17.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நினைவு செய்வதனாலும் கற்பதனாலும் மாத்திரமே நீங்கள் இரட்டைக் கிரீடத்தைப்; பெறுவீர்கள். ஆகவே, உங்கள் இலக்கையும் இலட்சியத்தையும் உங்கள் முன்னிலையில் வைத்திருந்து தெய்வீகக் குணங்களையும் கிரகித்துக் கொள்ளுங்கள்.

பாடல்:
உலகைப் படைப்பவராகிய, தந்தை எவ்வாறு குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்கிறார்?

பதில்:
1. குழந்தைகளாகிய உங்களுக்கு, உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுத்து உங்களைச் சந்தோஷமாக்குவதே அவரது சேவையாகும். தந்தை செய்வதைப் போன்று எவராலும் தன்னலம் கருதாத சேவையைச் செய்ய முடியாது. 2.) எல்லையற்ற தந்தை ஒரு சிம்மாசனத்தை வாடகைக்கு எடுத்து உங்களை உலக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அதிபதிகளாக ஆக்குகின்றார். அவர் மயில் சிம்மாசனத்தில் அமர்வதில்லை, ஆனால் அவர் குழந்தைகளாகிய உங்களையே மயில் சிம்மாசனத்தில் அமரச் செய்கின்றார். மக்கள் தந்தைக்கு உயிரற்ற ஆலயங்களைக் கட்டுகிறார்கள். அவர் அதிலிருந்து எதனை அனுபவம் செய்வார்? குழந்தைகளே தங்களுடைய சுவர்க்க இராச்சிய பாக்கியத்தைப் பெற்று அந்தச் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு “ஓம் சாந்தி” என்பதன் அர்த்தம் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அமைதியே ஆத்மாகளின் ஆதிதர்மம் என்பதால், தந்தை “ஓம்சாந்தி” என்று கூறுகிறார், குழந்தைகளும் “ஓம்சாந்தி” என்று கூறுகின்றனர். அமைதி தாமத்தில் இருந்தே நீங்கள் இங்கு வருகின்றீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள்;. முதன் முதலில், நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் சென்று, பின்னர், 84 மறுபிறவிகளை எடுக்கையில், நீங்கள் துன்ப தாமத்திற்குள் வந்துள்ளீர்கள். நீங்கள் இதை நினைவுசெய்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் உயிருள்ளவர்களாகி (சரீரதாரிகள்;) 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். தந்தை ஒரு சரீரதாரி ஆகுவதில்லை. அவர் கூறுகின்றார்: நான் இவரின் தற்காலிக ஆதாரத்தை எடுக்கின்றேன். அவர் வேறு எவ்வாறு உங்களுக்குக் கற்பிப்பார்? அவர் எவ்வாறு குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் மீண்டும்; கூறுவார்: “மன்மனபவ! உங்கள் இராச்சியத்தை நினைவுசெய்யுங்கள்”? இதுவே ஒரு வினாடியில் உலக இராச்சியத்தைப் பெறுவது என்று அழைக்கப்படுகின்றது. தந்தை எல்லையற்றவர் என்பதால் அவர் நிச்சயமாக உங்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தையும், ஓர் எல்லையற்ற ஆஸ்தியையும் கொடுப்பார். தந்தை உங்களுக்கு மிகவும் இலகுவானதொரு பாதையைக் காட்டுகின்றார். அவர் கூறுகின்றார்;: இப்பொழுது உங்களுடைய புத்தியிலிருந்து இந்தத் துன்பபூமியை அகற்றுங்கள். ஸ்தாபிக்கப்படுகின்ற புதிய சுவர்க்க உலகின் அதிபதிகள் ஆகுவதற்கு என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பின்னர் நீங்கள் மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகுவீர்கள். இது இலவான நினைவு என்று அழைக்கப்படுகின்றது. அவர்;களுடைய லௌகீகத் தந்தையைக் குழந்தைகள் மிக