18.09.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் மலர்கள் ஆகும்பொழுது இந்த பாரதம் முட்காட்டிலிருந்து ஒரு முழுமையான மலர்த்தோட்டமாக மாறும். பாபா உங்களை மலர்கள் ஆக்கவே வந்துள்ளார்.

கேள்வி:
ஓர் ஆலயத்தில் வீற்றிருக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவதற்கு நீங்கள் எவ்விடயங்களில் விசேட கவனம் செலுத்த வேண்டும்?

பதில்:
ஓர் ஆலயத்தில் வீற்றிருப்பதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவதற்கு உங்கள் நடத்தையில் விசேட கவனம் செலுத்துங்கள். உங்கள் நடத்தை மிகவும் இனிமையானதாகவும் இராஜரீகமானதாகவும் இருக்க வேண்டும். மற்றவர்கள் உங்கள் இனிமையை உணரத்தக்க வகையில் அத்தகைய இனிமை இருக்க வேண்டும். பலருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். உங்களுக்கு நன்மை பயப்பதற்கு மிக நன்றாக முயற்சி செய்வதுடன் சேவையிலும் ஈடுபட்டிருங்கள்.

பாடல்:
உலகமே மாறினாலும் நாங்கள் ஒருபொழுதும் மாறமாட்டோம்.

ஓம் சாந்தி.
தந்தை, பிரம்மாவினூடாக எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்பதை ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் பிரம்மாவின் இரதத்தினூடாகத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார். நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றி இத்தூய்மையற்ற பாரத பூமியை மாற்றி, அதைத் தூய்மை ஆக்குவோம் என அவருக்குச் சத்தியம் செய்துள்ளோம். நாங்கள் குறிப்பாகப் பாரதத்தையும் பொதுவாக முழு உலகையும் தூய்மை அற்றதிலிருந்து தூய்மை ஆக்குவதற்கான பாதையை அனைவருக்கும் காட்டுவோம். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த அக்கறைகள் அனைத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நேரம் வரும்பொழுது நாடகத்தின்படி நீங்கள் மலர்கள் ஆகியதும் உங்கள் பூந்தோட்டம் முழுமையாகத் தயாராகும். பூந்தோட்டக்காரராகிய, பூந்தோட்டத்து அதிபதி அசரீரியானவரே அன்றி சரீரதாரியல்ல. பூந்தோட்டக்காரர் ஆத்மாவே அன்றி சரீரமல்ல. பூந்தோட்டத்து அதிபதி ஓர் ஆத்மா ஆவார். தந்தை நிச்சயமாக ஒரு சரீரத்தின் மூலமே விளங்கப்படுத்த வேண்டியுள்ளது. அவர் இச்சரீரத்தினுள் உள்ளபொழுதே பூந்தோட்டக்காரர் என்றும் பூந்தோட்டத்து அதிபதி என்றும் அழைக்கப்படுகின்றார். ஏனெனில் அவர் இவ்வுலகை ஒரு பூந்தோட்டமாக ஆக்குகின்றார். அந்தத் தேவர்கள் வசித்த பூந்தோட்டம் இருந்தது. அங்கு துன்பம் எதுவும் இருக்கவில்லை. இங்கு இந்த முட்காட்டிலேயே துன்பம் உள்ளது. இது முட்காடாகிய இராவண இராச்சியமாகும். எவரும் உடனடியாகவே ஒரு மலராக ஆகுவதில்லை. அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று பாடுகின்றார்கள்: நாங்கள் பிறவிபிறவியாகப் பாவிகளாக இருந்து வருகின்றோம். நாங்கள் அஜாமிலைப் (மகாபாவி) போன்றவர்கள். கடவுள் வந்து தங்களைப் புண்ணியாத்மாக்களாக ஆக்கவேண்டும் என அவர்கள் பிரார்த்திக்கின்றார்கள். தற்போது தாங்கள் பாவாத்மாக்கள் என்பதையும் ஏதோ ஒரு காலத்தில் தாங்கள் புண்ணியாத்மாக்களாக இருந்தார்கள் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்கின்றார்கள். இப்பொழுது இப்பழைய உலகில் புண்ணியாத்மாக்களின் உருவங்கள் மாத்திரமே உள்ளன. இராச்சியத் தலைவர்களின் உருவங்கள் உள்ளன. அசரீரியான சிவனே அவர்களை அவ்வாறு