19.03.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இந்தப் பழைய உலகில் இருந்தும் உங்கள் பழைய சரீரத்தில் இருந்தும் உயிருடன் மரணித்து வாழ்ந்து, வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். ஆகவே, சரீர உணர்வைத் துண்டித்து, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்.
கேள்வி:
மிகச் சிறந்த முயற்சியைச் செய்யும் குழந்தைகளின் அடையாளங்கள் எவை?பதில்:
மிகச் சிறந்த முயற்சியைச் செய்யும் குழந்தைகள் அதிகாலையிலேயே எழுந்து, ஆத்ம உணர்வில் இருப்பதைப் பயிற்சி செய்வார்கள். அவர்கள் ஒரேயொரு தந்தையை நினைவு செய்வதற்கே முயற்சி செய்வார்கள். அவர்கள் எந்தவொரு சரீரதாரிகளையும் நினைவு செய்யாது, ஒரேயொரு தந்தையையும், 84 பிறவிச் சக்கரத்தையும் நினைவு செய்வதையே இலக்காகக் கொண்டிருக்கின்றார்கள். இது மிகவும் அற்புதமானதொரு பாக்கியம்!ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உயிருடன் மரணித்து வாழ்கின்றீர்கள். நீங்கள் எவ்வாறு மரணித்தீர்கள்? நீங்கள் சரீர உணர்வைத் துறந்து விட்டதால், ஆத்மா மாத்திரமே எஞ்சி உள்ளார். சரீரங்கள் அழிக்கப்படுகின்றன, ஆத்மாக்கள் என்றுமே மரணிப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: உயிருடன் இருக்கும் பொழுதே உங்களை ஆத்மாக்கள் என்று கருதி பரமாத்மாவாகிய பரமதந்தையை நினைவு செய்யும் பொழுது ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். ஓர் ஆத்மா முற்றாகத் தூய்மையாகும் வரை அவரால் ஒரு தூய சரீரத்தைப் பெற முடியாது. ஓர் ஆத்மா தூய்மையாகிய பின்னர், ஒரு பாம்பு தனது செட்டையைக் கழற்றி விடுவதைப் போன்று, ஆத்மாவும் இயல்பாகவே தனது சரீரத்தை நீக்கி விடுகின்றார். பாம்பின் பற்று துண்டிக்கப்படுகின்றது. புதியதொரு செட்டையைப் பெறும் பொழுது பழையது விடுபடுகின்றது என்பதை பாம்பு அறிந்து கொள்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் சொந்த புத்தியைக் கொண்டிருக்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இப்பழைய உலகில் இருந்தும் பழைய சரீரத்தில் இருந்தும் உயிருடன் மரணித்து வாழ்கின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் சரீரங்களை விட்டுச் சென்ற பின்னர், ஆத்மாக்களாகிய நீங்கள் எவ்விடத்திற்குத் திரும்பிச் செல்வீர்கள்? உங்கள் வீட்டிற்காகும். அனைத்திற்கும் முதலில் நீங்கள் உறுதியாக நினைவு செய்ய வேண்டியது: நான் ஓர் ஆத்மா, சரீரமல்ல. ஆத்மாவும் கூறுகின்றார்: பாபா, நான் இப்பொழுது உங்களுக்கு உரியவன் ஆவேன். நான் உயிருடன் மரணித்து வாழ்கின்றேன். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது பெற்றுள்ள கட்டளை: உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், அப்பொழுது நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். நினைவு செய்யும் இப் பயிற்சியானது உறுதியாக இருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா நீங்கள் வந்துவிட்டீர்கள், எனவே நாங்கள் உங்களுக்கு மாத்திரமே உரியவர்களாக இருப்போம்.ஆத்மாக்கள் ஆண்களேயன்றி பெண்கள் அல்ல. “நாம் சகோதரர்கள்” என்றே எப்பொழுதும் கூறப்படுகின்றது. ‘நீங்கள் அனைவரும் சகோதரிகள்’ என்று நீங்கள் ஒருபோதும் கூறுவதில்லை. நீங்கள் அனைவரும் புதல்வர்கள். புதல்வர்களாகிய நீங்கள் அனைவரும் ஓர் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்களைப் புதல்வி என்று அழைத்தீர்களாயின் உங்களால் எவ்வாறு ஓர் ஆஸ்தியைப் பெற முடியும்? ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்களே. தந்தை அனைவருக்கும் கூறுகின்றார்: ஆன்மீகக் குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள்! ஆத்மாக்கள் சின்னஞ்சிறிய அளவினர். இவை மிகவும் ஆழமானதும், சூட்சுமமானதும், புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயங்களும் ஆகும். குழந்தைகளாகிய உங்களால் நினைவில் ஸ்திரமாக நிலைத்திருக்க முடிவதில்லை. சந்நியாசிகள் கொடுக்கும் ஓர் உதாரணமும் உள்ளது. ஒருவரிடம் ‘நான் ஓர் எருமை, நான் ஓர் எருமை’ என தனக்குத்தானே கூறுங்கள் என்று கூறப்பட்டது. இவ்வாறு கூறியதால், தான் ஒரு எருமையாகி விட்டதாக அந்த நபர் நினைத்தார். உண்மையில் எவருமே எருமை ஆகுவதில்லை. தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். எவரிடமும் ஆத்மாக்கள் பற்றியதும் பரமாத்மா பற்றியதுமான இந்த ஞானம் இல்லை. அதனாலேயே அவர்கள் அத்தகைய விடயங்களைக் கூறுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக வேண்டும். நான் ஓர் ஆத்மா. நான் இப்பழைய சரீரத்தை நீக்கிவிட்டு, புதியதொன்றை எடுக்க வேண்டும். ஆத்மா நெற்றியின் புருவமத்தியில் வசிக்கும் ஒரு நட்சத்திரம் என்று மக்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், பின்னர் அவர்கள் ஆத்மாக்கள் அனைவரும் பெருவிரல் வடிவானவர்கள் என்றும் கூறுகின்றார்கள். ஒரு நட்சத்திரத்திற்கும் பெருவிரல் வடிவத்திற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது! அவர்கள் களிமண்ணாலான சாலிகிராம்களையும் செய்கின்றார்கள். ஆத்மாக்களால் அவ்வளவு பெரியதாக இருக்க முடியாது. மனிதர்கள் சரீர உணர்வில் இருப்பதனால் சாதாரணமாக அவர்கள் பெரிய உருவங்களைச் செய்கின்றார்கள். இவை அனைத்தும் மிகவும் சூட்சுமமான விடயங்களாகும். மக்கள் எங்காவது ஒரு சிறிய மூலையில் ஏகாந்தமாக அமர்ந்திருந்து பக்தி செய்கின்றார்கள். நீங்கள் ஓர் ஆத்மா என்பதை உறுதியாக உங்கள் மனதில் பதித்து வைத்தவாறே உங்கள் வீட்டில் வசிக்கும் போதும் உங்கள் கடைமைகளைச் செய்யுங்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்கள் தந்தை, நானும் ஒரு சின்னஞ்சிறிய புள்ளியே ஆவேன். நான் பெரியதோர் உருவம் அல்ல. என்னிடம் அனைத்து ஞானமும் உள்ளது. ஆத்மாவும் பரமாத்மாவும் ஒரேமாதிரியானவர்களே, ஆயினும் அவர் பரமாத்மா எனப்படுகின்றார். இதுவே நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் அமரத்துவமானவர். நான் அமரத்துவமானவராக இல்லாவிடின், என்னால் எவ்வாறு உங்களைத் தூய்மையாக்க முடியும்? என்னால் எவ்வாறு உங்களை “இனிமையான குழந்தைகளே” என்று அழைக்க முடியும்? ஆத்மாவே அனைத்தையும் செய்கின்றார். தந்தை வந்து உங்களை ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக்குகின்றார். இதற்கு பெரும் முயற்சி தேவை. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள்! இவ் உலகில் பலவகையான யோகிமார்கள் இருக்கின்றார்கள். ஒரு பெண்ணிற்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், அவளது எதிர்காலக் கணவனை நோக்கியே அவளுடைய யோகம் உள்ளது. அதற்கு முன்னர் அவருடன் அவள் தொடர்பு கொண்டிருக்கவில்லை. எதிர்காலக் கணவரை பார்த்த பின்னரே, அவள் அவரது நினைவில் இருக்கின்றாள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! இதனை நீங்கள் மிக நன்றாகப் பயிற்சி செய்ய வேண்டும். மிகச் சிறந்த முயற்சியாளர்களான குழந்தைகள் அதிகாலையிலே விழித்தெழுந்து ஆத்ம உணர்வில் இருக்கும் பயிற்சியைச் செய்கின்றார்கள். மக்களும் அதிகாலையிலேயே பக்தி செய்கின்றார்கள். அவர்கள் தமது இஷ்ட தெய்வத்தை நினைவு செய்கின்றார்கள். அவர்கள் அனுமானை அதிகளவு வழிபட்டாலும், அவர்களுக்கு அவரைப் பற்றி எதுவுமே தெரியாது. தந்தை வந்து விளங்கப்படுத்துகின்றார்: உங்கள் புத்தி முற்றாகவே குரங்குகளுடையதைப் போல் ஆகிவிட்டது. நீங்கள் மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆகுகின்றீர்கள். இது தமோபிரதானான தூய்மையற்ற உலகமாகும். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையிடம் வந்திருக்கின்றீர்கள். நான் மறுபிறவிக்கு அப்பாற்பட்டவன். இச்சரீரம் இந்த தாதாவிற்கு உரியது. எனக்கென ஒரு சரீரப் பெயர் இல்லை. நன்மை செய்பவரான சிவன் என்பதே எனது பெயர் ஆகும். நன்மை செய்பவரான சிவபாபா வந்து நரகத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் அதிகளவு நன்மையை எடுத்து வருகின்றார். அவர் முற்றாகவே நரகத்தை அழிக்கின்றார். சுவர்க்க ஸ்தாபனை இப்பொழுது பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் இடம்பெறுகின்றது. நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்கள். முன்னேறிச் செல்லும் போது ஒருவரையொருவர் எச்சரியுங்கள்: மன்மனாபவ! தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தையே தூய்மையாக்குபவர். அவர்கள் கடவுள் சிவன் பேசுகின்றார் என்பதற்குப் பதிலாக, கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பேசுகின்றார் எனத் தவறுதலாக எழுதி உள்ளார்கள். கடவுள் அசரீரியானவர். அவரே பரமாத்மா பரமதந்தை என அழைக்கப்படுகின்றார். அவரது பெயரே சிவன். சிவனே அதிகளவு வழிபாடு செய்யப்படுகின்றார். ‘காசியின் சிவனே’ என மக்கள் உச்சாடனம் செய்கிறார்கள். பக்தி மார்க்கத்திலே அவருக்குப் பல பெயர்களை அவர்கள் கொடுத்திருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் சொந்த வருமானத்திற்காக அவருக்கு ஆலயங்கள் பலவற்றையும் கட்டியுள்ளார்கள். அவரது உண்மையான பெயர் சிவன் ஆகும். எவ்வாறாயினும், அமிர்தத்தை உங்களுக்குப் பருகத் தரும் சோமநாதர் (அமிர்தத்தின் பிரபு) என்;ற பெயரையும் அவருக்குச் சூட்டி இருக்கின்றார்கள். அவரே உங்களுக்கு ஞானச் செல்வத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகும் போது, அவருக்கான ஆலயங்களைக் கட்டுவதற்கென நீங்கள் அதிகளவு செலவழிக்கின்றீர்கள். அவர் உங்களுக்கு அத்தகைய அமிர்தத்தைக் கொடுத்தபடியால் அவ்வாறு செய்கின்றீர்கள். அமிர்த பிரபுவுடன் அமிர்தநாயகியும் (சோமநாதினி) இருக்க வேண்டும். அரசனும் அரசியும் எவ்வாறோ பிரஜைகளும் அவ்வாறே. ஆகையால், நீங்கள் அனைவருமே அமிர்த பிரபுக்களும் அமிர்த நாயகிகளும் ஆவீர்கள். நீங்களும் பொன்னுலகிற்குச் செல்வீர்கள். அங்கு, தங்கக்கட்டிகள் இருக்கும். இல்லாவிடின் எவ்வாறு சுவர்கள் போன்றவை கட்டப்படமுடியும்? அங்கு பெருமளவு தங்கம் இருப்பதனாலேயே அது பொன்னுலகம் எனப்படுகின்றது. இதுவே இரும்பு