17.07.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இப்பாரத தேசமே அசரீரித் தந்தையின் பிறப்பிடமாகும். உங்கள் இராச்சியத்தை உங்களுக்குக் கொடுப்பதற்கும், உங்களுக்கு சேவை செய்வதற்காகவுமே தந்தை இங்கே வந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார்.
கேள்வி:
சிவபாபா தனது ஒவ்வொரு குழந்தையிடமும் கேட்கும் சத்தியம் எது?பதில்:
இனிய குழந்தைகளே, எந்தப்பாவச் செயலையும் செய்ய மாட்டோம் என பாபாவிற்குச் சத்தியம் செய்யுங்கள். நீங்கள் ஐந்து விகாரங்களையும் தானம் செய்கின்றீர்கள். நீங்கள் தானம் செய்த எதனையும் நீங்கள் மீண்டும் எடுத்துக் கொண்டால், நீங்கள் அதிகளவு பாவத்தைச் சேமிக்க நேரிடும் என்பதுடன் அதற்கான தண்டனையும் மிகவும் கடுமையானது என்ற அக்கறை உங்களுக்குள் இருக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே அரிச்சந்திர மன்னனின் கதை கொடுக்கப்பட்டுள்ளது.ஓம் சாந்தி.
இது குழந்தைகளாகிய உங்களது இறை மாணவ வாழ்க்கையாகும். நீங்கள் அவரிடம் வந்துள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். அவர் ஒவ்வொரு கல்பத்திலும் பாரதக் குழந்தைகளாகிய உங்களுக்கு உங்கள் பாக்கியமான இராச்சியத்தைக் கொடுப்பதற்காக வருகின்றார். அவர் பாரதத்திற்கு மாத்திரமே வருகின்றார். இது பாரத தேசமாகும். ஒருவர் தமது தேசத்தின் மீது அதிகளவு அன்பும் மரியாதையும் வைத்திருக்கின்றார். வெளிநாட்டைச் சேர்ந்த பிரபல்யமான ஒருவர் இங்கே மரணிக்கும்போது, அவரை மீண்டும் தாய்நாட்டிற்கு எடுத்துச் செல்கின்றார்கள். இங்குள்ள பிரபல்யமான ஒருவர் வெளிநாட்டில் மரணித்தால் அவரது சரீரம் இங்கு எடுத்து வரப்படுகின்றது. ஒருவரின் சொந்த நாட்டிற்கு அந்தளவிற்கு மரியாதைக் கொடுக்கப்படுகின்றது. பாரதம் கடவுளின் பிறப்பிடம் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் பரமாத்மாவான கடவுள், அல்லா என்றெல்லாம் அழைத்தவரின் முன்னிலையில் இப்பொழுது அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். நிச்சயமாக ஒரு பெயர் கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் அல்லா என்று கூறிய போதிலும் அவர்கள் ஒரு நீள்கோள வடிவத்தையே வழிபடுகின்றார்கள். அவர்கள் ஈஸ்வர், குதா என்பவர்களைப் பற்றிப் பேசியபொழுதிலும் அவருடைய அடையாளங்கள் இருக்க வேண்டும். எங்குமுள்ள மக்கள் நீள்கோள வடிவத்தை வழிபடுகிறார்கள். தேவர்களின் படங்களில் அவர்களின் முன்னால் பரமாத்மா பரமதந்தையின் வடிவமென ஒரு நீள்கோள வடிவத்தை இடுகின்றார்கள். அவரே அதிமேலானவர். அவருக்கென ஒரு சரீரம் இல்லாததாலேயே அவர் அசரீரித் தந்தை என அழைக்கப்படுகின்றார். அவர் சரீரதாரி அல்ல. இப்பொழுது, அவரின் கற்பித்தல்களைப் பெறுவதற்காக ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் அவரின் முன்னிலையில் பிரசன்னம் ஆகுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். கடவுளின் வாசகங்கள் இருப்பதால், அவர் நிச்சயமாக இராஜயோகத்தைக் கற்பித்திருக்க வேண்டும். இராஜயோகம் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டதால், அவர்கள் பின்னர் அரசர்கள் அரசிகள் ஆகுகின்றார்கள். இதில் யுத்தம் போன்ற கேள்விக்கே இடமில்லை. இலக்ஷ்மியும் நாராயணனும் யுத்தம் புரிந்து இராச்சியத்தைப் பெறவில்லை. இல்லவே இல்லை! அவர்கள் தமது இராச்சியமான சத்தியயுகத்தை எவ்வாறு பெற்றார்கள் என்பதை உலக மக்கள் சற்றேனும் அறியாதுள்ளார்கள். நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து இராச்சியத்தைப் பெறுவதற்காக அவரின் நேர் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர் பாபாவே அன்றி ஸ்ரீகிருஷ்ணர் அல்ல. ஸ்ரீகிருஷ்ணர் ஒரு சிறுவன் ஆவார். அவர் படைப்பு ஆவார். ஸ்ரீகிருஷ்ணர் இப்பொழுதே உண்மையில் தனது அந்தஸ்தைப் பெறுகின்றார் என்பதாலேயே அவர் எதிர்காலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் என்று அழைக்கப்படுகின்றார். இவை அனைத்திற்கும் கல்வியே அடிப்படையாகும். மனிதர்கள் பிற மனிதர்களுக்குக் கற்பித்து அவர்களைச் சட்டநிபுணர்களாகவோ அல்லது பொறியியலாளர்களாகவோ ஆக்குவதைப் போன்றே உங்களுக்கு பாபா இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். அவர்கள் மனிதர்கள். நீங்களும் மனிதர்களே எனினும் நீங்கள் தூய்மை அற்றவர்கள் என்பதை நீங்கள் புரிந்திருக்கின்றீர்கள். தந்தை இப்பொழுது உங்களைத் தூய்மை ஆக்குவதுடன் உங்கள் ஆஸ்தியையும் உங்களுக்குக் கொடுக்கின்றார். புதிய உலகமே தூய உலகமாகும். புதிய உலகில் ஓர் இராச்சியம் உள்ளது. நீங்கள் இப்பொழுது தந்தையின் நேர் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். ஒரு லௌகீகத் தந்தை தனது குழந்தைகளின் முன்னிலையில் அமர்ந்திருந்து, அன்புடன் விளங்கப்படுத்துவதைப் போன்றே, இங்கும், இவ் உலகிற்கு அப்பாலுள்ள தனித்துவமான தந்தையை நோக்கியே நீங்கள் பாடினீர்கள்: நீங்களே தாயும் நீங்களே தந்தையும். பக்தி மார்க்கத்தில் நாங்கள் நினைவுசெய்த அவரே இந்த நேரத்தில் தனது பாகத்தை நடிக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். நீங்கள் சிவபாபாவிடம் வந்திருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் கூறுகின்றீர்கள். நீங்கள் ஒரு கடிதம் எழுதும்போதும், 'சிவபாபா மேற்பார்த்து பிரம்மா" என்றே குறிப்பிடுகின்றீர்கள். இந்தத் தபாலை நீங்கள் பிறரிடம் காட்டினால் அவர்கள் வியப்படைவார்கள். அவர்கள் என்றுமே ‘சிவபாபா மேற்பார்த்து பிரம்மா’ என்று கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்! சிவபாபா பிரம்மாவினுள் பிரவேசித்து, விஷ்ணுதாமத்தை ஸ்தாபிக்கின்றார். அவர் முன்னால் நிற்கின்றார், சிவபாபா