17.12.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் உங்களுக்கு ஒரு பாக்கியத்தை உருவாக்குவதற்காகவே தந்தையிடம் வந்துள்ளீர்கள். எந்தக் குழந்தைகளிடமிருந்து கடவுள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கின்றாரோ அவர்களே அதி மேன்மையான பாக்கியத்தைக் கொண்டவர்கள்.
கேள்வி:
குழந்தைகளின் எந்தத் தவறினால் மாயை அதி சக்திவாய்ந்தவள் ஆகுகின்றாள்?பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் உண்ணும்போது பாபாவை மறந்தாலும் உங்கள் உணவை பாபாவிற்குப் படைக்காமல் உண்டாலும் மாயை உங்களது உணவை உண்டு மிகவும் சக்திவாய்ந்தவள் ஆகுகின்றாள். பின்னர் அவள் குழந்தைகளாகிய உங்களுக்கு விரக்தியை ஏற்படுத்துகின்றாள். உங்களின் இந்தச் சிறிய தவறு மாயை உங்களைத் தோற்கடிக்க உதவுகிறது. இதனாலேயே தந்தையின் வழிகாட்டல்: குழந்தைகளே எனது நினைவில் உண்ணுங்கள். உங்களுடன் மாத்திரமே நான் உண்பேன் என்ற உறுதியான ஒரு சத்தியத்தைச் செய்யுங்கள். நீங்கள் உண்ணும் வேளையில் அவரை நினைவு செய்தால் அவர் குதூகலமடைவார்.பாடல்:
இன்றில்லையேல் நாளை முகில்கள் அகலும்...ஓம் சாந்தி.
உங்கள் துர்ப்பாக்கியமான நாட்கள் இப்பொழுது என்றென்றும் பாக்கியமான நாட்களாக மாறுகின்றன என்பதைக் குழந்தைளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்கள் முயற்சிக்கேற்பவே உங்களின் பாக்கியமும் வரிசைக்கிரமமாகத் தொடர்ந்தும் மாறுகின்றது. ஒரு மாணவனின் பாக்கியம் பாடசாலையிலும் தொடர்ந்து மாறும், அதாவது தொடர்ந்து அதிகரிக்கும். இப்பொழுது இந்த இரவு முடிவடைந்து உங்கள் அதிர்ஷ்டமும் மாறுகின்றது என்பது உங்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும். உங்கள் மீது ஞானம் பொழியப்படுகிறது. நாங்கள் நிச்சயமாகத் துர்ப்பாக்கியசாலிகளில் இருந்து பாக்கியசாலிகளாக மாறுகின்றோம். அதாவது நாங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றோம் என்பதை ஒவ்வொரு விவேகமான குழந்தையும் புரிந்துகொள்கின்றார். எங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக நாங்கள் எங்கள் துர்ப்பாக்கியத்தை பாக்கியமாக மாற்றுகின்றோம். இப்பொழுது இரவு, பகலாக மாறுகின்றது. வேறு எவருமேயன்றி குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். பாபா மறைமுகமானவர். அத்துடன் அவரது விடயங்களும் மறைமுகமானவை. மனிதர்கள் இலகு ஞானத்தைப் பற்றியும் இலகு இராஜ யோகத்தைப் பற்றியும் சமய நூல்களில் எழுதியுள்ளனர். அவற்றை எழுதியவர்கள் இப்பொழுது மரணித்துவிட்டனர். அவற்றை வாசித்தவர்கள் விவேகமற்றவர்கள் என்பதால் அவர்கள் எதனையும் புரிந்துகொள்ள முடியாதுள்ளனர். அங்கு பெருமளவு வேறுபாடு காணப்படுகிறது! நீங்கள் எவ்வளவு முயற்சி செய்கின்றீர்களோ அதற்கேற்ப வரிசைக்கிரமமாக நீங்களும் புரிந்துகொள்கின்றீர்கள். அனைவரும் ஒரேயளவு