18.01.26 Avyakt Bapdada Tamil Lanka Murli Om Shanti Madhuban
பிதா ஸ்ரீஜியின் நினைவு நாளில் காலை வகுப்பில் வாசிப்பதற்கான பாப்தாதாவின் விலைமதிப்பற்ற மேன்மையான வாசகங்கள்.
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் உங்களின் மடிகளை இந்த ஞான இரத்தினங்களால் நிரப்புவதுடன் அவற்றைத் தானம் செய்யவும் வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு மற்றவர்களுக்குப் பாதையைக் காட்டுகிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமான ஆசீர்வாதங்களை நீங்கள் பெறுவீர்கள்.
ஓம் சாந்தி. இனிய குழந்தைகளே, சிவபாபாவே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை நீங்கள் உறுதியாக நினைவு செய்ய வேண்டும். சிவபாபாவே தூய்மையாக்குபவரும் அத்துடன் சற்கதியை அருள்பவரும் ஆவார். சற்கதி என்றால் அவர் எங்களுக்கு சுவர்க்க இராச்சியத்தை வழங்குகிறார் என்று அர்த்தம். பாபா மிகவும் இனிமையானவர். அவர் மிகுந்த அன்புடன் அமர்ந்திருந்து குழந்தைகளான எங்களுக்குக் கற்பிக்கிறார். தாதாவின் மூலமே தந்தை எங்களுக்குக் கற்பிக்கிறார். பாபா மிகவும் இனிமையானவர், அத்துடன் அவர் எங்களை மிகவும் நேசிக்கிறார். அவர் எங்களுக்கு எந்தவிதமான சிரமமும் கொடுப்பதில்லை. அவர் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், அத்துடன் சக்கரத்தையும் நினைவு செய்யுங்கள். தந்தையின் நினைவுடன் கூடவே, உங்களின் இதயமும் மிகவும் குளிர்மை அடையட்டும். ஒரேயொரு தந்தையின் நினைவானது உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டும். ஏனென்றால், நீங்கள் தந்தையிடம் இருந்து மகத்தான ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். உங்களையே பாருங்கள், தந்தையின் மீது உங்களுக்கு எவ்வளவு அன்பு உள்ளது என்றும் எந்தளவிற்கு உங்களிடம் தெய்வீகக் குணங்கள் உள்ளன என்றும் பாருங்கள். ஏனென்றால், குழந்தைகளான நீங்கள் இப்போது முட்களில் இருந்து மலர்களாக மாறுகிறீர்கள். எந்தளவு அதிகமாக நீங்கள் யோகத்தில் இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களால் முட்களில் இருந்து மலர்களாக மாற முடியும். அத்துடன் தொடர்ந்து சதோபிரதான் ஆகமுடியும். நீங்கள் மலர்கள் ஆகியவுடன், உங்களால் இங்கே தங்கியிருக்க முடியாது. சுவர்க்கம், பூந்தோட்டம் ஆகும். முட்கள் பலவற்றை மலர்களாக மாற்றுபவர்கள், உண்மையான நறுமணம் மிக்க மலர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் எவரையும் குத்த மாட்டார்கள். கோபமும் ஒரு மிகப்பெரிய முள்ளே ஆகும். அது பலருக்குத் துன்பம் விளைவிக்கிறது. இப்போது, குழந்தைகளான நீங்கள் முட்களின் உலகில் இருந்து கரைக்கு வந்துள்ளீர்கள். நீங்கள் இப்போது சங்கமத்தில் இருக்கிறீர்கள். எப்படி ஒரு தோட்டக்காரர் வெவ்வேறு பூச்சாடிகளில் கன்றுகளை நடுகிறாரோ, அதேபோல், மலர்களான நீங்களும் சங்கமயுக சாடிகளில் வேறாக வைக்கப்பட்டுள்ளீர்கள். மலர்களான நீங்கள் பின்னர் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். கலியுக முட்கள் எரிக்கப்பட்டுவிடும்.
