19.02.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இதுவரை நீங்கள் கற்ற அனைத்தையும் மறந்து விடுங்கள். மரணித்து வாழுதல் என்றால் அனைத்தையும் மறப்பதாகும். கடந்தவை எதனையும் நினைவு செய்யாதீர்கள்.
கேள்வி:
முற்றாக மரணித்து வாழாதவர்களின் அடையாளங்கள் எவை?பதில்:
அவர்கள் தொடர்ந்தும் தந்தையுடனும் விவாதம் செய்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் சமயநூல்களில் இருந்து உதாரணங்களைக் கொடுக்கிறார்கள். முற்றாக மரணித்து வாழ்பவர்கள் கூறுகின்றார்கள்: பாபா கூறுபவை மாத்திரமே உண்மையானவை. அரைக் கல்பமாக நாங்கள் செவிமடுத்த அனைத்தும் பொய்யானவையாக இருந்தன. ஆகையாலேயே அவ்விடயங்கள் எங்கள் வாயிலிருந்து வெளிவர அனுமதிக்கக் கூடாது. தந்தை கூறுகின்றார்: தீயதைக் கேட்காதீர்கள்!பாடல்:
ஓம் நமசிவாய……ஓம் சாந்தி.
நீங்கள் மக்களை மௌனத்தில் அமர்த்துவதற்காகவே ‘நேஷ்தா’ (விசேடமாக மேற்கொள்ளப்படும் தியானம்) என்ற வார்த்தை உங்களுக்குக் கொடுக்கப்பட்டு உங்களால் இந்த அப்பியாசம் செய்விக்கப்படுகின்றது என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப் படுத்தப்பட்டுள்ளது. ‘நாங்கள் மரணித்து வாழ்கின்றோம்’ என்று மரணித்து வாழ்கின்ற குழந்தைகள் கூறுகின்றார்கள் என்று ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை இப்பொழுது இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். உதாரணத்திற்கு ஒரு மனிதர் மரணிக்கும் போது அவர் அனைத்தையும் மறந்து விடுகின்றார். சம்ஸ்காரங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன. நீங்கள் இப்பொழுது தந்தைக்கு உரியவர்கள். அத்துடன் இந்த உலகைப் பொறுத்தவரை நீங்கள் மரணித்தவர்களே. தந்தை கூறுகின்றார்: உங்களுக்குப் பக்திக்கான சம்ஸ்காரங்கள் இருந்தன. அந்தச் சம்ஸ்காரங்கள் இப்பொழுது மாற்றம் அடைகின்றன. எனவே நீங்கள் மரணித்து வாழ்கின்றீர்கள். மனிதர்கள் மரணிக்கும் போது அவர்கள் தாம் கற்றுள்ள அனைத்தையும் மறந்து விடுகின்றார்கள். அதன்பின்னர் தமது அடுத்த பிறவியில் அவர்கள் அனைத்தையும் மீண்டும் கற்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் கற்றுள்ளவை அனைத்தையும் மறந்து விடுங்கள். நீங்கள் தந்தைக்கு உரியவர் ஆகிவிட்டீர்கள் இல்லையா? நான் உங்களுக்குப் புதிய விடயங்களைக் கூறுகின்றேன். எனவே இப்பொழுது வேதங்கள் சமயநூல்கள் கிரந்தம் ஓதுதல் தீவிர தபஸ்யா போன்றவற்றை மறந்து விடுங்கள். அந்த விடயங்கள் அனைத்தையும் மறந்து விடுங்கள். ஆகையாலேயே ‘தீயதைக் கேட்காதே, தீயதைப் பார்க்காதே!’ என்று கூறப்படுகின்றது. இது குழந்தைகளாகிய உங்களுக்கே பொருந்துகிறது. பல சமயநூல்களைக் கற்றவர்களும் முற்றாக மரணிக்காதவர்களும் தொடர்ந்தும் பயனின்றி விவாதம் செய்து கொண்டிருப்பார்கள். ஒருமுறை மரணித்தால் நீங்கள் ஒருபோதும் விவாதம் செய்ய மாட்டீர்கள். நீங்கள் ‘தந்தை கூறுவது மாத்திரமே உண்மை’ எனக் கூறுவீர்கள். உங்கள் உதடுகளில் இருந்து வேறு எதுவும் ஏன் வெளிப்பட வேண்டும்? தந்தை கூறுகின்றார்: இதனை உங்கள் வாயில் இருந்து வெளிப்படுத்தவே கூடாது. தீயதைக் கேட்காதீர்கள்! தந்தை எங்களுக்கு வழிகாட்டலைக் கொடுத்துள்ளார்: எதையும் செவிமடுக்காதீர்கள்! அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் இப்பொழுது ஞானக்கடலின் குழந்தைகள். அவ்வாறாயின் நாங்கள் ஏன் பக்தியை நினைவு செய்ய வேண்டும்? நாங்கள் ஒரேயொரு கடவுளை மாத்திரமே நினைவு செய்கின்றோம். தந்தை கூறியுள்ளார்: பக்தி மார்க்கத்தை மறந்து விடுங்கள். நான் உங்களுக்கு ஓர் இலகுவான விடயத்தையே விளங்கப்படுத்துகின்றேன்: விதையான என்னை நினைவு செய்தால் முழு விருட்சமும் உங்கள் புத்தியில் பிரவேசிக்கும். உங்களிடம் உள்ள கீதையே பிரதானமான விடயம். கீதையில் மாத்திரமே கடவுளைப் பற்றிய விளக்கம் உள்ளது. இவ்விடயங்கள் இப்பொழுது புதியவை. ஒருவர் புதிய விடயங்களையிட்டு மேலதிகக் கவனம் செலுத்துகிறார். இது மிகவும் எளிமையான விடயம். நினைவு செய்வதே அதிபிரதானமான விடயம். உங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றது: மன்மனாபவ! தந்தையை நினைவு செய்யுங்கள்! இது மிகவும் ஆழமான விடயம். இதிலேயே தடைகள் ஏற்படுகின்றன. இரண்டு நிமிடங்களுக்கேனும் பாபாவை நினைவு செய்யாத குழந்தைகள் பலர் உள்ளனர். தந்தைக்கு உரியவர்கள் ஆகிய பின்னரும் அவர்கள் நல்ல செயல்களைச் செய்யாமல் இருப்பதுடன் நினைவும் செய்வதில்லை. அவர்கள் தொடர்ந்தும் பாவச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இது அவர்களின் புத்தியில் இருப்பதில்லை. ஆகையால் இது தந்தையின் வழிகாட்டல்களை அவமரியாதை செய்தல் எனப்படுகின்றது. அவர்களால் கற்க முடியாதிருப்பதால் அவர்கள் அந்த வலிமையைப் பெறுவதில்லை. நீங்கள் பௌதீகக் கல்வியின் மூலம் வலிமையைப் பெறுகின்றீர்கள். கல்வியே வருமானத்திற்கான மூலாதாரம். அது சரீரத்தின் வாழ்வாதாரத்திற்கு உரியது. அதுவும் குறுகிய காலத்திற்கே உரியது. சிலர் தாம் கல்வி கற்கும் பொழுது மரணித்து விடுகின்றார்கள். அவர்கள் தமது கல்வியைத் தம்முடன் எடுத்துச் செல்ல மாட்டார்கள். அவர்கள் இன்னொரு பிறவியை எடுத்து மீண்டும் ஆரம்பத்தில் இருந்து கற்க வேண்டும். இங்கு நீங்கள் எவ்வாறு எதனைக் கற்றாலும் நீங்கள் அதனை உங்களுடன் எடுத்துச் செல்கின்றீர்கள். ஏனெனில் நீங்கள் அதற்கான பலனை அடுத்த பிறவியில் பெறுவீர்கள். ஏனைய அனைத்தும் நிச்சயமாகப் பக்தி மார்க்கத்திற்கு உரியதாகும். அங்கே எந்த வகையான பொருட்கள் உள்ளன என்பதை எவரும் அறிய மாட்டார்கள். ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். ஒரேயொரு முறையே பரமாத்மாவான தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் அதன் மூலம் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் சுவர்க்கம் இருப்பதில்லை. நீங்கள் இப்பொழுது பிரபுக்கு உரியவர் ஆகியுள்ளீர்கள். மாயையும் குழந்தைகளைப் பெற்றோர் இல்லாத அநாதைகள் ஆக்குகின்றாள். அவர்கள் அற்ப விடயங்களுக்காகத் தம் மத்தியில் சண்டையிட