19.01.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    30.11.2003     Om Shanti     Madhuban


நான்கு பாடங்களிலும் அனுபவத்தின் அதிகாரியாகி, பிரச்சனைகளைத் தீர்வுகளாக மாற்றுங்கள்.


இன்று, பிராமண உலகைப் படைத்தவர், எங்கும் உள்ள தனது பிராமணக் குழந்தைகள் எல்லோரையும் பார்க்கிறார். இந்த பிராமண உலகம் சிறியதோர் உலகம். ஆனால், இது அதிகபட்சம் மேன்மையானது, அத்துடன் அழகானதோர் உலகம். இந்த பிராமண உலகம், உலகின் விசேடமான ஆத்மாக்களைக் கொண்டது. ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் பலமில்லியன்களில் ஒருவர், கைப்பிடியளவான ஆத்மாக்களில் ஒருவர் ஆவார். ஏனென்றால், நீங்கள் உங்களின் தந்தையை இனங்கண்டு, ஆஸ்திக்கான உரிமையைப் பெற்றுள்ளீர்கள். எப்படித் தந்தை அதிமேலானவரோ, அவ்வாறே தந்தையை இனங்கண்டு, அவருக்குச் சொந்தமாகி உள்ள ஆத்மாக்களும் விசேடமான ஆத்மாக்களே. பாக்கியத்தை அருள்பவரான தந்தை, ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் பிறப்பு எடுத்தவுடனேயே அவரின் நெற்றியில் மேன்மையான பாக்கிய ரேகையை வரைந்துள்ளார். நீங்கள் இத்தகைய மேன்மையான பாக்கியத்தைக் கொண்டுள்ள ஆத்மாக்கள் ஆவீர்கள். உங்களை நீங்கள் பாக்கியசாலிகளாகக் கருதுகிறீர்களா? இத்தகைய மகத்தான ஆன்மீக போதையை நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? இதயங்களுக்கு சௌகரியம் அளிக்கும் தந்தை, ஒவ்வொரு பிராமண ஆத்மாவிற்கும் இதய பூர்வமான அன்பையும் அவரின் இதயபூர்வமான நேசத்தையும் வழங்குகிறார். இந்த இறையன்பானது, ஒரேயொருவரிடமிருந்து மட்டுமே பெறப்படுகிறது. அதுவும் கல்பம் முழுவதிலும் ஒரேயொரு தடவை மட்டுமே பெறப்படுகிறது. இந்த ஆன்மீக அன்பை உங்களின் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் சதா கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் கர்மயோகி வாழ்க்கை வாழும் விசேடமான ஆத்மாக்கள் என நீங்கள் உலகிற்கே சவால் விடுக்கிறீர்கள். நீங்கள் யோகம் செய்பவர்கள் மட்டுமல்ல, ஆனால் யோகி வாழ்க்கை வாழ்பவர்கள். வாழ்க்கை என்பது எல்லா வேளைக்கும் உரியது. அது இயல்பானது, நிலையானது. நீங்கள் எட்டு மணித்தியாலங்கள் அல்லது ஆறு மணித்தியாலங்கள் யோகி வாழ்க்கை வாழ்பவர்கள் அல்ல. யோகம், அதாவது, நினைவே பிராமண வாழ்க்கையின் இலட்சியம் ஆகும். வாழ்க்கையின் இலட்சியம் இயல்பாகவே நினைவு செய்யப்படும். உங்களின் இலட்சியத்திற்கேற்ப இயல்பாகவே நீங்கள் அதன் தகைமைகளையும் வளர்த்துக் கொள்வீர்கள்.

