17.11.24 Avyakt Bapdada Tamil Lanka Murli 30.11.2002 Om Shanti Madhuban
‘திரும்பச் செலுத்துதல்’ என்ற வார்த்தையின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலமும் திரும்பும் பயணத்தின் விழிப்புணர்வின் சொரூபமாகுவதன் மூலமும் சமமானவர் ஆகுங்கள்.
இன்று, பாப்தாதா இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும், நெற்றிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும், உலக இராச்சிய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தமக்கே அதிபதிகளாக இருக்கும், எங்கும் உள்ள தனது குழந்தைகளைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். கல்பம் முழுவதிலும், இப்போது மட்டுமே அதியன்பிற்குரிய, நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தைகள், இறைவனின் இதய சிம்மாசனத்தைப் பெறுகிறீர்கள். ஆத்மாக்கள் எல்லோரிடமும் நெற்றிச் சிம்மாசனம் உள்ளது. ஆனால், பிராமண ஆத்மாக்களைத் தவிர, வேறு எவரும் இறைவனின் இதய சிம்மாசனத்தைப் பெறுவதில்லை. இந்த இதய சிம்மாசனமே, நீங்கள் உலகச் சிம்மாசனத்தை அடையச் செய்கிறது. தற்சமயம், நீங்கள் உங்களுக்கே அதிபதிகள் ஆகியுள்ளீர்கள். ஒவ்வொரு பிராமண ஆத்மாவின் கழுத்திலும் சுய இராச்சியம் மாலையாகி உள்ளது. சுய இராச்சியம் உங்களின் பிறப்புரிமை. இந்த முறையில் நீங்கள் உங்களை அதிபதிகளாக அனுபவம் செய்கிறீர்களா? உங்களின் இதயங்களில், எவராலும் உங்களிடம் இருந்து இந்தப் பிறப்புரிமையைப் பறிக்க முடியாது என்ற திடசங்கற்பம் உள்ளது. அத்துடன்கூடவே, இறைவனின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஆன்மீக போதையும் உங்களுக்கு உள்ளது. ஒரு மனிதனின் உடலில், இதயமே மிகவும் முக்கியமானது என்று சொல்லப்படுகிறது. இதயம் துடிப்பதை நிறுத்தும்போது, உயிர்த்துடிப்பு நின்றுவிடுகிறது. அதேபோல், இந்த ஆன்மீக வாழ்க்கையிலும், இதய சிம்மாசனத்திற்கு பெரும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஆத்மாக்கள், உலகிலேயே விசேடமான ஆத்மாக்கள் என நினைவுகூரப்படுகிறார்கள். இவர்களே, மாலையின் மணிகளாகப் பக்தர்களால் நினைவு செய்யப்படுபவர்கள். இந்த ஆத்மாக்களே பலமில்லியன்களில் கைப்பிடி அளவினரும் அதிலும் வெகு சிலரும் ஆவார்கள். எனவே, யார் அந்த ஆத்மாக்கள்? நீங்கள்தான் அவர்களா? பாண்டவர்களான நீங்களும் இத்தகையவர்களா? தாய்மார்களான நீங்களும் இத்தகையவர்களா? (அவர்கள் தமது கைகளை அசைக்கிறார்கள்). தந்தை கூறுகிறார்: ஓ அதியன்பிற்குரிய குழந்தைகளே, ஏன் நீங்கள் சிலவேளைகளில் இதய சிம்மாசனத்தை விட்டு நீங்கி, உங்களின் இதயங்களை சரீரம் என்ற சேற்றில் பற்று வைக்கிறீர்கள்? சரீரம் என்பது சேறு. எனவே, அதியன்பிற்குரிய குழந்தைகளே, ஒருபோதும் உங்களின் பாதங்களைச் சேற்றில் வைக்காதீர்கள். நீங்கள் சதா இதய சிம்மாசனத்தில், மடியில் அல்லது அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சல்களில் ஆடிக் கொண்டிருக்கிறீர்கள். பாப்தாதா உங்களுக்குப் பல்வேறு ஊஞ்சல்களை வழங்கியுள்ளார்: சிலவேளைகளில் சந்தோஷ ஊஞ்சலில் ஆடுங்கள். சிலவேளைகளில் சுகம் என்ற ஊஞ்சலில் ஆடுங்கள், சிலவேளைகளில் ஆனந்தம் என்ற ஊஞ்சலில் ஆடுங்கள்.
