18.01.25 Avyakt Bapdada Tamil Lanka Murli Om Shanti Madhuban
எங்கள் பிதா ஸ்ரீயின் நினைவு நாளன்று வகுப்பில் வாசிக்கப்பட வேண்டிய பாப்தாதாவின் பெறுமதிமிக்க இனிய மேன்மையான வாசகங்கள்
ஓம் சாந்தி. ஆன்மிக தந்தை குழந்தைகளாகிய உங்களுடன் இதயபூர்வமான சம்பாஷைணை செய்து, உங்களுக்குக் கற்பித்தல்களை கொடுக்கின்றார். உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்க வேண்டியது ஓர் ஆசிரியரின் கடமையும், உங்களுக்கு இலக்கைக் காட்ட வேண்டியது ஒரு குருவின் கடமையும் ஆகும். முக்தியும் ஜீவன்முக்தியும் இலக்காகும். முக்திக்கு, நினைவு யாத்திரை அவசியம். ஜீவன்முக்திக்கு படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்திருக்க வேண்டியது அவசியம். 84 பிறவிச் சக்கரம் இப்பொழுது முடிவடைய உள்ளது, நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இவ்வாறாக உங்களுடன் நீங்கள் பேசுவதன் மூலம் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பதுடன் பிறருக்கும் நீங்கள் சந்தோஷத்தைக் கொடுப்பீர்கள். அவர்களை தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆக்குவதற்கு அவர்களுக்கு நீங்கள் பாதையை காட்டுவதற்கான கருணையைக் கொண்டிருக்க வேண்டும். பாவ, புண்ணியத்தின் ஆழமான இரகசியத்தை பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்: புண்ணியம் என்றால் என்ன, பாவம் என்றால் என்ன. தந்தையை நினைவு செய்து, பிறருக்கும் ஞாபகப்படுத்துவதே மகாபுண்ணியமாகும். ஒரு நிலையத்தை ஆரம்பிப்பதும், உங்கள் சரீரம், மனம், செல்வத்தைப் பிறரின் சேவைக்காகப் பயன்படுத்துவதும் புண்ணியமாகும். பிறரின் சகவாசத்தினால் ஆதிக்கம் செலுத்தப்படுவதும், பின்னர் வீணான எண்ணங்களை கொண்டிருப்பதும், பிறரைப் பற்றிய சிந்தனையில் உங்கள் நேரத்தை வீணாக்குவதும் பாவமாகும். புண்ணியம் செய்கின்றபோது, ஒருவர் பாவம் செய்தால், அவர் உழைத்த வருமானம் முடிவடைகின்றது. என்னென்ன புண்ணியம் செய்யப்பட்டதோ அனைத்தும் முடிவடைகின்றது. அதன் பின்னர் வரவு வைக்கப்படுவதற்குப் பதிலாக, அது செலவாகக் காட்டப்படும். ஞானம் நிறைந்த ஆத்மாக்களுக்கு, பாவச் செயல்களுக்கான தண்டனை நூறு மடங்காக இருக்கும். ஏனெனில் அவர்கள் சற்குருவை அவதூறு செய்பவர்கள் ஆகுகிறார்கள். ஆகையாலேயே தந்தை இக் கற்பித்தல்களை உங்களுக்குக் கொடுக்கின்றார்: இனிய குழந்தைகளே, பாவச் செயல்களை என்றுமே செய்யாதீர்கள். விகாரங்களின் மூலமாகக் காயப்படுவதில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
தந்தை குழந்தைகளான உங்கள் மீது அன்பு வைத்திருக்கின்றார் என்பதால் அவர் கருணை கொள்கின்றார். தந்தை தனது அனுபவத்தை உங்களுக்குக் கூறுகின்றார்: நான் ஏகாந்தத்தில் அமர்ந்திருக்கும் போது, நான் குறிப்பாக அன்பிற்கினிய குழந்தைகளை முதலில் நினைவு செய்கின்றேன். அவர்கள் வெளிநாட்டில் அல்லது வேறு எங்கேனும் இருக்கலாம். ஒரு நல்ல, சேவை செய்யும் குழந்தை தனது சரீரத்தை நீக்கும் போது, பாபா அந்த ஆத்மாவை நினைவு செய்து, அவருக்கு ஒரு சேர்ச்லைட் வழங்குகின்றார். இங்கே இரு விளக்குகள் இருப்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அந்த இரண்டு விளக்குகளும் ஒன்றாக இருக்கின்றனர். இரண்டும் மிகவும் சக்திவாய்ந்த விளக்குகள் ஆகும். அதிகாலை நேரம் மிகவும் நல்லது: நீராடிய பின்னர், ஏகாந்தத்திற்குச் செல்லுங்கள். உள்ளார்த்தமாக அதிகளவு சந்தோஷம் இருக்கட்டும்.