இலகுவாக நினைவுசெய்வதைப் போன்று, எல்லையற்ற தந்தையைக் குழந்தைகளாகிய நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். தந்தையே உங்களைத் துன்பபூமியில் இருந்து அகற்றி, உங்களைச் சந்தோஷ பூமிக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கு துன்பத்தைப் பற்றிய கேள்வியே கிடையாது. அவர் உங்களுக்கு மிகவும் இலகுவான விடயங்களைக் கூறுகின்றார்: உங்கள் அமைதி தாமத்தை நினைவுசெய்யுங்கள்; தந்தையின் வீடே உங்கள் வீடாகும், அத்துடன், புதிய உலகையும் அதாவது, உங்கள் இராச்சியத்தை நினைவுசெய்யுங்கள். தந்தை சிறிதேனும் சுயநலமின்றிக்; குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்;கின்றார். அவர் குழந்தைகளாகிய உங்களைச் சந்தோஷமானவர்கள் ஆக்கிய பின்னர் சென்று பரந்தாமத்தில் ஓய்வுபெறும் ஸ்திதியில்; அமர்கின்றார். நீங்களும் பரந்தாமவாசிகளே. அது சப்தத்திற்கு அப்பாற்பட்ட தாமமாகிய, நிர்வாணா தாமம் எனவும் அழைக்கப்படுகின்றது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்வதற்கு, அதாவது, உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுப்பதற்கு வருகின்றார். இவரும் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றார். சிவபாபாவே அதிமேலான கடவுள் ஆவார். பல சிவாலயங்கள் உள்ளன. அவருக்கென ஒரு தந்தையோ அல்லது ஓர் ஆசிரியரோ இல்லை. அவர் முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொண்டிருக்கின்றார். அவர் அவற்றை எங்கிருந்து பெற்றார்? அவர் வேதங்களையோ அல்லது சமயநூல்களையோ கற்றாரா? இல்லை. தந்தையே ஞானக்கடலும் சந்தோஷக்கடலும் அமைதிக்கடலும் ஆவார். தந்தையின் புகழுக்கும் தெய்வீகக் குணங்களையுடைய மனிதர்களின் புகழுக்கும் இடையில் ஒரு வித்தியாசம் உள்ளது. நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகித்து அந்தத் தேவர்கள் ஆகுகிறீர்கள். முன்னர், நீங்கள் அசுர குணங்களைக் கொண்டிருந்தீர்கள். தந்தையின் கடமை அசுரர்களைத் தேவர்களாக மாற்றுவதாகும். தந்தையின் பணி மாத்திரமே ஆகும். உங்கள் இலக்கும் இலட்சியமும் உங்கள் முன்னிலையில் உள்ளன. நீங்களும் நிச்சயமாக அத்தகைய மேன்மையான செயல்களைச் செய்திருக்க வேண்டும். செயலினதும், நடுநிலைச் செயலினதும், பாவச்செயலினதும் தத்துவத்தை விளங்கப்படுத்துவதற்கு, அதாவது, அனைத்தையும் விளங்கப்படுத்துவதற்கு ஒரு வினாடியே எடுக்கின்றது. தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் உங்களுடைய பாகங்களை நடிக்க வேண்டும். நீங்கள் அநாதியாகவே அப் பாகங்களைப் பெற்றுள்ளீர்;கள். நீங்கள் இந்த சந்தோஷத்தினதும் துன்பத்தினதும் விளையாட்டைப் பல தடவைகள் புரிந்துள்ளீர்கள். நீங்கள் பல தடவைகள் உலக அதிபதிகள் ஆகியுள்ளீர்கள். தந்தை உங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகிறார். பரமாத்மாவாகிய கடவுள் சின்னஞ் சிறியவர்;. அந்தத் தந்தை ஞானக்கடலும் ஆவார். எனவே, அவர் ஆத்மாக்களாகிய உங்களையும் தனக்குச் சமமானவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் அன்புக்கடல்களாகவும் சந்தோஷக் கடல்களாகவும் ஆகுகின்றீர்கள். தேவர்கள் தங்களுக்கிடையில் பெருமளவு