எனவே, இன்று, மேன்மையான குழந்தைகளான நீங்கள் எப்படிப் போதையுடன் ஊஞ்சல்களில் ஆடுகிறீர்கள் என்பதை பாப்தாதா பார்த்தார். நீங்கள் தொடர்ந்து ஆடுகிறீர்களா? ஊஞ்சலில் ஆடுகிறீர்களா? நீங்கள் சேற்றுக்குள் செல்வதில்லைத்தானே? சிலவேளைகளில், நீங்கள் உங்கள் பாதங்களைச் சேற்றில் வைக்க விரும்புகிறீர்களா? 63 பிறவிகளாக, நீங்கள் உங்களின் பாதங்களைச் சேற்றில் வைத்து, சேற்றுடன் விளையாடிக் கொண்டிருந்தீர்கள். எனவே, இப்போது நீங்கள் சேற்றுடன் விளையாடுவதில்லைத்தானே? சிலவேளைகளில் உங்களின் பாதங்கள் சேற்றுக்குள் செல்கின்றனவா அல்லது இல்லையா? அவை சிலவேளைகளில் சேற்றுக்குள் செல்கின்றன. சரீர உணர்வென்றால் உங்களின் பாதங்களை சேற்றில் வைப்பதாகும். சரீரங்களின் விழிப்புணர்வு என்றால், உங்களின் பாதங்களை மிக ஆழமாகச் சேற்றுக்குள் வைப்பதாகும். சரீர உணர்வும் சேறே ஆகும். சங்கமயுகத்தில் எந்தளவிற்கு நீங்கள் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்களோ, அந்தளவிற்கு அரைக்கல்பத்திற்கு, நீங்கள் சூரிய வம்ச இராச்சியத்திலும் சந்திர வம்ச இராச்சியத்தில், சூரிய வம்சத்தின் அரச குடும்பத்திலும் இருப்பீர்கள். இப்போது சங்கமயுகத்தில் சிலவேளைகளில் மட்டும் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தால், நீங்கள் குறுகிய காலத்திற்கே சூரிய வம்சத்தின் அரச குடும்பத்தில் இருப்பீர்கள். நீங்கள் சிம்மாசனத்தில் உங்கள் முறை வரும்போது அமரக்கூடும். ஆனால், சதா அரச குடும்ப ஆத்மாக்களுடன் உறவுமுறையில் இருப்பீர்கள். ஆகவே, சங்கமயுகத்தின் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை, அது 10 வருடங்களோ, 50 வருடங்களோ அல்லது 66 வருடங்களோ, நீங்கள் பிராமணர் ஆகிய வேளையில் இருந்து, ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை, எவ்வளவு காலத்திற்கு நீங்கள் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தீர்கள், சுய இராச்சிய ஆசனத்தில் அமர்ந்திருந்தீர்கள் எனச் சோதித்துப் பாருங்கள். அது நீண்ட காலமா, எப்போதுமா அல்லது சிலவேளைகளில் மட்டுமா? இறைவனின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்களின் அடையாளம், அவர்கள் தமது செயல்பாடுகளில் கவலையற்ற சக்கரவர்த்திகளாக இருப்பார்கள். இதை அவர்களின் முகங்களில் காணக்கூடியதாக இருக்கும். பௌதீகமான சுமை தலைமீது இருக்கும். ஆனால், சூட்சுமமான சுமை மனதில் இருக்கும். ஆகவே, அவர்களின் மனங்களில் எந்தவிதமான சுமையும் இருக்காது. கவலை ஒரு சுமை. கவலையற்றிருத்தல் என்றால் இலேசாகவும் ஒளியாகவும் இருத்தல். ஏதாவதொரு வகையான சுமை இருக்குமாயின், அது சேவையோ, தொடர்புகளும் உறவுமுறைகளுமோ அல்லது பௌதீக சேவையோ எதுவாக இருந்தாலும், அது ஆன்மீக சேவையின் சுமையல்ல – ‘என்ன நடக்கும்? எப்படி அது நடக்கும்? வெற்றி ஏற்படுமா இல்லையா?’. சிந்தித்து திட்டங்களைச் செய்வது என்பது சுமையில் இருந்து வேறுபட்ட விடயம். சுமையைக் கொண்டிருப்பவர்களின் அடையாளம், அவர்கள் எப்போதும் தமது முகங்களில் சிறிதளவு அல்லது அதிகளவு களைப்பின் அடையாளங்களைக் கொண்டிருப்பார்கள். களைப்பாக இருத்தல் வேறு விடயம். ஆனால், களைப்பின் அடையாளங்களைக் கொண்டிருத்தல் என்றால் அது சுமையின் அடையாளம். எவ்வாறாயினும், ஒரு கவலையற்ற சக்கரவர்த்தி என்றால் கவனக்குறைவாக இருத்தல் என்று அர்த்தமல்ல. நீங்கள் கவனயீனமாக இருந்தவாறு, நீங்கள் கவலையற்றவராக இருப்பதாகச் சொல்கிறீர்கள். கவனயீனம் உங்களை அதிகளவில் ஏமாற்றுகிறது. அதே வார்த்தைகள் தீவிர முயற்சிக்கும் கவனயீனத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. சதா உறுதியான நம்பிக்கை வைத்திருப்பதனால், தீவிர முயற்சியாளர் எப்போதும், ‘ஒவ்வொரு பணியும் சொந்தத் தைரியத்தாலும் தந்தையின் உதவியாலும் ஏற்கனவே வெற்றிகரமாகப் பூர்த்தியாகிவிட்டது’ என்றே நினைப்பார். ஆனால், கவனயீனத்தின் வார்த்தைகள் என்னவென்றால், ‘அது நடக்கும், அது நடக்கும், அது ஏற்கனவே பூர்த்தியாகிவிட்டது. ஏதாவது பணி நிறைவேறாமல் உள்ளதா? அது நடக்கும்’ என்பவையாகும். எனவே, வார்த்தைகள் ஒன்றேயாக இருந்தாலும், அதன் வடிவங்கள் வேறானவை.
