19.07.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, நீங்கள் இரட்டைக் கிரீடமுடைய அரசர்களாக வேண்டும். அதனால், பெருமளவு சேவையாற்றி, பிரஜைகளை உருவாக்குங்கள். சங்கம யுகத்தில் நீங்கள் சேவை செய்ய வேண்டும்: இதில் மாத்திரமே நன்மை இருக்கின்றது.

பாடல்:
பழைய உலகின் விநாசம் இடம்பெறுவதற்கு முன்னர் நீங்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய அலங்காரம் என்ன?

பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் உங்களை யோக சக்தியால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். இந்த யோக சக்தியாலேயே உலகம் முழுவதும் தூய்மையாகுகின்றது. இப்போது நீங்கள் ஓய்வுஸ்திதிக்குள் செல்ல வேண்டும்; அதனால், சரீரத்தை அலங்கரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது ஒரு சதமேனும் பெறுமதி வாய்ந்ததல்ல. அதனால், நீங்கள் அதன் மீதிருக்கும்; பற்றை அகற்றுங்கள். விநாசம் இடம்பெறுவதற்கு முன்னர், தந்தையைப் போல் கருணை மிகுந்தவராகி, உங்களையும் மற்றவர்களையும் அலங்கரியுங்கள். குருடர்களுக்குக் கைத்தடி ஆகுங்கள்.

ஓம் சாந்தி.
தந்தை வந்து தூய்மையாகுவதற்கான பாதையை உங்களுக்குக் காட்டுகிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மிக நன்றாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். வந்து தங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக்க வேண்டும் எனும் இந்த ஒன்றுக்காகவே மக்கள் அவரைக் கூவி அழைக்கிறார்கள், ஏனெனில், இது இப்போது தூய்மையற்ற உலகமும், தூய உலகம் கடந்த காலமும் ஆகும். தூய உலகம் எப்போது கடந்த காலமாகியதென்றோ அல்லது எவ்வளவு காலத்திற்கு முன்னர் அது இடம்பெற்றதென்றோ எவருக்குமே தெரியாது. தந்தை இந்தச் சரீரத்தில் பிரவேசித்துள்ளார்; என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் அவரைக் கூவியழைத்தீர்கள்: பாபா, வந்து தூய்மையற்ற எங்களுக்குத் தூய்மையாகுவதற்கான பாதையைக் காட்டுங்கள். நீங்கள் தூய உலகில் இருந்தீர்கள் என்பதையும், இப்பொழுது நீங்கள் தூய்மையற்ற உலகில் இருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இந்த உலகம் இப்போது மாறுகின்றது. புதிய உலகின் ஆயுட்காலம் எவ்வளவு என்றும், பழைய உலகின் ஆயுட்காலம் எவ்வளவு என்றும் எவருக்கும் தெரியாது. உறுதியான ஒரு கட்டடத்தை நீங்கள் கட்டியெழுப்பும் போது, எவ்வளவு காலத்திற்கு அது நிலைத்திருக்கும் என்று உங்களால் கூற முடியும். நீங்கள் பலவீனமான கட்டடமொன்றைக் கட்டும் போது, அதன் ஆயுட்காலம்; இவ்வளவு காலத்திற்குதான் என்று உங்களால் கூற முடியும். அது எவ்வளவு காலத்திற்கு நீடித்திருக்கும்; என உங்களால் புரிந்துகொள்ள முடியும். முழு உலகினதும் ஆயுட்காலம் எவ்வளவு என்று மக்களுக்குத் தெரியாது. எனவே, நிச்சயமாகத் தந்தையே வந்து அவர்களுக்கு அதைப் பற்றிக் கூற வேண்டும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, புதிய தூய உலகம் ஸ்தாபிக்கப்பட வேண்டுமாயின், இந்தப் பழைய, தூய்மையற்ற உலகம் இப்பொழுது முடிவடைய வேண்டும். புதிய உலகில் மிகச்சொற்ப மனிதர்களே