18.02.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஒவ்வொரு வீட்டிற்கும் தந்தையின் செய்தியைக் கொடுப்பதே உங்களின் கடமையாகும். அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் நீங்கள் நிச்சயமாக அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதற்காக ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எந்த ஒரு விடயத்தில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்?பதில்:
வெளிப்படுகின்ற புதிய கருத்துக்கள் அனைத்தையும் குறித்துக் கொள்வதில் நீங்கள் ஆர்வம் உடையவராக இருக்க வேண்டும். ஏனெனில் இக்கருத்துக்கள் அனைத்தையும் நினைவில் வைத்திருப்பது சிரமமாகும். ஏனையோருக்கு விளங்கப்படுத்துவதற்கு நீங்கள் உங்கள் குறிப்புக்களைப் பயன்படுத்த முடியும். எவ்வாறாயினும் நீங்கள் கருத்துக்களைக் குறித்து விட்டு உங்கள் குறிப்பேட்டை ஒருபுறத்தில் வைத்து விடுவதாக இருக்கக்கூடாது. அனைத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்கின்ற குழந்தைகள் குறிப்புக்கள் எடுப்பதில் மிகவும் ஆர்வம் உடையவராக இருக்கின்றார்கள்.பாடல்:
உலகிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் உங்கள் இதயத்தில் ஒரு பூட்டைப் பூட்டிவிட்டார்கள்!ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். “ஆன்மீகக் குழந்தைகள்” என்ற வார்த்தைகளை ஒரேயொரு தந்தை மாத்திரமே கூறுவார். ஆன்மீகத் தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களைத் தனது “ஆன்மீகக் குழந்தைகள்” என அழைக்க முடியாது. ஆத்மாக்கள் அனைவருக்கும் ஒரேயொரு தந்தையே உள்ளார் என்பதையும் நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மக்கள் சதோதரத்துவத்தைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் மாயை அவர்களுக்குள் எந்த முறையில் பிரவேசிக்கிறாள் என்றால் அவர்கள் தந்தையைச் சர்வவியாபி என அழைக்கிறார்கள். எனவே அது தந்தைத்துவம் ஆகிவிடுகிறது. இராவண இராச்சியம் பழைய உலகிலேயே உள்ளது. புதிய உலகில் இறை இராச்சியம் எனவும் அழைக்கப்படுகின்ற இராம இராச்சியம் உள்ளது. இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை. நிச்சயமாக இறை இராச்சியம் அசுர இராச்சியம் என இரண்டு இராச்சியங்கள் உள்ளன. புதிய உலகமும் பழைய உலகமும் உள்ளன. நிச்சயமாகத் தந்தையே புதிய உலகை உருவாக்குபவர். புதிய உலகைப் பற்றியோ அல்லது பழைய உலகைப் பற்றியோ உலக மக்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் எதனையும் அறியார்கள். முன்னர் நீங்களும் எதனையும் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் விவேகம் அற்றவர்களாக இருந்தீர்கள். புதிய சந்தோஷ உலகை உருவாக்குபவர் யார்? ஏன் பழைய உலகில் துன்பம் உள்ளது? நரகம் எவ்வாறு சுவர்க்கமாக மாறுகிறது? இவ்விடயங்களை எவருமே அறியார். இவ்விடயங்களை மனிதர்கள் மாத்திரமே அறிந்து கொள்ள முடியும். தேவர்களின் சிலைகள் உள்ளதால் ஆதிசனாதன தேவ இராச்சியம் நிச்சயமாக இருந்திருக்க வேண்டும். அது இப்பொழுது இல்லை. இப்பொழுது மக்களாட்சியே உள்ளது. தந்தை பாரதத்தில் மாத்திரமே வருகின்றார். சிவபாபா பாரதத்தில் பிரவேசித்து என்ன செய்கிறார் என்பது பாரத