18.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே. உங்கள் குறைபாடுகளை அகற்றுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். உங்களிடம் குறைவாக உள்ள நற்குணங்களின் அட்டவணை ஒன்றை வைத்திருங்கள். நற்குணங்களைத் தானம் செய்வதனால், நீங்கள் நற்குணங்கள் நிறைந்தவர்கள் ஆகுவீர்கள்.

பாடல்:
நற்குணங்கள் நிறைந்தவர் ஆகுவதற்கு நீங்கள் முதலில் பெற்றுக் கொள்ளும் ஸ்ரீமத் எது?

பதில்:
இனிய குழந்தைகளே, நற்குணங்கள் நிறைந்தவராகுவதற்கு: 1. எவருடைய சரீரத்தையும் பார்க்காதீர்கள். உங்களை ஒர் ஆத்மாவாகக் கருதி, ஒரேயொரு தந்தையை மாத்திரம் செவிமடுத்து, தந்தையையே பாருங்கள். மனிதர்களின் கட்டளைகளுக்குச் செவிமடுக்காதீர்கள். 2. சரீர உணர்வின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு, தந்தையின் பெயருக்கும் பிராமண குலத்திற்கும் அவதூறு ஏற்படும் வகையான எந்தச் செயற்பாடுகளிலும் ஈடுபடாதீர்கள். தவறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களால், தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்கள் ஆக முடியாது. அவர்களே குடும்பத்தின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்துபவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.

ஓம் சாந்தி.
(பாப்தாதா சில மல்லிகை மலர்களை வைத்திருக்கிறார்) நீங்களும் அவற்றைப் போன்று ஆகவேண்டும் என்பதற்காக பாபா இந்த நறுமணம் நிறைந்த மலர்களைக் காட்டுகின்றார். நீங்கள் நிச்சயமாக மலர்கள் ஆகினீர்கள் என்பதைக் குறைந்தகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ரோஜாக்கள் ஆகினீர்கள். நீங்கள் மல்லிகைகளாகவும் ஆகினீர்கள். அதாவது, நீங்கள் வைரங்கள் ஆகினீர்கள், இப்பொழுது மீண்டும் அவ்வாறு ஆகுகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் உண்மை நிறைந்தவர் ஆகுகின்றீர்கள். முன்னர் உங்களிடம் பொய்மை இருந்தது. பொய்மையைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. ஒரு தானியத்தின் அளவு சத்தியமேனும் இல்லை. இப்பொழுது நீங்கள் உண்மை நிறைந்தவர் ஆகுகின்றீர்கள். நேர்மையானவர்களுக்கு சகல நற்குணங்களும் தேவையாகும். எவ்வாறாயினும் உங்களிடம் எந்தளவு நற்குணங்கள் உள்ளதோ, அந்தளவிற்கு நீங்கள் அவற்றைப் பிறருக்குத் தானம் செய்து, அவர்களை உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்க வேண்டும். ஆகையாலேயே தந்தை தொடர்ந்தும் குழந்தைகளாகிய உங்களிடம் கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் நற்குணங்களுக்கான ஓர் அட்டவணையை வைத்திருங்கள். உங்களிடம் ஏதாவது குறைபாடு உள்ளதா? ஏதாவது தெய்வீகக்குணங்கள் குறைவாக உள்ளதா எனச் சோதித்துப் பாருங்கள். ஒவ்வொரு இரவும் உங்கள் அட்டவணையைச் சோதித்துப் பாருங்கள். வெளியிலுள்ள மனிதர்களைப் பொறுத்தவரை, அது வேறான விடயமாகும். ஆனால் நீங்கள் இப்பொழுது மனிதர்கள் அல்ல. நீங்கள் பிராமணர்கள். அனைவருமே மனிதர்களேயானாலும், ஒவ்வொருவரின் நற்குணங்களிலும், நடத்தையிலும் வித்தியாசம் உள்ளது. மாயையின் இராச்சியத்திலுள்ள சில