17.10.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நினைவு யாத்திரையில் முழுக் கவனம் செலுத்துங்கள். இதன் மூலமாக மாத்திரமே நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள்.

பாடல்:
தந்தை தனது குழந்தைகளின் மீது எத்தகைய கருணையைக் கொண்டிருக்கிறார்?

பதில்:
குழந்தைகளாகிய உங்களின் நன்மைக்காகத் தந்தை கொடுக்கின்ற வழிகாட்டல்களே அவருடைய கருணையாகும். தந்தையின் முதலாவது வழிகாட்டல்: இனிய குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். ஆத்ம உணர்வில் இருப்பவர்கள் மிகவும் அமைதியாக இருப்பார்கள். அவர்களால் ஒருபோதும் தவறான எண்ணங்களைக் கொண்டிருக்க முடியாது.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் மத்தியில் எக்கருத்தரங்கை நடாத்த வேண்டும்?

பதில்:
நீங்கள் உலாவச் செல்லும்போதெல்லாம் நினைவுப் போட்டி ஒன்றை நடாத்துங்கள். பின்னர் அமர்ந்திருந்து, நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் தந்தையை நினைவு செய்தீர்கள் என்ற கருத்தரங்கை நடாத்துங்கள். இங்கு நினைவு செய்வதற்கு மிகச் சிறந்த ஏகாந்தம் உள்ளது.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களிடம் வினவுகின்றார்: நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, நாங்கள் சதோபிரதானிலிருந்து, தமோபிரதான் ஆகிவிட்டோம். ஆகவே பாபா, உங்களுடைய ஸ்ரீமத்திற்கு ஏற்ப, நாங்கள் நிச்சயமாக மீண்டும் சதோபிரதான் ஆகவேண்டும். பாபா, நீங்கள் இப்போது எங்களுக்குப் பாதையைக் காட்டியுள்ளீர்கள். இது ஒன்றும் புதிதல்ல. இது அனைத்திலும் பழமையான விடயமாகும். நினைவு யாத்திரையே அனைத்திலும் பழமையானதாகும். ஆனால் அதை வெளிக்காட்ட வேண்டிய கேள்வியில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேட்கலாம்: நான் தந்தையை எந்தளவுக்கு நினைவு செய்கிறேன்? நான் எந்தளவுக்கு சதோபிரதான் ஆகியுள்ளேன்? நான் என்ன முயற்சி செய்கிறேன்? இறுதியில் முடிவு ஏற்படும் போது மாத்திரமே உங்களால் சதோபிரதான் ஆகமுடியும். அக்காட்சிகளையும் நீங்கள் தொடர்ந்தும் பார்ப்பீர்கள். அவர்களில் எவராவது எதைச் செய்தாலும், அவர்கள் அவற்றைத் தமக்காகவே செய்கிறார்கள். அத்துடன் தந்தையும் அத்தகைய கருணையைக் கொண்டிருப்பதில்லை. குழந்தைகளாகிய உங்களின் சொந்த நன்மைக்காக, வழிகாட்டல்களைக் கொடுப்பதுவே தந்தையின் கருணையாகும். தந்தை நன்மையளிப்பவர். சில குழந்தைகள் ஞானத்தைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். சரீர உணர்வுடையவர்கள் அகங்காரமுடையவர்களாக இருக்கிறார்கள், ஆனால், ஆத்ம உணர்வுடையவர்களோ மிகவும் அமைதியாக இருக்கின்றார்கள் என்பதை பாபா உணர்ந்துள்ளார். அவர்களுக்கு ஒருபோதும் தவறான எண்ணங்கள் இருக்க மாட்டாது. நீங்கள் எல்லா வழிகளாலும் முயற்சி செய்வதற்கு தந்தை உங்களைத் தூண்டுகிறார். மாயையும் மிகவும் சக்தி வாய்ந்தவள். அவள் மிகவும் சிறந்த குழந்தைகளைக் கூடத் தாக்குகிறாள். இதனாலேயே பிராமணர்களின் மாலை ஒன்று உருவாக்க முடியாதுள்ளது. இன்று சிலர் மிகச் சிறந்த நினைவைக் கொண்டிருக்கக்கூடும். நாளையே