18.06.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உருத்திரரான கடவுளே, இந்த உருத்திர ஞான யாகத்தை உருவாக்கி உள்ளார். உங்களிடம் உள்ள அனைத்தையும் அதில் அர்ப்பணியுங்கள், ஏனெனில் நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும்.
கேள்வி:
சங்கமயுகத்தில் இடம்பெறும் அற்புதமான விளையாட்டு என்ன?பதில்:
கடவுள் உருவாக்கியுள்ள யாகத்தில் அசுரர்கள் தடைகளை உருவாக்குகிறார்கள். இந்த அற்புதமான விளையாட்டு சங்கமயுகத்தில் மாத்திரமே இடம்பெறுகிறது. கல்பம் முழுவதிலும் வேறெந்த நேரத்திலும் இவ்விதமான யாகம் உருவாக்கப்படுவதில்லை. இதுவே சுய இராச்சியத்தை அடைவதற்கு, குதிரையை அர்ப்பணிக்கும் யாகம் ஆகும். இதிலேயே தடைகள் உருவாக்கப்படுகின்றன.ஓம் சாந்தி.
நீங்கள் எங்கே அமர்ந்திருக்கிறீர்கள்? இந்த இடம் ஒரு பாடசாலை அல்லது பல்கலைக்கழகம் எனவும் அழைக்கப்பட முடியும். இது ஓர் உலகப் பல்கலைக்கழகம், இதற்கு ஆன்மீகக் கிளைகள் உள்ளன. தந்தை அனைத்திலும் மகத்தான பல்கலைக்கழகத்தைத் திறந்துள்ளார். “உருத்திர யாகம்” என்னும் பெயர் சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபாபா இந்த நேரத்தில் இந்த கல்விக்கூடத்தை (பாடசாலை) அல்லது பல்கலைக்கழகத்தைத் திறந்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதிமேன்மையான தந்தையே உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இருக்க வேண்டும். இதுவே அவர் உருவாக்கிய யாகம் ஆகும். அதன் பெயர் மிகவும் பிரபல்யமானது: “குதிரை அர்ப்பணிக்கப்படும் உருத்திர ஞான யாகம்” (ராஜஸ்ய அஷ்வ மேக் ருத்ர கியான் யக்யா). நீங்கள் சுய இராச்சியத்தைக் கோருவதற்கு, சுயத்தை அர்ப்பணிக்கிறீர்கள். உங்களின் சரீரங்கள் உட்பட, அந்தக் கண்கள் மூலம் நீங்கள் பார்க்கும் அனைத்தையும் அர்ப்பணிக்கிறீர்கள். ஆத்மாவை அர்ப்பணிக்க முடியாது. சரீரங்கள் அனைத்தும் அர்ப்பணிக்கப்படும் போது, ஆத்மாக்கள் வீட்டிற்குத் திரும்பி ஓடுவார்கள். இது சங்கமயுகம். ஆத்மாக்கள் அனைவரும் வீட்டுக்கு ஓடோடிச் செல்வார்கள், அவர்களின் சரீரங்கள் அழிக்கப்படும். இவை அனைத்தும் நாடகத்தில் உள்ளன. நாடகத்துக்கேற்ப, நீங்கள் அனைவரும் தொடர்ந்தும் முன்னேறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: உங்கள் சுய இராச்சியத்துக்காக, நான் இந்த யாகத்தை உருவாக்கினேன். இது நாடகத் திட்டத்துக்கு ஏற்ப, உருவாக்கப்பட்டுள்ளது. அதனை நான் உருவாக்கினேன் என்று கூற முடியாது. நாடகத் திட்டத்துக்கேற்ப, குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிப்பதற்காக, மிகச்சரியாக ஒரு கல்பத்துக்கு முன்னர் உருவாக்கப்பட்டதைப் போலவே, இந்த ஞான யாகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை நான் உருவாக்கினேன் என்று கூறுவது அர்த்தமற்றது. அது நாடகத் திட்டத்துக்கேற்ப, உருவாக்கப்பட்டுள்ளது. அது ஒவ்வொரு கல்பத்திலும் உருவாக்கப்படுகிறது. இந்த நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. நாடகத் திட்டத்துக்கேற்ப, இந்த யாகம் கல்பத்தில் ஒருமுறை மாத்திரம் உருவாக்கப்படுகிறது. இது