19.09.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த எல்லையற்ற நாடகத்திலே உங்கள் சொந்தப் பாகங்களைப் பெற்றிருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் சரீரம் என்ற ஆடையை அகற்றி, வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பின்னர் நீங்கள் உங்களுடைய புதிய இராச்சியத்திற்குச் செல்ல வேண்டும்.
கேள்வி:
தந்தை எந்தவொரு பணியையும் தூண்டுதலால் செய்வதில்லை, ஆனால் அவதாரமே எடுக்கின்றார் என்பது எவ்வாறு நிரூபிக்கப்படுகின்றது?பதில்:
தந்தையையிட்டு, அவர் கரன்கரவன்ஹார் என்று கூறப்பட்டுள்ளது. தூண்டுதல் எனில் சிந்திப்பதாகும். ஒரு புதிய உலகம் தூண்டுதலின் மூலம் ஸ்தாபிக்கப்பட முடியாது. தந்தை புதிய உலகினைக் குழந்தைகளாகிய உங்களின் மூலமே ஸ்தாபிக்கின்றார். அவரால் பௌதீகப் புலன்களைக் கொண்டிருக்கும் வரையில், எதனையும் செய்ய முடியாது. ஆகவே அவர் ஒரு சரீரத்தின் ஆதாரத்தை எடுக்க வேண்டும்.ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் ஆன்மீகத் தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள். உண்மையில், ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களுடைய தந்தையின் முன்னால் இருக்கின்றீர்கள். ஆத்மா ஒருவர் நிச்சயமாக ஒரு சரீரத்துடன் இருக்கின்றார். தந்தை ஒரு சரீரத்தை எடுக்கும் பொழுதே, உங்கள் முன்னால் இருக்கின்றார். இதனாலேயே கூறப்பட்டது: ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்தார்கள். ஈஸ்வர், பிரபு, பரமாத்மா போன்ற கொடுக்கப்பட்டுள்ள வேறுபட்ட பெயர்கள் அதிமேலான தந்தைக்கே உரியவை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஒரு பௌதீகத் தந்தையை எப்பொழுதும் பரமாத்மா என அழைப்பதில்லை. நீங்கள் “பரமதந்தை” என்று மட்டுமே எழுதினாலும் பரவாயில்லை. “பரம தந்தை” எனில், அனைவரதும் தந்தை ஒரேயொருவரே என்பதாகும். நாங்கள் பரமதந்தையுடன் அமர்ந்திருப்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பரமாத்மாவாகிய பரமதந்தையும், ஆத்மாக்களாகிய நாங்களும் அமைதி தாமத்தில் வசிப்பவர்கள்; நாங்கள் இங்கு எங்கள் பாகங்களை நடிப்பதற்காகவே வந்தோம். நாங்கள் சத்தியயுகத்தில் இருந்து கலியுக இறுதிவரை எங்கள் பாகங்களை நடித்து விட்டோம். இது இப்பொழுது புதிய படைப்பு ஆகும். நீங்கள் எவ்வாறு அத்தகைய பாகங்களை நடித்தீர்கள் என்பதைப் படைப்பவராகிய தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தினூடாகச் சென்றிருந்தமை முன்னர் உங்களுக்குத் தெரியாது. 