அவர்கள் ஓர் எருமையைப் போன்றும், பச்சோந்தியைப் போன்றும் சரீரம் பற்றிய அகங்காரத்தைக் கொண்டிருப்பார்கள். எருமைகள் அதிகளவு அகங்காரத்தைக் கொண்டுள்ளன. கூற்றொன்று உள்ளது: சரீர உணர்வுடைய எருமைகளுக்கு சுவர்க்கத்தின் தெய்வீக நாதம் பற்றி என்ன தெரியும்? சரீர உணர்வு மிகவும் தவறானதாகும். நீங்கள் அதிக முயற்சி செய்யவேண்டும். சிவபாபா கூறுகிறார்: நானே மிகவும் கீழ்ப்படிவான சேவகனாவேன். அவர் தன்னை சேவகன் என்று அழைத்த பின்னர், அதிகாரம் செலுத்துவார் என்றில்லை. தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் நிச்சயமாக சதோபிரதான் ஆகவேண்டும். இது மிக இலகுவானது. இதனையிட்டு அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் வாயால் எதுவும் கூறவேண்டியதில்லை. நீங்கள் எங்கு சென்றாலும், உள்ளே நினைவில் இருங்கள். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்போது மாத்திரமே பாபா உதவி செய்வார் என்றில்லை. உங்களுக்கு உதவி செய்வதற்காகவே தந்தை விசேடமாக வந்திருக்கிறார். குழந்தைகள் எவ்விதத்திலும் கவனயீனமாக இருக்கக்கூடாது என்பதில் தந்தை அக்கறை காட்டுகிறார். இங்கு மாயை உங்களைக் குத்துகிறாள். சரீர உணர்வு மிகவும் தீயதாகும். சரீர உணர்வுடையவர்கள் ஆகியதால், அவர்கள் முற்றாக நிலத்தில் வீழ்ந்துவிட்டார்கள். பாபா கூறுகிறார்: நீங்கள் வந்து, இங்கு அமர்ந்திருக்கும்போதும் மிகவும் அன்புக்கினிய தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தந்தை கூறுகிறார்: நான் மாத்திரமே தூய்மையாக்குபவர். என்னை நினைவு செய்வதால், இந்த யோக அக்கினியில் உங்களின் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். மற்றவர்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்தும் ஸ்திதியைக் குழந்தைகள் இன்னமும் அடையவில்லை. ஞான வாளிலும், யோக சக்தி இருக்கவேண்டும். அவ்வாறில்லையானால், வாளினால் எவ்வித பயனுமில்லை. நினைவு யாத்திரையே பிரதான விடயமாகும். சில குழந்தைகள் தவறான விடயங்கள் பலவற்றில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் நினைவு யாத்திரையில் இருப்பதுமில்லை, கற்பதுமில்லை. இதனாலே அவர்களுக்கு இதற்கு நேரமில்லை. தந்தை கூறுகிறார்: நீங்கள் வியாபாரம் போன்றவற்றில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதால் உங்கள் அந்தஸ்து இழக்கப்படக்கூடியதான முயற்சியைச் செய்யாதீர்கள். நீங்கள் உங்கள் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். எவ்வாறாயினும் நீங்கள் சதோபிரதான் ஆகவும் வேண்டும். இதற்கே அதிகளவு முயற்சி தேவை. பெரிய அருங்காட்சியகங்கள் போன்றவற்றைப் பலர் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைவு யாத்திரையில் இருப்பதில்லை. பந்தனத்திலுள்ள ஏழைகளே அதிகளவில் நினைவு யாத்திரையில் இருக்கின்றார்கள் என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். அவர்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து சிவபாபாவை நினைவு செய்கிறார்கள்: சிவபாபா, எனது இந்த பந்தனத்தை முடித்துவிடுங்கள்! அப்பாவிகள் துன்புறுத்தப்படுவதும் நினைவுகூரப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் மிக