17.12.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அனைவரையும் சந்தோஷப்படுத்துங்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள்.
கேள்வி:
இரட்டை அகிம்சாவாதிக் குழந்தைகளாகிய நீங்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்?பதில்:
1) எவரையும் துன்பப்பட வைக்கும் வார்த்தைகளை நீங்கள் கூறாமல் இருப்பதில் கவனம் செலுத்துங்கள். ஏனெனில், வார்த்தைகளால் ஒருவருக்குத் துன்பம் விளைவிப்பதும் ஒரு வன்முறையே ஆகும்.
2) நாங்கள் தேவர்களாகப் போகின்றோம். எனவே, எங்களின் நடத்தை மிகவும் இராஜரீகமாக இருக்க வேண்டும். எங்களின் உணவும், பானமும் மிகவும் உயர் தரமாகவோ அல்லது மிகவும் எளிமையாகவோ இருக்கக் கூடாது.பாடல்:
இது பலவீனமானவர்களுக்கும் பலசாலிகளுக்கும் இடையிலான ஒரு யுத்தம்.ஓம் சாந்தி.
தந்தை ஒவ்வொரு நாளும் இனிமையிலும் இனிமையான, நீண்டகாலம் தொலைந்திருந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு முதலாவதாக விளங்கப்படுத்துகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதியவாறு இங்கே அமர்ந்திருந்து, தந்தையை நினைவு செய்யுங்கள். 'தயவுசெய்து கவனிக்கவும்!" எனக் கூறப்படுகின்றது. எனவே, தந்தை கூறுகின்றார்: முதலில், தந்தை மீது கவனத்தைச் செலுத்துங்கள். தந்தை மிக இனிமையானவர். அவர் அன்புக்கடல் என்றும், ஞானக்கடல் என்றும் அழைக்கப்படுகின்றார். எனவே, நீங்களும் அன்பானவர்கள் ஆகவேண்டும். உங்களின் ஒவ்வோர் எண்ணத்திலும், வார்த்தையிலும், செயலிலும் நீங்கள் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். தந்தை எவரையும் சந்தோஷம் அற்றவர்கள் ஆக்குவதில்லை. தந்தை உங்களைச் சந்தோஷமானவர்கள் ஆக்கவே வந்திருக்கின்றார். நீங்களும் எவருக்கும் எவ்வகையான துன்பமும் விளைவிக்கக் கூடாது. நீங்கள் அத்தகைய செயல்கள் எதனையும் செய்யக்கூடாது. அது உங்களின் எண்ணங்களிலேனும் புகக்கூடாது. எவ்வாறாயினும், அது இறுதியில் உங்களின் ஸ்திதியாகும். பௌதீக அங்கங்கள் உங்களை ஏதாவது தவறுகள் செய்ய வைக்கின்றன. நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகவும், ஏனையவர்களை உங்களின் சகோதர ஆத்மாக்களாகவும் கருதினால், எவருக்கும் துன்பம் விளைவிக்க மாட்டீர்கள். நீங்கள் சரீரத்தைப் பார்க்கா விட்டால், எவ்வாறு எவருக்கும் துன்பம் விளைவிக்க முடியும்? இதற்கு மறைமுகமான முயற்சி தேவை. இவை யாவும் புத்திக்குரிய வேலையாகும். நீங்கள் இப்பொழுது தெய்வீகப் புத்தி உடையவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் தெய்வீகப் புத்தியைக் கொண்டிருந்த பொழுது, பெருமளவு சந்தோஷத்தை அனுபவித்தீர்கள். நீங்கள் சந்தோஷ தாமத்தின் அதிபதிகளாக இருந்தீர்கள், இது துன்ப தாமமாகும். இது மிக எளிமையானது. அந்த மௌன தாமமே எங்களின் இனிய வீடாகும். நாங்கள் எங்களின் பாகங்களை நடிப்பதற்காக அங்கிருந்து வந்தோம். நாங்கள் நீண்டகாலத்திற்கு எங்களின் துன்பப் பாகங்களை நடித்தோம், இப்பொழுது நாங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்ல விரும்புகின்றோம். எனவே, நாங்கள் எங்களைச் சகோதரர்களாகக் கருதவேண்டும். ஆத்மாக்களால் ஆத்மாக்களுக்குத் துன்பம் விளைவிக்க முடியாது. ஆத்மாக்களுடன் பேசும்பொழுது, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். ஆத்மா சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றார். இது சிவபாபாவின் இரதம் ஆகும். தாங்கள் சிவபாபாவின் இரதத்தை அலங்கரிப்பதாகவும், தாங்கள் சிவபாபாவின் இரதத்திற்கு உணவூட்டுவதாகவும் புத்திரிகள் கூறுகின்றனர். எனவே, அவர்கள் சிவபாபாவை மாத்திரமே நினைவு செய்கின்றனர். அவரே நன்மை அளிக்கும் தந்தை ஆவார். அவர் கூறுகின்றார்: நான் பஞ்ச தத்துவங்களுக்கும் நன்மை பயக்கின்றேன். அங்கு, எதுவும் ஒருபொழுதும் எவ்விதச் சிரமத்தையும் கொடுக்க மாட்டாது. இங்கு, சிலவேளைகளில் புயல்களும், சிலவேளைகளில் கடுங்குளிரும், சிலவேளைகளில் வேறு எதுவும் காணப்படுகின்றது. அங்கு, சதா வசந்த காலமே நிலவுகின்றது. அங்கு துன்பத்தின் குறிப்பே கிடையாது. அது சுவர்க்கம் ஆகும். தந்தை உங்களைச் சுவர்க்க அதிபதிகளாக்க வந்துள்ளார். கடவுளே அதிமேலானவர். அவர் அதிமேலான தந்தையும், அதிமேலான பரம ஆசிரியரும் ஆவார். எனவே, அவர் நிச்சயமாக உங்களை அதிமேலானவர்கள் ஆக்குவார். நீங்கள் இலக்ஷ்மியாகவும், நாராயணனாகவும் இருந்தீர்கள். நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் மறந்து விட்டீர்கள். தந்தை மாத்திரமே இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். படைப்பவரையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியும் அவர்களுக்குத் தெரியுமா என ரிஷிகளிடமும், முனிவர்களிடமும் கேட்கப்பட்ட பொழுது, அவர்கள் “நேற்றி, நேற்றி” (இதுவுமல்ல, அதுவுமல்ல) என்றே கூறினர். அவர்களே இந்த ஞானத்தைக் கொண்டிராத பொழுது எவ்வாறு இது தொன்றுதொட்டுத் தொடர்ந்திருக்க முடியும்? தந்தை கூறுகின்றார்: இந்நேரத்தில் மாத்திரமே நான் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றேன். நீங்கள் சற்கதி அடைந்ததும் இந்த ஞானத்திற்கு அவசியமில்லை. அங்கு சீரழிவு எதுவும் இல்லை. சத்தியயுகமே சற்கதி எனப்படுகின்றது. இங்கு சீரழிவே உள்ளது. எவ்வாறாயினும், தாங்கள் சீரழிவு நிலையில் உள்ளதை எவரும் அறியார்கள். தந்தை விடுதலை அளிப்பவர் எனவும், வழிகாட்டி எனவும், படகோட்டி எனவும் அழைக்கப்படுகின்றார். அவர் அனைவரதும் படகை நச்சுக்கடலில் இருந்து அப்பால் கொண்டு செல்கின்றார். அது பாற்கடல் என அழைக்கப்படுகின்றது. அவர்கள் விஷ்ணுவைப் பால் ஏரியில் சித்தரித்துள்ளார்கள். அப்புகழ் யாவும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. அவர்களிடம் ஒரு பெரிய ஏரி உள்ளது, அதில் அவர்கள் விஷ்ணுவின் மிகப் பெரிய உருவமொன்றை வைக்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் முழு உலகையும் ஆட்சிசெய்தீர்கள். நீங்கள் வெற்றியையும் தோல்வியையும் பல தடவைகள் அனுபவித்துள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: காமமே கொடிய எதிரி. அதனை வெல்வதால் நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுகின்றீர்கள். எனவே, நீங்கள் பெரும் சந்தோஷத்துடன் அவ்வாறு ஆகவேண்டும். நீங்கள் இல்லறப் பாதையில் வீட்டில் உங்களின் குடும்பங்களுடன் வாழலாம், ஆனால் ஒரு தாமரை மலரைப் போன்று தூய்மையாக வாழுங்கள். நீங்கள் இப்பொழுது முட்களிலிருந்து மலர்களாக மாறுகின்றீர்கள். இது முட்காடு என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். அவர்கள் அதிகளவு