ஆக்கினார். வேறு எவரதுமன்றி அவர்களின் உருவங்கள் மாத்திரமே உள்ளன. பின்னர் அவர்கள் சிவனைக் குறிப்பதற்காக பெரிய லிங்கமொன்றையும் உருவாக்கினர். ஆத்மா ஒரு நட்சத்திரத்தைப் போன்றவர் என அவர்கள் கூறுகின்றனர். எனவே தந்தையும் நிச்சயமாக அவ்வாறே இருப்பார். எவ்வாறாயினும் அவர்கள் அவரை முழுமையாக இனங்கண்டு கொள்ளவில்லை. முழு உலகும் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது. மக்கள் இலக்ஷ்மி நாராயணனை அவதூறு செய்யும் வகையில் எங்கும் எதையும் எழுதுவதில்லை. எவ்வாறாயினும் சிலவேளைகளில் அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரைத் துவாபரயுகத்திலும் சிலவேளைகளில் வேறெங்காவதும் சித்தரிக்கின்றனர். இலக்ஷ்மியும் நாராயணனும் சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தார்கள் என அனைவரும் கூறுகின்றனர். இதுவே உங்களின் இலக்கும் குறிக்கோளும் ஆகும். இராதையும் கிருஷ்ணரும் யார்? அப்பாவி மக்கள் முழுமையாகக் குழப்பம் அடைந்துள்ளனர். அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. தந்தையிடம் இருந்து இதைப் புரிந்து கொள்வதற்கு வருபவர்களாலும் இதை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு முடியும். இல்லாவிடில் நீங்கள் அவர்களுக்கு எவ்வளவுதான் விளங்கப்படுத்தினாலும் அவர்களால் தகுதிவாய்ந்தவர்களாகவோ தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கவோ முடியாமல் இருக்கும். எவ்வாறாயினும் நாடகத்தின்படி அது அவ்வாறே நிகழ வேண்டும். நீங்கள் அனைவரும் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி உங்கள் சரீரங்கள், மனங்கள், செல்வம் மூலம் பாரதத்திற்கு ஆன்மீகச் சேவை செய்ய வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்களே புரிந்து கொள்ள முடியும். நீங்கள் எவ்வாறு பாரதத்திற்குச் சேவை செய்கின்றீர்கள் என உங்கள் கண்காட்சிகளுக்கும் அருங்காட்சியகங்களுக்கும் வருகின்ற மக்கள் உங்களைக் கேட்கின்றனர். நீங்கள் ஒரு காட்டைப் பூந்தோட்டம் ஆக்குவதால் பாரதத்திற்கு மிக நன்றாகச் சேவை செய்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். சத்தியயுகம் ஒரு பூந்தோட்டமாகும். இதுவோ அனைவரும் தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் துன்பம் விளைவிக்கின்ற முட்காடாகும். உங்களால் இதை மிக நன்றாக விளங்கப்படுத்த முடியும். நீங்கள் இலக்ஷ்மி நாராயணனின் மிகச்சிறந்த படமொன்றை உருவாக்க வேண்டும். அவர்களின் மிக அழகான படங்கள் உருவாக்கப்பட்டு ஆலயங்களில் காட்டப்படுகின்றன. சிலவேளைகளில் படங்கள் அழகானவையாகவும் சிலவேளைகளில் அவை கருநீல நிறமானவையாகவும் உள்ளன. ஆனால் மக்கள் அவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய உங்களிடம் இப்பொழுது இந்த ஞானம் முழுவதும் உள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் உங்கள் அனைவரையும் ஆலயத்தில் வீற்றிருக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குவதற்கே வந்துள்ளேன். எவ்வாறாயினும் அனைவருமே ஆலயத்தில் வீற்றிருக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகமாட்டார்கள். பிரஜைகள் ஆலயத்தில் வீற்றிருக்கத் தகுதி வாய்ந்தவர்கள் என்று அழைக்கப்படுவதில்லை. முயற்சி செய்து பெருமளவு சேவை செய்பவர்கள் மாத்திரமே