18.07.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் சேவையைப் பற்றிய செய்திகளை வாசிப்பதிலும் செவிமடுப்பதிலும் ஆர்வத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், இதன் மூலமே உங்கள் ஆர்வமும் உற்சாகமும் அதிகரித்து, எவ்வாறு சேவை செய்வது என்னும் எண்ணங்கள் தோன்றும்.
பாடல்:
சங்கமயுகத்தில் தந்தை உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பதில்லை, ஆனால், அவர் உங்களுக்குச் சந்தோஷத்திற்கான பாதையைக் காட்டுகின்றார். இது எவ்வாறு?பதில்:
ஏனெனில், அனைவருமே தந்தையின் குழந்தைகள் என்பதால், அவர் ஒரு குழந்தைக்கு மாத்திரம் சந்தோஷத்தைக் கொடுப்பாராயின், அது சரியாக இருக்காது. குழந்தைகள் தங்கள் லௌகீகத் தந்தையிடமிருந்து மிகச்சரியாகவே தங்கள் பங்குகளைப் பெறுகிறார்கள். எல்லையற்ற தந்தை, பங்குகளைக் கொடுப்பதில்லை, ஆனால், அவர் சந்தோஷத்திற்கான பாதையைக் காட்டுகின்றார். அந்தப் பாதையைப் பின்பற்றி, முயற்சி செய்கின்றவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள், முயற்சி செய்ய வேண்டும். அனைத்தும் உங்கள் முயற்சிகளிலேயே தங்கியுள்ளது.ஓம் சாந்தி.
தந்தையே, முரளியை (புல்லாங்குழல்) வாசிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். முரளிகள் அனைவருக்கும் அனுப்பப்படுகின்றது. முரளியைக் கற்று, சேவை செய்கின்றவர்களின் செய்திகள் சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்படுகின்றன. இப்பொழுது, அந்தச் சஞ்சிகைகளை வாசிக்கின்ற குழந்தைகளால், நிலையங்கள் அனைத்தினதும், அதாவது அச்சேவை இன்ன இன்ன இடங்களில் இடம்பெறுன்றது என்ற சேவைக்கான செய்திகளை அறிந்து கொள்ள முடியும். அவற்றை வாசிக்காதவர்களுக்கு எந்தச் செய்தியைப் பற்றியும் தெரியாது, அவர்கள் முயற்சி செய்யவும் மாட்டார்கள். நீங்கள் சேவையைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டதும், நீங்களும் அவ்வாறான சேவையைச் செய்ய வேண்டும் என்பது உங்கள் இதயங்களிலும் தோன்றுகின்றது. சஞ்சிகைகளை வாசிப்பதனால் உங்கள் சகோதர, சகோதரிகள் எந்தளவு சேவை செய்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகச் சேவை செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஆகையாலேயே, சஞ்சிகைகளால் உங்களுக்குச் சேவைக்கான உற்சாகத்தைக் கொடுக்க முடியும். அவை எந்த நோக்கமும் இல்லாமல் தயாரிக்கப்படுவதில்லை. அவற்றை வாசிக்காதவர்கள் அவற்றைப் பயனற்றவை எனக் கருதுகின்றார்கள். சிலர் அவற்றிலுள்ள வார்த்;தைகள் தங்களுக்குப் புரிவதில்லை எனக் கூறுகின்றார்கள். ஆ! மக்கள் இராமாயணம், பாகவதம், கீதை போன்றவற்றைக் செவிமடுப்பதற்குச் செல்கின்றார்கள். எனவே நீங்களும் இவற்றைச் செவிமடுக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் சேவைக்கான உற்சாகம் அதிகரிக்க மாட்டாது. இந்தச் சேவை இன்ன இன்ன இடத்தில் இடம்பெற்றது. உங்களுக்கு ஆர்வம் இருந்தால், அதனை வாசித்துக் காட்டுமாறு நீங்கள் வேறு ஒருவரிடம் கேட்கலாம். பல