அன்பைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் என்றுமே சண்டையிடுவதில்லை. தந்தை வந்து உங்களைத் தனக்குச் சமமானவர்கள் ஆக்குகின்றார். வேறு எவராலும் உங்களை அவ்வாறு ஆக்க முடியாது. நாடகம் பௌதீக உலகிலேயே இடம்பெறுகின்றது. இந்த மேடையில், அதாவது, முதலில், ஆதி சனாதன தேவி தேவதா தர்மமும், பின்னர் இஸ்லாமியர்களும் பௌத்தர்கள் போன்றவர்களும், இந்த மேடைக்கு வருகின்றார்கள். அதாவது, நீங்கள் வந்து நடிக்கும் இந்த மேடைக்கு வரிசைக்கிரமமாக வருகின்றார்கள். நீங்களே 84 பிறவிகளை எடுப்பவர்கள். பரமாத்மாவிடமிருந்து நீண்டகாலமாக ஆத்மாக்கள் பிரிந்திருந்தார்கள் என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்கள் பாகங்களை நடிப்பதற்காக உலகிற்கு முதலில் நீங்களே வந்தீர்கள். நான் ஒரு குறுகிய காலத்துக்கே இவரில் பிரவேசிக்கின்றேன். இவர் ஒரு பழைய சப்பாத்து ஆவார்.; ஒருவரின் மனைவி மரணிக்கும்பொழுது, அவர் கூறுகின்றார்: ஒரு பழைய சப்பாத்து சென்றுவிட்டது, இப்பொழுது நான் மற்றுமொரு புதியதைப் பெறுவேன். இதுவும் ஒரு பழைய சரீரம் (பிரம்ம பாபாவின்) ஆகும். அவர் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளார். அது உங்களுக்கும் பொருந்தும். எனவே, நான் வந்து இந்த இரதத்தின் ஆதாரத்தைப் பெறுகின்றேன். நான் ஓருபொழுதும் தூய உலகில் பிரவேசிப்பதில்லை. நீங்கள் தூய்மையற்றவர்கள், வந்து உங்களைத் தூய்மையாக்குமாறு நீங்கள் என்னைக் கூவியழைக்கின்றீர்கள். இறுதியில், உங்கள் நினைவு பலனளிக்கும். பழைய உலகம் முடிவடையும் நேரத்திலேயே நான் வருகின்றேன். பிரம்மாவினூடாகவே ஸ்தாபனை மேற்கொள்ளப்படுகின்றது. “பிரம்மாவினூடாக” என்றால் பிராமணர்களினூடாக என்று அர்த்தமாகும். முதலில், உச்சிக்குடுமியாகிய பிராமணர்களும், பின்னர் தேவர்களும், பின்னர் சத்திரியர்களும்… நீங்கள் ஒரு குட்டிக்கரணம் போடுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது சரீர உணர்வைத் துறந்து ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக வேண்டும். நீங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். நான் ஒருமுறையே இந்தச் சரீரத்தைக் கடனாகப் பெறுகின்றேன்; நான் அதை வாடகைக்கு எடுக்கின்றேன். நான் இந்தக் கட்டடத்தின் நிலச் சொந்தக்காரர் அல்ல. நான் இவரை விட்டு நீங்குவேன். அவருக்கு வாடகை கொடுக்கப்பட வேண்டும். தந்தையும் கூறுகின்றார்: நான் இந்தக் கட்டடத்திற்கு வாடகை கொடுக்கின்றேன். அவரே எல்லையற்ற தந்தை, எனவே அவர் வாடகையைக் கொடுக்க வேண்டும். உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகவே அவர் இந்தச் சிம்மாசனத்தை எடுத்துக் கொள்கின்றார். உலக சிம்மாசனத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும் வகையில்;; அவர் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் கூறுகின்றார்: நான் அவ்வாறு ஆகுவதில்லை. அவர் உங்களைச் சிம்மாசனத்தில், அதாவது, மயில் சிம்மாசனத்தில் அமரச் செய்கின்றார். சோமநாதர் ஆலயம் சிவபாபாவின் ஞாபகார்த்தமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் அதிலிருந்து எதை அனுபவம் செய்வேன்? அங்கு அவர்கள் ஓர் உயிரற்ற விக்கிரகத்தை