இனிய குழந்தைகளான நீங்கள் பரலோகத் தந்தையிடம் இருந்து அழியாத ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்பதை அறிவீர்கள். உண்மையான குழந்தைகளாக இருப்பவர்கள், பாப்தாதாவிடம் சம்பூரணமான அன்பைக் கொண்டிருப்பவர்கள், நாங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகிறோம் என்ற அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருப்பார்கள். ஆம், அதைக் கூறுவதனால் மட்டுமன்றி, முயற்சி செய்வதனால் மட்டுமே உங்களால் உலக அதிபதிகள் ஆக முடியும். விசேடமான அதியன்பிற்குரிய குழந்தைகள், தாம் மீண்டும் ஒருமுறை தங்களுக்காக சூரிய வம்ச, சந்திர வம்ச இராச்சியங்களை ஸ்தாபிக்கிறோம் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: இனிய குழந்தைகளே, எந்தளவிற்கு நீங்கள் பலருக்கு நன்மை செய்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமான வெகுமதியை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் பலருக்குப் பாதையைக் காட்டும்போது, நீங்கள் பலரிடம் இருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். நீங்கள் இந்த ஞான இரத்தினங்களால் உங்களின் மடிகளை நிரப்பி, அவற்றை மற்றவர்களுக்குத் தானம் செய்ய வேண்டும். ஞானக் கடல் உங்களுக்குத் தட்டுகள் நிறைந்த ஞான இரத்தினங்களை வழங்கி உள்ளார். இந்த இரத்தினங்களைத் தானம் செய்பவர்கள், அனைவராலும் நேசிக்கப்படுகிறார்கள். குழந்தைகளே, நீங்கள் உங்களுக்குள்ளே அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். விவேகிக் குழந்தைகள் பாபாவிடம் இருந்து முழுமையான ஆஸ்தியைக் கோருவோம் எனக் கூறுவார்கள். அவர்கள் தந்தையைப் பற்றிப் பிடித்திருப்பார்கள். அத்துடன் அவர்கள் தந்தையிடம் அதிகளவு அன்பைக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால், தமக்கு வாழ்வளித்த தந்தையைத் தாம் கண்டு கொண்டோம் என்பதை அவர்கள் அறிவார்கள். நீங்கள் எப்படி இருந்தீர்களோ, அதில் இருந்து முற்றிலும் மாறுவதற்காக இந்த ஞானத்தின் ஆசீர்வாதத்தை அவர் வழங்குகிறார். நாங்கள் கடனாளிகளில் இருந்து கடன்களைத் தீர்க்கக் கூடியவர்கள் ஆகுகிறோம். அவர் எமது பொக்கிஷக் களஞ்சியத்தை நிரம்பி வழியச் செய்கிறார். நீங்கள் எந்தளவிற்குத் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமான அன்பை நீங்கள் கொண்டிருப்பீர்கள், அத்துடன் ஓர் ஈர்ப்பு காணப்படும். ஓர் ஊசி சுத்தமாக இருக்கும்போது, அது காந்தத்தால் கவரப்படும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் அந்தத் துரு தொடர்ந்தும் நீக்கப்படும். ஒரேயொரு தந்தையைத் தவிர, வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள்.
தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிய குழந்தைகளே, இப்போது கவனயீனம் ஆகாதீர்கள். சுயதரிசன சக்கரதாரிகள் ஆகுங்கள், ஒரு வெளிச்சவீடு ஆகுங்கள். நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவராக இருப்பதைப் பயிற்சி செய்வதை வளர்த்துக் கொள்ளும்போது, மாணவர்கள் கற்று ஆசிரியர்கள் ஆகுவதைப் போல், நீங்கள் ஞானக்கடல் ஆகுவீர்கள். இது உங்களின் தொழில். அனைவரையும் சுயதரிசன சக்கரதாரியாக ஆக்குங்கள். அப்போது மட்டுமே நீங்கள் உலகை ஆள்பவர்கள் ஆகுவீர்கள். இதனாலேயே, பாபா எப்போதும் குழந்தைகளான உங்களிடம் கேட்கிறார்: நீங்கள் இங்கே சுயதரிசன சக்கரதாரிகளாக அமர்ந்திருக்கிறீர்களா? தந்தையும் சுயதரிசனச் சக்கரதாரியே, அல்லவா? தந்தை இனிய குழந்தைகளான உங்களை வீட்டுக்குத் திருப்பி அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறார். குழந்தைகளான நீங்கள் இல்லாமல், நானே அமைதியற்று இருப்பதுபோல் உணர்கிறேன். நேரம் வரும்போது, நான் பரபரப்பு அடைகிறேன்: ஓகே, இப்போது நான் செல்ல வேண்டும். குழந்தைகள் அதிகளவில் அழைக்கிறார்கள், அவர்கள் மிகவும் துக்கத்துடன் இருக்கிறார்கள். அவர்களின் மீது கருணை பிறக்கிறது. குழந்தைகளான நீங்கள் இப்போது வீடு திரும்ப வேண்டும். பின்னர், அங்கிருந்து, சந்தோஷ தாமத்திற்கு நீங்களாகவே கீழே செல்வீர்கள். நான் அங்கே உங்களின் சகபாடி ஆக மாட்டேன். ஆத்மாக்களான நீங்கள் உங்களின் ஸ்திதிக்கேற்ப கீழே இறங்கிச் செல்வீர்கள்.
குழந்தைகளான நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகத் தந்தையின் நினைவில் இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் மற்றவர்களுக்கு விளக்கும்போது அதிக தாக்கம் ஏற்படும். நீங்கள் அதிகம் பேசக்கூடாது. சிறிதளவையேனும் நீங்கள் ஆத்ம உணர்வுடன் பேசினால், அம்பு இலக்கைத் தாக்கும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, கடந்தது கடந்ததாக இருக்கட்டும். இப்போது, அனைத்திற்கும் முதலில், உங்களை சீர்திருத்திக் கொள்ளுங்கள். நீங்களே நினைவு செய்யாமல், தொடர்ந்து மற்றவர்களை அப்படி செய்யும்படி சொன்னால், இந்த ஏமாற்றுதல் வேலை செய்யாது. நிச்சயமாக, உங்களின் மனச்சாட்சி உங்களை உள்ளே உறுத்தும். தந்தையின் மீது சம்பூரணமான அன்பு இல்லாவிட்டால், நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற மாட்டீர்கள். எல்லையற்ற தந்தை வழங்கும் கற்பித்தல்களை வேறு எவராலும் வழங்க முடியாது. தந்தை கூறுகிறார்: இனிய குழந்தைகளே, இப்போது இந்தப் பழைய உலகை மறந்து விடுங்கள். இறுதியில், நீங்கள் அனைத்தையும் மறக்க வேண்டியிருக்கும். அப்போது உங்களின் புத்திகள் அமைதி தாமத்துடனும் சந்தோஷ தாமத்துடனும் இணைக்கப்பட்டிருக்கும். தந்தையை நினைவு செய்வதன் மூலம், நீங்கள் பின்னர் தந்தையிடம் செல்வீர்கள். தூய்மையற்ற ஆத்மாக்களால் அங்கே செல்ல முடியாது. அது தூய ஆத்மாக்களின் வீடு. இந்தச் சரீரம் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது. பஞ்சபூதங்களும் உங்களை இங்கே இருப்பதற்காக இழுக்கும். ஏனென்றால், ஆத்மா இந்தச் சொத்தை