84 பிறவிச் சக்கரத்தினூடாகச் சென்ற குழந்தைகளாகிய உங்களுடனேயே தந்தை இப்பொழுது பேசுகின்றார். அனைவரும் 84 பிறவிகளை எடுக்க முடியாது. எவ்வாறு 84 பிறவிகளின் சக்கரம் சுழல்கின்றது என நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இது நூறாயிரக்கணக்கான வருடங்களுக்கான விடயம் அல்ல. நாங்கள் ஒவ்வொரு 5000 வருடங்களுக்கும் ஒருமுறை எங்கள் பாகங்களை நடிப்பதற்காகவே இங்கு வருவதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் நடிகர்கள். அதிமேலான தந்தையே நடிப்பதற்கெனத் தனித்துவமான பாகத்தைக் கொண்டிருக்கின்றார். பிரம்மா அல்லது விஷ்ணுக்கு நடிப்பதற்காகத் தனிப்பட்ட பாகம் உள்ளது என நீங்கள் கூற மாட்டீர்கள். இருவரும் 84 பிறவிச் சக்கரத்தினூடாகவே செல்கின்றார்கள். இவ்வுலகத்திலே நடிப்பதற்கெனச் சங்கரருக்குப் பாகம் எதுவும் இல்லை. திரிமூர்த்தியின் படத்திலே ஸ்தாபனை, விநாசம் மற்றும் பராமரிப்பு போன்றன காட்டப்பட்டுள்ளன. நீங்கள் காட்டுகின்ற படங்களை விளங்கப்படுத்த வேண்டும். பழைய உலகின் விநாசம் சங்கமயுகத்திலேயே நடைபெற வேண்டும். “தூண்டுபவர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது பிழை. “நான் இன்று வெளியே செல்ல வேண்டும் எனும் தூண்டுதலை உணரவில்லை” எனச் சிலர் கூறலாம். தூண்டுதல் என்றால் எண்ணம் - தூண்டுதலுக்கு வேறு எந்தவோர் அர்த்தமும் இல்லை. பரமாத்மா தூண்டுதலின் மூலம் வேலை செய்வதும் இல்லை, அல்லது தூண்டுதலால் இந்த ஞானத்தைப் பெறவும் முடியாது. தந்தை இந்தப் புலனங்கங்களின் மூலம் ஒரு பாகத்தை நடிப்பதற்காகவே வருகின்றார். அவரே கரன்கரவன்ஹார். அவர் குழந்தைகளின் மூலமே தனது பணியைச் செய்கின்றார். அவரால் எதனையும் ஒரு சரீரமின்றிச் செய்ய முடியாது. எவருக்கும் இவ்விடயங்களையும் தெரியாது, எவருக்குமே தந்தையாகிய கடவுளையும் தெரியாது. ரிஷிகள் முனிவர்கள் போன்றோர் தங்களுக்குக் கடவுளைத் தெரியாது என்றே கூறுவதுண்டு. அவர்கள் ஆத்மாவைப் பற்றிய ஞானத்தையோ அல்லது தந்தையாகிய பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தையோ கொண்டிருக்கவில்லை. தந்தையே பிரதானமான படைப்பவராகவும், இயக்குனராகவும் இருக்கின்றார். அவர் உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். அவர் உங்களுக்கு ஸ்ரீமத்தையும் கொடுக்கின்றார். மக்களின் புத்தியில் சர்வவியாபகம் என்ற கருத்தே இருக்கின்றது. பாபா எங்கள் பாபா என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவர் சர்வவியாபகர் என்று அம்மக்கள் கூறுகின்றார்கள். ஆகவே, அவரே தந்தை என்பதை அவர்களால் உணர முடியாது. இதுவே எல்லையற்ற தந்தையின் குடும்பம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவரைச் சர்வவியாபகர் என அழைப்பதன் மூலம், குடும்பம் என்ற நறுமணம் இருப்பதில்லை. அவரே அசரீரியான ஆத்மாக்களின் பாபாவாகிய, அசரீரியான சிவபாபா என அழைக்கப்படுகின்றார், ஆத்மாக்கள் சரீரங்களைக் கொண்டிருக்கும் பொழுதே, “பாபா” எனக் கூறுகின்றார்கள். ஒரு சரீரமற்ற ஆத்மாவால் பேச முடியாது. நீங்கள் பக்தி மார்க்கத்தில் பாபாவே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் என்ற புரிந்துணர்வுடனேயே அவரை அழைத்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் சந்தோஷ தாமத்தில் சந்தோஷத்தையும், அமைதி தாமத்தில் அமைதியையும் பெறுகின்றீர்கள். இங்கு, துன்பம் மாத்திரமே இருக்கின்றது. நீங்கள் இந்த