நிலையங்களில் சஞ்சிகைகளை வாசிக்காத குழந்தைகள் இருப்பார்கள். சிறிதளவேனும்; சேவை செய்யாத பலர் இருக்கின்றார்கள்;, ஆகவே, அவர்கள் அதற்கேற்பவே ஓர் அந்தஸ்தைக் கோருவார்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதையும், நீங்கள் செய்கின்ற முயற்சிக்கேற்ப, ஓர் அந்தஸ்தைப் பெறுவீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் கல்வியில் கவனம் செலுத்தாது விட்டால், சித்தி எய்த மாட்டீர்கள். இப்பொழுது நீங்கள் எந்தளவிற்குக் கற்கின்றீர்கள் என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. நீங்கள் அதிகளவு கற்று, பிறருக்கும் கற்பித்தால், நீங்களே உங்களுக்கு நன்மை விளைவிக்கின்றீர்கள். சஞ்சிகைகளை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தையே கொண்டிருக்காத பல குழந்தைகள் உள்ளனர். அவர்கள் சதப் பெறுமதியான அந்தஸ்தை மாத்திரமே பெறுவார்கள். “அவர் முயற்சி செய்யவில்லை, இதனாலேயே அவர் அந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளார்” என்ற எண்ணத்தை நீங்கள் அங்கே கொண்டிருக்க மாட்டீர்கள்;. இல்லை. இங்கேயே கர்மாவினதும் பாவ கர்மாவினதும் விடயங்கள் புத்தியில் உள்ளன. தந்தை ஒவ்வொரு கல்பத்தினதும் சங்கமயுகத்திலேயே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் கல்லுப்புத்தியை உடையவர்கள் போன்றவர்கள். நீங்கள் தூய்மையற்ற புத்தியைக் கொண்டிருந்தீர்கள் என்றும், அதில் உங்களுக்கும் ஒரு பங்கு உள்ளது என்றும் நீங்களும் புரிந்து கொள்;கின்றீர்கள். பாபா, குழந்தைகளாகிய உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார்: இது இப்பொழுது கலியுகமாகும், இதில், எல்லையற்ற துன்பம் உள்ளது. இந்தத் துன்பமும், அந்தத் துன்பமும் உள்ளன. அவர் கூறுவது சரியே என்பதை விவேகிகள் விரைவில் புரிந்து கொள்வார்கள். நீங்கள் நேற்று மிகவும் சந்தோஷமற்று இருந்;தீர்கள் என்றும், நீங்கள் எல்லையற்;ற துன்பத்தின் மத்தியில் இருந்தீர்கள் என்றும் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் எல்லையற்ற சந்தோஷத்திற்குச் செல்கின்றீர்கள். இது இராவண இராச்சியமான, கலியுகம் என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் புரிந்து கொண்டிருந்தாலும், உங்களால் பிறருக்கு விளங்கப்படுத்த முடியாதுவிட்டால், நீங்கள் எதனையுமே புரிந்து கொள்ளவில்லை என்று அப்பொழுது பாபா கூறுவார். நீங்கள் சேவை செய்யும் பொழுது, அதன் செய்தி சஞ்சிகைகளில் குறிப்பிடப்படும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் எனக் கூறப்படும். நாளுக்கு நாள், பாபா பல இலகுவான கருத்துக்களைத் தொடர்ந்தும் பேசுகின்றார். கலியுகம் இன்னமும் தனது குழந்தைப் பருவத்தில் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். சங்கமயுகத்தை அவர்கள் புரிந்து கொள்ளும் பொழுதே, அவர்களால் இக் கலியுகத்தைச் சத்தியயுகத்துடன் ஒப்பிட முடியும், அதாவது கலியுகத்தில் எல்லையற்ற