முயற்சியைச் செய்வார்கள் என்றில்லை. துர்ப்பாக்கியம் என்பதன் அர்த்தத்தையும் பாக்கியம் என்பதன் அர்த்தத்தையும் பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே அறிந்துள்ளீர்கள். ஏனைய அனைவரும் காரிருளினுள் இருக்கின்றனர். நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்துவதன் மூலம் அவர்களை விழித்தெழச் செய்யவேண்டும். சூரிய வம்சத்திற்கு உரியவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். அவர்களே 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆகுகின்றார்கள். சுவர்க்கத்தை ஸ்தாபிக்கும் தந்தையின் மூலம் எங்களுக்கான சுவர்க்க பாக்கியத்தை நாம் உருவாக்குகின்றோம். நீங்கள் சுவர்க்க பாக்கியத்தை தந்தையாகிய சுவர்க்கக் கடவுளிடமிருந்து பெறுகின்றீர்கள் என்பதை ஆங்கிலம் பேசுபவர்களுக்கும் விளங்கப்படுத்தலாம். சுவர்க்கத்தில் சந்தோஷமும் நரகத்தில் துன்பமும் உள்ளது. சத்தியயுகம் என்றால் சத்தியத்தின் யுகம் என்றும் அல்லது சந்தோஷத்தின் யுகம் என்றும் கலியுகமென்றால் துன்ப யுகமென்றும் அர்த்தமாகும். இது விளங்கிக்கொள்வதற்கு மிக இலகுவான விடயமாகும். நாங்கள் இப்பொழுது முயற்சி செய்கிறோம். பல ஆங்கிலேயர் கிறிஸ்தவ மக்களும் இங்கு வருவார்கள். அவர்கள் வரும்போது நீங்கள் அவர்களுக்கு கூறவேண்டும்: நாங்கள் ஒரேயொரு தந்தையாகிய சுவர்க்கக் கடவுளையே நினைவு செய்கின்றோம் ஏனெனில் மரணம் எங்கள் முன்னால் நிற்கின்றது. தந்தை கூறுகிறார்: நீங்கள் என்னிடம் வரவேண்டும். மக்கள் யாத்திரையில் செல்கின்றனர். பௌத்தர்கள் தங்கள் யாத்திரை ஸ்தலங்களையும் கிறிஸ்தவர்கள் தங்கள் யாத்திரை ஸ்தலங்களையும் கொண்டுள்ளனர். ஒவ்வொரு சமயமும் தமக்கே உரிய வெவ்வேறான சம்பிரதாயங்களையும் கொண்டுள்ளன. இது உங்கள் புத்தியின் யோகம் பற்றியதாகும். நீங்கள் உங்கள் பாகத்தை நடிக்க எந்த இடத்திலிருந்து வந்தீர்களோ அங்கு திரும்பிச்செல்ல வேண்டும். சுவர்க்கத்தை ஸ்தாபித்த தந்தையாகிய கடவுள் இதனை எமக்குக் கூறியுள்ளார். நாங்கள் உங்களுக்கு சத்தியப் பாதையைக் காட்டுகின்றோம். தந்தையாகிய கடவுளை நினைவுசெய்வதன் மூலம் உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்குக்கு இட்டுச் செல்லும். யாராவதொருவர் நோய்வாய்ப்பட்டால் அனைவரும் அவரை எச்சரிக்கை செய்து இராம நாமத்தை மீண்டும் மீண்டும் உச்சரிக்குமாறு கூறுவார்கள். பெங்கோலில் யாராவதொருவர் மரணிக்கும் தறுவாயில் இருக்கும் போது அவர்கள் அவரைக் கங்கைக் கரைக்கு எடுத்துச் சென்று “ஹரியின் (கடவுள்) பெயரை உச்சரியுங்கள், அப்போது நீங்கள் ஹரியிடம் செல்வீர்கள்” எனக் கூறுவார்கள். இருப்பினும் எவரும் அவரிடம் செல்வதில்லை. சத்திய யுகத்தில் நீங்கள் இராம நாமத்தையோ அல்லது ஹரியின் பெயரையோ உச்சரிக்குமாறு