மற்றும் கற்களினது உலகமாகும். சுவர்க்கம் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே உங்கள் வாய் ஊற ஆரம்பிக்கின்றது. விஷ்ணுவின் இரு வடிவங்களும் இருக்கின்றன: இலக்ஷ்மியும் நாராயணனும். அவர்கள் வெவ்வேறானவர்கள். நீங்களே விஷ்ணு தாமத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் இராவண தாமத்தில் இருக்கின்றீர்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். தந்தை பரந்தாமத்தில் வசிக்கின்றார், ஆத்மாக்களாகிய நீங்களும் பரந்தாமத்திலேயே வசிக்கின்றீர்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு எவ்விதமான சிரமங்களையும் கொடுப்பதில்லை. இவை அனைத்தும் மிகவும் இலகுவானவை. இருப்பினும் உங்கள் எதிரியாகிய இராவணன், உங்கள் முன்னால் நிற்கின்றான். அவனே தடைகளை உருவாக்குகின்றான். ஞானத்திற்குத் எந்தத் தடைகளும் இருப்பதில்லை. நினைவு செய்வதற்கே தடைகள் உள்ளன. மாயை மீண்டும் மீண்டும் உங்களை நினைவில் நிலைத்திருப்பதை மறக்கச் செய்கின்றாள். அவள் உங்களை சரீர உணர்வு உடையவர்களாக்கி நீங்கள் தந்தையின் நினைவில் இருப்பதையும் தடுக்கின்றாள். இந்த யுத்தம் நடைபெறுகின்றது. தந்தை கூறுகின்றார்: நீங்களே கர்மயோகிகள். அச்சா, பகல் வேளையில் உங்களால் என்னை நினைவு செய்ய முடியாவிடின் இரவில் என்னை நினைவு செய்யுங்கள். இரவில் நீங்கள் செய்யும் இந்தப் பயிற்சியானது பகலிலும் பயனைக் கொடுக்கும். உங்களை உலக அதிபதி ஆக்கும் தந்தையையே நீங்கள் நினைவு செய்கின்றீர்கள் என்ற விழிப்புணர்வை எப்பொழுதும் கொண்டிருங்கள். நீங்கள் தந்தையின் நினைவையும் 84 பிறவிச் சக்கரத்தையும் நினைவு செய்யும் போது, அதுவும் உங்களது மகாபாக்கியமாகும். மற்றவர்களிடமும் கூறுங்கள்: சகோதர சகோதரிகளே, கலியுகம் முடிவடைந்து சத்தியயுகம் வருகின்றது. தந்தை வந்து சத்திய யுகத்திற்காக எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். கலியுகத்தின் பின்னர் சத்தியயுகம் வரவேண்டும். வேறு எவரையுமன்றி தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள். ஓய்வுபெற்ற நிலையில் இருப்பவர்கள் சந்நியாசிகளின் சகவாசத்தையே கொண்டிருப்பார்கள். ஓய்வுபெற்ற நிலையில் இருப்பது எனில் வார்த்தைகளுக்கான எவ்விதமான அவசியமும் இல்லை என்பதாகும். ஆத்மாக்கள் மௌனமாகவே இருக்கின்றார்கள். அவர்களால் இரண்டறக் கலந்திருக்க முடியாது. எந்தவொரு நடிகனாலும் இந்த நாடகத்தை விட்டுச் செல்ல முடியாது. தந்தையைத் தவிர வேறு எவரையுமே நினைவு செய்ய வேண்டாம் என்று தந்தை உங்களுக்கு கூறியிருக்கின்றார். நீங்கள் அனைவரையும் பார்த்த போதிலும் அவர்களை நினைவு செய்யக் கூடாது. இந்தப் பழைய உலகம் அழியப் போகின்றது, இது ஓர் இடுகாடு. எப்போதாவது சடலங்கள் நினைவு செய்யப்படுகின்றனவா? தந்தை கூறுகின்றார்: அவர்கள் அனைவரும் ஏற்கனவே மரணித்து விட்டார்கள். நான் தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்கி அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகவே வந்துள்ளேன். இங்குள்ள சரீரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். தற்போது, மிகவும் சக்திவாய்ந்த குண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அவர்கள் கூறுகின்றார்கள்: எங்கு நாம் குறி வைக்கின்றோமோ அந்த இடத்திற்கு இங்கிருந்தே எங்களால் குண்டுகளை