17.07.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, சரீரத்தைப் பார்க்காது ஆத்மாவையே பாருங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, ஆத்மாவுடனேயே பேசுங்கள். நீங்கள் இந்த ஸ்திதியை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். இதுவே உங்கள் உயர்ந்த இலக்காகும்.
பாடல்:
குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுது தந்தையுடன் மேலே (வீட்டிற்கு) செல்வீர்கள்?பதில்:
தூய்மையின்மையின் சுவடு சற்றேனும் இல்லாதபோதாகும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைப் போன்று தூய்மையாகினால் மாத்திரமே உங்களால் மேலே செல்ல முடியும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தனிப்பட்ட முறையில் தந்தையின் முன்னிலையில் இருக்கின்றீர்கள். நீங்கள் தொடர்ந்தும் ஞானக்கடலிடம் செவிமடுத்து, ஞானம் நிறைந்தவர்கள் ஆகி ஞானத்தின் தந்தையை வெறுமையாக்கும் பொழுது அவர் மௌனித்து விடுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அமைதி தாமத்திற்குச் செல்கின்றீர்கள். அங்கே ஞானம் வெளிப்படுவது நின்றுவிடும். அவர் உங்களுக்கு அனைத்தையும் கொடுத்த பின்னர், அவரது பாகம் மௌனம் ஆகுகின்றது.ஓம் சாந்தி.
கடவுள் சிவன் பேசுகின்றார். நீங்கள் “கடவுள் சிவன் பேசுகின்றார்” என்று கூறும்போது, சிவன் மாத்திரமே கடவுளும், பரமதந்தையும்; என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள், அதாவது குழந்தைகளாகிய நீங்கள் அவரை மாத்திரமே நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் இந்த அறிமுகத்தை, படைப்பவராகிய தந்தையிடமிருந்து பெற்றிருக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் முயற்சிக்கேற்ப அவரை வரிசைக்கிரமமாகவே நினைவு செய்கின்றீர்கள் என்பது நிச்சயமாகும். அனைவரும் அவரைச் சதா நினைவு செய்வார்கள் என்றில்லை. இவை மிகவும் சூட்சுமமான விடயங்களாகும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, மற்றவர்களையும் ஆத்மாக்களாகக் கருதும் ஸ்திதியை உறுதியாக்கிக் கொள்வதற்குக் காலமெடுக்கும். அந்த மக்களுக்கு எதுவுமே தெரியாது. அவரை அறியாததனால் அவர்கள் அவரை சர்வவியாபகர் என அழைக்கின்றார்கள். நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்வதைப் போன்று அவர்கள் எவருமே தந்தையை நினைவு செய்யமாட்டார்கள். அந்த ஆத்மாக்கள் எவரது யோகமும் தந்தையுடன் இணைக்கப்படுவதில்லை. இவை மிக ஆழமானதும், சூட்சுமமானதுமான விடயங்களாகும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். தாங்கள் சகோதரர்கள் என அவர்கள் கூறுகின்றனர். அப்படியாயின், அவர்கள் சரீரத்தையன்றி ஆத்மாவையே பார்க்க வேண்டும். இலக்கு மிக உயர்வானது. தந்தையை என்றுமே நினைவு செய்யாத பலர் உள்ளனர். ஆத்மா அழுக்கினால் மூடப்பட்டுள்ளார். பிரதானமானது ஆத்மாவே ஆகும். ஆத்மாவே சதோபிரதானாக இருந்து, இப்பொழுது தமோபிரதானாகிவிட்டார். ஆத்மாவில் இந்த ஞானம் உள்ளது. பரமாத்மா மாத்திரமே ஞானக்கடலாவார். நீங்கள் உங்களை ஞானக்கடல் என அழைக்க