18.03.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த நேரத்தில் உங்களுடைய இந்த வாழ்க்கையானது அதிகளவு பெறுமதி வாய்ந்தது. ஏனெனில் நீங்கள் எல்லைக்கு உட்பட்டவற்றில் இருந்து வெளியேறி எல்லையற்றதற்குள் செல்கின்றீர்கள். நீங்கள் இந்த உலகிற்கும் நன்மை பயப்பவர்கள் என உங்களுக்குத் தெரியும்.

கேள்வி:
எந்த முயற்சியைச் செய்வதன் மூலம் நீங்கள் தந்தையின் ஆஸ்திக்கான உரிமையைக் கோருகின்றீர்கள்?

பதில்:
ஆண், பெண் என்ற அனைத்து உணர்வுகளையும் அகற்றி சதா சகோதரத்துவப் பார்வையைப் பேணும்போது மாத்திரமே உங்களால் தந்தையின் ஆஸ்திக்கான முழு உரிமையையும் கோரிக்கொள்ள முடியும். எவ்வாறாயினும், ஆண், பெண் என்ற பார்வையையும் உணர்வையும் அகற்றுவது மிகவும் கடினமானதாகும். இதற்கு நீங்கள் ஆத்ம உணர்வில் இருப்பதற்கு பயிற்சி செய்யவேண்டும். நீங்கள் தந்தையின் குழந்தையாகும்போது, ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். ஒரு தந்தையின் நினைவைக் கொண்டிருந்து சதோபிரதான் ஆகுபவர்களால் மாத்திரமே முக்தி, ஜீவன்முக்தி என்ற ஆஸ்தியைக் கோரமுடியும்.

பாடல்:
இறுதியில் நாங்கள் காத்திருந்த அந்த நாளும் வந்துவிட்டது.

ஓம் சாந்தி.
“ஓம்” என்றால் நான் ஓர் ஆத்மா, இது என்னுடைய சரீரம் என்று அர்த்தம் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு இப்பொழுது இந்த நாடகத்தையும், உலகச் சக்கரத்தையும் இந்த உலகத்தின் ஞானத்தைக் கொண்டிருக்கின்ற தந்தையையும் தெரியும். உலகச் சக்கரத்தின் ஞானத்தைக் கொண்டிருப்பவரை படைப்பவர் என நீங்கள் அழைக்கின்றீர்கள். படைப்பவரையோ அல்லது அவரது படைப்பையோ வேறு எவருக்குமே தெரியாது. தங்களுடைய ஞானம் பற்றிய பெருமையைக் கொண்ட மிகப்பெரிய கல்விமான்களும், பண்டிதர்களும் இருந்த போதிலும், அவர்களுக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியாது. அவர்கள் ஞானம், பக்தி, விருப்பமின்மை பற்றிப் பேசுகின்றார்கள். இப்பொழுது இந்த மூன்று விடயங்களும் இருக்கின்றன, ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. சந்நியாசிகள் அவர்கள் குடும்பத்தில் விருப்பமின்மையைக் கொண்டுள்ளார்கள். உயர்ந்த அல்லது தாழ்ந்த அந்தஸ்தைக் கொண்டிருப்பது பற்றி அவர்களும்கூட பொறாமை அடைகின்றார்கள். அவர்கள் உயர் குலத்துக்குச் சொந்தமான ஒருவர் பற்றியும், நடுத்தர குலத்திற்குச் சொந்தமான வேறொருவர் பற்றியும் அனாவசியமாக முரண்படுகின்றார்கள். கும்ப மேலாக்களில்கூட யாருடைய இரதம் முதலில் செல்லவேண்டும் என்பதுபற்றி பெருமளவு வாக்குவாதம் செய்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றார்கள். பின்னர் பொலிசார் வந்து அவர்களை பிரித்து விடுகின்றார்கள். இதுவும் சரீர உணர்வு ஆகும். உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் சரீரஉணர்வு உடையவர்கள். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். தந்தை கூறுகின்றார்: சரீர உணர்வைத் துறந்து உங்களை ஆத்மாவாகக் கருதுங்கள். ஆத்மாக்களே தூய்மை அற்றவர்களாக ஆகி அவர்களில் கலப்படம் கலக்கப்படுகின்றது. ஆத்மாக்களே சதோபிரதானாகவும், தமோபிரதானாகவும் ஆகுகின்றார்கள். ஆத்மா எவ்வாறோ, அவ்வாறே அவர் பெறுகின்ற சரீரமும் ஆகும். ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா அழகானவர். எனவே அவரது சரீரமும், மிகவும் அழகானது. அவரது சரீரம் பெருமளவு கவர்ச்சியானது. ஒரு தூய ஆத்மா அந்தக் கவர்ச்சியைக் கொண்டுள்ளார். ஸ்ரீகிருஷ்ணரின் புகழ்ச்சி போன்று இலக்ஷ்மி, நாராயணனுக்கு பெருமளவு புகழ்ச்சி இருப்பதில்லை. ஏனெனில் ஸ்ரீகிருஷ்ணர் சிறிய தூய்மையான குழந்தை. இங்கும்கூட ஒரு குழந்தையும் மகாத்மாவும் சமமானவர்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். இருந்த போதிலும் மகாத்மாக்கள் வாழ்க்கையை அனுபவம் செய்த பின்னரே விகாரத்தைத் துறக்கின்றனர். அவர்கள் அதற்கு விருப்பமின்மையை கொண்டிருக்கின்றார்கள். ஆனால் குழந்தைகள் எவ்வாறாயினும் தூய்மையானவர்கள். அவர்கள் மேன்மையான, மகான் ஆத்மாக்களாகக் கருதப்படுகின்றார்கள். ஆகையினால், துறவறப் பாதைக்குரிய சந்நியாசிகளும் சிலவகையான ஆதாரத்தைக் கொடுக்கின்றார்கள் என தந்தை விளங்கப் படுத்துகின்றார். ஒரு கட்டடம் அரைவாசி பழையதாகும் போது அது எப்படி புனர்நிர்மாணம் செய்யப்படுகின்றதோ, அதேபோன்று சந்நியாசிகள் அவர்களுடைய தூய்மையினால் பாரதத்தைப் புனர்நிர்மாணம் செய்து, பாரதத்தை நிலைக்கச் செய்கின்றார்கள். பாரதத்தைப் போன்று எந்த ஒரு நாடும் தூய்மையாகவும், செல்வந்தமாகவும் இருந்ததில்லை. தந்தை இப்பொழுது படைப்பவரையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் உங்களுக்கு நினைவூட்டுகிறார், ஏனெனில் அவரே தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். கீதையிலே கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பேசியதாக எழுதப்பட்டுள்ளது. நீங்கள் அவரை பாபா என்று அழைப்பீர்களா அல்லது தூய்மையாக்குபவர் என்று அழைப்பீர்களா? மக்கள் தூய்மையாக்குபவரை அழைக்கின்றபோது அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை நினைவு செய்வதில்லை. அவர்கள் கடவுளையே நினைவு செய்கின்றார்கள். பின்னர் அவர்கள் தூய்மையாக்குபவர் சீதையின் இராமரென்றும், இராகவ குலத்தைச் சேர்ந்த இராமர் என்றும் கூறுகின்றார்கள். எனவே பெருமளவு குழப்பம் இருக்கின்றது! தந்தை கூறுகின்றார்: நான் வந்து வேதங்களினதும், புராணங்களினதும் சாரத்தை மிகச்சரியாக குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றேன். அவர் விளங்கப்படுத்திய முதலாவதும் பிரதானமானதுமான விடயம் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். நீங்கள் அனைவரும் சகோதரர்கள். பின்னர் பிரம்மாவின் குழந்தைகள் ஆகும்போது, நீங்கள் புத்திரர்களும் புத்திரிகளும் ஆவீர்கள். ஆகையால் நீங்கள் சகோதர, சகோதரிகள். இதை உங்களின் புத்தியில் வைத்திருங்கள். அனாதியாகவே ஆத்மாக்கள் சகோதரர்கள். பின்னர் நீங்கள் சரீரங்களில் பிரவேசிக்கும்போது நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆகுகின்றீர்கள். மக்களுக்கு இதைப்புரிந்து கொள்ளும் புத்திகூட இல்லை. அவர் ஆத்மாக்களாகிய எங்களின் தந்தை, எனவே நாங்கள் சகோதரர்கள். அவர் எவ்வாறு சர்வவியாபியாக இருக்கமுடியும்? குழந்தைகளே ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். தந்தை ஆஸ்தியைப் பெறமுடியாது. குழந்தைகள் அவர்களுடைய ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெறுகின்றார்கள். பிரம்மாவும் சிவபாபாவின் குழந்தையாவார். அவரும்கூட அந்த ஒருவரிடமிருந்தே ஆஸ்தியைப் பெறுகின்றார். நீங்கள் அவருடைய பேரக்குழந்தைகள் ஆகின்றீர்கள். உங்களுக்கும் அந்த உரிமை இருக்கின்றது. ஆத்மாக்கள் என்ற ரீதியில் நீங்கள் அனைவரும் புத்திரர்கள். பின்னர் நீங்கள் சரீரங்களில் பிரவேசிக்கும்போது நீங்கள் சகோதர, சகோதரிகள் என அழைக்கப்படுகின்றீர்கள், வேறு எந்த உறவுமுறையும் இல்லை. சதா சகோதரத்துவமான பார்வை இருக்க வேண்டும். ஆண், பெண் என்ற அனைத்து உணர்வுகளையும் அகற்றி விடுங்கள். ஆண், பெண் இருவரும் ‘ஓ கடவுளே, தந்தையே!’ என்று கூறுகின்ற பொழுது அவர்கள் சகோதர, சகோதரிகள் என்றே அர்த்தமாகும். சங்கமயுகத்தில் தந்தை வந்து படைப்பை உருவாக்குகின்ற பொழுது நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆவீர்கள். எவ்வாறாயினும், ஆண், பெண் என்ற பார்வையை அகற்றுவது மிகவும் கடினமானது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆகவேண்டும். நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகுகின்ற பொழுதே இந்த ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் சதோபிரதான் ஆகும்வரை நீங்கள் முக்திக்கோ அல்லது ஜீவன்முக்திக்கோ செல்லமுடியாது. சந்நியாசிகள் போன்றவர்கள் உங்களுக்கு இந்த வழிமுறையை ஒருபோதும் காட்டுவதில்லை. உங்களை ஆத்மாவாகக் கருதி தந்தையை நினைவு செய்யுங்கள் என அவர்கள் ஒருபோதும் கூறுவதில்லை. தந்தையே, பரமதந்தை, பரமாத்மா, பரம்பொருள் என அழைக்கப்படுகின்றார். அனைவரும் ஆத்மாக்கள் என அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் அவர் பரமாத்மா என அழைக்கப்படுகின்றார். தந்தை கூறுகின்றார்: ஓ குழந்தைகளே, நான் குழந்தைகளாகிய உங்களிடம் வந்துள்ளேன். எவ்வாறாயினும், உங்களுடன் பேசுவதற்கு எனக்கு ஒரு வாய் தேவை. இந்த நாட்களில் கௌமுக் (பசுவின்வாய்) எல்லா இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் கௌமுக்கிலிருந்து அமிர்தம் வெளியாகுவதாக கூறுகின்றார்கள். உண்மையில் இந்த ஞானமே அமிர்தம் என அழைக்கப்படுகின்றது. இந்த ஞானாமிர்தம் வாயிலிருந்தே வெளியாகின்றது. இதில் தண்ணீர் பற்றிய கேள்வி இல்லை. இவர் (பிரம்மா) தாய்ப்பசு ஆவார். பாபா இவரினுள் பிரவேசிக்கின்றார். தந்தை இவர் மூலமாக உங்களைத் தனக்கு சொந்தமாக்கி உள்ளார். இந்த ஞானம் அவரின் மூலமே வெளியாகின்றது. அவர்கள் கல்லிலே பசுவின் சிலையை செதுக்கி தண்ணீர் பாயக்கூடிய ஒரு வாயை உருவாக்குகின்றார்கள். அது பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயம். உங்களுக்கு சரியான விடயங்கள் தெரியும். குமாரிகளாகிய நீங்களே பீஷ்மபிதா மீது அம்பை எய்தவர்கள். நீங்கள் பிரம்மா குமாரர்கள், குமாரிகள். குமாரிகள் நிச்சயமாக எவருக்காவது சொந்தமாக வேண்டும். எனவே அதர் குமாரர்கள், குமாரிகள் இருவருக்கும் ஆலயங்கள் இருக்கின்றன. இந்த ஆலயங்கள் எல்லாமே உங்கள் நடைமுறை ஞாபகார்த்தமே. தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார், நீங்கள் பிரம்மா குமாரர்கள், பிரம்மா குமாரிகள் ஆகியபின்னர் எந்தவிதமான குற்றமான தாக்குதல்கள் எதுவும் இருக்கக் கூடாது. இருந்தால்; தீவிரமான தண்டனை இருக்கும். நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகும்பொழுது நீங்கள் சகோதர, சகோதரிகள் என்பதை மறக்கின்றீர்கள். அவர் ஒரு பி.கே, நீங்களும் ஒரு பி.