மனிதர்கள் மிகவும் நல்லவர்களாகவும், நற்குணங்கள் நிறைந்தவர்களாகவும் இருக்கின்றார்கள், ஆனால் அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது. அவர்கள் சமயப்பற்றுள்ளவர்களும், மிகவும் மென்மையான இதயத்தைக்; கொண்டவர்களும் ஆவார்கள். உலக மக்கள் பலவிதமான நற்குணங்களைக் கொண்டவர்களாக இருந்தாலும் நீங்கள் தேவர்கள் ஆகியதும், அனைவரிடமும் தெய்வீகக் குணங்கள் இருக்கும். எவ்வாறாயினும், இது ஒரு கல்வி என்பதால், உங்கள் அந்தஸ்தில் வித்தியாசம் உள்ளது. முதலாவதாக நீங்கள் கற்க வேண்டும், இரண்டாவதாக நீங்கள் குறைபாடுகள் அனைத்தையும் நீக்க வேண்டும். இந்த உலகில், நீங்கள் தனித்துவமானவர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இங்கு பிராமண குலத்தவர்கள் மாத்திரமே அமர்ந்திருக்கிறார்கள். சூத்திரகுலத்தில் மனிதர்களின் வழிகாட்டல்களே உள்ளன. பிராமண குலத்தில் கடவுளின் வழிகாட்டல்கள் உள்ளன. அனைத்துக்கும் முதலில் நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். இன்ன இன்னார் அதிகளவு விவாதிக்கின்றார் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். நீங்கள் அவர்களுக்கு எழுத வேண்டும் என பாபா விளங்கப்படுத்துகின்றார்: நாங்கள் பிராமணர்கள், அதாவது பிரம்மகுமார், குமாரிகளாகிய நாங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுபவர்கள்;. பின்னர் அவர்கள் உங்களை விட உயர்ந்தவர்கள் எவரும் இல்லை என்பததைப் புரிந்து கொள்வார்கள். கடவுளே அதி மேலானவர், நாங்கள் அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றும் அவருடைய குழந்தைகள்;. நாங்கள் மனிதர்களுடைய வழிகாட்டல்களைப் பின்பற்றுவதில்லை. நாங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் தேவர்கள் ஆகுகின்றோம். நாங்கள் மனிதர்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதை முற்றிலும் துறந்துவிட்டோம். ஆகவே எவரும் உங்களிடம் விவாதிக்க முடியாது. எவராவது உங்களிடம் “நீங்கள் எங்கே இதனைக்; கேட்டீர்கள்? யார் உங்களுக்குக் கற்பித்தது?” எனக் கேட்டால், “நாங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றோம்” என நீங்கள் பதில் அளியுங்கள். இதி;ல் தூண்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. எல்லையற்ற தந்தையாகிய கடவுளிடமிருந்;து நாங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டுள்ளோம். அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் நீண்ட காலமாக, பக்தி மார்க்கத்துச் சமயநூல்களின் கட்டளைகளைப் பின்பற்றினோம். இப்பொழுது நாங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பெற்றுள்ளோம். குழந்தைகளாகிய நீங்கள் தந்தை ஒருவரை மாத்திரம் புகழ வேண்டும். அனைத்துக்கும் முதலில், நீங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறீர்கள் என்பதை உங்கள் புத்தியில் பதியச் செய்யுங்கள். நாங்கள் மனிதர்களின் கட்டளைகளைப் பின்பற்றுவதோ, அவர்களுக்குச் செவிசாய்ப்பதோ இல்லை. கடவுள் கூறியுள்ளார்: தீயதைக் கேட்காதீர்கள்! தீயதைப் பார்க்காதீர்கள்! மனிதரின் கட்டளைகளைக் கேட்காதீர்கள். ஆத்மாவைப் பாருங்கள், சரீரத்தைப் பார்க்காதீர்கள். இந்தச் சரீரம் தூய்மையற்றது. அதில் பார்ப்பதற்கு என்ன இருக்கின்றது? உங்கள் கண்களினால் அதனைப் பார்க்காதீர்கள். இந்தச் சரீரம் முற்றிலும் தூய்மையற்றது. இந்தச் சரீரம் மேலும் புதிதாக ஆகுவதில்லை. மேலும் பழையதாகவே ஆகும். ஆத்மாவே நாளுக்கு நாள் சீர்திருத்தம் அடைகின்றார். ஆத்மா அமரத்துவமானவர். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: தீயதைப் பார்க்காதீர்கள்! நீங்கள் சரீரத்தையேனும் பார்க்கக்கூடாது. உங்கள் சரீரம் உட்பட, அனைத்து சரீர உறவுகளையும் மறந்துவிடுங்கள். ஆத்மாவைப் பாருங்கள். ஒரேயொரு பரம தந்தையையே செவிமடுங்கள். இங்கே முயற்சி தேவைப்படுகிறது. இதுவே ஒரு சிறந்தபாடம் என்று நீங்களும் உணர்கின்றீர்கள். புத்திசாலிகள் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். ஜீவன்முக்தியை ஒரு வினாடியில் பெற முடியும். எவ்வாறாயினும் நீங்கள் முழு முயற்சியைச் செய்யாவிட்டால், நீங்களும் அதிகளவு தண்டனையை அனுபவம் செய்ய வேண்டும். தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதற்கு, குழந்தைகளாகிய நீங்கள் குருடர்களுக்கு ஊன்றுகோல் ஆகுகின்றீர்கள். ஆத்மாக்களைப் பார்க்க முடியாது, அவர்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஆத்மாக்கள் சின்னஞ் சிறியவர்கள். ஆகாய தத்துவத்தின் கீழ் வாழும் மனிதர்கள் எவ்வளவு இடத்தை எடுக்கிறார்கள் எனப் பாருங்கள்! மனிதர்கள் வந்து போகிறார்கள். ஆத்மாக்கள் வந்து போவார்களா? ஆத்மாக்கள் மிகவும் சிறிய இடத்தையே எடுக்கிறார்கள். இது சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகும். ஆத்மாக்களின் கூட்டம் இருக்கும். சரீரத்துடன் ஒப்பிடும்போது, ஆத்மா சின்னஞ் சிறியவர் ஆவார். ஆத்மாவிற்கு மிகச் சிறிதளவு இடமே தேவையாகும். நீங்கள் வாழ்வதற்கு பெரிய இடம் தேவைப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பரந்த புத்தி உடையவர்கள் ஆகுகிறீர்கள். தந்தை உங்களுக்குப் புதிய உலகிற்கு வேண்டிய புதிய விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். உங்களுக்கு விளங்கப்படுத்துபவரும் புதியவரே. கருணை காட்டுங்கள் என்று அனைவரிடமும் தொடர்ந்தும் மனிதர்கள் வேண்டுகின்றார்கள்;. தங்கள் மீது கருணை கொள்வதற்கு, அவர்களுக்கு பலம் இல்லாதுள்ளது. நீங்கள் சக்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் உங்கள் ஆஸ்தியை தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள். வேறு எவரையுமே கருணை உடையவர் என அழைக்க முடியாது. மனிதர்களைத் தேவர்கள் என என்றுமே அழைக்க முடியாது. ஒரேயொரு தந்தை மாத்திரமே கருணை உடையவர். அந்த ஒரேயொருவரே மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்றார். இதனாலேயே பரமாத்தமாவாகிய பரமதந்தையின் புகழ் எல்லையற்றது என்று கூறப்படுகிறது; அவரது புகழுக்கு எல்லையில்லை. அவரது கருணைக்கும் எல்லை இல்லை என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். தந்தை