மக்களுக்குத் தெரியாது. அவர்கள் தங்களது சொந்தத் தர்மத்தையே மறந்து விட்டார்கள். அவர்களுக்கு இப்பொழுது நீங்கள் திரிமூர்த்தியினதும் தந்தை சிவனினதும் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். மக்கள் கூறுகின்றார்கள்: பிரம்ம தேவர், விஷ்ணு தேவர், சங்கரதேவர். பின்பு அவர்கள் பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள் எனக் கூறுகின்றார்கள். ஆகவே குழந்தைகளாகிய நீங்களே அவர்களுக்கு திரிமூர்த்தி சிவனின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். இந்தச் சேவையை நீங்கள் செய்ய வேண்டும். சந்தர்ப்பங்கள் எவையாக இருப்பினும் தந்தையின் அறிமுகத்தை அனைவரும் பெறும்போது அவர்களால் தந்தையிடம் இருந்து தங்கள் ஆஸ்தியைப் பெற முடியும். நீங்கள் உங்களது ஆஸ்தியை இப்பொழுது பெற்றுக் கொள்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். மேலும் பலர் தங்களுடைய ஆஸ்தியை இன்னமும் பெறவுள்ளனர். ஒவ்வொரு வீட்டிற்கும் தந்தையின் செய்தி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வது எங்கள் கடமையாகும். உண்மையில் தந்தை மாத்திரமே தூதுவர் ஆவார். தந்தை உங்களுக்குத் தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார். பின்னர் நீங்கள் ஏனையோருக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். நீங்கள் தந்தையின் ஞானத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். திரிமூர்த்தி சிவனே பிரதான விடயமாகும். இதுவே எங்கள் (இறை) அரசாங்கத்தின் இலச்சினை. இதன் சரியான அர்த்தத்தை அரசாங்கத்தவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களும் சக்கரத்தை ஒரு சுழலும் சக்கரமாகக் காட்டியுள்ளார்கள்: “அதில் சத்தியமே வெல்லும்” என எழுதப்பட்டுள்ளது. அந்த வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. அவை சமஸ்கிருத வார்த்தைகள். தந்தையே சத்தியமானவர். அவர் உங்களுக்குக் கொடுக்கின்ற உண்மையான விளக்கத்தின் மூலம் நீங்கள் முழு உலகையும் வெற்றி கொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இந்தக் கல்வியின் மூலம் உண்மையில் நீங்கள் சத்திய நாராயணன் ஆகுவீர்கள் எனக் கூறும் போது நான் உங்களுக்கு சத்தியத்தையே கூறுகின்றேன். அம்மக்கள் பல்வேறு அர்த்தங்களை அதிலிருந்து எடுக்கின்றார்கள். நீங்கள் இதன் அர்த்தத்தையும் அவர்களிடம் வினவ வேண்டும். பாபா பல்வேறு முறைகளில் விளங்கப்படுத்துகின்றார். ஓர் ஆற்றங்கரையில் ஒன்றுகூடல்கள் நடைபெறும் பொழுதெல்லாம் நீங்கள் அங்கு சென்று கங்கையால் தூய்மை ஆக்குபவர் ஆக முடியாது என விளங்கப்படுத்த வேண்டும். ஆறுகள் கடல்களில் இருந்து உற்பத்தி ஆகுகின்றன. கடல் நீரிலிருந்து ஆறுகளின் நீர் வெளிப்படுகின்றது. ஞானக் கடலிலிருந்து ஞான ஆறுகள் தோன்றுகின்றன. இப்பொழுது தாய்மார்களாகிய உங்களிடம் இந்த ஞானம் உள்ளது. வாயிலிருந்து நீர் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் கௌமுக் (பசுவின் வாய்) இருக்கும் இடங்களுக்குச் செல்லுங்கள். அவர்கள் அதைக் கங்கை நீர் என நம்புகின்றார்கள். நன்றாகக் கற்றவர்களாலும் எப்படி கங்கை நீர் அதிலிருந்து வெளிப்பட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. சமயநூல்களில் அம்பு