17.05.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    11.02.2010     Om Shanti     Madhuban


சிவனின் பிறந்தநாளில், பாப்தாதாவிற்கு கோபம் என்ற அக் மலரைப் படைத்து, ஒரு கண்ணாடி ஆகுங்கள். தூய இல்லறப் பாதையின் நடைமுறை அத்தாட்சியின் மூலம், வெளிப்படுத்தலை நெருக்கம் ஆக்குங்கள்.


இன்று, தந்தையின் முன்னால் தனிப்பட்ட முறையில் அமர்ந்திருக்கும் குழந்தைகளான நீங்களோ அல்லது இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் எங்கும் அமர்ந்திருக்கும் குழந்தைகளோ, அனைவருமே தந்தையின் பிறந்த நாளையும் உங்களின் சொந்தப் பிறந்த நாளையும் கொண்டாடுவதற்காக பற்பல வாழ்த்துக்களையும் மிகுந்த சந்தோஷத்துடன் பாராட்டுக்களையும் வழங்குகிறீர்கள். நீங்கள் தனிப்பட்ட முறையில் தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். ஏனைய குழந்தைகள் அனைவரும் தொலைவில் இருந்தவண்ணம் உங்களின் இதயபூர்வமான வாழ்த்துக்களை மிகுந்த சந்தோஷத்துடன் விஞ்ஞானத்தின் வசதிகளைப் பயன்படுத்திச் செலுத்துகிறீர்கள். இங்கே வந்துள்ள நீங்கள் அனைவரும் தந்தையின் பிறந்த நாளையா அல்லது உங்களின் சொந்தப் பிறந்த நாளையா கொண்டாட வந்துள்ளீர்கள்? இந்தப் பிறந்த நாள் ஒரு தனித்துவமான பிறந்தநாள் ஆகும். ஏன் அது தனித்துவமானது? இது தந்தையினதும் குழந்தைகளினதும் ஒரே பிறந்தநாள் ஆகும். கல்பம் முழுவதிலும் இதைப் போன்றதொரு பிறந்தநாள் இருக்க முடியாது. கல்பம் முழுவதும் சென்று பாருங்கள், இது எத்தனை தனித்துவமான பிறந்தநாள் என்று பாருங்கள். பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவரிடமும் கேட்கிறார்: நீங்கள் அனைவரும் தந்தைக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க வந்துள்ளீர்களா அல்லது தந்தையிடம் இருந்து வாழ்த்துக்களைப் பெற வந்துள்ளீர்களா? பாப்தாதா எதையும் தனித்துச் செய்வதில்லை. ஏனென்றால், இந்த யாகத்தீ நீங்கள் பிறப்பு எடுத்தபோது உருவாக்கப்பட்டது. இந்த யாகத்திற்குப் பிராமணர்கள் தேவைப்படுவதால், உங்களின் பிறப்பும் தந்தையுடன் கூடவே ஒன்றாகவே இடம்பெற்றது. இதன் ஞாபகார்த்தம் சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. அதனால் ஒரே வேளையில் சாலிகிராம்களும் பூஜிக்கப்படுகின்றன. பற்பல சாலிகிராம்களும் பூஜிக்கப்படுகின்றன. எனவே, இந்தப் பிறந்தநாள் ஓர் அற்புதமான பிறந்தநாள் ஆகும். இதனாலேயே, இந்தப் பிறந்தநாள் ஒரு வைரம் போன்று பெறுமதி வாய்ந்தது எனப்படுகிறது. பாப்தாதா தனது கோடானுகோடி மடங்கு மாலைகளான கரங்களின் மத்தியில் தனது சகபாடிக் குழந்தைகள் அனைவருக்கும் கோடானுகோடி மடங்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். இதுவும் தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான இதயபூர்வமான ஆழ்ந்த அன்பின் அடையாளம் ஆகும். பாப்தாதா குழந்தைகளான உங்களுக்குத் தான் உங்களுடனேயே இருப்பார் என்றும் உங்களுடனேயே திரும்பிச் செல்வார் என்றும் சத்தியம் செய்துள்ளார். எனவே கூறுங்கள்! நீங்களும் சங்கமயுகத்தில் ஒன்றாக இருப்பீர்கள் என்று தந்தைக்குச் சத்தியம் செய்துள்ளீர்கள், அல்லவா? நீங்கள் ஒன்றாக இருப்பீர்கள், நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து உலகச் சேவை செய்கிறீர்கள். நீங்கள் ஒன்றாகவே இருக்க வேண்டும், அத்துடன் ஒன்றாகவே பறந்து செல்வீர்கள். எனவே பேசுங்கள். நீங்களும் ஒன்றாக இருந்து, ஒன்றாகத் திரும்பிச் சென்று, தந்தை பிரம்மாவுடன் உலகை ஆட்சி செய்வீர்கள் என்று சத்தியம் செய்தீர்கள், அல்லவா? நீங்கள் இந்தச் சத்தியத்தைச் செய்துள்ளீர்களா? இது உறுதியான சத்தியமா? இதுவே இந்தச் சிவஜெயந்திக்கான சிறப்பியல்பு ஆகும்.