படைக்கும் புதிய உலகில் அனைத்தும் புதியதாகவே இருக்கும். அங்கு மனிதர்கள், பறவைகள் மிருகங்கள் அனைத்துமே சதோபிரதானாகும். நீங்கள் மேன்மையானவர்கள் ஆகும் போது, உங்கள் தளபாடங்களுமே அதிமேன்மையாகும் என்று நினைவு கூரப்பட்டுள்ளதாக, தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். தந்தையும் அதி மேலானவர் என்று நினைவு கூரப்படுகின்றார். நீங்கள் உலக இராச்சியத்தை அவரிடமிருந்து பெறுகிறீர்கள். தந்தை தெளிவாக உங்களுக்குக் கூறுகின்றார்: நான் வைகுந்தத்தை எனது உள்ளங்கைகளில் கொண்டு வருகின்றேன். அந்த மக்கள் தங்கள் உள்ளங்கைகளில் குங்குமப்பூ போன்றவற்றை வெளித்தோன்றச் செய்கிறார்கள். இங்கே இது ஒரு கல்விக்கான விடயமாகும். இது ஒரு உண்மையான கல்வியாகும். இப் பாடசாலைக்குக் கற்பதற்காக வந்துள்ளீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இவ்வகையான பல பாடசாலைகளை நீங்கள் திறக்கும் போது, மக்கள் உங்கள் செயற்பாடுகளைப் பார்ப்பார்கள். எவ்வாறாயினும் உங்கள் நடத்தை தவறாக இருக்கும் போது, உங்கள் பெயரை அவதூறு செய்கின்றீர்கள். சரீர உணர்வில் உள்ளவர்களின் செயற்பாடுகள் வேறுபட்டதாகும். மக்கள் அத்தகைய நடத்தையைப் பார்க்கும் போது, அனைவருமே அவதூறு செய்யப்படுவதைப் போன்றதாகும். அவர்களின் செயற்பாட்டில் எவ்வித வித்தியாசமும் இல்லை என்று அவர்கள் நினைக்கின்றார்கள். எனவே அந்த ஆத்மா, தந்தையை அவதூறு செய்து விட்டதைப் போன்றதாகும் அதற்குக் காலம் எடுக்கும், ஆனால் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அவரின் மீதே விழுகின்றது. உங்களுக்கு மிகவும் நல்ல பண்புகள் தேவையாகும். உங்கள் நடத்தையை சீராக்கிக் கொள்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்? சிலரின் நடத்தை மிகவும் நல்லது, முதற்தரமானது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அதுவும் புலப்படுகிறது. பாபா இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்கள் ஒவ்வொருவரையும் பார்க்கின்றார். அத்துடன் உங்களில் இருந்து நீக்கப்பட வேண்டிய குறைபாடுகள் எவை என்பதையும் பார்க்கின்றார். அவர் ஒவ்வொருவரையும் சோதனை செய்கிறார். அனைவரிடமும் குறைபாடுகள் உள்ளன. ஆகவே, தந்தை ஒவ்வொருவரையும், அவர்களுடைய பெறுபேறுகளையும் தொடர்ந்தும் பார்க்கின்றார். தந்தைக்கு குழந்தைகளிடம் அன்புள்ளது. உங்களில் குறிப்பாக, இன்ன குறைபாடு உள்ளது என்பதையும் அதனால், உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாதுள்ளது என்பதனையும் தந்தை அறிவார். நீங்கள் உங்கள் குறைபாடுகளை நீக்காது விடின் அது மிகக் கடினமாக இருக்கும். உங்களைப் பார்ப்பதனால் பாபா அதனைப் புரிந்து கொள்கிறார். இன்னும் சிறிது காலமே எஞ்சியிருப்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர் ஒவ்வொருவரையும் பரீட்சித்துப் பார்க்கி;ன்றார். ஒவ்வொருவருடைய நற்குணங்களிலும் தந்தையின் பார்வை விழுகிறது. அவர் வினவுகிறார்: உங்களில் ஏதாவது குறைபாடுகள் இருக்கின்றனவா? நீங்கள் தந்தையின் முன்னால் வரும்போது, உண்மையைக் கூறுகின்றீர்கள். சிலர் சரீர உணர்வைக் கொண்டிருப்பதால், அவர்கள் அதனைப் பற்றிப் பேசுவதில்லை. தந்தை கூறுகிறார்: கேட்காமலே செய்பவர்கள் தேவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள், கேட்ட பின்னர் செய்பவர்கள் மனிதர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். கேட்டதன் பின்னரும் செய்யாதவர்கள்…..