ஆரம்பிக்கின்றார்கள். அவர்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருக்காது விட்டால் அநாதைகள் ஆகவே இருக்க வேண்டும். நீங்கள் ஓர் அநாதை ஆகினால் நிச்சயமாக ஏதாவதொரு பாவச் செயலைச் செய்வீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் எனக்கு உரியவராகிய பின்னர் என்னை அவதூறு செய்யாதீர்கள்! அதிகளவு அன்புடன் முன்னேறிச் செல்லுங்கள். பிழையான விடயங்களைக் கூறாதீர்கள். தந்தையே அகலிகைகளையும் கூனிகளையும் சுதேசிப் பெண்களையும் ஈடேற்ற வேண்டும். இராமர் (கடவுள்) சுதேசிப் பெண் கொடுத்த கனிகளை உண்டார் என்று எழுதப்பட்டுள்ளது. இப்பொழுது உண்மையில் அவர் அவள் கொடுத்த உணவை அவ்விதமாக உண்பாரா? அவள் சுதேசிப் பெண்ணில் இருந்து ஒரு பிராமணர் ஆகும் பொழுது அவர் ஏன் அதை உண்ணக்கூடாது? இதனாலேயே பிரம்மபோஜனம் புகழப்படுகின்றது. சிவபாபா எப்படியும் உண்ண மாட்டார். அவர் அபோக்தா (அனுபவங்களுக்கு அப்பாற்பட்டவர்). எவ்வாறாயினும் இந்த இரதமே உண்ணுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் எவருடனும் விவாதம் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரண்டு வார்த்தைகளே பேசுங்கள்: சிவபாபா கூறுகின்றார். சிவபாபா மாத்திரமே உருத்திரர் எனப்படுகிறார். விநாசத்தின் சுவாலைகள் உருத்திர ஞான யாகத்தில் இருந்து உருவாக்கப்பட்டன. எனவே அவரே கடவுள் உருத்திரர் ஆவார். ஸ்ரீகிருஷ்ணர் உருத்திரர் என்று அழைக்கப்படுவதில்லை. ஸ்ரீகிருஷ்ணர் விநாசத்தை நிகழச் செய்வதில்லை. தந்தையே படைத்தல், காத்தல், அழித்தலை மேற்கொள்கின்றார். அவர் எதனையும் தானே செய்வதில்லை. இல்லாவிடின் அவர் மீது குற்றம் சுமத்தப்படும். அவர் கரன்கராவன்ஹார். தந்தை கூறுகின்றார்: நான் எவரிடமும் அனைத்தையும் அழித்து விடுமாறு கூறுவதில்லை. அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சங்கரர் எதையாவது செய்கின்றாரா? எதனையுமே செய்வதில்லை! விநாசம் சங்கரரின் மூலமாக இடம்பெறுகின்றது என்ற ஞாபகார்த்தம் மாத்திரமே உள்ளது. அவர்கள் தாங்களே விநாசத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட இந்த நாடகம் விளங்கப்படுத்தப்படுகிறது. அனைவரும் படைப்பவராகிய தந்தையை மறந்து விட்டார்கள். ‘தந்தையான கடவுளே படைப்பவர்’ என்று அவர்கள் கூறிய போதிலும் அவர்களுக்கு அவரை அறவே தெரியாது. அவரே உலகத்தைப் படைப்பவர் என்று அவர்கள் நம்புகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் அதனைப் படைப்பதில்லை. நான் அதனை மாற்றுகின்றேன். நான் கலியுகத்தைச் சத்தியயுகமாக மாற்றுகின்றேன். நான் ‘அதிமங்களகரமான யுகம்’ என நினைவு கூரப்படுகின்ற சங்கமயுகத்தில் வருகின்றேன். கடவுள் உபகாரி ஆவார். அவர் அனைவருக்கும் நன்மையைச் செய்கிறார். ஆனால் அவர் எவ்வாறு என்ன நன்மை செய்கின்றார் என்பது தெரியாது. ஆங்கிலத்தில் அவர்கள் அவரை ‘லிபரேட்டர், கைட்’ (விடுதலை அளிப்பவரும் வழிகாட்டியும்) என்று அழைக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு அதன் அர்த்தம் புரிவதில்லை. அவர்கள் கூறுகின்றார்கள்: பக்தியின் பின்னர் நீங்கள் கடவுளைக் கண்டறிவீர்கள்; நீங்கள் சற்கதியை அடைவீர்கள். மனிதர்களால் அனைவருக்கும் சற்கதியை அருளவே முடியாது. இல்லாவிடின் பரமாத்மாவே தூய்மையாக்குபவரும் அனைவருக்கும் சற்கதி அருள்பவரும் என்று ஏன் புகழ வேண்டும்? அவர்கள் எவருக்குமே தந்தையைத் தெரியாது. அவர்கள் அநாதைகள். அவர்களின் புத்தியானது தந்தையின் மீது அன்பைக் கொண்டிருப்பதில்லை. இப்பொழுது தந்தையால் என்ன செய்ய முடியும்? அவரே பிரபு ஆவார். அவரது பிறந்தநாளான சிவஜெயந்தி பாரதத்தில் கொண்டாடப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: நான் பக்தர்களுக்குப் பலனைக் கொடுக்கவே வருகின்றேன். நான் பாரதத்திற்கு மாத்திரமே வருகின்றேன். நான் வருவதற்கு எனக்கு ஒரு சரீரம் தேவை. எதுவும் தூண்டுதலினால் இடம்பெறும் என்பதில்லை. நான் இவருக்குள் பிரவேசித்து இவரின் வாயின் மூலம் உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றேன். இதில் பசுவின் வாய் பற்றிய விடயம் இல்லை. இங்கே இது இந்த வாய் சம்பந்தமான விடயமாகும். ஒரு மனித வாய் தேவை, ஒரு மிருகத்தினது அல்ல. அவர்களின் புத்தி இந்தளவிற்கேனும் வேலை செய்வதில்லை. மறுபுறத்தில் அவர்கள் பகீரதனைக் (பாக்கிய இரதம்) காட்டுகின்றார்கள். அவர் எப்பொழுது வருகின்றார் என்பதோ எவ்வாறு வருகின்றார் என்பதோ எவருக்கும் தெரியாது. எனவே தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் மரணித்து விட்டீர்கள். ஆகையால் பக்தி மார்க்கத்தை முற்றாக மறந்து விடுங்கள். கடவுள் சிவன் பேசுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! அப்பொழுது உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நான் மாத்திரமே தூய்மையாக்குபவர். நீங்கள் தூய்மையாகும் போது நான் அனைவரையும் திரும்பி அழைத்துச் செல்வேன். ஒவ்வொரு வீட்டிற்கும் செய்தியைக் கொடுங்கள். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். விநாசம் முன்னிலையில் உள்ளது. நீங்கள் அழைக்கின்றீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குங்கள்! இராம இராச்சியத்தை ஸ்தாபித்து எங்களை இராவண இராச்சியத்தில் இருந்து விடுதலை செய்யுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கான முயற்சியைச் செய்கிறீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் வந்து அனைவரையும் விடுதலை செய்கின்றேன். அனைவருமே ஐந்து விகாரங்கள் என்ற இராவணனின் சிறையில் உள்ளனர். நான் அனைவருக்கும் சற்கதியை வழங்குகின்றேன். நானே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் என்று அழைக்கப்படுகின்றேன். இராம இராச்சியம் புதிய உலகிலேயே காணப்படும். பாண்டவர்களாகிய உங்களது புத்திகள் இப்பொழுது அன்பாக உள்ளன. சிலரது புத்திகள் உடனடியாகவே அன்பானது ஆகுகின்றன. ஏனையோரின் அன்பு மெதுவாகவே இணைக்கப்படுகிறது. சிலர் உடனடியாகவே ‘நாங்கள் அனைத்தையும் தந்தைக்கு அர்ப்பணிக்கின்றோம்’ எனக் கூறுகின்றார்கள். வேறு