19.04.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே எல்லையற்ற தந்தைக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருங்கள். அப்போது நீங்கள் முழுச் சக்தியையும் பெறுவீர்கள். நீங்கள் தொடர்ந்தும் மாயையை வெற்றிகொள்வீர்கள்.
கேள்வி:
தந்தை எந்த முக்கிய அதிகாரத்தைக் கொண்டுள்ளார்? அதன் அறிகுறி என்ன?பதில்:
இந்த ஞானத்தின் அதிகாரமே தந்தையிடமுள்ள முக்கிய அதிகாரமாகும். அவரே ஞானக்கடல் என்பதால் அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு இக்கல்வியைக் கற்பிக்கின்றார். அவர் தன்னைப் போலவே உங்களையும் ஞானம் நிறைந்தவர்களாக ஆக்குகின்றார். இக்கல்வியின் இலக்கும் குறிக்கோளும் உங்களிடம் உள்ளன. நீங்கள் இக்கல்வி மூலம் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகிறீர்கள்.பாடல்:
உலகம் மாறினாலும் நான் நிலையாக இருப்பேன்…ஓம் சாந்தி.
கடவுளின் புகழைப் பக்தர்கள் பாடுகிறார்கள். இப்பொழுது நீங்கள் பக்தர்கள் அல்ல. நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆகிவிட்டீர்கள். நம்பிக்கைக்குரிய குழந்தைகளே தேவைப்படுகின்றார்கள். ஒவ்வொரு விடயத்திலும் நீங்கள் நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும். ஒரு கணவனின் பார்வை தனது மனைவியை விட வேறொருவர் மீது கவரப்பட்டாலோ அல்லது ஒரு மனைவியின் பார்வை தனது கணவனைத் தவிர வேறொருவர் மீது கவரப்பட்டாலோ அவர்கள் விசுவாசத்திற்கு உரியவர்கள் அல்ல என்றே அழைக்கப்படுவார்கள். இப்பொழுது இங்கே உங்களுக்கு எல்லையற்ற தந்தை உள்ளார். அவருடன் நம்பிக்கைக்குரிய குழந்தைகளும் விசுவாசமற்ற குழந்தைகளும் உள்ளார்கள். நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த சிலர் பின்னர் விசுவாசம் அற்றவர்களாகி விடுகின்றனர். தந்தையே உயர் அதிகாரியாவார். அவரே சர்வசக்திவான். ஆகவே அவருடைய குழந்தைகளும் அவரைப் போன்றிருக்க வேண்டும். தந்தையிடம் வலிமையும் சக்தியும் உள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் இராவணனை வெற்றி கொள்வதற்கான வழிமுறையை அவர் உங்களுக்குக் காட்டுகின்றார். இதனாலேயே அவர் சர்வசக்திவான் என்று அழைக்கப்படுகின்றார். நீங்களே சக்தி சேனையினர். நீங்கள் உங்களையே சர்வவல்லமை உடையவர்கள் எனவும் அழைக்கின்றீர்கள். தந்தை எங்களுக்கு அவரிடமுள்ள வலிமையைக் கொடுக்கின்றார். அவர் மாயையாகிய இராவணனை எவ்வாறு வெற்றி கொள்வது என்பதை உங்களுக்குக் காட்டுகின்றார். நீங்கள் சக்தி வாய்ந்தவர்கள் ஆகவேண்டும். தந்தையே ஞானத்தின் அதிகாரி ஆவார். அவர் ஞானம் நிறைந்த ஒரேயொருவர் ஆவார். பக்தி மார்க்கத்தில் அம்மக்கள் சமயநூல்களின் அதிகாரிகளாக இருப்பது போன்று நீங்களும் இப்பொழுது சர்வ சக்திவான்களாகவும் ஞானம் நிறைந்தவர்களாகவும் ஆகுகின்றீர்கள். நீங்களும் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இது ஒரு பாடசாலை (கற்கும் இடம்). இங்கு கற்கும் இந்த ஞானத்தின் மூலம் நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். இந்த ஒரு பாடசாலையே உண்டு. நீங்கள் இங்கேயே கற்க வேண்டும். பிரார்த்தனை போன்ற எதனையும் செய்ய வேண்டியதில்லை. கற்பதன் மூலமே நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். உங்களுக்கென இலக்கும் குறிக்கோளும் உள்ளன. தந்தை ஞானம் நிறைந்தவர் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவருடைய கற்பித்தல்கள் முற்றிலும் வேறுபட்டவை. தந்தையே