தைத்த இடத்தில் கங்கை நீர் வெளிப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இவை ஞானத்துக்குரிய விடயங்கள் ஆகும். அர்ச்சுனன் எய்த அம்பு தைத்த இடத்தில் கங்கை தோன்றியது என்றில்லை. மக்கள் வெகு தொலைவுக்கு யாத்திரைகள் செல்கின்றார்கள். கங்கை சங்கரின் சடாமுடியில் இருந்து தோன்றுவதாகவும் கூறப்படுகிறது. அந்த நீரில் நீராடுவதால் மனிதர்களால் தேவதைகளாக மாற முடியும் எனவும் கூறப்படுகின்றது. சாதாரண மனிதரிலிருந்து தேவர் ஆகுவது ஒரு தேவதையாக மாறுவதைப் போன்றதாகும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். இதனாலேயே பாபா இந்தப் படங்களை உருவாக்கி வைத்துள்ளார். திரிமூர்த்தி சிவனின் படத்தில் அனைத்து ஞானமும் உள்ளது. அவர்களுடைய திரிமூர்த்தியின் படத்தில் ஞானத்தைக் கொடுப்பவர் (சிவன்) இருக்க மாட்டார். ஞானம் பெற்றவர்களின் ரூபங்கள் மாத்திரமே இருக்கின்றன. இப்போது நீங்கள் திரிமூர்த்தி சிவனின் படத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். உச்சியில் ஞானத்தைக் கொடுப்பவரின் ரூபம் உள்ளது. பிரம்மா அவரிடம் இருந்து ஞானத்தைப் பெற்று பின்னர் இந்த ஞானத்தைப் பரப்புகின்றார். இதுவே இறை தர்மம் ஸ்தாபிக்கப்படுவதற்கான பொறிமுறை என்று அழைக்கப்படுகின்றது. இந்த தேவதர்மம் பெருமளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் உண்மையான தர்மத்தை இனங்கண்டு விட்டீர்கள். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். கடவுளே உங்களுக்குக் கற்பிப்பதால் நீங்கள் பெருமளவு சந்தோஷம் அடைகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய உங்களின் சந்தோஷத்திற்கு எல்லையே இருக்கக்கூடாது. ஸ்ரீ கிருஷ்ணர் அன்றி அசரீரியான சிவனே கடவுளாவார். ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் எனத் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். சத்தியயுகம் சற்கதி எனவும் கலியுகம் சீரழிவு எனவும் அழைக்கப்படுகின்றன. புதிய உலகம் புதியது எனவும் பழைய உலகம் பழையது எனவும் அழைக்கப்படுகின்றது. உலகம் பழையது ஆகுவதற்கு இன்னமும் 40000 வருடங்கள் இருப்பதாக மக்கள் நம்புகின்றார்கள். அனைவரும் மிகவும் குழப்பம் அடைந்துள்ளனர். தந்தையைத் தவிர வேறு எவராலும் இவ் விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. பாபா கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு உங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கொடுப்பதுடன் ஏனைய அனைவரையும் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுபவர்கள் தேவர்கள் ஆகுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரம் இவ்விடயங்களைப் பற்றி அறிவீர்கள். புதிதாக வருபவர்கள் எதனைப் புரிந்து கொள்வார்கள்? பூந்தோட்டத்தை ஆயத்தம் செய்து தயார்ப்படுத்துவது பூந்தோட்டக்காரர்களாகிய உங்களின் பணி ஆகும். பூந்தோட்டத்தின் அதிபதி தொடர்ந்தும் உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். புதிதாக ஒரு நபரை பாபா சந்தித்து அவருக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார் என்றில்லை. அது பூந்தோட்டக்காரர்களாகிய உங்கள் பணியாகும். உதாரணமாக