எல்லையற்ற தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: இனிய குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்கள் தந்தையான என்னையும் வீட்டையும் நினைவுசெய்யுங்கள். குழந்தைகளே, இந்த நினைவு யாத்திரையை ஒருபோதும் மறக்காதீர்கள். நினைவு செய்வதனால் மாத்திரமே நீங்கள் தூய்மை ஆகுகிறீர்கள். தூய்மையாகாது விட்டால் உங்களால் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாது. இந்த ஞானமும் யோகமுமே பிரதான விடயங்கள். தந்தையிடம் இந்த மிகப் பெரிய பொக்கிஷம் உள்ளது. அதனை அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கின்றார். இதில் யோகம் மிகப் பெரியதொரு பாடம். குழந்தைகளாகிய நீங்கள் நல்ல நினைவை கொண்டிருக்கும் போது, அந்த நினைவு தந்தையின் நினைவை அதிகரிக்கச் செய்கின்றது. குழந்தைகள் தமது நினைவினூடாக தந்தையை ஈர்க்கிறார்கள். சிலர் தாமதமாக வந்த போதிலும், அவர்கள் உயர்ந்த அந்தஸ்தை கோருகிறார்கள். அதற்கு அடிப்படையாக இருப்பது, நினைவே. அவர்கள் அவரை ஈர்க்கின்றார்கள். கூறப்படுகின்றது: பாபா, கருணை கொள்ளுங்கள்! பரிவு காட்டுங்கள்! ஆனால் இதிலும் பிரதானமாக தேவைப்படுவது நினைவே. நினைவு செய்வதனால் மாத்திரமே, நீங்கள் தொடர்ந்தும் மின்சாரத்தைப் (சக்தி) பெற்று, இதனூடாக ஆத்மாக்களாகிய நீங்கள் ஆரோக்கியமாகவும், நிறைவாகவும் ஆகுகிறீர்கள். சிலவேளைகளில், ஒரு குழந்தைக்கு தந்தை கரண்ட் கொடுக்க வேண்டிய தேவை இருக்கும் போது, அவர் அதனால் தனது உறக்கத்தைக்கூட துறக்கின்றார். அவர் இன்ன இன்னாருக்கு கரண்ட் வழங்க வேண்டும் என்ற இந்த ஆழமான அக்கறையை கொண்டிருப்பார். நீங்கள் கரண்டைப் பெறும் போது, உங்கள் ஆயுள் அதிகரிப்பதுடன் நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்பதையும் அறிவீர்கள். நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருந்து நினைவு செய்ய வேண்டும் என்றில்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நடந்து உலாவித் திரியும் போதும், உங்கள் உணவை உண்ணும் போதும், எதனைச் செய்யும் போதும் தந்தையை நினைவு செய்யுங்கள். பிறருக்கு மின்சாரத்தைக் கொடுப்பதற்காக இரவில் விழித்திருங்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: அதிகாலையில் விழித்தெழும் போது, நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு அதிகளவு ஈர்ப்பு இருக்கும். தந்தையும் உங்களுக்கு ஒரு சேர்ச்லைட் கொடுப்பார். ஓர் ஆத்மாவை நினைவுசெய்வது என்றால், அவருக்கு சேர்ச்லைட் கொடுப்பதற்காகவே. அதனை நீங்கள் கருணை அல்லது ஆசீர்வாதங்கள் என அழைக்க முடியும்.