இருந்தார்கள். புதிய உலகமே சந்தோஷ பூமி என்றும் அழைக்கப்படுகின்ற, சத்தியயுகமாகும். இது துன்ப பூமியாகும். நிச்சயமாக இது முடிவடையவுள்ளது. அதன்பின்னர் சந்தோஷ பூமியின் வரலாறு மீண்டும் இடம்பெற வேண்டும். இதை நீங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். தந்தை உங்களுக்கு வழிகாட்டலைக் கொடுக்கிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்து, அதன்பின்னர் மற்றவர்களுக்கும் இப்பாதையைக் காட்டுங்கள். அனைவருக்கும் தங்கள் லௌதீகத் தந்தையைத் தெரியும். ஆனால், எவருக்குமே தங்கள் பரலோகத் தந்தையைத் தெரியாது. அவர் சர்வவியாபி என்று அவர்கள் கூறுகிறார்கள். மீன், முதலை என்று பல்வேறு அவதாரங்களிலும், 8.4 மில்லியன் உயிரினங்களிலும் அவர்கள் அவரை இட்டுள்ளார்கள். உலகில் உள்ள எவருக்குமே தந்தையைத் தெரியாது. தந்தையை அவர்கள் அறிந்து கொள்ளும் போதே அவர்களால் புரிந்து கொள்ள முடியும். அவர் கூழாங்கற்களிலும், கற்களிலும் இருக்கிறார் என்றால், ஆஸ்தி என்ற கருத்து பொருத்தமாக இருக்காது. மக்கள் தேவதேவியர்களை வழிபாடு செய்கின்ற பொழுதும், அவர்களின் பணி என்ன என்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் இவ்விடயங்களை முற்றிலும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். அதனால், முதலாவது பிரதான விடயத்தை விளங்கப்படுத்துங்கள். வெறுமனே படங்களைப் பார்த்து எவருமே எதையுமே புரிந்துகொள்ள முடியாது. தந்தையைப் பற்றியோ, படைப்பைப் பற்றியோ அல்லது ஆரம்பத்தில் படைப்பு எவ்வாறு படைக்கப்பட்டது என்பதைப் பற்றியோ அந்த அப்பாவிகள் அறியார்கள். அது எப்போது தாங்கள் வழிபாடு செய்யும் தேவதேவியர்களது இராச்சியமாக இருந்தது என அவர்களுக்குத் தெரியாது. சூரியவம்ச இராச்சியம் நூறாயிரக்கணக்கான வருடங்கள் தொடர்ந்தது என்றும், அதன்பின்னர் சந்திரவம்சம் நூறாயிரக்கணக்கான வருடங்கள் தொடர்ந்தது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். அது அறியாமை என அழைக்கப்படுகிறது. இப்போது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார், நீங்கள் பின்னர் அதனை மீண்டும் எடுத்துரைக்கின்றீர்கள். தந்தையும் அதனை மீண்டும் எடுத்துரைக்கிறார். இந்த வகையில் விளங்கப்படுத்திச் செய்தியைத் தெரிவியுங்கள். வேறு எவ்வாறு இராச்சியம் ஸ்தாபிக்கப்பட முடியும்? நீங்கள் வெறுமனே இங்கே அமர்ந்திருப்பதால் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டுவிட முடியாது. ஆம், வீட்டில் இருப்பவர்களும் தேவையாகும். நாடகத்திற்கேற்ப அவர்கள் அங்கே இருக்கிறார்கள். யக்ஞத்தைப் பராமரிப்பவர்களும் தேவைப்படுகிறார்கள். எத்தனையோ குழந்தைகள் தந்தையைச் சந்திப்பதற்காக அவரிடம் வருகிறார்கள், ஏனெனில், சிவபாபாவிடமிருந்து மாத்திரமே அவர்கள் ஓர் ஆஸ்தியைப் பெற வேண்டும். லௌகீகத் தந்தையொருவருக்கு மகன் இருக்கும் போது, தான் தன் தந்தையிடமிருந்து தன் ஆஸ்தியைப் பெற வேண்டும் என்பதை அந்த மகன் புரிந்து கொள்கிறார், ஒரு மகளோ சென்று அரைப்பங்காளி (வாழ்க்கைத் துணை) ஆகுகின்றாள். சத்தியயுகத்தில், சொத்துக்காகச் சண்டையிடுதல் இருக்காது. இங்கே