பாப்தாதா ஒவ்வொரு பிராமண ஆத்மாவின் நெற்றியிலும் பாக்கிய நட்சத்திரம் ஜொலிப்பதைப் பார்க்கிறார். பாப்தாதா சதா ஒவ்வொரு குழந்தையையும் மேன்மையான சுயமரியாதையும் சுய இராச்சிய அதிகாரமும் கொண்டவராகவே பார்க்கிறார். எனவே, நீங்கள் எல்லோரும் உங்களை சுயமரியாதையும் சுய இராச்சிய அதிகாரமும் கொண்ட ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் சுயமரியாதை உள்ள ஆத்மா என்பதை ஒரு விநாடியேனும் உங்களின் விழிப்புணர்வில் கொண்டு வந்தால், ஒரு விநாடியில் வெளிப்படும் பட்டியல் எத்தனை நீண்டதாக இருக்கும்? இப்போது சுயமரியாதையின் பட்டியல் உங்களின் விழிப்புணர்வில் வருகிறதா? அது நீண்டதொரு பட்டியல்தானே? சுயமரியாதை அகங்காரத்தை முடிக்கிறது. ஏனென்றால், சுயமரியாதையே மேன்மையான பெருமையாகும். எனவே, மேன்மையான பெருமை, வெவ்வேறு வகையான தூய்மையற்ற சரீர உணர்வுகளை முடிக்கிறது. நீங்கள் விளக்கை ஏற்றியதும், ஒரு விநாடியில் இருள் மறைந்து விடுகிறது. இருளை அகற்ற வேண்டியதில்லை. நீங்கள் இருளை நீக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டியதில்லை. ஆனால் ஒளியை ஏற்றியதும், தானாகவே இருள் அகன்றுவிடும். அதேபோல், சுயமரியாதை என்ற விழிப்புணர்வின் ஆளியைப் போடுங்கள். வெவ்வேறு வகையான சரீர உணர்வுகளை முடிப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை. சுயமரியாதையின் சொரூபமாக இருக்கும் விழிப்புணர்வு உங்களுக்குள் இல்லாதபோதே, நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். பாப்தாதா குழந்தைகளான உங்களின் விளையாட்டுக்களைப் பார்க்கிறார். உங்களின் இதயத்தில் உள்ள சுயமரியாதையைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்: ‘நான் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறேன்’. நீங்கள் இதைப் பற்றிக் கூறுகிறீர்கள். இதைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள். ஆனால், அதன் அனுபவ ஆசனத்தில் நீங்கள் நிலையாக அமர்ந்திருப்பதில்லை. நீங்கள் சிந்திப்பதை அனுபவம் செய்வது அவசியம். ஏனென்றால், அதி மேன்மையான அதிகாரம், அனுபவத்தின் அதிகாரமே ஆகும். எனவே, நீங்கள் எல்லாவற்றையும் மிக நன்றாகக் கேட்கிறீர்கள், மிக நன்றாகச் சிந்திக்கிறீர்கள், ஆனால் அதைப் பற்றிக் கேட்பதும் சிந்திப்பதும் வெவ்வேறானவையாக இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். அனுபவ சொரூபம் ஆகுவதே, பிராமண வாழ்க்கையின் மேன்மையான அதிகாரம் ஆகும். பக்திக்கும் இந்த ஞானத்திற்கும் இடையிலான வேறுபாடு இதுவே. பக்தியிலும் அவர்கள் அதைக் கேட்கும்போது மிகவும் பரவசம் அடைகிறார்கள். அவர்கள் அதைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். ஆனால் ஓர் அனுபவத்தை அவர்களால் பெற முடிவதில்லை. ஞானம் என்றால் ஞானி ஆத்மாவாக இருத்தல் என்று அர்த்தம். அதாவது, ஒவ்வொரு வகையான சுயமரியாதையிலும் அனுபவம் வாய்ந்தவர் ஆகுதல். அனுபவம் வாய்ந்த ரூபம் உங்களுக்கு ஆன்மீக போதையைக் கொடுக்கும். வாழ்க்கையில் பெறுகின்ற அனுபவத்தை ஒருபோதும் மறக்க முடியாது. நீங்கள் கேட்ட விடயங்கள் அல்லது நினைத்த விடயங்களை மறக்கக்கூடும். ஆனால் அனுபவத்தின் அதிகாரம் ஒருபோதும் குறையாது.