புதியதல்ல. உண்மையிலேயே, 5000 வருடங்களுக்கு முன்னர், சத்தியயுகம் இருந்தது என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. இப்பொழுது சக்கரம் மீண்டும் மீண்டும் இடம்பெற வேண்டும். மீண்டும் ஒருமுறை புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது. புதிய உலக இராச்சியத்தைக் கோருவதற்கு நீங்கள் இப்பொழுது கற்கிறீர்கள். நிச்சயமாக நீங்கள் தூய்மையாக வேண்டும். நாடகத்துக்கேற்ப, முன்னைய கல்பத்தில் இவ்வாறு ஆகியவர்கள் மாத்திரம், மீண்டும் இவ்வாறு ஆகுவார்கள். நாடகம் ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பார்க்கப்பட வேண்டும். நீங்களும் உங்களுக்காக முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளுக்குப் பாதை காட்டப்பட வேண்டும். பிரதான விடயம் தூய்மையே ஆகும். உங்களைத் தூய்மையாக்கி, இந்த அழுக்கான உலகிலிருந்து அப்பால் அழைத்துச் செல்வதற்கு, நீங்கள் தந்தையை வரும்படி அழைத்தீர்கள். இப்பொழுது உங்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்குத் தந்தை வந்துள்ளார். குழந்தைகளாகிய உங்களுக்குப் பல ஞானக் கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அப்பொழுதும், பிரதான விடயம் “மன்மனாபவ” எனத் தந்தை கூறுகிறார். நீங்கள் தூய்மை ஆகுவதற்குத் தந்தையை நினைவு செய்கிறீர்கள். இதை மறக்க வேண்டாம்! நீங்கள் அவரை எந்தளவுக்கு நினைவு செய்கிறீர்கள் என்பதற்கேற்ப, நீங்கள் நன்மை அடைவீர்கள். நீங்கள் உங்களுக்காக, ஓர் அட்டவணையை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இறுதியில் சித்தியடைய மாட்டீர்கள். நீங்கள் செய்த முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, சதோபிரதானாக இருந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மேன்மை ஆகியவர்கள் பெருமளவு முயற்சியைச் செய்ய வேண்டும். அவர்கள் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். மிகக்குறுகிய காலமே எஞ்சியுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மீண்டும் உங்கள் சந்தோஷ நாட்கள் வரவுள்ளன. உண்மையில், மீண்டும் எங்கள் மகத்தான சந்தோஷ நாட்கள் வரவுள்ளன. தந்தை ஒருமுறை மாத்திரம் வருகிறார். அவர் துன்ப தாமத்தை அழித்து, எங்களை எங்களுடைய சந்தோஷ தாமத்துக்கு அனுப்புகிறார். நீங்கள் இப்பொழுது இறை குடும்பத்தில் இருக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் உங்கள் தேவ குடும்பத்துக்குச் செல்வீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்த நேரமே புகழப்படுகிறது. இந்தச் சங்கமயுகமே, மேன்மை ஆகுவதற்கான யுகமாகும். எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மேலும் முன்னேறுகையில், சந்நியாசிகளும் நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள். அந்த நேரமும் வரும். தற்பொழுது, உங்களிடம் இருந்து அந்தளவுக்கு ஒரு தாக்கம் இருக்க முடியாது. இப்பொழுது இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்னமும் காலம் உள்ளது. இறுதியில், சந்நியாசிகளும் வந்து இந்த ஞானத்தைப் புரிந்து