அமிர்தவேளையில் இருந்து, வெவ்வேறு இடங்களில் இருந்து குழந்தைகள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் மிகுந்த சந்தோஷத்துடன் அனுப்புவதை பாப்தாதா பார்த்தார். நீங்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள், அத்துடன் பெறுகிறீர்கள். வழங்குவதும் பெறுவதும் ஒன்றாக இடம்பெறுகின்றன. நேரடியாகப் பிறந்த நாளைக் கொண்டாடும் இறை குழந்தைகளான நீங்கள் எததனை பாக்கியசாலிகள்! அனைவரின் முகமும் மிகவும் சந்தோஷமாக, சந்தோஷத்தால் நிரம்பி இருப்பதுடன் பறப்பதையும் காண முடிகிறது. ஒருபுறம், பாப்தாதா குழந்தைகளின் பாக்கியத்தைப் பார்க்கிறார். மறுபுறம், அவர் பக்தர்களையும் பார்க்கிறார். இப்போதும், அவர்கள் இன்னமும் அழைக்கிறார்கள்: வாருங்கள்! ஆனால் நீங்களோ அவருடன் கொண்டாடுகிறீர்கள். பக்தர்களின் அனுபவமும் எதிலும் குறைவாக இல்லை என்பதை பாப்தாதா பார்த்துள்ளார். நீங்கள் நடைமுறையில் செய்வதை, அவர்கள் ஒரு ஞாபகார்த்தமாக நல்லதொரு வழிமுறையுடன் கொண்டாடுகிறார்கள். நீங்கள் ஒரு சத்தியம் (விரதம்) செய்தீர்கள், எனவே அவர்கள் விரதத்தை ஒரு ஞாபகார்த்தமாக உருவாக்கி உள்ளார்கள். அவர்கள் ஒரு நாளுக்கு அல்லது சிறிது நேரத்திற்கு விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் நீங்கள் என்ன சத்தியம் செய்துள்ளீர்கள்? நீங்கள் அனைவரும் தந்தையின் முன்னால் ஒரு சத்தியப்பிரமாணத்தைச் செய்யும் சத்தியத்தைச் செய்துள்ளீர்கள், அல்லவா? நீங்கள் தந்தைக்கு சந்தோஷமாக சத்தியம் செய்துள்ளீர்கள்: பாபா, நாங்கள் இந்தச் சத்தியத்தை இந்த முழுப் பிறவிக்கும், இந்த பிராமணப் பிறவியில் கடைப்பிடிப்போம். எனவே, நீங்கள் இந்தச் சத்தியத்தைச் செய்துள்ளீர்கள், அல்லவா? எந்தச் சத்தியம்? தூய்மைக்கான சத்தியம். நீங்கள் இந்தச் சத்தியத்தை ஒரு பிறவிக்காகச் செய்துள்ளீர்கள். ஆனால் ஒரு பிறவியில் செய்யும் இந்தத் தூய்மைக்கான சத்தியம், 21 பிறவிகளுக்குத் தொடரும். அவர்கள் குறுகிய காலத்திற்கு உணவு, குடிபானத்தின் விரதத்தை மேற்கொள்கிறார்கள். அத்துடன் இரவில் விழித்திருக்கிறார்கள் (ஜாக்ரன் - கண் விழித்து இருத்தல்) எவ்வாறாயினும், நீங்கள் அனைவரும் ஒரு பிறவிக்கான இந்த ஜாக்ரனுடன் இருளில் இருந்து ஒளிக்குள் வந்துள்ளீர்கள். உங்களின் இந்த ஜாக்ரன் 21 பிறவிகளுக்குத் தொடரும். உலகம் முழுவதிலும் நீங்கள் இத்தகைய ஜாக்ரனைச் செய்தீர்கள். அதனால் முழு உலகிலும் ஒளிகள் ஏற்றப்படும். துன்பம் அல்லது அமைதியின்மையின் இருள் எதுவும் இருக்காது. எனவே, பேசுங்கள், நீங்கள் உலகம் முழுவதையும் இருளில் இருந்து ஒளிக்குள் அழைத்து வந்துள்ளீர்கள். அதனால் நீங்கள் இந்த எல்லையற்ற சத்தியத்தைச் செய்துள்ளீர்கள், அல்லவா? அதைக் கடின உழைப்பாக நீங்கள் கருதவில்லை, அல்லவா? இது இலகுவானதா அல்லது சிரமமானதா? நீங்கள் அதை இலகுவானதாக உணர்கிறீர்கள். அதை இலகுவானது என்று உணர்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அதைச் சிலவேளைகளில் கஷ்டமாக உணர்கிறீர்களா? சிலவேளைகளில்? இல்லை, ஏனென்றால் அந்தத் தூய்மை என்பது உங்களின் பிறப்புரிமை என்பதை நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே, உங்களின் தூய்மை என்பது பிரம்மச்சரியம் மட்டுமல்ல. ஆனால் அது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள், தொடர்புகளில் உள்ள தூய்மை ஆகும். நீங்களே இலகுவாகத் தூய்மையின் சம்ஸ்காரங்களைக் கிரகிப்பவர்கள். எனவே, உங்களிடம் தூய்மையைப் பற்றிய எண்ணம் இருந்தது. ஆனால் இப்போது, இந்தக் காலத்திற்கேற்ப, பாப்தாதா உங்களுக்குக் காலத்தைப் பற்றிய ஓர் எச்சரிக்கையை வழங்குகிறார். எப்படி உங்களிடம் தைரியம் இருந்து, தூய்மைக்கான சத்தியத்தை அதை உங்களின் ஆதி தர்மமாகக் கருதிச் செய்தீர்களோ, அதேபோல், இரண்டாவது தீய ஆவி கோபம் ஆகும். எனவே, இன்று பாப்தாதா கேட்கிறார்: நீங்கள் சத்தியம் செய்து, ஒரு பெரும் தீய ஆவியைப் பொறுத்தவரை உங்களின் மனோபாவத்தை மாற்றி உள்ளீர்கள். எவ்வாறாயினும், இரண்டாவது தீய ஆவியான கோபத்திற்கு, அதன்மீது வெற்றி கொள்வதைப் பற்றியும் நீங்கள் சிந்தித்தீர்களா? அல்லது, அது இரண்டாவது தீய ஆவிதானே என்று நினைத்து அதற்கு நீங்கள் அனுமதி கொடுத்திருக்கிறீர்களா? கோபம், அனைவருடனுமான தொடர்பில் வருவது. நீங்கள் உங்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடும் போதெல்லாம், ஒருவருக்கு ஒருவர் பரிசைக் கொடுக்கிறீர்கள். அதனால் இன்று, உங்களின் பெரும்பாலானோர் தைரியத்துடன் செயல்படுவதுடன் தந்தையின் உதவியால் முதல் இலக்கத்தில் உள்ளதை வெற்றி கொண்டுள்ளீர்கள். அதேபோல் உங்களால் கோபத்தையும் வெற்றி கொள்ள முடியாதா? எந்தவொரு தீய ஆவியும் துன்பத்தையே விளைவிக்கும். கோபம் என்ற தீய ஆவியானது மற்றவர்களுடனான தொடர்பிலேயே வருகிறது. நீங்கள் மற்றவர்களுடன் பழகும்போதே அது வருகிறது. உங்களின் மனதில் உங்களுக்கு கோபம் இருக்குமாயின், நீங்களே அந்தக் கோபத்தால் கட்டாயத்திற்கு உள்ளாகுகிறீர்கள். நீங்கள் தந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடவே வந்துள்ளீர்கள். அதனால் இன்று, பாரதத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள குழந்தைகளான உங்களிடம் இருந்து கோபம் என்ற பரிசைப் பெற விரும்புகிறார். இது சாத்தியமா, இது சாத்தியமா? இன்று தந்தைக்கு அதை ஒரு பரிசாகக் கொடுக்க முடியும், அதனால் அது உங்களின் மனங்களிலோ அல்லது உங்களின் கனவுகளிலோ இருக்க மாட்டாது, இத்தகையதோர் எண்ணத்தைக் கொண்டிருந்து தைரியத்துடன் முன்னேறுவதற்கான சக்தி உங்களிடம் இருக்கிறதா? உங்களுக்கு இருக்கிறதா? எனவே, நீங்கள் இந்த எண்ணத்தைத் தந்தையிடம் தைரியத்துடன் கொடுத்துவிட வேண்டும்: நீங்கள் அதைச் செய்வீர்கள், தந்தையிடம் இருந்து ஒரு பரிசைப் பெறுவீர்கள். அதை ஒரு பரிசாகக் கொடுத்து, ஒரு பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கோபத்தை வென்றால், மற்றவர்களை வெற்றி கொள்வதற்கும் நீங்கள் தைரியத்தைப் பெறுவீர்கள். இந்தப் பரிசைக் கொடுத்து, தந்தையிடம் இருந்து ஒரு பரிசைப் பெறுவீர்கள் என்று உங்களில் யார் நினைக்கிறீர்கள்? அப்படிப்பட்டவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. நீங்கள் உங்களின் கொடிகளை அசைக்கிறீர்கள். குமாரிகளும், எச்சரிக்கையாக இருங்கள்.