வீச முடியும். விநாசம் மீண்டும் ஒருமுறை நடைபெறுவதும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இறைவன் வந்துள்ளார், அவர் உங்களுக்கு புதிய உலகிற்காக இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். இதுவே சமயநூல்களில் குறிப்பிடப்பட்ட அதே மகாபாரத யுத்தமாகும். கடவுள் ஸ்தாபனையையும் விநாசத்தையும் நடாத்துவதற்கு நிச்சயமாகவே வந்துள்ளார். இந்தப் படங்கள் மிகவும் தெளிவானவை. நீங்கள் ஒரு காட்சியைக் காண்கின்றீர்கள்: நாம் இவ்வாறே ஆகுவோம். இவ்வுலகிற்கான கல்வி அனைத்தும் இங்கேயே முடிவிற்கு வந்துவிடும். அங்கே வைத்தியர்களுக்கான அல்லது சட்டத்தரணிகளுக்கான தேவையே இல்லை. இங்கிருந்தே நீங்கள் அங்கு செல்வதற்கான ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். இங்கே சகல ஆற்றல்களையும் திறமைகளையும் கொண்டிருப்பவர்கள் அவற்றை அங்கே எடுத்துச் செல்வார்கள். அங்கு அனைத்தையும் கட்டியெழுப்புவதற்கு முதல்தரமான கட்டிட வல்லுநர்கள் இருப்பார்கள். அங்கே “பசார்” போன்றவையும் இருக்கும். அனைத்தும் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கும். அவர்கள் இங்கு கற்றுக் கொண்ட திறமைகளை அங்கு எடுத்துச் செல்வார்கள். அவர்கள் விஞ்ஞானத்தின் மூலம் பல ஆற்றல்களையும் திறன்களையும் கற்றுக் கொள்கிறார்கள். இவை அனைத்தும் அங்கு பயன்படும். அவர்கள் பிரஜைகளில் ஒருவர் ஆகுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் பிரஜைகளில் ஒருவர் ஆகப் போவதில்லை. நீங்கள் பாபாவினதும் மம்மாவினதும் சிம்மாசனத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே இங்கு வந்துள்ளீர்கள். ஆகவே, தந்தை உங்களுக்குக் கொடுக்கும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். அவர் மாத்திரமே முதல் தரமான ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார்: என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! சில சமயங்களில் ஒருவரது பாக்கியம் திடீரெனத் திறந்து கொள்கின்றது. யாராவது ஒருவர் அதற்குக் கருவியாகின்றார். பாபா குமாரிகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: இப்பொழுது திருமணம் செய்வதன் மூலம் நீங்கள் உங்களை முற்றாக அழித்துக் கொள்வீர்கள். அந்தச் சாக்கடைக்குள் வீழ்ந்து விடாதீர்கள்! தந்தை கூறுவதை நீங்கள் கேட்க மாட்டீர்களா? உங்களுக்குச் சுவர்க்கத்தின் சக்கரவர்த்தினி ஆக விருப்பம் இல்லையா? நீங்கள் அவ்வுலகிற்குச் செல்லவே மாட்டீர்கள் என்றும், அவ்வுலகத்தை நினைவு செய்யவும் மாட்டீர்கள் எனவும் உங்களுக்கே நீங்கள் சத்தியம் செய்யுங்கள். யாராவது எப்பொழுதாவது ஓர் இடுகாட்டை நினைவு செய்வார்களா? இங்கே நீங்கள் கூறுகின்றீர்கள்: எவ்வளவு விரைவில் நான் இந்தச் சரீரத்தை விடுகின்றேனோ அவ்வளவு விரைவாக என்னால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும். எங்கள் 84 பிறவிகள் இப்பொழுது ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. நாம் இப்பொழுது எங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்றோம். மற்றவர்களுக்கும் இதனைக் கூறுங்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு சத்தியயுக இராச்சியத்தைக் கொடுக்க முடியாது என்பதை நீங்கள் அறிந்து கொண்டுள்ளீர்கள். இந்தச் சரீரமும் கர்மவேதனையை