கூறமாட்டீர்கள். பக்திமார்க்கம் துவாபர யுகத்திலேயே ஆரம்பிக்கிறது. சத்திய யுகத்தில் கடவுளோ அல்லது ஒரு குருவோ நினைவு செய்யப்படுவதில்லை. நீங்கள் ஓர் ஆத்மா என்பதே அங்கு நீங்கள் நினைவு செய்ய வேண்டிய விடயம் ஆகும்: இந்த ஆத்மாவாகிய நான் இந்தச் சரீரத்தை நீக்கி எனது அடுத்த சரீரத்தை எடுப்பேன். உங்கள் சுய இராச்சியத்தை நீங்கள் நினைவு செய்கிறீர்கள். நீங்கள் சென்று உங்கள் இராச்சியத்தில் பிறப்பெடுப்பீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது நிச்சயமாக உங்கள் சுய இராச்சியத்தைப் பெறுவீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வேறு எவரை நினைவுசெய்வீர்கள்? அல்லது தான தர்மங்கள் செய்வீர்கள்? அங்கு எவருமே ஏழைகளாக இல்லாததால் நீங்கள் அங்கு தான தர்மங்கள் செய்யவேண்டிய தேவையில்லை. பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்கள், ஞான மார்க்கத்தின் சம்பிரதாயங்களிலிருந்து வேறுபட்டது. நீங்கள் இப்பொழுது அனைத்தையும் தந்தைக்குக் கொடுத்து 21 பிறவிகளுக்கான உங்கள் ஆஸ்தியைக் கோரிக்கொள்கிறீர்கள். அந்நேரத்தில் அங்கு தானங்களையோ புண்ணியச் செயல்களையோ செய்யவேண்டிய தேவை இல்லை. நாங்கள் அனைத்தையும் தந்தையாகிய கடவுளிடம் கொடுக்கின்றோம் பின்னர் கடவுளே அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறார். அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எவ்வாறு அவர் அதன் பலனைக் கொடுப்பார்? அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அது உங்கள் துர்ப்பாக்கியமே ஆகும். உங்கள் பற்றை அகற்றுவதற்காக அவர் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இந்த இரகசியத்தைப் புரிந்துகொள்கிறீர்கள். தேவையில்லாவிடின் ஏன் பாபா அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்? நீங்கள் இங்கு எதனையும் சேகரிக்கத் தேவையில்லை. நீங்கள் இங்கிருக்கும் அனைத்திலிருந்தும் உங்கள் பற்றை அகற்ற வேண்டும். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை மிக இலேசானவராகக் கருத வேண்டும் என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். நாங்களே தந்தையின் குழந்தைகள். ஆத்மாக்களாகிய நாங்கள் ரொக்கட்டுக்களையும் விட வேகமானவர்கள். நீங்கள் அத்தகைய ஆத்ம உணர்வில் நடந்தால் நீங்கள் ஒருபோதும் களைப்படைய மாட்டீர்கள். அங்கு சரீர உணர்வும் இருக்கமாட்டாது. அவ்வுணர்வு உங்கள் கால்கள் தொழிற்படாமல் நீங்களே பறப்பது போன்றிருக்கும். ஆத்ம உணர்வில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். முன்னர் மக்கள் யாத்திரை போன்றவற்றைக் கால்நடையாகவே மேற்கொள்வர். அந்நேரத்தில் மனிதர்களின் புத்தி தமோபிரதானாக இருக்கவில்லை. அவர்கள் அதிகளவு நம்பிக்கையுடன் செல்வார்கள். அவர்கள் களைப்படையவில்லை. நீங்கள் பாபாவை