18.07.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே இந்தப் பழைய உலக மக்கள் கொண்டிருக்கின்ற எந்த ஆசைகளையும் நீங்கள் கொண்டிருக்கக் கூடாது, ஏனெனில் இந்த உலகம் அழிய உள்ளது.

கேள்வி:
எக்காலத்திற்குமான உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறுவதற்கு சங்கமயுகத்தில் நீங்கள் கொண்டிருக்க வேண்டிய ஆசை என்ன?

பதில்:
நான் தூய்மையாக வேண்டும், தந்தையை நினைவு செய்து அவரிடமிருந்து எனது முழுமையான ஆஸ்தியையும் கோரிக்கொள்ள வேண்டும். இந்த ஆசை ஒன்றையே வைத்திருங்கள். இவ் ஆசையின் மூலமே ஏனைய ஆசைகள் அனைத்தும் எக் காலத்திற்கும் பூர்த்தியாக்கப்படும். நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பீர்களாக. நீங்கள் ஒரு புத்திரனைக் கொண்டிருப்பீர்களாக. நீங்கள் செல்வந்தர் ஆகுவீர்களாக: சத்தியயுகத்திற்காக நீங்கள் இவ்வாறான ஆசீர்வாதங்கள் அனைத்தையும் பெறுகின்றீர்கள். உங்கள் ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாக்கப்படும்.

பாடல்:
நீங்களே தாயும் நீங்களே தந்தையும்.....

ஓம் சாந்தி.
பரமாத்மாவாகிய பரமதந்தை இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு அதாவது ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறார். எல்லையற்ற தந்தை எங்களை ஆசீர்வதிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த மக்கள் உங்களை ஆசீர்வதிக்கின்றார்கள்: நீங்கள் ஒரு மகனைக் கொண்டிருப்பீர்களாக. நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பீர்களாக. நீங்கள் செல்வந்தர் ஆகுவீர்களாக. தந்தை இப்பொழுது உங்களை ஆசீர்வதிக்கின்றார்: நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பீர்களாக. நீங்கள் மிக நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பீர்கள். அங்கு உங்களது மகனும் உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுப்பவராகவே இருப்பார். இங்கு குழந்தைகள் அனைவரும் துன்பத்தையே கொடுக்கின்றனர். சத்தியயுகத்தில் குழந்தைகள் அனைவரும் சந்தோஷத்தையே கொடுப்பார்கள். எல்லையற்ற தந்தை எல்லையற்ற சந்தோஷம் என்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். நாங்கள் உண்மையிலேயே நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகவும் அதிகளவு செல்வந்தர்களாகவும் ஆகுவோம். இப்பொழுது உங்கள் இதயங்களில் எவ்விதமான ஆசைகளையும் நீங்கள் கொண்டிருக்கக் கூடாது. உங்கள் அனைத்து ஆசைகளும் சத்தியயுகத்தில் நிறைவேற்றப்படும். இந்த நரகத்தில் நீங்கள் எந்த ஆசைகளையும் கொண்டிருக்கக் கூடாது. செல்வத்திற்கான எந்த ஆசையையும் கொண்டிராதீர்கள். நீங்கள் பெருஞ் செல்வத்திற்கான ஆசையையோ அல்லது வேலையில் உயர்ந்த பதவியைக் கொண்டிருப்பதற்கான ஆசையையோ நீங்கள் கொண்டிருக்கக் கூடாது. ஒருசில சப்பாத்திகளே வயிற்றுக்குத் தேவை. பேராசை இருக்கக் கூடாது. நீங்கள் அதிகளவு செல்வத்தைக் கொண்டிருந்தால் அவை அழிக்கப்படும். பாபா உங்களை சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்றார் என்பது குழந்தைகளகிய உங்களுக்குத் தெரியும். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: தானம் கொடுங்கள், அதன்மூலம் சகுனம் அகற்றப்படும். நீங்கள் எதனைத் தானம் செய்ய வேண்டும்? ஐந்து விகாரங்களையும் தானம் செய்யுங்கள். அவற்றைத் தானம் செய்வதன் மூலம் சகுனங்கள் அகற்றப்பட்டு நீங்கள் பதினாறு கலைகளும் நிறைந்தவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் இங்கு அனைத்து திவ்ய குணங்கள் நிறைந்தவர்களாகவும் பதினாறு கலைகள் நிறைந்தவர்களாகவும் ஆகவேண்டும். ஐந்து விகாரங்களும் தானம் செய்யப்பட வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுவதற்கான ஆசையைத் தவிர வேறெந்த ஆசையையும் கொண்டிராதீர்கள். மிகக் குறுகிய காலமே எஞ்சியுள்ளது. கூறப்பட்டுள்ளது: அதிகளவு நேரம் சென்றுவிட்டது, இப்பொழுது குறுகிய நேரமே எஞ்சியுள்ளது. இந்த விநாசத்திற்கு முன்னர் சிறிது நேரமே மீதமாய் உள்ளது. ஆகவே பழைய உலகில் எந்த ஆசையையும் கொண்டிராதீர்கள். தந்தையைத் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள். நினைவினூடாக குழந்தைகளாகிய நீங்கள் சதோபிரதான் ஆக வேண்டும். வெளியுலக மக்களைப் போல் எந்த ஆசைகளையும் நீங்கள் கொண்டிருக்கக் கூடாது. சிவபாபாவிடம் இருந்து சுவர்க்க ஆஸ்தியைக் கோரிக் கொள்வதற்கான ஆசையை மட்டும் கொண்டிருங்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். காமவாளை ஒருவர் மீது ஒருவர் பயன்படுத்துவதே அனைத்திலும் மிகப் பெரிய துன்பமாகும். இதனாலேயே சந்நியாசிகள் பெண்களிடம் இருந்து தாங்களாகவே விலகியிருக்கின்றனர். அவர்கள் கூறுகின்றனர்: அவர் அனைத்தையும் துறந்துவிட்டார். இராவண இராச்சியத்தில் ஆத்மாக்கள் அனைவரும் தூய்மை அற்றவர்களாகவும் பாவம் நிறைந்தவர்களாகவும் உள்ளனர். இப்பொழுது மிகக் குறுகிய காலமே எஞ்சியுள்ளது. நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றாது விட்டால் உங்களால் மேன்மையானவர்களாக முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் அனைவரிலும் பார்க்க அதி உயர்ந்தவர்களாக வேண்டும். இதனாலேயே சகுனம் அகற்றப்படுவதற்கு ஐந்து விகாரங்களும் தானம் செய்யப்பட வேண்டும். அனைவர் மீதும் தீய சகுனங்கள் உள்ளன. அனைவரும் முற்றாகவே அவலட்சணம் ஆகியுள்ளனர். தந்தை கூறுகிறார்: என்னிடமிருந்து உங்களது ஆஸ்தியை நீங்கள் கோர விரும்பினால் தூய்மை ஆகுங்கள். நீங்கள் துவாபரயுகத்தில் இருந்து தூய்மை அற்றவர்கள் ஆகியதுடன் சதோபிரதானில் இருந்து தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். இதனாலேயே நீங்கள் பாடுகிறீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! தந்தையின் கட்டளை: குழந்தைகளே மேலும் தூய்மை அற்றவர்கள் ஆகாதீர்கள். காமமாகிய கொடிய எதிரியை வெல்லுங்கள். இவ் விகாரத்தின் மூலம் நீங்கள் ஆரம்பத்தில் இருந்து மத்தியின் ஊடாக இறுதிவரை துன்பத்தையே பெற்றுள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் சுவர்க்கத்தில் முற்றிலும் தூய்மையானவர்களாக இருந்தீர்கள். நீங்கள் இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றியதனால் இப்பொழுது தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். இதனாலேயே நீங்கள் தேவர்களின் முன்னால் சென்று அவர்களது புகழைப் பாடுகின்றீர்கள்: நீங்கள் அனைத்துத் தெய்வீகக் குணங்கள் நிரம்பியவர்களும் பதினாறு சுவர்க்கக் கலைகள் நிரம்பியவர்களும் முற்றிலும் விகாரம் அற்றவர்களாகவும் இருக்கிறீர்கள், ஆனால் நாங்களோ விகாரம் உடையவர்கள் ஆவோம். விகாரம் அற்றவர்களாக ஆகுவதன் மூலம் சந்தோஷத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களை இப்போது விகாரங்கள் அற்றவர்களாக ஆக்குவதற்கு வந்துள்ளேன். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அனைத்து ஆசைகளையும் துறக்க வேண்டும். நீங்கள் உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யலாம். ஆனால் ஒருவருக்கொருவர் இந்த ஞான அமிர்தத்தைக் கொடுங்கள். கூறப்படுகின்றது: நான் ஏன் அமிர்தத்தைத் துறந்து நஞ்சைப் பருக வேண்டும்? தந்தை கூறுகின்றார்: எந்த ஆசைகளையும் கொண்டிராதீர்கள். நாம் நினைவு யாத்திரையின் மூலமே முற்றிலும் சதோபிரதான் ஆகுவோம். நினைவின் மூலம் மாத்திரமே 63 பிறவிகளாக நீங்கள் செய்த பாவங்கள் அழிக்கப்படும். இப்பொழுது விகாரம் அற்றவர்கள் ஆகுங்கள்! மாயையின் புயல்கள் வந்தாலும் தூய்மை அற்றவர்களாக ஆகாதீர்கள். மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுங்கள். பூஜிக்கத் தகுதிவாய்ந்த சதோபிரதான் தேவர்களாக இருந்த நீங்கள் பின்னர் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களில் இருந்து நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். நோய் அற்றவர்களாக இருந்த நீங்கள் பின் நோயாளிகள் ஆகினீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை நோயற்றவர்கள் ஆகவேண்டும். நீங்கள் விகாரம் அற்றவர்களாக இருந்த போது நீண்ட ஆயுளை கொண்டிருந்தீர்கள். ஆனால் இப்பொழுது மக்கள் எவ்விதக் காரணமும் இன்றித் திடீரென மரணம் அடைகின்றார்கள். எவ்வித ஆசைகளையும் கொண்டிராதீர்கள்! அந்த ஆசைகள் அனைத்தும் அழுக்கானவை. நீங்கள் முட்களில் இருந்து மலராக ஆகுகின்ற முதற் தரமான ஆசையையே கொண்டிருக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், அப்போது நீங்கள் தர்மாத்மாக்களாக ஆகுவீர்கள். இந் நேரத்தில் அனைவர் மீதும் தீய சகுனங்கள் உள்ளன. முழு பாரதமுமே அதன் மீது தீய சகுனங்களைக் கொண்டுள்ளது. அதன் பின்னர் குரு திசை (நல்ல சகுனம்) இருக்கும். உங்கள் மீது இப்பொழுது குருதிசை இருப்பதை நீங்கள் அறிவீர்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தது. சத்தியயுகத்தில் உங்கள் மீது குருதிசையை நீங்கள் கொண்டிருந்தீர்கள். இந்நேரத்தில் தீய சகுனமே (இராகு சகுனம்) உங்கள் மீது நிலவுகிறது. இப்பொழுது நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து குருதிசையைப் பெறுகின்றீர்கள். நீங்கள் குருதிசையைக் கொண்டிருக்கும் போது 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தைக் கொண்டிருக்கிறீர்கள். திரேதாயுகத்தில் வெள்ளிதிசை நிலவுகின்றது. நீங்கள் எவ்வளவு காலத்திற்குத் தந்தையை நினைவு செய்;கின்றீர்களோ அந்தளவிற்குக் குருதிசையைக் கொண்டிருப்பீர்கள். அனைவரும் இப்போது வீடு திரும்ப வேண்டும் எனவும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு நீங்கள் பறப்பதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகும் வகையில் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். மாயை உங்கள் இறக்கைகளைத் துண்டித்து விட்டாள். நீங்கள் இப்பொழுது சதா சந்தோஷம் உடையவர்கள் ஆகுவதற்கான கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் உலக இராச்சிய உரிமையைக் கோருகிறீர்கள். நீங்கள் கடவுளிடம் இருந்து வழிகாட்டல்களை பெறுகின்றீர்கள்: தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கை நோக்கி உங்களை இட்டுச்செல்லும்! நினைவின் மூலமாக உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். தூய ஆத்மாக்கள் மாத்திரமே சுவர்க்கத்திற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றார்கள். அங்கு நீங்கள் நீண்ட ஆயுளையும் நோயற்ற சரீரத்தையும் கொண்டிருப்பீர்கள். அத்துடன் நீங்கள் பெருமளவு செல்வத்தையும் கொண்டிருப்பீர்கள். அங்கு அவர்கள் எவரையும் தத்தெடுக்க மாட்டார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பீர்களாக! அத்துடன் நீங்கள் பெருமளவு செல்வத்தையும் கொண்டிருப்பீர்களாக! நீங்கள் நிச்சயமாக ஒரு புத்திரனையும் கொண்டிருப்பீர்கள். இந் நேரத்தில் தந்தை உங்கள் அனைவரையும் தத்தெடுக்கின்றார். அதன்பின் சத்தியயுகத்தில் எவரும் தத்து எடுக்கப்படுவதில்லை. அங்கு அவர்கள் யோக சக்தி மூலம் ஒரு மகனையும் ஒரு மகளையும் பெறுகிறார்கள். சிலர் கேட்கின்றனர்: அங்கு எவ்வாறு குழந்தைகள் பிறப்பார்கள்? அங்கு யோக சக்தி மாத்திரமே உள்ளது. அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சத்தியயுகத்தில் உள்ள அனைவரும் யோகிகள் ஆவர். ஸ்ரீகிருஷ்ணர் யோகேஸ்வர் என அழைக்கப்படுகின்றார். அதன் அர்த்தம் ஸ்ரீகிருஷ்ணர் யோகத்தில் இருக்கின்றார் என்பதல்ல. அவர் ஒரு முழுமையான தூயயோகி ஆவார். கடவுள் அனைவரையும் யோகேஸ்வர் ஆக்குகின்றார். எனவே அவர்கள் எதிர்காலத்தில் யோகிகளாக இருக்கின்றனர். தந்தை உங்களை யோகிகள் ஆக்கியுள்ளார். யோகிகள் நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளனர். ஆனால் போகிகளோ (புலன்களின் களிப்பில் ஈடுபடுபவர்கள்) குறுகிய ஆயுளைக் கொண்டுள்ளனர். கடவுள் குழந்தைகளாகிய உங்களைத் தூய்மையாக்கி உங்களுக்கு யோகத்தைக் கற்பித்து உங்களைத் தேவர்கள் ஆக்கியுள்ளார். அவர்கள் யோகிகள் என்று அழைக்கப்படுகின்றனர். யோகிகளும் ரிஷிகளும் தூய்மையானவர்கள். நீங்கள்; இராஜ ரிஷிகள் என உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் ஓர் இராஜரீக அந்தஸ்தைக் கோருவதற்காக இராஜயோகத்தைக் கற்கின்றீர்கள். இந் நேரத்தில் நீங்கள் தந்தையை நினைவு செய்யவேண்டும். ஒரு குழந்தை பெறுவதற்கான தவறான ஆசையை நீங்கள் கொண்டிருக்கக் கூடாது. அத்தகைய சந்தர்ப்பத்தில் நீங்கள் விகாரத்தில் ஈடுபட்டுக் காமவாளை உபயோகிக்க நேரிடும். சரீர உணர்வில் இருப்பவர்கள் காமவாளை உபயோகிக்கின்றார்கள். ஆத்ம உணர்வு உடையவர்கள் காம வாளை உபயோகிப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: தூய்மை ஆகுங்கள்! அவர் ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகின்றார். இப்பொழுது