பாபா கல்கத்தா செல்லும் பொழுது அங்குள்ள குழந்தைகள் தங்கள் அலுவலர்கள், நண்பர்கள் போன்றவர்களையும் பாபாவைச் சந்திக்க வரும்படி அழைப்போம் என நினைக்கின்றார்கள். பாபா கூறுகின்றார்: அவர்கள் எதனையுமே புரிந்து கொள்ள மாட்டார்கள். அது நீங்கள் பாபாவின் முன்னால் மூடர்களைக் கொண்டு வருவதைப் போன்றதாகும். இதனாலேயே பாபா கூறுகின்றார்: ஒருபொழுதும் பாபாவின் முன்னால் புதியவர்களை அழைத்து வராதீர்கள். விளங்கப்படுத்துவது பூந்தோட்டக்காரர்களின் வேலையே தவிர பூந்தோட்டச் சொந்தக்காரரின் பணியல்ல. பூந்தோட்டக்காரரின் பணி தோட்டத்தைத் தயார் செய்வதாகும். நீங்கள் என்ன செய்ய வேண்டும் எனத் தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். இதனாலேயே பாபா ஒருபொழுதும் புதிய குழந்தைகளைச் சந்திப்பதில்லை. எனினும் சிலவேளைகளில் ஒரு கணப்பொழுது பார்வையை விரும்பும் விருந்தினர்கள் அவர்கள் வீட்டில் இருந்து கேட்பார்கள்: நாங்கள் பாபாவைச் சந்திக்க ஏன் நீங்கள் விடுவதில்லை? பலர் சங்கராச்சாரியாரிடம் செல்கின்றார்கள். சங்கராச்சாரியாருக்கு இப்போது பெரும் அந்தஸ்து உள்ளது. அவர் சிறந்த கல்வியறிவைப் பெற்றவர் ஆயினும் அவர் விகாரத்தின் மூலமே பிறப்பெடுத்தவர் ஆவார். (ஆலயத்தின்) தர்மகர்த்தாக்கள் யாரையாவது கதியில் (பதவி ஆசனம்) அமர்த்துவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறார்கள். தந்தையே இங்கு வந்து குழந்தைகளாகிய உங்களுக்குத் தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். நான் ஒவ்வொரு கல்பத்திலும் இந்தப் பழைய சரீரத்தினுள் பிரவேசிக்கிறேன். இவர் தனது பிறப்பை அறிந்து கொள்வதில்லை. ஒவ்வொரு சக்கரத்தின் கால எல்லையும் நூறாயிரக்கணக்கான வருடங்கள் எனச் சமயநூல்களில் கூறப்பட்டுள்ளது. மனிதர்களால் அந்தளவு பிறவிகளை எடுக்க முடியாது. பின்னர் நீங்கள் மிருகங்களாகவும் பிறவி எடுக்கின்றீர்கள் என அவர்கள் கூறுவதுடன் 8.4 மில்லியன் உயிரினங்கள் என எண்ணிக்கையையும் அதிகரித்து விட்டார்கள். மக்கள் எதனைக் கேட்டாலும் அவர்கள் தொடர்ந்தும் தலையசைத்து அது சரிதான் எனச் சொல்கிறார்கள். சமயநூல்களில் உள்ள அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை. கல்கத்தாவில் அவர்கள் அழகிய தேவ தேவியர்களின் சிலைகளைச் செய்கிறார்கள். அவர்கள் அவற்றை அழகாக அலங்கரித்துப் பின்னர் அவற்றை மூழ்கடிக்கின்றார்கள். அவர்கள் விவேகமற்ற சிறு குழந்தைகள் போல் ஆகுவதைப் போன்று அது உள்ளது. அவர்கள் முற்றிலும் அப்பாவிகள். இது நரகம் என்பதையும் சுவர்க்கத்தில் எல்லையற்ற சந்தோஷம் உள்ளது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இப்பொழுதும் எவராவது மரணிக்கும் பொழுது இன்னார் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார் என மக்கள் கூறுகின்றார்கள். ஆகவே சுவர்க்கம் நிச்சயமாக ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அது இப்பொழுது இல்லை. சுவர்க்கம் நிச்சயமாக நரகத்தின் பின்னர் வரும். இந்த விடயங்கள் அனைத்தையும் பற்றி நீங்கள் அறிவீர்கள். ஆனால் ஏனையோர் இதில் சிறிதளவையேனும் அறியார்கள். எனவே புதிதாக வருபவர்கள் பாபாவின் முன்னால் அமர்ந்திருந்து என்ன செய்வார்கள்? ஆகவே அவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்கின்ற பூந்தோட்டக்காரர்கள் தேவைப்படுகின்றார்கள். இங்கு பல பூந்தோட்டக்காரர்கள் தேவைப்படுகின்றார்கள். ஒரு புதிய மாணவர் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று அமர்ந்தால் அவர் எதனையும் புரிந்து கொள்ள மாட்டார். இந்த ஞானமும் புதியதே. பாபா கூறுகின்றார்: நான் அனைவரையும் தூய்மை ஆக்குவதற்காகவே வந்துள்ளேன். என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். தற்போது ஆத்மாக்கள் அனைவரும் தமோபிரதானாக உள்ளனர். இதனாலேயே ஆத்மாவே பரமாத்மாவும் என அவர்கள் கூறுகின்றார்கள். பரமாத்மா அனைவரிலும் இருக்கின்றார் என்றால் தந்தை இங்கமர்ந்திருந்து அத்தகைய மக்களுடன் பிரயத்தனம் செய்ய மாட்டார். முட்களை மலர்களாக மாற்றுவது தோட்டக்காரர்களாகிய உங்கள் பணியாகும். பக்தி இரவு என்பதையும் ஞானம் பகல் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். “பிரம்மாவின் பகலும் பிரம்மாவின் இரவும்” நினைவு செய்யப்படுகின்றது. பிரஜாபிதா பிரம்மாவுக்கு நிச்சயமாகப் பல குழந்தைகள் இருக்கின்றார்கள். இந்தளவு பிரம்மாகுமார் பிரம்மாகுமாரிகளை உடைய பிரம்மா யார் எனக் கேட்கும் அளவிற்கு அவர்களில் எவருக்கும் அறிவு இல்லை. பிரஜாபிதா பிரம்மா மிகவும் பிரபல்யமானவர் என்பதுடன் அவர் மூலமே பிராமண தர்மம் உருவாக்கப்படுகிறது. பிரம்ம தேவருக்கு வந்தனங்கள் என மக்கள் கூறுகின்றார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களைப் பிராமணர்கள் ஆக்கிப் பின்னர் தேவர்கள் ஆக்குகிறார். குழந்தைகளாகிய நீங்கள் வெளிவரும் அனைத்துப் புதிய கருத்துக்களையும் குறித்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். இந்த விடயங்களை மிக நன்றாகப் புரிந்து கொள்ளும் குழந்தைகள் குறிப்புக்கள் எடுப்பதில் கவனமாக இருப்பார்கள். இக் கருத்துக்கள் அனைத்தையும் நினைவில் வைத்திருப்பது கடினம் என்பதால் குறிப்பு எடுப்பது நல்லது. குறிப்பு எடுத்ததன் பின்னர் வருகின்ற எவருக்கும் விளங்கப்படுத்துங்கள். நீங்கள் குறிப்புக்களை எடுத்த பின்னர் குறிப்புப் புத்தகத்தை ஒருபுறம் விட்டுவிடுவதாகவோ உங்களுக்குப் புதிய கருத்துக்கள் கொடுக்கப்படும் பொழுது பழைய குறிப்புப் புத்தகத்தை ஒருபுறம் வைப்பதாகவோ இருக்கக்கூடாது. நீங்கள் பாடசாலையில் கற்று முன்னேறும் போதும் நீங்கள் முன்னர் கற்ற புத்தகங்களை வைத்திருக்கிறீர்கள். அனைத்துக்கும் முதலில் இங்கு நீங்கள் இவ்விடயங்களை விளங்கப்படுத்த வேண்டும். பின்னர் இறுதியில் கூறுகிறீர்கள்: மன்மனாபவ! தந்தையையும் உலகச் சக்கரத்தையும் நினைவு செய்யுங்கள். இதுவே பிரதான விடயமாகும். சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். இதுவே யோக அக்கினி என அழைக்கப்படுகிறது. கடவுள் ஞானக்கடலும் மனிதர்களோ சமயநூல்களின் கடல்களும் ஆவார்கள். தந்தை எந்தச் சமயநூல்களையும் உரைப்பதில்லை. அவரும் சமயநூல்களை உரைத்தால் மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்க முடியும்? தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்குப் பக்திமார்க்கத்தின் சமயநூல்களின் சாராம்சத்தைக் கூறுகின்றேன். மக்கள் முதலில் பாம்புகளுக்கு