ஞானக்கடல் என்பதால் அனைத்தும் அவருக்கே தெரியும். அவர் எங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுக்கின்றார். வேறு எவராலும் இதனை எங்களுக்குக் கொடுக்க முடியாது. உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பதற்காகவே தந்தை வருகின்றார். அதன் பின்னர் அவர் சென்று விடுகின்றார். இக்கல்வியில் இருந்து நீங்கள் என்ன வெகுமதியைப் பெறப் போகின்றீர்கள் என்பது உங்களுக்கும் தெரியும். மதரீதியான ஒன்றுகூடல்களும் குருமார்கள் போன்றோரும் பக்திமார்க்கத்திற்கே உரியவை. இப்பொழுது நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இக்குலத்திற்கு உரியவர்கள் பக்திமார்க்கத்தில் இருந்தே தோன்றுவார்கள் என்பது உங்களுக்கும் தெரியும். சேவை செய்வதற்கு குழந்தைகளாகிய நீங்கள் வேறுபட்ட வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் அனுபவங்களைக் கூறுவதன் மூலம் நீங்கள் வேறு பலரின் பாக்கியத்தை உருவாக்க வேண்டும். சேவை செய்யும் குழந்தைகளாகிய உங்களின் ஸ்திதி பயமில்லாமலும் அசைக்க முடியாததாகவும் யோகியுக்தாகவும் இருக்க வேண்டும். யோகத்தில் நிலைத்திருந்து சேவை செய்யும் போது உங்களுக்கு வெற்றி கிட்டும். குழந்தைகளாகிய நீங்கள் எவரையும் வற்புறுத்தக் கூடாது. இதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் மிகவும் யோகியுத்தாக இருக்க வேண்டும். உண்மையில் நீங்கள் அனைவரும் இளைப்பாறும் ஸ்திதியில் உள்ளீர்கள் என்றும் நீங்களே சத்தத்திற்கு அப்பால் இருப்பவர்கள் என்றும் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். இளைப்பாறும் ஸ்திதியில் இருக்கின்ற நீங்களே தந்தையையும் சத்தத்திற்கு அப்பால் உள்ள வீட்டையும் நினைவு செய்பவர்கள். உங்களுக்கு வேறு எந்த விருப்பமும் இருக்கக் கூடாது. உங்களுக்கு நல்ல உடைகள் போன்றன வேண்டும் எனக் கூறுவது அனைத்தும் தூய்மையற்ற விருப்பங்கள் ஆகும். சரீர உணர்வு உடையவர்களினால் சேவை செய்ய இயலாது. நீங்கள் ஆத்ம உணர்வுடையவராக வேண்டும். இறை குழந்தைகளுக்கு யோகசக்தி தேவை. யோகம் என்பது சக்தியாகும். தனது குழந்தைகள் அனைவரையும் பாபா அறிவார். நீங்கள் எந்தப் பலவீனத்தை அகற்ற வேண்டும் என்பதை பாபாவினால் உடனடியாகக் கூற முடியும். பாபா விளங்கப்படுத்தி உள்ளார்: சிவாலயத்திற்குச் செல்லுங்கள். அங்கு நீங்கள் பல பக்தர்களைக் காண்பீர்கள். பலர் காசியில் வாழ்வதற்குச் செல்கின்றார்கள். காசியின் பிரபு தங்களுக்கு நன்மை செய்வார் என அவர்கள் எண்ணுகிறார்கள். நீங்கள் அங்கு பல வாடிக்கையாளர்களைக் காண்பீர்கள். எனினும் இதற்கு உங்களுக்கு நுண்ணறிவு மிக்கதொரு புத்தி தேவை. நீங்கள் அங்கு சென்று கங்கையில் நீராடுபவர்களுக்கும் விளங்கப்படுத்தலாம். ஆலயங்களுக்குச் சென்றும் நீங்கள் விளங்கப்படுத்தலாம். மறைமுகமான முறையில் உடை அணிந்து கொண்டும் நீங்கள் செல்லலாம். அனுமானின் உதாரணமும் உள்ளது. உண்மையில் அந்த உதாரணம் உங்களையே குறிப்பிடுகின்றது. பாதணிகளுக்கு மத்தியில் அமர்ந்திருக்கின்ற விடயம் அல்ல. நீங்கள் இதில் விவேகம் மிக்கவராகவும் திறமைசாலியாகவும் இருக்க வேண்டும். இன்னமும் எவருமே கர்மாதீத் ஆகவில்லை, ஓரிரண்டு பலவீனங்கள் இன்னமும் இருக்கின்றன என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். இந்தக் கடை மாத்திரமே உள்ளதால் அனைவரும் இங்குதான் வரவேண்டும் என்ற போதையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அந்த சந்நியாசிகள் போன்ற