முடியாது. நீங்கள் பாபாவிடமிருந்து முழு ஞானத்தையும் பெற வேண்டும் என்பதை அறிவீர்கள். அவர் அதனைத் தனக்குள் வைத்திருந்து என்ன செய்வார்? அவர் அழிவற்ற செல்வமாகிய ஞான இரத்தினங்களைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கவே வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகவே இந்த ஞானத்தைக் கிரகித்துக் கொள்கின்றீர்கள். அதிக ஞானத்தைக் கிரகித்துக் கொள்பவர்களால் சிறந்த சேவை செய்ய முடியும். பாபா ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றார். அவர் ஓர் ஆத்மா, நீங்களும் ஆத்மாக்களே. ஆத்மாக்களாகிய நீங்கள் முழு ஞானத்தையும் அவரிடமிருந்தே பெறுகின்றீர்கள். அவர் என்றும் தூய்மையானவராக இருப்பதைப் போன்று நீங்களும் என்றும் தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். பின்னர், தூய்மையின்மையின் சுவடு சிறிதளவேனும் இல்லாதபோது, நீங்கள் மேலே செல்வீர்கள். தந்தை நினைவு யாத்திரைக்கான வழிமுறையை உங்களுக்குக் கற்பிக்கின்றார். உங்களால் நாள் முழுவதும் நினைவில் இருக்க முடியாதிருப்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை தனிப்பட்ட முறையில் இங்கு அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஏனைய குழந்தைகள் அவரிடம் தனிப்பட்ட முறையில் செவிமடுப்பதில்லை. அவர்கள் முரளியை வாசிக்கின்றார்கள், ஆனால் குழந்தைகளாகிய நீங்களோ அவர் முன்னிலையில் இங்கு நேரடியாக அமர்ந்திருக்கின்றீர்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்வதுடன், ஞானத்தையும் கிரகியுங்கள். நாங்கள் தந்தையைப் போன்று ஞானம் நிறைந்த கடல்கள் ஆக வேண்டும். நீங்கள் முழு ஞர்னத்தையும் புரிந்துகொண்டதும், தந்தையிடம் இருக்கும் ஞானம் அனைத்தையும் நீங்கள் வெறுமையாக்கிவிடுவதைப் போல் ஆகின்றது. அதன் பின்னர் அவர் மௌனமாகிவிடுகின்றார். அங்கு அவரிடமிருந்து ஞானம் வெளிவரமாட்டாது. அவர் அனைத்தையும் உங்களுக்கு வழங்கிவிட்டால், மௌனமாக இருக்கும் பாகம் மாத்திரமே எஞ்சியிருக்கும். உதாரணமாக, நீங்கள் மௌனமாக இருக்கும்போது, உங்களிடமிருந்து ஞானம் வெளிவருவதில்லை. ஓர் ஆத்மா சம்ஸ்காரங்களைத் தன்னுடன் எடுத்துச் செல்கின்றார் என்பதையும் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். ஒரு சந்நியாசி ஆத்மாவினால் குழந்தைப் பருவத்திலிருந்தே சமய நூல்களைக் கற்று மனப்பாடம் செய்யக்கூடியதாக உள்ளது. பின்னர், அவரது பெயர் போற்றப்படுகின்றது. நீங்கள் புதிய உலகிற்குச் செல்வதற்காகவே இப்பொழுது இங்கு வந்திருக்கின்றீர்கள். உங்களால் ஞான சம்ஸ்காரங்களைப் புதிய உலகிற்கு எடுத்துச் செல்ல முடியாது. இந்த சம்ஸ்காரங்கள் அமிழ்ந்துவிடுகின்றன. ஆத்மாக்களாகிய நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகவே உங்களது ஆசனத்தைக் கோரிக்கொள்கின்றீர்கள். உங்கள் சரீரத்திற்கே ஒரு பெயர் வழங்கப்படுகின்றது. சிவபாபா அசரீரியானவர். அவர் கூறுகின்றார்: நான் இந்த அங்கங்களைக் கடனாக எடுக்கின்றேன். அவர் ஞானத்தைப் பேசுவதற்காகவே இங்கு வருகின்றார். அவரே ஞானக்கடல் என்பதால், வேறு எவரது