குழந்தைகளாகிய உங்களுக்கு இது அநாதியாகவே நிச்சயிக்கப்பட்ட நாடகம் என்பது தெரியும். இது வெற்றியும் தோல்வியும் கொண்ட விளையாட்டு. எது நடந்தாலும் நல்லதே. படைப்பவர் நிச்சயமாக நாடகத்தை விரும்புகின்றார்,அப்படித்தானே? எனவே, படைப்பவரின் குழந்தைகளும் அதனை விரும்புகிறார்கள். இந்த நாடகத்தில், தந்தை ஒருமுறை மாத்திரமே குழந்தைகளாகிய உங்களிடம் தனது இதயத்தில் அன்பைச் சுமந்து கொண்டு ஆத்மார்த்தமான இதயத்துடன் குழந்தைகளாகிய உங்களுக்கு சேவை செய்வதற்காக வருகின்றார். தந்தை குழந்தைகள் அனைவரையுமே நேசிக்கின்றார். சத்தியயுகத்தில், அனைவரும் ஒருவரையொருவர் அதிகளவு நேசிக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். மிருகங்கள் மத்தியிலும் அன்பு உள்ளது. அன்பற்ற ஒரு மிருகம் கூட வாழ்வதில்லை. எனவே இங்கேயே நீங்கள் மாஸ்டர் அன்புக் கடல்கள் ஆக வேண்டும். நீங்கள் இங்கே அதுவாக ஆகும் போது, அந்த சம்ஸ்காரம் அழியாதது ஆகின்றது. தந்தை கூறுகின்றார்: நான் உங்களை முன்னைய கல்பத்தில் ஆக்கியதைப் போன்றே, உங்களை அன்பானவர்கள் ஆக்குவதற்காக வந்திருக்கின்றேன். ஒரு குழந்தையின் கோபத்தின் சத்தத்தைத் தந்தை கேட்கும் போது, அவர் கொடுக்கின்ற கற்பித்தல்கள்: குழந்தாய், கோபப்படுவது நல்லதல்ல, ஏனெனில் நீங்கள் துன்பப்படுவதுடன் பிறருக்கும் துன்பத்தை விளைவிக்கிறீர்கள். தந்தை உங்களுக்கு நிரந்தரமான சந்தோஷத்தைக் கொடுப்பவர் என்பதால் நீங்கள் தந்தையை போன்றவர் ஆக வேண்டும். என்றுமே ஒருவருக்கொருவர் துன்பதை விளைவிக்காதீர்கள். நீங்கள் மிக மிக அன்பானவர் ஆக வேண்டும். நீங்கள் அன்பான தந்தையை மிகவும் அன்புடன் நினைவுசெய்யும் போது, நீங்கள் நன்மை அடைவதுடன், பிறரும் நன்மை அடைகிறார்கள்.