எனவே, பாப்தாதா குழந்தைகளான உங்களுக்கு நினைவூட்டுகிறார்: நீங்கள் எதைக் கேட்டாலும், தந்தையான இறைவனிடமிருந்து எதைக் கேட்டிருந்தாலும், அதன் அனுபவ சொரூபம் ஆகுங்கள். நீங்கள் அனுபவம் செய்தவற்றை ஆயிரக்கணக்கான மக்கள் அழிக்க முயற்சி செய்தாலும், அதை அழிக்க முடியாது. மாயையாலும் உங்களின் அனுபவத்தை அழிக்க முடியாது. நீங்கள் ஒரு சரீரத்தை எடுத்தவுடனேயே, இன்னார் என்பதை அனுபவம் செய்கிறீர்கள். அது மிகவும் உறுதி ஆகுகின்றது. உங்களின் சரீரப் பெயரை நீங்கள் எப்போதாவது மறக்கிறீர்களா? யாராவது உங்களிடம், இல்லை, நீங்கள் இன்னார் இல்லை எனக் கூறினால், நீங்கள் அவர் சொல்வதை நம்புவீர்களா? அதேபோல், ஒவ்வொரு வகையான சுயமரியாதையின் பட்டியலையும் அனுபவம் செய்வதன் மூலம், உங்களால் உங்களின் சுயமரியாதையை ஒருபோதும் மறக்க முடியாது. எவ்வாறாயினும், ஒவ்வொரு வகையான சுயமரியாதையையும் ஒவ்வொரு கருத்தையும் அனுபவம் செய்வதில் நீங்கள் வரிசைக்கிரமமாக இருப்பதை பாப்தாதா பார்த்திருக்கிறார். நீங்கள் ஓர் ஆத்மா என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அனுபவம் செய்திருப்பதனால், ஆத்மாவைத் தவிர நீங்கள் வேறென்னவாக இருக்கிறீர்கள்? நீங்கள் கூறுகிறீர்கள்: ‘இந்தச் சரீரம் என்னுடையது, ஆனால் நான் ஓர் ஆத்மா’. நீங்கள் ஓர் ஆத்மாவாக இருக்கும்போது, சரீர உணர்வு எங்கிருந்து வந்தது? அது ஏன் வந்தது? அதற்கான காரணம் என்ன? 63 பிறவிகளின் பயிற்சி, ‘நான் இந்த உடல்’ என்ற தவறான பயிற்சி, மிகவும் உறுதியாக உள்ளது. சரியான பயிற்சியின் அனுபவத்தை நீங்கள் மறந்துவிட்டீர்கள். குழந்தைகளான நீங்கள் சிரமப்படுவதைப் பாப்தாதா பார்க்கும்போது, அவருக்கு உங்களின் மீது அன்பு ஏற்படுகிறது. கடவுளின் குழந்தைகள், சிரமப்படுவதா! இதற்கான காரணம் என்ன? அனுபவ சொரூபம் ஆகாமல் இருப்பதே. என்னதான் நடந்தாலும், நீங்கள் எந்தவிதமான செயல்களைச் செய்யும்போதும், உங்களால் சரீர உணர்வை மறக்க முடியாது. அப்படியென்றால், எப்படி உங்களால் உங்களின் பிராமண வாழ்க்கையை, அதாவது, உங்களின் கர்மயோகி வாழ்க்கையை, யோகி வாழ்க்கையை மறக்க முடியும்?