பிரஜைகளைக் கொண்டிருப்பார்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஆன்மீகச் சமூக சேவையையும் செய்ய வேண்டும். இச்சேவையில் உங்கள் வாழ்க்கையைத் தகுதிவாய்ந்ததாக ஆக்குங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு இனிமையாக விளங்கப்படுத்தக்கூடிய வகையில் உங்கள் நடத்தை மிக இனிமையானதாகவும் அன்பானதாகவும் இருக்க வேண்டும். நீங்களே முள்ளாக இருந்தால் உங்களால் எவ்வாறு மற்றவர்களை மலர்களாக்க முடியும்? உங்கள் அம்பு இலக்கைத் தாக்க மாட்டாது. நீங்கள் தந்தையை நினைவு செய்யா விட்டால் எவ்வாறு அம்பு இலக்கைத் தாக்கும்? உங்களுக்கு நன்மை பயப்பதற்கு மிக நன்றாக முயற்சி செய்து சேவையிலும் ஈடுபட்டிருங்கள். தந்தை எப்பொழுதும் சேவையில் உள்ளார். குழந்தைகளாகிய நீங்களும் இரவுபகலாகச் சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக, பல குழந்தைகள் சிவஜெயந்தியன்று தந்திகளை அனுப்புகின்றார்கள் என பாபா விளங்கப்படுத்துகின்றார். அவற்றை வாசிக்கின்ற எவரும் சிவஜெயந்தியின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் நல்ல விளக்கமும் அதில் கொடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்திற்காக முயற்சி செய்யப்பட வேண்டும். பலரும் தந்தையின் அறிமுகத்தைப் பெறக்கூடிய வகையில் என்ன சேவை செய்யலாம் எனத் தீர்மானிப்பதற்காகக் கருத்தரங்குகளும் நடைபெறுகின்றன. தந்திகளுக்கான உதாரணங்கள் பல இங்கேயுள்ளன. நீங்கள் அவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். எழுதப்பட வேண்டிய முகவரி: சிவபாபா, மேஃபா பிரம்மா. பிரஜாபிதா பிரம்மாவும் (மக்களின் தந்தை) உள்ளார். அந்த ஒரேயொருவரே ஆன்மீகத் தந்தை ஆவார். இவர் பௌதீகத் தந்தை ஆவார். இவர் மூலமே பௌதீகமான படைப்பு படைக்கப்படுகின்றது. தந்தையே மனித உலகைப் படைப்பவர் ஆவார். அவர் எவ்வாறு படைப்பைப் படைக்கின்றார் என்பதை முழு உலகிலுமுள்ள எவருமே அறியமாட்டார்கள். தந்தை இப்பொழுது பிரம்மாவின் மூலமாகப் புதிய உலகைப் படைக்கின்றார். பிராமணர்களே உச்சிக்குடுமிகள். முதலில் பிராமணர்களே நிச்சயமாகத் தேவைப்படுகின்றனர். அவர்களே பிராமணர்கள், தேவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் அடங்கிய பல்வகை ரூபத்தின் உச்சிக்குடுமிகள். சூத்திரர்கள் முதலாவதாக இருக்க முடியாது. தந்தை, பிரம்மா மூலம் பிராமணர்களை உருவாக்குகின்றார். அவர் எவ்வாறு யார் மூலம் சூத்திரர்களை உருவாக்குவார்? புதிய படைப்பு எவ்வாறு படைக்;கப்படுகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இது தந்தை உங்களைத் தத்தெடுப்பதன் மூலம் செய்யப்படுகின்றது. தந்தை உங்களைச் சூத்திரர்களில் இருந்து பிராமணர்கள் ஆக்குவதற்காக ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றார். பின்னர் அவர் உங்களைப் பிராமணர்களில் இருந்து தேவர்களாக ஆக்குகின்றார். பிராமணர்களின் சேவை மிகவும் மேன்மையானது. அந்தப் பிராமணர்களே தூய்மை அற்றவர்களாக இருப்பதால் அவர்களால் எவ்வாறு வேறு எவரையும் தூய்மையாக்க முடியும்? ஒரு பிராமணப் புரோகிதர் ஒரு சந்நியாசிக்கு ராக்கி கட்டுவதில்லை. சந்நியாசி கூறுவார்: நான் எப்படியோ தூய்மையானவரே! முதலில் உங்கள் சொந்த முகத்தைப் பாருங்கள்! குழந்தைகளாகிய நீங்கள் வேறு எவரைக் கொண்டும் ராக்கி கட்டக்கூடாது. வெளியுலகில் அவர்கள் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டுகின்றனர். ஒரு