ஞானத்தையும் அவர் செவிமடுப்பதில்லை. அவர் பிரதான பணியை வாய் மூலமாகவே மேற்கொள்கின்றார். அவர் அனைவருக்கும் பாதையைக் காட்டுவதற்காக வருகின்றார். எனவே, மற்றவர்கள் கூறுவதைச் செவிமடுத்து அவர் என்ன செய்வார்? இன்ன இன்னதைச் செய்யுங்கள் என அவர் தொடர்ந்தும் சதா உங்களுக்குக் கூறுகின்றார். அவர் முழு விருட்சத்தினதும் இரகசியங்களை உங்களுக்குக் கூறுகின்றார். புதிய உலகம் (சனத்தொகை) மிகவும் சிறிதாகவே இருக்கும் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. இப்பழைய உலகம் மிகவும் பெரியதாகும். இவ்வுலகில் அதிகளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகின்றது. அவர்கள் மின்சாரத்தைக் கொண்டு என்ன செய்கின்றார்கள் எனப் பாருங்கள். அங்கு உலகம் மிகச் சிறிதாகவே இருக்கும், மிகச் சிறிதளவு மின்சாரமே பயன்படுத்தப்படும். அது ஒரு சிறிய கிராமத்தைப் போன்று இருக்கும். இப்பொழுது, பெரிய நகரங்கள் பல உள்ளன. அங்கு அந்தளவு இருக்கமாட்டாது. சில சிறந்த பிரதான வீதிகள் மாத்திரமே இருக்கும். பஞ்ச தத்துவங்களும் அங்கு சதோபிரதானாகவே உள்ளன. அவை ஒருபோதும் எந்தக் குழப்பத்தையும் விளைவிக்காது. அது சந்தோஷ பூமி எனப்படுகின்றது. அதன் பெயர் சுவர்க்கம் ஆகும். நீங்கள் மேலும் முன்னேறி அண்மித்து வரும்போது, அதிகளவு விரிவாக்கம் ஏற்பட்டிருக்கும். தந்தை தொடர்ந்தும் உங்களுக்குக் காட்சிகளை வழங்குவார். பின்னர், அந்நேரத்தில் யுத்தத்திற்கென படைகள், விமானங்கள் போன்ற எதுவுமே தேவைப்படாது. தங்களால் ஓரிடத்திலிருந்தவாறே அனைவரையும் அழித்துவிட முடியும் என அவர்கள் கூறுகின்றனர். அந்த விமானங்கள் போன்றவற்றால் எப்பயனும் இல்லை. அவர்கள் சந்திரனிலுள்ள நிலப்பகுதிகள் போன்றவற்றைப் பார்ப்பதற்கும் செல்லமாட்டார்கள். அவையனைத்தும் விஞ்ஞானத்தின் பயனற்ற அகங்காரமேயாகும். அவர்கள் அதிகளவு பகட்டைக் கொண்டிருக்கின்றார்கள். ஞானத்தில் அதிகளவு மௌனம் இருக்கின்றது. இது இறை பரிசு எனப்படுகின்றது. விஞ்ஞானத்தில் குழப்பத்தைத் தவிர வேறு எதுவும் கிடையாது. அவர்களுக்கு அமைதி பற்றி எதுவுமே தெரியாது. சந்தோஷ பூமியாக இருந்த புதிய உலகில் அமைதி நிலவியதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இப்பொழுது துன்பமும், அமைதியின்மையுமே நிலவுகின்றது. நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: ஒருபோதுமே அமைதியின்மை ஏற்படாத அத்தகைய அமைதி வேண்டுமாயின், அது சாந்திதாமத்திலும், சந்தோஷ தாமத்திலும் மாத்திரமேயாகும். அனைவரும் சுவர்க்கத்தை விரும்புகின்றார்கள். பாரத மக்கள் மாத்திரமே வைகுந்தத்தையும், சுவர்க்கத்தையும் நினைவு செய்கின்றார்கள். வேறு சமயங்களைச் சேர்ந்த எவருமே வைகுந்தத்தை நினைவு செய்வதில்லை. அவர்கள் அமைதியைப் பற்றியே நினைக்கின்றார்கள். அவர்களால் சந்தோஷத்தைப் பற்றி நினைக்க முடியாது, ஏனெனில் சட்டம் அதற்கு அனுமதிக்காது. நீங்கள் மாத்திரமே சந்தோஷத்தை நினைவு செய்கின்றீர்கள். இதனாலேயே நீங்கள் கூவியழைக்கின்றீர்கள்: எங்களைத் துன்பத்திலிருந்து விடுவியுங்கள். ஆத்மாக்கள் உண்மையில் சாந்திதாம