துன்பம் இருப்பதையும், சத்தியயுகத்தில் எல்லையற்ற சந்தோஷம் இருப்பதையும் அவர்களால் ஒப்பிட முடியும். அவர்களிடம் கூறுங்கள்: தந்தை குழந்தைகளாகிய எங்களுக்குக் கொடுக்கின்ற எல்லையற்ற சந்தோஷத்தைப் பற்றியே நாங்கள் உங்களுக்குக் கூறுகின்றோம். வேறு எவராலும் இதனை விளங்கப்படுத்த முடியாது. நீங்கள் புதிய விடயங்களைக் கூறுகின்றீர்கள். நீங்கள் சுவர்க்க வாசிகளா அல்லது நரக வாசிகளா என வேறு எவருமே வினவ மாட்டார்கள். குழந்தைகளாகிய நீங்களும் வரிசைக்கிரமமானவர்கள். உங்களால் சகல கருத்துக்களையும் நினைவுசெய்ய முடியாது. நீங்கள் ஏனையோருக்கு விளங்கப்படுத்தும் பொழுது, சரீர உணர்விற்குள் வருகின்றீர்கள். ஆத்மாவே செவிமடுத்து இதனைக் கிரகிக்கின்றார். எவ்வாறாயினும், சில நல்ல மகாராத்திகளும் இதனை மறந்து, சரீர உணர்வின் அடிப்படையில் பேச ஆரம்பிக்கின்றார்கள். இது அனைவரிலும் இடம்பெறுகிறது. தந்தை கூறுகின்றார்: அனைவருமே முயற்சி செய்பவர்கள். நீங்கள் அனைவரும் உங்களை ஆத்மாக்கள் எனக் கருதிப் பேசுவதில்லை. இல்லை. தந்தை உங்களை ஆத்மாக்கள் எனக் கருதியே, உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். எவ்வாறாயினும், சகோதரர்கள், அந்த ஸ்திதியைப் பேணுவதற்கு இன்னமும் முயற்சி செய்கின்றார்கள். ஆகையால், குழந்தைகளாகிய நீங்கள் கலியுகத்தில் எல்லையற்ற துன்பம் உள்ளது என்றும், சத்தியயுகத்தில் எல்லையற்ற சந்தோஷம் உள்ளது என்றும் விளங்கப்படுத்த வேண்டும். இப்பொழுது இது சங்கமயுகமாகும். தந்தை உங்களுக்குப் பாதையைக் காட்டுகின்றார், தந்தை உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றார் என்றில்லை. அவர் உங்களுக்குச் சந்தோஷத்திற்கான பாதையைக் காட்டுகின்றார். இராவணனும் உங்களுக்குத் துன்பத்தைக் கொடுப்பதில்லை. அவன் உங்களுக்குத் துன்பத்திற்கான பாதையை, பிழையான பாதையையே காட்டுகின்றான். தந்தை உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பதுமில்லை, துன்பத்தைக் கொடுப்பதுமில்லை. அவர் உங்களுக்குச் சந்தோஷத்திற்கான பாதையையே காட்டுகின்றார். பின்னர், நீங்கள் ஒவ்வொருவரும் செய்கின்ற முயற்சிக்கேற்ப, சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். அவர் உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பதில்லை. தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், நீங்கள் சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். தந்தை உங்களுக்குப் பாதையையே காட்டுகின்றார். நீங்கள் இராவணனினால் துன்பப் பாதைக்கு வழிகாட்டப்படுகின்றீர்கள். தந்தை எதனையேனும் கொடுத்திருந்தால், அனைவரும் சமமான ஆஸ்தியைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு லௌகீகத் தந்தையும் தனது ஆஸ்தியைப் பகிர்ந்தளிக்கின்றார். இங்கே, நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு முயற்சி செய்கின்றீர்கள் என்பதிலேயே அது தங்கியுள்ளது. தந்தை மிகவும் இலகுவான பாதையை உங்களுக்குக் காட்டுகின்றார்: நீங்கள் இன்ன இன்னதைச் செய்தால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் பெறுவீர்கள். குழந்தைகளாகிய நீங்களே முயற்சி செய்ய வேண்டும்: நாங்கள் முயற்சி செய்து மிகவும் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற வேண்டும். நாங்கள் கற்க வேண்டும். பிறர் கற்று உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளட்டும் என நீங்கள் பின்தங்கி விடுகின்ற மனோநிலையைக் கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. இல்லை. முயற்சியே முதலில் வருகிறது. நாடகத்திற்கேற்ப, நீங்கள் நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும். சிலர் விரைவான முயற்சியைச் செய்கின்றார்கள், சிலர் மந்தமாக முயற்சியைச் செய்கின்றார்கள். உங்கள் முயற்சிகளிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. தந்தை உங்களுக்குப் பாதையைக் காட்டியுள்ளார். அவர் கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! என்னை எந்தளவிற்கு அதிகமாக நினைவு செய்கின்றீர்களோ அந்தளவிற்கு உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள், அதனை நாடகத்திற்கு ஏற்ப என விட்டுவிடக் கூடாது. இதுவும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விடயமாகும். உலக வரலாறும் புவியியலும் மீண்டும் இடம்பெறுகின்றன. எனவே, நிச்சயமாக நீங்கள் முன்னர் நடித்த பாகம் மீண்டும் நடிக்கப்பட வேண்டும். சமயங்கள் அனைத்தும் தத்தமது நேரத்தில் மீண்டும் வரும். உதாரணத்திற்கு, பில்லியன் கணக்கான கிறிஸ்தவர்கள் இருப்பார்களாயின், அத்தனை பேரும் தங்கள் பாகங்களை நடிப்பதற்கு மீண்டும் வருவார்கள். ஓர் ஆத்மா ஒருபொழுதும் அழிக்கப்படுவதில்லை, அவரது பாகமும் என்றும் அழிக்கப்படுவதில்லை. இது நீங்கள் மிகவும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விடயமாகும். புரிந்து கொண்டவர்கள், நிச்சயமாகப் பிறருக்கு விளங்கப்படுத்துவார்கள். 'செல்வத்தைத் தானம் செய்தால் அது ஒருபொழுதும் குறைவடையாது". நீங்கள் தொடர்ந்தும் ஞானத்தைக் கிரகித்து, தொடர்ந்தும் பிறரைச் செல்வந்தர்கள் ஆக்குவீர்கள். எவ்வாறாயினும், அது உங்கள் பாக்கியத்தில் இல்லாதிருப்பின், நீங்கள் உதவியற்றவர்கள் என உங்களைக் கருதுகின்றீர்கள். இந்த ஞானத்தை உங்களால் உரைக்க முடியாதிருப்பின், அது உங்கள் அந்தஸ்து சதப் பெறுமதியானதாக மாத்திரமே ஆகுகின்ற உங்கள் பாக்கியம் என ஆசிரியர் கூறுவார். அது உங்கள் பாக்கியத்தில் இல்லாவிட்டால், நீங்கள் என்ன முயற்சியைச் செய்வீர்கள்? இது ஓர் எல்லையற்ற பாடசாலையாகும். ஒவ்வொரு ஆசிரியரும் தத்தமது சொந்த பாடத்தையே கற்பிக்கின்றார்கள். தந்தையும் குழந்தைகளாகிய நீங்களும் மாத்திரமே தந்தையின் கற்பித்தல் வழிமுறைகளை அறிவீர்கள். வேறு எவராலும் அதனை அறிந்து கொள்ள முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்துவதற்கு மிகக்கடுமையாக முயற்சித்தாலும், வெகு சிலரே புரிந்து கொள்கின்றார்கள்;, அது அவர்களின் புத்தியில் இருப்பதில்லை. நீங்கள் எவ்வளவு நெருக்கமாக வருகின்றீர்களோ, அந்தளவுக்குத் திறமைசாலிகள் ஆகுகின்றீர்கள் என்பது தெளிவாகும். இப்பொழுது அருங்காட்சியகங்கள், ஆன்மீகக் கல்லூரிகள் போன்றனவும் ஆரம்பிக்கப்படுகின்றன. 