சகோதரி தனது சகோதரனுக்கு ராக்கி கட்டுகின்ற சம்பிரதாயம் அண்மையிலேயே தோன்றியது. நீங்கள் இப்பொழுது சூத்திரர்களில் இருந்து பிராமணர்களாக மாறுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். ஆண்கள், பெண்கள் இருபாலாரும் தூய்மைக்கான சத்தியத்தைச் செய்கின்றார்கள் என நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் எவ்வாறு தாங்கள் தூய்மையாக இருக்கின்றார்கள் என இருபாலாரும் எடுத்துரைக்கலாம். நாங்கள் இறுதிவரை காம விகாரத்தை வெற்றிகொண்டு அதன் மூலம் தூய உலகின் அதிபதிகள் ஆகுவோம். சத்திய யுகமே இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்ற தூய உலகம் என அழைக்கப்படுகின்றது. நீங்கள் அனைவரும் தூய்மையானவர்கள். விகாரத்தினுள் வீழ்ந்தவர்களுக்கு ராக்கிகள் கட்ட முடியும். ஒருவர் சத்தியம் செய்த பின்னர் தூய்மை அற்றவராகினால் கூறப்படுகின்றது: நீங்கள் வந்து ராக்கி கட்டினீர்கள். எனவே என்ன நடந்தது? அவர் கூறுவார்: நான் மாயையால் தோற்கடிக்கப்பட்டேன். இது ஒரு யுத்தகளம். காமமே கொடிய எதிரி. இவ்விகாரத்தை வெற்றி கொள்வதனால் நீங்கள் உலகை வென்றவர்களாக, அதாவது, அரசர்களாகவும் அரசிகளாகவும் ஆகுகின்றீர்கள். பிரஜைகள் உலகை வென்றவர்கள் எனக் கூறப்படுவதில்லை. இப்பொழுது முயற்சி செய்பவர்களே அரசர்களாகவும் அரசிகளாகவும் ஆகுபவர்கள். சிலர் தாங்கள் இலக்ஷ்மி, நாராயணனைப் போன்று ஆகுவோம் எனக் கூறுகின்றனர். அத்தகையவர்கள் பின்னர் இராமர், சீதையாக ஆகுகின்றனர். இலக்ஷ்மி, நாராயணனின் குழந்தைகளே வந்து தங்களது சிம்மாசனத்தைக் கோருகின்றார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் பின்னர் தங்களது அடுத்த பிறவியில் சற்றுக் கீழே இறங்குவார்கள். அவர்களது குழந்தைகள் வேறொரு பெயருடனும் ரூபத்துடனும் சிம்மாசனத்தைப் பெறுகின்றார்கள். எனவே அவர்களது இலக்கம் (நிலை) உயர்ந்தது எனக் கூறப்படுகின்றது. அவர்கள் மறுபிறவி எடுக்கின்றனர். அவர்களது புதல்வர் சிம்மாசனத்தில் அமரும் பொழுது அவர்கள் இரண்டாம் தரத்தவர்கள் ஆகுகின்றனர். உயர்வாக இருந்தவர்கள் கீழிறங்குகின்றனர், தாழ்ந்த நிலையில் இருந்தவர்கள் உயர்ந்த நிலைக்கு வருகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் அந்தளவிற்கு மேன்மையானவர்களாக விரும்பினால் நீங்கள் சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். தூய்மை ஆகுவதே மிகவும் அத்தியாவசியமானது. தந்தை கூறுகிறார்: நான் உலகைத் தூய்மை ஆக்குகின்றேன். வெகு சிலரே நன்றாக முயற்சி செய்கின்றனர். எவ்வாறாயினும் முழு உலகமும் எப்படியோ தூய்மை ஆகுகின்றது. சுவர்க்கம் உங்களுக்காகவே ஸ்தாபிக்கப்படுகின்றது. இது நாடகத்தின்படி நடந்தாக வேண்டும். இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தூய்மையாகும் பொழுது விநாசம் ஆரம்பமாகி சத்தியயுகம் ஸ்தாபிக்கப்படும். உங்களால் நாடகத்தைப் புரிந்து கொள்ள இயலும். சத்தியயுகத்தில் தேவர்களின் இராச்சியம் இருந்தது. அது இப்பொழுது இல்லை, ஆனால் அது மீண்டும் இருக்கும். நீங்கள் ஆன்மீக இராணுவத்தினர். நீங்கள் ஐந்து விகாரங்களையும் வெற்றி கொள்வதனால் உலகையே வெற்றி கொள்ளப் போகின்றீர்கள். உங்களது பல பிறவிகளின் பாவங்களை அகற்றுவதற்கான வழிகளைத் தந்தை