வைக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் சுவர்க்கத்தில் சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். நான் சுவர்க்கத்திற்குச் செல்வதேனும் இல்லை. பின்னர், பக்திமார்க்கம் ஆரம்பமாகும்பொழுது, நீங்கள் பெருமளவு பணத்தை அந்த ஆலயங்கள் போன்றவற்றைக் கட்டுவதில் செலவிடுகின்றீர்கள். ஆனாலும், திருடர்கள் அவற்றைத் திருடுகிறார்கள். உங்களுடைய செல்வம், செழிப்பு அனைத்தும் இராவண இராச்சியத்தில் முடிவடைகின்றது. இப்பொழுது அந்த மயில் சிம்மாசனம் இருக்கின்றதா? தந்தை கூறுகின்றார்: முகமத் குஸ்னாவி வந்து எனக்குக் கட்டப்பட்ட ஆலயத்தைக் கொள்ளையடித்தான். பாரதம் செல்வச் செழிப்பாக இருந்ததைப் போன்று, வேறு எந்தத் தேசமும் இருந்ததில்லை. வேறு எந்தத் தலமும் இதைப் போன்றதொரு யாத்திரைத் தலமாக ஆக முடியாது. எவ்வாறாயினும், இன்று, இந்து சமயத்தில் பல்வேறு யாத்திரைத் தலங்கள் உள்ளன. உண்மையில், யாத்திரைத் தலமானது தந்தை அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்கின்ற இடமாக இருக்க வேண்டும். இதுவும் ஏற்கெனவே நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது புரிந்துகொள்வதற்கு மிகவும் இலகுவானது, ஆனால் ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவதனால், நீங்கள் அதை வரிசைக்கிரமமாகப் புரிந்துகொள்கின்றீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனுமே சுவர்க்கத்தின் அதிபதிகள். அவர்களே அதிமேன்மையான மனிதர்கள், அவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். தெய்வீகக் குணங்கள் உடையவர்களே, தேவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். உயர்ந்த தேவதர்மத்திற்கு உரியவர்களாக இருந்தவர்கள், இல்லறப் பாதைக்குரியவர்களாக இருந்தார்கள். அந்நேரத்தில், உங்களுடைய இல்லறப் பாதையே இருந்தது. தந்தை உங்களை இரட்டைக் கிரீடமுடையவர்களாக ஆக்கினார். இராவணன் உங்களுடைய கிரீடங்கள் இரண்டையும் அகற்றி விட்டான். இப்பொழுது எந்தக் கிரீடமும் இல்லை. செல்வத்தின் கிரீடமோ, தூய்மையின் கிரீடமோ இல்லை. இராவணன் உங்களுடைய இரண்டு கிரீடங்களையும் அகற்றி விட்டான். தந்தை வந்து நினைவுசெய்வதினூடாகவும் கல்வியினூடாகவும் உங்களுடைய கிரீடங்கள் இரண்டையும் மீண்டும் ஒருமுறை கொடுக்கின்றார். இதனாலேயே நினைவுசெய்யப்படுகின்றது: ஓ தந்தையாகிய கடவுளே, எங்களுடைய வழிகாட்டியாகி எங்களை விடுதலை செய்யுங்கள்! இதனாலேயே நீங்கள் வழிகாட்டிகள் என்று அழைக்கப்படுகின்றீர்கள். பாண்டவர்களும் கௌரவர்களும் யாதவர்களும் என்ன செய்கின்றார்கள்? அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, எங்களைத் துன்ப இராச்சியத்திலிருந்து விடுவித்து, எங்களை உங்களுடன் திரும்ப அழைத்துச் செல்லுங்கள். தந்தை மாத்திரமே சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்ற, சத்திய பூமியை ஸ்தாபிக்கின்றார். பின்னர் இராவணன், அதைப் பொய்யான பூமியாக ஆக்குகிறான். அவர்கள் கூறுகின்றார்கள்: கடவுள் கிருஷ்ணர் பேசுகின்றார். தந்தை கூறுகின்றார்: கடவுள் சிவன் பேசுகின்றார். பாரத மக்கள் பெயரை மாற்றியதால் முழு உலகமும் அப்பெயரை மாற்றியது. கிருஷ்ணர் ஒரு சரீரதாரி;. சிவபாபா மாத்திரமே சரீரமற்றவர்;. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து சக்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் முழு உலகினதும் அதிபதிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் ஆகாயம், பூமி முழுவதையும் பெறுகின்றீர்கள். கல்பத்தின் முக்காற் பங்கிற்கு அதை உங்களிடமிருந்து அபகரிப்பதற்கான சக்தியை வேறு எவரும் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களின் சனத்தொகை விரிவடைந்து மில்லியன்களை அடையும்பொழுது, அவர்கள் தங்களுடைய இராணுவத்தைக் கொண்டு வந்து உங்களை வெற்றி கொள்கின்றார்கள். குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை பெருமளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். அவர் துன்பத்தை அகற்றி சந்தோஷத்தை அருள்பவராகப் புகழப்படுகின்றார். தற்சமயம், தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்குச் செயலினதும், நடுநிலைச் செயலினதும் பாவச் செயலினதும் தத்துவத்தை விளங்கப்படுத்துகின்றார். இராவண இராச்சியத்தில் செயல்கள் பாவச்செயல்கள் ஆகுகின்றன. சத்தியயுகத்தில், செயல்கள் நடுநிலையான செயல்கள் ஆகுகின்றன. கணவர்கள் அனைவருக்கும் கணவர் என்று அழைக்கப்படுகின்ற, ஒரே சற்குருவை நீங்கள் இப்பொழுது கண்டுகொண்டுள்ளீர்கள், ஏனெனில் அக்கணவர்கள் அனைவருமே அந்த ஒரேயொருவரை நினைவுசெய்கின்றார்கள். எனவே, தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இது அத்தகைய ஓர் அற்புதமான நாடகம்! அத்தகைய ஒரு சின்னஞ் சிறிய ஆத்மாவில் ஓர் அழிவற்ற பாகம் பதிவுசெய்யப்பட்டுள்ளது, அது ஒருபொழுதும் அழிக்கப்பட மாட்டாது. இது அநாதியான, அழிவற்ற நாடகம் என்று அழைக்கப்படுகின்றது. கடவுள் ஒருவரே ஆவார். படைப்பு, அதாவது, சக்கரமும் ஏணியும், அனைத்தும் ஒன்றேயாகும். படைப்பவரையோ அல்லது படைப்பையோ எவருக்கும் தெரியாது. ரிஷிகளும் முனிவர்களும் கூறுகின்றார்கள்: எங்களுக்குத் தெரியாது. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள், உங்களுடைய யுத்தம் மாயையுடனே ஆகும். அவள் உங்களைத் தனியே விட்டுவிடுவதில்லை. குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா, நான் மாயையினால் அறையப்பட்டேன். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் சம்பாதித்துள்ள அனைத்தையும்; இழந்து விட்டீர்கள். கடவுள் உங்களுக்குக் கற்பிப்பதால், நீங்கள் நன்றாகக் கற்க வேண்டும். 5000 வருடங்களின் பின்னரே நீங்கள் அத்தகையதோர் கல்வியை மீண்டும் பெறுவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இத் துன்ப பூமியிலிருந்து உங்கள் புத்தியின் யோகத்தை அகற்றிப் புதிய உலகை ஸ்தாபிப்பவராகிய தந்தையை நினைவுசெய்யுங்கள். சதோபிரதான் ஆகுங்கள்.

2. தந்தையைப் போன்று, அன்புக் கடலாகவும், அமைதிக் கடலாகவும் சந்தோஷக் கடலாகவும் ஆகுங்கள். செயலினதும், நடுநிலைச் செயலினதும் பாவச் செயலினதும் தத்துவத்தைப் புரிந்துகொண்டு, சதா மேன்மையான செயல்களைப் புரியுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் மனதில் சந்தோஷப் பாடல்களை பாடுவதன் மூலம் அநாதியான சந்தோஷ பாக்கியத்தையும் சதா ஆர்வத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பீர்களாக.