ஒருவரையொருவர் தொந்தரவு செய்கின்றார்கள். அவர்கள் ஒருவரையொருவர் அடிக்கவும் செய்கின்றார்கள். எனவே இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை கூறுகின்றார்: இப்பொழுது இது உங்கள் அனைவரதும் ஓய்வு ஸ்திதியாகும். இளையவர்கள், முதியவர்கள் அனைவருக்குமே இது ஓய்வு ஸ்திதியாகும். நீங்கள் இப்பொழுது சத்தத்திற்கு அப்பால் செல்வதற்குக் கற்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது சற்குருவைக் கண்டு கொண்டீர்கள். அவர் நிச்சயமாக உங்களைச் சத்தத்திற்கு அப்பால் அழைத்துச் செல்வார். இது ஒரு பல்கலைக்கழகம் ஆகும். கடவுள் பேசுகின்றார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பித்து, உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆக்குகின்றேன். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்த அரசர்கள் பின்னர் பூஜிக்கும் அரசர்கள் ஆகிவிட்டார்கள். எனவே தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, மிக நன்றாக முயற்சி செய்யுங்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். நீங்கள் உண்ணலாம், பருகலாம், ஸ்ரீநாதர் ஆலயத்திற்குச் செல்லலாம். அங்கே நீங்கள் நெய்யால் சமைக்கப்பட்ட உணவைப் பெருமளவில் பெறுகின்றீர்கள். அவர்களிடம் நெய்க் கிணறுகளும் உள்ளன. அவை அனைத்தையும் உண்பது யார்? பூஜிப்பவர்கள் (அங்குள்ள அனைத்தையும் பராமரிப்பவர்கள்). அவர்கள் ஸ்ரீ நாதரினதும், ஜெகநாதரினதும் உருவங்களைக் கருங்கல்லால் செய்துள்ளனர். ஜெகநாதர் ஆலயத்தில் தேவர்களின் அவலட்சணமான உருவங்களை வைத்துள்ளனர். அங்கே அவர்கள் பெரிய பானையில் சோறு சமைக்கின்றார்கள். சோறு வெந்ததும், அது தானாகவே நான்கு சம பாகங்களாகப் பிரிகின்றது. அவர்கள் சோற்றையே பிரசாதமாகப் படைக்கின்றார்கள், ஏனெனில் இப்பொழுது அனைத்தும் சாதாரணமாகி விட்டது. இப்பக்கத்தில் அனைவரும் ஏழைகளாகவும், அப்பக்கத்திலோ அனைவரும் செல்வந்தர்களாகவும் உள்ளனர். இப்பொழுது ஒவ்வொருவரும் எவ்வளவு ஏழைகளாக உள்ளனர் எனச் சற்றுப் பாருங்கள். அவர்களுக்கு உண்பதற்கோ, பருகுவதற்கோ போதியளவு இல்லை. சத்தியயுகத்தில் உங்களிடம் அனைத்தும் இருக்கின்றது. தந்தை இங்கிருந்து ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். சிவபாபா மிக இனிமையானவர். அவர் அசரீரியானவர். ஆத்மாவே நேசிக்கப்படுகின்றார். ஆத்மாவே வரவழைக்கப்படுகின்றார். ஒருவர் மரணம் அடையும் பொழுது அவரது சரீரம் எரிக்கப்பட்டு, அவரது ஆத்மா வரவழைக்கப்படுகின்றார். அவரது ஞாபகார்த்தமாக ஒரு விளக்கு ஏற்றப்படுகின்றது. ஆத்மா இருளில் இருப்பதாக அவர்கள் எண்ணுவதாலேயே இவ்வாறு செய்கின்றார்கள். ஆத்மா சரீரம் இல்லாமல் இருக்கின்றார், எனவே எவ்வாறு இருள் பற்றிய கேள்வி இருக்க முடியும்? இவ்விடயங்கள் அங்கே இருப்பதில்லை. அவை யாவும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை. தந்தை மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். இந்த ஞானம் மிக இனிமையானது. நீங்கள் கண்களைத் திறந்தவாறே செவிமடுக்க வேண்டும். அப்பொழுது குறைந்தபட்சம் நீங்கள் தந்தையையாவது பார்ப்பீர்கள். சிவபாபா இங்கே பிரசன்னமாகி உள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும், எனவே