உலகப் பிரபு உங்களிடம் உங்கள் விருந்தாளியாக வந்திருக்கின்றார். குழந்தைகளாகிய உங்களின் உதவியுடனேயே உலகம் நன்மையடைய உள்ளது. ஆன்மிகத் தந்தையை ஆன்மிகக் குழந்தைகளாகிய நீங்கள், மிகவும் அன்பானவராக பார்ப்பதைப் போன்றே, தந்தையும் ஆன்மிகக் குழந்தைகளாகிய உங்களை மிகவும் அன்பானவர்களாகவே பார்க்கின்றார். ஏனெனில் நீங்கள் மாத்திரமே ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் முழு உலகிற்கும் நன்மை அளிப்பீர்கள். நீங்கள் இப்பொழுது இந்த இறை குடும்பத்துடன் அமர்ந்திருக்கிறீர்கள். தந்தை நேர்முன்னிலையில் உங்கள் முன்னால் அமர்ந்திருக்கின்றார். ‘நான் உங்களுடனேயே உண்பேன், நான் உங்களுடனேயே அமர்வேன்’ சிவபாபா இவருக்குள் பிரவேசிப்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, உங்கள் சரீரங்களை மறந்திடுங்கள், உங்கள் சரீர உறவினர்கள் அனைவரையும் மறந்திடுங்கள், சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். இதுவே இறுதிப் பிறவியாகும். இது ஒரு பழைய உலகம், இந்தப் பழைய சரீரமும் முடிவடைய உள்ளது. ஒரு கூற்று உண்டு: நீங்கள் இறக்கின்ற போது, முழு உலகமும் உங்களிடமிருந்து மரணிக்கின்றது. முயற்சி செய்வதற்கு, சங்கமயுகம் என்ற குறுகிய காலமே உள்ளது. சில குழந்தைகள் வினவுகிறார்கள்: பாபா, இந்தக் கல்வி எவ்வளவு காலத்திற்குத் தொடரும்? தெய்வீக இராச்சியம் ஸ்தாபிக்கப்படும் வரையில் அவர் தொடர்ந்தும் உங்களுடன் இந்த ஞானத்தைப் பேசுவார். அதன் பின்னர் நீங்கள் ஒரு புதிய உலகிற்கு மாற்றப்படுவீர்கள். பாபா மிகவும் அகங்காரம் அற்றவராகவே குழந்தைகளாகிய உங்களுக்கு சேவை செய்கின்றார். எனவே, நீங்களும் அந்தளவிற்கு அவ்வாறாக சேவை செய்ய வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். உங்கள் சொந்தக் கட்டளைகளை நீங்கள் பின்பற்றும் போது, உங்கள் பாக்கியத்தை இழக்கிறீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் இறை குழந்தைகள். பிரம்மாவின் குழந்தைகள், சகோதர சகோதரிகள், இறை பேரன்களும் பேத்திகளும் ஆவீர்கள். அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியை நீங்கள் பெறுகிறீர்கள். நீங்கள் எந்தளவிற்கு முயற்சி செய்கிறீர்களோ, அதற்கேற்ப ஓர் அந்தஸ்தை கோருவீர்கள். இதில், பற்றற்றவராக இருக்கின்ற பயிற்சியை அதிகளவில் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். தந்தையின் முதற் கட்டளை: நீங்கள் சரீரமற்றவராக இருங்கள், ஆத்ம உணர்வுடையவராக இருங்கள். உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி, தந்தையான என்னை நினைவுசெய்தால் மாத்திரமே உங்களுக்குள் இருக்கின்ற மாசு அகற்றப்பட்டு, நீங்கள் நிஜத்தங்கங்கள் ஆகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் உரிமையுடன் கூற முடியும்: பாபா, ஓ இனிய பாபா! நீங்கள் என்னை உங்களுக்கு உரியவராக ஆக்கி, எனது ஆஸ்தியாக அனைத்தையும் எனக்குக் கொடுத்தீர்கள். எவராலுமே இந்த ஆஸ்தியை என்னிடமிருந்து அபகரிக்க முடியாது. குழந்தைகளாகிய உங்களிடம் இந்தளவிற்கு போதை இருக்க வேண்டும். நீங்களே அனைவருக்கும் முக்திக்கும் ஜீவன்முக்திக்குமான பாதையைக் காட்டுகின்ற வெளிச்சவீடுகள் ஆவீர்கள், நடந்தும், அமர்ந்தும் சுற்றித்திரியும் போதும் ஒரு வெளிச்ச வீடாகவே இருங்கள்.
தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது குறுகிய காலமே எஞ்சியுள்ளது. நினைவுகூரப்பட்டுள்ளது: ஒரு கணம், அரைக் கணம்..... இயன்றளவு, ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்வதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்கள் அட்டவணையை அதிகரித்துக் கொள்ளுங்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, நீண்டகாலம் தொலைந்திருந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் அதிர்ஷ்டமான, அன்பான, ஞான நட்சத்திரங்களுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் இதயத்தி;ன் ஆத்மார்த்தமான அன்பும் நினைவுகளும், ஆழமான, ஆழமான அன்பும், அன்பான நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மிகத் தந்தை ஆன்மிகக் குழந்தைகளான உங்களுக்கு நமஸ்தே கூறுகின்றார்.
