18.04.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் மீது கருணை கொண்டிருங்கள். தந்தை உங்களுக்குக் கொடுக்கும் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள், நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தில் இருப்பதுடன், மாயையின் சாபத்திலிருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள்.
கேள்வி:
ஏன் நீங்கள் மாயையால் சபிக்கப்பட்டவர்கள் ஆகுகிறீர்கள்? சபிக்கப்பட்டுள்ள ஓர் ஆத்மாவின் நிலை என்ன?பதில்:
1) நீங்கள் தந்தையை அவமரியாதை செய்வதுடன், இந்தக் கல்விக்கு (ஞான இரத்தினங்கள்) மதிப்பளிக்காமல் உங்கள் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றினால், மாயையால் சபிக்கப்பட்டவர்கள் ஆகுகிறீர்கள்.
2) உங்கள் நடத்தை அசுரத்தனமாகவும், நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்காமலும் இருந்தால், உங்கள் மீதே நீங்கள் கருணையில்லாது இருக்கிறீர்கள். பின்னர் உங்கள் புத்தியில் ஒரு பூட்டு போடப்படுகிறது. அத்தகைய குழந்தைகளால் தந்தையின் இதய சிம்மாசனத்தில் ஏற இயலாது.ஓம் சாந்தி.
இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகித் தந்தையை நினைவுசெய்ய வேண்டும் என்னும் நம்பிக்கையை, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். இராவணனாகிய, மாயை உங்களைச் சபித்து, உங்களைச் சந்தோஷம் அற்றவர்கள் ஆக்குகிறாள். “சாபம்” என்பது ஒரு துன்பத்துக்குரிய வார்த்தையும், “ஆஸ்தி” என்பது சந்தோஷத்துக்குரியதும் ஆகும். நம்பிக்கைமிக்க, கீழ்ப்படிவுள்ள குழந்தைகள் இதை மிகவும் நன்றாகப் புரிந்து கொள்கிறார்கள். கீழ்ப்படிவற்றவர்கள் தந்தையின் குழந்தைகள் அல்லர். அவர்கள் தங்களை எவ்வாறு கருதினாலும், அவர்களால் தந்தையின் இதய சிம்மாசனத்தில் ஏற முடியாதுள்ளது; அவர்களால் ஓர் ஆஸ்தியைக் கோர முடியாதுள்ளது. மாயைக்குக் கீழ்ப்படிந்து தந்தையை நினைவு செய்யாதவர்களால், ஏனையோருக்கு விளங்கப்படுத்த இயலாதுள்ளது. அவர்கள் தங்களைத் தாங்களே சபிக்கிறார்கள். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் எல்லையற்ற தந்தைக்குக் கீழ்ப்படியாது விட்டால், நீங்கள் மாயைக்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்றே அர்த்தமாகும். நீங்கள் மாயையின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் ஆகுகிறீர்கள். ஒரு கூற்று உள்ளது: “கடவுளின் கட்டளைகள் என்பது உங்கள் தலை மீது வைக்கப்பட வேண்டும், அத்துடன் அன்புடன் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்”. இதனாலேயே தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, என்னை நினைவுசெய்ய முயற்சி செய்யுங்கள். அப்பொழுது உங்களால் மாயையின் மடியை விட்டு நீங்கிக் கடவுளின் மடிக்கு வர இயலும். தந்தையே விவேகிகளின் புத்தி. நீங்கள் தந்தை கூறுவதைச் செவிமடுக்காதுவிடின், உங்கள் புத்தி பூட்டப்பட்டு விடும். ஒரேயொரு தந்தையால் மட்டுமே அந்தப் பூட்டைத் திறக்க முடியும். ஸ்ரீமத்தைப் பின்பற்றாதவர்களின் நிலை என்னவாக இருக்கும்? மாயையின் கட்டளைகளைப் பின்பற்றுவதால், உங்களால் எந்த அந்தஸ்தையும் கோர இயலாதிருக்கும். நீங்கள் இந்த ஞானத்தைச் செவிமடுத்தாலும், உங்களால் அதை உங்களுக்குள் கிரகிக்கவோ அல்லது ஏனையோரை அதைக் கிரகிக்கச் செய்யத் தூண்டவோ இயலாதுள்ளது. ஆகவே, உங்கள் நிலை என்னவாகும்? தந்தையே ஏழைகளின் பிரபு. மக்கள் ஏழைகளுக்குத் தானம் அளிக்கிறார்கள். தந்தையும் வந்து, எல்லையற்ற தானங்களைக் கொடுக்கிறார். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாது விட்டால், உங்கள் புத்தி முழுமையாகப் பூட்டப்பட்டு விடும். அப்பொழுது நீங்கள் எதை அடைவீர்கள்? ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே தந்தையின் குழந்தைகள் ஆவார்கள். தந்தை கருணைநிறைந்தவர். நீங்கள் இங்கிருந்து நீங்கியதுமே, மாயை உங்களை முழுமையாகவே முடித்து விடுகிறாள் என்பதை அவர் புரிந்துகொள்கிறார். தற்கொலை செய்யும் ஒருவர் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறார். தந்தை தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார்: உங்களுக்காகக் கருணை கொண்டிருங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள், உங்கள் சொந்தக் கட்டளைகளை அல்ல. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், உங்கள் சந்தோஷப் பாதரசம் உயரும். இலக்ஷ்மி நாராயணனின் முகங்களைப் பாருங்கள்; அவர்கள் மிகவும் மலர்ச்சியுடன் உள்ளார்கள். அவர்களுடையதைப் போன்றதோர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு முயற்சி செய்யுங்கள். தந்தை உங்களுக்கு அழியாத இந்த ஞான இரத்தினங்களைக் கொடுப்பதால், ஏன் நீங்கள் அவற்றை மதிக்காமல் இருக்க வேண்டும்? உங்கள் புத்திகளை இந்த இரத்தினங்களால் நிரப்புங்கள். நீங்கள் செவிமடுத்தாலும், உங்களிற் சிலரால் உங்கள் புத்தியை நிரப்புவதற்கு முடியாதுள்ளது. ஏனெனில் நீங்கள் தந்தையை நினைவு செய்யாததுடன், உங்கள் நடத்தையும் அசுரத்தனமாக உள்ளது. தந்தை மீண்டும் மீண்டும் உங்களுக்குக் கூறுகிறார்: உங்கள் மீதே கருணை கொண்டிருங்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். இப்பொழுது இது அசுர சமுதாயமாக உள்ளது. அதைத் தேவதைகளின் பூமியாக மாற்றுவதற்குத் தந்தை வந்துள்ளார். சுவர்க்கம் அந்தத் தேவதைகளின் பூமியாகும். மக்கள் அதிகளவு தடுமாறித் திரிகிறார்கள். அவர்கள் சந்நியாசிகள் போன்றோரிடம் செல்கிறார்கள். ஏனெனில், தாங்கள் அவர்களிடமிருந்து மன அமைதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். உண்மையில், இவ்வார்த்தைகள் தவறானவை. அவற்றுக்கு அர்த்தம் கிடையாது. ஆத்மாக்களே அமைதியை விரும்புகிறார். ஆத்மாக்களே அமைதியின் ரூபங்கள். அவர்கள் வினவுவதில்லை: ஆத்மாவால் எவ்வாறு அமைதியைக் கொண்டிருக்க முடியும்? பதிலுக்கு அவர்கள் கேட்கிறார்கள்: எப்படி மன அமைதியைப் பெற முடியும்? எவ்வாறாயினும், மனமும் புத்தியும் என்றால் என்ன என்றோ அல்லது ஆத்மா என்றால் என்ன என்றோ அவர்களுக்கு எதுவம் தெரியாது. அவர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் செய்வது, கூறுவது அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை. பக்தி மார்க்கத்துக்கு உரியவர்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கித் தொடர்ந்தும் தமோபிரதான் ஆகுகிறார்கள். ஒருவர் பெருமளவுக்குச் செல்வம், சொத்து போன்றவற்றைக் கொண்டிருப்பினும், அவர் இன்னமும், இப்பொழுதும் இராவண