எனவே, சோதித்துப் பாருங்கள்: நான் ஒவ்வொரு பாடத்தையும் அனுபவம் செய்துள்ளேனா? இந்த ஞானத்தைக் கேட்டு, அதைக் கூறுவது இலகுவானது. ஆனால், இந்த ஞானத்தின் சொரூபம் ஆகுவது...... நீங்கள் இந்த ஞானத்தை நடைமுறையில் இடும்போது, உங்களின் ஒவ்வொரு செயலும் இயல்பாகவே ஞானம் நிறைந்தது ஆகிவிடும். அதாவது, ஒவ்வொரு செயலும் இந்த ஞானத்தின் ஒளியாலும் சக்தியாலும் நிரம்பியிருக்கும். இந்த ஞானம் ஒளி மற்றும் சக்தி எனப்படுகிறது. அதேபோல், யோகி ரூபம் என்பது யோகியுக்த் மற்றும் யுக்தியுக்த் ரூபம் ஆகும். தாரணை சொரூபம் என்றால் உங்களின் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு பௌதீக அங்கமும் ஒவ்வொரு நற்குணமும் தாரணையின் சொரூபமாக இருக்கும். சேவையில் அனுபவசாலி ரூபம் என்றால் நிலையான, இயல்பான சேவையாளர் ஆகுதல் என்று அர்த்தம். உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், தொடர்புகள் அல்லது உறவுமுறைகளின் ஊடாகவோ, உங்களின் ஒவ்வொரு செயலிலும் இயல்பாகவே சேவை தொடர்ந்து நிகழ வேண்டும். இதுவே நான்கு பாடங்களிலும் அனுபவ சொரூபமாக இருத்தல் எனப்படுகிறது. எனவே, நீங்கள் எல்லோரும் எந்தளவிற்கு அனுபவசாலிகள் ஆகியுள்ளீர்கள் - ஒவ்வொரு நற்குணத்திலும் ஒவ்வொரு சக்தியிலும் அனுபவசாலிகள் ஆகியுள்ளீர்கள் எனச் சோதித்துப் பாருங்கள். அனுபவம், சரியான வேளையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றொரு கூற்று உள்ளது. ஆகவே, என்ன வகையான பிரச்சனை வந்தாலும் நீங்கள் அனுபவ சொரூபமாக இருப்பதை அனுபவம் செய்ய வேண்டும். அனுபவ ரூபமாக இருக்கும் ஒருவர் தனது அனுபவ அதிகாரத்தால் ஒரு விநாடியில் ஒரு பிரச்சனையை ஒரு தீர்வாக மாற்றுவார். அப்போது அந்தப் பிரச்சனை ஒரு பிரச்சனையாகவே இருக்காது. அது ஒரு தீர்வின் ரூபத்தை எடுக்கும். உங்களுக்குப் புரிகிறதா?

இப்போது, காலம் நெருங்கி வருவதும் தந்தைக்குச் சமமாக ஆகுவதை நெருங்கி வருவதும் உங்களுக்குத் தீரவுகளின் சொரூபமாக இருக்கும் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும். நீண்ட காலமாக, வருகின்ற பிரச்சனைகளாலும் அவற்றுக்குத் தீர்வுகளைக் கண்டுபிடிப்பதிலும் நீங்கள் நீங்கள் சிரமப்பட்டீர்கள். இப்போது, பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் சுயமரியாதை உடையவராகவும் சுய இராச்சிய அதிகாரம் உடையவராகவும் தீர்வுகளின் சொரூபமாகவும் காண விரும்புகிறார். அனுபவத்தின் ரூபம் என்றால் ஒரு விநாடியில் எதையும் மாற்றக்கூடியதாக இருப்பதாகும். அச்சா.