ஞானத்தைப் பழைய உலகிற்கும் புதிய உலகிற்கும் இடையிலுள்ள சங்கமயுகத்திலேயே பெறுகின்றீர்கள். தந்தை புதிய உலகின் ஸ்தாபனையும், பழைய உலகின் விநாசமும் நடைபெற இருக்கும் பொழுது மாத்திரமே வருகின்றார். அனைத்திற்கும் முதலில், நீங்கள் புதிய உலகின் ஸ்தாபனையைப் பற்றியே எப்பொழுதும் பேச வேண்டும். முதலில், பழைய உலகின் விநாசத்தைப் பற்றிப் பேசுவது பிழையாகும். நீங்கள் இப்பொழுது இந்த எல்லையற்ற நாடகத்தினைப் பற்றிய ஞானத்தைப் பெறுகின்றீர்கள். நடிகர்கள் தங்கள் வீட்டிலிருந்து இப்பாகங்களை நடிப்பதற்கு வரும்பொழுது, சாதாரண ஆடைகளையே அணிகின்றார்கள். பின்னர் அவர்கள் தங்கள் ஆடைகளை மாற்றி அணிகின்றார்கள், பின்னர், நாடகம் முடிவடையும் பொழுது, தங்கள் ஆடைகளை அகற்றி, வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்றார்கள். அவ்வாறே, ஆத்மாக்களாகிய நீங்களும் உங்களுடைய வீட்டிலிருந்து இங்கு சரீரமற்றே வருகின்றீர்கள். நீங்கள் இங்கு வந்தே சரீர வடிவிலான உங்கள் ஆடையை அணிகின்றீர்கள். ஒவ்வோர் ஆத்மாவும் தனது சொந்தப் பாகத்தைப் பெற்றிருக்கின்றார். இது ஓர் எல்லையற்ற நாடகம். இந்த முழு, எல்லையற்ற உலகமும் இப்பொழுது பழையது, பின்னர் புதிய உலகம் இருக்கும். அந்தச் சனத்தொகை மிகக் குறைவாகவே இருக்கும். அத்துடன் அங்கே ஒரேயொரு தர்மமே உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பழைய உலகில் இருந்து விலகி, ஒரேயொரு தர்மம் மாத்திரமே உள்ள, அந்த எல்லைக்கு உட்பட்ட, புதிய உலகிற்குள் செல்ல இருக்கின்றீர்கள். உலகிலே எண்ணற்ற சமயங்களும், எண்ணற்ற மனிதர்களும் இருக்கும்பொழுது, உலகம் எல்லையற்றதாக ஆகுகின்றது. அங்கே, ஒரேயொரு தர்மமும், வெகு சில மனிதர்களும் மாத்திரமே இருக்கின்றார்கள். தந்தை ஒரேயொரு தர்மத்தை ஸ்தாபிப்பதற்கு வரவேண்டும். “எவ்வாறு சக்கரம் சுழல்கின்றது” என்ற எல்லையற்ற நாடகத்தின் இரகசியங்களைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். தற்சமயத்தில் நடைமுறையில் இடம்பெறுவன அனைத்தும் பின்னர் ஒரு பண்டிகையாகப் பக்தி மார்க்கத்தில் கொண்டாடப்படும். குழந்தைகளாகிய உங்களுக்கு அந்த வரிசைக்கிரமமான பண்டிகைகளைப் பற்றித் தெரியும். “அதிமேலான கடவுளாகிய சிவபாபாவின் பிறந்தநாள்” என்று கூறப்படுகின்றது. ஏனைய பண்டிகைகள் அவர் வந்ததன் பின்னர் மாத்திரமே உருவாக்கப்பட முடியும். முதலில் சிவபாபா வந்து, கீதையைப் பேசுகின்றார், அதாவது, அவர் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இந்த ஞானத்தை உங்களுக்குக் கூறுகின்றார். அவர் உங்களுக்கு இதனைக் கற்பிப்பதுடன், உங்களுக்கு யோகமும் கற்பிக்கின்றார். எனவே, அனைத்துக்கும் முதலில், தந்தை வந்தபொழுதே, சிவனின் பிறந்தநாள் இருந்தது. பின்னர் கீதையின் பிறப்பு இடம்பெற்றது. அவர் ஆத்மாக்களிடம் இந்த ஞானத்தை உரைத்ததால், கீதையின் பிறப்பு இடம்பெற்றது. குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தைப் பற்றியும் சிந்தித்து, வரிசைக்கிரமமாக