இக் காமவாளை உபயோகிக்காதீர்கள். தூய்மை ஆகுவதன் மூலம் உங்கள் அனைத்துத் துன்பங்களும் அகற்றப்படும். அவர் உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்றார். தந்தை உங்களுக்குப் பெருமளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றார்! நீங்கள் உங்கள் முழு ஆஸ்தியையும் தந்தையிடம் இருந்து கோரிக் கொள்ள வேண்டும். அவர் ஏழைகளின் பிரபு ஆவார். குசேலர் ஒரு கைப்பிடி அரிசியைக் கொடுத்துப் பதிலாக ஒரு மாளிகையைப் பெற்றுக் கொண்டதாக நினைவு கூரப்படுகின்றது. பாபா உங்களுக்கு 21 பிறவிகளிற்கான ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அனைவரும் வீடு திரும்ப வேண்டும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். எவரும் தாங்கள் விரும்பும் அளவிற்கு சிவபாபா மேற்கொள்ளும் ஸ்தாபனைப் பணியில் உதவலாம். வீட்டில் ஒரு பல்கலைக்கழகத்தையோ அல்லது வைத்திய சாலையையோ திறவுங்கள். ஒரு பெயர்ப்பலகையில் எழுதுங்கள்: சகோதர, சகோதரிகளே நீங்கள் 21 பிறவிகளிற்கு என்றும் ஆரோக்கியமாகவும் செல்வந்தராகவும் ஆக விரும்பினால் உள்ளே வந்து எப்படி அவ்வாறு ஆகுவது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்கு ஒரு விநாடியில் 21 பிறவிகளிற்கு சதா ஆரோக்கியமும் செல்வந்தராகவும் ஆகுவதற்கான பாதையினைக் காட்டுவோம். நீங்கள் சத்திரசிகிச்சை நிபுணர்கள் ஆவீர்கள். சத்திரசிகிச்சை நிபுணர்கள் நிச்சயமாக பெயர்ப்பலகையை வைத்திருப்பார்கள். அல்லாவிடின் எவ்வாறு மக்கள் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்? நீங்களும் உங்கள் வீட்டின் வெளியே ஒரு பெயர்ப் பலகையை வைக்கலாம். வருகின்ற எவருக்கும் இரண்டு தந்தையரது இரகசியத்தையும் விளங்கப்படுத்துங்கள்: நீங்கள் எல்லைக்கு உட்பட்ட தந்தையிடம் இருந்து ஓர் எல்லைக்கு உட்பட்ட ஆஸ்தியைப் பெற்றீர்கள். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுவீர்கள். கண்காட்சிகளில் எல்லாவற்றிற்கும் முதலில் இதையே புரொஜெக்டர்கள் மூலம் விளங்கப்படுத்துங்கள். இம் முயற்சியை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் இவ்வாறு ஆகுவீர்கள். இப்பொழுது சங்கமயுகமாகும். கலியுகம் சத்தியயுகமாக மாற வேண்டும். பாரத மக்களாகிய நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். நீங்கள் இப்போது தமோபிரதான் ஆகி விட்டீர்கள். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், அதன் மூலம் நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். இரு வார்த்தைகள் உள்ளன: அல்பாவை நினைவு செய்யுங்கள், இராச்சியம் உங்களுடையதாகும். இந் நினைவினாலேயே நீங்கள் சந்தோஷத்தில் நிலைத்திருப்பீர்கள். இந்த அழுக்கான உலகில் எவ்விதமான ஆசையையும் கொண்டிருக்காதீர்கள். இங்கு நீங்கள் மரணித்து வாழ்வதற்கான முயற்சியையே செய்கின்றீர்கள். ஒருவர் இறந்த பின்னர் இன்னார் சுவர்க்கவாசி ஆகினார் என மக்கள் கூறுகின்றார்கள். சுவர்க்கவாசி ஆகுவதற்கே நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள் என்பதை அனைவருக்கும் கூறுங்கள். நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தை