இராச்சியத்திலேயே உள்ளார். இப்படங்களைப் பயன்படுத்தி மிக நன்றாக விளங்கப்படுத்துவதற்குக் குழந்தைகளாகிய நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். தந்தை தொடர்ந்தும் சகல நிலையங்களையும் சார்ந்த குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். எவ்வாறாயினும், அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். ஓர் அரசருக்குரிய அந்தஸ்தைக் கோருவதற்குச் சில குழந்தைகள் முயற்சி செய்வதில்லை. ஆகவே, பிரஜைகளின் மத்தியில் அவர்கள் என்னவாக ஆகுவார்கள்? தங்கள் அந்தஸ்தை நிர்ணயித்துக் கொள்வதற்கு அவர்கள் சேவை செய்யாமலும் தங்களுக்காகக் கருணை கொள்ளாமலும் உள்ளார்கள். நாடகத்தில் அவர்களின் பாகங்கள் அந்தளவே என்பது பின்னர் புரிந்து கொள்ளப்படுகிறது. உங்களுக்கு நன்மை செய்வதற்கு, இந்த ஞானத்தைக் கற்பதுடன், நீங்கள் யோகத்தையும் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் யோகத்தில் நிலைத்திருக்காது விட்டால், நன்மை இருக்காது. யோகத்தைக் கொண்டிருக்காமல், நீங்கள் தூய்மையாக முடியாது. இந்த ஞானம் மிகவும் இலகுவானது. ஆனால், நீங்கள் உங்களுக்கு நன்மை செய்யவும் வேண்டும். நீங்கள் யோகத்தில் நிலைத்திருக்காது விட்டால், உங்களால் உங்களுக்கு முற்றாகவே நன்மை செய்ய இயலாதிருக்கும். நீங்கள் யோகத்தைக் கொண்டிருக்காது விட்டால், உங்களால் எவ்வாறு தூய்மையாக முடியும்? இந்த ஞானம் யோகத்திலிருந்து வேறுபட்டது. பல குழந்தைகள் யோகத்தில் மிகவும் பலவீனமாக உள்ளார்கள். நினைவுசெய்வதில் நிலைத்திருக்கும் விவேகத்தை அவர்கள் கொண்டிருப்பதில்லை. நினைவு செய்யாமல் இருந்தால், எவ்வாறு அவர்களின் பாவங்கள் அழிக்கப்பட முடியும்? பெருமளவு தண்டனையை அனுபவம் செய்ய நேரிடுவதுடன், பெருமளவு வருந்தவும் நேரிடும். ஒரு பௌதீக வருமானத்தைச் சம்பாதிக்காதவர்கள் அதற்காகத் தண்டனையை அனுபவிப்பதில்லை, ஆனால் இதில், உங்கள் தலைமீது பாவச்சுமை உள்ளது. அதற்காகப் பெரும் தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். பாபாவின் குழந்தைகள் ஆகியபின்னர், நீங்கள் மரியாதை செய்யாதிருப்பின், நீங்கள் பெருமளவுக்குத் தண்டனை பெறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: உங்களுக்காகக் கருணை கொண்டிருந்து, யோகத்தில் நிலைத்திருங்கள். இல்லாவிட்டால், நீங்கள் தேவையின்றித் தற்கொலை செய்வீர்கள். ஒருவர் உயரத்திலிருந்து விழுந்து மரணிக்காமல், வைத்தியசாலையில் படுத்திருப்பதைப் போன்றே அது உள்ளது. அவர் தொடர்ந்தும் அழுகிறார்: “நான் பயன் இல்லாமல் பாய்ந்தேன்”. அவர் மரணிக்கவில்லை, ஆகையால் அவரால் என்ன பயன்? இங்கும் அதேபோல் உள்ளது. நீங்கள் மிக உயரத்துக்கு ஏற வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாது விட்டால், விழுகிறீர்கள். நீங்கள் முன்னேறும்பொழுது, உங்கள் அந்தஸ்து என்ன என்பதையும் நீங்கள் என்னவாக ஆகுவீர்கள் என்பதையும் உங்களில் ஒவ்வொருவராலும் பார்க்க முடியும். சேவாதாரிகளாகவும் கீழ்ப்படிவுள்ளவர்களாகவும் இருப்பவர்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருகிறார்கள். இல்லாவிட்டால், அவர்கள் பணிப்பெண்களாகவும் வேலையாட்களாகவும் ஆகுகின்றார்கள். மிகக் கடுமையான