ஆத்மாக்கள் எல்லா இடங்களில் இருந்தும் இங்கே வந்துள்ளார்கள். இரட்டை வெளிநாட்டவர்களும் ஒவ்வொரு முறையிலும் நல்லதொரு வாய்ப்பைப் பெறுகிறார்கள். அச்சா. இந்தக் குழுவில் பாண்டவர்களும் சளைத்தவர்கள் அல்ல. பாண்டவர்களான நீங்கள் எல்லோரும் உங்களின் கைகளை உயர்த்துங்கள். தாய்மார்களே, குமாரிகளே, ஆசிரியர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள். முதல் குழுவில், அதிக தாய்மார்கள் இருந்தார்கள். ஆனால் இந்தக் குழுவில், பாண்டவர்களும் மிக நன்றாக ஓடுகிறார்கள். பாண்டவர்களின் போதையும் நம்பிக்கையும் இன்றும் நினைவு கூரப்படுகிறது. என்ன நினைவு கூரப்படுகிறது? உங்களுக்குத் தெரியுமா? ஐந்து பாண்டவர்கள் இருந்தார்கள். ஆனால், அவர்களின் போதையினதும் நம்பிக்கையினதும் அடிப்படையில், அவர்கள் வெற்றியாளர்கள் ஆகினார்கள். இந்தப் புகழ் இன்றும் இருக்கிறது. எனவே, நீங்கள் இத்தகைய பாண்டவர்களா? அச்சா, உங்களுக்குப் போதை இருக்கிறதா? எனவே, பாண்டவர்களான நீங்கள்தான் பாண்டவர்கள் என்பதைக் கேட்கும்போது, நீங்கள் பாண்டவர்களின் தந்தையை (பாண்டவபதி) மறக்க மாட்டீர்கள்தானே? சிலவேளைகளில் நீங்கள் அவரை மறந்துவிடுகிறீர்களா? பாண்டவர்களும் பாண்டவபதியும். பாண்டவர்களால் ஒருபோதும் பாண்டவபதியை மறக்க முடியாது. பாண்டவர்களுக்கு இந்த போதை இருக்க வேண்டும்: நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் பாண்டவர்கள், பாண்டவபதியால் நேசிக்கப்படுபவர்கள். ஞாபகார்த்தங்களிலும், பாண்டவர்களின் பெயர் குறைந்ததல்ல. பாண்டவர்களின் பட்டம், வெற்றி பெற்ற பாண்டவர்கள் என்பதாகும். எனவே, நீங்கள் இத்தகைய பாண்டவர்களா? அவ்வளவுதான். நாம் வெற்றி பெற்ற பாண்டவர்கள். வெறுமனே பாண்டவர்கள் அல்ல, ஆனால் வெற்றி பெற்ற பாண்டவர்கள். அழியாத வெற்றித் திலகம் ஏற்கனவே உங்களின் நெற்றிகளில் இடப்பட்டுள்ளது.

தாய்மார்களான உங்களுக்கு உள்ள போதை என்ன? உங்களிடம் அதிகளவு போதை உள்ளது. தாய்மார்களான நீங்கள் போதையுடன் கூறுகிறீர்கள்: பாபா எங்களுக்காக வந்துள்ளார்! அப்படித்தானே? இது ஏனென்றால், அரைக்கல்பமாக, தாய்மார்களுக்கு எந்தவோர் அந்தஸ்தும் கொடுக்கப்படவில்லை. இப்போது, சங்கமயுகத்தில், அரசியலிலும் தாய்மார்களுக்கு உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறையிலும், தந்தை சக்திகளான உங்களை முன்னணியில் வைத்திருக்கிறார். எனவே, உலகிலும் ஒவ்வொரு தொழிலிலும் தாய்மார்களுக்கு இப்போது உரிமைகள் உள்ளன. பெண்கள் இல்லாத எந்தவொரு தொழிலும் இல்லை. இதுவே சங்கமயுகத்தின் நிலைமை. எனவே, தாய்மார்களான நீங்கள், ‘எமது பாபா!’ என உணர்கிறீர்கள். ‘எனது பாபா!’ என நீங்கள் உணர்கிறீர்கள்தானே? உங்களுக்கு இந்தப் போதை இருக்கிறதா? தாய்மார்கள் தமது கைகளை அசைக்கிறார்கள். நல்லது. நீங்கள் இறைவனை உங்களுக்குச் சொந்தம் ஆக்கியுள்ளீர்கள். அதனால், தாய்மார்களே மந்திரவாதிகள். தாய்மார்களும் பாண்டவர்களும் பாப்தாதாவை சகல உறவுமுறைகளிலும் நேசிக்கிறார்கள் என்பதை பாப்தாதா பார்க்கிறார். எனினும், யார் குறிப்பாக எந்த உறவுமுறையில் அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதையும் அவர் பார்க்கிறார். சில குழந்தைகள் இறைவனைத் தமது நண்பராக ஆக்குவதை மிகவும் விரும்புகிறார்கள். இதனாலேயே, குதா தோஸ்தின் (நண்பராகிய இறைவன்) கதை உள்ளது. பாபா கூறுகிறார்: எந்த வேளையிலும் உங்களுக்கு என்ன உறவுமுறை தேவைப்பட்டாலும் உங்களால் அந்த உறவுமுறையில் இறைவனை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும். உங்களால் அவருடன் சகல உறவுமுறைகளையும் நிறைவேற்ற முடியும். ‘பாபா என்னுடையவர்’ எனக் குழந்தைகள் சொல்கிறார்கள். தந்தை என்ன கூறுகிறார்? நான் உங்களுடையவரே.