குழந்தைகளின் தைரியத்தைப் பார்க்கும்போது, பாப்தாதா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் இந்தக் காட்சியைப் பார்க்கிறீர்கள், அல்லவா? ஒரு புகைப்படம் எடுங்கள்! உங்களின் கைகளை மீண்டும் உயர்த்துங்கள்! ஆம், அனைவரின் புகைப்படத்தையும் எடுங்கள்! நீங்கள் ஒவ்வொரு நாளும் அமிர்த வேளையில் சந்திப்பைக் கொண்டாடும்போது, அந்த வேளையில் உங்களின் தைரியத்தால் நீங்கள் அனுபவசாலி ஆத்மா ஆகுவதற்காக பாப்தாதா உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பார். நீங்கள் அனைவரும் உங்களின் சொந்த இடங்களில் இருக்கிறீர்கள். உங்களில் பலர் ஒன்றாக வாழ்வதையும் அத்துடன் உங்களின் குடும்பங்களையும் பராமரிப்பதையும் நீங்கள் உங்களின் வீடுகளையும் குடும்பங்களையும் கைவிட்டுச் செல்லாமல், தூய இல்லறத்தை உருவாக்கி இருப்பதை மக்கள் பார்க்கும்போது, என்ன நடக்கும்? ஆத்மாக்களின் வரிசை இருக்க வேண்டும் என்று நீங்கள் அனைவரும் நல்லாசிகளைக் கொண்டிருக்கும் அந்த வரிசை புலப்படும். கோபம் நடைமுறையில் புலப்படும். நீங்கள் தூய்மையைப் பற்றி மட்டும் பேசுவது மட்டுமன்றி, தூய்மையாக இருப்பதன் மூலம் அதை நடைமுறையிலும் செய்து காட்டுகிறீர்கள் என்பதை அவர்கள் நடைமுறையில் பார்க்கிறார்கள். உங்களுக்கு வெளிப்படுத்தல் தேவைப்படுகிறது. எனவே, இதுவே நடைமுறை அத்தாட்சி ஆகும். அனைவரும் இயல்பாகவே இதனால் கவரப்பட்டு, இங்கே வருவார்கள். ஆனால்..... பாபா உங்களுக்கு ‘ஆனால்’ என்பதைப் பற்றிச் சொல்லட்டுமா? அவர் உங்களுக்கு மேலும் சொல்லவா? பெரும்பாலானோருக்கு, கோபத்திற்கான காரணம், எங்கேயாவது இருக்கும் பொறாமையே ஆகும். அத்துடன் கூடவே, நீங்கள் எதையாவது பார்க்கும்போது, அதைப் பற்றிய வீணான எண்ணங்களின் விதையும் உங்களிடம் இருக்கும். இதுவே கோபத்தை ஏற்படுத்தும். வீணான எண்ணங்களே விதையாக உள்ளன. இந்த விதையால் கோபம் எழுகிறது. இதற்கு ஒரு வார்த்தை கருவியாக உள்ளது. நீங்கள் இந்த ஒரு வார்த்தையை, விதையை முடித்தால், அது இலகுவாகி விடும். அந்த ஒரு வார்த்தை என்னவென்றால், ‘ஏன்?’ என்பதாகும். இது ஏன்? ஏன் இது நடந்தது? நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்? நீங்கள் ஏன் இதைச் செய்கிறீர்கள்? இந்த கியூ (ஏன்?) என்ற வார்த்தையுடன் நீண்டதொரு வரிசை காணப்படுகிறது. நீங்கள் ஆங்கிலத்தில் ‘Q’ என்பதை எழுதினால், அது கடினமாக இருக்கும். ஆனால் நீங்கள் ‘A’ என்பதை எழுதும்போது அது மிகவும் இலகுவாக இருக்கும். எனவே, இன்று, நீங்கள் இந்தக் கேள்விகளின் வரிசையை முடிக்கும்படி பாப்தாதா விரும்புகிறார். அப்போது, வெளிப்படுத்தல் விரைவாக இடம்பெற வேண்டும், ஒவ்வொருவரின் இதயத்திலும் தந்தையின் அன்பெனும் கொடி ஏற்றப்பட வேண்டும், கொடி ஏற்றப்பட்டு, இதயம் ‘எமது பாபா வந்துவிட்டார், இனிய பாபா வந்துவிட்டார்!’ என்ற பாடலைப் பாட வேண்டும் என்று நீங்கள் அனைவரும் கொண்டிருக்கும் ஆசை நிறைவேறும். இதைத்தானே நீங்கள் விரும்புகிறீர்கள், அல்லவா? வெளிப்படுத்தலுக்கான கொடி விரைவில் அனைவரின் இதயத்திலும் ஏற்றப்பட வேண்டும் என்பது? இது நடக்காமல் இருப்பதற்கான காரணம், ‘க’ என்பதில் தொடங்கும் வார்த்தைகள் ஆகும். ‘கியூ- ஏன்? கியா - என்ன? கெய்ஸே ஹோங்கா - இது எப்படி நடக்கும்?’ அதனால் ‘க’ என்பதில் தொடங்கும் இந்த வார்த்தைகளை முடித்துவிடுங்கள். நீங்கள் ‘க’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்பினால், கமால் - அற்புதம் என்பதைப் பற்றிப் பேசுங்கள். ‘க, க’ என்று கூறாதீர்கள். பாப்தாதா குழந்தைகளின் விடுதிப் பாடசாலையைத் தொடங்கிய போது - அது பாகிஸ்தானிலேயே இருந்தது - ஆரம்பத்தில், அன்னை ஜெகதாம்பா குழந்தைகளுக்கு ‘க, க’ என்ற வார்த்தைகளைப் பேசக்கூடாது என்று சொல்வதுண்டு. ‘க, க’ என்று யார் கூறுவார்கள்? (காகங்கள்) உங்களுக்கு அது விருப்பமா? எனவே, இப்போது, ஏன்? என்ற வரிசையை ஆரம்பிக்காதீர்கள். ஹாஜி! அச்சா ஜி! மிகவும் நல்லது. நாங்கள் அதை ஒன்றாகச் செய்வோம். நாங்கள் பறப்போம். இத்தகைய வார்த்தைகளைப் பேசுங்கள். உங்களின் மொழியை உங்களால் மாற்ற முடியுமா? ‘க, க’ எனச் சொல்லாதீர்கள். இந்த கியூ(வரிசை, ஏன்?) என்பதை விட்டுவிடுங்கள். அந்த வரிசை ஆரம்பமாகும்.

அக் மலர்கள் (எருக்கலம்பூ) சிவனுக்கு மட்டுமே படைக்கப்படுகின்றன. இன்று, நீங்கள் சிவராத்திரியைக் கொண்டாடுகிறீர்கள். நீங்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறீர்கள். அதனால் கோபம் என்ற இந்த அக் மலரை பாப்தாதாவிடம் ஒப்படைத்து விடுங்கள் (அர்ப்பண்). நீங்கள் ஒரு கண்ணாடி (தர்ப்பன்) ஆகுவீர்கள். உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? பிடித்திருக்கிறதா? அச்சா. எனவே, ஹோலிக்காக பாப்தாதா மீண்டும் வரும்போது அவர் பெறுபேற்றைப் பெறுவார். களைப்பு அடையாதீர்கள்: ‘அது நடக்கவில்லை.....’ ‘நான் இதைச் செய்ய வேண்டும்’ என்ற புத்தியில் நம்பிக்கையுடன் அதைச் செய்யுங்கள். நீங்கள் உங்களின் கைகளையும் உயர்த்தினீர்கள். உங்களின் கைகளை உயர்த்துவது என்றால், நீங்கள் அதைத் தந்தையிடம் கொடுத்து விட்டீர்கள் என்று அர்த்தம். நீங்கள் அதைக் கொடுத்து விட்டீர்கள், அல்லவா? உங்களின் கைகளை மீண்டும் உயர்த்துங்கள்! தாதிகளே, நீங்கள் இதைப் பார்க்கிறீர்களா? நீங்கள் கைதட்டலாம். ஒருபோதும் தைரியத்தை இழக்காதீர்கள். அது சிறிதளவேனும் குறைவடையுமாக இருந்தால், எதிர்காலத்தில் தைரியத்தைக் கொண்டிருந்து, ஒருபோதும் நின்று விடாதீர்கள். தொடர்ந்து முன்னேறுங்கள். பாப்தாதா ஒன்றிணைந்து உள்ளார். நீங்கள் இதைக் கூறுகிறீர்கள், அல்லவா? அவர் உங்களுடன் இருக்கிறார் என நீங்கள் சொல்லவில்லை, ஆனால் அவர் ஒன்றிணைந்து இருக்கிறார். எனவே, இத்தகைய வேளையில் ஏதாவது நடந்தால், அப்போது பாப்தாதா ஒன்றிணைந்து இருக்கிறார். அதனால், அதை அவருக்கு முன்னால் வைத்து அதை அவரிடம் ஒப்படையுங்கள். எவ்வாறாயினும், குழந்தைகளான நீங்கள் அனைவரும் முதல் இலக்கத்தவர் ஆகவேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். உங்களுக்கு கொடுக்கப்படும் எதுவும் உங்களிடம் நம்பிக்கைப் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்களின் கைகளை உயர்த்தினீர்கள், அதன் அர்த்தம் என்னவென்றால் நீங்கள் அதைக் கொடுத்து விட்டீர்கள், அதனால் அது இனிமேலும் உங்களுடையது இல்லை என்பதே