அவ்யக்த மேன்மையான வாசகங்கள் : சதா ஒரு யோகியாக இருங்கள்
ஒரு விநாடியில் உங்களால் ஒரு ஆளியை முடுக்கவோ அல்லது நிறுத்தவோ முடிவதை போன்று ஒரு விநாடியில் உங்கள் சரீரத்தின் ஆதாரத்தை எடுங்கள். அதன் பின்னர் ஒரு விநாடியில், உங்கள் சரீரத்திற்கு அப்பால் சென்று, சரீரமற்ற ஸ்திதியில் ஸ்திரமாக நிலைத்திருங்கள். ஒரு கணம் உங்கள் சரீரத்திற்குள் வாருங்கள், அடுத்த கணம் சரீரமற்றவர் ஆகுங்கள். நீங்கள் இதனைப் பயிற்சி செய்ய வேண்டும். இது கர்மாதீத் ஸ்திதி என அழைக்கப்படுகின்றது - இதுவும் குறிப்பிட்ட ஆடைகளை அணிவதா அல்லது அணியாமல் விடுவதா என்பது உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளதைப் போன்றதே. ஒரு தேவை வரும் போது, நீங்கள் அவற்றை அணிகிறீர்கள். தேவையற்ற போது, நீங்கள் அதனைக் கழற்றி விடுகிறீர்கள். உங்கள் சரீரம் என்ற ஆடையை நீங்கள் ஏற்றுக் கொள்வதிலும் அதனை அகற்றி விடுவதிலும் உங்களுக்கு அதே அனுபவம் இருக்கட்டும். செயல்களைச் செய்யும் போது, ஆடையை அணிந்து, உங்கள் பணியை மேற்கொள்கின்ற அனுபவத்தை கொண்டிருங்கள். அதன் பின்னர், பணி முடிந்தவுடனேயே ஆடையிலிருந்து விடுபட்டிருங்கள். நடந்து திரியும் போது ஆத்மா சரீரத்திலிருந்து விடுபட்டிருக்கின்ற அனுபவத்தைக் கொண்டிருங்கள். இதுவும் வேறு எந்த ஒரு பயிற்சியையும் போன்றதாகவே இருக்கட்டும். எவ்வாறாயினும், இதனை யாரால் பயிற்சி செய்ய முடியும்? தமது சரீரங்களில் இருந்தும், தமது சரீரங்களுடன் தொடர்புடைய அனைத்திலிருந்தும், பௌதீக உலகம், உறவினர் மற்றும் ஏனைய அனைத்தில் இருந்தும் விடுபட்டிருப்பவர்களாலும் அத்துடன் எந்தப் பற்றும் அற்றவர்களாலும்: அவர்களால் மாத்திரமே பிரிந்திருக்க முடியும். உங்களின் சூட்சும எண்ணங்களில் இலேசான தன்மை இல்லாதிருந்தாலும், உங்களால் பற்றற்றவராக இருக்க முடியாவிட்டாலும் உங்களால் பிரிந்திருக்கின்ற அனுபவத்தைப் பெற முடியாது. எனவே, நீங்கள் இப்போது முற்றாகப் பிரிந்திருக்கின்ற அனுபவத்தை பெறுவதற்கு ஒவ்வொருவரும் இதனை பயிற்சி செய்ய வேண்டும். இந்த ஸ்திதியில் நீங்கள் நிலைத்திருக்கும்போது, ஏனைய ஆத்மாக்களும் பற்றற்றிருப்பதை அனுபவம் செய்வார்கள். அவர்களும் ஆத்மாக்களான உங்களின் மூலமாக இந்த ஸ்திதியை அனுபவம் செய்வார்கள். யோகத்தில் அமரும் போது, அப்பியாசத்தை நடாத்துபவர் பற்றற்ற ஸ்திதியில் இருப்பதை சில ஆத்மாக்கள் அனுபவம் செய்வார்கள். அவ்வாறாகவே