தண்டனை பெறப்படுகிறது. அந்த நேரத்தில், இருவரும் தர்மராஜ் ரூபத்தை எடுக்கிறார்கள். எவ்வாறாயினும், சில குழந்தைகள் இதில் எதையும் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்தும் தவறுகள் செய்கிறார்கள். இங்கு, தண்டனை அனுபவிக்கப்பட வேண்டும். நீங்கள் அதிகம் சேவை செய்கையில், அதிகம் பயனுள்ளவர்களாக இருக்கிறீர்கள். இல்லாவிட்டால், உங்களால் பயனில்லை. தந்தை கூறுகிறார்: உங்களால் ஏனையோருக்கு நன்மை செய்ய முடியாவிட்டால், குறைந்தபட்சம் உங்களுக்காவது நன்மை செய்யுங்கள்! பந்தனத்தில் இருக்கும் தாய்மார்கள் கூட, தொடர்ந்தும் தங்களுக்கு நன்மை செய்கிறார்கள். எவ்வாறாயினும், தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி கூறுகிறார். ஒருவருடைய பெயரிலும் ரூபத்திலும் நீங்கள் சிக்கிக் கொண்டுள்ளபொழுது, மாயையால் அதிகளவு ஏமாற்றப்படுகிறீர்கள். தாங்கள் சிலரைப் பார்க்கும் பொழுது, தங்களுக்குத் தீய எண்ணங்கள் வருகின்றன என்று சிலர் பாபாவுக்குக் கூறுகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: உங்கள் பௌதீகப் புலன்களின் ஊடாக ஒருபொழுதும் தீய செயல்களைப் புரியாதீர்கள். தூய்மையற்ற பார்வையுடனும் தீய நடத்தையுடனும் ஒருவர் உங்கள் நிலையத்துக்கு வந்தால், அவரை உட்பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாம். ஒருவர் பாடசாலையில் மோசமாக நடந்து கொண்டால், அவர் அதிகளவு அடிக்கப்படுகிறார். அவர் எவ்வளவு மோசமாக நடந்தார் என்றும், அதனாலேயே அவர் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் ஆசிரியர் அனைவருக்கும் கூறுவார். உங்கள் நிலையத்துக்கு எவராவது தீய பார்வையுடன் வந்தால், அவரை விரட்டியடியுங்கள். தந்தை கூறுகிறார்: ஒருபொழுதும் நீங்கள் தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் சேவை செய்யாமலும், தந்தையை நினைவு செய்யாமலும் இருந்தால், அங்கு ஏதோ தூய்மையின்மை இருக்க வேண்டும். நன்றாகச் சேவை செய்பவர்களின் பெயர்கள் போற்றப்படுகின்றன. உங்களுக்குச் சிறிதளவு தீய எண்ணம் இருந்தாலும் அல்லது ஒருவரைச் சிறிதளவு தீய விதத்தில் பார்த்தாலும் கூட, நீங்கள் மாயையால் தாக்கப்பட்டு வருகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் அதை முழுமையாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது அதிகரித்துப் பெருமளவு சேதத்தை விளைவிக்கும். தந்தையை நினைவு செய்யுங்கள், நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். பாபா குழந்தைகளாகிய உங்கள் அனைவரையும் எச்சரிக்கிறார்: உங்கள் குலத்தின் பெயரை அவதூறு செய்யாத வண்ணம், எச்சரிக்கையாக இருங்கள். சிலர் பெயருக்காக மட்டும் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ்ந்தால், அவர்கள் பாபாவின் பெயரை அதிகளவுக்குப் புகழடையச் செய்கிறார்கள். எவ்வாறாயினும், பிறர் அழுக்காகுகிறார்கள். இங்கு நீங்கள் சற்கதியை அடைவதற்காக வருகிறீர்கள். உங்களை ஒரு மோசமான நிலையில் வைப்பதற்காக வரவில்லை. அனைத்திலும் மிக மோசமான விகாரம் காமமும், அடுத்தது கோபமும் ஆகும். நீங்கள் இங்கு தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கே