வாசிகள். எவருக்கும் இது தெரியாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் விவேகமற்றவர்களாக இருந்தீhகள். எப்பொழுது நீங்கள் விவேகமற்றவர்களாக ஆகினீர்கள்? உங்கள் கலைகள் 16 இலிருந்து 14 ஆகி, பின்னர் 12 ஆகியது. அதாவது, நீங்கள் தொடர்ந்தும் விவேகமற்றவர்களாகினீர்கள். இப்பொழுது உங்களிடம் கலைகள் எதுவும் இல்லை. பெண்கள் ஏன் சந்தோஷமற்றிருக்கின்றார்கள் என்பது பற்றி அவர்கள் தொடர்ந்தும் மாநாடுகளை நடாத்துகின்றார்கள். ஆ! ஆனால் முழு உலகிலும் துன்பமே நிலவுகின்றது, அளவற்ற துன்பம் காணப்படுகின்றது. இப்பொழுது உலகில் எவ்வாறு அமைதி நிலவ முடியும்? இப்பொழுது பல சமயங்கள் உள்ளன. முழு உலகிலும் இப்பொழுது அமைதி நிலவ முடியாது. அவர்களுக்கு சந்தோஷத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. இந்த உலகில் பலவிதமான துன்பமும், அமைதியின்மையும் உள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்துகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் சாந்;திதாமத்திலிருந்தே வந்தோம். ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் சந்தோஷ தாமத்திலே இருந்தது. நீங்கள் ஆதி சனாதன இந்து தர்மம் என அதனைக் கூறமாட்டீர்கள். ஆதி என்றால் ‘புராதன’ என்பதாகும். அது சத்திய யுகமாகும். அந்நேரத்தில் அனைவரும் தூய்மையாக இருந்தார்கள். அது விகாரமற்ற உலகமாக இருந்தது. அங்கு விகாரம் என்ற கேள்வியே இல்லை. வேறுபாடு உள்ளது. முதலில், நீங்கள் விகாரமற்றவர்கள் ஆகவேண்டும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, காமத்தை வெற்றி கொள்ளுங்கள்! உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள்! ஆத்மாக்களில் கலப்படம் கலக்கப்பட்டு, இப்பொழுது தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டனர். இதனாலேயே ஆபரணங்களும் அவ்வாறே தயாரிக்கப்படுகின்றன. ஓர் ஆத்மா தூய்மையாக உள்ளபோது, ஆபரணங்களும் தூய்மையாகவே உள்ளன. அது விகாரமற்ற உலகம் எனப்படுகின்றது. நீங்கள் ஆலமரத்தின் உதாரணத்தையும் கொடுக்கலாம். முழு விருட்சமும் நிற்கின்றது, ஆனால் அடிமரம் (அத்திவாரம்) இல்லை. இந்த ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இப்பொழுது இல்லை. ஆனால் ஏனைய சமயங்கள் அனைத்தும் உள்ளன. அனைவரும் தூய்மையற்றவர்கள். இவர்கள் மனிதர்கள் எனப்படுகின்றனர், ஆனால் அவர்களோ தேவர்களாவர். நான் மனிதர்களை தேவர்களாக்குவதற்காகவே வந்துள்ளேன். மனிதர்களே 84 பிறவிகளை எடுக்கின்றனர். நீங்கள் அவர்களுக்கு ஏணிப்படத்தைக் காட்ட வேண்டும். நீங்கள் தமோபிரதானாகும்போது இந்துக்கள் என அழைக்கப்படுவதை அது காட்டுகின்றது. நீங்கள் தூய்மையற்றிருப்பதால் உங்களை தேவர்கள் என அழைக்க முடியாது. இது நாடகத்தின் இரகசியமாகும். இந்து சமயம் என ஒன்று இல்லை. நாங்கள் ஆதி சனாதன தேவர்களாக இருந்தோம். தூய்மையாக இருந்த பாரதம் இப்பொழுது தூய்மையற்றதாகிவிட்டது. எனவே, அவர்கள் தங்களை இந்துக்கள் என அழைக்கின்றனர். இந்து சமயத்தை எவருமே ஸ்தாபிக்கவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இதனை