18.11.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே நீங்கள் மாத்திரமே உண்மையான, தனித்துவமான மந்திரவாதிகள். நீங்கள் மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்ற மாயாஜாலத்தைச் செய்ய வேண்டும்.

கேள்வி:
சிறந்த முயற்சி செய்யும் மாணவர்களின் அறிகுறிகள் யாவை?

பதில்:
அவர்கள் திறமைச்சித்தி எய்துகின்ற அதாவது, வெற்றிமாலையில் வருவதற்கான இலக்கினைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமது புத்தியில் தந்தையொருவரின் நினைவை மாத்திரமே கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமது புத்தியின் யோகத்தைத் தமது சொந்தச் சரீரங்கள் உட்பட சகல சரீர உறவினர்களிடம் இருந்தும் துண்டித்து ஒரேயொருவரிடம் மாத்திரம் அன்பு செலுத்துகின்றார்கள். அத்தகைய முயற்சியாளர்கள் மாத்திரமே மாலையின் மணிகள் ஆகுகின்றார்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது மந்திரவாதிகளாகி விட்டீர்கள். ஆகவே தந்தையும் மந்திரவாதி என்றழைக்கப்படுகிறார். மனிதர்களைத் தேவர்களாக மாற்றக்கூடிய வேறு மந்திரவாதிகள் எவரும் கிடையாது. இது மாயாஜாலம் அல்லவா? நீங்கள் பாரியளவு வருமானத்தைச் சம்பாதிப்பதற்கான பாதையைக் காட்டுகிறீர்கள். பாடசாலை ஆசிரியர்கள் எவ்வாறு ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பது என உங்களுக்குக் காண்பிக்கிறார்கள். இந்தக் கல்வியும் ஒரு வருமானமே ஆகும். பக்தி மார்க்கத்தில் உள்ள கதைகளையும் சமயநூல்களையும் கல்வி என்றழைக்க முடியாது. அதில் வருமானம் இருப்பதில்லை; அங்கு செலவு மட்டுமே ஏற்படுகிறது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் பக்தி மார்க்கத்தில் படங்களைச் செய்வதற்கும் ஆலயங்களைக் கட்டுவதற்கும் வழிபடுவதற்கும் அதிகளவைச் செலவழித்தீர்கள். ஓர் ஆசிரியர் குறைந்தபட்சம் உங்களை ஓர் வருமானத்தைச் சம்பாதிக்கும்படி செய்கின்றார்; அங்கு ஜீவனோபாயம் இருக்கும். குழந்தைகளாகிய உங்களுடைய கல்வி மிக மேன்மையானது. நீங்கள் அனைவரும் கற்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மனிதர்களைத் தேவர்கள் ஆக்குகிறீர்கள். ஏனைய கல்விகள் மூலம் உங்களால் சட்டத்தரணி போன்றோராக முடியும். அது ஒரு பிறவிக்கு மட்டுமே ஆகும். இங்கு பகலிற்கும் இரவிற்கும் இடையிலான வேறுபாடு இருக்கின்றது. இதனாலேயே ஆத்மாக்களாகிய நீங்கள் தூய போதையைக் கொண்டிருக்க வேண்டும். இது மறைமுகமான போதையாகும். இது எல்லையற்ற தந்தையின் அற்புதம். இது அத்தகைய ஆன்மீக மாயாஜாலம்! நீங்கள் பரமாத்மாவை நினைவு செய்வதன் மூலம் சதோபிரதானாக வேண்டும். “உங்களை ஓர் எருதாகக் கருதிக் கொள்ளுங்கள்” என ஒருவரிடம் ஒரு சந்நியாசி கூறினார். பின்னர் அந்நபர் சென்று ஒரு சிறிய அறையில் அமர்ந்திருந்து தன்னை அவ்வாறு கருதினார். பின்னர் “நான் ஓர் எருது எவ்வாறு என்னால் இங்கிருந்து வெளியேற முடியும்?” என அவர் கூறினார். தந்தை கூறுகிறார்: நீங்கள் தூய்மையான ஆத்மாக்களாக இருந்தீர்கள். ஆனால் நீங்கள் இப்போது தூய்மை அற்றவர்களாகி விட்டீர்கள். இப்போது தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். இந்த