அவரிடமிருந்து பெறுகின்றீர்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் ஒருபோதும் அழவோ அல்லது புலம்பவோ மாட்டீர்கள். மாயையின் புயல்கள் வரும். ஆயினும் அவற்றையிட்டுக் கவலைப்படாதீர்கள். மாயையின் புயல்கள் வரலாம். இது ஒரு போராட்டமாகும். நீங்கள் தீய அல்லது பாவமான எண்ணங்களைக் கொண்டிருந்தால் நீங்கள் நேரத்தை அநாவசியமாக வீணாக்குகின்றீர்கள். புயல்கள் கடந்து சென்றுவிடும். அவை என்றென்றும் நிலைத்திருக்கப் போவதில்லை. “நான் அதிகாலையில் எழுந்திருந்து தந்தையை நினைவு செய்து எனது ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து கோருகின்றேன்” என்ற அக்கறையினை நீங்கள் உங்களுக்குள் கொண்டிருங்கள். தந்தை உங்களுக்கு வேறு எந்தவொரு சிரமத்தினையும் கொடுப்பதில்லை. தந்தையை மாத்திரம் நினைவு செய்து ஏனைய அனைவரையும் மறந்து விடுங்கள். அனைவரும் ஏற்கனவே இறந்து விட்டார்கள். இவ் விடயங்களைப் பற்றி உங்களுக்கிடையே பேசுங்கள். “பாபா நான் இப்பொழுது உங்களை மாத்திரமே நினைவு செய்வேன். எனது சுவர்க்க ஆஸ்தியை உங்களிடம் இருந்து நான் கோரிக் கொள்வேன்” நேரத்தினை உருவாக்கிக் கொள்ளுங்கள். ‘நான் நிச்சயமாகக் காலையில் மூன்று அல்லது நான்கு மணிக்கு எழுந்திருந்து தந்தையை நினைவு செய்வேன். நான் சக்கரத்தையும் நினைவு செய்வேன்”. தந்தை எங்களுக்குப் படைப்பவரினதும் படைப்பினதும் ஞானத்தைக் கொடுத்துள்ளார். நாங்கள் மனித உலக விருட்சத்தினை அறிவோம். நாங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றோம் என்பது எங்கள் புத்தியில் உள்ளது. நாங்கள் இப்பொழுது வீட்டுக்குத் திரும்பிச் சென்று பின்னர் எங்கள் பாகங்களை நடிப்பதற்காகச் சுவர்க்கத்திற்கு வருவோம். நாங்கள் ஆத்மாக்கள். ஆத்மாவே ஓர் இராச்சியத்தைப் பெறுகின்றார். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் ஆஸ்திக்கான உரிமையைக் கோருகின்றீர்கள். இது இராஜயோகம் ஆகும். நீங்கள் தந்தையை நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையின் மூலமாக எண்ணற்ற தடவைகள் உலக அதிபதிகள் ஆகியுள்ளீர்கள். அதன்பின் நீங்கள் நரகவாசிகள் ஆகி இப்போது ஒரேயொரு தந்தையின் நினைவின் மூலம் நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுகின்றீர்கள். தந்தையின் நினைவின் மூலமே உங்கள் பாவங்கள் எரிக்கப்படும். இதனாலேயே அது யோக அக்கினி என அழைக்கப்படுகின்றது. பிராமணர்களாகிய நீங்கள் இராஜரிஷிகள் ஆவீர்கள். ரிஷிகள் எப்பொழுதும் தூய்மையானவர்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் இராச்சிய ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். விகாரத்தில் ஈடுபடுவதற்கான எந்த ஆசையையும் நீங்கள் இனியும் கொண்டிருக்கக்கூடாது. அது ஒரு தீய ஆசையாகும். நீங்கள் இப்பொழுது உங்கள் ஆஸ்தியை இந்த உலகிற்கு அப்பாற்பட்ட தந்தையிடம் இருந்து கோரிக் கொள்ள வேண்டும். நீங்கள் சுகயீனமுற்றிருக்கும் போதும் அவரை உங்களால் நினைவு செய்ய முடியும். தந்தை தனது குழந்தைகளை நேசிக்கின்றார். பாபா பல குழந்தைகளுக்குக் கடிதங்கள் எழுத வேண்டியுள்ளது. சிவபாபா அவற்றை அவரைக் கொண்டு