அனைவரும் ஒரு நாள் வருவார்கள். இந்தக் கடை ஒன்றே உள்ளது. ஆதலால் அவர்கள் வேறு எங்கு செல்வார்கள்? அதிகமாக அலைந்து திரிந்தவர்கள், சரியான பாதையைக் கண்டு கொள்வார்கள். இக்கடை மாத்திரம் உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். தந்தை ஒருவரே அனைவருக்கும் ஜீவன் முக்தி அருள்பவர். அத்தகைய போதை இருக்க வேண்டும். தந்தைக்கு ஓர் அக்கறை உள்ளது: நான் தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்கி அவர்களுக்கு ஆஸ்தியான அமைதி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் கொடுப்பதற்காகவே வந்துள்ளேன். இதுவே உங்களின் வியாபாரமும் ஆகும். அனைவருக்கும் நன்மையை ஏற்படுத்துங்கள். இது பழைய உலகம். அதற்கு எத்தனை வயது? ஒரு குறுகிய காலத்திற்குள் இப்பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். புதிய உலகம் உருவாக்கப்படும் போதே பழைய உலகம் அழிக்கப்பட முடியும் என்பது ஆத்மாக்கள் அனைவரின் புத்திக்குள்ளும் புகுகின்றன. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்கையில் உண்மையில் கடவுள் இங்கே உள்ளார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். அவர்கள் படைப்பவராகிய தந்தையை மறந்து விட்டார்கள். அவர்கள் திரிமூர்த்தியில் இருந்து சிவனின் வடிவத்தை அகற்றிவிட்டதால் அதில் எவ்வித பயனும் இல்லை. அவரே படைப்பவர். திரிமூர்த்தியில் சிவனின் வடிவமும் இருக்கும் போது படைப்பு பிரம்மா மூலமே இடம் பெறுகின்றது என்பது தெளிவாகி விடுகின்றது. அதில் பிரஜாபிதா பிரம்மா இருப்பதால் அங்கு பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளும் இருக்க வேண்டும். பிராமண குலமே அதிமேன்மையானது. நீங்களே பிரம்மாவின் குழந்தைகள். பிரம்மா எவ்வாறு பிராமணர்களாகிய உங்களை உருவாக்கினார் என்பதனை எவருமே அறிய மாட்டார்கள். தந்தை மாத்திரமே உங்களை சூத்திரரிலிருந்து பிராமணர்களாக மாற்ற முடியும். இவை மிகவும் ஆழமானதும் அர்த்தமுள்ளதுமான விடயங்கள் ஆகும். அவர்களுக்கு தந்தையே நேரடியாக விளங்கப்படுத்தும் பொழுதே அவர்களால் புரிந்து கொள்ள முடியும். தேவர்களாக இருந்தவர்களே இப்போது சூத்திரர்களாக ஆகிவிட்டனர். இப்போது நீங்கள் எவ்வாறு அவர்களைக் கண்டுபிடிப்பீர்கள்? இதற்கு நீங்கள் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்போது பிரம்மாகுமாரிகளின் பணி மகத்தானது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். அதிக அளவில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. ஆகாய விமானத்திலிருந்து துண்டுப்பிரசுரங்கள் போடப்பட வேண்டும் எனவும் பாபா விளங்கப்படுத்துகின்றார். அவை ஆகக் குறைந்தது செய்தித் தாள்களைப் போன்று பெரியதாக இருக்கவேண்டும். அப்போது ஏணி போன்ற முக்கிய குறிப்புக்களும் அவற்றில் உள்ளடக்கக் கூடியதாக இருக்கும். முக்கியமான மொழிகள் ஹிந்தியும் ஆங்கிலமும் ஆகும். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் சேவையை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றியே நாள் முழுவதும் சிந்திக்க வேண்டும். அந்த முயற்சி நாடகத்திற்கேற்ப தொடர்ந்தும் செய்யப்பட வேண்டும் என்பதை நீங்களும் அறிவீர்கள். ஒருவர் சேவையைச் சிறப்பாகச் செய்யும் போது அவர் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவார் என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. நீங்கள் இந்த வரிகளையும் எழுத வேண்டும்: ஒவ்வொரு