இனிமையானவர்கள் ஆகவேண்டும். உண்மையான மாணவர்கள் ஆகுங்கள். சிறந்த மாணவர்கள் பூந்தோட்டங்களுக்குச் சென்று, ஏகாந்தத்தில் இருந்தவாறு கற்பார்கள். தந்தையும் உங்களுக்குக் கூறுகிறார்: எங்கு நீங்கள் உலாவச் சென்றாலும், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதியவாறு, பாபாவை நினைவு செய்யுங்கள். நினைவு யாத்திரையில் இருப்பதற்கான ஆர்வத்தைக் கொண்டிருங்கள். அந்தச் செல்வத்தைச் சம்பாதிப்பதுடன் ஒப்பிடும்போது, இந்த அழியாத செல்வம் மிக மிக உயர்ந்ததாகும். அந்த அழியக்கூடிய செல்வம் சாம்பலாகிவிடும். குழந்தைகள் முழுமையாகச் சேவை செய்யாது, அரிதாகவே நினைவும் செய்கின்றார்கள் என்பதும் பாபாவிற்குத் தெரியும். அவர்கள் செய்ய வேண்டிய உண்மையான சேவையை அவர்கள் செய்வதில்லை. எவ்வாறாயினும், அவர்களின் கவனம் பௌதீக சேவையின் மீதே செல்கிறது. அது நாடகத்திற்கு ஏற்ப, இடம்பெற்ற போதிலும், தந்தை உங்களை முயற்சி செய்யவே தூண்டுகிறார். தந்தை கூறுகிறார்: நீங்கள் என்ன வேலை செய்தாலும், நீங்கள் துணிகளைத் தைத்தாலும், தந்தையை நினைவு செய்யுங்கள். நினைவு செய்வதிலேயே மாயை தடைகளை ஏற்படுத்துகிறாள். மாயையும் சக்திவாய்ந்தவர்கள் மீதே மிகவும் சக்திவாய்ந்தவளாகி சண்டையிடுகிறாள் என்று பாபா விளங்கப்படுத்தியுள்ளார். பாபா தனது சொந்த அனுபவத்தையும் பகிர்ந்துகொள்கிறார்: நான் சக்திவாய்ந்தவர். ஒரு பிச்சைக்காரனாக இருந்த நான் அரசகுமாரன் ஆகப்போகின்றேன் என்பது எனக்குத் தெரியும். இருந்தபோதிலும் மாயை என்னை எதிர்க்கின்றாள். மாயை எவரையும் விட்டு வைப்பதில்லை. பலம் வாய்ந்த, தைரியசாலிகளுடனேயே அவள் மிகவும் கடுமையாகச் சண்டையிடுவாள். சில குழந்தைகள் அதிக சரீர உணர்வைக் கொண்டிருக்கிறார்கள். தந்தை சிறிதேனும் அகங்காரமின்றி இருக்கிறார். அவர் கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கும் மரியாதை செலுத்துகின்ற சேவகனாவேன். அவர்கள் தங்களை மிகவும் மேன்மையானவர்களாகக் கருதுகிறார்கள். இச் சரீரம் பற்றிய அகங்காரம் அனைத்தும் துண்டிக்கப்பட வேண்டும். அகங்காரம் என்ற தீய ஆவி பலரிடம் உள்ளது. தந்தை கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தொடர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். இங்கு உங்களுக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பமுள்ளது. இங்கு நீங்கள் சுற்றிப் பார்க்க நல்ல காட்சிகள் உள்ளன. உங்களுக்கு ஓய்வு நேரமும் உள்ளது. நீங்கள் சுற்றிப் பயணித்த பின்னர், ஒருவரையொருவர் வினவலாம்: நீங்கள் எவ்வளவு நேரம் நினைவு செய்தீர்கள்? உங்களின் புத்தி வேறு திசைகளில் சென்றதா? உங்களுக்கிடையே இவ்வாறான கருத்தரங்கை நடாத்துங்கள். நீங்கள் ஆண்களையும், பெண்களையும் வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்கலாம். பெண்கள் முன்னாலும், ஆண்கள் பின்னாலும் இருக்க வேண்டும். தாய்மார்கள் கவனிக்கப்பட வேண்டும். ஆகையாலேயே அவர்கள் முன்னால் அமரவேண்டும். இங்கு மிக நன்றாக ஏகாந்தத்தில் இருக்கலாம். சந்நியாசிகள்கூட ஏகாந்தத்திற்குச் செல்கிறார்கள். சதோபிரதானான