விழாக்களை எழுத வேண்டும். உங்கள் தர்மத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்து கொள்வார்கள். அனைவருமே தமது சொந்தச் சமயத்தை நேசிக்கின்றார்கள். ஏனைய சமயத்தவர்கள் பற்றிய கேள்விக்கு இடமில்லை. ஒருவர் இன்னொரு சமயத்தை விரும்பினாலும், அவரால் அந்தச் சமயத்திற்குச் செல்ல முடியாது. ஏனைய சமயத்தைச் சேர்ந்தவர்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. விருட்சத்தின் படத்தில் அது மிகவும் தெளிவாக உள்ளது. சமயங்கள் அனைத்தும் முன்னர் இடம்பெற்றதைப் போன்று, மிகச்சரியாக, அதேநேரத்தில் வரும். முதன்முதலில், தந்தை வருகின்றார். அவர் வந்து, உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். ஆகவே கூறப்பட்டுள்ளது: சிவனின் பிறப்பும், பின்னர் கீதையின் பிறப்பும் இடம்பெறுகின்றன, அதன்பின்னர் நாராயணன் ஆகுகின்ற, ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பும் இடம்பெறுகின்றது. அது பின்னர் சத்தியயுகம் ஆகும். இதனை நீங்கள் வரிசைக்கிரமமாக எழுத வேண்டும். இந்த விடயங்கள் இந்த ஞானத்திற்கு உரியவை. சிவனின் பிறப்பு எப்பொழுது இடம்பெறுகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. அவர் கொடுக்கின்ற ஞானமே கீதை எனப்படுகின்றது, பின்னர் அது மறைந்து விடுகின்றது. ஜெகதாம்பாள் போன்றோரின் பிறந்த நாளுக்கு விடுமுறை இருப்பதில்லை. இவ்விடயங்களின் திகதியையோ அல்லது நேரத்தையோ மக்கள் முற்றாக அறிந்து கொள்வதில்லை. அவர்கள் இலக்ஷ்மி நாராயணனின் அல்லது இராமர் சீதையின் இராச்சியத்தைப் பற்றி அறியாமல் இருக்கின்றார்கள். கடந்த 2500 வருடங்களில் வந்துள்ளவர்கள் பற்றி மாத்திரமே அவர்கள் அறிந்துள்ளார்கள். எவ்வாறாயினும், அதற்கு முன்னர் இருந்த தேவர்களின் ஆதிசனாதன தேவதேவியர் தர்மம் இருந்ததில் இருந்து எவ்வளவு காலம் ஆகி விட்டது என்பதை அவர்கள் அறியாமல் உள்ளார்கள். சக்கரம் 5000 வருடங்களை விடவும் நீண்டதாக இருக்க முடியாது. முதல் அரைக் கல்பத்திற்கு, அது அவர்களின் இராச்சியம் ஆகும். இரண்டாவது அரைக் கல்பத்திலேயே சனத்தொகை அதிகளவு அதிகரிக்கின்றது. எனவே, சக்கரம் எவ்வாறு இத்தனை வருடங்களை விடவும் நீண்டதாக இருக்க முடியும்? 8.4 மில்லியன் பிறவிகள் இருக்க முடியாது. கலியுகத்தின் கால எல்லை நூறாயிரம் வருடங்கள் என்று அவர்கள் நம்புகின்றார்கள். அவர்கள் மக்களைக் காரிருளிற்குள் இட்டுள்ளார்கள். முழு நாடகமும் 5000 வருடங்களுக்கு உரியது என்பதற்கும், கலியுகத்தில் இன்னமும் 40000 வருடங்கள் உள்ளன என்று அவர்கள் கூறுவதற்கும் இடையில் பாரிய வேறுபாடு இருக்கின்றது. ஒரு யுத்தம் இடம்பெறும் பொழுது கடவுள் வரவேண்டும் என அவர்கள் உணர்கின்றார்கள். எவ்வாறாயினும், கடவுள் சங்கமயுகத்தின் பொழுதே வரவேண்டும். மகாபாரத யுத்தம் சங்கம யுகத்திலேயே இடம்பெறுகின்றது. தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு சக்கரத்தினதும் சங்கமயுகத்தில் வருகின்றேன். தந்தை