எடுத்துள்ளார். இதனாலேயே, சரீரத்தின் மீது பற்று உள்ளது. நீங்கள் உங்களின் சரீரங்களின் மீதான பற்றை இப்போது நீக்கி, உங்களின் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். இந்தப் பஞ்ச பூதங்களும் அங்கே இருக்காது. சத்தியயுகத்தில், சரீரங்கள் யோக சக்தியாலேயே உருவாக்கப்படுகின்றன. பஞ்சபூதங்களும் சதோபிரதானாக இருக்கும். அதனால், எந்தவிதமான ஈர்ப்போ அல்லது துன்பமோ இருக்க மாட்டாது. இவை புரிந்து கொள்ள வேண்டிய மிகவும் தெளிவான விடயங்கள் ஆகும். இங்கே, பஞ்ச பூதங்களின் சக்தி ஆத்மாக்களை இழுக்கிறது. இதனாலேயே, அவர்கள் தமது சரீரங்களை விட்டுச் செல்லும் உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். இல்லாவிட்டால், இதில் பெருமளவு சந்தோஷம் ஏற்பட வேண்டும். நீங்கள் தூய்மை அடைந்து, வெண்ணையில் இருந்து ஒரு முடியை இழுப்பதைப் போல் உங்களின் சரீரங்களை விட்டுச் செல்வீர்கள். அதனால், சரீரத்திற்கான பற்றும் ஏனைய அனைத்தும் முடிவடைய வேண்டும். அதனுடன் எங்களுக்குத் தொடர்பு இல்லை. நாங்கள் பாபாவிடம் செல்கிறோம். நாங்கள் இந்த உலகில் எங்களின் பெட்டி, படுக்கைகளைக் கட்டி, முன்கூட்டியே அங்கே அனுப்பி வைக்க வேண்டும். அவை எங்களுடன் செல்ல முடியாது. ஆனால், ஆம், ஆத்மாக்களே திரும்பிச் செல்ல வேண்டும். சரீரங்களை இங்கே விட்டுவிட்டே செல்ல வேண்டும். பாபா எங்களுக்குப் புதிய சரீரங்களின் காட்சிகளைக் காட்டி உள்ளார். நாங்கள் வைரங்களும் இரத்தினங்களும் பதித்த மாளிகைகளைப் பெறுவோம். அத்தகையதொரு சந்தோஷ உலகிற்குச் செல்வதற்கு நாங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் களைப்படையக் கூடாது. இரவு பகலாக, நீங்கள் அதிகளவு வருமானத்தைச் சம்பாதிக்க வேண்டும். இதனாலேயே, பாபா கூறுகிறார்: ஓ குழந்தைகளே, தூக்கத்தை வென்றவர்களே, சதா என்னை மட்டும் நினைவு செய்யுங்கள், அத்துடன் இந்த ஞானக் கடலைக் கடையுங்கள். நாடகத்தின் இரகசியங்களை உங்களின் புத்திகளில் வைத்திருப்பதன் மூலம், உங்களின் புத்திகள் மிகவும் குளிர்மை அடையும். மகாராத்திக் குழந்தைகள் ஒருபோதும் அசைய மாட்டார்கள். அவர்கள் சிவபாபாவை நினைவு செய்வார்கள், அதனால் அவர் அவர்களைப் பார்த்துக் கொள்வார்.
தந்தை குழந்தைகளான உங்களைத் துன்பத்தில் இருந்து விடுவித்து, அமைதித் தானத்தை உங்களுக்கு வழங்குகிறார். நீங்களும் அமைதியைத் தானம் செய்ய வேண்டும். உங்களின் எல்லையற்ற அமைதி, அதாவது, உங்களின் யோக சக்தி மற்றவர்களைச் சம்பூரணமாக அமைதிநிறைந்ததாக ஆக்கும். தந்தையின் நினைவில் இருங்கள், பின்னர் அந்த ஆத்மா உங்களின் குலத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்பதைப் பாருங்கள். அவர் சேர்ந்தவராக இருந்தால், அவர் முற்றிலும் அமைதி நிறைந்தவர் ஆகிவிடுவார். இந்தக் குலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, இந்த விடயங்களில் ஆர்வம் காட்டுவார்கள். குழந்தைகளான நீங்கள் தந்தையை நினைவு செய்யும்போது, அவரும் உங்களை நேசிக்கிறார். ஆத்மா நேசிக்கப்படுகிறார். அதிகளவு பக்தி செய்தவர்கள், அதிகளவு கற்பார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவர்களுக்குத் தந்தையிடம் எவ்வளவு