ஞானத்தைச் செவிமடுப்பதன் மூலம் நீங்கள் சாதாரண மனிதரில் இருந்து நாராயணனாக மாறுகிறீர்கள். அதாவது மனிதனிலிருந்து தேவராக மாறுகிறீர்கள். தேவ இராச்சியம் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் இப்போது பாரதத்தில் தேவ இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள். தந்தை கேட்கிறார்: நான் உங்களுக்கு வழங்குகின்ற ஸ்ரீமத் சரியானதா அல்லது சமயநூல்களின் வழிகாட்டல்கள் சரியானவையா? நீங்களே தீர்மானியுங்கள்! கீதையானது சகல சமயநூல்களினதும் இரத்தினமான ஸ்ரீமத் பகவத்கீதை எனப்படுகிறது. அது குறிப்பாக எழுதப்பட்டுள்ளது. இப்போது கடவுள் என அழைக்கப்படுபவர் யார்? அது அசரீரியான சிவனே என நீங்கள் அனைவரும் நிச்சயமாகக் கூறுவீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்களான அவருடைய குழந்தைகள். அவரே ஒரேயொரு தந்தையாவார். தந்தை கூறுகிறார்: நீங்கள் அனைவரும் காதலிகள். நீங்கள் அதியன்பிற்கினியவரான என்னை நினைவு செய்கிறீர்கள். ஏனெனில் நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தேன், அதனூடாக நீங்கள் நடைமுறையில் மனிதர்களிலிருந்து நாராயணனாக மாறினீர்கள். அவர்கள் சத்திய நாராயணனின் கதையைச் செவிமடுப்பதாகக் கூறுகிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் மனிதர்களிலிருந்து நாராயணனாக முடியும் என்பதை அவர்கள் நம்புவதில்லை. தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கு இந்த ஞானம் எனும் மூன்றாவது கண்ணை வழங்குகிறார், அதனூடாக நீங்கள் ஆத்மாக்களைப் பற்றி அறிந்துகொள்கிறீர்கள். சரீரம் இன்றி ஆத்மாவால் பேச முடியாது. ஆத்மாக்களின் வசிப்பிடம் நிர்வாணா தாமம் என்றழைக்கப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அமைதி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்ய வேண்டும். உங்களுடைய புத்திகளிலிருந்து துன்ப தாமத்தை நீக்குங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்போது எது சரி, எது பிழை என்ற புரிந்துணர்வினைப் பெற்று விட்டீர்கள். செயல்கள், நடுநிலையான செயல்கள், பாவகரமான செயல்களின் அர்த்தமும் இப்போது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இந்த விடயங்களைப் புரிந்து கொள்கிறீர்கள். வேறு எந்த மனிதர்களுக்கும் தந்தையைத் தெரியாது. தந்தை கூறுகிறார்: இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. இராவண இராச்சியத்தில் அனைவரது செயல்களும் பாவகரமானவை. சத்தியயுகத்தில் சகல செயல்களும் நடுநிலையானவை. “அங்கு குழந்தைகள் எவரும் பிறக்க மாட்டார்களா?” எனச் சிலர் கேட்கின்றார்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: அது விகாரமற்ற உலகம் என்றழைக்கப்படுகிறது. எனவே ஐந்து விகாரங்களும் எங்கிருந்து வரும்? இது மிகவும் எளிமையான விடயம். தந்தை இங்கிருந்து அதனை விளங்கப்படுத்துகிறார். எனவே இதனை மிக விரைவாகச் சரியெனப் புரிந்துகொள்பவர்கள் மிகவும் விழிப்பானவர்கள் ஆகுகிறார்கள். இதனைப் புரிந்து கொள்ளாதவர்கள் முன்னேறும்போது புரிந்துகொள்வார்கள். விட்டிற்பூச்சிகள் சுவாலையை நோக்கி வந்து அதனை விட்டு நீங்கிப் பின் மீண்டும் திரும்பி