புதிய உலக ஸ்தாபனையையும், இப்பழைய உலகின் விநாசத்தையும் மேற்கொள்வதற்கு வருகின்றார். அப்புதிய உலக ஸ்தாபனை மேற்கொள்ளப்படும் பொழுது, இப்பழைய உலகம் நிச்சயமாக அழிக்கப்படுகின்றது, ஏனெனில் இந்த யுத்தம் அதற்கானதே. இதில் சங்கரரில் இருந்து தூண்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. பழைய உலகம் அழிக்கப்படும் என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. கட்டடங்கள் போன்றன அனைத்தும் பூமியதிர்ச்சி போன்றவற்றினால் அழிக்கப்படும், ஏனெனில் புதியதோர் உலகம் தேவைப்படுகின்றது. புதிய உலகம் நிச்சயமாக இருந்தது. டெல்கி தேவதைகளின் உலகமான, பரிஸ்தானாக இருந்தது. அது யமுனை நதிக்கரையில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியத்தில் இருந்தது. இதன் படங்கள் உள்ளன. இலக்ஷ்மியும் நாராயணனும் சுவர்க்கத்திற்கு உரியவர்கள் எனக் கூறப்படுகின்றனர். அவர்களின் திருமண வைபவம் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் காட்சிகளாகக் கண்டீர்கள். இக் கருத்துக்கள் அனைத்தையும் பாபா உங்களோடு மீட்டல் செய்கின்றார். அச்சா, உங்களுக்குக் கருத்துக்களை ஞாபகத்தில் வைத்திருக்க முடியாமல் இருந்தால், அப்பொழுது பாபாவை நினைவு செய்யுங்கள். நீங்கள் தந்தையை மறந்தால், அப்பொழுது ஆசிரியரை நினைவு செய்யுங்கள். உங்கள் ஆசிரியர் என்ன கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் நிச்சயமாக நினைவு செய்வீர்கள். ஆசிரியரை நினைவு செய்வதனால், நீங்கள் இந்த ஞானத்தையும் நினைவு செய்வீர்கள். உங்கள் புத்தியில் உங்கள் இலக்கும் இருக்கின்றது. இது உங்கள் மாணவ வாழ்க்கை என்பதால், நீங்கள் இதனை நினைவுசெய்ய வேண்டும். உங்களுக்குக் கற்பிப்பவரே உங்கள் தந்தையும் ஆவார் என்பதை நீங்கள் அறிவீர்கள். லௌகீகத் தந்தை காணாமல் போக மாட்டார். லௌகீகத் தந்தையும் பரலோகத் தந்தையும், பின்னர் இந்த அலௌகீகத் தந்தையும் இருக்கின்றார்கள். எவரும் இவரை நினைவு செய்வதில்லை. நீங்கள் உங்கள் லௌகீகத் தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் இறுதிவரை அவரை (லௌகீகத் தந்தை) நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் உங்களுடைய சரீரத்தை நீக்கிச் செல்லும்பொழுது, வேறொரு தந்தைக்குப் பிறக்கின்றீர்கள். நீங்கள் பிறவிபிறவியாக ஒரு லௌகீகத் தந்தையைப் பெறுகின்றீர்கள். மக்கள் பரலோகத் தந்தையைத் துன்பத்திலும், சந்தோஷத்திலும் நினைவு செய்கின்றார்கள். மக்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும் பொழுது, கடவுளே தங்களுக்கு அந்தக் குழந்தையைக் கொடுத்ததாகக் கூறுகின்றார்கள். அவர்கள் ஏன் பிரஜாபிதா பிரம்மாவை நினைவுசெய்ய வேண்டும்? அவரிடமிருந்து நீங்கள் எதனையும் பெறுவதில்லை. அவர் அலௌகீகத் தந்தை என அழைக்கப்படுகின்றார். உங்கள் ஆஸ்தியை நீங்கள் பிரம்மாவின் ஊடாக சிவபாபாவிடம் இருந்து பெறுவதை அறிவீர்கள். நீங்கள் கற்பதைப் போன்றே, இவரும் கற்கின்றார். இந்த