கொள்வார்கள். எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கிறது என்னும் இந்த ஞானம் வேறு எவரிடத்திலும் இல்லை. தூய்மையின் காரணமாக, எவ்வளவு தடைகள் ஏற்படுகின்றன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அப்பாவிகள் அடிக்கப்படுகின்றனர். திரௌபதி பாதுகாப்புக்காக அழைத்தாள். உண்மையில், நீங்கள் அனைவரும் திரௌபதிகளும், சீதைகளும், பார்வதிகளும் ஆவீர்கள். நினைவில் நிலைத்திருப்பதால், அப்பாவிகளும் கூன்முதுகு உடையவர்களும் தங்கள் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து கோர முடியும். அவர்களால் நினைவில் நிலைத்திருக்க முடியும். தந்தை வந்து இந்த யாகத்தை உருவாக்கியதால், அதில் பல்வேறு தடைகள் உருவாக்கப்பட்டன. இப்பொழுதும், இன்னமும் தடைகள் உள்ளன. குமாரிகள் திருமணம் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இல்லாவிட்டால், அவர்கள் அடிக்கப்பட்டு, வீட்டிலிருந்து வெளியே துரத்தப்படுவார்கள். இதனாலேயே அவர்கள் அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஆகவே, நிச்சயமாக உங்களைத் தூய்மை ஆக்கக்கூடிய, ஓர் இரதம் அவருக்குத் தேவைப்படுகின்றது. கங்கை நீரால் எவரும் தூய்மையாக முடியாது. தந்தையால் மாத்திரமே வந்து உங்களைத் தூய்மையாக்கி, உங்களைத் தூய உலகின் அதிபதிகள் ஆக்க முடியும். இந்தத் தூய்மையற்ற உலகின் விநாசம் உங்கள் முன்னிலையில் உள்ளது என்பதை உங்களால் பார்க்க முடியும். ஆகவே, நீங்கள் ஏன் தந்தைக்கு உரியவராகி, உங்களை அர்ப்பணிக்கக் கூடாது? நீங்கள் கேட்கிறீர்கள்: எவ்வாறு என்னை நான் அர்ப்பணிப்பது? எவ்வாறு நான் அனைத்தையும் மாற்றம் செய்வது? பாபா கூறுகிறார்: குழந்தைகளே, உங்களால் இந்த (சரீர) பாபாவைப் பார்க்க முடிகிறதுதானே? இவர் தானும் அனைத்தையும் செய்வதுடன் உங்களுக்கும் கற்பிக்கிறார். நான் செய்வதை எல்லாம் ஏனையோர் பார்க்கும் பொழுது, அவர்களும் அதையே செய்வார்கள். தந்தையே இவரைக் கொண்டு இந்த விடயங்களைச் செய்ய வைத்தார். இவர் அனைத்தையும் யாகத்தில் அர்ப்பணித்தார். அனைத்தையும் அர்ப்பணிப்பதில் சிரமம் கிடையாது. இவர் மிகவும் செல்வந்தரும் இல்லை, மிகவும் ஏழையும் இல்லை. இவர் சாதாரணமானவர். ஒரு யாகம் உருவாக்கப்படும் பொழுது, உணவு, பானம் போன்ற அனைத்தும் தேவைப்படுகின்றன. இது கடவுளின் யாகம். கடவுள் வந்து இந்த ஞான யாகத்தை உருவாக்கி உள்ளார். அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார். இந்த யக்ஞத்தின் புகழ் மிகவும் மகத்தானது. நீங்கள் உங்களை அர்ப்பணித்தவராகவும் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகவும் கருதும் பொழுது, உங்கள் சரீரத்துக்கான வாழ்வாதாரம், கடவுளின் இந்த யக்யத்தில் இருந்து (யக்யம் - இறைவனின் நிறுவனம்) வருகிறது. இவை அனைத்தும் கடவுளுக்கே உரியவை. “நான் சிவபாபாவின் யக்யத்திலிருந்து உணவு உண்கிறேன்”. இது புரிந்து கொள்வதற்கான விடயம். அனைவரும் வந்து இங்கே அமர முடியும் என்பதல்ல. எவ்வாறு அவர் அனைத்தையும் அர்ப்பணித்தார் எனும் உதாரணத்தை நீங்கள் பார்த்தீர்கள். பாபா கூறுகிறார்: இவர் என்ன