கே, எனவே விகாரமான பார்வை இருக்கக்கூடாது. எவ்வாறாயினும், அசுர சமூகத்திற்குச் சொந்தமான மனிதர்கள் விகாரம் இல்லாது இருக்கமாட்டார்கள். எனவே அவர்கள் தடைகளை உருவாக்குகின்றார்கள். பிரம்மா குமாரர்கள், குமாரிகள் ஆகிய நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து உங்களுடைய ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் தூய்மையாக வேண்டும். இந்த விகாரமான, மரணபூமியில் இது உங்களின் கடைசிப்பிறவி ஆகும். எவருக்குமே இது தெரியாது. அமரத்துவமான பூமியில் விகாரங்கள் எதுவுமில்லை. அவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள், சதோபிரதானானவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஆனால் இங்குள்ள மக்களோ தமோபிரதானான முற்றிலும் விகாரம் உள்ளவர்கள். தேவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள் எனவும், தாங்கள் விகாரமான பாவிகள் எனவும் அவர்கள் பாடுகின்றார்கள். அவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்களைப் பூஜிக்கின்றார்கள். பாரத மக்களாகிய நீங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகிவிட்டீர்கள் எனத்தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். தற்பொழுது பக்தி பெருமளவு தாக்கத்தையும், ஆதிக்கத்தையும் கொண்டுள்ளது. பக்தர்கள் கடவுளை நினைவு செய்து, வந்து எங்களுடைய பக்தியின் பலனைத் தாருங்கள் என்று கூறுகின்றார்கள். பக்தி செய்ததன் மூலம் அவர்களின் நிலை என்னவாகி உள்ளது? நான்கு பிரதானமான சமய நூல்கள் இருக்கின்றன என தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். ஒன்று தேவதர்மம். பிராமணர்கள், தேவர்கள், ஷத்திரியர்கள் மூவரும் அதற்குள்ளே அடங்குகின்றனர், தந்தை பிராமண தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். பிராமணர்களாகிய நீங்கள் சங்கமயுகத்து உச்சிக்குடுமிகள். இப்பொழுது பிராமணர்களாகிய நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் பிராமணர்கள் ஆகுகின்றீர்கள். பின்னர் தேவர்கள் ஆகுகின்றீர்கள். அந்த பிராமணர்கள் விகாரத்தில் ஈடுபடுபவர்கள். அவர்கள் வந்து பிராமணர்களாகிய உங்களுக்குத் தலை வணங்கி நமஸ்தே கூறுகின்றார்கள். அவர்கள் பிராமணர்களுக்கும் தேவர்களுக்கும் வந்தனங்கள் என்று கூறுகின்றார்கள். ஏனெனில் நீங்களே பிரம்மாவின் குழந்தைகள் என்றும், தாங்கள் பிரம்மாவின் குழந்தைகள் அல்ல என்றும் அவர்கள் புரிந்து கொள்கின்றார்கள். இப்பொழுது நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள். அனைவரும் உங்களுக்கு மரியாதை செலுத்துவார்கள். பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். இப்பொழுது நீங்கள் பிரம்மா குமாரர்களும், குமாரிகளும் ஆவீர்கள். பின்னர் நீங்கள் தேவகுமாரர்களும், குமாரிகளும் ஆகுவீர்கள். தற்பொழுது உங்களுடைய இந்த வாழ்க்கை மிகவும் பெறுமதி வாய்ந்தது. ஏனெனில் நீங்கள் உலகத் தாய்மார்களாக நினைவு கூரப்படுகின்றீர்கள். நீங்கள் எல்லைக்கு உட்பட்டவற்றில் இருந்து வெளியே வந்து எல்லையற்றதற்குள் சென்றுள்ளீர்கள். நீங்களே இந்த உலகிற்கு நன்மை செய்பவர்கள் என உங்களுக்குத் தெரியும். ஆகையினால், நீங்கள் ஒவ்வொருவரும் உலகத்தாய் அல்லது உலகத்தந்தை ஆகுவீர்கள். மக்கள் இந்த நரகத்தில் சந்தோஷமற்று இருக்கின்றார்கள். நாங்கள் அவர்களுக்கு ஆன்மீக சேவை செய்ய வந்துள்ளோம். நாங்கள் நிச்சயமாக அவர்களை சுவர்க்க வாசிகளாக ஆக்குவோம். நீங்கள் ஓர் சேனை. இதுவும் போர்க்களம் என்றே அழைக்கப்படுகின்றது. யாதவர்கள், கௌரவர்கள், பாண்டவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் சகோதரர்கள். உங்களுடைய போராட்டம் உங்களுடைய சகோதர, சகோதரிகளுடன் அல்ல, அது இராவணனுடனேயே ஆகும். நீங்கள் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு அவர்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுவதற்காக விளங்கப்படுத்துகிறீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்களுடைய சொந்த சரீரம் உட்பட, அனைத்து சரீர உறவினர்களையும் நீங்கள் துறக்கவேண்டும். இது பழைய உலகம். அவர்கள் தண்ணீர் இல்லாததனால் பெரிய அணைக்கட்டுகளையும், கால்வாய்;களையும் கட்டுகின்றார்கள். சனத்தொகை பெருமளவு அதிகரித்துள்ளது. சத்தியயுகத்தில் உங்களில் வெகுசிலரே இருப்பீர்கள். ஆறுகளில் பெருமளவு தண்ணீர் இருக்கும். அங்கே பெருமளவு உணவும் இருக்கும். இப்பொழுது கோடிக்கணக்கான மக்கள் இங்கே பூமியில் இருக்கின்றார்கள். ஆரம்பத்தில், முழுப்பூமியிலுமே 900,000 இல் இருந்து ஒரு மில்லியன் மக்களே இருப்பார்கள். அந்த நேரத்தில் வேறு எந்த நிலங்களும் இருக்கமாட்டாது. உங்களில் வெகுசிலரே அங்கு வசிப்பீர்கள். நீங்கள் வேறு எங்குமே செல்லவேண்டிய தேவை இருக்காது. அங்கே சதா வசந்தகாலமே இருக்கும். பஞ்சதத்துவங்களும்கூட உங்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்கமாட்டாது. அவையும் ஒழுங்காகவே இருக்கும். அங்கே துன்பம் என்பதே கிடையாது. அதுவே சுவர்க்கமாகும். இப்பொழுது இது ஆழ்நரகமாகும். அது கல்பத்தின் நடுப்பகுதியிலேயே ஆரம்பமாகின்றது. தேவர்கள் பாவப்பாதையில் வீழ்கின்ற பொழுது இராவண இராச்சியம் ஆரம்பம் ஆகின்றது. நாங்கள் இரட்டைக் கிரீடத்துடன் பூஜிக்கத்தக்கவராக ஆகுகின்றோம் எனவும், பின்னர் ஒற்றைக் கிரீடமுடையவராக ஆகுகின்N;றாம் எனவும் நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். அந்த ஒளிக்கிரீடம் சத்திய யுகத்தின் தூய்மையின் அடையாளமாகும். தேவர்கள் அனைவரும் தூய்மையானவர்கள். இங்கு எவருமே தூய்மையானவர்கள் அல்ல. அனைவருமே தொடர்ந்து பாவத்தின் மூலம் பிறப்பு எடுக்கின்றார்கள். அதனாலேயே இது சீரழிந்த உலகம் என அழைக்கப்படுகின்றது. சத்தியயுகமே மேன்மையான உலகமாகும். விகாரமே சீரழிவு என அழைக்கப்படுகின்றது. சத்தியயுகத்தில் தூய இல்லறப்பாதை இருந்தது என்றும் அது இப்பொழுது தூய்மையற்றதாகி விட்டது எனவும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இப்பொழுது உலகம் தூய்மையாகவும், மேன்மையாகவும் ஆகுகின்றது. உலகச்சக்கரம் தொடர்ந்து சுழலும். பரமதந்தை, பரமாத்மா மாத்திரமே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகின்றார். கடவுள் தூண்டுதலைக் கொடுக்கின்றார் என மக்கள் கூறுகின்றார்கள். தூண்டுதல் என்றால் எண்ணங்கள் ஆகும். இங்கே எந்த தூண்டுதல் என்ற கேள்வியும் இல்லை. அவர் தானே கூறுகின்றார்: நான் ஒரு சரீரத்தின் ஆதாரத்தை எடுக்க வேண்டியுள்ளது. ஒரு வாய் இல்லாமல் எவ்வாறு நான் உங்களுக்கு கற்பித்தல்களைக் கொடுக்க முடியும்? தூண்டுதல் மூலம் உங்களுக்கு கற்பித்தல்களைக் கொடுக்க முடியுமா? கடவுள் தூண்டுதல் மூலம் எதையும் செய்வதில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். கற்றல் தூண்டுதல் மூலம் இடம்பெறமுடியாது. உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியத்தை தந்தையைத் தவிர வேறு எவராலும் கூறமுடியாது. அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது. சிலர் அவர் லிங்கவடிவத்தில் இருக்கின்றார் என்றும், மற்றவர்கள் அவர் அநாதியான ஒளியானவர் என்றும் கூறுகின்றார்கள். சிலர் பிரம்ம தத்துவமே கடவுள் எனக் கூறுகின்றார்கள். பிரம்மஞானிகளும், தத்துவஞானிகளும் (பிரம்ம தத்துவத்தின் ஞானத்தைக் கொண்டவர்கள்) இருக்கின்றார்கள். அவர்கள் புராணங்களில் 8.4 மில்லியன் ஜீவராசிகள் பற்றி காட்டி உள்ளார்கள். 