சந்நியாசிகள் பயமற்று இருந்தார்கள். அவர்கள் மிருகங்களுக்கோ, வேறு எதற்குமோ பயப்படவில்லை. அவர்கள் தங்கள் சொந்த போதையில் இருப்பதுண்டு. அவர்கள் இப்போது தமோபிரதான் ஆகிவிட்டார்கள். ஸ்தாபிக்கப்பட்ட ஒவ்வொரு சமயமும் ஆரம்பத்தில் சதோபிரதானாக இருந்து, பின்னர் ரஜோ, தமோ நிலையை அடைகின்றன. சதோபிரதான் சந்நியாசிகள் பிரம்ம தத்துவத்தின் முழுப் போதையில் இருப்பார்கள். அவர்கள் அதிகளவு கவரப்படுவார்கள். அவர்கள் காட்டிலேயே உணவைப் பெறுவார்கள். நாளடைவில் அவர்கள் மிகவும் தமோபிரதான் ஆகும்போது, அவர்களின் பலம் தொடர்ந்தும் குறைவடைகிறது. எனவே பாபா ஆலோசனை கூறுகிறார்: இங்கு குழந்தைகளாகிய நீங்கள் சுய முன்னேற்றம் அடைவதற்கு அதிக சந்தர்ப்பம் உள்ளது. ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதற்காக நீங்கள் இங்கு வருகிறீர்கள். பாபாவைச் சந்திப்பதால் மாத்திரம் உங்களால் ஒரு வருமானத்தைச் சம்பாதிக்க முடியாது. தந்தையை நினைவு செய்தால் மாத்திரமே நீங்கள் ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பீர்கள். பாபா உங்களை ஆசீர்வதிப்பார் என்று எண்ணாதீர்கள். அவ்வாறில்லை! அந்த சந்நியாசிகள் ஆசீர்வதிக்கின்றார்கள், எனினும் நீங்கள் கீழிறங்கவே வேண்டும். தந்தை இப்போது கூறுகிறார்: நீங்கள் ஒரு ஜீனி ஆகி, உங்கள் புத்தியின் யோகத்தை மேலே தொடர்புபடுத்துங்கள். ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டிருங்கள் என்று ஜீனியிடம் (பூதம்) கேட்கப்பட்டதாக ஒரு கதையுள்ளது. தந்தையும் கூறுகிறார்: நான் உங்களுக்கு ஒரு வழிகாட்டலைக் கொடுக்கின்றேன்: நினைவில் அமர்ந்திருந்தால், உங்கள் படகு அக்கரைக்குச் செல்லும். நீங்கள் நிச்சயமாக சதோபிரதான் ஆகவேண்டும். மாயை எங்கள்மீது எவ்வளவுதான் பாடுபட்டாலும், நாங்கள் நிச்சயமாக எங்கள் மேன்மையான தந்தையை நினைவு செய்வோம். இவ்வாறு உள்ளே தொடர்ந்து தந்தையைப் புகழ்வதுடன், தொடர்ந்து அவரை நினைவு செய்யுங்கள். எந்த மனிதர்களையும் நினைவு செய்யாதீர்கள். பக்தி மார்க்க சம்பிரதாயங்கள் ஞான மார்க்கத்தில் இருக்க முடியாது. தந்தை உங்களுக்கு கற்பித்தல்களைக் கொடுக்கின்றார்: நினைவு யாத்திரையில் நீங்கள் மிகவும் விரைந்து செல்ல வேண்டும். இதுவே பிரதான விடயமாகும். நீங்கள் சதோபிரதான் ஆகவேண்டும். நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள்: நீங்கள் உலாவச் செல்லும்போது, அல்லது சுற்றுலாச் செல்லும்போது நினைவில் இருங்கள். அப்போது நீங்கள் உங்கள் வீட்டையும், இராச்சியத்தையும் நினைவு செய்வீர்கள். நினைவில் அமர்ந்திருக்கும்போது நீங்கள் விழுவீர்கள் என்றில்லை. அவ்வாறாயின் அது ஹத்த யோகமாகும். இது நேரடியானது: நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்ய வேண்டும். இங்கு அமர்ந்திருக்கும்போது சில குழந்தைகள் வீழ்ந்து விடுகிறார்கள். இதனாலேயே பாபா கூறுகிறார்: நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும், உண்ணும்போதும், பருகும்போதும், நினைவில் நிலைத்திருங்கள். இங்கு அமர்ந்திருக்கும்போது, நீங்கள் சுயநினைவற்றவர்கள் ஆகக் கூடாது. அவ்வாறு