பாக்கியசாலி குழந்தைகளாகிய நீங்கள் அhதியான வழிமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் அழிவற்ற சந்தோஷத்தை கோருகிறீர்கள். உங்கள் மனங்கள் சதா ~~ஆஹா! ஆஹா! ஆஹா பாபா! ஆஹா பாக்கியமே! ஆஹா இனிய குடும்பமே! ஆஹா அதி மேன்மையான அழகான நேரமான சங்கமயுகமே!|| என்ற பாடல்களைப் பாடுகின்றன. ஒவ்வொரு செயலும் ~~ஆஹா! ஆஹா!|| (அற்புதமே) என்பதாலேயே, நீங்கள் அநாதியான சந்தோஷ பாக்கியத்தை கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மனதில் எப்பொழுதுமே ~~ஏன்?|| அல்லது ~~நான்|| என்பதை கொண்டிருக்க முடியாது. ~~ஏன்?|| என்பதற்குப் பதிலாக, நீங்கள் ~~ஆஹா! ஆஹா!|| என்றும் ~~நான்|| என்பதற்குப் பதிலாக ~~பாபா, பாபா|| என்றும் கூறுகின்றீர்கள்

சுலோகம்:
நீங்கள் கொண்டிருக்கின்ற எண்ணங்களின் மீது அழிவற்ற அரசாங்க முத்திரையை இட்டால் அவை உறுதியாக நிலைத்திருக்கும்.


மாதேஸ்வரியின் இனிய மேன்மையான வாசகங்கள்.

உங்கள் வாழ்க்கையின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்கின்ற அற்புதமான நேரம்

ஆத்மாக்களாகிய நாங்கள் நிலையான சந்தோஷத்தையும், அமைதியையும் எங்கள் வாழ்க்கையில் கொண்டிருப்போம் என்ற நம்பிக்கையை நீண்டகாலமாகக் கொண்டிருந்தோம். ஆம், நாம் நீண்டகாலமாக கொண்டிருந்த எங்கள் நம்பிக்கையானது ஒரு குறித்த நேரத்தில் நிறைவேற்றப்படும். இப்பொழுது இது எங்கள் இறுதிப் பிறவியும், இதுவே அந்த இறுதிப் பிறவியின் இறுதியும் ஆகும். எவருமே சிந்திக்கக்கூடாது: நான் இளைமையானவர்: இளையவரோ முதியவரோ - அனைவருக்கும் சந்தோஷம் தேவையாகும். ஆனால் அனைத்திற்கும் முதலில், துன்பத்திற்கு காரணம் என்னவென்ற ஞானத்தை நாங்கள் கொண்டிருக்க வேண்டும். ஜந்து விகாரங்களில் அகப்பட்டுக் கொண்டதனால் உருவாக்கப்பட்ட கர்ம பந்தனத்தை, கடவுளை நினைவு செய்வதன் மூலம் எரித்துவிட வேண்டும் என்ற ஞானத்தை நீங்கள் இப்பொழுது பெற்றுள்ளீர்கள். இதுவே கர்ம பந்தனத்தில் இருந்து விடுபடுவதற்கு இலகுவான வழியாகும். நடக்கும்போதும், உலாவித்திரியும் போதும் ஒவ்வொரு மூச்சிலும் சர்வ சக்திவான் பாபாவை நினைவு செய்யுங்கள். கடவுளே வந்து இவ் வழிமுறையை காட்டுவதற்காக, இதனை முன்னெடுக்கின்றார். ஆனால் ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கென முயற்சி செய்யவேண்டும். கடவுள் தந்தையாகவும், ஆசிரியராகவும், குருவாகவும் வந்து எங்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கின்றார். எனவே, நாங்கள் முதலில் தந்தைக்கு உரியவராகி, அதன் பின்னர் ஆசிரியரிடம் கற்கின்றோம். அதனூடாகவே எதிர்காலத்தில், பிறவி பிறவியாக சந்தோஷம் என்ற வெகுமதி உருவாக்கப்படுகின்றது. அதாவது நாங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப ஜீவன்முக்திக்கான