வருகின்றன. அந்த ஒரேயொருவரே சுவாலை. அனைவரும் சுவாலையில் எரியப் போகிறார்கள். இது ஒரு விளக்கம் மாத்திரமே; அங்கு சுவாலை இருக்காது. அது பொதுவான விடயமாகும். பல விட்டிற்பூச்சிகள் சுவாலையில் எரிந்து போகின்றன. தீபாவளியின்போது பல சிறிய பூச்சிகள் வெளிப்பட்டு எரிந்து போகின்றன. அவை பிறந்து இறந்து விடுகின்றன. தந்தை விளங்கப்படுத்துகிறார்: அவர்கள் இறுதியில் வந்து பிறந்து மீண்டும் இறந்து விடுகிறார்கள். அவர்கள் பூச்சிகள் போன்றிருக்கிறார்கள். தந்தை உங்களுக்கு உங்களுடைய ஆஸ்தியை வழங்குவதற்காக வந்து விட்டார். எனவே நீங்கள் திறமைச்சித்தி எய்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நல்ல மாணவர்கள் பெரும் முயற்சி செய்கிறார்கள். இந்த மாலை திறமைச்சித்தி எய்தியவர்களின் மாலையாகும். தொடர்ந்தும் சாத்தியமான அளவிற்கு அதிக முயற்சி செய்யுங்கள். விநாச வேளையில் அன்பான புத்தியைக் கொண்டிராதவர்கள் உள்ளனர் எனக் கூறப்படுகிறது. உங்களால் இதனை விளங்கப்படுத்த முடியும். எங்கள் புத்திகள் தந்தை மீது அன்பு கொண்டவை. நாங்கள் வேறு எவரையும் அன்றி தந்தையையே நினைவு செய்கின்றோம். தந்தை கூறுகிறார்: உங்களுடைய சரீரங்கள், மற்றும் உங்கள் சகல சரீர உறவினர்களையும் துறந்து சதா என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் என்னை அதிகளவு நினைவு செய்து “ஓ துன்பத்தை நீக்குபவரே! சந்தோஷத்தை அருள்பவரே!” எனக் கூறி வந்தீர்கள். எனவே தந்தை நிச்சயமாகச் சந்தோஷத்தை அருள்பவர். சுவர்க்கம் சந்தோஷ தாமம் என அழைக்கப்படுகிறது. தந்தை கூறுகிறார்: நான் உங்களைத் தூய்மையாக்குவதற்கு வந்து விட்டேன். காமச்சிதையில் அமர்ந்ததனால் எரிந்து போய் விட்ட குழந்தைகள் மீது நான் வந்து, இந்த ஞான மழையைப் பொழிகின்றேன். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு யோகம் கற்பிக்கிறேன். தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் தேவதைகளின் தாமத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள். நீங்கள் மந்திரவாதிகளும் ஆவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய உண்மையான மாயாஜாலத்தை இட்டுப் போதை கொள்ள வேண்டும். சில மந்திரவாதிகள் மிகவும் நல்லவர்கள், அத்துடன் திறமைசாலிகள்; அவர்களால் பல பொருட்களைத் தோன்றச் செய்ய முடியும். எவ்வாறாயினும் இந்த மாயாஜாலம் தனித்துவமானது. வேறு எவராலுமன்றி ஒரேயொருவராலேயே அதனைக் கற்பிக்க முடியும். நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். இந்தக் கற்பித்தல்கள் புதிய உலகிற்கானவை. அது புதிய உலகமாகிய சத்திய யுகம் என்றழைக்கப்படுகிறது. நீங்கள் இப்போது சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள். எவருக்கும் அதி மேன்மையான சங்கம யுகத்தைப் பற்றித் தெரியாது. நீங்கள் அத்தகைய மேன்மையான மனிதர்கள் ஆகுகிறீர்கள். தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகிறார். பிராமண ஆசிரியர்களான நீங்கள் வகுப்பை எடுக்கும்போது முதலில் அனைவரையும் எச்சரிப்பது உங்களுடைய கடமையாகும். அவர்களுக்குக் கூறுங்கள்: சகோதர சகோதரிகளே, இங்கு உங்களை