தொடர்ந்தும் உங்களுக்குக் காட்டுகின்றார். தந்தை உங்களுக்கு இந்த வழிமுறைகளைக் கூறுவதற்காக ஒருமுறை மாத்திரமே வருகின்றார். இராச்சியம் ஸ்தாபிக்கப்படும்வரை விநாசம் இடம்பெற மாட்டாது. போர்வீரர்களான நீங்கள் மறைமுகமானவர்கள். கலியுகத்தின் பின்னர் சத்தியயுகம் இருக்கும். சத்தியயுகத்தில் யுத்தம் எதுவும் இடம்பெற மாட்டாது. ஒவ்வோர் ஆத்மாவும் நடிக்கின்ற பாகம் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்கள் பொம்மைகளைப் போன்று தொடர்ந்தும் நடனம் ஆடுகின்றனர். இதுவும் நாடகமேயாகும். இந்நாடகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாகம் உள்ளது. நீங்கள் உங்களது பாகங்களை நடிக்கும் பொழுது தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது நீங்கள் மேலேறி சதோபிரதான் ஆகுகின்றீர்கள். இந்த ஞானம் ஒரு விநாடிக்கானதாகும். நீங்கள் சதோபிரதானாகி பின்னர் வீழ்ந்து தமோபிரதான் ஆகுகின்றீர்கள். பின்னர் தந்தை உங்களைத் திரும்பவும் உயர்த்துகின்றார். உண்மையில் அந்த நூலில் மீன்கள் தொங்குவதற்குப் பதிலாக (சிறுவர்களின் விளையாட்டுப் பொருளில்) மனிதர்களே அந்த நூலில் தொங்குவதாக இருக்க வேண்டும். கீழிறங்கும் ஸ்திதியும் மேலேறும் ஸ்திதியுமே அவ்வாறு காட்டப்படுகின்றது. நீங்களும்கூட மேலேறி பின்னர் படிப்படியாக கீழே இறங்குகின்றீர்கள். நீங்கள் மேலே சென்ற பின்னர் மீண்டும் கீழே இறங்குவதற்கு 5000 வருடங்கள் எடுக்கின்றன. இந்த 84 பிறவிகளின் சக்கரம் உங்கள் புத்தியில் உள்ளது. தந்தை உங்களுக்கு மேலேறும் ஸ்திதியினதும் கீழிறங்கும் ஸ்திதியினதும் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்தி உள்ளார். உங்கள் மத்தியிலும் வரிசைக்கிரமமாகவும் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்பவும் இதைப் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தையை நினைவு செய்பவர்கள் விரைவாகவே உயர்ந்து செல்வார்கள். இது இல்லறப் பாதையாகும். சிலவேளைகளில் அவர்கள் மூன்று கால் ஓட்டப் போட்டியை நடாத்துகின்றனர். அதில் ஒருவரின் ஒரு கால் இன்னொருவரின் ஒரு காலுடன் ஒன்றுசேர்த்துக் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் ஓடுகின்றனர். இதுவும் உங்களின் ஓட்டப்பந்தயமே ஆகும். ஒருவருக்கு அதைச் செய்கின்ற பயிற்சி இல்லாவிட்டால் அவர் வீழ்ந்து விடுகின்றார். இங்கும் அவ்வாறே ஆகும். ஒருவர் முன்னால் ஓடுகின்றார், மற்றவர் அவரை நிறுத்தி விடுகின்றார். சிலவேளைகளில் இருவருமே வீழ்ந்து விடுகின்றனர். பாபா வியப்படைகின்றார்! வயதானவர்களும் காமத்தீயால் பாதிக்கப்படுவதால் வீழ்ந்து விடுகின்றனர். எவரோ ஒருவர் உங்களை வீழ்த்திவிட்டார் என நீங்கள் கூற முடியாது. நீங்கள் விழுவதும் விழாமலிருப்பதும் உங்கள் கரங்களிலேயே உள்ளது. எவருமே உங்களைத் தள்ளவில்லை. எனவே நீங்கள் ஏன் விழவேண்டும்? நீங்கள் இவ்வாறு சிந்திக்க வேண்டும்: என்னதான் நிகழ்ந்தாலும் நான் விழவே மாட்டேன். நீங்கள் வீழ்ந்தால் அனைத்துமே பாழாகி விடுவதுடன் நீங்கள் மிகவும் பலமாகவும் அறையப்படுகின்றீர்கள். பின்னர் நீங்கள் வருந்துகின்றீர்கள். உங்கள் எலும்புகள் அனைத்தும் நொருங்கி விடுகின்றன. நீங்கள் அதிகளவு காயப்படுகின்றீர்கள். பாபா தொடர்ந்தும் பல்வேறு வழிகளிலும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். மக்கள் வாசித்தவுடனேயே