காம விகாரம் காரணமாகச் சண்டை ஏற்படுகிறது. ஐந்து தீய ஆவிகளும் அங்கே இல்லை என்பதால் அங்கே துன்பத்தின் பெயரோ அல்லது சுவடோ இல்லை. அனைவரும் பற்றை வென்றவர்களாக இருக்கிறார்கள். சுவர்க்கம் இருந்தது என்றும், இப்போது அது கடந்த காலமாகி விட்டதென்றும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அதன் உருவங்களும் இருக்கின்றன, ஆனாலும் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இப்போது இவ்வாறான எண்ணங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு 5000 வருடங்களுக்கு ஒருமுறையும் இந்தச் சக்கரம் மீண்டும் மீண்டும் வரும் என்பது உங்களுக்குத் தெரியும். சூரிய, சந்திர வம்சங்கள் 2500 வருடங்கள் நிலைத்திருந்தன என்று சமயநூல்களில் எழுதப்படவில்லை. பரோடாவில் ஆளுனர் (கவர்னர்) வீட்டில் மக்கள் இராமாயணத்தைச் செவிமடுக்கிறார்கள் என்று பாபா பத்திரிகையில் படித்தார். அனர்த்தங்கள் ஏதேனும் ஏற்படும் போது மக்கள் கடவுளை மகிழ்விப்பதற்காகத் தங்களைப் பக்தியில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். கடவுள் அந்த வகையில் மகிழ்ச்சியடைவதில்லை. அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது. கடவுள் ஒருபோதும் பக்தியால் மகிழ்ச்சியடைவதில்லை. அரைச்சக்கர காலமாகப் பக்தி தொடர்கிறது என்றும், மக்கள் தங்களுக்குத் தாங்களே துன்பத்தைக் கொடுத்துக் கொள்கிறார்கள் என்றும் குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது தெரியும். அவர்கள் பக்தி செய்வதில் தங்கள் செல்வம் அனைத்தையும் முடித்து விடுகிறார்கள். அரிதாக வெகுசிலரே இவ்விடயங்களைப் புரிந்துகொள்கிறார்கள். சேவை செய்யும் குழந்தைகள் தொடர்ந்தும் அச்செய்திகளைத் தெரிவிக்கிறார்கள். இது இறை குடும்பம் என்பது விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. கடவுள் அருள்பவர், அவர் எவரிடமிருந்தும் எதையும் பெறுவதில்லை. அவருக்கு எவருமே எதையும் கொடுப்பதில்லை. பதிலாக, அவர்கள் அதை வீணாக்கி விடுகிறார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை வினவுகிறார்: உங்களுக்கு நான் அதிகளவு செல்வத்தைக் கொடுத்தேன். நான் உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்கினேன். அவை அனைத்தும் இப்போது எங்கே சென்றது? எவ்வாறு நீங்கள் இவ்வளவு ஏழைகள் ஆகினீர்கள்? இப்போது, நான் மீண்டும் ஒருமுறை வந்துள்ளேன், அதனால், நீங்கள் பல்கோடி மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். மக்கள் இவ் விடயங்களைப் புரிந்து கொள்வதில்லை. இனிமேலும் நீங்கள் இந்தப் பழைய உலகில் வாழ வேண்டியதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்;, அது அழிக்கப்படவுள்ளது. மக்களிடம் இருக்கின்ற பணம் அனைத்தும் எவருடனும் நிலைத்திருக்கப் போவதில்லை. விநாசம் இடம்பெறும் போது, அனைத்தும் அழிக்கப்படும். எத்தனையோ மைல்களுக்கு எத்தனையோ பெரிய கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அதிகளவு செல்வம் இருக்கின்றது, ஆனால் அவை அனைத்தும் அழிக்கப்படப் போகின்றன, ஏனெனில், அது