வருகிறீர்கள். ஆனால், அதற்குப் பதிலாக, மாயை உங்களைத் தாக்குவதுடன் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆகுகிறீர்கள். பின்னர் நீங்கள் முழுமையாக விழுந்து விடுகிறீர்கள். அதன் அர்த்தம் நீங்கள் உங்களையே சபிக்கிறீர்கள் என்பதாகும். ஆகவே, தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்தகைய நபர் எவராவது வந்தால், உடனடியாகவே அவரை வெளியே அனுப்புங்கள். சிலர் அமிர்தத்தைப் பருக வந்தார்கள், ஆனால், அவர்கள் சென்றவுடனேயே அசுரர்கள் ஆகி, அழுக்கான செயல்களைப் புரிந்தார்கள் என்று (சமயநூல்களில்) காண்பிக்கப்பட்டுள்ளது. அவர்களால் பின்னர் இந்த ஞானத்தைப் பற்றி எவருக்காவது கூற முடியாது. அவர்களின் புத்திகளின் பூட்டு பூட்டப்பட்டுள்ளதைப் போன்று உள்ளது. தந்தை கூறுகிறார்: சேவை செய்வதில் மும்முரமாக இருங்கள். தொடர்ச்சியாகத் தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதால், இறுதியில் நீங்கள் வீடு திரும்புவீர்கள். பாடல் உள்ளது: “ஓ இரவுப் பயணியே, களைப்படையாதீர்கள்!” ஆத்மாக்கள் வீடு செல்ல வேண்டும். ஆத்மாக்களே பயணிகள். நீங்களே இப்பொழுது அமைதி தாமத்துக்குச் சென்று கொண்டிருக்கும் பயணிகள் என்று ஒவ்வொரு நாளும் ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஆகவே, உங்கள் தந்தையையும் உங்கள் வீட்டையும் உங்கள் ஆஸ்தியையும் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள். எவ்விதத்திலாவது மாயை ஏதாவதொரு வழியில் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாளா என்று உங்களைப் பரிசோதித்துப் பாருங்கள். “நான் என்னுடைய தந்தையை நினைவுசெய்து கொண்டிருக்கிறேனா?” அதிமேன்மையான தந்தையின் மீது உங்கள் பார்வையை வைத்திருப்பதே, நீங்கள் செய்யக்கூடிய அதிமேன்மையான முயற்சி. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். தூய்மையற்ற பார்வை என்றால் சரீர உணர்வும், தூய்மையான பார்வை என்றால் ஆத்ம உணர்வும் ஆகும். ஆகவே, குழந்தைகளாகிய உங்களின் பார்வை தந்தையின் மீதே ஒருமுகப்பட்டு இருக்க வேண்டும். உங்கள் ஆஸ்தி மிகவும் மேன்மையானது. உலக இராச்சியம் என்பது சிறிய விடயமல்ல. யோகத்தினூடாகவும், கற்பதன் மூலமும் நீங்கள் உலக இராச்சியத்தைக் கோரக்கூடும் என்று உங்களில் எவரும் கனவு கூட கண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் நன்றாகக் கற்று, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோரினால், தந்தை மிகவும் பூரிப்படைவார். ஆசிரியரும் சத்குருவும் கூட மிகவும் பூரிப்படைவார்கள். தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள், தந்தை உங்களுக்குத் தொடர்ந்தும் அபரிமிதமான அன்பைக் கொடுப்பார். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, இந்தப் பலவீனங்களை அகற்றுங்கள். இல்லாவிட்டால், நீங்கள் என்னுடைய பெயரைப் பயனின்றி அவதூறு செய்வீர்கள். தந்தை உங்களை உலக அதிபதிகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். அவர் உங்கள் பாக்கியத்தைத் திறக்கிறார். பாரத மக்கள் மட்டுமே 100 வீதம் பாக்கியசாலிகளாக இருந்தார்கள். பின்னர், அவர்கள் 100வீதம் அபாக்கியசாலிகள் ஆகினார்கள். உங்களை மிகுந்த பாக்கியசாலிகள் ஆக்குவதற்கு, உங்களுக்கு