ஆகும். பெறுமதி மிக்க ஏதோவொன்றே உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, அது உங்களின் எண்ணங்களிலேனும் வருமாக இருந்தால், உங்களுக்கு நம்பிக்கைப் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்ட எதிலும் நேர்மை இல்லாமல் இருக்காதீர்கள். அது மிகவும் பிழையானதாகவே கருதப்படும். நீங்கள் கொடுத்து விட்ட எதையும் உங்களால் மீண்டும் கேட்க முடியாது. ஏனென்றால், அது இனிமேலும் உங்களுடையது இல்லை.

எனவே, இன்று பாப்தாதா எங்கும் இருந்த வண்ணம், இந்தத் திரையின் மூலம் பார்த்துக் கொண்டிருக்கும், அனைத்தையும் சந்தோஷமாகப் பார்ப்பதுடன் அந்த எண்ணத்தையும் கொண்டிருக்கும் குழந்தைகளான உங்கள் அனைவரையும் பார்க்கிறார். ஆகவே, மதுவனமும் நிலையங்கள் அனைத்தும் என்னவாகுவீர்கள்? அவர்கள் என்னவாகுவார்கள்? சகல நிலையங்களுக்கும் இந்த ஆசீர்வாதம் கிடைக்கும்: நீங்கள் தடைகளில் இருந்து விடுபடுவீர்களாக. உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? உங்களுக்கு இது விருப்பமா? துன்பத்தாலும் அமைதி இன்மையாலும் சூழ்நிலைகள் சடுதியாக மாறிவிடும் என்பதை பாப்தாதா அறிவார். நீங்கள் அனைவரும் ஆத்மாக்கள் அனைவரின் மீதும் கருணை கொள்வீர்கள். ஏனென்றால், நீங்கள் அனைவரும் மூதாதையர்கள்: நீங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களும் அத்துடன் மூதாதையர்களும் ஆவீர்கள். மூதாதை ஆத்மாக்களால் எந்தவோர் ஆத்மாவும் துன்பப்படுவதை அல்லது குழப்பத்திற்கு உள்ளாகுவதைக் காணச் சகிக்க முடியாது. யாரிடம் நீங்கள் அன்பும் கருணையும் கொள்கிறீர்களோ, அவர்களின் துன்பத்தைக் காண உங்களால் சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும். எனவே, காலம் உங்களை மாற்றுவதற்கு முன்னர், நீங்கள் உங்களின் முயற்சிகளின் பெறுபேறுகளின் வெகுமதியை அனுபவம் செய்ய வேண்டும் என்றே தந்தை நினைக்கிறார். காலம் உங்களுக்குக் கற்பிப்பதாக இருக்கக்கூடாது. காலம் உங்களின் ஆசிரியர் கிடையாது. ஹோலியின் போது, உங்களில் எவரும் உங்களின் நீண்டதொரு பெறுபேற்றை எழுதக்கூடாது. அவற்றை வாசிப்பதற்கு நேரம் இல்லை. பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார், நீங்கள் எப்படி மிகச் சிறியதொரு ஆசீர்வாத அட்டையைப் பெறுகிறீர்களோ, அதேபோல் அதில் OK என்று மட்டும் எழுதுங்கள். ஓகே என்று மட்டும் எழுதுங்கள். முயற்சி செய்யும்போது, நீங்கள் ஏதாவது தவறு செய்தால், அந்த ஓகே என்பதற்குக் குறுக்கே ஒரு கோடு போடுங்கள். இது இலகுவானது, அல்லவா? அதிகளவில் கடதாசியை வீணாக்காதீர்கள். அது அதிக தடவைகள் நடக்குமாயின், ஒவ்வொரு தடவையும் ஒரு கோட்டைத் தொடர்ந்து சேர்த்துக் கொள்ளுங்கள்: ஒரு தடவை, இரண்டாவது தடவை, மூன்றாவது தடவை. அதை ஹோலிக்கு முன்னர் மதுவனத்திற்கு அனுப்பி வையுங்கள். நீங்கள் அவை அனைத்தையும் ஒன்றாக அனுப்பி வைக்கலாம். ஆசிரியர்கள் அவற்றை அனுப்பி வைக்க வேண்டும். அதன்பின்னர், இதில் யார் முதலாம் இலக்கத்தைப் பெற்றார் என்று பாப்தாதா பெறுபேற்றைப் பெறுவார். பாப்தாதா அதன்பின்னர் உங்களுக்கு இதயபூர்வமாக கோடானுகோடி மடங்கு அன்பைப் பரிசாக வழங்குவார். அச்சா.