விளங்கிக் கொள்ளத்தக்க வகையில் சிவஜெயந்தியில் அத்தகைய தந்திச் செய்திகள் அனுப்பப்பட வேண்டும் என உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஞானக்கடலைக் கடைவதற்காக பாபா உங்களுக்கு நேரம் வழங்குகின்றார். மக்கள் இவற்றைப் பார்க்கும் பொழுது வியப்படைவார்கள். பாபாவிற்குப் பல்வேறு கடிதங்கள் வருகின்றன. அவை அனைத்திலும் “பாப்தாதா” என எழுதப்பட்டுள்ளது. சிவபாபாவே பாபா எனவும் பிரம்மாவே தாதா எனவும் நீங்கள் விளங்கப்படுத்த முடியும். ஓர் ஆத்மா மாத்திரம் பாப்தாதா என அழைக்கப்பட முடியுமா? இது அற்புதமான ஒன்றாகும்! இது உண்மையான ஞானத்தை உள்ளடக்கி உள்ளது (இணைந்த ரூபம்). எவ்வாறாயினும் நீங்கள் நினைவில் நிலைத்திருக்கும் பொழுது மாத்திரமே அம்பு ஒருவரைத் தாக்க முடியும். சிலர் மிக விரைவிலேயே சரீர உணர்வு உடையவர்கள் ஆகுகின்றனர். தந்தை கூறுகின்றார்: ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! ஆத்மாக்களே சரீரங்களைப் பெற்று தங்கள் பாகங்களை நடிக்கின்றனர். ஒருவர் மரணித்தால் நீங்கள் அதையிட்டு எந்த எண்ணங்களையும் கொண்டிருக்கக் கூடாது. அந்த ஆத்மாவிற்காக நிச்சயிக்கப்பட்ட பாகத்தை நாங்கள் பற்றற்ற பார்வையாளர்களாக அவதானிக்கின்றோம். அந்த ஆத்மா தனது சரீரத்தை நீக்கி தனது பாகத்தை நடிப்பதற்காக வேறொன்றை எடுக்க வேண்டும். அதனையிட்டு நாங்கள் என்ன செய்ய முடியும்? உங்கள் புத்தியில் இந்த ஞானம் உள்ளது. இதுவும் வரிசைக்கிரமமே ஆகும். சிலரின் புத்தியில் அது நிலைத்திருப்பதில்லை. இதனாலேயே அவர்களால் எவருக்கும் விளங்கப்படுத்த முடியாமல் உள்ளது. அத்தகைய ஆத்மாக்கள் சூடான கம்பியைப் போன்று முற்றிலும் தூய்மை அற்றவர்களாகவும் சீரழிந்தவர்களாகவும் ஆகுகின்றனர். அத்தகைய ஆத்மாக்களுக்கு இந்த ஞானாமிர்தம் வழங்கப்படும் பொழுது அது அவர்களில் நிலைத்து நிற்;காது. பெருமளவு பக்தி செய்துள்ளவர்களை மாத்திரமே அம்பு ஊடுருவிச் செல்லும். அவர்களால் இதை விரைவாகவே கிரகிக்க முடியும். இது ஓர் அற்புதமான கணக்காகும். முதல் இலக்கத் தூய ஆத்மா, பின்னர் அதி தூய்மையற்றவர் ஆகுகின்றார். இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அது அவர்களின் பாக்கியத்தில் இல்லா விட்டால் அவர்கள் கற்பதை நிறுத்தி விடுகின்றார்கள். அவர்கள் குழந்தைப் பராயத்திலிருந்தே இந்த ஞானத்தில் ஈடுபாடு கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தொடர்ந்தும் அனைத்தையும் கிரகிக்கின்றார்கள். அவர்கள் பெருமளவு பக்தி செய்துள்ளார்கள் என்பதும் அவர்கள் மிகவும் புத்திசாலிகளாக ஆகுவார்கள் என்பதும் பின்னர் புரிந்து கொள்ளப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் வளரும்பொழுது அவர்களது புலனங்கங்களும் வளர்ந்து அவர்களால் அதிகம் புரிந்துகொள்ள முடியும். பௌதீகம், ஆன்மீகம் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துவதனால் எந்த (எதிர்மறையான) விளைவும் அகற்றப்படுகின்றது. இது கடவுளின் கல்வியாகும். இதில் வேறுபாடு உள்ளது. எவ்வாறாயினும் முதலில் அந்த ஆழமான அன்பு இருக்க வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஆன்மீக இராணுவமாகி ஐந்து விகாரங்களையும் வெற்றிகொண்டு, நிச்சயமாகத் தூய்மை ஆகுங்கள். ஸ்ரீமத்திற்கேற்ப பாரதத்தைத் தூய்மை ஆக்குவதற்கு சேவை செய்யுங்கள்.