மீண்டும் ஒருமுறை கற்பிக்கப்பட்டு வருகிறது. பெரிய மதத் தலைவர்கள் அனைவரும் கூட உங்களிடம் வருவார்கள் என்று பாபா விளங்கப்படுத்தி உள்ளார். அவர்கள் யோகத்தைக் கற்றுச் செல்வார்கள். சுவர்க்க வாசல்கள் இப்பொழுது திறக்கப்படுகின்றன என்று உங்கள் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நீங்கள் விளங்கப்படுத்த முடியும். விருட்சத்தின் படத்தை அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: “பாருங்கள், நீங்கள் இன்ன, இன்ன காலத்தில் வருகிறீர்கள், பாரத மக்கள் நடிக்கின்ற பாகங்கள் இன்ன, இன்ன காலத்தில் ஆரம்பிக்கின்றன”. இந்த ஞானத்தைச் செவிமடுங்கள், பின்னர் உங்கள் நாட்டுக்குத் திரும்பிச் சென்று “தந்தையை நினைவுசெய்யுங்கள், அதனால் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுகிறீர்கள்” என்று அங்குள்ள மக்களுக்குக் கூறுங்கள். அவர்கள் யோகத்தைக் கற்க விரும்புகிறார்கள். ஹத்தயோக சந்நியாசிகளால் அவர்களுக்கு இந்த யோகத்தைக் கற்பிக்க முடியாது. உங்கள் இறை பணியகம் வெளிநாடுகளுக்குச் செல்லும். அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்கு மிகச்சிறந்த வழிமுறை தேவை. ஒருநாள் இங்கு பெரிய மதத்தலைவர்கள் அனைவரும் வரவேண்டும். ஒரு நபரேனும் இந்த ஞானத்தை உங்களிடமிருந்து மிகவும் தெளிவாகப் புரிந்துகொண்டால், அதை அவரிடமிருந்து பலராலும் புரிந்துகொள்ள இயலும். அது ஒரு நபரின் புத்தியில் பிரவேசிக்கும் பொழுது, அவர் அதைச் செய்தித்தாள்கள் போன்றவற்றில் பிரசுரிப்பார். நாடகத்தில் அதுவும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இல்லா விட்டால், அவர்கள் எவ்வாறு தந்தையை நினைவுசெய்யக் கற்றுக் கொள்வார்கள்? அனைவரும் தந்தையின் அறிமுகத்தைப் பெற வேண்டும். ஒருவரோ அல்லது மற்றவரோ வெளிப்படுவார்கள். அருங்காட்சியகங்களில் மக்கள் புராதனப் பொருட்களைப் பார்ப்பதற்குச் செல்கிறார்கள். உங்கள் புராதன ஞானத்தைச் செவிமடுப்பதற்கு, அவர்கள் இங்கு வருவார்கள். பலர் வருவார்கள், அவர்களிற் சிலரால் மிகவும் தெளிவாக அனைத்தையும் புரிந்துகொள்ள இயலுமாக இருக்கும். இங்கு அனைவரும் திருஷ்டியைப் பெறுவார்கள். இந்த இறை பணியகம் வெளிநாட்டுக்குச் செல்லும். நீங்கள் அவர்களுக்குக் கூறுவீர்கள்: தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்கள் சொந்தச் சமயத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். மறுபிறவி எடுக்கும்பொழுது, அனைவரும் கீழே வந்து விட்டார்கள். கீழே வருவது என்றால் தமோபிரதான் ஆகுவதாகும். “தந்தையை நினைவு செய்யுங்கள்” என்று போப் போன்றவர்களால் கூட கூற முடியாது. அவர்கள் தந்தையைக் கூட அறிந்து கொள்வதில்லை. நீங்கள் மிகவும் சிறந்த இந்த ஞானத்தைக் கொண்டிருக்கிறீர்கள். அழகான படங்கள் தொடர்ந்தும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அழகான பொருட்கள் உள்ளபொழுது, அருங்காட்சியகம் மேலும் அழகாக ஆகும். பலர் அதைப் பார்ப்பதற்கு வருவார்கள். படங்கள் பெரிதாக இருக்குமானால், அவற்றை மேலும் சிறப்பாக விளங்கப்படுத்த முடியும். இவ்விதமாக விளங்கப்படுத்துவதில் நீங்கள் ஆர்வமாக இருக்க வேண்டும். நீங்கள் பிராமணர்களாக ஆகிவிட்டதால், அதிக சேவை