நடிகரும் தனது சொந்தப் பாகத்தைக் கொண்டிருக்கின்றார். தந்தையும் அசரீரி உலகில் இருந்து இந்த நாடகத்திற்குள் வருகின்றார். அவரும் தனது பாகத்தை நடிப்பதற்காக ஒரு பௌதீக சரீரத்தை ஆதாரமாக எடுக்கின்றார். ஒவ்வொருவரும் நடிக்கின்ற பாகம் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. ஆகவே இந்த வரியும் மிக முக்கியமானது. உலகச் சக்கரத்தை அறிந்து கொள்வதன் மூலம் அவர்கள் சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுபவராகவும் பூகோள ஆட்சியாளராகவும் உலக அதிபதிகளாகவும் ஆகுவார்கள் என்பதை மக்களுக்கு நீங்கள் நிரூபிக்க வேண்டும். முழு ஞானமும் உங்களிடம் உள்ளது. தந்தையிடம் கீதையின் ஞானம் உள்ளது. அதன் மூலம் ஒரு சாதாரண மனிதன் நாராயணனாக மாற முடியும். முழு ஞானமும் உங்கள் புத்தியில் இருக்கும் போது ஒரு முழு இராச்சியமும் தேவைப்படுகிறது. ஆதலால் குழந்தைகளாகிய நீங்கள் அத்தகைய எண்ணங்களைக் கொண்டிருப்பதுடன் தந்தையின் சேவையிலும் ஈடுபட்டிருங்கள். ஜெய்ப்பூரில் உள்ள ஆன்மீக அருங்காட்சியகம் எப்பொழுதும் அங்கேயே இருக்கும். எழுதப்பட்டுள்ளது: இந்த ஞானத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் மனிதர்களால் உலக அதிபதிகள் ஆகமுடியும். அதனைப் பார்ப்பவர்கள் ஏனையோருக்கும் அதனைப் பற்றிக் கூறுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுதும் சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். மம்மாவும் சேவையில் உள்ளார். அவர் நியமிக்கப்பட்டுள்ளார். சரஸ்வதி யார் என்பது எந்தச் சமய நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. பிரஜாபிதா பிரம்மாவுக்கு ஒரு புத்திரி மாத்திரம்தான் இருப்பாரா? அவருக்குப் பல்வேறுபட்ட பெயர்களுடன் பல புத்திரிகள் இருக்க வேண்டும். சரஸ்வதி உங்களைப் போன்று தத்தெடுக்கப்பட்டவர். ஒரு நிறுவனத்தின் தலைவர் விட்டு விலகும் போது வேறொருவர் நியமிக்கப்படுவார். ஒரு பிரதம மந்திரியும் மாற்றப்படுகின்றார். ஒருவர் ஆற்றலுடையவர் எனக் கருதப்படும்போது அவர் நியமிக்கப்படுகிறார். பின்னர் அவருடைய காலம் முடிவடையும் போது வேறொருவர் தேர்ந்து எடுக்கப்படுகின்றார். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு கற்பிக்கும் முதலாவது பண்பு மற்றவர்களுக்கு எப்படி மரியாதை செலுத்துவது என்பதே ஆகும். கல்வியறிவு அற்றவர்களுக்கு எவ்வாறு மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது என்பது தெரியாது. அனைவரும் திறமைசாலிகளுக்கு மரியாதை கொடுக்கின்றார்கள். மூத்தவர்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்கும் போது நீங்களும் கற்றுக் கொள்வீர்கள். கல்வியறிவு அற்றவர்கள் புத்துக்கள். கல்வியறிவு அற்றவர்களை உயர்த்துவதற்காகவே தந்தை வந்துள்ளார். இந்நாட்களில் அவர்கள் பெண்களை முன்னிலையில் வைக்கிறார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் பரமதந்தையுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் விஷ்ணு தாமத்தின் அதிபதிகளாகப் போகின்றீர்கள் என மிகவும் சந்தோஷமாக உள்ளீர்கள். ஒரு குமாரியின் புத்தியின் யோகம் நிச்சயிக்கப்பட்ட தனது மணமகனைப் பார்க்காவிட்டாலும் அவர் மீதே இருக்கும். ஆத்மாக்கள் பரமாத்மாவுடன் செய்யும் நிச்சயார்த்தம் மிகவும் அற்புதமானது என ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் தந்தை ஒருவரை மாத்திரமே நினைக்க வேண்டும். அம்மக்கள் கூறுகின்றார்கள்: ‘உங்கள் குருவை நினைவு செய்யுங்கள். இந்த மந்திரத்தை நினைவு செய்யுங்கள்’. இங்கு தந்தையே அனைத்துமாக இருக்கிறார். அவர் வந்து உங்கள் நிச்சயதார்த்தத்தை இவர் மூலமாக ஏற்பாடு செய்கிறார். அவர் கூறுகின்றார்: நானே உங்கள் தந்தை. நீங்கள் என்னிடமிருந்து ஆஸ்தியையும் பெறுவீர்கள். ஒரு குமாரி தனக்கு நிச்சயிக்கப்பட்டவரை ஒரு போதும் மறக்க மாட்டாள். நீங்கள் ஏன் மறந்து விடுகின்றீர்கள்? கர்மாதீத ஸ்திதியை அடையக் காலம் எடுக்கும். திருமண ஊர்வலம் பின்தொடர மணவாளன் வீட்டுக்குச் செல்லும்வரை கர்மாதீத் ஸ்திதியை அடைந்த எவராலும் வீடு திரும்ப முடியாது. அது சங்கருக்கான விடயமல்ல. இது சிவனின் திருமண ஊர்வலம். ஒரேயொரு மணவாளனே உள்ளார். ஏனைய அனைவரும் மணவாட்டிகளே. இது சிவபாபாவின் ஊர்கோலம். எனினும் அவர்கள் குழந்தையின் பெயரைப் புகுத்தியுள்ளார்கள். இந்த உதாரணத்துடன் ஏனையோர்களுக்கும் உங்களால் விளங்கப்படுத்த முடியும். தந்தை வந்து அனைவரையும் அழகானவர்கள் ஆக்கியபின் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்லவே வந்துள்ளார். காமச் சிதையில் அமர்ந்ததினால் தூய்மை அற்றவர்களாகி விட்ட குழந்தைகளாகிய உங்களை அவர் வந்து இந்த ஞானச்சிதையில் அமரச் செய்கின்றார். அவர் உங்களை அழகானவர்களாக ஆக்கி அனைவரையும் தன்னுடன் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். இது ஒரு பழைய உலகம். தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வருகிறார். நான் அவலட்சணமான அனைவரையும் அழகானவராக்கி அவர்களை வீட்டிற்கு மீண்டும் அழைத்துச் செல்கின்றேன். இராவணன் உங்களை அவலட்சணம் ஆக்குகின்றான் சிவபாபா உங்களை அழகானவர்கள் ஆக்குகின்றார். பாபா தொடர்ந்தும் பல வழிமுறைகளை விளங்கப்படுத்துகின்றார். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உணவு மற்றும் பானம் போன்றவற்றின் மீது கொண்டுள்ள தீய ஆசைகளைத் துறந்திடுங்கள். ஆத்ம உணர்வுடையவராகி சேவை செய்யுங்கள். நினைவிலிருந்து சக்தியைப் பெற்று உங்கள் ஸ்திதியை பயமற்றதாகவும் அசைக்க முடியாததாகவும் ஆக்குங்கள்.2. இக்கல்வியில் திறமைசாலிகளாக உள்ளவர்களுக்கு மதிப்பு அளியுங்கள். அலைந்து திரிபவர்களுக்கு பாதையைக் காட்டுவதற்கான வழிமுறைகளை உருவாக்குங்கள். அனைவருக்கும் நன்மையைச் செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் சொந்த முக்கியத்துவத்தையும் உங்களின் பணியையும் அறிந்துள்ள சதா ஏற்றப்பட்ட ஒளியாகுவீர்களாக.குழந்தைகளான நீங்கள் உலகின் ஒளிகள் ஆவீர்கள். எனவே உங்களின் மாற்றத்தினூடாக உலக மாற்றம் இடம்பெறும். ஆகவே கடந்ததைக் கடந்தது ஆக்குங்கள். உங்களின் முக்கியத்துவத்தை அறியுங்கள், உங்களின் பணியை அறிந்து கொள்ளுங்கள், சதா ஒளியேற்றப்பட்ட ஒளிகள் ஆகுங்கள். ஒரு விநாடியில் உங்களின் சுய மாற்றத்தினூடாக உங்களால் உலக மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஒரு கணம் கர்ம யோகிகளாக இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். அடுத்த கணம் உங்களின் கர்மாதீத் ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். எப்படி படைப்பாக இருக்கும் ஓர் ஆமை ஒரு விநாடியில் தனது அங்கங்கள் எல்லாவற்றையும் உள்ளிழுத்துக் கொள்கிறதோ அதேபோல் மாஸ்ரர் படைப்பவர்களான நீங்கள் உங்களின் அமிழ்த்திக் கொள்ளும் சக்தியின் அடிப்படையில் உங்களின் எண்ணங்கள் எல்லாவற்றையும் அமிழ்த்தி ஒரே எண்ணத்தில் ஸ்திரமாக்கிக் கொள்ள வேண்டும்.