8.4 மில்லியன் பிறவிகள் இருந்திருந்தால் சக்கரத்தின் கால எல்லை மிக நீண்டதாக இருந்திருக்கும். சரியான கணக்கு இருக்க முடியாது. சத்தியயுகத்தின் கால எல்லை நூறாயிரக்கணக்கான வருடங்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: முழு உலகச்சக்கரமும் 5000 வருடங்களாகும். 8.4 மில்லியன் பிறவிகள் எடுப்பதற்கு உங்களுக்கு நீண்டகாலம் தேவைப்படும். அந்த புராணங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. தந்தை கூறுகின்றார்: நான் வந்து புராணங்கள் அனைத்தினதும் சாரத்தை விளங்கப்படுத்துகின்றேன். அவை அனைத்தும் பக்திமார்க்கத்தின் சாதனங்கள் ஆகும். அதன் மூலம் எவருமே என்னை அடைய முடியாது. நான் வருகின்ற போது மாத்திரமே நான் அனைவரையும் என்னுடன் அழைத்துச் செல்கின்றேன். ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! எங்களைத் தூய்மையாக்கி, தூய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள் என நீங்கள் என்னை அழைத்தீர்கள். எனவே பின்னர் ஏன் அவர்கள் என்னைத் தேடி அலைந்து திரிகின்றார்கள்? அவர்கள் மலைகளின் மேலே, தூர இடங்களுக்கெல்லாம் செல்கின்றார்கள். இந்த நாட்களில் பல கோயில்கள் வெறுமையாகவே உள்ளன. ஏனெனில் அங்கே எவருமே வருவதில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது அதிமேலான தந்தையின் வாழ்க்கை வரலாறு தெரியும். வழமையாக ஒரு தந்தை 60 வயதை அடையும் பொழுது, அவர் அனைத்தையும் அவரது குழந்தைகளிடம் கொடுத்துவிட்டு ஓய்வுக்குச் சென்றுவிடுவார். அந்த வழக்கமும் இந்த நேரத்திலிருந்தே வந்தது. விழாக்கள் அனைத்தும் இந்த நேரத்தையே குறிக்கின்றன. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள் என உங்களுக்குத் தெரியும். இரவுக்குப்பின்னர் பகல் இருக்கும். இப்பொழுது காரிருள் இருக்கின்றது. ஞானசூரியன் உதிக்கும்போது அறியாமை இருள் அகற்றப்படும் என பாடப்பட்டுள்ளது. இப்பொழுது உங்களுக்குத் தந்தையைப் பற்றியும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியும் தெரியும். தந்தை எவ்வாறு ஞானம் நிறைந்தவராக இருக்கின்றாரோ, அவ்வாறே நீங்களும் மாஸ்டர் ஞானம் நிறைந்தவராக ஆகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற சந்தோஷம் எனும் ஆஸ்தியை தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள். நீங்கள் உங்களுடைய உலகத் தந்தையிடம் இருந்து எல்லைக்கு உட்பட்ட ஆஸ்தியையே பெறுகின்றீர்கள். அதன் மூலம் தற்காலிக சந்தோஷம் கிடைக்கின்றது. சந்தோஷம் காக்கையின் எச்சம் போன்றது எனச் சந்நியாசிகள் கூறுகின்றார்கள். அவர்கள் சந்தோஷத்துக்கான முயற்சியைச் செய்வதற்கு இங்கே வரமுடியாது. அவர்கள் ஹத்தயோகிகள், நீங்கள் இராஐயோகிகள். உங்களுடைய யோகம் தந்தையுடன் ஆகும். ஆனால் அவர்களுடைய யோகம் தத்துவத்துடன் ஆகும். இதுவும் கூட நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தூய்மை ஆகுவதற்கு, ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உங்களுடைய பார்வையை உறுதி ஆக்குங்கள். பின்னர் தந்தை பிரம்மாவின் குழந்தைகளாகும் போது நீங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள். ஆத்மா சரீரம் இரண்டுமே தூய்மை ஆக்கப்பட்டு, சதோபிரதான் ஆகவேண்டும். சரீர உணர்வைத் துறவுங்கள்.