நடந்து திரியும் போதும், உங்களுடைய தேவதை ஸ்திதியின் காட்;சிகள் இருக்கும். இங்கே அமர்ந்திருக்கும் போது, உங்களுடைய சத்திய யுக குடும்பத்தைச் சேர்ந்த நெருக்கமானவர்கள், உங்களுடைய தேவதை வடிவத்தினதும் உங்கள் எதிர்கால இராஜவடிவத்தினதும் காட்சிகளைக் காண்பார்கள். ஆரம்பத்தில், பிரம்மாவின் சம்பூர்ண வடிவம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணரின் வடிவம் இரண்டையும் மக்கள் காட்சிகளாகக் காண்பதுண்டு. அதேபோன்று மக்கள் உங்களுடைய இரட்டை வடிவத்தின் காட்சிகளைக் காண்பார்கள். இப் பற்றற்ற ஸ்திதியின் அருகாமையில் நீங்கள் தொடர்ந்தும், வரிசைக்கிரமமாக வரும் போது, பிறரும் உங்களுடைய இரட்டை வடிவத்தின் காட்சியை காண்பார்கள். இப்பொழுது, இப் பயிற்சி முழுமையாகச் செய்யப்படட்டும். அதன் பின்னர் இங்கும் அங்கும் செய்திகள் பரவ ஆரம்பிக்கும். ஆரம்ப காலத்தில், வீட்டிலிருக்கும் போதே, நெருக்கமாக வரவிருக்கின்ற பல ஆத்மாக்கள் காட்சிகளைப் பெற்றார்கள். அவ்வாறாகவே, அவர்கள் இப்பொழுதும் காட்சிகளைக் காண்பார்கள். இங்கு அமர்ந்திருக்கும் போது, உங்களுடைய சூட்சும வடிவங்கள் எல்லையற்ற முறையில் சேவையாற்றும். இந்த சேவையே இன்னமும் செய்யப்பட வேண்டியுள்ளது. நீங்கள் சரீர வடிவத்தில் சகல உதாரணங்களையும் பார்த்தீர்கள். அனைத்தும் நாடகத்திற்கு ஏற்ப, வரிசைக்கிரமமாக இடம்பெறும். நீங்கள் எந்தளவிற்கு உங்களுடைய சூட்சும, தேவதைகள் வடிவங்களில் இருக்கிறீர்களோ அந்தளவிற்கு உங்களுடைய தேவதை வடிவங்கள் அதிகளவு சேவை செய்யும். சக்கரத்தைச் சுற்றி வரவும் முழு உலகையும் சுற்றி வரவும் ஓர் ஆத்மாவிற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? எனவே, இப்பொழுது, உங்களுடைய சூட்சும வடிவங்கள் சேவை செய்யும். ஆனால் இந்தப் பற்றற்ற ஸ்திதியை கொண்டிருப்பவர்களாலும், தமது தேவதை வடிவங்களில் நிலைத்திருப்பவர்களால் மட்டுமே இது முடியும். ஆரம்ப காலத்தில் சகல காட்சிகளும் கிடைத்தன. தேவதை வடிவத்தின் சம்பூர்ண ஸ்திதியினதும், முயற்சி செய்கின்ற ஸ்திதியினதும் காட்சிகள் வெவ்வேறாக இருந்தன. இது சரீர பிரம்மாவினதும் சம்பூர்ண பிரம்மாவினதும் காட்சிகள் வெவ்வேறாக காட்டப்பட்டதைப் போன்றதாகும். அவ்வாறாகவே விசேட அன்பிற்கினிய குழந்தைகளான உங்களுடைய காட்சிகளும் இருக்கும். குழப்பங்கள் இடம்பெறும் போது, உங்களால் பௌதீகமாக எதனையுமே