மேலே இருக்கின்றார். சிவபாபா பிரம்மாவினூடாக ஸ்தாபனையை நிகழ்த்தினார், அதனை மீண்டும் ஒருமுறை செய்கின்றார். இது இல்லறப் பாதையாகும். உயர் கல்வியில் சட்டம் கற்பிக்கப்படும்போது, ஆண்கள், பெண்கள் இருசாராரும் கற்பார்கள். பெண்களும் நீதிபதிகள், சட்டநிபுணர்கள், வைத்தியர்கள் போன்றோர் ஆகுகின்றார்கள். இது இல்லறப்பாதை ஆகும். சந்நியாசிகளுடையது துறவறப்பாதை ஆகும். அது வேறுபட்டது. சங்கராச்சாரியார் இல்லாதிருந்தால் பாரதத்தில் தூய்மையின் சுவடு எதுவுமே எஞ்சியிருக்க மாட்டாது என்று பாபா விளங்கப்படுத்தி உள்ளார். பாரதம் முற்றாக எரிந்திருக்கும். ஆகையால், அது பாரதத்தின் ஆதாரத்திற்காக நிச்சயிக்கப்பட்டதாகும். பாரதம் மிகவும் தூய்மையாக இருந்தது, பின்னர் தூய்மையற்றதாக ஆகியது. பாரதம் இப்பொழுது ஏழ்மை நிலையை அடைந்துள்ளது! பொன் இலங்கை கடலில் மூழ்கியது என மக்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் பொன் இலங்கை இருக்க முடியாது. அவர்கள் வெறுமனே கதைகள் எழுதியுள்ளார்கள், அவற்றினால் எப்பிரயோசனமும் இல்லை. முற்றிலும் இலகுவான இந்த நினைவுச் சக்தியின் மூலம் பாபா உங்களை மிகவும் மேன்மையானவர் ஆக்குகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கின்றீர்கள். சதா நினைவில் நிலைத்திருக்க நீங்கள் முயற்சி செய்தால், உங்கள் பாவங்கள் அழியும் எனத் தந்தை சத்தியம் செய்கின்றார். பக்தி மார்க்கத்திலும் நீங்கள் நினைவில் நிலைத்திருக்க முயற்சி செய்தீர்கள். அவர்கள் ஏன் கடவுளை நினைவு செய்கின்றார்கள்? அப்பொழுது காட்சிகள் காணலாம் என்பதற்காகவே ஆகும். கடவுளை நினைவு செய்வதனால் கிருஷ்ணதாமத்தில் தாம் ஒரு இராச்சியத்தைப் பெறுவோம் என்றோ அல்லது தாம் சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆகுவோம் என்றோ நினைப்பதில்லை. இல்லை. நீங்களும் ஒரு மனிதரில் இருந்து நாராயணன் ஆகுவீர்கள்; என நினைத்திருக்கவில்லை. மனிதர்களைத் தெய்வமாக ஆக்குவதற்கு கடவுளுக்கு நீண்ட காலம் எடுக்கவில்லை என்று நினைவுகூரப்பட்டுள்ளது. கலியுகத்தின் பின்னர் உண்மையில் சத்தியயுகம் இருப்பதை உங்களால் காண முடியும். இந்தக் கலியுகத்தில் பல மக்கள் உள்ளனர்! சத்தியயுகத்தில் ஒரேயொரு தர்மம் மாத்திரமே இருக்கும். நீங்கள் இப்பொழுது ஆத்மாவினதும் பரமாத்மாவினதும் இந்த ஞானத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். ஆத்மாவின் இந்த ஞானத்தை அறிந்த ஓர் ஆத்மாவேனும் இவ்வுலகில் இல்லை. ஆத்மாவில் எவ்வாறு 84 பிறவிகளின் பாகம் பதியப்பட்டுள்ளது என்பது எவருக்குமே தெரியாது. நீங்கள் இவ்வார்த்தைகளை வேறு எவரிடமிருந்தும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தந்தையே ஞானக்கடலும் தூய்மையாக்குபவரும் அசரீரியானவரும் ஆவார். நீங்கள் இப்பொழுது தூய்மையற்ற ஆத்மாக்களில் இருந்து