நீங்கள் உங்கள் கண்களைத் திறந்தவாறே அமரவேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தையைப் பார்க்க வேண்டும், இல்லையா? முன்னர் புத்திரிகள் தந்தையைப் பார்க்கும் பொழுது, திரான்ஸில் செல்வார்கள். அவர்கள் அனைவருடனும் ஒன்றாக அமர்ந்திருக்கும் பொழுதே, திரான்ஸில் செல்வார்கள். அவர்கள் கண்கள் மூடிய நிலையிலேயே சுற்றித் திரிவார்கள். அது ஓர் அற்புதமே! தந்தை தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் ஒருவரையொருவர் பார்க்கும் பொழுது, உங்களின் சகோதர ஆத்மாவுடன் பேசுவதாகவோ அல்லது உங்களின் சகோதர ஆத்மாவுக்கு விளங்கப்படுத்துவதாகவோ கருதுங்கள். எல்லையற்ற தந்தை கூறும் ஆலோசனையை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா? நீங்கள் இந்த இறுதிப் பிறவியில் தூய்மை ஆகினால், தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். பாபா பலருக்கும் விளங்கப்படுத்துகின்றார்: சிலர் உடனடியாகக் கூறுகின்றனர்: பாபா, நான் நிச்சயமாகத் தூய்மை ஆகுவேன். தூய்மையாக இருப்பது நல்லது. ஒரு குமாரி தூய்மையாக இருக்கும் பொழுது, அனைவரும் அவளை வீழ்ந்து வணங்குகின்றார்கள். அவள் திருமணம் செய்ததும் பூஜிப்பவள் ஆகுகின்றாள். பின்னர் அவள் அனைவரையும் வீழ்ந்து வணங்க வேண்டியுள்ளது. எனவே, தூய்மையே சிறந்தது, இல்லையா? தூய்மை இருக்கும் இடத்தில் அமைதியும், செழிப்பும் இருக்கின்றன. அனைத்தும் தூய்மையிலேயே தங்கியுள்ளது. நீங்கள் அழைக்கின்றீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! இராவணன் தூய உலகில் இருப்பதில்லை. அது அனைவரும் பாலும் சீனியும் போன்று வாழ்கின்ற, இராம இராச்சியம் ஆகும். அது தர்மம் நிறைந்த இராச்சியம் ஆதலால், இராவணன் எவ்வாறு அங்கு இருக்க முடியும்? அவர்கள் அமர்ந்திருந்து இராமாயணம் போன்றவற்றை மிகுந்த அன்புடன் கூறுகின்றார்கள். அவை அனைத்தும் பக்தியாகும். புத்திரிகள் காட்சிகளைக் காணும் வேளையில் நடனம் ஆடுவது வழக்கம். 'சத்தியப் படகு தள்ளாடுமே அன்றி, ஒருபொழுதும் மூழ்காது" என்ற சத்தியப் படகின் புகழ் உள்ளது. வேறு ஒன்றுகூடல்களுக்குச் செல்வதற்கு மக்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை, ஆனால் இங்கே வரவேண்டாம் என அவர்களுக்குக் கூறப்படுகின்றது. தந்தையே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் பிரம்மாகுமாரர்களும் குமாரிகளும் ஆகுகின்றீர்கள். நீங்கள் நிச்சயமாகப் பிராமணர்கள் ஆகவேண்டும். தந்தையே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதால், நாங்கள் நிச்சயமாகச் சுவர்க்க அதிபதிகள் ஆகவேண்டும். நாங்கள் ஏன் இன்னமும் நரகத்தில் இருக்கின்றோம்? நாங்கள் முன்னர் பூஜிப்பவர்களாக இருந்தோம் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கின்றோம். நாங்கள் இப்பொழுது 21 பிறவிகளுக்குப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றோம். நாங்கள் 63 பிறவிகளாக பூஜிப்பவர்களாக இருந்து வந்தோம், இப்பொழுது நாங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த, சுவர்க்க அதிபதிகள் ஆகுவோம். இந்த ஞானம் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுவதற்கே ஆகும். கடவுள் பேசுகின்றார்: நான் உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசர் ஆக்குகின்றேன். தூய்மையற்ற அரசர்கள் தூய அரசர்களுக்குத் தலைவணங்குகின்றனர். ஒவ்வொரு சக்கரவர்த்தியினதும் மாளிகையிலும் நிச்சயமாக ஓர் ஆலயம் இருக்கின்றது. பொதுவாக அது இராதை கிருஷ்ணருக்குரிய அல்லது இலக்ஷ்மி நாராயணனுக்குரிய அல்லது இராமர் சீதைக்குரிய ஆலயமாகவோ இருக்கும். இந்நாட்களில், அவர்கள் கணேஷ், அனுமான் போன்றவர்களுக்குக்கூட ஆலயங்களைக் கட்டுகின்றார்கள். பக்தி மார்க்கத்தில் அதிகளவில் குருட்டு நம்பிக்கை உள்ளது. நீங்கள் உண்மையிலேயே இராச்சியத்தை ஆட்சி செய்தீர்கள் என்பதும், பின்னர் பாவப் பாதையில் வீழ்ந்தீர்கள் என்பதும் இப்பொழுது உங்களுக்குப் புரிகின்றது. இது உங்கள் இறுதிப்பிறவி எனத் தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, ஆரம்பத்தில் நீங்கள் சுவர்க்கத்தில் இருந்தீர்கள். பின்னர் நீங்கள் படிப்படியாகக் கீழிறங்கி, இப்பொழுது தரையில் வீழ்ந்து விட்டீர்கள். நீங்கள் அப்பொழுது கூறுகின்றீர்கள்: நாங்கள் மேன்மையானவர்களாக இருந்தோம், தந்தை மீண்டும் ஒருமுறை எங்களை மேன்மையானவர்கள் ஆக்குகிறார். நாங்கள் தொடர்ந்தும் 5000 வருடங்களுக்கு ஒருமுறை கற்கின்றோம். இதுவே உலக வரலாறும் புவியியலும் மீண்டும் மீண்டும் நடைபெறுதல் என அழைக்கப்படுகின்றது. பாபா கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றேன். உலகம் முழுவதும் உங்கள் இராச்சியமாக இருக்கும். 'பாபா, எங்களிடமிருந்து எவராலும் அபகரிக்க முடியாத ஓர் இராச்சியத்தை நீங்கள் எங்களுக்குக் கொடுக்கின்றீர்கள்" எனப் பாடல் கூறுகின்றது. இப்பொழுது அதிகளவு பிரிவினைகள் உள்ளன. அவர்கள் நீருக்காகவும், நிலத்துக்காகவும் சண்டை போடுகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் தங்கள் சொந்த மக்களைப் பராமரிக்கின்றார்கள். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் இளைஞர்கள் கல்லெறிய ஆரம்பித்து விடுவார்கள். இளைஞர்கள் பலசாலிகள் ஆகையால், பாரதத்தைப் பாதுகாப்பார்கள் என அம்மக்கள் எண்ணுகின்றார்கள். எனவே அவர்கள் இப்பொழுது தங்களின் பலத்தைக் காட்டுகின்றார்கள். உலகின் நிலைமையைப் பாருங்கள்! இது இராவண இராச்சியம் ஆகும். தந்தை கூறுகின்றார்: இது அசுர சமுதாயம். நீங்கள் இப்பொழுது தேவ சமுதாயத்தினர் ஆகுகின்றீர்கள். எவ்வாறு அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையில் ஒரு யுத்தம் இருக்க முடியும்? நீங்கள் இரட்டை அகிம்சாவாதிகள் ஆகுகின்றீர்கள். தேவர்கள் இரட்டை அகிம்சாவாதிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். அகிம்சையே தேவர்களின் பரம தர்மம் எனக் கூறப்படுகின்றது. வார்த்தைகளினால் எவருக்காயினும் துன்பம் கொடுப்பதும் வன்முறையே என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். நீங்கள் தேவர்கள் ஆகுவதால், ஒவ்வொரு விடயத்திலும் இராஜரீகம் இருக்க வேண்டும். உங்களின் உணவும், பானமும் மிகவும் உயர்தரமாகவோ அல்லது மிகவும் எளிமையாகவோ இருக்கக்கூடாது. அது சரியாக இருக்க வேண்டும். அரசர்கள் போன்றோர் மிகக்குறைவாகவே பேசுகின்றார்கள். பிரஜைகள் தங்கள் அரசர்களின் மீது பெரும் அன்பு வைத்துள்ளார்கள். இங்கே என்ன நடக்கின்றது எனப் பாருங்கள்! அதிகளவு குழப்பங்களும் புரட்சியும் உள்ளன. தந்தை கூறுகின்றார்: நிலைமை இவ்வாறு இருக்கும் பொழுதே நான் வந்து, உலகில் அமைதியை நிலவச் செய்கின்றேன். அனைவரும் ஒற்றுமையாக இருப்பதையே அரசாங்கம் விரும்புகின்றது. அனைவரும் சகோதரர்கள். இது ஒரு நாடகம். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. இங்கே தானியத்திற்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. அங்கே நீங்கள் செலவேதும் இல்லாமலே உங்களுக்கு வேண்டிய அளவைப் பெற்றுக் கொள்ளும் வகையில், தானியம் அதிகளவில் இருக்கும். நீங்கள் இப்பொழுது அத் தேவ இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். ஒருபொழுதுமே நோய் ஏற்படாத அத்தகைய விதத்தில் நாங்கள் இப்பொழுது எங்கள் ஆரோக்கியத்தை ஆக்குகின்றோம். இது ஓர் உத்தரவாதம் ஆகும். நாங்கள் எங்களின் குணாதிசயங்களையும் தேவர்களுடையதைப் போன்று ஆக்குகின்றோம். நீங்கள் அமைச்சர்களுக்கு அவர்கள் எத்துறைகளில் அமைச்சர்களாக உள்ளார்களோ, அதற்கேற்ப விளங்கப்படுத்த முடியும். நீங்கள் மிகுந்த சாமர்த்தியத்துடன் விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் மிக நல்ல அபிப்பிராயங்களை எழுதுகின்றார்கள். எவ்வாறாயினும் நீங்கள் அவர்களிடம், அவர்களும் வந்து இதைப் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறும்பொழுது, தங்களுக்கு நேரமில்லை எனக் கூறுகின்றார்கள். அவர்களிடம் கூறுங்கள்: முக்கிய பிரமுகர்கள் ஓசை எழுப்பும் பொழுது ஏழை மக்களும் நன்மை பெறுவார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: மரணம் இப்பொழுது ஒவ்வொருவரின் தலைமீதும் உள்ளது. “இன்று (ஆஜ்), நாளை (கல்)” எனக் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, மரணம் (கால்) உங்களைத் தின்றுவிடும்! நீங்கள் கும்பகர்ணனைப் போல் ஆகிவிட்டீர்கள். குழந்தைகள் விளங்கப்படுத்துவதில் மிகவும் களிப்படைகின்றார்கள். பாபா இப்படங்களைச் செய்வித்துள்ளார். தாதா இந்த ஞானத்தைக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் உங்கள் பௌதீகத் தந்தையிடம் இருந்தும் பரலோகத் தந்தையிடம் இருந்தும் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் அலௌகீகத் தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவதில்லை. இவர் இடையிலுள்ள ஒரு முகவர். இவரிடமிருந்து ஓர் ஆஸ்தி பெறப்படுவதில்லை. நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவை நினைவுசெய்யக் கூடாது. நீங்கள் என்னிடமிருந்து எதனையும் பெறமாட்டீர்கள். நானும் கற்கின்றேன். அவை எல்லைக்கு உட்பட்ட ஆஸ்திகள், மற்றைய ஆஸ்தி எல்லையற்ற தந்தையிடம் இருந்தே பெறப்படுகின்றது. பிரஜாபிதா பிரம்மா உங்களுக்கு என்ன ஆஸ்தியைக் கொடுப்பார்? தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். இவர் இரதம் ஆவார். நீங்கள் இரதத்தை நினைவு செய்யக்கூடாது. கடவுளே அதிமேலானவர் என அழைக்கப்படுகின்றார். தந்தை இங்கிருந்து ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாவே அனைத்தையும் செய்பவர். ஆத்மா ஒரு தோலை நீக்கி, இன்னொன்றை எடுக்கின்றார். பாம்பின் உதாரணமும் உள்ளது. நீங்களே ரீங்காரமிடும் வண்டுகள், நீங்கள் இந்த ஞானத்தை ரீங்காரம் இடுகின்றீர்கள். இந்த ஞானத்தை எடுத்துரைப்பதன் மூலம் உங்களால் எவரையும் ஓர் உலக