ஆத்மாக்களாகக் கருதியவாறு அமர்ந்திருங்கள். இந்த ஆத்மாவாகிய நான் இந்த அங்கங்களினூடாகச் செவிமடுக்கிறேன். தந்தை உங்களுக்கு 84 பிறவிகளின் இரகசியத்தையும் விளங்கப்படுத்தி இருக்கின்றார். எந்த மனிதர்கள் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள்? அனைவரும் அவ்வாறு எடுப்பதில்லை. எவரும் இதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அவர்கள் தாங்கள் செவிமடுக்கின்ற அனைத்திற்கும் ‘அது உண்மைதான்’ எனக் கூறுகிறார்கள். அனுமான் காற்றிலிருந்து தோன்றியதாக யாராவதொருவர் கூறினால் ‘அது உண்மை!’ என அவர்கள் கூறுகின்றனர். அதன்பின்னர் அவர்கள் மற்றவர்களுக்குத் தொடர்ந்தும் அத்தகைய கதைகளைக் கூறும்போது அதைச் செவிமடுப்பவர்களும் ‘அது உண்மைதான்! அது உண்மைதான்!’ எனக் கூறுகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் எது சரி, எது பிழை எனப் புரிந்து கொள்வதற்கு உதவுகின்ற இந்த ஞானக் கண்ணை இப்போது பெற்று விட்டீர்கள். அதனால் நீங்கள் சரியான செயல்களை மாத்திரமே செய்ய வேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து இந்த ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். அந்தத் தந்தையே சகல ஆத்மாக்களுக்கும் தந்தையாவார். ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தந்தை கூறுகிறார்: இப்போது என்னை நினைவு செய்யுங்கள்! உங்களை ஆத்மாவாகக் கருதுங்கள்! ஒவ்வோர் ஆத்மாவிலும் சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. ஆத்மாக்கள் தங்கள் சம்ஸ்காரங்களைத் தங்களுடன் எடுத்துச் செல்வார்கள். குழந்தைப் பருவத்தில் ஒருவரின் பெயர் போற்றப்படும்போது அவர் தனது முன்னைய பிறவியில் இத்தகைய செயல்களைச் செய்தார் என்று புரிந்து கொள்ளப்படுகின்றது. ஒருவர் தனது முன்னைய பிறவியில் கல்லூரி ஒன்றைக் கட்டியிருந்தால் தனது தற்பேதைய பிறவியில் நல்ல கல்வியைப் பெற்றுக் கொள்வார். செயல்களின் அந்தக் கர்மக்கணக்கு இருக்கின்றது. சத்தியயுகத்தில் பாவச் செயல்களைப் பற்றிய கேள்வி எதுவும் கிடையாது. நீங்கள் நிச்சயமாக அங்கு செயல்களைச் செய்கிறீர்கள். நீங்கள் அங்கு ஆட்சி செய்கிறீர்கள், அங்கு உண்கிறீர்கள். ஆனால் நீங்கள் எந்தவிதமான தவறான செயல்களையும் அங்கு செய்வதில்லை. அது இராம இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. இது இராவண இராச்சியமாகும். நீங்கள் இப்போது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் இராம இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள். அது புதிய உலகமாகும். பழைய உலகில் தேவர்களின் நிழல் கூடப் படிய முடியாது. நீங்கள் இங்கு இலக்ஷ்மியின் விக்கிரகத்தை வைத்தால் அதன் நிழல் காணப்படும். ஆனால் உயிர்வாழும் இலக்ஷ்மியின் நிழல் இருக்காது. அனைவரும் மறுபிறவி எடுக்க வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீர்ச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது; உங்களுடைய இந்தச் சக்கரமும் தொடர்ந்தும் சுழல்கிறது. இந்த விடயங்கள் உதாரணங்களை உபயோகித்து விளங்கப்படுத்தப்படுகின்றன. தூய்மையே அதிசிறந்த விடயம். குமாரி ஒருவர் தூய்மையானவராக