'ஆன்மீக பல்கலைக்கழகம்” என்ற உங்கள் பெயர் தனித்துவமானது. அரசாங்கமும் இதனைப் பார்வையிடும். அவர்களிடம் கூறுங்கள்: உங்கள் பல்கலைக்கழகங்கள் பௌதீகமானவை, ஆனால் இது ஆன்மீகமானது: ஆத்மாக்கள் கற்கின்றார்கள். 84 பிறவிகளின் சக்கரம் முழுவதிலும் ஆன்மீகத் தந்தை ஒரேயொரு முறை மாத்திரமே ஆன்மீகக் குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கு வருகின்றார். நீங்கள் ஒரு சினிமாப் படத்தைப் பார்த்த பின்னர், அது மூன்று மணித்தியாலயங்களின் பின்னர் மீண்டும் அதேபோன்று சுழலும். 5000 வருடங்களைக் கொண்ட இச்சக்கரமும் மீண்டும் அதேபோன்று சுழலும். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். அம்மக்கள் பக்தி மார்க்கத்துச் சமயநூல்கள் மாத்திரமே சரியானவை என நம்புகிறார்கள். உங்களிடம் சமயநூல்கள் எதுவும் இல்லை. தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தந்தை எந்தச் சமயநூலையும் கற்கவில்லை. அம்மக்கள் கீதையை வாசித்து அதனை உரைக்கின்றார்கள். ஒரு சிறு குழந்தை கல்;வி கற்றவராகத் தாயின் கருப்பையிலிருந்து வெளி வருவதில்லை. உங்களுக்குக் கற்பிப்பது, எல்லையற்ற தந்தையின் பாகமாகும். அவர் உங்களுக்குத் தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார். இந்த உலகில் உள்ள வேறு எவருக்கும் இது தெரியாது. தந்தையே ஞானக்கடல் எனவும் அவர்கள் பாடுகின்றார்கள். ஸ்ரீகிருஷ்ணரை அவர்கள் ஞானக்கடல் என அழைப்பதில்லை. இலக்ஷ்மியும் நாராயணனும் ஞானக்கடல்களா? இல்லை. பிராமணர்களாகிய நாங்கள் மாத்திரம் ஸ்ரீமத்தின் அடிப்படையில் இந்த ஞானத்தைக் கொடுப்பது ஓர் அற்புதமாகும். இக்கணக்கின் அடிப்படையில், பிராமணர்களாகிய நீங்களே பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் என உங்களால் விளங்கப்படுத்த முடியும். நீங்கள் பலமுறைகள் அவரின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் மீண்டும் அவ்வாறு ஆகுவீர்கள். மனிதர்கள் இதனைப் புரிந்து கொள்ளும் பொழுதே, அவர்கள் இதனை நம்புவார்கள். நீங்கள் கல்பம் கல்பமாக பிரஜாபிதா பிரம்மாவின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் ஆகுகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்;கின்றீர்கள். புரிந்து கொள்கின்றவர்களின் புத்தி நம்பிக்கையை வளர்க்கின்றது. நீங்கள் முதலில் ஒரு பிராமணர் ஆகாமல் எவ்வாறு ஒரு தேவர் ஆக முடியும்? அனைத்தும் ஒவ்வொருவரினதும் புத்தியில் தங்கியுள்ளது. இது பாடசாலைகளிலும் இடம்பெறுகிறது. சிலர் புலமைப்பரிசிலைப் பெறுகின்றனர். ஆனால், சிலரோ சித்தியெய்துவதில்லை. அவர்கள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து கற்க