உங்கள் இராச்சியமாக இருந்த போது அங்கே வேறு எவருமே இருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். அங்கே பெருமளவு செல்வம் இருந்தது. மேலும் நீ;ங்கள் முன்னேறுகையில், என்ன நடைபெறுகின்றது என்று பார்ப்பீர்கள். தங்களிடம் எவ்வளவு தங்கமும், வெள்ளியும், பணமும் இருக்கிறது என்பதற்கான ஒரு வரவுசெலவுத் திட்டம் அம்மக்களிடம் இருக்கிறது. தங்கள் வரவுசெலவுத்திட்டம் இவ்வளவு எனவும், தங்கள் செலவு இவ்வளவு எனவும் அவர்கள் அறிவிக்கிறார்கள். அவர்கள் ஆயுதங்களில் பெருமளவு செலவு செய்கிறார்கள். அவர்கள் ஆயுதங்களில் பெருமளவு செலவு செய்கிறார்களாயினும், அதிலிருந்து அவர்களுக்கு வருமானம் எதுவும் இருப்பதில்லை. அவை அனைத்தும் அவர்கள் சேர்த்து வைத்திருக்கக் கூடிய பொருட்களல்ல. நீங்கள் தங்கத்தையும் வெள்ளியையுமே வைத்துக் கொள்வீர்கள். உலகம் சத்தியயுகமாக இருந்த போது, அவர்களிடம் தங்க நாணயங்கள் இருந்தன. திரேதாயுகத்தில் அவர்கள் வெள்ளியை வைத்திருந்தார்கள். அங்கே எல்லையற்ற செல்வம் இருந்தது, ஆனால், பின்னர் அது குறைவடைந்ததால், இப்போது அவர்கள் எதைக் கண்டுபிடித்துள்ளார்கள் என்று பாருங்கள். ‘கடதாசித் தாள் ரூபாய்கள்’. வெளிநாட்டிலும் அவர்களிடம்; கடதாசிப் பணமே உள்ளது. கடதாசியில் எந்தப் பயனும் இல்லை. எனவே, எது எஞ்சியிருக்கும்? பிரமாண்டமான அந்தக் கட்டடங்கள் அனைத்தும் அழிக்கப்படும். இதனாலேயே தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, எதைப் பார்த்தாலும் அப்படியொன்று இல்லை என நினைத்துக் கொள்ளுங்கள். அவை அனைத்தும் அழிக்கப்படவுள்ளன. சரீரமும் எவ்வளவு அழகானதாக இருந்தாலும், அது ஒரு சதமேனும் பெறுமதியற்ற பழைய சரீரமேயாகும். இந்த உலகம் இப்போது ஒரு குறுகிய காலத்திற்கே இருக்கப் போகின்றது. அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சாதாரணமாக ஓரிடத்தில் அமர்ந்திருக்கும் போதே, மக்களுக்கு என்ன நடக்கின்றது எனப் பாருங்கள்! அவர்களுக்கு இதய வழுவல் வந்துவிடுகிறது. மனிதர்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சத்தியயுகத்தில் அது அவ்வாறு இருக்காது. யோக சக்தியால் உங்கள் சரீரம் கல்ப விருட்சத்தைப் போல் என்றும் நிலையானதாகி விடுகிறது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள், பின்வருமாறு கூறும் தந்தையைக் கண்டுவிட்டீர்கள்: இனிமேலும் நீங்கள் இந்த உலகத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை. இது ஓர் தீய உலகம். இப்போது நீங்கள் உங்களை யோக சக்தியால் அலங்கரிக்க வேண்டும். அங்கே குழந்தைகள் யோகசக்தி மூலம் பிறக்கிறார்கள். அங்கே விகாரம் என்ற கேள்விக்கே இடமில்லை. யோக சக்தியால் நீங்கள் முழு உலகையும் தூய்மையாக்குகிறீர்கள் என்பதால், எதுவுமே உங்களுக்குப் பெரிய விடயமல்ல. உங்கள் குலத்துக்கு உரியவர்கள் மாத்திரமே இவ் விடயங்களைப் புரிந்து கொள்வார்கள். ஏனைய அனைவரும் தங்கள் வீடாகிய அமைதி தாமத்திற்குச் செல்ல வேண்டும். எவ்வாறாயினும், மக்கள் அதைத் தங்கள் வீடாகக் கருதுவதில்லை. ஓர் ஆத்மா அங்கே செல்ல, இன்னொருவர் கீழே இறங்கி வருகிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள். உலக சனத்தொகை தொடர்ந்து பெருகிக் கொண்டு செல்கிறது. உங்களுக்குப் படைப்பவரையும் படைப்பையும் தெரியும் என்பதால், நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு முயற்சிக்கிறீர்கள், அதனால் அவர்களும் பாபாவின் மாணவர்களாகி அனைத்தையும் அறிந்து சந்தோஷமடைகிறார்கள். இப்போது நாங்கள் அமரத்துவ தாமத்திற்குச் செல்கிறோம். அரைச்சக்கர காலமாக நீங்கள் பொய்க் கதைகளையே செவிமடுத்தீர்கள். இப்போது, நீங்கள் அமரத்துவ தாமத்திற்குச் செல்கிறீர்கள் என்று நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். இப்போது இது, இந்த மரண பூமியின் இறுதியாகும். எங்களை நாங்கள் சந்தோஷப் பொக்கிஷங்களால் நிறைத்து, பின்னர் திரும்பிச் செல்கின்றோம். அதனால், இந்த வருமானத்தை ஈட்டுவதிலும் உங்கள் புத்தியை மிக நன்றாக நிறைத்துக் கொள்வதிலும் இப்போது நீங்கள் மிகவும் மும்முரமாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்கக்கூடாது. இப்போது நாங்கள் மற்றவர்களுக்குச் சேவை செய்து, எங்கள் புத்தியை நிறைத்துக் கொள்ள வேண்டும். எவ்வாறு நீங்கள் கருணை நிறைந்தவர்கள் ஆகலாம் என்று தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். குருடர்;களுக்கு ஒரு கைத்தடி ஆகுங்கள். எவ்வாறு நீங்கள் கருணை நிறைந்தவர்களாக முடியும் என்று சந்நியாசிகளோ, கல்விமான்களில் எவருமோ வினவ முடியாது. சுவர்க்கம் எங்கே, நரகம் எங்கே என்பதைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? ஒருவருக்கு எவ்வளவு பெரியதொரு பதவி இருந்தாலும், அவர் விமானப்படையிலோ, இராணுவத்திலோ அல்லது கடற்படையிலோ பிரதம தளபதியாக இருந்தாலும், உங்களோடு ஒப்பிடும்பொழுது அவை அனைத்தும் என்ன? சொற்ப காலமே எஞ்சியுள்ளது என உங்களுக்குத் தெரியும். சுவர்க்கத்தைப் பற்றி எவருக்குமே தெரியாது. இந்த நேரத்தில் எங்கும் சண்டைகளே இடம்பெறுகின்றன. பின்னர், அவர்களுக்கு ஆகாய விமானங்களோ அல்லது இராணுவமோ தேவைப்படாது. அவை அனைத்தும் அழிக்கப்படும். ஒரு சில மனிதர்களே எஞ்சியிருப்பார்கள். இந்த விளக்குகள், விமானங்கள் போன்றன இருக்குமாயினும், சிறியதோர் உலகம் மாத்திரமே எஞ்சியிருக்கும். மக்கள் தயார் செய்யும் சிறிய மாதிரிகளைப் போல், பாரதம் மாத்திரமே எஞ்சியிருக்கும். எவ்வாறு இறுதியில் மரணம் வரும் என்பது எவரது புத்தியிலும் இருக்காது. மரணம் சற்று முன்னேயே நிற்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே குண்டுகளை வீசுவார்கள் எனவும், அவை விழும் இடத்தில் அனைத்தும் அழிக்கப்படும் எனவும் அம்மக்;கள் கூறுகிறார்கள். இராணுவம் போன்றவற்றுக்கு அவசியம் இருக்காது. ஓர் ஆகாயவிமானமே பத்து மில்லியன் பெறுமதியானது. அனைவரிடமும் அதிகளவு தங்கம் இருக்கிறது. கடலுக்குள் அமிழ்ந்து விடப் போகும் தங்கம் அனைவரிடமும் தொன் கணக்கில் இருக்கிறது. இந்த இராவண இராச்சியம் முழுவதுமே ஒரு தீவு ஆகும். எண்ணற்ற பல மனிதர்கள் இருக்கிறார்கள். நீங்கள் அனைவருமே உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்;கள். அதனால், நீங்கள் சேவையில் மும்முரமாக