மிக நன்றாகக் கிரகித்து, விளங்கப்படுத்த வேண்டும். தற்காலத்தில் அவர்கள் உங்களுக்கு அதிக நேரம் வழங்கமாட்டார்கள். அவர்கள் குறைந்தபட்சம் அரை மணித்தியாலம் கொடுப்பார்களாயின், சில கருத்துக்களை அவர்களுக்கு எடுத்துரைக்க முடியும். பல கருத்துக்கள் உள்ளன, எனினும், அவற்றுள் பிரதானமானவையே அவர்களுக்குக் கூறப்படுகின்றன. நீங்கள் கல்வியில் முன்னேறிச் செல்லும்போது, அதன் பின்னர் அல்பா, பீற்றா போன்ற இலகுவான பாடங்களை நினைவுசெய்ய மாட்டீர்கள். நீங்கள் அவற்றை மறந்துவிடுகின்றீர்கள். உங்கள் ஞானம் இப்பொழுது மாறிவிட்டது என மக்களும் உங்களிடம் கூறுவார்கள். ஆ! ஆனால் நீங்கள் உங்கள் கல்வியில் முன்னேறிச் செல்லும்போது, முன்னர் கற்றவை அனைத்தையும் மறந்துவிடுவீர்கள். தந்தை தினமும் புதிய விடயங்களை உங்களுக்குக் கூறுகின்றார். முதலில், கல்வி மிக இலகுவாக இருந்தது. தந்தை இப்பொழுது ஆழமான விடயங்களை உங்களுக்குக் கூறுகின்றார். அவர் ஞானக்கடலாவார். அனைத்தையும் பேசிவிட்டு அவர் கூறுகின்றார்: நீங்கள் அல்பா, பீற்றா எனும் இரு வார்த்தைகளையும் புரிந்துகொண்டால் அதுவே போதும். அல்பாவை அறிந்துகொள்வதால் நீங்கள் பீற்றாவையும் அறிந்துகொள்வீர்கள். இந்தளவிற்கு விளங்கப்படுத்தினால் அதுவே போதும். ஞானத்தை அதிகளவில் கிரகிக்க முடியாதவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறமுடியாது. அவர்களால் திறமைச் சித்தியெய்தவோ அல்லது தங்களது கர்மாதீத ஸ்திதியை அடையவோ முடியாது. இதற்கு அதிகளவு முயற்சி தேவைப்படுகின்றது. நினைவு செய்வதற்கும், ஞானத்தைக் கிரகிப்பதற்கும் முயற்சி தேவையாகும். நீங்கள் அனைவரும் இரண்டிலும் திறமைசாலிகளாகுவது சாத்தியமன்று. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. எவ்வாறு அனைவரும் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக முடியும்? இதுவே இந்த கீதை பாடசாலையின் இலக்கும் குறிக்கோளும் ஆகும். இது கீதையின் அதே ஞானமாகும். உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பவர் யார் என்பதை உங்களைத் தவிர வேறு எவருமே அறியமாட்டார்கள். இப்பொழுது இது மயானமாகும். பின்னர் இது தேவதைகளின் பூமியாகும். இப்பொழுது நீங்கள் ஞானச் சிதையில் அமர்ந்திருந்து, பூஜிப்பவர்களிலிருந்து பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகவேண்டும். விஞ்ஞானிகள் மிகவும் திறமைசாலிகள் ஆகுகின்றனர். அவர்கள் தொடர்ந்தும் பல புதிய விடயங்களைக் கண்டுபிடிக்கின்றனர். பாரத மக்கள் அங்கு அனைத்துக் கலைகளையும் (திறமைகள்) கற்றுவிட்டுத் திரும்பி வருகின்றனர். அவர்கள் (விஞ்ஞானிகள்) இறுதியில் இங்கு வரும்போது அந்தளவு ஞானத்தை எடுக்கமாட்டார்கள். பின்னர், அவர்கள் அங்கு சென்று (சத்தியயுகம்) தங்களது பொறியியல் அறிவு போன்றவற்றைப் பிரயோகிப்பார்கள். அவர்களால் அரசர்களாகவோ, அரசிகளாகவோ ஆகமுடியாது. எனினும், அவர்கள் அரசர்களுக்கும், அரசிகளுக்கும் சேவை செய்வார்கள். அவர்கள் தொடர்ந்தும் அத்தகைய விடயங்களைக் கண்டுபிடிப்பார்கள். அரசர்களும், அரசிகளும் சந்தோஷத்தைக் கொடுப்பார்கள். அங்கு நீங்கள் சகலவிதமான சந்தோஷத்தையும் பெறுவீர்கள். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் முழு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் முழுமையாகச் சித்தியடைந்து உங்கள் கர்மாதீத நிலையை அடைய வேண்டும். வீட்டிற்கு விரைவாகச் செல்லும் எண்ணம் எதனையும் நீங்கள் கொண்டிருக்கக் கூடாது. இப்பொழுது நீங்கள் கடவுளின் குழந்தைகள். தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். பௌத்தர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பணிகள் இருப்பது போன்று, இதுவும் மனிதர்களை மாற்றுகின்ற ஒரு பணியேயாகும். கிருஷ்ணா, கிறிஸ்தவர்கள் என்ற பெயர்கள் ஒரே மாதிரியான உச்சரிப்பைக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கிடையில் ஆழமான கொடுக்கல் வாங்கல் தொடர்பு உள்ளது. உங்களுக்கு உதவி செய்யும் ஒருவரது மொழியை உபயோகிக்காதிருப்பதும் ஓர் அவதூறேயாகும். அவர்கள் பின்னரே வருகின்றனர். அவர்கள் அதிகளவு சந்தோஷத்தையும் கொண்டிருக்கவில்லை, அதிகளவு துன்பத்தையும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சகல கண்டுபிடிப்புக்களையும் மேற்கொள்கின்றனர். அவர்கள் பொருட்களை இங்கு உருவாக்க முயற்சி செய்தாலும், எவராலுமே அவற்றை மிகச் சரியாக உருவாக்க முடியாது. வெளிநாட்டுப் பொருட்கள் சிறந்தவை. ஏனெனில் அவர்கள் அவற்றை நேர்மையுடன் செய்கின்றனர். இங்கு, அவர்கள் அனைத்தையும் நேர்மையின்றியே செய்கின்றனா. எல்லையற்ற துன்பம் உள்ளது. தந்தையைத் தவிர எந்தவொரு மனிதராலும் அனைவரது துன்பத்தையும் அகற்ற முடியாது. அவர்கள் உலக அமைதிக்காக எத்தனை மாநாடுகளை வைத்தாலும், தொடர்ந்தும் தடுமாறுகின்றார்கள். தாய்மாரால் அனுபவிக்கப்படும் துன்பத்தைப் பற்றிய கேள்வி மட்டுமல்ல, பலவிதமான துன்பங்கள் உள்ளன. உலகம் முழுவதும் சண்டை சச்சரவுகள் இடம்பெறுகின்றன. காரணமின்றி, அற்ப விடயங்களுக்கெல்லாம் அவர்கள் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள். அங்கே துன்பத்தைப் பற்றிய கேள்விக்கே இடமில்லை. இதை நீங்கள் கணக்கிட வேண்டும். எந்நேரத்திலும் யுத்தம் ஆரம்பமாகலாம். இராவணன் முதலில் பாரதத்திற்கு வந்தபோது, வீடுகளிலேயே முதலில் சண்டை ஆரம்பமாகியது. அவர்கள் தங்கள் மத்தியில் சண்டையிட்டு, பிரிந்துவிடுகின்றனர். பின்னர் வெளிநாட்டவர்களும் அதில் தலையிடுகின்றனர். ஆரம்பத்தில் பிரித்தானியர்கள் இங்கு இருக்கவில்லை. பின்னர், அவர்கள் இடைநடுவில் வந்து இலஞ்சம் கொடுத்து இராச்சியத்தைக் கைப்பற்றினர். பகலுக்கும், இரவுக்குமான வேறுபாடு உள்ளது. புதியவர் ஒருவரால் எதனையும் புரிந்துகொள்ள முடியாது. புதிய ஞானமாகிய இது பின்னர் மறைந்துவிடும். தந்தை உங்களுக்குக் கொடுக்கும் ஞானமும் பின்னர் மறைந்துவிடும். இந்த ஒரு கல்வியை நீங்கள் ஒரேயொரு தந்தையிடம் இருந்து ஒரு தடவை மாத்திரமே பெறுகின்றீர்கள்.. நீங்கள் முன்னேறிச் செல்லும்போது, என்னவாக ஆகுவீர்கள் என்பது பற்றிய காட்சிகளைப் பெறுவீர்கள். எவ்வாறாயினும், உங்களால் அந்நேரத்தில் என்ன செய்ய