின்றன. இலக்ஷ்மி, நாராயணனைப் பொறுத்தவரை அவர்களை நீங்கள் சத்தியயுகத்தின் அதிபதிகளாக இருந்தவர்கள் என்று கூறுவீர்கள். இராச்சியத்தைக் கோரியவர்கள் யார்? இராச்சியம் எவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டது என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் 21 பிறவிகளுக்காக இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றேன். அவர்கள் ஒரே பிறவியில் கற்று சட்டநிபுணர்கள் போன்றோர் ஆகுகின்றார்கள். நீங்கள் இந்த நேரத்தில் கற்று, எதிர்காலத்தில் சக்கரவர்த்திகளும், சக்கரவர்த்தினிகளும் ஆகுகின்றீர்கள். நாடகத்தின் திட்டத்திற்கு ஏற்ப, புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இப்பொழுது இது பழைய உலகமாகும். மிகச் சிறந்த, மிகப் பெரிய மாளிகைகள் போன்றவை இருந்த போதிலும், எவருக்கும் வைரங்களும், இரத்தினங்களும் பதித்த மாளிகைகளைக் கட்டுகின்ற சக்தி இல்லை. சத்தியயுகத்தில், எல்லா மாளிகைகளும் வைரங்களும் இரத்தினங்களும் பதிக்கப்பட்டே கட்டப்படுகின்றன. அவற்றைக் கட்டுவதற்கு நீண்டகாலம் எடுப்பதில்லை. இங்கும் கூட, பூமி அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டால், அவர்கள் பல கட்டட நிபுணர்களை நியமித்து ஓரிரு வருடங்களில் முழு நகரத்தையும் மீண்டும் கட்டி எழுப்புகின்றார்கள். புதிய டெல்கியைக் கட்டுவதற்கு எட்டு முதல் பத்து வருடங்கள் எடுத்தது. ஆனால் இங்குள்ள கூலியாட்களுக்கும், அங்குள்ள கூலியாட்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. இக்காலத்தில், அவர்கள் புதிதாகப் பலவற்றைத் தொடர்ந்தும் கண்டுபிடிக்கின்றார்கள். நிர்மாணத்தின் விஞ்ஞானம் அதிகளவு பலம்வாய்ந்தது. அவர்கள் அனைத்திற்குமான வெவ்வேறு பாகங்களை ஆயத்தமாக வைத்திருப்பதால் மாடிக்கட்டடங்கள் மிகவும் விரைவாகக் கட்டப்படுகின்றன. இங்கே அவர்கள் அனைத்தையும் மிகவும் விரைவாகக் கட்டுகின்றார்கள். எனவே அனைத்தும் அங்கே பயனளிக்கும். இவை அனைத்தும் உங்களுடன் சேர்ந்து செல்லும். அச் சமஸ்காரங்கள் உங்களுடனேயே இருக்கும். விஞ்ஞானத்திற்கான சம்ஸ்காரங்களும் உங்களுடன் செல்லும். எனவே தந்தை உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் தூய்மை ஆக வேண்டுமானால், தந்தையை நினைவு செய்யுங்கள். ‘காலை வணக்கம்’ என்று தந்தை கூறுகின்றார். அத்துடன் உங்களுக்குக் கற்பிக்கின்றார்: குழந்தைகளே, தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கின்றீர்களா? உங்கள் தலை மீது பல பிறவிகளின் சுமை இருப்பதால், நடந்து உலாவும் போதெல்லாம், தந்தையை நினைவு செய்யுங்கள். ஏணியில் இறங்கும் போது நீங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். இப்பொழுது ஒரு பிறவியே ஏறும் ஸ்திதியாக உள்ளது. நீங்கள் தொடர்ந்தும் தந்தையை எந்தளவிற்கு நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகளவு சந்தோஷமாக இருப்பதுடன், நீங்கள் சக்தியையும் பெறுகின்றீர்கள். முதல் இலக்கங்களில் வரிசைப்படுத்தப்பட்ட பல குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவர்கள் நினைவு