செய்வதால் உங்கள் பாவங்கள் அழியாது. மாயையினால் பல தடைகளும் ஏற்படுகின்றன. போக் படைப்பது போன்ற சில சம்பிரதாயங்கள் உள்ளன. ஆனால் உண்மையில் அதில் எதுவுமில்லை. அதில் மாயையின் தடைகள் பல உள்ளன. அது ஞானமும் இல்லை. யோகமும் இல்லை. காட்சிகளுக்கான தேவையுமில்லை. காட்சிகளைக் கண்டவர்களில் பலர் இப்போது இங்கு இல்லை. மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். நீங்கள் காட்சிகளைக் காணவேண்டும் என்ற ஆசையை ஒருபோதும் கொண்டிருக்கக்கூடாது. இங்கு, நீங்கள் சதோபிரதான் ஆகுவதற்குத் தந்தையை நினைவு செய்யவேண்டும். நீங்கள் நாடகத்தையும் அறிந்திருக்கிறீர்கள். இது முன்னரே நிச்சயிக்கப்பட்ட அநாதியான நாடகமாகும். அது தொடர்ந்து மீண்டும் இடம்பெறும். நீங்கள் இதனை புரிந்துகொள்வதுடன், தந்தை கொடுக்கின்ற வழிகாட்டல்களையும் பின்பற்ற வேண்டும். மீண்டும் ஒரு தடவை இராஜயோகத்தைக் கற்பதற்காக நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இது பாரதத்திற்கு மாத்திரமே பொருந்தும். பாரதமே தமோபிரதான் ஆகியுள்ளது, இதுவே மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகவேண்டும். தந்தையும் பாரதத்தில் மாத்திரமே வந்து, அனைவருக்கும் ஜீவன் முக்தியை அருள்கிறார். இது மிகவும் அற்புதமானதோர் நாடகமாகும். தந்தை இப்போது கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, உங்களை ஆத்மாவாகக் கருதுங்கள். 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வருவதற்கு முழுமையாக 5000 வருடங்கள் எடுத்துள்ளன. இப்போது நீங்கள் வீடு திரும்பவேண்டும். வேறு எவராலும் இவ்விடயங்களைக் கூற முடியாது. குழந்தைகளாகிய உங்களுக்கிடையேயும், நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகவே தொடர்ந்து புத்தியில் நம்பிக்கை உடையவர்கள் ஆகுகிறீர்கள். இது ஓர் எல்லையற்ற பாடசாலையாகும். எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அந்த அதிபதியே ஆசிரியராவார். அவர் சிறந்த அதிபதியாவார். அவர் மிகுந்த அன்புடன் விளங்கப்படுத்துகிறார். மிகச் சிறந்த பல குழந்தைகள் காலை 6 மணி வரை மிகவும் ஆறுதலாகத் தூங்குகிறார்கள். மாயை முற்றாக அவர்களின் மூக்கைப் பிடிக்கின்றாள். அவர்கள் தொடர்ந்து கட்டளை இடுகிறார்கள். ஆரம்ப நாட்களில் நீங்கள் பத்தியில் இருந்தபோது, மம்மாவும், பாபாவும் அனைத்து வகையான சேவைகளையும் செய்வது வழக்கம். நான் என்ன கருமங்களைச் செய்கின்றேனோ, மற்றவர்களும் என்னைப் பார்த்து, அவ்வாறே செய்வார்கள். யானைப் படையினரும், குதிரைப் படையினரும், காலாட் படையினரும் வரிசைக்கிரமமே என்பது பாபாவிற்குத் தெரியும். சில குழந்தைகள் மிகவும் வசதியாக வாழ்கிறார்கள். அவர்கள் உள்ளே தூங்கிக்கொண்டு இருப்பார்கள். வெளியிலிருந்து வந்து, அவர்கள் எங்கே என்று கேட்டால், அவர்கள் கூறுவார்கள்: அவர் வீட்டில் இல்லை. எவ்வாறாயினும் அவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். தொடர்ந்தும் இடம்பெறுகின்ற விடயங்கள் அனைத்தையும் பாபா உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். எவரும் இன்னும் முழுமை அடையவில்லை. அதிக அவச்சேவை