மதுவனத்தில் மிக நல்ல கோலாகலம் உள்ளதல்லவா? நீங்கள் எவ்வளவு தொலைவில் அமர்ந்திருந்து கேட்டுக்கொண்டும் பார்த்துக் கொண்டும் இருந்தாலும் மதுவனத்தின் கோலாகலம் அதற்கேயுரியது. மதுவனத்தில் நீங்கள் பாப்தாதாவைச் சந்திக்கிறீர்கள். ஆனால், உங்களிடம் வேறு எத்தனை வகையான பேறுகள் உள்ளன? நீங்கள் அவற்றின் பட்டியலைச் செய்தால், எத்தனை வகையான பேறுகள் இருக்கும்? அனைத்திலும் மகத்தான பேறு, உங்களிடம் இலகுவான, இயல்பான யோகம் இருப்பதே ஆகும். நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை. ஒருவர் மதுவனத்தின் சூழலுக்கு அந்த முக்கியத்துவத்தைக் கொடுக்கும் போது, மதுவனத்தின் சூழலும் மதுவனத்தின் நேர அட்டவணையும் அவரை இலகுவான, இயல்பான யோகி ஆக்கும். ஏன்? மதுவனத்தில் உங்களின் புத்திகளில் ஒரேயொரு பணியே உள்ளது. சேவாதாரிகளின் குழு ஒன்று வரும்போது, அது வேறு விடயம். ஆனால், இங்கே புத்துணர்ச்சி பெறுவதற்காக வருபவர்கள், அவர்களுக்கு மதுவனத்தில் என்ன வேலை உள்ளது? அவர்களுக்கு ஏதாவது பொறுப்புகள் உள்ளதா? உண்ணுங்கள், பருகுங்கள், அனைத்தையும் இரசியுங்கள், அத்துடன் படியுங்கள். எனவே, மதுவனம் என்பது மதுவனமே. வெளிநாடுகளிலும் பாபா கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும், அங்கே முரளி கேட்பதற்கும் மதுவனத்திற்கு வருவதற்கும் இடையில் பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. எப்படியும் இந்த வசதிகளினூடாகக் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருப்பவர்களுக்கு பாப்தாதா அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். சில குழந்தைகள் இரவு விழித்திருந்தும் முரளியைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கேட்காமலே இருப்பதை விட அது நிச்சயமாகச் சிறப்பானது. எனினும் அனைத்திலும் சிறந்தது அழகான மதுவனமே. மதுவனத்திற்கு வருவதை நீங்கள் இரசிக்கிறீர்களா அல்லது அங்கே இருந்தபடியே உங்களால் முரளியைக் கேட்க முடியும் என நினைக்கிறீர்களா? உங்களுக்கு எது பிடிக்கும்? அங்கேயும் நீங்கள் முரளியைக் கேட்பீர்கள்தானே? இங்கேயும், பின்னால் அமர்ந்திருந்து நீங்கள் எல்லாவற்றையும் தொலைக்காட்சியிலேயே பார்க்கிறீர்கள். அதனால், மதுவனத்திற்கு வருவது நல்லது என உணர்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! (எல்லோரும் தமது கைகளை உயர்த்தினார்கள்). அச்சா. எப்படியாயினும், பக்தியில் உள்ள புகழ் என்ன? மதுவனத்தில் முரளி ஒலிக்கிறது. இலண்டனில் முரளி ஒலிக்கிறது என்பதல்ல. நீங்கள் எங்கே இருந்தாலும், மதுவனத்தின் புகழின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதென்றால் உங்களை மகான் ஆக்கிக் கொள்ளுதல் என்று அர்த்தம்.