செய்வதே இல்லை. அவர்கள் இந்த ஞானத்தில் திறமைசாலிகளாக இருந்த போதும், அவர்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களைப் புகழ்கின்றார். இவர் முதல் இலக்கத்திற்கு உரியவர் ஆவார். ஆகையால் அவர் நிச்சயமாக முயற்சி செய்வார். சிவபாபா உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்றே, நீங்கள் எப்பொழுதும் கருத வேண்டும். அப்பொழுதே உங்கள் புத்தியின் யோகம் அங்கு தொடர்பு கொண்டிருக்கும். இவரும் கற்கின்றார். இருப்பினும், அவர் கூறுகின்றார்: பாபாவை நினைவு செய்யுங்கள். எவருக்கும் விளங்கப்படுத்தவே இப்படங்கள் உள்ளன. அசரீரியானவரே கடவுள் என்று அழைக்கப்படுகின்றார். அவர் வந்து ஒரு சரீரத்தை எடுக்கின்றார். சகோதரர்களாகிய ஆத்மாக்கள் அனைவரும் ஒரேயொரு கடவுளின் குழந்தைகள் ஆவார்கள். அவர்கள் இப்பொழுது அவரவரின் சரீரத்தில் பிரவேசித்துள்ளனர். அனைவருமே அமரத்துவ ரூபங்கள். இச் சரீரம் அமரத்துவ ரூபத்தின் (ஆத்மாவின்) சிம்மாசனமாகும். அமரத்துவ சிம்மாசனம் என்று குறிப்பாக எதுவும் இல்லை. இதுவே அமரத்துவ ரூபத்தின் சிம்மாசனமாகும். ஒவ்வோர் ஆத்மாவும் நெற்றியின் நடுவில் உள்ளார். அதுவே அமரத்துவ சிம்மாசனம் என்று அழைக்கப்படுகின்றது. அது அமரத்துவ ரூபத்தின், அமரத்துவ சிம்மாசனமாகும். ஆத்மாக்கள் அனைவரும் அமரத்துவமானவர்கள். அவர்கள் மிகவும் சூட்சுமமானவர்கள். தந்தை அசரீரியானவர். அவர் எங்கிருந்து தனது சிம்மாசனத்தை எடுத்து வர முடியும்? தந்தை கூறுகின்றார்: இதுவே, எனது சிம்மாசனமும் ஆகும். நான் வந்து இச் சிம்மாசனத்தைக் கடனாகப் பெறுகின்றேன். நான் பிரம்மாவின் வயோதிப, சாதாரண சரீரத்தின் அமரத்துவ சிம்மாசனத்தில் அமர்கின்றேன். இதுவே ஆத்மாக்கள் அனைவரதும் சிம்மாசனம் என்பதை நீங்கள் அனைவரும் இப்பொழுது அறிவீர்கள். இது மனிதர்களுக்கு மாத்திரமே பொருந்தும். இது மிருகங்களுக்குப் பொருந்தாது. மனிதர்கள் மிருகங்களை விட மோசமாகி உள்ளவர்கள். அவர்கள் குறைந்தபட்சம் முதலில் தம்மைச் சீர்திருத்திக் கொள்ள வேண்டும். எவராயினும் உங்களிடம் மிருகங்களைப் பற்றிக் கேட்டால், அவர்களிடம் கூறுங்கள்: குறைந்தபட்சம் முதலில் நீங்கள் உங்களைச் சீர் திருத்திக் கொள்ளுங்கள். சத்தியயுகத்தில், மிருகங்கள் கூட மிகவும் நன்றாகவும் முதற்தரமாகவும் இருக்கும். அங்கே குப்பை போன்ற எதுவும் இருக்க மாட்டாது. புறாக்கள் அரசர்களின் மாளிகையில் தமது எச்சங்களை இடுமாயின், அபராதம் விதிக்கப்படும். அங்கே எந்தக் குப்பையும் இருக்க மாட்டாது. அங்கே அவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கின்றார்கள். அங்கே எந்த மிருகங்களும் உட்பிரவேசிக்காத வகையில் அவர்கள் காவல் இருப்பார்கள். அங்கே அதிகளவு சுத்தம் பேணப்படும். இலக்ஷ்மி நாராயணன் ஆலயத்திலும் அதிகளவு சுத்தம் பேணப்படுகின்றது. சங்கரர் பார்வதியின் ஆலயத்திலும் அவர்கள் ஒரு புறாவைக் காட்டுகின்றார்கள். எனவே, அவை நிச்சயமாக ஆலயங்களை அசுத்தப்படுத்தும். அவர்கள் பல கட்டுக்கதைகளைச் சமயநூல்களில் எழுதியுள்ளார்கள். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறாயினும், அவற்றைச் சிலராலேயே கிரகிக்க முடியும். ஏனையோருக்கு எதுவும் புரிவதில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு அன்புடன் விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, மிக மிக இனிமையானவர் ஆகுங்கள். உங்கள் உதடுகளில் இருந்து இரத்தினங்களே எப்பொழுதும் வெளிப்படட்டும். நீங்கள் ரூப் பசான்ட் ஆவீர்கள். உங்கள் வாயில் இருந்து கற்கள் வெளிப்படக் கூடாது. ஆத்மாவே போற்றப்படுகின்றார். ஆத்மாவே கூறுகின்றார்: நான் ஒரு ஜனாதிபதி. நான் இன்ன, இன்னார். இது எனது சரீரத்தின் பெயராகும். நல்லது, ஆத்மாக்கள் யாருடைய குழந்தைகள்? ஒரேயொரு பரமாத்மாவின் குழந்தைகள். எனவே நீங்கள் நிச்சயமாக அவரிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அவ்வாறாயின், அவர் எப்படி சர்வவியாபியாக இருக்க முடியும்? நீங்கள் முன்னர் எதனையும் அறியாதிருந்தீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். உங்கள் புத்தி இப்பொழுது நன்றாகத் திறந்துள்ளது. இப்பொழுது நீங்கள் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும், அந்தப் படங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். படத்தில் இருப்பதைப் போன்று பத்து கரங்களுடனோ, அல்லது யானையின் தும்பிக்கையுடனோ எவராவது இருக்க முடியுமா? அவை அனைத்தும் பக்திமார்க்கத்திற்குரிய விடயங்கள் ஆகும். அனைவருக்கும் சற்கதியை அருள்கின்ற ஒரேயொரு சிவபாபாவிற்கான பக்தி மாத்திரமே இருக்க வேண்டும். இலக்ஷ்மியும் நாராயணனும் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. அதன் பின்னர், அதிமேலான தந்தை வந்து, அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார். அவரை விட மேலானவர் எவருமே இல்லை. உங்கள் மத்தியிலும், இந்த ஞானவிடயங்களை உங்களால் வரிசைக்கிரமமாகவே கிரகிக்க முடிகின்றது. ஒருவரால் கிரகிக்க முடியாது விட்டால், அவரால் என்ன பயன்? சிலர் குருடர்களுக்கு ஊன்று கோலாகுவதற்குப் பதிலாக, அவர்கள் தாமே குருடர்கள் ஆகுகின்றார்கள். ஒரு பசு பால் சுரக்காதிருந்தால், அவர்கள் அதனைத் தொழுவத்திலேயே பூட்டி வைத்திருப்பார்கள். இங்கும் சிலரால் இந்த ஞானப்பாலைக் கொடுக்க முடியாதுள்ளது. எந்த முயற்சியுமே செய்யாத பலரும் உள்ளார்கள். குறைந்தபட்சம் யாரோ ஒருவருக்கேனும் தாம் பயனளிக்க வேண்டும் என்பதைக் கூட அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தமது சொந்தப் பாக்கியத்தையிட்டுச் சிறிதளவேனும் அக்கறை கொள்வதில்லை. தமக்கு என்ன கிடைத்ததோ, அதனுடன் அவர்கள் திருப்தி அடைகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அது அவரின் பாக்கியத்தில் இல்லை. ஒருவர் சற்கதி பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆக வேண்டும். தந்தையே அதிமேலானவர் ஆவார். இருப்பினும் அவர் எவ்வாறு தூய்மையற்ற ஒரு சரீரத்தில், தூய்மையற்ற உலகிற்குள் பிரவேசிக்கின்றார் என்று பாருங்கள். அவர் இந்தத் தூய்மையற்ற உலகிற்கு அழைக்கப்படுகின்றார். இராவணன் உங்கள் அனைவரையும் முற்றிலும் சீரழிக்கும் போது, தந்தை வந்து உங்களை