எவரும் அன்றி ஒரேயொருவர் மாத்திரமே எஞ்சியுள்ளார். அனைவருக்கும் நிச்சயமாக ஒரேயொரு தந்தையே ஆதாரமாக இருக்கின்றார். இதுவே எளிமையிலும் மிக எளிமையான விடயமாகும். தந்தையையும் சக்கரத்தையும் நினைவுசெய்தால் நீங்கள் பூகோள ஆட்சியாளர்களான அரசரும் அரசியும் (சக்கரவர்த்திகள்) ஆகுவீர்கள். இது சுவர்க்கத்தின் அதிபதி ஆகுவதற்கான பாடசாலை ஆகும். ஆகையாலேயே சக்கரவர்த்தி ராஜா என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. சக்கரத்தைத் தெரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் சக்கரவர்த்தி ஆகுகின்றீர்கள். தந்தை மாத்திரமே இதனை விளங்கப்படுத்துகின்றார். இல்லாவிட்டால் எதனைப் பற்றியும் நீங்கள் விவாதம் செய்யக்கூடாது. நீங்கள் பக்தி மார்க்கத்திற்குரிய விடயங்கள் அனைத்தையும் மறந்து விடுங்கள் என்று கூறினால் போதும். தந்தை கூறுகின்றார்: என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். இதுவே பிரதான விடயம். விரைவான முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் கல்வியில் அதிகளவு கவனம் செலுத்துகிறார்கள். கல்வியில் ஆர்வம் உள்ளவர்கள் அதிகாலையிலேயே எழுந்து கற்கிறார்;கள். பக்தியில் ஈடுபடுகின்றவர்களும் அதிகாலையில் விழித்தெழுகிறார்கள். ஒருவர் தனது தலையைத் துண்டிக்க முற்படும் பொழுது காட்சியைக் காண்கின்றார். இங்கே பாபா கூறுகின்றார்: காட்சிகள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. காட்சிகளுக்குள் சிக்கிக் கொள்வதால் ஞானமும் யோகமும் நிறுத்தப்படுகின்றன. நேரம் வீணாகுகின்றது. ஆகையாலேயே திரான்சில் செல்வதில் நீங்கள் ஆர்வம் கொண்டிருக்கக் கூடாது. அதுவும் மாயை பிரவேசிக்கக்கூடிய பெரிய வியாதியாகும். ஒரு யுத்தம் இடம்பெறும் பொழுது செய்தி அறிவிக்கப்படும் பொழுது மறுபக்கத்தைச் சேர்ந்தவர்கள் அதனை எவரும் செவிமடுக்க முடியாத வகையில் அத்தகைய மோசமான குறுக்கீடுகளை ஏற்படுத்துவதைப் போன்றே மாயையும் பலருக்குத் தடைகளை ஏற்படுத்துகின்றாள். நீங்கள் தந்தையை நினைவு செய்வதை அவள் அனுமதிப்பதில்லை. ஒருவரின் பாக்கியத்திற்குத் தடை ஏற்படும் பொழுது அது புரிந்து கொள்ளப்படுகின்றது. மாயை பிரவேசித்து இருக்கிறாளா இல்லையா எனவும் அவர்கள் சட்டத்திற்கு முரணாக ஏதேனும் செய்கின்றார்களா இல்லையா எனவும் சோதித்துப் பார்க்கப்படுகின்றது. இல்லாவிட்டால் பாபா விரைவில் அவர்களிடம் இருந்து அவர்களின் பதவியை அகற்றி விடுகின்றார். மனிதர்கள் பலரும் இவ்வாறு கூறுகின்றார்கள்: எனக்கு ஒரு காட்சி கிடைக்குமாயின் நான் இந்தச் செல்வம் சொத்து போன்ற அனைத்தையும் உங்களுக்கே கொடுத்து விடுவேன். பாபா கூறுகின்றார்: அவற்றை உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள்! கடவுளுக்கு உங்களின் பணத்தின் அவசியம் என்ன? இவ் உலகில் உள்ள அனைத்தும் எரிந்து சாம்பல் ஆகப் போவது தந்தைக்குத் தெரியும். பாபாவினால் என்ன செய்ய முடியும்? பாபாவின் மூலம் சிறு சிறு துளிகளால் ஏரி ஒன்று