முடியும்? உங்களால் முன்னேற முடியாது. பெறுபேறு அறிவிக்கப்பட்டதும் பின்னர் இடமாற்றம் செய்யப்படுவதே எஞ்சியிருக்கும். அப்பொழுது அழுகையும், புலம்பலும் இருக்கும். நாங்கள் புதிய உலகிற்கு மாற்றப்படுவோம். நீங்கள் நாலா திசைகளிலும் ஒலி விரைவாகப் பரப்பப்படுவதற்காக முயற்சி செய்கின்றீர்கள். பின்னர், மக்கள் தாங்களாகவே நிலையங்களை நோக்கி ஓடோடி வருவார்கள். எவ்வாறாயினும், அவர்கள் எந்தளவிற்குத் தாமதமாக வருகின்றார்களோ, அந்தளவிற்கு “மிகவும் தாமதம்” ஆகிவிடும். பின்னர், அவர்களால் எதையும் சேகரித்துக்கொள்ள முடியாதிருக்கும். உங்களுக்குப் பணம் தேவையில்லை. நீங்கள் அணிந்திருக்கும் பட்ஜ் மக்களுக்கு விளங்கப்படுத்தப் போதுமானது. இந்த பிரம்மா விஷ்ணுவாகிறார், விஷ்ணு பிரம்மாவாகின்றார். இந்த பட்ஜ் அனைத்துச் சமயநூல்களினதும் சாராம்சத்தைக் கொண்டுள்ளது. பாபா பட்ஜை அதிகளவு போற்றுகின்றார். அனைவரும் இந்த பட்ஜை தங்களது கண்களிலே ஒற்றிக் கொள்ளும் நாளும் வரும். மன்மனாபவ – என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் இவ்வாறு ஆகுவீர்கள் என்பதையும் இது கொண்டுள்ளது. பின்னர், நீங்கள் 84 பிறவிகள் எடுப்பீர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே மறுபிறவிகள் எடுப்பதில்லை. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நினைவு செய்வதற்கு முயற்சி செய்வதன் மூலமும், ஞானத்தைக் கிரகிப்பதன் மூலமும்; உங்கள் கர்மாதீத ஸ்திதியை நீங்கள் அடைய வேண்டும். ஞானக்கடலின் முழு ஞானத்தையும் உங்களுக்குள் கிரகியுங்கள்.2. ஆத்மாவில் கலந்துள்ள கலப்படத்தை அகற்றி, முற்றிலும் விகாரமற்றவர்கள் ஆகுங்கள். தூய்மையின்மையின் சுவடு சிறிதளவேனும் இல்லாதிருக்கட்டும். “ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள்” என்பதைப் பயிற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
உங்களுடைய பொக்கிஷங்களான நேரத்திலும் எண்ணங்களிலும் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் சேமிப்பு கணக்கை அதிகரித்து கோடானு கோடீஸ்வரர் ஆகுவீர்களாக.உண்மையில், உங்களிடம் பல பொக்கிஷங்கள் உள்ளன, ஆனால் உங்கள் பொக்கிஷங்களான நேரத்திலும் எண்ணங்களிலும் நீங்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும். உங்கள் எண்ணங்களை ஒவ்வொரு கணமும் மேன்மையாகவும் தூய்மையாகவும் ஆக்கினால் உங்கள் சேமிப்பு கணக்கு தொடர்ந்தும் அதிகரிக்கும். இந்த நேரத்தில், நீங்கள் ஒன்றை சேமித்தால், பலமில்லியன் மடங்கைப் பெறுகிறீர்கள். இதுவே கணக்காகும். இது ஒன்றிற்கு பலமில்லியன் மடங்கு பிரதிபலனை கொடுக்கின்ற வங்கியாகும். ஆகையால், என்ன நடந்தாலும் நீங்கள் எதனையேனும் துறக்க நேர்ந்தாலும், நீங்கள் தபஸ்யா செய்ய வேண்டியிருந்தாலும், நீங்கள் பணிவாக இருக்க வேண்டி ஏற்பட்டாலும், என்ன நடந்தாலும், நீங்கள் இந்த இரண்டு விடயங்களிலும் கவனம் செலுத்தினால் நீங்கள் கோடானு கோடீஸ்வரர்கள் ஆகுவீர்கள்.
சுலோகம்:
உங்கள் மனதின் சக்தியினால் நீங்கள் சேவை செய்தால் பன்மடங்கு அதிகளவு வெகுமதியை பெறுவீர்கள்.