நினைவு செய்வதன் மூலம் உதவியைப் பெறுகிறீர்கள். பக்தர்கள் தங்களுக்கு வேண்டியவற்றிற்காக கல்லினால் செய்யப்பட்ட சிலைகளை வணங்கிய பொழுதிலும் பாபா அந்நேரத்தில் தற்காலிகமாக அவர்களது விருப்பங்களை பூர்த்தி செய்துள்ளார். அந்த நேரத்தில் நினைவு ரஜோபிரதானாக இருந்ததனால் அவர்கள் சிறிதளவு சக்திகளைப் பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் களைப்படையவில்லை. முக்கியஸ்தர்கள் இப்பொழுது மிக விரைவாகக் களைப்படைகின்றனர். ஏழை மக்கள் பல யாத்திரைகள் செல்கின்றனர். செல்வந்த மக்கள் அதிகளவு பகட்டுடன் குதிரைகளின் மீது செல்கின்றனர். ஆனால் ஏழை மக்கள் கால்நடையாகச் செல்கின்றனர். ஏழை மக்களைப் போன்று செல்வந்தர்கள் தங்கள் பக்திக்கான வெகுமதியை அதிகளவு பெறுவதில்லை. இந்நேரத்தில் பாபா ஏழைகளின் பிரபுவாக உள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே நீங்கள் ஏன் குழப்பம் ௮டைகின்றீர்கள்? நீங்கள் ஏன் பாபாவை மறக்கின்றீர்கள்? பாபா கூறுகின்றார்: நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரேயொரு மணவாளனை மாத்திரம் நினைவு செய்வதே ஆகும். நீங்கள் அனைவரும் மணவாட்டிகளே. ஆகவே நீங்கள் உங்கள் மணவாளனை நினைவு செய்யவேண்டும். உங்கள் மணவாளனுக்கு உணவு படைக்காமல் நீங்கள் உண்பதையிட்டு நீங்கள் வெட்கப்படவில்லையா? அவர் உங்கள் மணவாளன், அத்துடன் அவர் தந்தையும் ஆவார். அவர் வினவுகின்றார்: எனக்கு நீங்கள் உணவு படைக்க மாட்டீர்களா? உங்கள் உணவை நீங்கள் எனக்குப் படைக்க வேண்டும்தானே? பாபா உங்களுக்கு காட்டியுள்ள சாமர்த்தியமான வழிமுறைகளைப் பாருங்கள். நீங்கள் அவரை உங்கள் தந்தையாகவும் மணவாளனாகவும் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்தானே? உங்களுக்கு உணவளிப்பவரான ஒரேயொருவருக்கே நீங்கள் முதலில் உணவு படைக்க வேண்டும். பாபா கூறுகிறார்: முதலில் நீங்கள் எனக்கு உணவு படைத்த பின்னரே எனது நினைவில் நீங்கள் உண்ணவேண்டும். இதற்கு அதிகளவு முயற்சி தேவை. நீங்கள் நிச்சயமாக பாபாவை நினைவுசெய்ய வேண்டும் என்று பாபா மீண்டும் மீண்டும் கூறுகிறார். இந்த பாபா தானும் மீண்டும் மீண்டும் இம்முயற்சியைச் செய்கிறார். குமாரிகளாகிய உங்களுக்கு இம்முயற்சி மிக இலகுவானது. நீங்கள் இன்னும் ஏணியில் ஏறவில்லை. ஒரு குமாரி நிச்சயிக்கப்பட்டவருடன் நிச்சயார்த்தம் செய்யப்படுகின்றாள். நீங்கள் அத்தகைய மணவாளனை நினைவுசெய்த பின்னரே உங்கள் உணவை உண்ண ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் அவரை நினைவு செய்யும் போது அவர் உங்களிடம் வருகின்றார். நீங்கள் அவரை நினைவு செய்யும் போது அவர் உணவின் நறுமணத்தை ஏற்கின்றார். ஆகவே நீங்கள் பாபாவுடன் இவ்வாறாக கதைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் அவரது