செய்தார் என்பதைப் பார்த்ததும் ஏனைய பலரும் அதைச் செய்யத் தூண்டப்பட்டதால், அவர்களும் தங்களை அர்ப்பணித்தார்கள். இதைச் செய்தவர்கள், தங்கள் ஆஸ்தியைக் கோரினார்கள். ஆத்மாக்கள் வீடு திரும்புவார்கள் என்பதையும், அவர்களின் சரீரங்கள் அழிக்கப்படும் என்பதையும் உங்கள் புத்தியால் புரிந்துகொள்ள முடியும். இது ஒர் எல்லையற்ற யாகம், இதில் அனைவரும் அர்ப்பணிக்கப்படுவார்கள். எவ்வாறு நீங்கள் உங்கள் புத்தி மூலம் அனைத்தையும் அர்ப்பணிக்க முடியும் என்பதும் எவ்வாறு பற்றை அழித்தவர்கள் ஆகுகிறீர்கள் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இது எத்தகையதொரு பெரும் யாகம் என்றால், இதில் அனைத்துப் பொருட்களும் மண்ணோடு மண்ணாகப் போகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கே, யாகங்கள் இருக்காது. அங்கே, அனர்த்தங்களும் இருக்க மாட்டாது. பக்தி மார்க்கத்தின் யாகங்கள் அனைத்தும் முடிவடையும். கடவுள் மாத்திரமே ஞானக்கடல் ஆவார். அவரே மனித உலக விருட்சத்தின் விதையாவார். அவரே சத்தியம், உயிர்வாழ்பவரும் ஆவார். சரீரம் உயிரற்றது. ஆத்மா உயிர்வாழ்பவர். அவரே ஞானக்கடல் ஆவார். ஞானக்கடல் இங்கே அமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். ஏனையோர் அதைப் பற்றிப் பாடுகிறார்கள், ஆனால் பாபா உங்களிடம் நேரடியாக இந்த ஞானம் அனைத்தையும் பேசுகிறார். அதிகளவு ஞானம் கிடையாது. எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கிறது என்பதையே நீங்கள் எல்லோரும் விளங்கப்படுத்த வேண்டும். இங்கே, தந்தையே உங்களுக்குக் கற்பிக்கிறார். அவர் கூறுகிறார்: நான் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கிறேன். “பாக்கிய இரதம்” என்பதும் மிகவும் பிரபல்யமானது. கடவுள் பிரவேசித்தவர், நிச்சயமாக ஒரு மனிதராகவே இருக்க வேண்டும். கடவுளுக்கு சிவன் எனும் ஒரு பெயர் மாத்திரம் உள்ளது. ஏனைய அனைவரின் பெயர்களும் மாறுகின்றன. அவருடைய பெயர் மாற்றம் அடைவதில்லை. எவ்வாறாயினும், பக்திமார்க்கத்தில் அவருக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கே, அவர் சிவபாபா என அழைக்கப்படுகிறார். சிவன் என்றால் நன்மையளிப்பவர் என அர்த்தம். கடவுளால் மட்டுமே, வந்து சுவர்க்கமாகிய புதிய உலகை உருவாக்க முடியும். ஆகவே, அவரே நன்மை அளிப்பவர், அப்படித்தானே? பாரதத்தில் சுவர்க்கம் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது இப்பொழுது நரகமாக உள்ளது. பின்னர், நிச்சயமாகச் சுவர்க்கம் இருக்கும். இது அதிமங்களகரமான சங்கமயுகம் என அழைக்கப்படுகிறது. இப்பொழுது தந்தை படகோட்டியாகி, உங்களை இக்கரையில் இருந்து அக்கரைக்கு அழைத்துச் செல்கிறார். இது துன்பமான ஒரு பழைய உலகம். பின்னர், நாடகத்துக்கேற்ப, நிச்சயமாக ஒரு புதிய உலகம் இருக்கும். அதற்காகவே நீங்கள் இப்பொழுது முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் தந்தையை நினைவுசெய்ய மறந்து விடுகிறீர்கள். இந்த நினைவுக்கே முயற்சி தேவைப்படுகிறது. நீங்கள் செய்துள்ள பாவச் செயல்களுக்கான வேதனை நிச்சயமாக இருக்கும். கர்மவேதனை இறுதிவரை