வேண்டியுள்ளது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் விகாரத்தில் விழுந்தீர்களாயின், நீங்கள் ஈட்டிய வருமானம் அனைத்தும் அழிக்கப்பட்டு, ஞானமும் உங்கள் புத்தியில் இருக்காது. உங்கள் மனச்சாட்சி தொடர்ந்தும் உங்களை உள்ளுர உறுத்தும். இந்தப் பிறவியில் நீங்கள் செய்துள்ள பாவங்கள் உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். உங்கள் முன்னைய பிறவிகளில் நீங்கள் செய்துள்ள பாவங்கள் உங்களுக்கு ஞாபகமிருக்காது. நீங்கள் நிச்சயமாகப் பாவங்களைச் செய்தீர்கள். தூய, புண்ணியாத்மாக்களாக இருந்தவர்கள் பாவாத்மாக்கள் ஆகியுள்ளார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்கு முழுக் கணக்கையும் விளங்கப்படுத்துகின்றார். இதனை மறந்து விட்டு, கற்காத பல குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கற்றிருந்தால், நிச்சயமாகப் பிறருக்குக் கற்பிப்பார்கள். மந்த புத்தி உடைய சிலர் திறமையான புத்தி உடையவர்கள் ஆகுகிறார்கள். இந்தக் கல்வி மிகவும் மகத்தானது. இத் தந்தையின் கல்வி மூலம் சூரிய, சந்திர வம்சங்கள் உருவாக்கப்படவுள்ளன. அம்மக்கள் இந்த ஒரு பிறவியில் கற்று, தங்கள் அந்தஸ்தை இதே பிறவியில் பெறுகின்றார்கள். நீங்கள் இந்தக் கல்வியின் மூலம் புதிய உலகத்தில் உங்கள் அந்தஸ்தைப் பெறுவீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். அது தொலை தூரத்தில் இல்லை. நீங்கள் ஆடைகளை மாற்றுவது போன்றே, பழைய உலகத்தை விட்டு நீங்கிப் புதிய உலகத்திற்குள் செல்வீர்கள். விநாசம் நிச்சயமாக இடம்பெறும். நீங்கள் இப்பொழுது புதிய உலகத்திற்கு உரியவர்கள் ஆகி, உங்கள் பழைய ஆடைகளை நீக்கிச் செல்வீர்கள். இராச்சியம் வரிசைக்கிரமமாகவே ஸ்தாபிக்கப்படுகின்றது. நன்றாகக் கற்பவர்கள் முதலில் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். ஏனையோர் பின்னர் வருவார்கள்; அவர்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. சுவர்க்கத்தில் உள்ள பணிப்பெண்;களும் வேலையாட்களும் பாபாவின் இதயத்தில் ஏறியவர்களாகவே இருப்பார்கள். அங்கே அனைவரும் செல்வார்கள் என்றில்லை. ஆன்மீகக் கல்லூரிகள் போன்றவை இப்பொழுது திறக்கப்படுகின்றன. அனைவரும் வந்து முயற்சி செய்வார்கள். கல்வியில் திறமைசாலிகள் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். மந்த புத்தி உடையவர்கள், குறைந்த அந்தஸ்தைக் பெறுவார்கள். மந்த புத்தி உடைய சிலர் பின்னர் சிறந்த முயற்சியைச் செய்வது சாத்தியமே. விவேகமான புத்தி உடையவர்களும்; விழுகிறார்கள். இது அவர்கள் செய்கின்ற முயற்சியின் மூலம் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இம் முழு நாடகமும் தொடர்கின்றது. ஆத்மாக்கள் சரீரங்களைப் பெற்று, தங்கள் பாகத்தை இங்கு நடிக்கின்றார்கள்; அவர்கள் புதிய சரீரங்களைப் பெற்று, புதிய பாகங்களை நடிக்கின்றார்கள். அவர்கள் ஏதோ ஒன்றாக ஆகுகின்றார்கள். ஆத்மாவில் சம்ஸ்காரங்கள் அடங்கியுள்ளன. வெளியில் இருக்கின்ற