நினைவில் இரவில் விழித்திருப்பீர்களாயின் அந்தப் பயிற்சி அதிகரித்து பின்னர் பகல் முழுவதும் நினைவில் இருக்கக்கூடியதாக இருக்கும். நீங்கள் உண்ணும் போது பாபாவை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் அந்த மணவாளனுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்;பட்டுள்ளீர்கள். நீங்கள் உறுதியான சத்தியத்தைப் பேண வேண்டும்: நான் உங்களுடன் மாத்திரமே உண்பேன். நீங்கள் அவரை நினைவு செய்யும் போது மாத்திரமே அவர் அதனை உண்பார் இல்லையா? இருந்தபோதிலும் அவர் நறுமணத்தை மாத்திரமே எடுப்பார். ஏனெனில் அவருக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. குமாரிகளாகிய உங்களுக்கு இது மிக இலகுவானது. உங்களிடம் அதிக சௌகரியங்கள் காணப்படுகின்றன. எனது அழகிய மணவாளனாகிய சிவ பாபாவே நீங்கள் மிகவும் இனிமையானவர்! நான் உங்களை அரைக் கல்பமாக நினைவுசெய்கிறேன். நீங்கள் இப்பொழுது வந்து என்னைச் சந்தித்தீர்கள். நான் எதனை உண்கிறேனோ அதனையே நீங்களும் உண்ண வேண்டும். ஒரு தடவை மாத்திரம் அவரை நினைத்துவிட்டு பின்னர் அவருக்கு உணவு படைக்க மறந்துவிட்டு நீங்களே தொடர்ந்து உண்பது என்றல்ல. நீங்கள் அவரை மறந்தால் அவரால் எதனையும் எடுக்க முடியாது. நீங்கள் சோறு, தானியம், மாம்பழம் அல்லது இனிப்பு போன்ற பல்வேறுவகையான உணவையும் உண்கிறீர்கள். நீங்கள் அவரை ஆரம்பத்தில் நினைவு செய்தபின்னர் நிறுத்திவிடுவதாக இருக்கக்கூடாது. பின்னர் எவ்வாறு அவரால் ஏனையவற்றை உண்ண முடியும்? உங்கள் மணவாளன் உண்ணவில்லையாயின் மாயை உங்களிருவருக்கும் இடையில் வந்து அதனை உண்பாள். அவள் அவரை உண்ண விடமாட்டாள். மாயை அதனை உண்ணும்போது அவள் சக்திவாய்ந்தவள் ஆகி உங்களைத் தொடர்ந்தும் தோற்கடிப்பதை நீங்கள் பார்க்கலாம். பாபா உங்களுக்கு அனைத்து வழிமுறைகளையும் காட்டியுள்ளார். நீங்கள் உங்கள் தந்தையாகவும் உங்கள் மணவாளனாகவும் உள்ள பாபாவை நினைவு செய்வீர்களேயாயின் அவர் உங்களையிட்டு மிகவும் பூரிப்படைவார். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா நான் உங்களுடன் மாத்திரமே உண்பேன், உங்களுடன் மாத்திரமே உட்காருவேன். நான் உங்கள் நினைவிலேயே உண்கிறேன். இந்த ஞானத்தின் அடிப்படையில் நீங்கள் (பாபா) நறுமணத்தை மாத்திரமே எடுப்பீர்கள் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். இந்தச் சரீரம் கடனாக எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் பாபாவை நினைவுசெய்யும்போது அவர் வருகிறார். அனைத்தும் உங்கள் நினைவிலேயே தங்கியுள்ளது. யோகம் என்பது இதனையே குறிக்கிறது. யோகத்திற்கு முயற்சி தேவைப்படுகிறது. சந்நியாசிகள் இதனை ஒருபோதும் கூறமாட்டார்கள். நீங்கள் முயற்சி செய்ய விரும்பினால் பாபாவின் அனைத்து ஸ்ரீமத்தையும் குறித்துக்கொண்டு முழு முயற்சி