தற்சமயம், மாயையின் இரண்டு விசேடமான ரூபங்கள், குழந்தைகளுக்கு பரீட்சைத்தாளைக் கொடுக்கின்றன. ஒன்று, வீணான எண்ணங்கள். பாவ எண்ணங்கள் அல்ல, ஆனால், வீணான எண்ணங்கள். மற்றையது, ‘நான் மட்டுமே சரி. நான் என்ன செய்தாலும், நான் எதைச் சொன்னாலும், நான் எதை நினைத்தாலும் எதிலும் சளைத்ததல்ல, நானே சரி’ என்பதாகும். காலத்திற்கேற்ப, பாப்தாதா இப்போது உங்களின் விழிப்புணர்வில் ஒரு வார்த்தையை சதா வைத்திருக்க விரும்புகிறார். நீங்கள் தந்தையிடமிருந்த பெற்ற சகல பேறுகள், அன்பு, ஒத்துழைப்பின் பிரதிபலனைத் திரும்பச் செலுத்துதல். பிரதிபலனைத் திரும்பச் செலுத்துதல் என்றால் சமமானவர் ஆகுதல் என்று அர்த்தம். இரண்டாவதாக, இது இப்போது எமது திரும்பிச் செல்லும் பயணம் ஆகும். சதா ‘திரும்புதல்’ என்ற ஒரு வார்த்தையை நினைவு செய்யுங்கள். இதற்கான மிக இலகுவான வழிமுறை என்னவென்றால், உங்களின் ஒவ்வோர் எண்ணம், வார்த்தை, செயல் என்பவற்றைத் தந்தை பிரம்மாவுடன் ஒத்திசையச் செய்வதாகும். தந்தையின் எண்ணங்கள் என்னவாக இருந்தன? தந்தையின் வார்த்தைகள் எத்தகையதாக இருந்தன? தந்தையின் செயல்கள் எத்தகையதாக இருந்தன? ‘இதுவே தந்தையைப் பின்பற்றுதல்’ எனப்படுகிறது. பின்பற்றுவது இலகுவானதுதானே? புதிதாக எதையும் நினைக்க வேண்டிய அல்லது புதிதாக எதையும் செய்ய வேண்டிய தேவையில்லை. தந்தை எதைச் செய்தாரோ, தந்தையைப் பின்பற்றுங்கள். இது இலகுவானதுதானே?