அச்சா, இங்கே வந்திருக்கும் நீங்கள் எல்லோரும் யோகி வாழ்க்கையை, ஞானி ஆத்மாவாக இருக்கும் வாழ்க்கையை தாரணையின் சொரூபமாக இருப்பதை அனுபவம் செய்கிறீர்கள். இந்தப் பருவகாலத்தின் முதல் சந்திப்பில், பாபா குறிப்பாக உங்களின் கவனத்தை இதில் ஈர்த்தார். அதாவது, பருவகாலம் முழுவதும் நீங்கள் ஒரு திருப்தி இரத்தினமாகி, மற்றவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என்பதேயாகும். நீங்கள் மட்டும் அப்படி ஆகக்கூடாது. ஆனால் நீங்கள் மற்றவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். அத்துடன்கூடவே, இப்போதுள்ள நேரத்திற்கேற்ப, எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். ‘அது எப்போது நடக்கும்? அது ஒரு வருடத்திலா அல்லது ஆறு மாதங்களிலா நடக்கும்?’ என்ற கேள்விகளை எல்லாம் கேட்காதீர்கள். சடுதியாக, எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம். ஆகவே, உங்களின் விழிப்புணர்வின் ஆளியை மிகவும் சக்திவாய்ந்தது ஆக்குங்கள். ஒரு விநாடியில் ஆளியைப் போட்டு, அனுபவ சொரூபம் ஆகுங்கள். ஆளி ஒன்று தளர்வாக இருக்கும்போது, நீங்கள் மீண்டும் மீண்டும் அதைப் போடவும் அணைக்கவும் வேண்டியிருக்கும். அதைச் சரியாக்குவதற்கு நேரம் எடுக்கும். எவ்வாறாயினும், நீங்கள் சுயமரியாதை என்ற ஆளியையும் சுயஇராச்சிய அதிகாரம் என்ற ஆளியையும் ஒரு விநாடியில் போட்டு, அகநோக்கு உடையவராகித் தொடர்ந்து அனுபவங்களைக் கொண்டிருக்க வேண்டும். அனுபவக் கடலில் அமிழ்ந்திருங்கள். அனுபவத்தின் அதிகாரத்திற்கு எதிராக எந்தவோர் அதிகாரத்தாலும் வெல்ல முடியாது. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? பாப்தாதா உங்களுக்கு ஒரு சமிக்கை கொடுக்கிறார். ஆனால் எதிர்பார்த்துக் காத்திருக்காதீர்கள். ‘எப்போது? எப்போது? எப்போது?’ எனச் சொல்லாதீர்கள். இப்போது! என்றும் தயாராக இருங்கள். உங்களால் ஒரு விநாடிக்கான விழிப்புணர்வின் ஆளியைப் போட முடியுமா? உங்களால் இதைச் செய்ய முடியுமா? சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் பிரச்சனை என்னவாக இருந்தாலும் விழிப்புணர்வின் ஆளியைப் போடுங்கள். இதைப் பயிற்சி செய்யுங்கள். ஏனென்றால், இறுதிப் பரீட்சைத்தாள் ஒரு நிமிடம் கூட இருக்காது, அது ஒரு விநாடிக்குரியதே ஆகும். அதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பவர்களால் சித்தி எய்த முடியாது. அனுபவம் உடையவர்கள் சித்தி அடைவார்கள். எனவே, இப்போது, நீங்கள் எல்லோரும் ஒரு விநாடியில் உங்களின் விழிப்புணர்வு ஆளியைப் போடுங்கள்: நான் பரந்தாம வாசியான ஒரு மேன்மையான ஆத்மா. உங்களின் இந்த விழிப்புணர்வின் ஆளியைப் போடுங்கள். வேறெந்த விழிப்புணர்வும் இருக்கக்கூடாது. உங்களின் புத்தியில் எந்தவிதமான குழப்பங்களும் இருக்கக்கூடாது. அசையாமல் இருக்க வேண்டும். (பாப்தாதா அப்பியாசத்தைச் செய்வித்தார்.) அச்சா.

எங்கும் உள்ள மேன்மையான சுயமரியாதை கொண்ட அனுபவசாலி ஆத்மாக்களுக்கும் சதா ஒவ்வொரு பாடத்தையும் அனுபவம் செய்பவர்களுக்கும் சதா யோகி வாழ்க்கையுடன் செயல்படும் சதா யோகி ஆத்மாக்களுக்கும் பலமில்லியன்களில் கையளவினரும் அந்தக் கையளவில் சதா தமது விசேடமான பாக்கியத்தைத் தாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்துகின்ற விசேடமான பாக்கியத்தைக் கொண்டுள்ள விசேடமான ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்தேயும்.