என அழைக்கப்படுகின்றார்கள். தந்தையின் முன்னால் நீங்கள் வரும்போது இந்தப் பிறவியில் உங்களிடமுள்ள குறைபாடுகளை அவரிடம் கூறுங்கள் என்று பாபா தொடர்ந்தும் கூறுகின்றார். பாபா அனைவருக்கும் கூறுகின்றார்: உங்களிடமிருக்கும் பலவீனங்களை சத்திரசிகிச்சையாளரிடம் கூறுங்கள்; உங்கள் சரீரத்தின் சுகவீனங்களை அல்ல. உங்களுக்குள் இருக்கின்ற நோய்களையே கூறுங்கள். உங்களுக்குள் என்ன அசுரத்தன எண்ணங்கள் உள்ளன? இந்த நிலையில், அதாவது, அக்குறைபாடுகளை நீங்கள் நீக்காதவரை உங்களால் உயர்ந்த அந்தஸ்தைக்; கோர முடியாது, அதாவது, அக்குறைபாடுகளை நீங்கள் நீக்காதவரை உங்களால் அந்த அந்தஸ்தைக் கோர முடியாது என்பதை பாபா உங்களுக்கு விளங்கப்படுத்துவார். குறைபாடுகள் அதிகளவு அவதூறை விளைவிக்கின்றன. மக்களுக்கு சந்தேகம் எழுவதால்: உங்களுக்கு கடவுளா கற்பிக்கின்றார்? என்று நினைக்கின்றார்கள். “கடவுள் பெயருக்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்டவர், அவர் சர்வவியாபி. அவர்; எவ்வாறு அவர்;களுக்குக் கற்பிப்பார்? அவர்களுடைய நடத்தையைப் பாருங்கள்!”. தந்தைக்கு இது தெரியும். உங்களிடம் முதற்தரமான நற்குணங்கள் இருக்க வேண்டும். உங்கள் குறைபாடுகளை நீங்கள் மறைத்தால், உங்கள் அம்புகள், அந்தளவிற்கு இலக்கை அடைய முடியாது. ஆகவே, இயன்றளவிற்கு, தொடர்ந்தும் உங்கள் குறைபாடுகளை அகற்றுங்கள். உங்கள் குறைபாடுகளை குறித்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள், மனச்சாட்சி உறுத்தும். இழப்பு ஏற்படும் போது, உங்கள் மனச்சாட்சி உறுத்தும். வியாபாரிகள் தமது இலாபக் கணக்கை ஒவ்வொரு நாளும் எழுதுகின்றார்கள். அவர்கள் தங்கள் கணக்கை ஒவ்வொரு நாளும் பரீட்சித்துப் பார்ப்பார்கள். இந்தத் தந்தையும் கூறுகின்றார்: உங்கள் நடத்தையை ஒவ்வொரு நாளும் பாருங்கள். அல்லாவிடில், நீங்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றீர்கள். அத்துடன் தந்தையின் கௌரவத்திற்கும் இழுக்கை ஏற்படுத்துகின்றீர்கள். குருவை அவமரியாதை செய்தவர்கள் இலக்கை அடைய முடியாது. சரீர உணர்வில் இருப்பவர்களும் தங்கள் இலக்கை அடைய முடியாது. ஆத்ம உணர்வில் இருப்பவர்கள், நல்ல இலக்கை அடைகின்றார்கள். நீங்கள் அனைவரும் ஆத்ம உணர்வுக்கு வருவதற்கு முயற்சி செய்கிறீர்கள். நாளுக்கு நாள், நீங்கள் சீர்திருத்தம் அடைகின்றீர்கள். சரீர உணர்வினால், செய்யப்படுகின்ற செயல்களை முடித்து விடுங்கள். சரீர உணர்வில் நிச்சயமாக பாவங்களே செய்யப்படுகின்றன. ஆகவே தொடர்ந்தும் ஆத்ம உணர்வுடையவராகுங்கள். பிறப்பிலிருந்தே எவரும் அரசனாகுவதில்லை என்பது உங்களுக்குப் புரியும். ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு உங்களுக்கு காலம் எடுகின்றது? ஆத்ம உணர்வுடையவராக ஆகுவதற்கு உங்களுக்குக் காலம் எடுக்கின்றது. நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டுள்ளீர்கள். குழந்தைகள் பாபாவிடம் வருகின்றார்கள்: சிலர் 6 மாதங்களின் பின்னரும் சிலர் 8 மாதங்களின் பின்னரும் வருகின்றார்;கள். எனவே அக்காலத்திற்குள், அவர்கள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர் என பாபா பார்க்கின்றார். அவர்கள் நாளுக்கு நாள் சீரடைகின்றார்களா அல்லது அவர்களிடம் இன்னமும் ஏதாவது தவறு உள்ளதா? முன்னேறிச் செல்லும் போது சிலர் கற்பதை நிறுத்தி விடுகிறார்கள். பாபா கூறுகிறார்: இது என்ன? உங்களை இறைவன் இறைவி ஆக்குவதற்காக, கடவுள் கற்பிக்கின்றார். அப்படியிருந்தும் நீ;ங்கள் கற்பதை நிறுத்துகிறீர்கள்! ஓஹோ! உலகத் தந்தையாகிய கடவுள், உங்களுக்குக் கற்பிக்கின்றார், நீங்கள் வருகை தருவதில்லை! மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். அவள் இந்த முதற்தரமான கல்வியில் இருந்து உங்கள் முகத்தைத் திசைதிருப்பச் செய்கின்றாள். தொடர்ந்தும் முன்னேறுகையில் இடையில் இக்கல்வியை ஒதுக்கித் தள்ளுகின்றார்கள். இப்போது உங்கள் முகம் சுவர்க்கத்தை நோக்கியும், கால்கள் நரகத்தை நோக்கியும் உள்ளதென்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் சங்கமயுகத்துப் பிராமணர்கள். இந்தப் பழைய உலகம் இராவணனுக்குரியது. நீங்கள் அமைதிதாமத்தின் ஊடாக சந்தோஷதாமத்திற்குச் செல்வீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இதனை நினைவு செய்ய வேண்டும். காலம் மிகவும் குறுகியது; நாளையே நீங்கள் உங்கள் சரீரத்தை விட்டு நீங்கலாம். நீங்கள் இறுதிக் கணத்தில் தந்தையை நினைவு செய்யாவிடில், உங்கள் இலக்கு என்னாவாகும்? தந்தை உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்துகிறார். இந்த விடயங்கள் மறைமுகமானவை. ஞானமும் மறைமுகமானதாகும். நீங்கள் முன்னைய கல்பத்தில் என்ன முயற்சியைச் செய்தீர்களோ, அதே முயற்சியையே இப்போதும் செய்வீர்கள் என்பதை நீ;ங்களும் அறிவீர்கள். முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்றே, நாடகத்திற்கேற்ப, தந்தையும் தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இதில் எந்தவிதமான வித்தியாசமும் இருக்க முடியாது. தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் தண்டனையை அனுபவிக்கக் கூடாது. தந்தைக்கு முன்னால் நீங்கள் தண்டனையை அனுபவித்தால், அவர் என்ன கூறுவார்? உங்களுக்கும் காட்சிகள் கிடைத்தன. அந்த நேரத்தில் அவரால் உங்களை மன்னிக்க முடியாது. தந்தை உங்களுக்கு, இவர் மூலம் கற்பிக்கின்றார் என்பதால் நீங்கள் இவரின் காட்சியைக் காண்பீர்கள். அப்பொழுது, நீங்கள் செய்தவற்றை தொடர்ந்தும் இவர் மூலமாக, அவர் உங்களுக்குக் கூறுவார்;. அப்பொழுது நீங்கள் அதிகளவு அழுவீர்கள் அத்துடன் நீங்கள் மனம் வருந்தி அழுவீர்கள். நீங்கள் செய்தவற்றைக் காட்சியாக உங்களுக்குக் காட்டாமல், உங்களுக்கு தண்டனை அளிக்க முடியாது. இந்தளவு கற்பித்த