ஆசிரியர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பின்பற்றுவது இலகுவா அல்லது கஷ்டமா? இலகுவானதுதானே? தந்தையைப் பின்பற்றுங்கள், அவ்வளவுதான். அனைத்திற்கும் முதலில், உங்களைச் சோதித்துப் பாருங்கள். ‘முதலில் சிந்தித்து செயலாற்றுங்கள்’ என்ற கூற்றுக்கேற்ப, முதலில் உங்களின் வார்த்தைகளைக் கருத்தில் கொண்டு, பின்னர் பேசுங்கள். எனவே, இந்த வருடம் ஆசிரியர்கள் எல்லோரும் என்ன செய்வீர்கள்? இது இந்த வருடத்தின் கடைசி மாதம். பழையவை கழியும். புதியவை வரும். எனவே, புது வருடம் வருவதற்கு முன்னர் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள். உங்களின் பாதச்சுவடுகளைத் தந்தையின் பாதச்சுவடுகளின் மீது வைக்காமல், நீங்கள் இன்னோர் அடியை எடுத்து வைக்க மாட்டீர்கள் என்ற எண்ணத்தைக் கொண்டிருங்கள். அவரின் பாதச்சுவடுகளைப் பின்பற்றுங்கள், அவ்வளவுதான். உங்களின் பாதச்சுவடுகளை அவரின் அடிகளின் மீது வைப்பதென்பது இலகுவானதுதானே? இப்பொழுதில் இருந்தே புது வருடத்திற்கான திட்டங்களைப் பற்றிச் சிந்தியுங்கள். தந்தை பிரம்மா சதா ஒரு கருவியாகவும் பணிவாகவும் இருந்ததைப் போல், ஒரு கருவியாக (நிமித்) இருப்பதுடன் பணிவாக (நிர்மாண்) இருக்கும் விழிப்புணர்வும் இருக்க வேண்டும். ஒரு கருவியாக இருக்கும் விழிப்புணர்வை மட்டும் கொண்டிராதீர்கள். ஆனால், கருவியாக இருக்கும் விழிப்புணர்வுடன்கூடவே, பணிவாக இருக்கும் விழிப்புணர்வும் இருக்க வேண்டும். இரண்டும் அவசியமானவை. ஏனென்றால், ஆசிரியர்கள் கருவிகள் ஆவீர்கள், அப்படித்தானே? எனவே, உங்களின் எண்ணங்களில், ஒவ்வொரு வார்த்தையிலும் எவருடனான உங்களின் உறவுமுறையிலும் உங்களின் செயல்பாடுகளிலும் பணிவு இருக்க வேண்டும். பணிவாக இருப்பவர்களிடம் மட்டுமே கருவியாக இருக்கும் விழிப்புணர்வு இருக்கும். பணிவாக இல்லாதவர்கள், ஏதோவோர் அளவில், மிகவும் சூட்சுமமான முறையில் - அது புற ரூபத்தில் உள்ள அகம்பாவம் அல்ல – அதிகார தோரணையைக் கொண்டிருப்பார்கள். இந்த அதிகார தோரணையும் அகம்பாவத்தின் சுவடேயாகும். உங்களின் வார்த்தைகளும் மொழியும் எப்போதும் தூயதாகவும் சாந்தமாகவும் இனிமையாகவும் இருக்க வேண்டும். உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் ஆத்ம உணர்வு ரூபத்தின் விழிப்புணர்வு உங்களிடம் இருக்கும்போது, நீங்கள் சதா அசரீரியாகவும் அகங்காரமற்றவராகவும் இருப்பீர்கள். தந்தை பிரம்மாவின் இறுதி மூன்று வார்த்தைகளை நீங்கள் எப்போதும் நினைக்கிறீர்களா? அசரீரியாகவும் அகங்காரமற்றவராகவும் இருப்பவர்கள் மட்டுமே விகாரமற்றவர்கள் ஆகுவார்கள். அச்சா. தந்தையைப் பின்பற்றுங்கள். நீங்கள் இதில் உறுதியாக இருப்பீர்கள்தானே?
வருகின்ற வருடத்தில் பிரதானமான இலக்கு, அசரீரியாக இருத்தல், அகங்காரம் அற்றிருத்தல், விகாரம் அற்றிருத்தல் என்ற இந்த மூன்று வார்த்தைகளின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதாகும். சுவடேனும் இருக்கக்கூடாது. புற வடிவம் முடிந்துவிட்டது. ஆனால், சுவடேனும் இருக்கக்கூடாது. ஏனென்றால், அந்தச் சுவடே உங்களை ஏமாற்றுகிறது. ‘தந்தையைப் பின்பற்றுங்கள்’ என்பதன் அர்த்தம், சதா இந்த மூன்று வார்த்தைகளை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருப்பதாகும். இது ஓகேயா?