அனுபவம் செய்கின்றது. சிலவேளைகளில், பாபாவும் தாதாவும் தமக்கிடையே ஒரு ஆன்மீக சம்பாஷணையை நடத்துவார்கள். இந்த பாபா (பிரம்மா) கூறுகின்றார்: பாபா என்னை ஆசீர்வதியுங்கள்! இந்த இருமலுக்கு ஏதாவது மருந்தைக் கொடுங்கள் அல்லது இதற்கு ஏதாவது மந்திரம் செய்து அதனை நிறுத்திவிடுங்கள். சிவபாபா பதில் அளிக்கின்றார்: இல்லை! நீங்கள் அந்த வேதனையை அனுபவித்தேயாக வேண்டும். நான் உங்களது இந்தச் சரீரத்தைப் பாவிப்பதனால் பிரதிபலனாக ஏதோ ஒன்றைக் கொடுக்கின்றேன். ஆனால் இவை உங்கள் கர்மக்கணக்காகும். ஏதாவது ஒன்று இறுதிவரை இருந்து கொண்டே இருக்கும். நான் உங்களை ஆசீர்வதித்தால், அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டும். இங்கே அமர்ந்திருக்கும் இந்தப் புதல்வி நாளை ஒரு புகையிரத விபத்தில் மரணித்தால், அதுவும் நாடகத்தில் உள்ளது என்றே பாபா கூறுவார். ‘ஏன் பாபா நீங்கள் அவரை முன்னரே எச்சரிக்கவில்லை?’ என உங்களால் அப்பொழுது கேட்க முடியாது. அது நியதியல்ல. நான் தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்கவே வந்துள்ளேன். நான் உங்களுக்கு மற்றைய விடயங்களைப் பற்றிக் கூற வரவில்லை. நீங்களே உங்கள் சொந்தக் கர்மக்கணக்குகளை முடித்துவிட வேண்டும். இதில் ஆசீர்வாதங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. அது உங்களுக்கு வேண்டுமாயின் சந்நியாசிகளிடம் செல்லுங்கள். பாபா உங்களுக்கு ஒன்றை மாத்திரம் கூறுகின்றார். நீங்கள் உங்களை நரகத்தில் இருந்து சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுமாறு அழைத்தீர்கள். சீதையின் இராமரே தூய்மையாக்குபவர் என மக்கள் பாடுகின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் அனைத்தையும் தவறாகப் புரிந்துள்ளார்கள். அவர்கள் இராமரைப் புகழ்ந்து அவரைப் பற்றி, ‘அரசர் இராமர் ரகு குலத்தின் பிரபு ஆவார்…’ எனப் பாடுகின்றார்கள். பாபா கூறுகின்றார்: நீங்கள் பக்திமார்க்கத்தில் பெருமளவு பணத்தைத் தொலைத்து விட்டீர்கள். “உங்களின் இவ்வுலகிற்கு என்ன நடந்து விட்டது என்பதைப் பாருங்கள்!” என்றதோர் பாடல் உள்ளது. அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை உருவாக்கி அவற்றை வழிபாடு செய்த பின்னர் அதனை கடலினுள் மூழ்கடிக்கின்றார்கள். அவர்கள் எவ்வளவு பணத்தை வீணாக்குகின்றார்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இவை அனைத்தும் மீண்டும் இடம்பெறும். அத்தகைய விடயங்கள் சத்தியயுகத்தில் நடைபெறாது. அனைத்தும் விநாடிக்கு விநாடி நிச்சயிக்கப்பட்டது. அதே விடயங்களே ஒவ்வொரு சக்கரமும் மீண்டும் நடைபெறும். நாடகமானது மிக நன்றாக விளங்கிக் கொள்ளப்படவேண்டும். அச்சா, உங்களால் அதிகளவு நினைவு செய்ய முடியாவிட்டாலும், தந்தை கூறுகின்றார்: அல்பாவையும் (தந்தை) உங்கள் ஆஸ்தியாகிய பீற்றாவையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் சக்கரத்தில் சுற்றி வரும் பொழுது எவ்வாறு நீங்கள் 84 பிறவிகளை எடுத்தீர்கள் என்ற உள்ளார்ந்த போதையைக் கொண்டிருக்க வேண்டும். இப்படங்களைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கும் இதனை விளங்கப்படுத்துங்கள். இது மிகவும் இலகுவானது. இது ஆன்மீகக் குழந்தைகளுடனான இதயபூர்வமான சம்பாஷணையாகும். குழந்தைகளான உங்களுடனேயே தந்தை ஆன்மீக சம்பாஷணை