அன்பு உள்ளது என்பதை அவர்களின் முகங்களில் இருந்து உங்களால் கூற முடியும். ஆத்மா தந்தையைப் பார்க்கிறார். தந்தை ஆத்மாக்களான எங்களுக்குக் கற்பிக்கிறார். தந்தையும் புரிந்து கொள்கிறார்: நான் சின்னஞ்சிறிய புள்ளிகளான ஆத்மாக்களுக்குக் கற்பிக்கிறேன். நீங்கள் முன்னேறும்போது, இது உங்களின் ஸ்திதி ஆகிவிடும். நீங்கள் உங்களின் சகோதரர்களுக்குக் கற்பிக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அது ஒரு சகோதரியின் முகமாக இருந்தாலும் உங்களின் பார்வை ஆத்மாவின் மீதே செல்லும். பார்வை ஒருபோதும் சரீரத்தின் மீது விழாமல் இருக்க வேண்டும். இதற்கு அதிகளவு முயற்சி தேவை. இவை மிகவும் தெளிவான விடயங்கள். இந்தக் கல்வி மிகவும் மேன்மையானது. நீங்கள் அதை நிறுத்தால், இந்தக் கல்வியின் பக்கமான தராசு மிகவும் பாரமாக இருக்கும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அதியன்பிற்குரிய, நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவிடம் இருந்து அன்பும் நினைவுகளும் காலை வணக்கங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்கு நமஸ்தே சொல்கிறார்.
18-01-2026
அவ்யக்த மேன்மையான வாசகங்கள்
09-12-1975
மகாவீரர்களின் ஒன்றுகூடலின் சிறப்பியல்பானது, அவர்களின் நிலையான, ஒருமுகப்பட்ட ஸ்திதி ஆகும்.ஒரு மகாவீரர் என்றால் விசேடமான ஆத்மா என்று அர்த்தம். விசேடமான ஆத்மாக்களின் ஒன்றுகூடலின் சிறப்பியல்பு என்ன? தற்சமயம், விசேடமான ஆத்மாக்களின் சிறப்பியல்பானது, ஒரே வேளையில் அனைவரும் நிலையான மற்றும் ஒருமுகப்பட்ட ஸ்திதியைக் கொண்டிருப்பதே ஆகும். அதாவது, உங்கள் அனைவராலும் ஒரே வேளையில் ஒரு குறிப்பிட்ட ஸ்திதியில் நீங்கள் விரும்பிய அளவு நேரத்திற்கு உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். அனைவரின் எண்ணம் என்ற விரலும் ஒன்றுசேர்ந்த முறையில் ஒத்ததாகவே இருக்க வேண்டும். ஒன்றுகூடலில் இந்தப் பயிற்சி இருக்கும்வரை, அதனால் வெற்றி பெற முடியாது.
நீங்கள் இப்போது, சகல வீணான எண்ணங்களையும் ஐந்து நிமிடங்களுக்கு முடித்து, ஒரு நிலையான, சக்திவாய்ந்த ஸ்திதியில் ஸ்திரம் அடைய வேண்டும் என்றொரு கட்டளையைப் பெற்றால், உங்களுக்கு அந்தப் பயிற்சி உள்ளதா? சிலர் கடைகின்ற ஸ்திதியில் ஸ்திரம் அடைவதாகவும் சிலர் இதயபூர்வமான சம்பாஷணை செய்வதாகவும் ஏனையோர் அவ்யக்த ஸ்திதியில் இருப்பதாகவும் இருக்கக்கூடாது. விதைஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதற்கான கட்டளையை நீங்கள் பெற்று, அதற்குப் பதிலாக நீங்கள் இதயபூர்வமான உரையாடலை ஆரம்பித்தால், அது கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது, அப்படித்தானே? நீங்கள் முதலில் வீணான எண்ணங்கள் அனைத்தையும் முடித்தால் மட்டுமே, உங்களால் இதைப் பயிற்சி செய்ய முடியும். வீணான எண்ணங்களால்தான் குழப்பம் ஏற்படுகிறது. ஆகவே, வீணான எண்ணங்கள் அனைத்தையும் முடிக்கச் செய்து, உங்களின் ஒன்றுகூடலைச் சக்திநிறைந்ததாகவும் ஒற்றுமையாகவும் ஆக்குவதற்கு உங்களுக்குத் தேவையான குறிப்பிட்ட சக்தி என்ன?