ஈடுபட்டிருக்க வேண்டும். எங்கேனும் வெள்ளம் வரும்பொழுது, அனைவரும் அதில் எவ்வளவு மும்முரம் ஆகுகிறார்கள் என்று பாருங்கள். அனைவருக்கும் நிச்சயமாக உணவு கிடைக்கச் செய்யும் சேவையில் தங்களை அவர்கள் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். நீர் உட்புக ஆரம்பிக்கும் பொழுது, அவர்கள் முன்னதாகவே ஓட ஆரம்பித்து விடுகிறார்கள். எனவே, எவ்வாறு அனைத்தும் அழிக்கப்படும் என்பதைப் பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். உலகம் முழுவதுமே கடல் சூழ்ந்திருக்கிறது. விநாசம் இடம்பெறும் பொழுது, எங்கும் நீரே சூழ்ந்திருக்கும். அது உங்கள் இராச்சியமாக இருந்தது என்றும், அந்த நேரத்தில் பம்பாய், கராச்சி போன்றவை இருக்கவில்லை என்பதும் உங்கள் புத்தியில் இருக்கிறது. அத்தகைய சிறியதொரு பாரதம் மாத்திரமே எஞ்சியிருக்கும். அது இனிமையான நீரையுடைய ஆறுகளைக் கொண்டிருக்கும். அங்கே கிணறுகள் போன்றவற்றுக்கு அவசியமே இல்லை. அங்கே, அவர்களுக்கு மிகச் சுத்தமான குடிநீர் இருக்கின்றது. ஆற்றங்கரைகளிலே அவர்கள் விளையாட்டுகளை விளையாடுவார்கள். அங்கே அழுக்கு என்ற கேள்விக்கே இடமில்லை. அதன்பெயரே அமரத்துவ தாமமாகிய சுவர்க்கம் என்பதாகும். அந்தப் பெயரை மக்கள் செவிமடுத்ததுமே தாங்கள் தந்தையிடம் விரைவாகக் கற்று, தங்கள் முழு ஆஸ்தியையும் பெற ஆசைப்படுகிறார்கள்;, அவர்கள் தாங்களும் கற்று மற்றவர்களுக்கும் கற்பித்து, அனைவருக்கும் இந்தச் செய்தியைத் தெரிவிக்கிறார்கள். முன்னைய கல்பத்தில் தங்கள் ஆஸ்தியைப் பெற்றவர்கள் மீண்டும் அதனைப் பெறுவார்கள். அவர்கள் தொடர்ந்தும் முயற்சி செய்வார்கள், ஏனெனில், அந்த அப்பாவிகளுக்குத் தந்தையைத் தெரியாது. தந்தை கூறுகிறார்: தூய்மையாகுங்கள். தங்கள் உள்ளங் கைகளிலேயே சுவர்க்கத்தைப் பெறுபவர்கள் ஏன் தூய்மையாக இருக்க மாட்டார்கள்? நீங்கள் கூறுங்கள்: நாங்கள் உலக இராச்சியத்தைப் பெறுவதால், ஏன் நாங்கள் ஒரு பிறவிக்குத் தூய்மையாக இருக்க மாட்டோம்? கடவுள் பேசுகிறார்: இந்த இறுதிப் பிறவியில் நீங்கள் தூய்மையாகினால், 21 பிறவிகளுக்குத் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். இந்த ஒரு பிறவியில் எனது ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். இரக்ஷ பந்தன் (பாதுகாப்பு பந்தம்) இதன் அடையாளமேயாகும். எனவே, ஏன் எங்களால் தூய்மையாக இருக்க முடியாது? எல்லையற்ற தந்தை இதற்கு உத்தரவாதம் அளிக்கிறார். சந்தோஷ உலகம் என்றும் அழைக்கப்பட்ட சுவர்க்க ஆஸ்தியைத் தந்தை பாரதத்திற்குக் கொடுத்தார். அங்கே எல்லையற்ற சந்தோஷம் இருந்தது. ஆனால், இதுவோ துன்ப பூமியாக இருக்கிறது. ஒரு பிரமுகருக்கேனும் நீங்கள் இதை விளங்கப்படுத்தினால், ஏனைய அனைவரும் நீங்கள் கூறுவதைத் தொடர்ந்தும் செவிமடுப்பார்கள். யோக ஸ்திதியில் நிலைத்திருந்து அவர்களுடன் பேசுங்கள், அனைவரும் நேரத்தையும் மறந்துவிடுவார்கள். எவராலும் எதுவுமே கூற முடியாது. 