தாதிஜியிடம்: நீங்கள் எல்லோரிலும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் நல்லதொரு பணியைச் செய்கிறீர்கள். (மில்லியன் கணக்கானவர்களுக்குச் செய்தியைக் கொடுக்கும் திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன.) மில்லியன் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள ஆத்மாக்கள் செய்தியைப் பெறப் போகிறார்கள். ‘ஓ பிரபுவே’ என அவர்கள் சொல்வார்கள்தானே? ‘ஓ பிரபுவே’ என அவர்கள் சொல்லும்படி அவர்களை நீங்கள் தயார் செய்ய வேண்டும்தானே? அவர்களும் (ஏனைய தாதிகள்) தமது ஒத்துழைப்பைக் கொடுக்கிறார்கள். நல்லது. நீங்கள் மதுவனத்தைப் பார்த்துக் கொள்கிறீர்கள். நீங்கள் நல்லதொரு ஒத்துழைக்கும் குழுவை உருவாக்கி உள்ளீர்கள்தானே? ஒவ்வொருவருக்கும் அவருக்கே உரிய சிறப்பியல்பு உள்ளது. எவ்வாறாயினும், ஆதி இரத்தினங்களின் தாக்கம் உள்ளது. நீங்கள் எவ்வளவுதான் முதுமை அடைந்தாலும், புதியவர்களும்கூட முன்னேறுகிறார்கள், ஆனால் ஆதி இரத்தினங்களின் பராமரிப்பு அதற்கேயுரியது. இதனாலேயே இந்தக் குழு நல்லது.

ஆசீர்வாதம்:
சதா உங்களின் தடைகளால் பாதிக்கப்படாத ஜொலிக்கின்ற, தேவதை ஆடையை அணிவதன் மூலம் சதா தடைகளை அழிப்பவர் ஆகுவீர்களாக.

உங்களுக்கும் மற்றவர்களுக்கும் எப்போதும் தடைகளை அழிப்பவர்கள் ஆகுவதற்கு, கேள்விக்குறிகளுக்கு விடை கொடுத்து, ஒரு முற்றுப்புள்ளி இடுவதன் மூலம் உங்களின் சகல சக்திகள் என்ற களஞ்சியத்தை நிரப்பி வைத்திருங்கள். சதா உங்களின் தடைகளால் பாதிக்கப்படாத, ஜொலிக்கும் தேவதை ஆடையை அணிந்து கொள்ளுங்கள். சேற்றினாலான ஆடையை அணியாதீர்கள். இத்துடன்கூடவே, சகல நற்குணங்கள் என்ற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவராக இருங்கள். எப்போதும் எட்டு ஆயுதங்களுடன் கூடிய சக்தியாக, சம்பூரணமான விக்கிரகமாக இருந்து, மேன்மையான வாழ்க்கை என்ற உங்களின் பாதங்களைத் தாமரை மலரின் மீது வைத்திருங்கள்.

சுலோகம்:
இந்தக் கல்வியில் முழுக் கவனம் செலுத்துங்கள், நீங்கள் முதல் பிரிவில் ஓர் இலக்கத்தைப் பெறுவீர்கள்.

உங்களின் சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.

வார்த்தைகளால் சேவை செய்வது இயல்பானது ஆகியிருப்பதைப் போல், எண்ணங்களால் செய்யப்படும் சேவையும் ஒரே வேளையில் இடம்பெற வேண்டும். அது இயல்பானதாகவும் இருக்க வேண்டும். வார்த்தைகளால் சேவை செய்வதுடன்கூடவே, தொடர்ந்து உங்களின் மனதால் சேவை செய்யுங்கள். நீங்கள் குறைந்தளவே பேச வேண்டியிருக்கும். உங்களின் மனதால் சேவை செய்வதன் உதவியுடன், பேசுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் சக்தியும் சேகரிக்கப்படும். மனதால் செய்யப்படும் சக்திவாய்ந்த சேவை, உங்களுக்கு மகத்தான வெற்றியின் அனுபவத்தைக் கொடுக்கும்.