இதற்கு, உங்களிடம் நம்பிக்கையும் ஏற்றுக் கொள்ளும் சக்தியும் அவசியம். ஒன்றுகூடலை இணைக்கின்ற இழையானது, நம்பிக்கையே ஆகும். யாராவது ஏதாவது தவறு செய்திருந்தாலும், அவரின் சம்ஸ்காரங்கள் மற்றும் நேரத்திற்கேற்ப அவர் எதைச் செய்திருந்தாலும், அது ஒன்றுகூடலுக்கு குறிப்பிடத்தக்கது. ஒன்றுதிரட்டிய முறையில் சேவை இடம்பெறும்போது, உங்களின் கருணைநிறைந்த பார்வையுடன் மற்றவர்களின் சம்ஸ்காரங்களைப் பார்த்த வண்ணமும் அவர்களின் சம்ஸ்காரங்களை உங்களின் முன்னால் வைத்திருக்காமலும் நீங்கள் முன்னேறும்போது, அதில் நன்மை உள்ளது. ஒன்றுகூடலில் உள்ள அனைவருக்கும் ஒருவருக்கு ஒருவர்மீது இத்தகைய நம்பிக்கை இருக்கும்போது மட்டுமே, வெற்றி ஏற்படும். முன்னரே வீணான எண்ணங்களைக் கொண்டிராதீர்கள். சில ஆத்மாக்களால் தமது சொந்தத் தவறுகளை உணரக் கூடியதாக இருக்கும், ஆனால் அவர்கள் அந்தத் தவறுகளை வெளியே பரப்ப மாட்டார்கள். அதற்குப் பதிலாக, அவர்கள் தமக்குள் அவற்றை அடக்கிக் கொள்கிறார்கள். மற்றவர்கள் தமது தவறுகளைப் பற்றிப் பரப்புவார்களாக இருந்தால், அவர்கள் அதைப் பற்றி மனவருத்தப்படுவார்கள். இந்த முறையில், மற்றவர்களின் தவறை உங்களின் சொந்தத் தவறாகக் கருதி, அவற்றைப் பரப்பாதீர்கள். வீணான எண்ணங்களை உருவாக்காதீர்கள், ஆனால் அதற்குப் பதிலாக, அவர்களின் தவறுகளை உள்ளடக்கிக் கொள்ளுங்கள். ஒருவர் மற்றவர் மீதும் இத்தகைய நம்பிக்கை இருக்க வேண்டும். அன்பு சக்தியால் உங்களால் அனைத்தையும் சரியாக்கிக் கொள்ள முடிகிறது. உலகியல் ரீதியாகவும், மக்கள் தமது சொந்த வீட்டைப் பற்றிய விடயங்களை வெளியே மற்றவர்களிடம் பேசுவதில்லை. ஏனென்றால், அது அவர்களின் சொந்த வீட்டுக்கு ஓர் இழப்பை மட்டுமே ஏற்படுத்தும். ஒன்றுகூடலுக்குள், உங்களின் சகபாடி எதைச் செய்தாலும், அதில் நிச்சயமாக ஏதோவோர் அர்த்தம் இருக்கும். அவர் ஏதாவது தவறு செய்தால், அப்போதும் நீங்கள் அவரை மாற்ற வேண்டும். ஒருவரோடு ஒருவர் இந்த இரண்டு வகையான நம்பிக்கைகளுடனும் பழகுங்கள். அப்போது மட்டுமே ஒன்றுகூடலுக்குள் வெற்றி ஏற்படும். இதற்கு, அதிக அளவில் உங்களுக்கு ஏற்றுக் கொள்ளும் சக்தி தேவைப்படுகிறது. நீங்கள் வீணான எண்ணங்களை அமிழ்த்திக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தின் சம்ஸ்காரங்களை, இப்போது உள்ளவற்றுடன் ஒருபோதும் ஒப்பிடாதீர்கள். அதாவது, கடந்த காலத்தை உங்களின் நிகழ்காலம் ஆக்காதீர்கள். நிகழ்காலத்தை நீங்கள் கடந்த காலத்துடன் கலக்கும் போதே, நீங்கள் வீணான எண்ணங்களின் நீண்டதொரு வரிசையை உருவாக்குகிறீர்கள். வீணான எண்ணங்களின் வரிசை இருக்கும் வரைக்கும், ஒன்றுகூடலில் ஸ்திரமான, ஒற்றுமையான ஸ்திதி இருக்க முடியாது.