அதிபதி ஆக்கமுடியும். உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையை நீங்கள் ஏன் நினைவு செய்யக்கூடாது? தந்தை இப்பொழுது வந்துவிட்டார். எனவே நீங்கள் ஏன் அவரிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறக்கூடாது? நீங்கள் ஏன் உங்களுக்கு நேரமில்லை எனக் கூறுகின்றீர்கள்? நல்ல குழந்தைகளால் ஒரு விநாடியில் புரிந்துகொள்ள முடியும். மக்கள் இலக்ஷ்மியை வழிபடுகின்றார்கள் என பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். நீங்கள் இலக்ஷ்மியிடம் இருந்து எதனைப் பெறுகின்றீர்கள்? நீங்கள் அம்பாளிடம் இருந்து எதனைப் பெறுகின்றீர்கள்? இலக்ஷ்மி சுவர்க்கத்தின் தேவியாவார். அவர்கள் இலக்ஷ்மியிடம் பணத்தை யாசிக்கின்றார்கள். அம்பாள் உங்களை உலக அதிபதி ஆக்குகின்றார். அம்பாள் உங்கள் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கின்றார். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் பௌதீகப் புலன்கள் மூலம் தவறுகள் எதனையும் செய்யாமல் இருக்கும் வகையில் ஆத்மா என்ற விழிப்புணர்வை உறுதி ஆக்குங்கள். சரீரத்தைப் பார்க்காதீர்கள். ஒரேயொரு தந்தையின் மீதே கவனம் செலுத்துங்கள்.2. இப்பொழுது இது உங்களின் ஓய்வு ஸ்திதியாகும். எனவே சப்தத்திற்கு அப்பாற் செல்ல முயற்சி செய்யுங்கள். நிச்சயமாகத் தூய்மை ஆகுங்கள். 'சத்தியப்படகு தள்ளாடுமே அன்றி, ஒருபொழுதும் மூழ்காது" என்பது உங்கள் புத்தியில் இருக்கட்டும். எனவே தடைகளையிட்டுப் பயப்படாதீர்கள்.
ஆசீர்வாதம்:
சடப்பொருட்களையும் மாயையையும் வெற்றி கொண்டவராகி, நாடகம் பற்றிய இந்த ஞானத்தினால் உங்கள் ஸ்திதியை அசைக்க முடியாததாக ஆக்குவீர்களாக.சடப்பொருள் அல்லது மாயையினால் எவ்வகையான பரீட்சையை நீங்கள் எதிர்கொள்ள நேர்ந்தாலும், சற்றேனும் தளம்பல் அடையாதீர்கள். ஒரு பிரச்சினை உங்களை தாக்கும் போது, இது என்ன? இது ஏன் நடந்தது? என்ற கேள்விகள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் சித்தி அடைய மாட்டீர்கள். எனவே, என்ன நடந்தாலும், உங்களுக்குள் இந்த ஓசை வெளிப்படட்டும்: ஆஹா! இனிய நாடகமே, ஆஹா! மாறாக இவ்வாறான எண்ணம் வராதிருக்க வேண்டும்: ஓ! என்ன நடந்தது? எந்தவொரு எண்ணத்திலும் எந்தத் தளம்பலும் இல்லாத வகையில் உங்கள் ஸ்திதி இருக்க வேண்டும். உங்கள் ஸ்திதி சதா ஆட்ட, அசைக்க முடியாததாக இருக்க வேண்டும். அப்பொழுது நீங்கள் சடப்பொருட்களையும் மாயையையும் வெற்றி கொண்டவர் என்ற ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள்.
சுலோகம்:
நற்செய்தியைக் கொடுப்பதும், சந்தோஷத்தைக் கொடுப்பதுமே அதிமேன்மையான கடமையாகும்.அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.
குறிப்பாக இப்பயிற்சி மகாரத்திகளின் முயற்சிக்கானது: ஒரு கணம் ஒரு கர்மயோகியாக இருத்தல், மறுகணம் கர்மாதீத் ஸ்திதிக்குச் செல்லுதல். பழைய உலகின் இறுதியான, பழைய சரீரத்தின் எந்தவொரு நோயும் உங்கள் மேன்மையான ஸ்திதியில் எந்தவொரு தளம்பலையும் ஏற்படுத்த அனுமதிக்காதீர்கள். உங்களுடைய உண்மையான சுயத்தைப் பற்றிய, இந்த ஞானத்தைப் பற்றிய, பிறரை இட்டு தூய, ஆக்கபூர்வ எண்ணங்களை மாத்திரம் கொண்டிருங்கள். அப்பொழுது மட்டுமே நீங்கள் கர்மாதீத் ஸ்திதியை அடைந்தவர் எனப்படுவீர்கள்.