செய்ய முடியாது. இந்தச் சேவையினூடாகவே இதன் தாக்கம் உணரப்படும். ஆரம்பத்திலும் கூட, காட்சிகளின் தாக்கம் இருந்தது, அப்படித்தானே? காட்சிகளும் சூட்சும அனுபவங்களும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின. இறுதியிலும் கூட, இந்தச் சேவை இடம்பெற வேண்டும். உங்களுடைய சம்பூர்ண வடிவத்தின் காட்சிகளை நீங்கள் ஒவ்வொருவரும் கண்டிருக்கிறீர்களா? அவர்கள் இப்பொழுது சக்திகளை அழைக்க ஆரம்பித்துள்ளார்கள். இப்பொழுது அவர்கள் கடவுளை அந்தளவிற்கு அழைப்பதில்லை. ஆனால் சக்திகளை அழைப்பது, முழு விசையுடன் ஆரம்பமாகியுள்ளது. எனவே, நீங்கள் இதனை அவ்வப்பொழுது பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் இந்தப் பழக்கத்தை விருத்தி செய்யும் போது, அதிகளவு ஆனந்தத்தை உணர்வீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒரு விநாடியில் சரீரங்களில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் அப் பயிற்சியை கொண்டிருப்பீர்கள். இப்பொழுது, இதுவே செய்யப்பட வேண்டிய முயற்சியாகும்.
தற்போது, உங்களுடைய கடைகின்ற சக்தியினூடாக, ஆத்மாக்களாகிய நீங்கள் சகல சக்திகளாலும் நிரப்பப்பட வேண்டிய தேவை உள்ளது. அப்பொழுதே நீங்கள் முழுமையான அன்பில் திளைத்திருக்கின்ற ஸ்திதியைக் கொண்டிருக்க முடியும். அப்பொழுது தடைகள் அகற்றப்படும். ஆன்மிகத்தின் வலிமை குறைவடையும் போதே, தடைகளின் அலை வருகின்றது. எனவே, தற்போது, சிவராத்திரி சேவைக்கு முன்னர் சக்தியினால் உங்களை நிரப்பிக் கொள்கின்ற வலிமையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் யோகத்திற்காக நிகழ்ச்சிகளை கொண்டிருக்கக்கூடும். ஆனால் அனுபவங்களினதும், யோகத்தினூடாக பிறருக்கு சக்திகளின் அனுபவங்களை கொடுக்கின்ற வகுப்புகளுக்கான அவசியம் உள்ளது. உங்களுடைய சொந்த சக்திகளின் அடிப்படையில், நீங்கள் நடைமுறை ரீதியில் பிறருக்கு சக்தியைக் கொடுக்க வேண்டும். புறச் சேவைகளுக்கான திட்டங்களைப் பற்றிய எண்ணத்தை மாத்திரம் கொண்டிருக்காது, ஆனால் சகல வழிகளையும் நீங்கள் பார்க்க வேண்டும். கருவிகளாக இருப்பவர்கள், தமது தோட்டம் எந்த விடயத்தில் பலவீனமாக உள்ளதெனச் சிந்திக்க வேண்டும். இயன்றவரையில் ஏதாவது ஒரு வழியில், மிகக் கண்டிப்பான கண்ணினூடாக உங்கள் தோட்டத்தின் பலவீனங்களை நீங்கள் பார்க்க வேண்டும். பலவீனங்களை முடிப்பதற்கு நேரத்தை ஒதுக்குங்கள்.