இரதம் கருவியாகி விட்டார். பல பிறவிகளின் இறுதியில் இவரின் சரீரம் இரதமாகி விட்டது. இரதத்திற்கு ஒரு பெயரிடப்பட வேண்டும். இந்தத் துறவு எல்லையற்றது. இரதம் எக்காலத்திலும் உள்ளாராயினும், வேறு எவருக்கான உத்தரவாதமும் இல்லை. மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது, அவர்கள் தந்தையை விட்டு ஓடி விடுகின்றார்கள். நாடகத்திற்கு ஏற்பவே இந்த இரதம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ‘பாக்கிய இரதம்’ என அழைக்கப்படுகின்றார். நீங்கள் எவருமே பாக்கிய இரதம் என அழைக்கப்படுவதில்லை. உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பதற்காகத் தந்தை யாரில் பிரவேசிக்கிறாரோ, அவர் மாத்திரமே ‘பாக்கிய இரதம்’ எனக் கருதப்படுகின்றார். அவர் ஸ்தாபனைக்கான பணியை மேற்கொள்வதற்கு உதவுகின்றார். நீங்கள் பாக்கிய இரதங்கள் அல்ல. ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த இரதங்களில் அமர்ந்திருந்து, கற்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை ஆகுகின்றீர்கள். ஆகவே, அது தந்தை அமர்ந்திருந்து, எங்களுக்குக் கற்பிக்கின்ற, இந்தச் சரீரத்தின் மகத்துவம். இந்த இறுதிப் பிறவி மிகவும் பெறுமதி வாய்ந்தது. பின்னர், உங்கள் சரீரங்களை மாற்றி, நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இப் பழைய சரீரத்தின் ஊடாகக் கற்பித்தல்களைப் பெறுகின்றீர்கள். நீங்கள் சிவபாபாவிற்கு உரியவர்கள். உங்கள் முன்னைய வாழ்வுகள் ஒரு சதப் பெறுமதியும் அற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது உங்கள் வாழ்வுகள் பவுண்ட் பெறுமதி உடையவை ஆகுகின்றன. நீங்கள் எந்தளவு கற்கின்றீர்கள் என்பதற்கேற்ப உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். நினைவு யாத்திரையே பிரதான விடயம் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். இது பாரதத்தின் புராதன யோகம் என அழைக்கப்படுகின்றது, இதனூடாகவே நீங்கள் தூய்மை அற்றவரிலிருந்து தூய்மையானவர் ஆகுகின்றீர்கள். நீங்கள் அனைவருமே சுவர்க்கத்தில் வசிப்பவர்கள் ஆகுகின்றீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எவ்வளவு கற்கின்றீர்கள் என்பதிலேயே பின்னர் அது தங்கியுள்ளது. நீங்கள் இந்த எல்லையற்ற பாடசாலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் பின்னர் தேவர்கள் ஆகுவீர்கள். யார் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள் என்பதையும், அதற்கான தகுதிகள் எவையாக இருக்கும் என்பதையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும். முன்னர், எங்களுக்கும் எந்தத் தகுதிகளும் இருக்கவில்லை. நாங்கள் அசுர கட்டளைகளைப் பின்பற்றிக் கொண்டிருந்தோம். இப்பொழுது நாங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகின்றோம். நாங்கள் அசுர கட்டளைகளைப் பின்பற்றுவதால், கீழிறங்கும் ஸ்திதிக்குள் செல்கின்றோம். கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால், நாங்கள் மேலேறும் ஸ்திதிக்குள் செல்கின்றோம். ஒரேயொருவர் மாத்திரமே