இடம்பெறுகிறது. தந்தையையிட்டு நினைவுகூரப்படுகிறது: நீங்கள் என்னை அடித்தாலும், அணைத்தாலும் உங்கள் வீட்டுவாசலை விட்டுச் செல்லமாட்டேன். இங்கு குழந்தைகள் அற்ப விடயங்களுக்கும் முகங்கோணுகிறார்கள். யோகத்திற்கான குறைபாடு அதிகளவில் உள்ளது. பாபா தொடர்ந்து குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்துகிறார். ஆனால் பாபாவிற்கு எழுதுவதற்கு எவருக்கும் சக்தியில்லை. உங்களிடம் யோகம் இருந்தால், நீங்கள் எழுதுவன சக்திமிக்கதாக இருக்கும். தந்தை கூறுகிறார்: கீதையின் கடவுள் சிவனேயன்றி, ஸ்ரீ கிருஷ்ணர் அல்ல என்று மிகத் தெளிவாக நிரூபியுங்கள். தந்தை வந்து, அனைத்து விடயங்களின் அர்த்தத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இங்கு இருக்கும்போது குழந்தைகள் போதையுடன் இருக்கிறார்கள். அவர்கள் வெளியே சென்றதும், அனைத்தும் முடிவடைந்து விடுகின்றது. அவர்கள் அதிகளவு நேரத்தை வீணாக்குகிறார்கள். நீங்கள் ஒரு வருமானத்தைச் சம்பாதித்து, யக்ஞத்திற்குப் பங்களிப்பீர்கள் என்று எண்ணி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு நன்மையளிப்பதற்காக வந்திருக்கிறேன். நீங்கள் உங்களுக்கு இழப்பை ஏற்படுத்துகிறீர்கள். முன்னைய கல்பத்தில் யக்ஞத்திற்கு உதவி செய்தவர்கள், தொடர்ந்து உதவி செய்வார்கள். நீங்கள் இதனை அல்லது அதனைச் செய்வீர்கள் என்று எண்ணி ஏன் கஷ்டப்படுகிறீர்கள்? அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது: முன்னர் அந்த விதையை விதைத்தவர்கள், இப்போதும் அதனைச் செய்வார்கள். யக்ஞத்தையிட்டுக் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு நன்மை செய்யுங்கள்! உங்களுக்கு உதவி செய்யுங்கள்! நீங்கள் கடவுளுக்கு உதவி செய்கிறீர்களா? நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்கிறீர்களா அல்லது கொடுக்கிறீர்களா? நீங்கள் அவ்வாறான எண்ணத்தைக்கூடக் கொண்டிருக்கக்கூடாது. பாபா கூறுகிறார்: அன்பான குழந்தைகளே, உங்களை ஆத்மாவாகக் கருதி, நினைவில் அமர்ந்திருங்கள். உங்கள் பாவங்கள் அழியும். இப்போது நீங்கள் சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள். சங்கம யுகத்தில் மாத்திரமே உங்களால் இரு பக்கங்களையும் பார்க்க முடியும். இங்கு ஏராளமான மக்கள் உள்ளனர். சத்திய யுகத்தில் மிகச் சொற்ப மனிதர்களே இருப்பார்கள். நீங்கள் நாள் முழுவதும் சங்கம யுகத்தில் இருக்கவேண்டும். எவ்வாறு இருந்த எங்களை பாபா எவ்வாறு ஆக்குகிறார் என்று பாருங்கள்! தந்தையின் பாகம் மிகவும் அற்புதமானது! நீங்கள் சுற்றுலா செல்லலாம். ஆனால், நினைவு யாத்திரையில் அமர்ந்திருங்கள். பல குழந்தைகள் தங்கள் நேரத்தை வீணாக்குகிறார்கள். நினைவு யாத்திரை மூலம் மாத்திரமே உங்கள் படகு அக்கரைக்குச் செல்லும். முன்னைய கல்பத்திலும் இது இவ்வாறே குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டது. நாடகம் தொடர்ந்து மீண்டும் இடம்பெறும். நடந்தும், சுற்றியும் திரியும்போது உங்கள் புத்தியில் முழுக் கல்ப விருட்சத்தையும் நினைவு செய்வதே கற்பதாகும். எவ்வாறாயினும் நீங்கள் உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யலாம். நீங்கள் கற்பதற்கு