தொடரும். அதற்கான மன்னிப்பு எதுவும் இருக்க முடியாது. பாபா, என்னை மன்னித்து விடுங்கள்! என உங்களால் சொல்ல முடியாது. முற்றிலும் இல்லை. நாடகத்துக்கு ஏற்பவே அனைத்தும் நடக்கிறது. மன்னிப்பு இருக்க முடியாது, கர்மக்கணக்குகள் தீர்க்கப்பட வேண்டும். நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக மாற வேண்டும். இதற்காகவே நீங்கள் ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள். இரட்டை மேன்மையானவரான (ஸ்ரீ ஸ்ரீ) சிவபாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால், நீங்கள் (ஸ்ரீ) மேன்மையானவராக ஆகுகிறீர்கள். அதிமேன்மையான தந்தை உங்களை மேன்மை ஆக்குகிறார். இப்பொழுது நீங்கள் இவ்வாறு ஆகுகிறீர்கள். பாபா வந்து உங்களுக்கு ஒவ்வொரு கல்பமும் கற்பிக்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் நினைவு செய்கிறீர்கள். நீங்கள் இந்தக் கல்வியின் வெகுமதியை அரைக் கல்பத்திற்குப் பெறுகிறீர்கள். அந்த நேரத்தில், எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கிறது என்பதற்கான ஞானத்தின் தேவையே இருக்க மாட்டாது. ஒவ்வொரு கல்பத்திலும், பாபா ஒருமுறை மாத்திரமே வந்து, உங்களுக்கு இவை அனைத்தையும் கூறுகிறார். எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கிறது என்பதை அவர் உங்களுக்குக் கூறுகிறார். கற்பதும், தூய்மை ஆகுவதுமே உங்கள் கடமையாகும். யோகத்தில்; நிலைத்திருங்கள். நீங்கள் தந்தைக்கு உரியவராகிய பின்னர் தூய்மை ஆகாது விட்டால், நூறு மடங்கு தண்டனை இருக்கும். பின்னர் தந்தையின் பெயர் அவதூறு செய்யப்படுகிறது. “சற்குருவை அவதூறு செய்பவர்களால், தங்கள் இலக்கை அடைய முடியாது” எனக் கூறப்பட்டுள்ளது. இது யாரைக் குறிப்பிடுகிறது என்பது மக்களுக்குத் தெரியாது. உண்மையான தந்தை மாத்திரம் சற்குருவும், உண்மையான ஆசிரியரும் ஆவார். அவர் உங்களுக்குக் கற்பிப்பதுடன், அவர் உண்மையான சற்குருவும் ஆவார். தந்தை ஞானக்கடலாக இருப்பதைப் போன்றே, நீங்களும் இந்த ஞானக்கடல்கள். தந்தை உங்களுக்கு இந்த ஞானம் அனைத்தையும் கொடுத்துள்ளார். நீங்கள் முன்னைய கல்பத்தில் கிரகித்த அளவுக்கே, நீங்கள் ஒவ்வொருவரும் அதைக் கிரகிப்பீர்கள். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். செயல்களைச் செய்யாமல், இங்கே எவரும் இருக்க முடியாது. நீங்கள் எவ்வளவுதான் ஹத்தயோகம் செய்தாலும், அதுவும் செயல்களைப் செய்வதே ஆகும். அதுவும் ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதற்கான வியாபாரம். அவர்கள் பிரபல்யமாகிப் பெருமளவு பணத்தைப் பெறுகிறார்கள். ஏனெனில் அவர்கள் தண்ணீரில் அல்லது நெருப்பில் நடக்கிறார்கள். அவர்களால் செய்ய முடியாத ஒரே விடயம், பறப்பதே ஆகும். அதற்குப் பெற்றோல் போன்றன தேவைப்படும். எவ்வாறாயினும், அதில் நன்மை ஏதும் இல்லை. அவர்கள் தூய்மை ஆகுவதில்லை. விஞ்ஞானிகளும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறார்கள். அவர்களுடையது விஞ்ஞானத்தின் ஓட்டப் பந்தயம், ஆனால் உங்களுடையது மௌனத்தின் ஓட்டப் பந்தயம் ஆகும். அனைவரும் அமைதியை