வேறொருவரின் தவறுகளை உங்களுடையதாகக் கருதுவதே, ஒன்றுகூடலை வலிமை ஆக்குவதாகும். இது ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்திருக்கும் போது மட்டுமே நடக்கும் - மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் நன்மை செய்வதற்குமான நம்பிக்கை.
ஆகவே, உங்களுக்கு நிச்சயமாக ஏற்றுக் கொள்ளும் சக்தி அவசியம். நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ அல்லது கேட்கிறீர்களோ, அதை உங்களுக்குள் முற்றாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் பின்னர், அதே ஆன்மீகப் பார்வையையும் நன்மை செய்யும் உணர்வுகளையும் கொண்டிருங்கள். உங்களை அவமதிப்பவர்களையும் நீங்கள் ஈடேற்ற வேண்டும் என்று இந்த ஞானம் இல்லாதவர்களிடம், நீங்கள் சொல்கிறீர்கள். அதேபோல், ஒன்றுகூடலுக்குள்ளும், நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையைக் கொண்டிருக்க வேண்டும். தற்சமயம், உங்களிடம் அதிக கருணை காணப்படவில்லை. அதனால் ஆத்ம உணர்வு ஸ்திதியின் பயிற்சியும் குறைவடைகிறது.
இத்தகைய சக்திவாய்ந்த ஒன்றுகூடல் இருக்கும் போது மட்டுமே வெற்றி ஏற்படும். தற்போது, நீங்கள் வெற்றியை அழைக்க வேண்டியுள்ளது. ஆனால் பின்னர், வெற்றி உங்களுக்குத் தலைவணங்கும். எப்படி சத்தியயுகத்தில் இயற்கை உங்களின் சேவகன் ஆகுகிறதோ, அதேபோல், வெற்றியும் உங்களுக்குத் தலைவணங்கும். வெற்றி உங்கள் எல்லோரையும் அழைக்கும். இந்த ஞானம் மிகவும் மேன்மையானது என்பதனாலும் உங்களிடம் சக்திவாய்ந்த ஸ்திதி இருப்பதனாலும் வெற்றி என்பது பெரியதொரு விடயம் அல்ல. எனவே, இதை எல்லா நேரமும் பயிற்சி செய்பவர்களுக்கு அந்த வெற்றியை அடையாமல் இருப்பது என்பது சாத்தியம் இல்லை. எனவே, ஒன்றுகூடலில் உங்களுக்கு இந்தச் சக்தி தேவைப்படுகிறது. யாராவது எதையாவது சொல்லும்போது, மற்றவர்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்தவொரு பிராமண ஒன்றுகூடலிலும் நீங்கள் முகங்கொடுக்கும் சக்தியைப் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் இந்தச் சக்தியை மாயையை எதிர் கொள்வதற்கே பயன்படுத்த வேண்டும். குடும்பத்துடன் நீங்கள் முகங்கொடுக்கும் சக்தியைப் பயன்படுத்தினால், ஒன்றுகூடல் சக்திநிறைந்தது ஆக மாட்டாது. உங்களுக்கு எதையாவது பிடிக்காவிட்டாலும், அப்போதும் நீங்கள் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்திருக்க வேண்டும். அந்த வேளையில் நீங்கள் ஒருவரின் அபிப்பிராயங்களை அல்லது வார்த்தைகளைத் தடுத்து நிறுத்தக்கூடாது. ஆகவே, நீங்கள் இப்போது ஏற்றுக் கொள்ளும் சக்தியைக் கிரகிக்க வேண்டும்.