புண்ணியாத்மாக்கள் ஆகுகின்றீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகத்தில் அனைவருமே புண்ணியாத்மாக்கள் ஆவார்கள். இங்கே அனைவருமே பாவாத்மாக்கள். அதிகளவு தான தர்மங்கள் செய்தவர்களே புண்ணியாத்மாக்கள் என்றில்லை. இல்லை! புண்ணியாத்மாக்கள் சத்தியயுகத்தில் மாத்திரமே இருக்கின்றார்கள். தர்மம் செய்பவர்களே புண்ணியாத்மாக்கள் என்று இங்குள்ளவர்கள் நினைக்கின்றார்கள். அங்கே, நீங்கள் தான தர்மங்கள் எதனையும் செய்ய வேண்டியதில்லை. அங்குள்ள எவரும் ஏழைகளாக இருப்பதில்லை. அங்கே நீங்கள் சதா புண்ணியாத்மாக்களாகவே இருப்பீர்கள். உங்கள் மனம், புத்தி, செல்வம் அனைத்தையும் எல்லையற்ற தந்தையிடம் நீங்கள் அர்ப்பணிக்கின்றீர்கள். இதுவே உங்களை அர்ப்பணித்தல் என்று அர்த்தம். தந்தை வினவுகின்றார்: முதலில் அர்ப்பணிப்பது நானா அல்லது நீங்களா? பாபா கூறுகின்றார்: முதலில் நீங்களே அர்ப்பணித்தாலே அதற்கான பலனை உங்களால் 21 பிறவிகளுக்குப் பெற முடியும். இப்பொழுது இவ்விடயங்களை நீங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்கின்றீர்கள், ஏனெனில் அவற்றை நேரடியாகவே செவிமடுக்கின்றீர்கள். நீங்கள் வீட்டில் வாழ்ந்தபோது, முரளியை நீங்கள் வீட்டில் பெற்றுக் கொண்டீர்கள் என்பதால் அதனை நீங்கள் தொலைவிலேயே செவிமடுக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையின் நேர்முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நான் உங்கள் தந்தை ஆவேன். இங்கே எவ்விதமான குருட்டு நம்பிக்கையும் கிடையாது. அவரே தந்தையும், அவரே ஆசிரியரும் ஆவார். நீங்கள் தந்தைக்கு உரியவராக இருக்கும்போது, அவர் உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். உங்கள் புத்திகளில் இப்பொழுது இந்த ஞானம் முழுவதும் உள்ளது. 84 பிறவிச்சக்கரம் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. 84 பிறவிகள் எடுக்காதவர்களால் இதனைப் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் உண்மையிலேயே 84 பிறவிச் சக்கரத்தை சுற்றி வந்துள்ளீர்கள் என்பதையும், இப்பொழுது வீடு திரும்புகின்றீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரமற்று வந்தீர்கள், வீட்டுக்குச் சரீரமற்றே திரும்பிச் செல்லவும் வேண்டும். நீங்கள் தூய்மையான ஆத்மாக்கள் ஆகிய பின்னரே திரும்பிச் செல்கின்றீர்கள். நீங்கள் தூய்மை ஆகுவதற்கே முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் யோக சக்தியின் மூலம், அதாவது, நினைவுச் சக்தியின் மூலம் தூய்மை ஆகுவீர்கள். ‘யோகம்’ என்ற வார்த்தை சமயநூல்களில் இருந்து எடுக்கப்பட்டது. நினைவு என்பதே சரியான வார்த்தை ஆகும். ஒரு மனைவி தனது கணவனை நினைவு செய்கின்றாள். ஒரு கணவன் தனது மனைவியை நினைவு செய்கின்றார். யோகம் என்றால் நினைவு செய்தல் என்று அர்த்தம் ஆகும். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவுசெய்து, ஏனைய அனைவரிடத்தில் இருந்தும் உங்கள் புத்தியின் யோகத்தைத் துண்டித்துக் கொண்டு அதனை உங்கள் தந்தையான என்னுடன் இணைத்துக் கொள்ளுங்கள். என்னை நினைவு செய்யுங்கள்! நீங்கள் எந்தளவுக்கு என்னை நினைவு செய்கின்றீர்களோ அந்தளவிற்கு அதிகளவில் உங்கள் பாவங்கள் அழியும். உண்மையில், பாரதம் ஒவ்வொரு கல்பத்திலும் ஆஸ்தியைப் பெறுகின்றது. சிவனின் பிறந்தநாள் மிகவும் பிரபல்யமானது. இதுவும் கிறிஸ்துவின் பிறந்தநாள், புத்தரின் பிறந்தநாள் போன்றதே. அவ்வாறே அசரீரியான சிவனின் பிறந்தநாளும் உள்ளது. ஆகையாலேயே அவர் அதிமேலானவர் ஆவார். கிருஷ்ணரின் பிறந்தநாளும் பிரபல்யமானதாகும். ஆனால் அவர் இங்கே வரும்போது அவர் என்ன செய்கின்றார் என்பது எவருக்கும் தெரியாது. ஸ்ரீகிருஷ்ணர் சத்தியயுகத்தின் இளவரசர் ஆவார். அவர் சத்தியயுகத்தின் இளவரசராகும் வகையில் அவருக்கு அத்தகைய செயல்களைச் செய்வதற்கு நிச்சயமாக அவருக்கு எவரேனும் கற்பித்திருக்க வேண்டும். எவ்வாறாயினும் சிறு குழந்தை ஒருவர் தூய்மையாகவே இருப்பார். அங்கே விகாரம் என்ற கேள்விக்கு இடமில்லை. குழந்தைகள் எவ்வாறாயினும் தூய்மையானவர்களே. கடவுள் மாத்திரமே அசரீரியானவர். கடவுள் ஒருவரே! ஏனைய அனைவரும் அவரின் படைப்புகள் ஆவார்கள். ஒரு படைப்பிடம் இருந்து ஒரு படைப்பினால் ஆஸ்தியைப் பெற முடியாது. தந்தையிடம் இருந்து மாத்திரமே ஆஸ்தியைப் பெற முடியும். ஒரு சகோதரிடம் இருந்து ஒரு சகோதரரால் ஆஸ்தியைப் பெற முடியாது. நீங்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவீர்கள். அவர்கள் சகோதரத்துவம் பற்றிப் பேசுகின்றார்கள். ஒரேயொரு தந்தையே உள்ளார் அவரிடமிருந்தே ஆஸ்தி பெறப்படுகின்றது. சகோதரர்கள் அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஒரேயொரு தந்தை மாத்திரமே ஆவார். ஆத்மாக்கள் அனைவருமே தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியை பெறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் வந்து ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பித்து, ஆத்மாக்கள் அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றேன். தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். இக்கல்வியின் மூலம் நீங்கள் இங்கே ஓர் அந்தஸ்தைப் பெற முடியாது. அவர்கள் இப்பிறவியிலேயே சட்டநிபுணர் போன்றோர் ஆகுகின்றார்கள். பின்னர், அடுத்த பிறவியில், அவர்கள் மீண்டும் கற்பார்கள். இக்கல்வியின் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கு வெகுமதியைப் பெறுகின்றீர்கள் என்பதை அறிந்துள்ளீர்கள். சத்தியயுகத்தில் வைத்தியர்கள் போன்றோர் இருப்பதில்லை. அங்கே சுகயீனம் இருக்க மாட்டாது. அங்கே, நீங்கள் கருப்பை என்ற மாளிகையில் இருப்பீர்கள். இங்கே, கருப்பை