வேண்டுகிறார்கள். தந்தை கூறுகிறார்: அமைதியே உங்களுடைய ஆதிதர்மம்! உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நீங்கள் அமைதி தாமமாகிய, உங்கள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும். இது துன்ப தாமம். அமைதி தாமத்திலிருந்து நாங்கள் அந்த சந்தோஷ தாமத்துக்குச் செல்வோம். இந்தத் துன்ப தாமம் முடிவடைய வேண்டும். அதை மிகவும் நன்றாகக் கிரகித்து, ஏனையோரையும் அதைக் கிரகிக்கத் தூண்டுங்கள். மிகச் சொற்ப நாட்களே எஞ்சியுள்ளன. கற்ற பின்னர், தங்கள் வாழ்வாதாரத்துக்காக, மாணவர்கள் அதிகளவு பிரயத்தனம் செய்ய வேண்டி உள்ளது. நீங்கள் எந்தக் கல்வியைக் கற்க வேண்டும் எனப் பாக்கியசாலிக் குழந்தைகளாகிய உங்களால் உடனடியாகவே தீர்மானிக்க இயலும். அந்தக் கல்வியினூடாக எதைப் பெறுவீர்கள் எனவும், இந்தக் கல்வியினூடாக் எதைப் பெறுவீர்கள் எனவும் நீங்கள் அறிவீர்கள். இந்தக் கல்வியினூடாக, உங்கள் 21 பிறவிகளுக்கான ஒரு வெகுமதியை நீங்கள் உருவாக்குகிறீர்கள். ஆகவே, நீங்கள் எந்தக் கல்வியைக் கற்க வேண்டும் எனச் சிந்தியுங்கள். எல்லையற்ற தந்தையிடம் இருந்து தங்கள் ஆஸ்தியைக் கோர விரும்புபவர்கள், இந்த எல்லையற்ற கல்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். எவ்வாறாயினும், நாடகத் திட்டத்துக்கேற்ப, அது அவர்களின் பாக்கியத்தில் இல்லாவிட்டால், அவர்கள் ஏனைய கல்விகளில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் இந்தக்கல்வியைக் கற்க மாட்டார்கள். தங்களுக்கு நேரம் இல்லை என்றே அவர்கள் கூறுகிறார்கள். பாபா கேட்கிறார்: எந்த ஞானம் சிறந்தது? அந்தக் கல்வியினூடாக நீங்கள் எதைப் பெறுவீர்கள்? இந்தக் கல்வியினூடாக நீங்கள் எதைப் பெறுவீர்கள்? நீங்கள் கூறுவீர்கள்: பாபா, லௌகீகக் கல்வி எதனூடாகவும் நாங்கள் எதைப் பெற முடியும்? ஒருவேளை நாங்கள் ஏதோவொன்றைச் சம்பாதிக்க இயலும். இங்கே, கடவுளே எங்களுக்குக் கற்பிக்கிறார். நாங்கள் கற்று ஓர் இராஜ அந்தஸ்தைக் கோர விரும்புகிறோம். அதனால், எந்தக் கல்வியில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்? சிலர் கூறுகிறார்கள்: பாபா, நான் அந்தப் பாடநெறியை முடித்த பின்பு, இங்கே வருவேன். அது அவர்களின் பாக்கியத்தில் இல்லை என்பதை பாபா அப்போது புரிந்து கொள்கிறார். நீங்கள் மேலும் முன்னேறுகையில், என்ன நடக்கப் போகின்றது எனப் பாருங்கள். உங்கள் சரீரத்துக்கான உத்தரவாதம் கிடையாது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்வதால், இந்த உண்மையான வருமானத்தைச் சம்பாதிப்பதில் நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தமது பாக்கியத்தில் இருப்பவர்கள் மட்டுமே தமது பாக்கியத்தை விழித்தெழச் செய்கிறார்கள். நீங்கள் உங்கள் முழு விசையையும் பயன்படுத்த வேண்டும்: நான் நிச்சயமாகத் தந்தையிடம் இருந்து என்னுடைய ஆஸ்தியைக் கோருவேன். எல்லையற்ற பாபா எங்களுக்கு அந்த இராச்சியத்தைக் கொடுக்கிறார். ஆகவே, இந்தக் கடைசிப் பிறவியில் நான் ஏன் தூய்மையாக இருக்கக்கூடாது? பல குழந்தைகள் தூய்மையாக