பிராமணக் குழந்தைகளின் எந்தவொரு ஒன்றுகூடலிலும் நீங்கள் பயன்படுத்தும் மொழியானது அவ்யக்த உணர்வுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் - அதாவது, தேவதைகள் தேவதைகளிடம் பேசுவது போன்று, ஆத்மாக்கள் ஆத்மாக்களிடம் பேசுவது போன்று இருக்க வேண்டும். நீங்கள் கேள்விப்பட்ட மற்றவரின் தவறுகளை உங்களின் எண்ணங்களில் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அத்துடன் மற்றவர்களையும் அவற்றை ஏற்றுக் கொள்ளச் செய்யாதீர்கள். இத்தகைய ஸ்திதியை நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே, உங்களால் தந்தையின் தூய விருப்பங்களை நடைமுறைப்படுத்த முடியும். இதற்கு, ஒவ்வொருவரின் முயற்சியினதும் அத்துடன் ஒவ்வொருவரின் விசேடமான அனுபவங்களினதும் விசேடமான பரிமாற்றம் நிகழ வேண்டும். இத்தகைய விசேடமான யோகா நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெற்றால், விநாசத் தீ கொழுந்து விட்டு எரியும். யோக அக்கினியில் இருந்தே விநாசத்தீ ஆரம்பம் ஆகும். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் பௌதீக ரூபத்தில் இருக்கும்போதே, வெள்ளை ஒளியாலான வெள்ளை ஆடைகளை அணிந்தவராகி, ஓர் அவ்யக்த தேவதை ரூபமாக உங்களை வெளிப்படுத்துவீர்களாக.இப்போது எங்கும் ஒலி பரவுகிறது: வெள்ளையில் இருக்கும் இந்த மனிதர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்துள்ளார்கள்? இப்போது, உங்களின் தேவதை ரூபங்களை எங்கும் வெளிப்படுத்துங்கள். இதுவே இரட்டைச் சேவைக்கான உங்களின் ரூபம் என்று அழைக்கப்படுகிறது. எப்படி எங்கும் முகில்கள் காணப்படுகின்றனவோ, அதேபோல், எங்கும் உங்களின் தேவதை ரூபங்களை வெளிப்படச் செய்யுங்கள். மக்கள் எங்கே பார்த்தாலும், அவர்கள் தேவதைகளை மட்டுமே பார்க்க வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் உங்களின் சரீரங்களில் இருந்து பற்றற்றவராகி, உங்களின் அக, சூட்சுமமான சரீரங்களுடன் பயணம் செய்வதைப் பயிற்சி செய்யும்போதும் உங்களின் மனங்கள் சக்திவாய்ந்தவையாக இருக்கும்போதும் மட்டுமே இது நடக்கும்.
சுலோகம்:
சகல நற்குணங்களுக்கும் சகல சக்திகளுக்கும் உரிமையைக் கொண்டிருப்பதற்கு, கீழ்ப்படிவானவர் ஆகுங்கள்.அவ்யக்த சமிக்கை: இந்த அவ்யக்த மாதத்தில், பந்தனத்தில் இருந்து விடுபட்டு, ஜீவன்முக்தி ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
தந்தை எப்படி சதா சுதந்திரமாக இருக்கிறாரோ, அவ்வாறே தந்தையைப் போன்று ஆகுங்கள். குழந்தைகளான நீங்கள் தங்கியிருப்பதைக் காண பாப்தாதாவால் இனியும் சகித்துக் கொள்ள முடியவில்லை. உங்களால் உங்களைச் சுதந்திரம் ஆக்க முடியாவிட்டால், உங்களின் பலவீனங்களால் நீங்கள் தொடர்ந்து வீழ்வீர்களாயின், எப்படி உங்களால் உலகை மாற்றுபவர்கள் ஆகமுடியும்? இப்போது, இந்த விழிப்புணர்வை அதிகரியுங்கள்: நான் ஒரு மாஸ்ரர் சர்வசக்திவான். இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம், உங்களால் இலகுவாகக் கூண்டுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, ஒரு பறக்கும் பறவை ஆகமுடியும்.