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பதிலாக, நீங்கள் கூறுவதை ஒரு மணித்தியாலத்திற்குச் செவிமடுத்தவாறு அமர்ந்திருப்பார்கள். எவ்வாறாயினும், உங்களுக்கு அந்தச் சக்தி அவசியம். எவ்விதமான சரீர உணர்வுமே இருக்கக்கூடாது. இங்கே, நீங்கள் சேவையைத் தவிர வேறெதுவுமில்லை என்னும் அளவுக்குச் சேவையையே செய்ய வேண்டும். அப்பொழுதே, நன்மை ஏற்படும். நீங்கள் அரசர்களாக வேண்டும். ஆனால், இன்னும் நீங்கள் பிரஜைகளை உருவாக்கவில்லை. தந்தை உங்களுக்கு அந்தப் பதவியை அவ்வாறு கொடுத்து விட மாட்டார். பிரஜைகள் இரட்டைக்கிரீடம் அணிந்தவர்கள் ஆகுவார்களா? இரட்டைக்கிரீடம் அணிந்தவர்கள் ஆகுவதே உங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை உற்சாகமூட்டுகிறார். உங்கள் தலை மீது பல பிறவிகளின் பாவங்கள் இருக்கின்றன. யோக சக்தியால் மாத்திரமே அவை அழிக்கப்பட முடியும். எவ்வாறாயினும், இந்தப் பிறவியில் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். உங்கள் பாவங்களை அழிப்பதற்காக உங்களுக்கு யோகம் கற்பிக்கப்படுகிறது. இது இந்தப் பிறவிக்கான கேள்வி மாத்திரமல்ல. தமோபிரதானிலிருந்து சதோபிரதானாகும் வழியைத் தந்தை இங்கிருந்து உங்களுக்குக் கூறுகிறார். எவ்வாறாயினும், ஆசீர்வாதங்களும் கருணையும் வேண்டுமானால், சாதுக்களிடமும் புனிதர்களிடமும் சென்று கேளுங்கள்! அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. . அமரத்துவ தாமத்;திற்குச் செல்வதற்கு, சங்கமயுகத்தில் உங்களைச் சந்தோஷப் பொக்கிஷங்களால் நிறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் புத்தியை நிறைத்து, கருணை மிக்கவர்களாகி, குருடர்களுக்குக் கைத்தடி ஆகுங்கள்.

2. உங்கள் உள்ளங்கையில் சுவர்க்கத்தைப் பெறுவதற்கு, நிச்சயமாக நீங்கள் தூய்மையாக வேண்டும். உங்களைச் சதோபிரதான் ஆக்குவதற்கான வழிமுறைகளை உருவாக்குங்கள், உங்கள் மீது கருணை காட்டுங்கள். யோக சக்தியைச் சேமித்துக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
சதா பிரபுவின் சகவாசத்தை கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் ஒரு விசேட நடிகராக, இணைந்த வடிவத்தை அனுபவம் செய்வீர்களாக.

குழந்தைகளாகிய நீங்கள் இதயபூர்வமாக ~~பாபா|| எனக் கூறும் போது, இதயங்களுக்கு சௌகரியம் அளிக்கின்ற தில்லாராம் அப்பொழுது பிரசன்னமாகின்றார் என்பதாலேயே பிரபு பிரசன்னமாகின்றார் எனக் கூறப்படுகின்றது. விசேட ஆத்மாக்கள் எவ்வாறாயினும் இணைந்தே இருக்கின்றார்கள். மக்கள் கூறுகின்றார்கள்: நான் எங்கு பார்த்தாலும், நான் உங்களை மாத்திரமே பார்க்கின்றேன், ஆனால் குழந்தைகளாகிய நீங்களோ கூறுகிறீர்கள்: நாங்கள் என்ன செய்தாலும், நாங்கள் எங்கே சென்றாலும், தந்தை எங்களுடனேயே இருக்கின்றார். அவர் கரன்கரவன்ஹார் (செய்பவரும் பிறரை செய்விப்பவரும் ஆவார்) என அழைக்கப்படுவதால், கரன்ஹாரும் (செய்பவர்) கரவன்ஹாரும் (செய்யத் தூண்டுபவரும்) இணைந்தே இருக்கின்றார்கள். இந்த விழிப்புணர்வுடன் பாகத்தை நடிப்பவர்கள் விசேட ஆத்மாக்கள் ஆகுகின்றார்கள்.

சுலோகம்:
இப்பழைய உலகில் ஒரு விருந்தாளி எனக்கருதி நீங்கள் வாழ்வீர்களாயின், உங்கள் பழைய சம்ஸ்காரங்களையும் எண்ணங்களையும் ~வெளியேறு!| என உங்களால் கூற முடியும்.