இருக்கிறார்கள். அவர்கள் பொய் சொல்லுவதில்லை. அனைவரும் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் கற்கிறார்கள், இருப்பினும் ஏனையோர் இதை நம்புவதில்லை. பழைய உலகத்தைப் புதியதாக்கும் பொழுது மட்டுமே, எல்லையற்ற தந்தை வருகிறார். பழைய உலகின் விநாசம் முன்னிலையில் உள்ளது. இது மிகவும் தெளிவாக உள்ளது. இதுவும் நிச்சயமாக அதே நேரமாகும். இப்பொழுது பல சமயங்கள் உள்ளன, சத்தியயுகத்திலோ ஒரு தர்மம் மட்டுமே இருக்கும். இதுவும் உங்கள் புத்திகளில் உள்ளது. உங்கள் மத்தியில், நம்பிக்கையைக் கொண்டிருப்பதற்கு இன்னமும் முயற்சி செய்கின்ற சிலர் உள்ளார்கள். ஓ! நம்பிக்கையை வளர்ப்பதற்கு ஏன் நேரம் எடுக்க வேண்டும்? உங்கள் சரீரத்துக்கு உத்தரவாதம் கிடையாது. அதனால் நீங்கள் வாய்ப்புக்களை வீணாக்கக்கூடாது. எவ்வாறாயினும், அது அவர்களின் பாக்கியத்தில் இல்லாவிட்டால், இது முற்றாகவே அவர்களின் புத்தியில் பிரவேசிப்பதில்லை. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதித்து, 21 பிறவிகளுக்கான உங்கள் பாக்கியத்தை உருவாக்குங்கள். உங்கள் சரீரத்துக்கு உத்தரவாதம் கிடையாது. ஆகவே, எந்த வாய்ப்பையும் வீணாக்காதீர்கள்.2. பற்றை அழிப்பவராகி, உங்களிடம் உள்ள அனைத்தையும் இந்த உருத்திர ஞான யாகத்தில் அர்ப்பணியுங்கள். உங்களை அர்ப்பணித்து, ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக அனைத்தையும் பராமரியுங்கள். பௌதீகமான தந்தையின் உதாரணத்தைப் பின்பற்றுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இறை போதையைக் கொண்டிருப்பதன் மூலம் சகல பேறுகளாலும் நிரம்பியவராகி, இந்தப் பழைய உலகை மறப்பீர்களாக.எப்படி மற்றைய போதை உங்களை எல்லாவற்றையும் மறக்கச் செய்கிறதோ, அதேபோல், இறைபோதையானது இலகுவாக உங்களை அந்தத் துன்ப உலகை மறக்கச் செய்கிறது. அந்தப் போதை அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும். அதிகளவில் மது அருந்துவதன் மூலம் உங்களையே நீங்கள் அழித்துக் கொள்ள முடியும். ஆனால் இந்த போதையோ உங்களை அழியாதவர் ஆக்குகிறது. இறை போதையால் சதா போதையுடன் இருப்பவர்கள், சகல பேறுகளாலும் நிரம்பியவர்கள் ஆகுவார்கள். வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாக இருக்கும் விழிப்புணர்வு, உங்களின் போதையை அதிகரிக்கும். இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் உங்களின் சக்தி அதிகரிக்கிறது.
சுலோகம்:
ஒருவரை ஒருவர் பிரதி செய்வதற்குப் பதிலாக, தந்தையைப் பிரதி செய்யுங்கள்.அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள். அகநோக்கில் இருப்பவர்களால் மட்டுமே, இந்த ஞானத்தின் ஒவ்வோர் இரத்தினத்தின் ஆழத்திற்கும் செல்ல முடியும். அவர்கள் இந்த ஞானத்தின் ஒவ்வொரு கருத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கும் எப்போது அதைப் பயன்படுத்துவது, எப்படி அதைப் பயன்படுத்துவது, தாம் செய்யும் சேவையில் எப்படி அதைப் பயன்படுத்துவது எனப் புரிந்து கொள்வதற்கு அதைக் கடைவார்கள். இதைக் கடைந்து, அதன் அர்த்தத்தின் இனிமையின் ஆழத்திற்குள் செல்லுங்கள். உங்களால் போதையை அனுபவம் செய்ய முடியும்.