இரட்டை வெளிநாட்டவர்களே, எழுந்து நில்லுங்கள்! நல்லதொரு குழுவினர் வந்துள்ளனர். இரட்டை வெளிநாட்டவர்களின் ஒரு விடயத்தையிட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? பாருங்கள், நீங்கள் தொலைவில் இருந்து, தொலைதேசங்களில் இருந்து வந்துள்ளீர்கள். ஆனால், இந்த முறை சந்திக்க வரவேண்டும் என்ற வழிகாட்டல் உங்களுக்கு வழங்கப்பட்டது. அதனால் நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். எப்படியிருந்தாலும், நீங்கள் எல்லோரும் முயற்சி செய்தீர்கள். பெரியதொரு குழு இங்கே வந்துள்ளது. நீங்கள் தாதியின் வழிகாட்டல்களை மிக நன்றாக ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். அதற்காகப் பாராட்டுக்கள். பாப்தாதா உங்கள் ஒவ்வொருவரையும் பார்க்கிறார். அவர் ஒவ்வொருவருக்கும் திருஷ்டி வழங்குகிறார். மேடையில் மட்டுமே நீங்கள் திருஷ்டி பெறுவீர்கள் என நினைக்காதீர்கள். தொலைவில் இருந்து, உங்களால் மேலும் சிறப்பாகப் பார்க்க முடியும். இரட்டை வெளிநாட்டவர்கள் ‘ஹா ஜி’ என்ற பாடத்தை மிக நன்றாகக் கற்றுள்ளார்கள். பாப்தாதா இரட்டை வெளிநாட்டவர்களை நேசிக்கிறார். அத்துடன் அவர்களையிட்டு அவர் பெருமைப்படுகிறார். ஏனென்றால், இரட்டை வெளிநாட்டவர்களே செய்தியை உலகின் மூலைமுடுக்கெங்கும் சென்றடைவதற்குக் கருவிகள் ஆகியிருக்கிறார்கள். வெளிநாட்டில் ஏதாவது விசேடமான நாடுகள் சேவை செய்யப்படாமல் எஞ்சியுள்ளனவா? அது நகரங்களா அல்லது விசேடமான இடங்களா? இன்னமும் சிறிய கிராமங்களும் நகரங்களும் எஞ்சியுள்ளனவா அல்லது, இன்னமும் சேவை செய்வதற்கு விசேடமான இடங்கள் எஞ்சியுள்ளனவா? எந்தெந்த இடங்களில் இன்னமும் சேவை செய்யப்பட வேண்டும்? எவ்வாறாயினும், இங்கு வந்துள்ள இந்தக் குழுவில், எத்தனை நாடுகள் பிரதிநிதித்துவம் வகிக்கிறார்கள்? நீங்கள் எண்ணிப் பார்த்தீர்களா? நீங்கள் இவற்றைக் கணக்கிடவில்லை. எப்படியாயினும், ஆத்மாக்களான நீங்கள் உலகின் வெவ்வேறு நாடுகள் பலவற்றுக்கும் கருவிகள் ஆகியுள்ளீர்கள் என்பதை பாப்தாதா அறிவார். தந்தையின் பட்டமான உலக உபகாரி என்பதை வெளிப்படுத்துபவர்கள் இரட்டை வெளிநாட்டவர்களே என பாப்தாதா எப்போதும் கூறுகிறார். நல்லது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் சொந்த இடத்தில், உங்களின் சொந்த முயற்சிகளுடனும் சேவையுடனும் முன்னேறுகிறீர்கள். நீங்கள் சதா தொடர்ந்து முன்னேறுவீர்கள். நீங்கள் வெற்றி நட்சத்திரங்கள். மிகவும் நல்லது.