எழுதுவிக்கின்றார். நீங்களும் கடிதங்கள் எழுதுகின்றீர்கள். சிவபாபா/ மேற்பார்த்து பிரம்மா. சிவபாபாவின் குழந்தைகளாகிய நாங்கள் அனைவரும் சகோதரர்கள். ஆன்மீகத் தந்தை வந்து எங்களைத் தூய்மை ஆக்குகின்றார். இதனாலேயே அவர் தூய்மை ஆக்குபவர் என்று அழைக்கப்படுகின்றார். அவர் அனைத்து ஆத்மாக்களையும் தூய்மை ஆக்குகின்றார். நான் எவரையும் தவறவிடுவதில்லை. சடப்பொருளுமே தூய்மை ஆகுகின்றது. சத்தியயுகத்தில் சடப்பொருளும் தூய்மையாக இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது சரீரங்களும் தூய்மை அற்றவையாகவே உள்ளன. எனவே மக்கள் தங்கள் சரீரங்களைக் கங்கையில் நீராட்டச் செல்கின்றனர். எப்படியாயினும் அந்த ஆத்மாக்கள் தூய்மை ஆகுவதில்லை. யோக அக்கினியின் மூலமே அவர்கள் தூய்மை ஆக்கப்பட முடியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த கலியுக உலகில் எவ்வகையான தவறான ஆசைகளையும் கொண்டிராதீர்கள். முழுமையாக சதோபிரதான் ஆகுவதற்கு கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்.

2. தூய்மையாகி வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்ற ஒரே ஆசையை மாத்திரமே கொண்டிருங்கள். உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்கிற்கு இட்டுச் செல்லும். ஆகவே மாயையின் புயல்களுடன் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
எல்லைக்கு உட்பட்ட விடங்களில் இருந்து விடுபட்டு உங்களுடைய சக்திமிக்க மனோபாவத்தினால் சதா எல்லையற்ற சேவை செய்வதில் மும்முரமாக இருப்பீர்களாக.

சக்கார்பாபா சேவை செய்வதைத் தவிர வேறு எதனையும் அவரால் பார்க்க முடியாதிருந்ததை போன்று அவ்வாறாகவே உங்கள் சக்திமிக்க மனோபாவத்தினால் குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற சேவை செய்வதில் மும்முரமாக இருக்க வேண்டும். அப்பொழுது எல்லைக்கு உட்பட்ட விடயங்கள் அனைத்தும் தானாகவே முடிவடையும். எல்லைக்கு உட்பட்ட விடயங்களுக்கு நேரம் கொடுப்பது என்றால் பொம்மைகளுடன் விளையாடுவதைப் போன்றதாகும். அதனால் உங்கள் நேரமும் சக்தியும் விரயமாகின்றது. எனவே நீங்கள் சேமித்திருக்கின்ற உங்கள் நேரத்தை அல்லது சக்தியை அற்பவிடயங்களில் வீணாக்காதீர்கள்.

சுலோகம்:
சேவையில் வெற்றியீட்ட உங்கள் வார்த்தைகள், நடத்தை மற்றும் செயல்கள் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்க வேண்டும்.

அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம் சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.

நேரத்திற்கு ஏற்ப பிராமணர்களாகிய நீங்கள் ஆத்மாக்களை நெருங்கச் செய்கின்ற அதேவேளையில் சூழலையும் ஒரு நெருப்பைப் போன்று சக்திமிக்கதாக ஆக்குகின்ற சேவையையும் தொடர்ந்தும் செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் உங்கள் மத்தியில் பத்திகள், ஆழமான கலந்துரையாடல்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் நீங்கள் தீவிரமான அன்பின் வடிவத்தை அனுபவம் செய்ய வேண்டும். அத்துடன் இந்த அனுபவத்தை பிறருக்கும் கொடுங்கள். இந்தச் சேவையைச் செய்வதில் மும்முரமாக இருக்கின்ற போது அனைத்து அற்பமான விடயங்களும் மாற்றம் அடையும்.