செய்யுங்கள். பாபா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார். அவர் கூறுகிறார்: நான் செய்த அதே செயல்களையே செய்யுங்கள். அச்செயல்களை நான் உங்களுக்குக் கற்பிக்கின்றேன். பாபா செயல்களைச் செய்யவேண்டியதில்லை. சத்தியயுகத்தில் உங்கள் செயல்களினால் நீங்கள் வேதனைப்பட மாட்டீர்கள். பாபா உங்களுக்கு மிக இலகுவான விடயமொன்றைச் செய்வதற்கு கூறுகிறார்: நான் உங்களுடன் மாத்திரம் உண்பேன், நீங்கள் சொல்வதை மாத்திரமே செவிமடுப்பேன். இது உங்களையிட்டே நினைவு கூரப்பட்டுள்ளது. அவரை உங்கள் மணவாளன் அல்லது உங்கள் தந்தையின் வடிவில் நினைவு செய்யுங்கள். ஞானக்கடலைக் கடைவதன் மூலம் உங்களால் ஞானக் கருத்துக்களைப் பிரித்தெடுக்க முடியுமென நினைவு கூரப்பட்டுள்ளது. இதனைப் பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதோடு நீங்கள் ஆரோக்கியமானவர்களாகவும் ஆகுவீர்கள். முயற்சி செய்பவர்கள் அதனால் இலாபம் ௮டைவார்கள், முயற்சி செய்யாதவர்கள் நஷ்டம் ௮டைவார்கள். உலகிலுள்ள அனைவரும் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவார்கள் என்றில்லை. இதுவும் கணக்கிடப்படுகிறது. பாபா அனைத்தையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். நீங்கள் யாத்திரையில் செல்வதாகப் பாடல் ஒன்றைக் கேட்டீர்கள். நீங்கள் நிச்சயமாக யாத்திரையில் செல்லும் போது உணவு போன்றவற்றை உண்ண வேண்டும். மணவாட்டி மணவாளனுடனும் குழந்தை தந்தையுடனும் உண்பார்கள். அதுவே இங்கும் நிகழ்கின்றது. நீங்கள் மணவாளன்மீது கொண்டிருக்கும் அன்பிற்கேற்பவே உங்கள் சந்தோஷத்தின் அளவும் அதிகரிக்கும். உங்கள் புத்தியில் நம்பிக்கை ஏற்படும்போது நீங்கள் வெற்றியாளர்கள் ஆகுவீர்கள். யோகத்தை கொண்டிருப்பதென்பது ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதாகும். இது உங்கள் புத்தி யோகத்தின் ஓட்டப் பந்தயமாகும். நீங்கள் மாணவர்கள். ஆசிரியர் உங்களுக்கு எவ்வாறு இந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது என்பதைக் கற்பிக்கின்றார். தந்தை கூறுகிறார்: நாள் முழுவதும் நீங்கள் மாத்திரமே செயல்களைச் செய்கிறீர்கள் என ஒரு போதும் எண்ணாதீர்கள். நீங்கள் செயல்களை ஆற்றிய பின்னர் ஓர் ஆமையாகி நினைவில் அமர வேண்டும். ரீங்கரிக்கும் வண்டுகள் நாள்முழுவதும் ரீங்காரம் செய்து பின்னர் அவற்றில் சில பறந்து செல்வதுடன் ஏனையவை மடிந்துவிடுகின்றன. அது ஒரு உதாரணமே ஆகும். பிராமணர்களாகிய நீங்கள் ஞானத்தை ரீங்காரம் செய்து ஏனையோரையும் உங்களுக்குச் சமமாக ஆக்குகிறீர்கள். சிலர் அதிகளவு அன்பை உருவாக்கிக் கொள்கின்றனர். ஏனையோர் மடிந்து உக்கிப்போகின்றனர். சிலர் அரைவாசி மாத்திரம் வளர்ந்த பின் சென்றுவிடுகின்றனர். அதன்பின் பூச்சிகளாக மாறுகின்றனர். ஆகவே இந்த ஞானம் அனைத்தையும் ரீங்கரிப்பது மிக