அந்தஸ்தை நாங்கள் பெற்றுக் கொள்வோம். குருவின் வடிவில், எங்களைத் தூய்மையாக்கி முக்தியை அருளுகின்றார். எனவே நாங்கள் இந்த இரகசியத்தைப் புரிந்துகொண்டு அத்தகைய முயற்சியைச் செய்ய வேண்டும். இதுவே பழைய கணக்கை முடித்து ஒரு புதிய வாழ்கையை உருவாக்குவதற்கான நேரமாகும். இந்நேரத்தில் எங்களுடைய ஆத்மாக்களைத் தூய்மையாக்குவதற்கு நாங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப ஒரு தூய்மையான பதிவு இடம்பெறுகின்றது. அதுவே முழுச்சக்கரத்திற்கும் தொடரப் போகின்றது. எனவே இந்நேரத்தில் நாங்கள் சம்பாதிக்கும் வருமானத்திலேயே முழுச் சக்கரத்திற்குமான அனைத்தும் தங்கியுள்ளது. பாருங்கள், இந்நேரத்திலேயே நீங்கள் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைப் பெறுகின்றீர்கள்: நாங்கள் தேவர்கள் ஆக வேண்டும். இது எங்கள் ஏறும் ஸ்திதியாகும். பின்னர் நாங்கள் அங்கு சென்று எங்கள் வெகுமதியை அனுபவம் செய்வோம். அங்கே, தேவர்கள் பின்னர் என்ன நிகழும் என்பதையும், தாம் கீழிறங்குவோம் என்பதையும் அறியமாட்டார்கள். தாம் சந்தோஷத்தை அனுபவம் செய்து பின்னர் வீழ்ச்சியடைகின்றோம் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்;களாயின், தமது வீழ்ச்சியை பற்றி அவர்கள் கவலைப்படுவதனால், தமது சந்தோஷத்தையும் அவர்களால் அனுபவம் செய்ய முடியாது போய்விடும். எனவே மக்கள் ஏற்றத்திற்கான முயற்சியில் எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும் என்ற இறை சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது, அதாவது தமது சந்தோஷத்திற்காக அவர்கள் எப்பொழுதும் உழைக்கின்றார்கள். எவ்வாறாயினும், நாடகத்தின் பாகம் அரை அரைவாசி என்ற இந்த இரகசியத்தை நாங்கள் அறிவோம். எவ்வாறாயினும், சந்தோஷத்திற்கான நேரம் இருக்கும்பொழுது நாங்கள் முயற்சி செய்து அந்தச் சந்தோஷத்தைப் பெறவேண்டும். இதுவே முயற்சியின் சிறப்பியல்பு ஆகும். தங்கள் பாகத்தை நடிக்கும் நேரத்தில் உச்சளவு சிறப்புயல்புகளுடன் நடிக்க வேண்டியதே நடிகர்களின் கடமையாகும் அப்பொழுது அதனைப் பார்ப்பதற்காக அங்கே வருபவர்கள் அவர்களைப் புகழ்வார்கள். இதனாலேயே தேவர்கள் கதாநாயக, கதாநாயகி பாகங்களைப் பெற்றுள்ளார்கள். அவர்களின் ஞாபகார்த்தங்கள் நினைவுகூரப்படுவதுடன் வழிபாடும் செய்யப்படுகின்றன. விகாரமற்ற இல்லறப்பாதையில் இருந்து தாமரையைப் போன்ற ஸ்திதியை உருவாக்குவது தேவர்களின் சிறப்பியல்பாகும். இந்தச் சிறப்பியல்பை மறந்ததனாலேயே, பாரதம் இந்த அபாக்கிய நிலையை அடைந்துள்ளது. இப்பொழுது கடவுளே அத்தகைய ஒரு வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை உருவாக்குவதற்கு வந்துள்ளார். அவருடைய கரத்தைப் பற்றிக் கொள்வதனால் உங்கள் வாழ்க்கைப் படகு அக்கரை சேரும்.