செய்கின்றார். அவரால் வேறு எவருடனும் ஒரு சம்பாஷணையைக் கொண்டிருக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். ஆத்மாக்களே அனைத்தையும் செய்கின்றார். தந்தை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றார்: நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள். நீங்கள் எப்போதும் மனிதர்களாவே பிறப்பு எடுக்கின்றீர்கள். காமத்தில் ஈடுபடாதீர்கள் என்ற கட்டளைச் சட்டத்தைத் தந்தை இடுவதைப் போன்றே எவரையும் அழவேண்டாம் என்ற கட்டளையையும் அவர் இடுகின்றார். சத்திய, திரேதா யுகங்களில் எவருமே அழுவதில்லை. அங்கு சிறு குழந்தைகள் கூட அழமாட்டார்கள். எவருமே அழுவதற்கு அனுமதியில்லை. அது அனைவரும் முகமலர்ச்சியுடன் இருக்கும் உலகமாகும். அதனை நீங்கள் இங்கேயே பயிற்சி செய்ய வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடம் ஆசீர்வாதங்களைக் கேட்பதற்குப் பதிலாக, உங்கள் கர்மக்கணக்குகள் அனைத்தையும் நினைவு யாத்திரையின் மூலம் முடித்து விடுங்கள். தூய்மை ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். இந்த நாடகத்தை மிகச்சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.2. இப்பழைய உலகினைப் பார்க்கின்ற போதிலும் எதையும் நினைவு செய்யாதீர்கள். ஒரு கர்மயோகி ஆகுங்கள். சதா முகமலர்ச்சியாக இருப்பதற்கு பயிற்சி செய்யுங்கள். ஒருபோதும் அழாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் வீட்டில் உங்களின் குடும்பத்துடன் வாழும்போது, ‘நான்’ என்ற உணர்வுகள் எல்லாவற்றையும் துறப்பதன் மூலம் ஓர் உண்மையான நம்பிக்கைப் பொறுப்பாளராகி, மாயையை வென்றவர் ஆகுவீர்களாக.எப்படிக் குப்பையில் கிருமிகள் உற்பத்தி ஆகுகின்றனவோ, அவ்வாறே, எங்கே ‘எனது’ என்ற உணர்வு இருக்கிறதோ, அங்கே மாயை பிறப்பு எடுப்பாள். மாயையை வென்றவர் ஆகுவதற்கான இலகுவான வழிமுறை, உங்களை ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகக் கருதுவதே ஆகும். ஒரு பிரம்மாகுமார் என்றால் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக இருப்பதாகும். ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு எவரிடமும் எந்தவிதமான பற்றும் கிடையாது. ஏனென்றால் அவருக்கு ‘எனது’ என்ற உணர்வு இருக்காது. நீங்கள் உங்களை ஓர் இல்லறத்தவராகக் கருதும்போதே மாயை வருவாள். ஆனால் நீங்கள் உங்களை ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகக் கருதும்போது, மாயை ஓடி விடுவாள். ஆகவே, உங்களுடைய குடும்பத்துடன் எதையும் செய்ய முன்னர், பற்றற்றவர் ஆகுங்கள். நீங்கள் மாயையால் பாதிக்கப்படாதவர் ஆகுவீர்கள்.
சுலோகம்:
எங்கே அகங்காரம் இருக்கிறதோ, அங்கே நிச்சயமாக ஏதாவது அவமதிக்கப்பட்ட உணர்வு இருக்கும்.அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.
நீங்கள் எழுந்து நிற்கும்போது, அமரும்போது, பேசும்போது, சேவை செய்யும்போது மக்கள் உங்களின் அகச் சுத்தத்தையும் சத்தியத்தையும் அனுபவம் செய்ய வேண்டும். அப்போது மட்டுமே உங்களால் கடவுளை வெளிப்படுத்துவதற்குக் கருவிகள் ஆகமுடியும். இதற்கு, தூய்மையின் ஒளியானது சதா ஏற்றப்பட்டிருக்க வேண்டும். சிறிதளவேனும் குழப்பத்தைக் கொண்டிருக்காதீர்கள். எந்தளவிற்கு தூய்மையின் ஒளி அசைக்க முடியாமல் இருக்கிறதோ, அந்தளவிற்கு இலகுவாக மக்களால் தந்தையை இனங்காண முடியும்.