சுலோகம்:
அன்பிலே திளைத்திருக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு நினைவிற்கும் மறதிக்கும் இடையிலான போராட்டத்தை நிறுத்துங்கள்.அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வுடன் சதா வெற்றியாளராக இருங்கள்.
இந்த ஆத்மாவான என்னுடைய கரவன்ஹார் (எல்லோரையும் செய்யத் தூண்டுபவர்) பரமாத்மாவே ஆவார். கரவன்ஹாரின் அடிப்படையில் நான் எல்லாவற்றையும் செய்வதற்குக் கருவி ஆகியுள்ளேன். நான் கரன்ஹார் (செய்பவன்) அவர் கரவன்ஹார். அவர் என்னை அசைய வைக்கிறார், நான் அசைகிறேன். பிரபுவானவர் இந்த ஆத்மாவான என்னுடன் எப்போதும் ஒவ்வொரு திசையிலும் - எனது ஒவ்வோர் எண்ணம், வார்த்தை மற்றும் செயலிலும் இருக்கிறார். இப்படித்தான் இந்த ஆத்மாவான நான் சதா பிரபுவுடன் இருக்கிறேன். சதா இந்த ஒன்றிணைந்த ரூபத்தில் இருங்கள்.
மாதேஷ்வரியின் இனிமையான மேன்மையான விலைமதிப்பற்ற வாசகங்கள்
அரைக்கல்பத்திற்கு உள்ள ஞானம் பிரம்மாவின் பகலும் அரைக்கல்பத்திற்கு உள்ள பக்தி பிரம்மாவின் இரவும் ஆகும்.
அரைக்கல்பத்திற்கு பிரம்மாவின் பகலும் அரைக்கல்பத்திற்கு பிரம்மாவின் இரவும் உள்ளன. இப்போது இரவு முடியப் போகிறது. காலை வரவுள்ளது. இறைவன் வந்து இருளை முடித்து ஒளியை ஏற்படுத்துகிறார். இந்த ஞானத்தின் மூலம் ஒளி ஏற்படுகிறது. பக்தியின் மூலம் இருள் ஏற்படுகிறது. பாடலில் இவ்வாறு பாடப்படுகிறது: எங்களை இந்தப் பாவ உலகில் இருந்து அப்பால் ஓய்வும் சௌகரியமும் உள்ள உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள். இது ஓய்வற்ற உலகம் இங்கே எந்தவிதமான ஓய்வும் இல்லை. முக்தி தாமத்தில் எந்தவிதமான ஓய்வோ அல்லது ஓய்வின்மையோ கிடையாது. சத்திய மற்றும் திரேதா யுகங்கள் ஓய்வான உலகிலேயே உள்ளன. எல்லோரும் அந்த சந்தோஷ பூமியை நினைக்கிறார்கள். எனவே நீங்கள் இப்போது ஓய்வு உலகிற்குச் செல்கிறீர்கள். தூய்மையற்ற ஆத்மாக்கள் எவராலும் அங்கே போக முடியாது. இறுதியில் அவர்கள் தர்மராஜிடம் தண்டனையை அனுபவித்து தமது கர்ம பந்தனங்களில் இருந்து விடுபடுவார்கள். பின்னர் தம்முடன் தமது தூய சம்ஸ்காரங்களை எடுத்துச் செல்வார்கள். ஏனென்றால் அங்கே தூய்மையற்ற சம்ஸ்காரங்களோ அல்லது பாவங்களோ கிடையாது. ஆத்மாக்கள் தமது நிஜத் தந்தையை மறக்கும்போது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட வெற்றி தோல்வியின் புதிர் விளையாட்டு ஏற்படும். எனவே சர்வசக்திவான் பரமாத்மாவிடம் இருந்து சக்தியை எடுத்து விகாரங்களை வெற்றி கொள்ளுங்கள். 21 பிறவிகளுக்கு உங்களின் இராச்சிய பாக்கியத்தைக் கோரிக் கொள்ளுங்கள். அச்சா. ஓம் சாந்தி.