இருப்பதனால் அனைவரும் அவருக்குத் தலைவணங்குகிறார்கள். நீங்கள் பிரஜாபிதா பிரம்மாகுமாரர்களும் குமாரிகளும் ஆவீர்கள். உங்களிற் பெரும்பாலானோர் குமாரிகள். இதனாலேயே அம்புகள் குமாரிகளால் எய்யப்பட்டதாக நினைவுகூரப்படுகிறது. அந்த அம்புகள் இந்த ஞான அம்புகளாகும். நீங்கள் அமர்ந்திருந்து அவர்களுக்குப் பெரும் அன்புடன் விளங்கப்படுத்துகிறீர்கள். சற்குருவான தந்தை ஒரேயொருவரே. அவர் அனைவருக்கும் சற்கதியை அருள்கிறார். ‘மன்மனாபவ!’ எனக் கடவுள் கூறுகிறார். இதுவும் ஒரு மந்திரமே. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்வதற்கு முயற்சி தேவை. இந்த முயற்சி மறைமுகமானது. ஆத்மாக்கள் தமோபிரதானாகி விட்டார்கள், அவர்கள் மீண்டும் ஒருமுறை சதோபிரதானாக வேண்டும். ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்ட காலம் பிரிந்திருந்தார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தியிருக்கின்றார். முதலில் பிரிந்தவர்களே அவரை முதலில் சந்திக்கிறார்கள். இதனாலேயே ‘அதியன்பிற்கினிய நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளே’ எனத் தந்தை கூறுகிறார். நீங்கள் எப்போது பூஜிக்க ஆரம்பித்தீர்கள் என்பதைத் தந்தை அறிவார். அது அரைக்கு அரைவாசிக் காலமாகும். அரைக் கல்பத்திற்கு இந்த ஞானமும் அரைக் கல்பத்திற்கு வழிபாடும் இருக்கின்றன. இரவும் பகலும் இருந்தன. 24 மணிநேரத்தில், 12 மணிநேரம் முற்பகலும் 12 மணிநேரம் பிற்பகலும் ஆகும். சக்கரமும் அரையரைவாசியே ஆகும். பிரம்மாவின் பகலும் பிரம்மாவின் இரவும் இருக்கின்றன. அவ்வாறாயின் அவர்கள் ஏன் கலியுகத்திற்கு இவ்வளவு நீண்ட ஆயுட் காலப்பகுதியை வழங்கியுள்ளனர்? எது சரி, எது பிழை என்பதை இப்போது நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. கடவுள் வந்து பக்திக்கான பலனை வழங்குகிறார். அவர் பக்தர்களின் பாதுகாவலர் என்றழைக்கப்படுகிறார். நீங்கள் மேற்கொண்டு முன்னேறுகையில் சந்நியாசிகளுடன் அமர்ந்திருந்து அவர்களுக்குப் பெரும் அன்புடன் விளங்கப்படுத்துவீர்கள். நீங்கள் அவர்களை நிரப்புமாறு கொடுக்கின்ற படிவத்தினை அவர்கள் நிரப்ப மாட்டார்கள். அவர்கள் தங்கள் தாய், தந்தையின் பெயரை எழுத மாட்டார்கள். சிலர் இவ்வாறு செய்யலாம். பாபா அவர்களிடம் சென்று அவர்கள் ஏன் அனைத்தையும் துறந்தார்கள் எனக் கேட்பதுண்டு. அவர்கள் விகாரங்களையும் அத்துடன் அவர்களது இல்லறத்தையும் துறந்து விட்டார்கள். நீங்கள் இப்போது இந்தப் பழைய உலகம் முழுவதையும் துறந்து விட்டீர்கள். உங்களுக்கு அப் புதிய உலகின் காட்சிகள் வழங்கப்படுகின்றன. அது விகாரமற்ற உலகம். சுவர்க்கத்தின் கடவுளான தந்தையே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். அவர் பூந்தோட்டத்தை உருவாக்குகிறார். அவர் முட்களை மலர்களாக மாற்றுகிறார். முதலாம் இலக்க முள் காம வாளாகும். நீங்கள் காமத்தை வாளென்றும் கோபத்தைத் தீய ஆவி என்றும் அழைக்கலாம். தேவர்கள் இரட்டை அகிம்சாவாதிகள். விகாரம் நிறைந்த மனிதர்கள் அனைவரும் விகாரமற்ற தேவர்களின் விக்கிரகங்களின் முன்னால் தலைவணங்குகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இங்கு