உருவாக்கப்படுகிறது. தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்! மக்களை உலக அதிபதிகள் ஆக்கக்கூடிய வைத்தியசாலை சார்ந்த பல்கலைக் கழகத்தை ஆரம்பியுங்கள். நீங்கள் மூன்று சதுர அடி நிலத்தில் அமர்ந்திருந்து சாதாரண மனிதர்களை நாராயணன் ஆக்க வேண்டும். இருப்பினும் மூன்று சதுர அடியைக் கொடுக்கக் கூடியவர்களைக் கூட காண முடியவில்லை. தந்தை கூறுகின்றார்: நான் வேதங்களினதும் சமயநூல்கள் அனைத்தினதும் சாரம்சத்தை உங்களுக்குக் கூறுகின்றேன். அந்தச் சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. பாபா எவரையும் அவதூறு செய்வதில்லை. இந்த நாடகம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகவே கூறப்படுகின்றது. இருப்பினும் அது ஒரு நாடகமே. எவராலும் நாடகத்தை அவதூறு செய்ய முடியாது. நான் ஞான சூரியனைப் பற்றியும் ஞானச் சந்திரனைப் பற்றியும் பேசுகின்றேன். ஆனால் அவர்கள் சந்திரனை ஆராயச் செல்கின்றார்கள். அங்கு ஓர் இராச்சியம் உள்ளதா? ஜப்பானியர்கள் சூரியனின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். நான் சூரிய வம்சத்தைப் பற்றி பேசுகின்றேன். அதன்பின்னர் மக்கள் அமர்ந்திருந்து சூரியனை வணங்குகிறார்கள். அவர்கள் சூரியனுக்குத் தண்ணீரைப் படைக்கின்றார்கள். எனவே பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்: எதனையிட்டும் அதிகளவு விவாதம் செய்யாதீர்கள். அவர்களுக்கு ஒரேயொரு விடயத்தை மாத்திரம் கூறுங்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னை மாத்திரம் நினைவு செய்தால் தூய்மை ஆகுவீர்கள். இராவண இராச்சியத்தில் அனைவருமே இப்பொழுது தூய்மை அற்றவர்களாக உள்ளார்கள். ஆனால் அவர்கள் தாம் தூய்மை அற்றவர்களாக உள்ளோம் என்பதை நம்புவதில்லை. குழந்தைகளே, ஒரு கண்ணில் அமைதி தாமமும் மறு கண்ணில் சந்தோஷ தாமமும் இருக்கட்டும். இந்தத் துன்ப உலகை மறந்து விடுங்கள். நீங்கள் உயிருள்ள கலங்கரை விளக்கங்கள். கண்காட்சிகளிலும் ‘கலங்கரை விளக்கமான பாரதம்’ என்ற பெயரே இடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது கலங்கரை விளக்கங்களாக உள்ளீர்கள். துறைமுகத்தில் உள்ள கலங்கரை விளக்கங்களே நீராவிக் கப்பல்களுக்கு வழிகாட்டுகின்றன. நீங்களும் அனைவருக்கும் முக்திதாமத்திற்கும் ஜீவன்முக்தி தாமத்திற்குமான வழியைக் காட்டுகின்றீர்கள். மக்கள் கண்காட்சிகளுக்கு வரும் போது அவர்களிடம் அதிகளவு அன்புடன் கூறுங்கள்: அனைவருக்கும் தந்தையான கடவுள் ஒரேயொருவரே. பரமாத்மாவாகிய தந்தையான கடவுள் கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! அவர் நிச்சயமாக அதனை ஒரு வாயின் மூலமாகவே கூறுவார். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை இடம்பெறுகின்றது. ஆகையால் நாங்கள் அனைவரும் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாகிய பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளும் ஆவோம். அந்தப் பிராமணர்களும் கூட பிராமணர்களாகிய உங்களது புகழையே பாடுகின்றார்கள்: தேவர்களுக்கு, பிராமணர்களுக்கு வந்தனங்கள். ஒரேயொரு தந்தையே அதிமேலானவர் ஆவார். அவர் கூறுகின்றார்: நான் உங்களுக்கு அதிமேலான இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். அதன்மூலம் நீங்கள் முழு உலகிற்கும் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். எவராலும் அந்த இராச்சியத்தை உங்களிடம் இருந்து அபகரிக்க முடியாது. முழு உலகிலும் பாரத இராச்சியமே இருந்தது. பாரதத்திற்கு அதிகளவு புகழ் உள்ளது. நாங்கள் இப்பொழுது ஸ்ரீமத்திற்கு ஏற்ப இந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. விரைவான முயற்சியாளர்கள் ஆகுவதற்கு கல்வியில் ஆர்வம் உடையவர்கள் ஆகுங்கள். அதிகாலையில் எழுந்து இக்கல்வியைக் கற்றிடுங்கள். ஒரு காட்சியைப் பெறுவதற்கான விருப்பத்தைக் கொண்டிராதீர்கள். இதில் நேரம் வீணாக்கப்படுகின்றது.2. அமைதி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்யுங்கள். இத் துன்ப உலகை மறந்திடுங்கள். எவருடனும் விவாதம் செய்யாதீர்கள். முக்தி தாமத்திற்கும் ஜீவன்முக்தி தாமத்திற்குமான வழியை அன்புடன் காட்டுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் அகநோக்கு உடையவராக இருந்து சதா சந்தோஷக் கடலில் அன்புடன் மூழ்கியிருப்பீர்களாக.கூறப்படுகிறது: அகநோக்கில் இருப்பவர்கள் சதா சந்தோஷமாக இருப்பார்கள். சதா அகநோக்கில் இருக்கும் ஆசீர்வாதத்தைப் பெறும் குழந்தைகள் தந்தையைப் போல் அன்புடன் சந்தோஷக் கடலில் அமிழ்ந்திருப்பார்கள். சந்தோஷத்தை அருள்பவரின் குழந்தைகளும் சந்தோஷத்தை அருள்பவர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் ஆத்மாக்கள் எல்லோருக்கும் சந்தோஷப் பொக்கிஷத்தைப் பகிர்ந்து அளிக்கிறார்கள். எனவே இப்போது, அகநோக்கு உடையவராகவும் முழுமையான விக்கிரகங்களாகவும் ஆகுங்கள். மக்கள் என்ன உணர்வுகளுடன் உங்களிடம் வந்தாலும் அவர்கள் செல்லும்போது அவர்களின் ஆசைகள் நிறைவேறி இருக்க வேண்டும். தந்தையின் பொக்கிஷங்களில் எந்தவிதக் குறைவும் இல்லை என்பதைப் போல் நீங்களும் தந்தையைப் போல் நிரம்பி வழிய வேண்டும்.
சுலோகம்:
உங்களின் ஆன்மீகப் பெருமையைப் பேணுங்கள். உங்களுக்கு ஒருபோதும் அவமதிக்கப்பட்ட உணர்வு எதுவும் இருக்காது.ஏகாந்தத்தின் மீது அன்பு வைத்து ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.
எப்போதும் உங்களை நிலத்தின் கீழ் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். அதாவது அகநோக்கில் இருக்க முயற்சி செய்யுங்கள். சகல செயல்களையும் நிலத்தின் கீழ் இருந்து செய்ய முடியும். அதாவது நீங்கள் அகநோக்கில் இருந்த வண்ணம் எல்லாவற்றையும் செய்ய முடியும். உங்களின் செயல்களை அகநோக்கில் இருந்தவண்ணம் செய்வதன் மூலம் நீங்கள் எந்தவிதமான தடைகளில் இருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள். உங்களால் நேரத்தையும் அத்துடன் எண்ணங்களையும் சேமிக்க முடியும். ஏகாந்தத்தில் இருங்கள். அத்துடன் கூடவே களிப்பூட்டும் சுபாவத்தையும் கொண்டிருங்கள்.