2. ஆத்ம உணர்வில் இருந்தவாறு இந்த எல்லையற்ற நாடகத்தில் ஒவ்வொரு பாகத்தையும் நடியுங்கள். ஒருபொழுதும் சரீர உணர்வுடையவர் ஆகாதீர்கள். ஒரு பற்றற்ற பார்வையாளராகி ஒவ்வொரு நடிகரினதும் பாகத்தை அவதானியுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா ஒன்றிணைந்த ரூபத்தை அனுபவம் செய்து அதனால் சந்தோஷம் மற்றும் களிப்பான ஸ்திதியில் இருப்பீர்களாக.

பாப்தாதா எப்போதும் குழந்தைகளான உங்களுக்குக் கூறுகிறார்: குழந்தைகளே, தந்தையின் கையோடு உங்களின் கைகோர்த்து நடவுங்கள். தனித்து நடக்காதீர்கள். தனியே நடப்பதன் மூலம் நீங்கள் சிலவேளைகளில் சலிப்படைந்து விடலாம். சிலவேளைகளில் யாராவது ஒருவரின் பார்வை உங்களின் மீது விழக்கூடும். தொடர்ந்து தந்தையுடன் ஒன்றிணைந்திருக்கும் ரூபத்தை அனுபவம் செய்யுங்கள். அப்போது மாயையின் பார்வை ஒருபோதும் உங்களின் மீது விழாது. அவரின் சகவாசத்தை அனுபவம் செய்வதனால் நீங்கள் தொடர்ந்து சந்தோஷத்துடனும் களிப்புடனும் உண்பீர்கள். அத்துடன் நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடுவீர்கள். உங்களை ஏமாற்றுதல் மற்றும் துன்பத்தில் சிறைப்படுத்தக்கூடிய உறவுமுறைகளில் இருந்தும் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
நீங்கள் சதா உங்களின் யோகம் என்ற கவசத்தை அணிந்திருக்கும்போது உங்களின் எதிரியான மாயையின் எந்தவிதமான தாக்குதலாலும் காயம் அடைய மாட்டீர்கள்.

அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி உங்கள் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.

சந்தோஷம் இல்லாதிருக்கும் ஆத்மாக்களின் மனங்களில் இப்போது விநாசம் இடம்பெற வேண்டும் என்ற ஒலி வெளிப்பட ஆரம்பித்துள்ளது. அதேபோல் ஆத்மாக்கள் எல்லோரும் இப்போது விரைவில் நன்மை பெற வேண்டும் என்ற எண்ணம் உலக உபகாரி ஆத்மாக்களான உங்களிடம் இருந்து வெளிப்பட வேண்டும். அப்போது மட்டுமே நிறைவு ஏற்படும். விநாசத்தை ஏற்படுத்துபவர்கள், உபகாரி ஆத்மாக்களான உங்களின் எண்ணங்களின் ஊடாக ஒரு சமிக்கையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஆகவே உங்களின் சக்திவாய்ந்த எண்ணங்களால் என்றும் தயாராகி உங்களின் எரிமலை யோகத்தால் விநாச நெருப்பைத் தீவிரமாக எரியச் செய்யுங்கள்.