இலகுவானதாகும். “மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்கு கடவுளுக்கு அதிக காலம் எடுக்கவில்லை” என்ற கூற்று நினைவுகூரப்படுகிறது. நாங்கள் இப்போது யோகம் செய்கிறோம். நாங்கள் தேவர்களாகுவதற்காக முயற்சி செய்கிறோம். இந்த ஞானம் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது: அவர் மனிதர்களைத் தேவர்களாக்கிய பின்னர் சென்றுவிட்டார். சத்தியயுகத்தில் அனைவரும் தேவர்களாவர். சங்கம யுகத்திலேயே கடவுள் வந்து மனிதர்களைத் தேவர்கள் ஆக்கியிருக்க வேண்டும். தேவர்களாகுவதற்கான யோகம் சத்திய யுகத்திலே கற்பிக்கப்பட்டிருக்க முடியாது. சத்திய யுகத்தின் ஆரம்பத்திலேயே தேவதர்மம் ஆரம்பித்துவிட்டது. கலியுக இறுதியில் அசுர சமயமே இருக்கின்றது. இந்தவிடயம் கீதையில் மாத்திரமே எழுதப்பட்டுள்ளது. மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு அதிக காலம் எடுக்கவில்லை ஏனெனில் அவர் உங்களுக்கு உங்கள் இலக்கையும் இலச்சியத்தையும் கொடுத்துள்ளார். அங்கு உலகிலுள்ள அனைவருக்கும் ஒரேயொரு தர்மமே இருக்கும். முழு உலகமும் இருக்கும்;;;;;;;. அங்கு சீனாவும் ஐரோப்பாவும் இருக்க மாட்டாது என்று இல்லை. அவை இருக்கும், ஆனால் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். தேவதர்மத்திற்கு உரியவர்கள் மாத்திரமே அங்கு இருப்பார்கள். ஏனைய சமயத்தினர் இருக்க மாட்டார்கள். இப்பொழுது இது கலியுகம். கடவுளே உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுகிறார். தந்தை கூறுகிறார்: நீங்கள் 21 பிறவிகளுக்கு சதா சந்தோஷமாக இருப்பீர்கள். இதனையிட்டு அங்கு எந்தச் சிரமமும் இல்லை. கடவுளை அடைவதற்காக பக்திமார்க்கத்தில் நீங்கள் அதிகளவு முயற்சி செய்தீர்கள். ஒருவர் சத்தத்திற்கு அப்பால் நிர்வாணாவிற்கு சென்றதாக கூறப்பட்டுள்ளது. அவர் கடவுளிடம் சென்றுவிட்டார் என அவர்கள் ஒருபோதும் கூற மாட்டார்கள். அவர் சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்டதாகவே அவர்கள் கூறுவார்கள். ஓர் ஆத்மா அங்கு செல்வதற்காக சுவர்க்கம் ஸ்தாபிக்கப்பட மாட்டாது. நீங்கள் அனைவருமே அங்கு செல்லவேண்டும். கடவுளே மகா காலன் என கீதையில் எழுதப்பட்டுள்ளது. நுளம்புக் கூட்டத்தைப் போல் அனைவரையும் அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். இந்தச் சக்கரம் சுழல வேண்டும் என்று புத்தியும் கூறுகிறது. ஆகவே முதலில் சத்திய யுகத்து தேவதர்மம் நிச்சயமாக மீண்டும் வரும். பின்னர் ஏனைய சமயங்கள் மீண்டும் தோன்றும். பாபா அத்தகைய இலகுவான விடயத்தைக் கூறுகிறார்: மன்மனாபவ! அவ்வளவே! 