குமார்கள்: மதுவனத்தின் குமார்களும் வந்துள்ளார்கள். எத்தனை குமார்கள் இருக்கிறார்கள் எனப் பாருங்கள். வகுப்பில் அரைவாசி பேர் குமார்களே. நீங்கள் குமார்கள். ஆனால் சாதாரணமான குமார்கள் அல்ல. இப்போது, குமார்களான உங்களின் பட்டம் என்ன? நீங்கள் எத்தகைய குமார்கள்? நீங்கள் எப்படியும் பிரம்மாகுமார்களே. ஆனால், பிரம்மாகுமார்களின் சிறப்பியல்பு என்ன? குமார்களின் சிறப்பியல்பு, அமைதித் தூதுவர்களாகி, எங்கே அமைதியின்மை உள்ளதோ அங்கே அமைதியைப் பரப்புவதாகும். மனதின் அமைதியின்மையும் இருக்கக்கூடாது. புறத்தேயும் அமைதியின்மை இருக்கக்கூடாது. கடினமான விடயங்களைச் செய்வதே குமார்களின் கடமையாகும். நீங்கள் கடின உழைப்பாளிகள், அப்படித்தானே? எனவே, இன்று, அனைத்திலும் கடினமான பணி என்னவென்றால், அமைதியின்மையை முடித்தல், அமைதித் தூதுவராகி, அமைதியைப் பரப்புதல். நீங்கள் இத்தகைய குமார்களா? அமைதியின்மையின் எந்தவொரு பெயரோ அல்லது சுவடோ எஞ்சியிருக்கக் கூடாது. நீங்கள் உலகிற்கும் உங்களுடன் தொடர்பில் அல்லது உறவுமுறையில் வருபவர்களுக்கும் அமைதித் தூதுவர்களா? நீங்கள் அமைதித் தூதுவர்கள். எங்கு தீப்பிடித்தாலும் தீயணைக்கும் படையினர் அந்தத் தீயை அணைப்பதைப் போல், அமைதித் தூதுவர்களின் கடமை, அமைதியின்மையை அமைதியாக மாற்றுவதேயாகும். எனவே, நீங்கள் அமைதித் தூதுவர்கள்தானே? உறுதியாகவா? நிச்சயமாகவா? உறுதியாகவா? இங்கிருந்து பார்க்கும்போது காட்சி மிகவும் நன்றாக இருக்கிறது. பல குமார்களைப் பார்க்கும்போது பாப்தாதா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். பாப்தாதா முன்னர் உங்களுக்கு ஒரு திட்டத்தை வழங்கியிருந்தார். டெல்லியில் அதிகபட்சமான எண்ணிக்கையில் குமார்கள் இருக்கிறார்கள். குமார்கள் என்றால் சண்டையிடுபவர்கள் என்றே அரசாங்கம் நினைக்கிறது. குமார்கள் என்றாலே அரசாங்கம் பயப்படுகிறது. குமார்கள் என்றாலே பயப்படுகின்ற அரசாங்கம், ‘அமைதித் தூதுவர்கள்’ என்ற பட்டத்துடனான குமார்களான உங்களை வரவேற்க வேண்டும். அப்போது மட்டுமே குமார்களான நீங்கள் அற்புதங்களைச் செய்துள்ளீர்கள் எனச் சொல்ல முடியும். பிரம்மாகுமார்கள் அமைதித்தூதுவர்கள் என்பது உலகெங்கும் பரவவேண்டும். இது சாத்தியமா? இதை டெல்லியில் செய்யுங்கள். நீங்கள் அதைச் செய்வீர்கள்தானே? தாதிகள் இதைச் செய்வீர்களா? பல குமார்கள் இருக்கிறார்கள். ஒரு குழுவில் இத்தனை பேர் இருந்தால், சகல குழுக்களிலும் எத்தனை பேர் இருப்பார்கள். உலகில் எத்தனை பேர் இருப்பார்கள்? (அண்ணளவாக 100000 பேர்) எனவே, குமார்களே, அற்புதங்களைச் செய்யுங்கள்! அரசாங்கம் குமார்களின் மீது வைத்திருக்கும் தவறான பார்வையைச் சரியாக்குங்கள். எவ்வாறாயினும், உங்களின் மனங்களிலேனும் அமைதியின்மை இருக்கக்கூடாது. உங்களின் சகபாடிகளுக்கிடையே அமைதியின்மை எதுவும் இருக்கக்கூடாது. உங்களின் இடங்களில் எந்தவிதமான அமைதியின்மையும் இருக்கக்கூடாது. உங்களின் நகரங்களிலும் அமைதியின்மை எதுவும் இருக்கக்கூடாது. குமார்களான உங்களின் முகங்களில் ஒரு பலகையை எழுதிப் போட வேண்டியதில்லை. ஆனால், நீங்கள் அமைதித் தூதுவர்கள் என்பது உங்களின் நெற்றிகளில் எழுதியிருப்பது இயல்பாகவே அனுபவம் செய்யப்பட வேண்டும். இது ஓகேயா?