எவருக்கும் சற்றேனும் ஞானம் இல்லை. தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கும் பொழுதே நீங்கள் ஞானத்தைப் பெறுகின்றீர்கள். ஓர் ஆசிரியர் இல்லாவிட்டால், எவ்வாறு உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்க முடியும்? அவர்கள் பக்தர்கள். பக்தி மார்க்கத்தில் எல்லையற்ற துன்பம் உள்ளது. மீரா, ஒரு காட்சியைக் கண்டிருந்தாலும், அவர் சந்தோஷத்தைக் கொண்டிருக்கவில்லை. அவர் நோயுற்றிருக்க மாட்டாரா? அங்கே எவ்விதத் துன்ப விடயங்களும் இல்லை. இங்கு எல்லையற்ற துன்பம் உள்ளது, ஆனால் அங்கு எல்லையற்ற சந்தோஷம் உள்ளது. இங்கே, அனைவரும் சந்தோஷம் அற்றிருக்கின்றார்கள். அரசர்களும் துன்பத்தையே அனுபவம் செய்கின்றார்கள்; இதன்பெயரே துன்ப பூமியாகும். அது சந்தோஷ பூமியாகும். இது முற்றிலும் துன்பமும், முற்றிலும் சந்தோஷமும் உள்ள சங்கமயுகமாகும். சத்தியயுகத்தில் முழுமையான சந்தோஷம் உள்ளது, கலியுகத்தில் முழுமையான துன்பம் உள்ளது. பலவகையான துன்பங்களும் தொடர்ந்தும் அதிகரிக்கின்றன. காலம் செல்ல, துன்பம் மேலும் அதிகமாக அதிகரிக்கும். எல்லையற்ற துன்ப மலைகள் இன்னமும் விழ உள்ளன. அம்மக்கள் உங்களுக்குச் சொற்பளவு நேரத்தையே பேசுவதற்குக் கொடுக்கின்றார்கள். அவர்கள் இரு நிமிடங்களே உங்களுக்குப் பேசுவதற்குக் கொடுத்தாலும், சத்தியயுகத்தில் தந்தை கொடுக்கின்ற எல்லையற்ற சந்தோஷம் இருந்தது என்பதை விளங்கப்படுத்துங்கள். நீங்கள் எல்லையற்ற துன்பத்தை இராவணனிடமிருந்து பெறுகின்றீர்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: காமத்தை வெற்றி கொண்டால், நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். இந்த ஞானம் என்றுமே அழிவடையாது. ஓர் ஆத்மா சிறிதளவைச் செவிமடுத்தாலும், அவர் சுவர்க்கத்திற்குச் செல்வார். பலரும் பிரஜைகள் ஆகுகிறர்கள். ஓர் அரசருக்கும் ஆண்டிக்கும் இடையில் பெருமளவு வித்தியாசம் உள்ளது. ஒவ்வொருவரின் புத்தியும் வித்தியாசமானது. இந்த ஞானத்தைப் புரிந்து கொண்டு, அதனைப் பிறருக்கு விளங்கப்படுத்துபவர்கள் நல்ல அந்தஸ்தைப் பெறுவார்கள். இந்தப் பாடசாலையும் மிகவும் அசாதாரணமானது! கடவுள் இங்கு வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார்! ஸ்ரீகிருஷ்ணர் தெய்வீகக் குணங்களை உடைய ஒரு மனிதராவார். தந்தை கூறுகின்றார்: நான் தெய்வீகக் குணங்களுக்கும் அசுர குணங்களுக்கும் அப்பாற்பட்டவர். உங்கள் தந்தையான நான் உங்களுக்குக் கற்பிக்கவே வருகின்றேன். பரமாத்மாவினால் மாத்திரமே ஆன்மீக ஞானத்தைக் கொடுக்க முடியும். இந்தக் கீதை ஞானமானது எந்தச் சரீரதாரிகளாலும், எந்தத் தேவர்களாலும் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் கூறுகின்றார்கள்: விஷ்ணு தேவருக்கு வந்தனங்கள். அவ்வாறாயின், கிருஷ்ணர் யார்? கிருஷ்ண தேவரே விஷ்ணு ஆவார். இதனை வேறு எவரும் அறிய மாட்டார்கள். உங்களிலும் சிலர் இதனை மறந்து விடுகின்றீர்கள். நீங்கள் இதனை நன்றாக முழுமையாகப் புரிந்து கொண்டிருப்பீர்களாயின், உங்களால் இதனைப் பிறருக்கு