நேரம் ஒதுக்கவேண்டும். இனிமையான தந்தையையும், சுவர்க்கத்தையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் எந்தளவுக்கு அதிகமாக அவரை நினைவு செய்கிறீர்களோ, உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். பாபா, இப்போது நான் உங்களிடம் வருகிறேன். தந்தையை நினைவு செய்யும்போது, உங்கள் சுவாசம்கூட இன்பமாக இருக்கும். பிரம்ம கியானிகளின் சுவாசம்கூட சந்தோஷம் நிறைந்ததாகும். அவர்கள் பிரம்ம தத்துவத்தின் நினைவில் அமர்ந்திருப்பார்கள். ஆனால் அவர்களில் எவரும் பிரம்மலோகத்திற்குச் செல்வதில்லை. அவர்கள் தாமாகவே (தமக்குரிய நேரத்தில்) தமது சரீரத்தை நீங்கிச் செல்வது சாத்தியமானது. சிலர் விரதம் இருந்து, தங்கள் சரீரத்தை நீங்கிச் செல்கின்றார்கள். அவர்கள் துன்பத்தை அனுபவம் செய்தவாறே மரணிக்கின்றார்கள். தந்தை கூறுகிறார்: உண்ணுங்கள். அருந்துங்கள், தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை நீங்கள் செல்லவேண்டிய இடத்திற்குக் கொண்டுசெல்லும். அனைவரும் மரணிக்கவேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சதா நினைவில் வைத்திருங்கள்: நான் என்ன செயல்களைச் செய்கின்றேனோ, மற்றவர்களும் என்னைப் பார்த்து, அவ்வாறே செய்வார்கள். ஓய்வெடுப்பதற்கு விரும்பி, அவச்சேவை செய்பவர் ஆகாதீர்கள். மிக மிக அகங்காரமற்றவர் ஆகுங்கள். உங்களுக்கு உதவி செய்து, உங்களுக்கே நன்மை செய்யுங்கள்.

2. நினைவு யாத்திரையில் இருப்பதற்கோ அல்லது கற்பதற்கோ நேரம் இல்லாத வகையில் உங்கள் வியாபாரம் போன்றவற்றில் அதிகளவு மும்முரமாக ஈடுபடாதீர்கள். சரீர உணர்வு மிகவும் பொய்யானதும், தீயதுமாகும். அதனைத் துறந்து, ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
எந்தவொரு சந்தர்ப்பத்தையும் உபகார உணர்வுகளுடன் பார்ப்பதன் அல்லது கேட்பதன் மூலம் மற்றவர்களைப் பார்ப்பதில் இருந்து விடுபடுவீர்களாக.

ஒன்றுகூடல் எத்தனை பெரியதாகுகிறதோ, அந்தளவிற்குச் சூழ்நிலைகளும் பெரியதாகும். எவ்வாறாயினும், உங்களின் பாதுகாப்பானது, பார்த்தும் பார்க்காதிருப்பதிலும் கேட்டும் கேட்காதிருப்பதிலுமே உள்ளது. உங்களுக்காகத் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருங்கள். தனக்காகத் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஓர் ஆத்மா, மற்றவர்களைப் பார்ப்பதில் இருந்து விடுபட்டிருப்பார். ஏதாவதொரு காரணத்தால், நீங்கள் மற்றவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டியிருந்தால், நீங்கள் அதற்குப் பொறுப்பானவர் எனக் கருதினால், அனைத்திற்கும் முதலில், உங்களின் தடையை(பிரேக்) சக்திவாய்ந்தது ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்களைப் பார்த்தீர்கள், அவர்கள் சொன்னதைக் கேட்டீர்கள், அதன்பின்னர் எந்தளவிற்கு சாத்தியமோ அந்தளவிற்கு அவர்களுக்கு நன்மையை ஏற்படுத்தினீர்கள். பின்னர், ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்!

சுலோகம்:
தமது திருப்தியான, சந்தோஷமான வாழ்க்கையால் ஒவ்வோர் அடியிலும் சேவை செய்பவர்களே, உண்மையான சேவையாளர்கள்.