குமாரிகள்: குமாரிகளும் பலர் இருக்கிறார்கள். நிலையங்களில் வசிக்கும் குமாரிகள் அல்ல, நிலையங்களில் வசிக்காத குமாரிகள் மட்டும் எழுந்து நில்லுங்கள்! குமாரிகளான உங்கள் எல்லோருடைய இலட்சியமும் என்ன? நீங்கள் வேலை செய்ய விரும்புகிறீர்களா அல்லது உலகச் சேவை செய்ய விரும்புகிறீர்களா? உங்களின் தலைமீது ஒரு கிரீடத்தை வைக்க விரும்புகிறீர்களா அல்லது ஒரு கூடையை (சுமையை) வைக்க விரும்புகிறீர்களா? உங்களின் தலைமீது எதை வைக்க விரும்புகிறீர்கள்? பாருங்கள், குமாரிகளான நீங்கள் கருணைநிறைந்தவர்கள் ஆகவேண்டும். உலகிலுள்ள ஆத்மாக்கள் எல்லோருக்கும் நன்மை கிடைக்கட்டும். குமாரிகள் 21 சந்ததியை ஈடேற்றக்கூடியவர்கள் என குமாரிகளைப் பற்றி நினைவுகூரப்படுகிறது. எனவே, அரைக்கல்பத்திற்கு 21 குலங்கள் இருக்கும். ஆகவே, நீங்கள் 21 குலங்களை ஈடேற்றக்கூடிய குமாரிகளா? உங்களின் கைகளை உயர்த்துங்கள். ஒரு குடும்பத்தை மட்டுமன்றி, 21 குலங்கள். நீங்கள் இதைச் செய்வீர்களா? பாருங்கள், உங்களின் பெயர்கள் குறித்து வைக்கப்படுகின்றன. அதன்பின்னர், நீங்கள் கருணைநிறைந்தவர்கள் ஆகினீர்களா அல்லது கர்மக்கணக்குகள் இன்னமும் எஞ்சியுள்ளனவா எனச் சோதிக்கப்படும். இப்போது, காலத்திற்கு முன்னே தயார் ஆகும்படி காலம் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது. நீங்கள் தொடர்ந்து காலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால், காலம் கடந்து விடும். ஆகவே, நீங்கள் எல்லோருமே கருணைநிறைந்த தந்தையின், உலக உபகாரியின் கருணைநிறைந்த குழந்தைகள் என்ற இலட்சியத்தை வைத்திருங்கள். இது ஓகேயா? நீங்கள் கருணைநிறைந்தவர்கள்தானே? மேலும் கருணைநிறைந்தவர்கள் ஆகுங்கள்! சிறிது அதிக வேகத்துடன் இப்படி ஆகுங்கள். குமாரிகள் தந்தையின் சிம்மாசனத்தை மிக இலகுவாகப் பெறுகிறார்கள். புது வருடத்தில் நீங்கள் என்ன புதிய அற்புதங்களைச் செய்கிறீர்கள் எனப் பார்ப்போம். அச்சா.
இந்தத் தடவை ஊடகத்துறைப் பிரிவில் இருந்து 108 இரத்தினங்கள் வந்துள்ளார்கள்: இது நல்லது. ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் அற்புதங்களைச் செய்ய வேண்டும். எல்லோரும் தந்தையிடமிருந்து நிச்சயமாகத் தமது ஆஸ்தியைத் தாம் கோர வேண்டும் என அவர்களின் புத்தியை அது தொட வேண்டும். எவருக்கும் இது கிடைக்காமல் போகக்கூடாது. ஊடகத்துறையின் கடமை, வார்த்தையைப் பரப்புவதே. இப்போது, வெளிநாடுகளிலும் ஊடகத்துறையின் நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறதல்லவா? நல்லது. வெவ்வேறு வடிவங்களில் நிகழ்ச்சிகள் நடக்கும்போது, மக்களுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்படும். அவர்கள் நன்றாகச் செய்கிறார்கள். தொடர்ந்தும் அவ்வாறே செய்வார்கள். வெற்றிக்கு ஏற்கனவே உத்தரவாதம் உள்ளது. வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த எல்லோரும் எத்தகைய சேவையைச் செய்தாலும், பாப்தாதா தொடர்ந்து அந்தச் செய்திகளைப் பெறுகிறார். சேவை செய்வதற்கான தமக்கேயுரிய வசதிகளை ஒவ்வொரு பிரிவினரும் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கேயுரிய வழிமுறையையும் கொண்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும், வெவ்வேறு பிரிவுகள் இருப்பதனால், ஒவ்வொரு பிரிவும் மற்றவர்களுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதைக் காணமுடிகிறது. நல்லது. போட்டி போடாதீர்கள், ஆனால் நீங்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடலாம். வெவ்வேறு பிரிவுகள் சேவை செய்தபின்னர், ஒவ்வொரு பிரிவினரின் பெறுபேறு என்னவென்றால், பல ஐபி களும் விஐபி களும் தொடர்பில் வருகிறார்கள். இங்கே இன்னமும் ‘மைக்குகள்’ அழைத்து வரப்படவில்லை. எனினும், அவர்கள் தொடர்பிலும் உறவுமுறையிலும் வந்துள்ளார்கள். அச்சா.
பாப்தாதா உங்களுக்குச் செய்வதற்கெனக் கொடுத்த அப்பியாசம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒரு கணம், அசரீரி ஆகுங்கள். மறுகணம், நடக்கும்போதும் அசையும்போதும் ஒரு தேவதை ஆகுங்கள். இதுவே பாபாவிலும் தாதாவிலும் வைத்திருக்கும் அன்பின் பிரதிபலனாகும். அதனால், இப்போது இந்த ஆன்மீக அப்பியாசத்தைச் செய்யுங்கள். ஒரு விநாடியில் அசரீரி ஆகுங்கள். ஒரு விநாடியில் ஒரு தேவதை ஆகுங்கள். (பாப்தாதா அப்பியாசத்தைச் செய்வித்தார்). அச்சா. நாள் முழுவதும் நடக்கும்போதும் அசையும்போதும் நீங்கள் இந்த அப்பியாசத்தைச் செய்தால் அது இலகுவாக உங்களுக்கு பாபாவை நினைவூட்டும்.
எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருடைய நினைவுகளும் பாப்தாதாவை வந்தடைந்தன. ஒவ்வொரு குழந்தையும், எனது நினைவை பாபாவிற்குக் கொடுங்கள்! எனது நினைவை பாபாவிடம் கொடுங்கள்! என்றே உணர்கிறார்கள். சிலர் அதைக் கடிதங்கள் மூலம் அனுப்புகிறார்கள். சிலர், வாழ்த்துமடல்கள் மூலம் அனுப்புகிறார்கள். சிலர் வார்த்தைகளால் அனுப்புகிறார்கள். ஆனால், பாப்தாதா ஒவ்வொருவரையும் தனது கண்களில் அமிழ்த்தியவண்ணம், அந்த நினைவிற்குப் பதிலாக, எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் பலமில்லியன் மடங்கு அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். நேரம் என்னவாக இருந்தாலும், இந்த வேளையில், உங்களில் பெரும்பாலானோர் உங்களின் மனதில் மதுவனத்தையும் மதுவனத்தின் பாப்தாதாவையும் வைத்திருப்பதை பாப்தாதா பார்க்கிறார்.
மூன்று சிம்மாசனசங்களிலும் அமர்ந்திருக்கும் எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் சுயத்தின் அதிபதிகளாக இருக்கும் குழந்தைகளுக்கும் சதா பாப்தாதாவிற்குப் பிரதிபலனாகத் தந்தைக்குச் சமமாக இருக்கும் குழந்தைகளுக்கும் திரும்பிச் செல்லும் பயணத்தின் விழிப்புணர்வு சொரூபங்களாக சதா இருக்கும் குழந்தைகளுக்கும் தமது எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் சதா தந்தையைப் பின்பற்றும் குழந்தைகளுக்கும் பாப்தாதாவிடமிருந்து அதிக, அதிக, அதிகளவு அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் மாஸ்ரர் அருள்பவராகி, உங்களுடைய நல்லாசிகளின் விதைகளை சகல ஆத்மாக்களின் மீதும் விதைப்பீர்களாக.பழத்திற்காகக் காத்திருக்காதீர்கள். ஆனால், தொடர்ந்து ஒவ்வோர் ஆத்மாவின் மீதும் உங்களின் நல்லாசிகளின் விதைகளை விதையுங்கள். ஆத்மாக்கள் எல்லோரும் நிச்சயமாக சரியான நேரத்தில் விழித்தெழுவார்கள். யாராவது உங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், நீங்கள் உங்களின் கருணைநிறைந்த உணர்வுகளைக் கைவிடக்கூடாது. அந்த எதிர்ப்பு, அந்த அவமதிப்புகள், அந்த அவதூறுகள் பசளையைப் போல் செயற்பட்டு, நல்ல பழத்தைக் கொடுக்கும். எந்தளவிற்கு அவர்கள் உங்களை அவமதிக்கிறார்களோ, அந்தளவிற்கு அவர்கள் உங்களின் புகழைப் பாடுவார்கள். இதனாலேயே, மாஸ்ரர் அருள்பவர்களாக நீங்கள் உங்களின் மனோபாவம், அதிர்வலைகள், வார்த்தைகளால் ஒவ்வோர் ஆத்மாவின் மீதும் நல்லாசிகளைத் தொடர்ந்தும் அருள வேண்டும்.
சுலோகம்:
சதா அன்புக்கடல், சந்தோஷக்கடல், அமைதிக்கடல், ஆனந்தக்கடலில் அமிழ்ந்திருக்கும் குழந்தைகளே, உண்மையான தபஸ்விகள் ஆவார்கள்.அறிவித்தல்: இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. சர்வதேச யோகா தினம். இதன்போது பிராமணக் குழந்தைகள் எல்லோரும் ஒன்றுகூடி மாலை 6.30 இலிருந்து 7.30 வரை தியானம் செய்வார்கள். ஆசீர்வாதங்களை அருள்பவரும் பாக்கியத்தை அருள்பவருமான பாப்தாதாவுடன் ஒன்றிணைந்த ரூபத்தில் ஸ்திரமாக இருந்து, சூட்சும வதனத்தில் இருந்து ஆத்மாக்கள் எல்லோருக்கும் சந்தோஷம் மற்றும் அமைதியின் ஆசீர்வாதங்களை வழங்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.