பின்னரும், நீங்கள் இச் செயல்களை இன்னமும் செய்தீர்கள் என்பது உங்களுக்கு கூறப்படும். இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றி எவ்வளவு பாவங்களைச் செய்தீர்கள் என்பதை நீங்களும் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் பூஜிக்கப்படுபவர்களில் இருந்து, பூஜை செய்பவர்கள் ஆகினீர்கள் தந்தை சர்வவியாபி என்று நீங்கள் கூறினீர்கள். இதுவே முதல் அவமரியாதை ஆகும். இதுவும் ஒரு பெரிய கணக்கை உருவாக்குகிறது. நீங்கள் உங்களையே அறைந்து கொண்டீர்கள் என்று தந்தை முறையிடுகின்றார். பாரதத்து மக்களே அந்த அளவிற்கு வீழ்ந்தார்கள். தந்தை வந்து விளங்கப்படுத்துகின்றார். இப்போது உங்களுக்கு அதிகளவு புரிந்துணர்வு கிடைத்துள்ளது. எவ்வாறாயினும், நாடகத்திற்கு ஏற்ப வரிசைக் கிரமமாகவே நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். முன்னரும், வகுப்புகளின் பெறுபேறுகள், இன்றுவரை ஒரேமாதிரியாகவே உள்ளன. நீங்கள் முன்னேறுவதற்காக தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு நிச்சயமாகத் தொடர்ந்தும் கூறுவார். மாயை அத்தகையவள், உங்களைத் தொடர்ந்தும் ஆத்ம உணர்வில் இருப்பதற்கு அவள் அனுமதிக்க மாட்டாள். இது ஒரு பெரிய விடயமாகும். ஆகவே உங்களை ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அச்சா

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சரீர உணர்விற்கு வரும்போது நிச்சயமாகப் பாவங்கள் செய்யப்படுகின்றன. சரீர உணர்வுடையவர்களால் தமது இலக்கை அடைய முடியாது. ஆகையால் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். தந்தையின் பெயரை அவதூறு செய்யும் வகையான எச் செயலையும் செய்யாதீர்கள்.

2. உங்களுக்குள் இருக்கும் நோய்களைப் பற்றி தந்தையிடம் நேர்மையுடன் கூறுங்கள். உங்கள் குறைபாடுகளை மறைக்காதீர்கள். உங்களிடம் என்ன குறைபாடுகள் உள்ளன என்று சோதித்துப் பாருங்கள். இந்தக் கல்வியின் மூலம் உங்களை நற்குணங்கள் நிறைந்தவர் ஆக்குங்கள்.

ஆசீர்வாதம்:
சேவை செய்யும்போது, எந்தவொரு எல்லைக்குட்பட்ட, இராஜரீகமான ஆசைகளில் இருந்தும் விடுபட்டிருப்பதன் மூலம் ஒரு சுயநலமற்ற சேவையாளர் ஆகுவீர்களாக.

எந்தவொரு கர்மத்திலிருந்தும் விடுபட்டிருத்தல் மற்றும் பற்றற்று இருத்தல் என்பதற்கான அத்தாட்சியை தந்தை பிரம்மா கொடுத்தார். சேவை செய்தல் மற்றும் அன்பை கொண்டிருத்தல் தவிர்ந்து வேறு எந்த பந்தனங்களும் இல்லை. எல்லையற்ற உங்கள் சேவையில் இராஜரீக ஆசைகளை கொண்டிருப்பதும் உங்களை கர்மக்கணக்கின் பந்தனத்தில் கட்டுகின்றன. உண்மையான சேவையாளர்கள் இந்தக் கர்மக்கணக்கிலிருந்தும் விடுபட்டிருக்கிறார்கள். உங்கள் சரீரத்தின் பந்தனமானது, உங்கள் சரீர உறவுமுறையுடனான பந்தனமாகும், அவ்வாறே சேவையின் போது சுயநலமான நோக்கத்தைக் கொண்டிருப்பதும் பந்தனமே ஆகும். இந்தப் பந்தனத்திலிருந்து அதாவது இராஜரீக கர்மக்கணக்கிலிருந்து விடுபட்டு ஒரு சுயநலமற்ற சேவையாளர் ஆகுங்கள்.

சுலோகம்:
உங்கள் சத்தியங்களை ஒரு ஃபைலில் வைத்திருக்காது, முழுமை அடைவதன் மூலம் அவற்றை வெளிப்படுத்துங்கள்.