2. மாஸ்டர் ஞானம் நிறைந்தவராகி, அனைவருக்கும் படைப்பவரையும் படைப்பையும் பற்றிய ஞானத்தைக் கொடுத்து, அதன்மூலம் அவர்களைக் காரிருளில் இருந்து அகற்றுங்கள். நரகவாசிகளாக இருக்கும் மக்களுக்கு ஆத்மீக சேவை செய்து அவர்களை சுவர்க்கவாசிகளாக ஆக்குங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இந்த ஞானத்தின் ஆழத்திற்குள் சென்று, மாஸ்ரர் ஞானக்கடல் ஆகுவதன் மூலம் அனுபவத்தின் இரத்தினங்களால் நிரம்பியவர் ஆகுவீர்களாக.

இந்த ஞானத்தின் ஆழத்திற்குள் செல்கின்ற குழந்தைகள், அனுபவத்தின் இரத்தினங்களால் நிரம்பியவர்கள் ஆகுகிறார்கள். ஒன்று, இந்த ஞானத்தைச் செவிமடுத்து மற்றவர்களுக்கு அதை விவரிப்பது. மற்றையது, அனுபவத்தின் சொரூபம் ஆகுவது. அனுபவசாலி ஆகுபவர்கள் சதா அழியாதவர்களாக இருப்பதுடன் தடைகளில் இருந்து விடுபட்டவர்களாகவும் இருக்கிறார்கள். எவராலும் அவர்களை அசைக்க முடியாது. அனுபவசாலிகளாக இருப்பவர்களுக்கு மாயை எதையும் செய்ய முயற்சிப்பதில் வெற்றி பெறுவதில்லை. அனுபவசாலிகள் ஒருபோதும் ஏமாற்றப்படுவதில்லை. அதனால் நீங்கள் தொடர்ந்து உங்களின் அனுபவத்தை அதிகரியுங்கள். அதனால் ஒவ்வொரு நற்குணத்தின் சொரூபம் ஆகுங்கள். தூய எண்ணங்களின் களஞ்சியத்தைச் சேமிப்பதற்கு, உங்களின் கடைதல் சக்தியைப் பயன்படுத்துங்கள்.

சுலோகம்:
ஒரு தேவதை என்பவர் சூட்சுமமான சரீர அகங்காரத்தில் இருந்து அப்பாற்பட்டிருப்பவர்.

அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.

சம்பூரண சத்தியம் தூய்;மையை அடிப்படையாகக் கொண்டது. தூய்மை இல்லாவிட்டால், சதா சத்தியம் இருக்க முடியாது. தூய்மையின்மை என்பது காம விகாரம் மட்டுமல்ல, ஏனென்றால் அதற்கு சகபாடிகளும் இருக்கிறார்கள். எனவே, மகா தூய்மை என்றால் தூய்மையின்மையின் எந்தவிதப் பெயரோ அல்லது சுவடோ இருக்கக்கூடாது. அப்போது மட்டுமே உங்களால் இறைவனை வெளிப்படுத்துவதற்கான கருவி ஆகமுடியும்.