கற்பதற்கே வந்திருப்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். ஆன்மீக ஒன்றுகூடல்களுக்குச் செல்வது பொதுவான விடயமாகும். கடவுள் சர்வவியாபி என அவர்கள் கூறுகின்றனர். (லௌகீகத்) தந்தை ஒருவர் எப்போதாவது சர்வவியாபியாக இருக்க முடியுமா? குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து உங்களுடைய ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கிறீர்கள். தந்தை வந்து இப்பழைய உலகைப் புதிய சுவர்க்க உலகமாக ஆக்குகிறார். சிலர் நரகத்தை நரகமாகவே கருதுவதில்லை. செல்வந்தர்கள் இவ்வாறு நினைக்கிறார்கள்: சுவர்க்கம் எதனைத் தரப்போகிறது? எங்களிடம் செல்வம், மாளிகைகள், விமானங்கள் போன்றவை இருக்கின்றன. எங்களிடம் அனைத்தும் இருக்கின்றன, எங்களுக்கு இங்கேயே சுவர்க்கம் இருக்கின்றது. குடிசைகளில் வசிப்பவர்களுக்கு இது நரகமாகும். பாரதம் மிகவும் ஏழ்மை நிறைந்ததாகவும் கடனாளியாகவும் இருக்கின்றது. வரலாறு மீண்டும் நிகழ வேண்டும். தந்தை உங்களை மீண்டும் இரட்டைக் கிரீடதாரிகள் ஆக்குகின்ற போதையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். இப்போது நீங்கள் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தை அறிவீர்கள். சத்தியயுகம், திரேதாயுகத்தின் கதையை பாபா உங்களுக்குக் கூறியிருக்கின்றார். பின்னர் சக்கரத்தின் மத்திய காலப்பகுதியில் நீங்கள் கீழிறங்க ஆரம்பிக்கிறீர்கள். பாவப் பாதை கீழிறங்கும் பாதையாகும். தந்தை மீண்டும் வந்து விட்டார். நீங்கள் உங்களைச் சுயதரிசனச் சக்கரதாரியாகக் கருதுகிறீர்கள். நீங்கள் சக்கரத்தைச் சுழற்றி ஒருவரின் கழுத்தை வெட்டுகிறீர்கள் என்பதல்ல. அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணர் சக்கரத்தைச் சுழற்றுவதாகச் சித்தரித்துள்ளனர் அவர் அசுரர்களை அதன் மூலம் அழித்ததாக அவர்கள் கூறுகின்றார்கள். அவ்வாறு எதுவும் இல்லை. நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரி பிராமணர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இந்த ஞானத்தைப் பெற்று விட்டீர்கள். அங்கு தேவர்களுக்கு இந்த ஞானம் இருக்காது. அங்கு அவர்கள் சற்கதியில் இருக்கின்றனர். இதனாலேயே அது பகல் என்று கூறப்படுகிறது. இரவிலேயே கஷ்டம் ஏற்படுகின்றது. மக்கள் தமது பக்தியில் காட்சியொன்றைப் பெறுவதற்காக அதிகளவு ஹத்தயோகம் செய்கிறார்கள். தீவிர பக்தி செய்பவர்கள் தமது உயிர்களையே பலி கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். அப்பொழுது மாத்திரமே அவர்களுக்குக் காட்சி அருளப்படுகிறது. நாடகத்திற்கேற்ப அவர்களின் விருப்பங்கள் தற்காலிகமான காலப்பகுதிக்கு நிறைவேற்றப்படுகின்றன. எவ்வாறாயினும் கடவுள் எதனையும் செய்வதில்லை. பக்தி மார்க்கம் அரைக் கல்பமாகத் தொடர்கிறது. அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பாபா உங்களை இரட்டைக் கிரீடாதாரிகள் ஆக்குகின்ற ஆன்மீகப் போதையைப் பேணுங்கள். நாங்கள் சுயதரிசனச் சக்கரதாரி பிராமணர்கள். உங்களுடைய புத்தியில் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்திற்கான ஞானம் மூலம் தொடர்ந்தும் முன்னேறுங்கள்.