மேன்மையானவர்கள் ஆக்குகின்றார். நன்றாக முயற்சி செய்பவர்கள் அரசர்களும், அரசிகளும் ஆகுகின்றார்கள். ஆனால், எந்த முயற்சியும் செய்யாதவர்கள் ஏழைகள் ஆகுகின்றார்கள். அவர்களுக்கு அதற்கான பாக்கியம் இல்லாதிருப்பதால், அவர்களால் முயற்சி செய்ய முடியாதுள்ளது. சிலர் மிகவும் நல்ல பாக்கியத்தை உருவாக்கிக் கொள்கின்றார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைச் சோதித்துப் பார்க்கலாம்: நான் என்ன சேவை செய்கின்றேன்? அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ரூப்பும் பசான்டும் ஆகி, எப்பொழுதும் உங்கள் வாயில் இருந்து இரத்தினங்களை வெளிப்படுத்துங்கள். மிக மிக இனிமையானவர் ஆகுங்கள். ஒரு போதும் உங்கள் வாயில் இருந்து கற்களை (கெட்ட வார்த்தைகள்) வெளிப்பட அனுமதிக்காதீர்கள்.2. ஞானத்திலும், யோகத்திலும் திறமைசாலியாகி, உங்களுக்கும் பிறருக்கும் நன்மை செய்யுங்கள். உங்கள் பாக்கியத்தை மேன்மையாக்கிக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். குருடர்களுக்கு ஓர் ஊன்றுகோல் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் மூன்று விடயங்களின் விழிப்புணர்வுத் திலகத்தை இட்டு, சம்பூரணமான வெற்றியாளர் ஆகுவீர்களாக.சுயத்தின் விழிப்புணர்வு, தந்தையின் விழிப்புணர்வு, நாடகத்தைப் பற்றிய இந்த ஞானத்தின் விழிப்புணர்வு - இந்த ஞானத்தின் விரிவாக்கம் அனைத்தும் இந்த மூன்று விடயங்களின் விழிப்புணர்வில் அமிழ்ந்துள்ளது. அவை ஞான மரத்தின் மூன்று வகையான விழிப்புணர்வுகள் ஆகும். ஒரு மரம் முதலில் ஒரு விதையாக இருக்கும். பின்னர் அந்த விதையில் இருந்து இரண்டு இலைகள் வெளிப்பட்டு, மரத்தின் விரிவாக்கம் இடம்பெறும். அதேபோல், விதையான தந்தையின் விழிப்புணர்வையும் பின்னர் இரண்டு இலைகளான, ஆத்மாக்கள் மற்றும் நாடகத்தைப் பற்றிய இந்த ஞானத்தின் விழிப்புணர்வையும் கொண்டிருப்பதே பிரதானமான விடயமாகும். இந்த மூன்று விடயங்களின் விழிப்புணர்வையும் கிரகிப்பவர்கள், நினைவு சொரூபங்களாக இருக்கும் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள். அத்துடன் அவர்கள் சம்பூரணமாக வெற்றியாளர்கள் ஆகுகிறார்கள்.
சுலோகம்:
சதா உங்களின் பேறுகளை உங்களின் முன்னால் வைத்திருங்கள், உங்களின் பலவீனங்கள் அனைத்தும் இலகுவாக முடிவடைந்துவிடும்.அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வால் சதா வெற்றியாளர் ஆகுங்கள்.
சங்கமயுகத்தில், பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளும் தனித்து இருக்க முடியாது. தந்தையின் சகவாசத்தையும் உங்களின் ஒன்றிணைந்த ரூபத்தையும் அனுபவம் செய்யுங்கள். ‘தந்தை என்னுடையவர்தானே, அவர் என்னுடன் இருக்கிறார்’ என நினைக்காதீர்கள். இல்லை. அவரின் சகவாசத்தின் நடைமுறை அனுபவம் இருக்க வேண்டும். அப்போது, மாயையின் எந்தவிதமான தாக்குதலும் தாக்குதலாக இருக்காது. மாயையும் தோற்கடிக்கப்பட்டு விடுவாள். என்னதான் நடந்தாலும் பயப்படாதீர்கள். தைரியத்தைக் கொண்டிருங்கள். தந்தையின் சகவாசத்தை உணர்ந்தவராக இருங்கள். அப்போது வெற்றி உங்களின் பிறப்புரிமை ஆகும்.