5000 வருடங்களுக்கு முன்னர் கீதையின் கடவுளும் கூறினார்: அன்பிற்கினிய குழந்தைகளே! கிருஷ்ணர் இதனைக் கூறியிருப்பாராயின் ஏனைய சமயத்தைச் சார்ந்த மக்கள் அதனைச் செவிமடுக்கமாட்டார்கள். கடவுள் இதைக் கூறும் பொழுதே தந்தையாகிய கடவுள் ஒரேயொருவரே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்கிறீர்கள். பின்னர் நீங்கள் சென்று அங்கு பூகோளத்தை ஆட்சி செய்பவர்கள் ஆகுகின்றீர்கள். இதற்கு எந்தவொரு செலவும் இல்லை. நீங்கள் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியைத் அறிந்திருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் ஞானக்கடலைக் கடைய வேண்டும். இரவு பகலாகச் செயல்களைச் செய்யும்போது இத்தகைய முயற்சியை மேற்கொள்ளுங்கள். நீங்கள் ஞானக்கடலை கடையாமலும் தந்தையை நினைவு செய்யாமலும் நாள்முழுவதும் செயல்களைத் தொடர்ந்து செய்வீர்களேயாயின் நீங்கள் தொடர்ந்தும் அத்தகைய எண்ணங்களையே இரவிலும் கொண்டிருப்பீர்கள். கட்டடங்களைக் கட்டுபவர்கள் கட்டடங்களைப் பற்றி மாத்திரமே சிந்திப்பார்கள். ஞானக்கடலைக் கடையும் பொறுப்பு இவரிடம் (பிரம்மா) கொடுக்கப்பட்ட போதிலும் இலக்ஷ்மியிடமே ஞானக் கலசம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் நீங்கள் அனைவரும் இலக்ஷ்மிகள் ஆகவேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஸ்ரீமத்தைக் குறித்துக் கொள்வதுடன் முயற்சி செய்யுங்கள். தந்தையைப் போன்று தந்தை கற்பித்ததை மாத்திரமே செயலில் இடுங்கள். ஞானக்கடலை கடைந்து ஞானக் கருத்துக்களை பிரித்தெடுங்கள்.2. தந்தையின் நினைவிலேயே உண்பீர்கள் என்று உங்களுக்கே நீங்கள் சத்தியம் செய்து கொள்ளுங்கள். ‘நான் உங்களுடன் மாத்திரமே அமருவேன், உங்களுடன் மாத்திரமே உண்பேன்’. உங்களது இந்தச் சத்தியத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் செயல்களிலும் உங்களின் உறவுமுறைகளிலும் எந்தவிதமான சுயநல நோக்கங்களில் இருந்தும் விடுபட்டு அதன்மூலம் தந்தையைப் போல் கர்மாதீத் ஆகுவீர்களாக.அனைவரையும் விடுவிப்பதே குழந்தைகளான நீங்கள் செய்ய வேண்டிய சேவையாகும். அதனால் மற்றவர்களை விடுவிக்கும்போது உங்களை எந்தவிதமான பந்தனத்திலும் கட்டிக் கொள்ளாதீர்கள். ‘எனது’ என்ற எந்தவிதமான எல்லைக்குட்பட்ட உணர்வில் இருந்தும் நீங்கள் விடுபடும்போதே உங்களால் அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்ய முடியும். பௌதீகமான மற்றும் ஆன்மீக வாழ்க்கைகளிலும் தமது செயல்களிலும் உறவுமுறைகளிலும் எந்தவிதமான சுயநல நோக்கங்களில் இருந்தும் விடுபட்டுள்ள குழந்தைகளால் தந்தையைப் போல் கர்மாதீத் ஸ்திதியை அனுபவம் செய்ய முடியும். அதனால் சோதித்துப் பாருங்கள்: நீங்கள் எந்தவிதமான கர்ம பந்தனத்தில் இருந்து எந்தளவிற்குப் பற்றற்றவர் ஆகியுள்ளீர்கள்? வீணான சுபாவம் அல்லது சம்ஸ்காரங்களின் ஆதிக்கத்தில் இருந்து நீங்கள் விடுபட்டுள்ளீர்களா?
சுலோகம்:
இலகுவாகப் பழகுவதுடன் சரள சுபாவத்தையும் கொண்டவர்கள், இலகு யோகிகளாக இருப்பதுடன் கள்ளங்கபடமற்ற பிரபுவினால் நேசிக்கப்படுகிறார்கள்.