மகுடியை வாசித்து அவற்றைப் பிடித்து அவற்றின் நஞ்சை அகற்றுகிறார்கள். தந்தையும் நீங்கள் நஞ்சை அருந்துவதை நிறுத்துகின்றார். மனிதர்கள் அந்த நஞ்சின் மூலம் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டனர். தந்தை கூறுகின்றார்: அவை அனைத்தையும் துறந்து விடுங்கள். எவ்வாறாயினும் அவர்கள் அவற்றைத் துறப்பதில்லை. தந்தை உங்களை அழகானவர்கள் ஆக்குகின்றார். இருப்பினும் சிலர் வீழ்ந்து தங்கள் முகங்களை அழுக்காக ஆக்குகின்றார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை ஞானச்சிதையில் அமர்த்துவதற்கு வருகின்றார். ஞானச்சிதையில் அமர்வதால் நீங்கள் உலகை வென்ற உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உண்மையான தர்மத்தை ஸ்தாபிப்பதற்கு நீங்கள் கருவிகளாக இருப்பதையிட்டும் கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதாலும் சதா சந்தோஷமாக இருங்கள். எங்கள் தேவதர்மமே பெருமளவு சந்தோஷத்தைக் கொடுக்கும் ஒன்றாகும்.2. நீங்கள் பூந்தோட்டக்காரர்களாகி முட்களை மலர்களாக்கும் சேவையைச் செய்ய வேண்டும். தந்தைக்கு முன்னால் அவர்களை அழைத்து வருவதற்கு முன்னர் நீங்கள் அவர்களை நன்றாகத் தயார்செய்ய வேண்டும். நீங்கள் இந்த முயற்சியைச் செய்ய வேண்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் பழைய சரீரங்களையும் பழைய உலகையும் மறந்து பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பீர்களாக.சங்கமயுக மேன்மையான ஆத்மாக்கள் அமர்வதற்கான இடம் பாப்தாதாவின் இதய சிம்மாசனம் ஆகும். கல்பம் முழுவதிலும் வேறெந்த வேளையிலும் உங்களால் இத்தகையதொரு சிம்மாசனத்தைப் பெற முடியாது. நீங்கள் தொடர்ந்தும் உலக இராச்சியத்தில் அல்லது பிராந்திய இராச்சியத்தில் சிம்மாசனங்களைப் பெறுவீர்கள். ஆனால் இந்தச் சிம்மாசனம் இருக்காது. இது எத்தகைய பெரிய சிம்மாசனம் என்றால் நீங்கள் நடக்கும்போது உலா வரும்போது உண்ணும்போது உறங்கும்போதும் சதா இந்த சிம்மாசனத்திலேயே அமர்ந்திருப்பீர்கள். பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் எப்போதும் அமர்ந்திருக்கும் குழந்தைகள் தமது பழைய சரீரங்களையும் பழைய உலகையும் மறந்திருப்பார்கள். அவர்கள் அவற்றைப் பார்த்தும் பார்க்காதிருப்பார்கள்.
சுலோகம்:
எல்லைக்குட்பட்ட பெயர், புகழ் அல்லது கௌரவத்தின் பின்னால் துரத்திச் செல்வது என்றால் உங்களின் நிழலையே துரத்திச் செல்லுதல் என்று அர்த்தம்.ஏகாந்தத்தின் மீது அன்பு வைத்து ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.
புதிய கண்டுபிடிப்பானது நிலத்தின் கீழ் வைத்து உருவாக்கப்படுவதைப் போல் நீங்கள் எந்தளவிற்கு மறைமுகமாக இருக்கிறீர்களோ, அதாவது, எந்தளவிற்கு அதிகமாக அகநோக்கில் இருக்கிறீர்களோ அந்தளவிற்கு உங்களால் புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்க முடியும். மறைமுகமாக இருப்பதன் மூலம் நீங்கள் சூழலில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள். இரண்டாவதாக, ஏகாந்தத்தில் இருப்பதன் மூலம் உங்களின் கடைகின்ற சக்தியும் அதிகரிக்கும். மூன்றாவதாக, ஏகாந்தத்தில் இருப்பதென்றால் மாயையின் தடைகளில் இருந்து பாதுகாப்பாக இருத்தல் என்று அர்த்தம்.