இரட்டை வெளிநாட்டவர்களும் இருக்கிறார்கள், அல்லவா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் ஓர் இலக்கத்தைக் கோருவீர்கள், அல்லவா? வெளிநாட்டில் இருப்பவர்கள் ஓர் இலக்கத்தைக் கோருகிறார்களா அல்லது பாரதத்தைச் சேர்ந்தவர்கள் அதைக் கோருகிறார்களா என்று நாங்கள் பார்ப்போம். நல்லது. பாப்தாதா அனைவரையும் நம்பிக்கை உள்ளவர்களாக மட்டும் பார்க்கவில்லை, ஆனால் நீங்கள் அனைவரும் தந்தையின் நம்பிக்கைத் தீபங்களாக நிச்சயமாகத் தந்தையின் நம்பிக்கைகளை நிறைவேற்றுவதைப் பார்க்கவே அவர் விரும்புகிறார். மதுவனம் என்ன செய்யும்? மதுவனத்தைச் சேர்ந்தவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! கீழே, மேலே, மதுவனத்தைச் சேர்ந்த அனைவரும். கைகளை அசையுங்கள்! அச்சா. மதுவனம் ஓர் இலக்கத்தைக் கோருவார்கள். நீங்கள் அதைக் கோர வேண்டும், அப்படித்தானே? அனைவரும் மதுவனத்தை மிக விரைவாகப் பிரதி செய்கிறார்கள். எனவே, இது நல்லது. அச்சா.

எங்கும் உள்ள குழந்தைகளான நீங்கள், ஒன்றிணைந்து இருப்பதுடன் பார்த்தும் கேட்டுக் கொண்டும் இருக்கிறீர்கள். இப்போது அதைக் கேட்காதவர்களும் நிச்சயமாக முரளியினூடாக அதைக் கேட்பார்கள். பாப்தாதா எங்கும் உள்ள இனிமையிலும் இனிமையான, அதியன்பிற்குரிய குழந்தைளுக்கு, அன்பாகவும் தந்தையுடன் ஒத்துழைப்பாகவும் இருப்பவர்களுக்கு கோடானு கோடிமடங்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வழங்குகிறார். இத்துடன் கூடவே, எவ்வளவிற்கு விரைவாக முடியுமோ அவ்வளவிற்கு வெளிப்படுத்தும் கொடியை ஏற்றவேண்டும் என்ற எண்ணத்தையும் பாபா உங்களுக்கு வழங்குகிறார். காலத்தில் தங்கி இருக்காதீர்கள். காலத்தை உங்களின் ஆசிரியர் ஆக்காதீர்கள். ஏனென்றால், தந்தையே உங்களின் தந்தையும் ஆசிரியரும் சற்குருவும் ஆவார். உங்களின் அன்னை ஜெகதாம்பாவைப் போல் இருங்கள் - அவர் இரண்டு விடயங்களுடன் ஓர் இலக்கத்தைக் கோரினார். தந்தை கூறினார், அன்னை ஜெகதாம்பா அதைச் செய்தார். அவர் தீவிர முயற்சி செய்து ஓர் இலக்கத்தைக் கோரினார். நீங்கள் அனைவரும் அதை நம்புகிறீர்கள், அல்லவா? எனவே, அன்னை ஜெகதாம்பாவைப் பின்பற்றுங்கள். அச்சா. அனைவரும், தயவு செய்து அன்பையும் நினைவுகளையும் அத்துடன் இதயபூர்வமான பற்பல ஆசீர்வாதங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள். இத்துடன் கூடவே, குழந்தைகள் அதிபதிகளாக இருப்பதைப் பார்த்து, பாபா உங்களுக்கு நமஸ்தே சொல்கிறார்.