செய்கையில், அதிகம் மரியாதை பெறுவீர்கள் என்று உங்கள் புத்திகள் சதா நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் இங்கும், அங்கும் மரியாதையைப் பெறுவீர்கள். நீங்கள் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாக ஆகுவீர்கள். இந்த இறை ஞானத்தை நீங்கள் கிரகித்துக் கொள்ள வேண்டும். தந்தை கூறுகிறார்: சேவைக்காக ஓடிச் செல்லுங்கள். உங்களைச் சேவைக்காகத் தந்தை எங்கெல்லாம் அனுப்பினாலும், அங்கே நன்மை இருக்கின்றது. உங்கள் புத்திகள் நாள் முழுவதும் சேவைக்கான எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். வெளிநாட்டிலுள்ள மக்களுக்கு இன்னமும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டியுள்ளது: அதி அன்பிற்கினிய தந்தையை நினைவுசெய்யுங்கள். ஒருபொழுதும் ஒரு சரீரதாரியை உங்கள் குருவாக்க வேண்டாம். ஒரு தந்தையே அனைவருக்கும் சத்கதியை அளிப்பவர். இப்பொழுது மொத்த மரணமும் உங்கள் முன்னிலையில் உள்ளது. மொத்த வியாபாரமும், சில்லறை வியாபாரமும் உள்ளன. தந்தையே மொத்த வியாபாரி. அத்துடன் அவர் உங்கள் மொத்த ஆஸ்தியையும் உங்களுக்குக் கொடுக்கிறார். அவர் கூறுகிறார்: 21 பிறவிகளுக்கு உலக இராச்சியத்தைப் பெற்றுச் செல்லுங்கள். திரிமூர்த்தி, சக்கரம், விருட்சம், ஏணி, பல்வகை ரூபம் என்பனவே பிரதான படங்கள். கீதையின் கடவுள் யார் என்பதை விளக்கும் படமும் உள்ளது. அந்தப் படம் முதற்தரமானது. தந்தையின் முழுப் புகழும் அந்தப் படத்தில் உள்ளது. தந்தை ஸ்ரீ கிருஷ்ணரை அவ்வாறு ஆகுமாறு செய்தார். தந்தையான கடவுளே, எங்களுக்கு அந்த ஆஸ்தியைக் கொடுத்தார். கலியுகத்தில் பல்வேறு மக்களும், சத்திய யுகத்திலோ மிகச் சொற்ப அளவினரும் உள்ளார்கள். யார் இம்மாற்றத்தைச் செய்தார்? இதை முற்றிலுமே எவரும் அறியார். சுற்றுலாப் பயணிகள் அதிகமாகப் பெரிய நகரங்களுக்கே செல்கிறார்கள். அவர்கள் உங்களிடம் வந்து, தந்தையின் அறிமுகத்தைப் பெறுவார்கள். சேவைக்காக மிகச் சிறந்த பல கருத்துக்களை நீங்கள் பெறுகிறீர்கள். நீங்கள் அந்நிய தேசங்களுக்கும் செல்ல வேண்டும். ஒருபுறம், நீங்கள் தொடர்ந்தும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பீர்கள். அத்துடன், மறுபுறம், சண்டைகளும் யுத்தமும் இருக்கும். சத்திய யுகத்தில், மிகச் சொற்ப மக்களே இருப்பார்கள். ஆகவே, நிச்சயமாக ஏனைய அனைவரும் அழிக்கப்படுவார்கள். உலக வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன. நடைபெற்றவை அனைத்தும் மீண்டும் மீண்டும் நடைபெறும், ஆனால் அதை விளங்கப்படுத்துவதற்கு ஒருவர் விவேகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சதா ஒரு தந்தையின் மீதே உங்கள் பார்வையை ஒருமுகப்படுத்தி வையுங்கள். ஆத்ம உணர்வுடையவர்களாக இருப்பதற்கு முயற்சி செய்வதுடன் மாயையின் ஏமாற்றுதல் இருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். தீய பார்வையைக் கொண்டிருப்பதால், உங்கள் குலத்தின் பெயரை ஒருபொழுதும் அவதூறு செய்யாதீர்கள்.2. சேவைக்காகத் தொடர்ந்தும் ஓடிச் செல்லுங்கள். சேவாதாரிகளாகவும், கீழ்ப்படிவு உள்ளவர்களாகவும் இருங்கள். உங்களுக்கும் ஏனையேருக்கும் நன்மை செய்யுங்கள். ஒருபொழுதும் மோசமாக நடந்து கொள்ளாதீர்கள்.