என்ற சிறையிலேயே இருக்கின்றீர்கள். அதில் இருக்கும் பொழுது நீங்கள் அதிகளவு தண்டனையை அனுபவம் செய்கின்றீர்கள். ஆகையாலேயே ஆத்மாக்கள் அழைக்கின்றார்கள்: இந்தச் சிறையிலிருந்து என்னை விடுவியுங்கள். மீண்டும் எந்தத் தவறையும் செய்ய மாட்டேன்! இவ்வாறு மக்கள் தர்மராஜிடம் சத்தியம் செய்கின்றார்கள். இங்கே, நீங்கள் சிவபாபாவிடம் சத்தியம் செய்ய வேண்டும்: பாபா, நான் மீண்டும் விகாரத்தில் ஈடுபடவே மாட்டேன். நான் ஐந்து விகாரங்களையும் உங்களிடம் கொடுக்கின்றேன். விகாரங்களை அவ்வளவு இலகுவாக துறந்துவிட முடியாது என்பது தந்தைக்குத் தெரியும். நீங்கள் தானம் செய்த விகாரங்களை நீங்கள் மீண்டும் எடுத்தால், அதிகளவு பாவங்கள் சேமிக்கப்படும் என்ற அக்கறை உங்களுக்குள் இருக்க வேண்டும். அரிச்சந்திர மன்னனின் கதை உதாரணமாக உள்ளது. விகாரங்களை இலகுவில் உடனடியாக துறந்து விட முடியாது என்பது தந்தைக்குத் தெரியும். இல்லை, அதற்குக் காலம் எடுக்கும். உங்கள் கர்மாதீத ஸ்திதியை நீங்கள் அடையும்போது யுத்தம் ஆரம்பமாகும். இந்த ஐந்து விகாரங்கள் உங்கள் கொடிய எதிரிகள் ஆகும். அதிலும், சரீர உணர்வே பிரதானமானது. அதனைத் துறப்பது மிகவும் கடினமாகும். தந்தை மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி உங்கள் தந்தையான என்னை நினைவு செய்யுங்கள். எவ்வாறாயினும், இது நிகழ்வதில்லை. உங்களுக்குள் சரீர உணர்வு வரும் போது, நீங்கள் காமம் என்ற விகாரத்தினால் தடுத்து நிறுத்தப்படுகின்றீர்கள். சரீர உணர்வே அனைத்திலும் அதிகளவு பலம் வாய்ந்தது. ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்கு முயற்சி தேவை. சரீர உணர்வுடையவர் ஆகுவதனாலேயே பாவம் அதிகரிக்கின்றது. ஐந்து விகாரங்கள் தானம் செய்யப்பட வேண்டும், இதற்கே காலம் எடுக்கின்றது. மணவாளன் செல்வதற்கு முன்னர் மணவாட்டிகளால் செல்ல முடியாது. முதலில், மணவாளன் செல்ல வேண்டும், பின்னர் மணவாட்டிகள் அவரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். மணவாளன் ஆத்மாக்கள் அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வர வேண்டும். உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும்வரை முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் சரீர உணர்வு அடையும் போதே தவறுகள் செய்யப்படுகின்றன. சிலர் கூறுகின்றார்கள்: பாபா, நான் சரீர உணர்வு அடைந்ததால், விகாரத்தில் விழுந்து விட்டேன். பல புயல்கள் வீசும். விகார எண்ணங்கள் ஏற்படலாம். ஆனால் உங்கள் பௌதீகப் புலன்களினால் நீங்கள் எப்பாவத்தையும் செய்யக் கூடாது. மாயையை வெற்றி கொள்ள அதிகளவு முயற்சி செய்யப்பட வேண்டும்! தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஏற்கனவே திருமணம் செய்திருந்தால், தூய்மையாக இருந்து காட்டுங்கள். அப்பொழுது