பாப்தாதா சகல பிராந்தியங்களுக்கும் வாரிசுகள், மைக்குகள், ஆதிக்கம் செலுத்தக்கூடிய மைக்குகளின் பெயர்ப் பட்டியலை அனுப்பும்படி கேட்டிருந்தார். அவர்களின் அனுபவங்களைக் கேட்கும்போது, மற்றவர்களும் அதைச் செய்வதற்காகத் தூண்டப்பட முடியும் - எவரையும் திருப்திப்படுத்தக் கூடிய மைக்குகள். பிராந்தியங்கள் அனைத்தும் தமது பட்டியலை அனுப்ப வேண்டும். இன்று, டெல்லி ஒரு பட்டியலை அனுப்பி இருப்பதை பாப்தாதா கண்டார். பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார். சகல பிராந்தியங்களும் இந்தப் பட்டியலை அனுப்பி வைத்தால், எத்தனை வாரிசுகள் தயாராக இருக்கிறார்கள் என்ற பெறுபேற்றை உங்களுக்கு வழங்க முடியும். அது பரிசோதிக்கப்படும். ஒரு பட்டியலை அனுப்பி வைத்தால், அதை நம்ப முடியும் என்பதல்ல. அது இரகசியமாகச் சோதிக்கப்படும். அச்சா. நீங்கள் ஆரம்பத்தில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றீர்கள். இப்போதும், பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் பெயரையம் தனது இதயத்தில் எடுத்து, பல்கோடி மடங்கு பாராட்டுக்களை வழங்குகிறார். தந்தையிடம் சூட்சும வதனத்தில் வந்துள்ள குழந்தைகள் அனைவரின் புகைப்படமும் உள்ளது. பாப்தாதா குழந்தைகளின் பிறந்த நாளைக் கொண்டாடினார். குழந்தைகளும் தந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். இருவருக்கும் பாராட்டுக்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் அனைவரின் மீதும் அன்புடையவராகி, அனைவருக்கும் மரியாதை கொடுப்பதன் மூலம் உங்களின் பதிவேட்டை நல்லதாக வைத்திருப்பீர்களாக.

எந்தளவிற்கு நீங்கள் அனைவருக்கும் மரியாதை கொடுக்கிறீர்களோ, அதற்கேற்ப உங்களின் பதிவேடும் நல்லதாக இருக்கும். மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது என்றால், உங்களுக்காக நல்லதொரு பதிவேட்டை வைத்திருத்தல் என்று அர்த்தம். யக்யத்தின் உதவியாளராக இருத்தல் என்றால் உதவியைப் பெற்றுக் கொள்ளுதல் என்று அர்த்தம். அதேபோல், மதிப்பு அளித்தல் என்றால் மதிப்பைப் பெற்றுக் கொள்ளுதல் என்று அர்த்தம். ஒரு தடவை கொடுத்து, அதைப் பல தடவைகள் பெறுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொள்ளுங்கள். பொதுவாகக் கூறப்படுகிறது: ‘இளையவர்களுக்கு அன்பைக் கொடுங்கள், வயதானவர்களுக்கு மரியாதை கொடுங்கள்’. ஆனால், அனைவரையும் தமது மூத்தவர்களாகக் கருதி அவர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், அனைவராலும் நேசிக்கப்படுவார்கள். இதற்கு, ‘நீங்கள் முதலில்’ என்ற பாடத்தை ஒவ்வொரு சூழ்நிலையிலும் உறுதியாக்கிக் கொள்ளுங்கள்.

சுலோகம்:
நீங்கள் பாப்தாதாவிடம் இருந்து பெற்ற கற்பித்தல்களைச் சரியான நேரத்தில் நினைவு செய்வது என்றால் தீவிர முயற்சி செய்வதாகும்.

அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட, அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

சகலதுறைச் சேவைகளைச் செய்பவர்கள், உங்களின் ஸ்திதி நிலையாகவும் ஸ்திரமாகவும் இருக்கும்போது மட்டுமே எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்பதைக் குறிப்பாகப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்களின் சரீர உணர்வு அல்லது சூத்திரருக்குரிய உங்களின் சொந்த மனதின் கட்டளைகளை ஸ்ரீமத்துடன் கலந்தால், உங்களின் ஸ்திதி பின்னர் நிலையாக அல்லது ஸ்திரமாக இருக்காது. உங்களின் மனம் பல்வேறு விடயங்களை ருசிக்கும்போது, உங்களின் ஸ்திதியும் பல்வகையாக இருக்கும். உங்களின் மனம் எப்போதும் ஓர் இனிமையைச் சுவைக்கும்போது, உங்களின் ஸ்திதியும் நிலையாகவும் ஸ்திரமாகவும் இருக்கும்.