விளங்கப்படுத்த முடியும். இங்கே உங்கள் சேவையின் அத்தாட்சியை நீங்கள் கொடுப்பீர்களாயின், நீங்கள் சேவை செய்திருக்கின்றீர்கள் என்பது புரிந்து கொள்ளப்பட முடியும். இதனாலேயே பாபா கூறுகின்றார்: அதிகளவு நீண்ட செய்தியை எழுதாதீர்கள், அதாவது இன்ன, இன்னார் வரவுள்ளார் என்றோ, அவர் இன்னதைச் சொன்னார் என்றோ எழுத வேண்டாம். அவற்றை எழுத வேண்டிய தேவையில்லை. நீங்கள் சுருக்கமாகவே எழுத வேண்டும். அவர் வரும்பொழுது அவர் தொடர்ந்தும் வருகின்றாரா எனப் பாருங்கள்! அவர் ஞானத்தைப் புரிந்து கொண்டு, சேவை செய்ய ஆரம்பித்த பின்னர், அதனை நீங்கள் பாபாவிற்கு எழுத முடியும். சிலர் பகட்டுக்காகச் செய்திகளை எழுதுகின்றார்கள். பாபா அனைத்தினதும் பெறுபேறுகளைப் பார்க்க விரும்புகின்றார். பலரும் பாபாவிடம் வருகின்றார்கள். ஆனால் பின்னர் விலகிச் சென்று விடுகின்றார்கள். அதில் என்ன நன்மை உள்ளது? அவர்களின் மூலம் பாபா என்ன செய்ய முடியும்? அவர்களும் நன்மை பெறுவதில்லை. நீங்களும் நன்மை அடைவதில்லை. அதன் மூலம் உங்கள் இறை பணியகமும் வளர்ச்சியடையாது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. எந்தச் சூழ்நிலையிலும் ஒருபொழுதும் உங்களை ஆதரவற்றவர் ஆக்கி விடாதீர்கள். நீங்கள் ஞானத்தைக் கிரகித்து, அதனைப் பிறருக்கும் தானம் செய்யுங்கள். நீங்கள் பிறரின் பாக்கியத்தையும் விழித்தெழச் செய்ய வேண்டும்.2. எவருடனும் பேசிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், உங்களை முதலில் ஓர் ஆத்மா எனக் கருதி, அதன்பின்னர் அந்த ஆத்மாவுடன் பேசுங்கள். சற்றேனும் சரீர உணர்வு இருக்கக் கூடாது. தந்தையிடம் நீங்கள் பெறுகின்ற எல்லையற்ற சந்தோஷத்தைப் பிறருக்கும் கொடுங்கள்.
ஆசீர்வாதம்:
புத்தியினதும் (தலை) இதயத்தினதும் சமநிலையை கொண்டிருந்து சேவை செய்வதன் மூலம் சதா வெற்றி சொரூபம் ஆகுவீர்;களாக.பல தடவைகள், குழந்தைகளாகிய நீங்கள் சேவையின் பொழுது புத்தியை (தலை) மாத்திரம் பயன்படுத்துகிறீர்கள், ஆனால் உங்கள் புத்தி மற்றும் இதயம் இரண்டையும் பயன்படுத்தும் போது, நீங்கள் செய்கின்ற சேவையில் நீங்கள் வெற்றி சொரூபம் ஆகுகிறீர்கள். தமது புத்தியை (தலை) மாத்திரம் பயன்படுத்தி சேவை செய்பவர்கள் தந்தையின் நினைவை சிறிதளவு நேரத்திற்கே கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைக்கிறார்கள்: ஆம், பாபாவே அனைத்தையும் என்னைக் கொண்டு செய்விக்கின்றார், ஆனால் சிறிது நேரத்தின் பின்னர், ~நான்| என்ற அதே உணர்வு வெளிப்படுகின்றது. தமது இதயத்தினால் சேவை செய்பவர்கள் சதா பாபாவின் நினைவை எப்பொழுதுமே தமது இதயங்களில் அமிழ்த்திக் கொண்டிருப்பதால், இதயத்தினால் சேவை செய்வதற்கான பலனை அவர்கள் நிச்சயமாகப் பெறுகிறார்கள். இரண்டினதும் சமநிலையை நீங்கள் கொண்டிருக்கும் போது, நீங்கள் சதா வெற்றி பெறுகிறீர்கள்.
சுலோகம்:
எல்லையற்றதில் நிலைத்திருப்பதனால், எந்தவொரு எல்லைக்கு உட்பட்ட சூழ்நிலையும் இயல்பாகவே முடிவடைகின்றது.