சந்நியாசிகளும் தூய்மையாக இருப்பது சாத்தியமே என்பதை பார்க்கட்டும். நீங்கள் ஈட்டும் வருமானம் எத்தனை மகத்துவமானது என்று பாருங்கள்! நீங்கள் தூய்மைக்கு எடுத்துக்காட்டாக இருந்தால், நீங்கள் மிகவும் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். அவர்கள் அனைவருமே உங்களிடம் தம்மை அர்ப்பணிப்பார்கள். பாபாவும் உங்களைப் புகழ்கின்றார். நீங்கள் தூய்மையாக இருப்பதுடன் யோகமும் தேவையாகும். யோகத்திற்கே சதா தடைகள் ஏற்படுகின்றன. சரீர உணர்வு ஏற்படுகின்றது. நீங்கள் தூய்மையாக இருப்பது நல்லதே. தூய்மையாக இருப்பதனால் மாத்திரமே தூய உலகிற்கான ஆஸ்தியைப் பெற முடியும். எவ்வாறாயினும், மாயையும் தனது பலத்தைக் காட்டுவாள். மாயை உங்களை மிகவும் பலமாகத் தாக்குகின்றாள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அவை அனைத்தும் இடம்பெறும். நீங்கள் அந்தத் தைரியத்தை காட்டுகிறீர்கள். ஆனால் அத்துடன், சதா நினைவும் இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களின் பாவங்கள் அழியும். மிகவும் சக்திவாய்ந்தவர்கள் ஆகுபவர்களை மாயை அதிகளவு தொந்தரவு செய்கின்றாள். சிலரால் அரிதாகவே நினைவு செய்ய முடிகின்றது. நினைவு செய்வதில் நிலைத்திருக்கக் கூடியவர்களிடம் அவர்களின் அனுபவங்களை நீங்கள் கேட்டறிய வேண்டும். ‘நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? உங்களுக்கு இது எவ்வாறு சாத்தியமாக உள்ளது?’ நினைவு செய்வதனால் உங்கள் பாவங்கள் அழியும். இது மிகவும் புதிய தனித்துவமான விடயமாகும். இங்கே அமர்ந்திருக்கும்போது நீங்கள் போதை கொண்டிருக்கின்றீர்கள். ஸ்ரீகிருஷ்ணர் அன்றி கடவுளே அசரீரியானவர் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். சமயநூல்களில் அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி, அதாவது, அவர் எவ்வாறு மரத்தில் கட்டி வைக்கப்பட்டார், அவர் அதைச் செய்தார், இதைச் செய்தார் என்று கதைகள் எழுதியுள்ளார்கள். உண்மையில், அவ்விடயங்கள் எதுவும் உண்மையானவை அல்ல. அவர்கள் அவரை இகழ்ந்து அவருக்கு அபகீர்த்தி ஏற்படுத்துகின்றார்கள். ஸ்ரீகிருஷ்ணரிடம் எக்குறைபாடுகளும் இருக்கவில்லை. அவ்வாறாக விஷமம் செய்வதும் ஒரு குறைபாடே ஆகும். ஸ்ரீகிருஷ்ணர் மேலான கோட்பாடுகளைப் பின்பற்றிய மேலானவர் ஆவார். அவரின் புகழ் பாடப்பட்டுள்ளது: சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்…. அவர்கள் பாடுகின்றார்கள்: ‘குரு பிரம்மா, குரு விஷ்ணு’. ஆனால், உங்களுக்கு எந்தக் குருவும் இல்லை என நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். இவரை நாங்கள் எங்கள் குருவென்றோ அல்லது எங்கள் கடவுள் என்றோ நம்புவதில்லை. ஒரேயொரு அசரீரியானவரே தூய்மையாக்குபவர் ஆவார். சரீரதாரியான குரு எவருமே தூய்மையாக்குபவராக இருக்க முடியாது. பரமாத்மாவான பரமதந்தையின் முழு வாழ்க்கை வரலாற்றையும் நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கின்றீர்கள். 