நீங்கள் சக்கார் வடிவத்தைப் பார்த்தீர்கள்: ஏதோவதொரு குறிப்பிட்ட அலை வீசும் போது, அதற்கென விசேடமாக சேவை செய்யப்படுவதுடன், இரவுபகலாக சகாஷ் கொடுப்பதற்கான விசேட திட்டம் வகுக்கப்படும். பலவீனமான ஆத்மாக்களை சக்திசாலிகள் ஆக்குவதில் விசேட கவனம் செலுத்தப்படும் போது, பல ஆத்மாக்களும் ஓர் அனுபவத்தைப் பெறுவதுண்டு. ஆத்மாக்களை சகாஷினால் நிரப்புவதற்கான சேவையை செய்வதற்கு, இரவுநேரத்தில் நேரம் ஒதுக்கப்பட்டது. எனவே, குறிப்பாக சகாஷ் கொடுப்பதற்கான சேவை இப்பொழுது செய்யப்பட வேண்டும். வெளிச்ச வீடாகவும் சக்தி வீடாகவும் இருந்து, குறிப்பாக இச் சேவையைச் செய்யுங்கள். அப்பொழுதே ஒளியினதும் சக்தியினதும் தாக்கம் எங்கும் பரவிச் செல்லும். இப்பொழுது இதற்கான தேவை உள்ளது. ஒரு செல்வந்தர் தனது நெருக்கமான உறவினர்களுக்கு அவர்களை மேம்படுத்துவதற்காக உதவுவதைப் போன்று நீங்களும் உங்கள் தொடர்பிலும் உறவுமுறையிலும் உள்ள பலவீனமான ஆத்மாக்கள் அனைவருக்கும் இப்பொழுது விசேட சக்காஷ் கொடுக்க வேண்டும். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் உண்மையாகவே அன்பானவராகவும், ஆயிரம் கரங்கள் கொண்ட தந்தை பிரம்மாவின் சகவாசத்தை சதா அனுபவம் செய்பவராகவும் ஆகுவீர்களாக.தற்போது, ஆயிரம் கரங்கள் கொண்ட தந்தை பிரம்மாவின் பாகம் நடிக்கப்படுகின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் இல்லாது, உங்கள் கைகளால் எதையுமே செய்ய முடியாததைப் போன்றே, கரங்களான உங்களால், அதாவது குழந்தைகளாகிய உங்களால் பாப்தாதா இல்லாது எதனையுமே செய்ய முடியாது. ஒவ்வொரு பணியிலும் முதலில் தந்தையின் உதவியே உள்ளது. ஸ்தாபனைக்கான பாகம் நடிக்கப்படும் போது, ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வொரு விநாடியிலும் பாப்தாதா குழந்தைகளாகிய உங்களுடன் இருக்கின்றார். ஆகையால், அவரிடமிருந்து பிரிந்திருக்கின்ற திரையை இட்டு, யோகத்தில் பிரிந்திருக்காதீர்கள். அன்புக்கடலின் அலைகளில் பயணம் செய்யுங்கள். அவரின் புகழைப் பாடுங்கள், காயப்படாதீர்கள். தந்தையின் மீதுள்ள அன்பின் நடைமுறை வடிவமானது, சேவை செய்வதில் விருப்பம் கொண்டிருப்பதாகும்.
சுலோகம்:
சரீரமற்ற ஸ்திதியின் அனுபவமும் பயிற்சியுமே, முன்னிலையில் ஓர் இலக்கத்தை கோருவதற்கு அடிப்படையாகும்.உங்களின் சக்திவாய்ந்த மனதினால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.
உங்கள் மனம் இயல்பாகவே ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் நிறைந்திருப்பது, உங்களாலும் பிறராலும் அனுபவம் செய்யப்படல் வேண்டும். சகல ஆத்மாக்களுக்கும் ஒவ்வொரு கணமும் உங்கள் மனதிலிருந்து ஆசீர்வாதங்கள் தொடர்ந்தும் வெளிப்பட வேண்டும். உங்கள் மனம் சதா இச் சேவை செய்வதில் மும்முரமாக இருக்கட்டும். நீங்கள் வார்த்தைகளால் சேவை செய்வதில் அனுபவசாலிகள் ஆகியிருக்கிறீர்கள். உங்களுக்கு எந்தச் சேவையும் செய்வதற்கு இல்லாத போது நீங்கள் வெறுமையை அனுபவம் செய்கிறீர்கள். வார்த்தைகளினால் சேவை செய்வதைப் போன்றே, உங்கள் மனதினால் செய்கின்ற சேவையும் இயல்பாகவே தொடர்ந்தும் இடம்பெறட்டும்.