ஆசீர்வாதம்:
முற்றுப்புள்ளி வைக்கும் ஸ்திதியின் மூலம் இயற்கையின் எந்தவிதமான குழப்பத்தையும் நிறுத்துகின்ற இயற்கையின் பிரபு ஆகுவீர்களாக.தற்சமயம், குழப்பம் அதிகரிப்பதற்கான காலமாக உள்ளது. இறுதிப் பரீட்சைத் தாளில், ஒருபுறத்தில், இயற்கையின் பயங்கரமான சீற்றங்கள் இருக்கும். மறுபுறத்தில், ஐந்து விகாரங்கள் பயங்கரமான வடிவங்களில் இருக்கும். தமோகுணி ஆத்மாக்களினதும் பழைய சம்ஸ்காரங்களினதும் தாக்குதல்கள் தங்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்காக இறுதிக்கணங்களில் வரும். அத்தகைய நேரத்தில், விஸ்தாரத்தில் இருந்து விடுபடும் சக்தியைக் கொண்டிருப்பதுடன், ஒரு கணம் பௌதீக ரூபத்தில் ஸ்திரமாகவும் மறு கணத்தில் சூட்சும ரூபத்தில் ஸ்திரமாகவும், அடுத்த கணத்தில் அசரீரி ரூபத்தில் ஸ்திரமாக இருப்பதையும் நீங்கள் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். பார்த்தும் பார்க்காதிருங்கள், கேட்டும் கேட்காதீர்கள். ஒரு முற்றுப் புள்ளி இடுகின்ற ஸ்திதி உங்களுக்கு இருக்கும்பொழுது, உங்களால் இயற்கையின் பிரபுவாகி, இயற்கையின் குழப்பம் எதனையும் நிறுத்த முடியும்.
சுலோகம்:
தடைகளிலிருந்து விடுபட்டுள்ள இராச்சியத்திற்கான உரிமையைப் பெறுவதற்கு, தடைகளிலிருந்து விடுபட்டுள்ள ஒரு சேவகர் ஆகுங்கள்.அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வினால் சதா வெற்றி பெறுபவராக இருங்கள்.
சதா இந்த விழிப்புணர்வைக் கொண்டிருங்கள்: இந்த ஆத்மாவான நான் அந்தப் பரமாத்மாவுடன் ஒன்றிணைந்து இருக்கிறேன். பரமாத்மாவால் இந்த ஆத்மாவான நான் இல்லாமல் இருக்க முடியாது. என்னாலும் பரமாத்மாவிடம் இருந்து பிரிந்திருக்க முடியாது அல்லது அவரில்லாமல் இருக்க முடியாது. இந்த முறையில் ஒவ்வொரு விநாடியும் பிரபு உங்களுடன் இருப்பதை அனுபவம் செய்வதன் மூலம் நீங்கள் உங்களின் நிலையான ஆன்மீக நறுமணத்துடன் அழியாதவராக இருப்பீர்கள்.