2. திறமைச்சித்தி எய்துவதற்கு தந்தை மீது உண்மையான அன்பு வைத்திருங்கள். தந்தையை நினைவு செய்கின்ற மறைமுகமான முயற்சியைச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு தீவிர முயற்சியாளராகி உங்கள் இலேசாகவும். ஒளியாகவும் இருக்கும்- (டபிள்லைட்) வடிவத்தின் மூலம் எதிர்வரவுள்ள அனைத்துத் தடைகளையும் கடந்து பாய்ந்து செல்வீர்களாக.

எதிர்வரவுள்ள தடைகளைக் கண்டு களைப்படையாது அல்லது விரக்தி அடையாது மாறாக ஒரு கருவி என்ற உங்களுடைய ஆத்ம உணர்வின் ஒளி வடிவான இலேசாகவும் ஒளியாகவும் இருக்கின்ற வடிவத்தின் மூலம் ஒரு விநாடியில் அவற்றைக் கடந்து உயரப் பாய்ந்திடுங்கள். எந்தவொரு தடைகள் என்ற பாறைகளையும் உடைப்பதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். ஒரு விநாடியில் அதைப் பாய்ந்து கடந்து செல்லுங்கள். சிறிதளவு மறதியினாலேனும் ஓர் இலகுவான பாதையைக் கடினம் ஆக்காதீர்கள். உங்களால் தெளிவாக எதிர்காலத்தையும் உங்கள் வாழ்க்கையின் மேன்மையான இலக்கையும் காண முடிவதால் ஒரு தீவிர முயற்சியாளர் ஆகுங்கள். பாப்தாதாவும் உலகத்தினரும் உங்களைப் பார்க்கின்ற உங்களுடைய மேன்மையான வடிவத்தில் சதா ஸ்திரமாக நிலைத்திருங்கள்.

சுலோகம்:
சதா சந்தோஷமாக இருந்து அந்தச் சந்தோஷத்தைப் பகிர்ந்திடுங்கள். இதுவே அதியுயர்வான கௌரவமாகும்.

அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சியை அதிகரியுங்கள் (அசரீரி மற்றும் விதேஹி).

இப்பொழுது குழுவாக ஒரு தூய எண்ணத்தில் நிலைத்திருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். அதாவது சதா ஸ்திரமான ஸ்திதியை உருவாக்குங்கள். அப்பொழுதே உங்களால் உலகில் சக்திசேனையின் பெயரைப் போற்றச் செய்ய முடியும். தேவையானபோது உங்கள் சரீரத்தின் ஆதாரத்தை எடுங்கள். தேவையானபோது உங்கள் சரீரத்தின் ஆதாரத்தைத் துறந்து சரீரமற்ற வடிவத்தில் இருங்கள். ஒரு சரீரத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வதைப் போன்றே அந்தச் சரீரத்தில் இருந்து விடுபட்டிருங்கள். இப் பயிற்சியே இறுதிப் பரீட்சைத்தாளின் போது முதல் இலக்கத்தைக் கோருவதன் அடிப்படை ஆகும்.