5000 வருடங்களில் சிவபாபா எப்பாகத்தை நடிக்கின்றார் என்பதைத் தந்தையிடம் இருந்து நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். தந்தையே ஞானம் நிறைந்தவர் ஆவார். அவர் சந்தோஷக் கடலும், அமைதிக்கடலும், பேரானந்தக்கடலும் ஆவார். இதுவே அவரது புகழாகும். தந்தையிடம் பொக்கிஷங்கள் உள்ளன. ஆகையால், அவர் நிச்சயமாக அவற்றைக் குழந்தைகளிடமும் கொடுக்கின்றார். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. கர்மாதீத நிலையை அடைவதற்கு உங்கள் பௌதீகப் புலன்களினால் எந்தத் தவறையும் செய்யாதீர்கள். தூய்மையாக இருப்பதுடன், நினைவு செய்வதிலும் உறுதியானவர் ஆகுங்கள்.2. சதா புண்ணியாத்மாவாக இருக்க வேண்டுமாயின், உங்கள் சரீரம், மனம், செல்வத்தைத் தந்தையிடம் அர்ப்பணியுங்கள். தந்தையிடம் உங்களை ஒருமுறை அர்ப்பணிப்பதால், நீங்கள் 21 பிறவிகளுக்குப் புண்ணியாத்மாவாக இருப்பீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வொரு பாடத்திலும் முழுமையானவராகி, உங்களின் யோகத்தை இயல்பானதாகவும் உங்களின் சுபாவமாகவும் ஆக்குவீர்களாக.நீங்கள் தந்தையின் குழந்தைகளாக இருப்பதில் எப்படி சதவீதம் கிடையாதோ, அவ்வாறே, உங்களின் சதா, இலகு யோகி என்ற ஸ்திதியின் யோகத்தில் சதவீதம் இருக்கக்கூடாது. அது இயல்பானதாகவும் உங்களின் சுபாவமாகவும் இருக்க வேண்டும். சிலருக்கு குறிப்பிட்டதொரு சுபாவம் இருக்கும், அவர்கள் தங்களின் விருப்பத்திற்கு மாறாகவும் அந்த சுபாவத்திற்கேற்ப தொடர்ந்து செயல்படுவார்கள். அதேபோல், இதுவும் உங்களின் சுபாவம் ஆகவேண்டும். ‘நான் என்ன செய்வது? எவ்வாறு நான் யோகம் செய்வது?’ என்ற விடயங்கள் அனைத்தையும் முடித்துவிடுங்கள். அப்போது நீங்கள் ஒவ்வொரு பாடத்திலும் முழுமை அடைவீர்கள். முழுமை என்றால் எந்தவொரு விளைவில் அல்லது குறைபாட்டில் இருந்து விடுபட்டு இருப்பதாகும்.
சுலோகம்:
நீங்கள் எதையாவது சகித்துக் கொள்ள விரும்பினால், அதைச் சந்தோஷமாகச் சகித்துக் கொள்ளுங்கள், கட்டாயத்தின் பேரில் அல்ல.அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம் சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.
சக்திவாய்ந்த யோகம், அதாவது, அன்பெனும் அக்கினி, நெருப்பைப் போன்ற நினைவானது ஊழல், வன்முறை என்ற நெருப்பை அழித்து, ஆத்மாக்கள் அனைவருக்கும் ஒத்துழைப்பை வழங்கும். இதன் மூலமே உங்களின் எல்லையற்ற விருப்பமின்மை என்ற மனோபாவம் ஏற்றி வைக்கப்படும். ஒருபுறம், நினைவெனும் அக்கினி அந்த நெருப்பை அணைக்கும். மறுபுறம், அது ஆத்மாக்களுக்கு இறை செய்தியை வழங்கி, அவர்களைக் குளிர்மைப்படுத்தும். இதனூடாக, ஆத்மாக்கள் தமது பாவ நெருப்பில் இருந்து விடுபடுவார்கள்.