எங்களுக்கு இறை வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார், ஆனால் பலரும் அசுர வழிகாட்டல்களையே கொடுக்கின்றார்கள். நீங்கள் பலரிடமிருந்து, அதாவது, தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரிகள், ஆசிரியர்கள், குருமார்கள் போன்றோரிடம் இருந்து கட்டளைகளைப் பெறுகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் ஒரேயொருவரின் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். இவை உங்களுக்கு 21 பிறவிகளுக்குப் பயன்படும். ஆகவே, நீங்கள் அத்தகைய வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றீர்களோ, அந்தளவிற்கு ஓர் மேன்மையான அந்தஸ்தைக் கோருகின்றீர்கள். அவற்றை நீங்கள் குறைவாகப் பின்பற்றினால், நீங்கள் பெறுகின்ற அந்தஸ்தும் குறைவானதாகவே இருக்கின்றது. ஸ்ரீமத் கடவுளிடமிருந்தே பெறப்படுகின்றது. அதிமேலான கடவுளே ஸ்ரீ கிருஷ்ணரை அனைவரிலும் அதிமேன்மையானவர் ஆக்கியவர். பின்னர் இராவணன் அவரை அனைவரிலும் அதிதாழ்வானவர் ஆக்கினான். தந்தை உங்களை அழகானவர் ஆக்குகின்றார், பின்னர் இராவணன் உங்களை அவலட்சணமானவர்கள் ஆக்குகின்றான். தந்தை உங்கள் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் விகாரமற்றவர். “தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்களும், முழுமையாக நற்குணங்களும் உடையவர்களும்...’ எனத் தேவர்களின் புகழ் பாடப்படுகின்றது. சந்நியாசிகள் ‘முற்றிலும் விகாரம் அற்றவர்கள்’ என்று அழைக்கப்படுவதில்லை. சத்தியயுகத்தில் ஆத்மாக்கள், இந்தச் சரீரங்கள் இரண்டுமே தூய்மையாக இருக்கின்றன. அனைவரும் தேவர்களை அறிவார்கள். அவர்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்களாக இருப்பதால், சம்பூரண உலகின் அதிபதிகள் ஆகுகின்றார்கள். அவர்கள் இப்பொழுது அவ்வாறானவர்கள் அல்ல. பின்னர் நீங்கள் அவ்வாறானவர் ஆகுவீர்கள். தந்தை சங்கமயுகத்தில் மாத்திரமே வருகின்றார். பிரம்மாவின் மூலம் பிராமணர்கள் படைக்கப்படுகின்றார்கள். நீங்கள் அனைவரும் பிரம்மாவின் குழந்தைகள். அவர் முப்பாட்டனார். அவர்களிடம் வினவுங்கள்: நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் பெயரைக் கேள்விப்படவில்லையா? பரமாத்மாவான பரமதந்தை பிரம்மாவின் மூலம் உலகைப் படைக்கின்றார். பிராமணக் குலமும் உள்ளது. பின்னர் நீங்கள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான, சகோதர, சகோதரிகள் ஆகுகின்றீர்கள். இங்கே அரசர்கள், அரசிகள் என்ற கேள்விக்கு இடமில்லை. இந்தப் பிராமணக் குலம் இந்தக் குறுகிய காலமான சங்கமயுகத்தில் மாத்திரமே இருக்கின்றது. பாண்டவர்களுக்கோ அல்லது கௌரவர்களுக்கோ ஓர் இராச்சியம் இருப்பதில்லை. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. 21 பிறவிகளுக்கான மேன்மையான அந்தஸ்திற்கான சகல உரிமைகளையும் கோருவதற்கு, அசுர கட்டளைகள்; அனைத்தையும் பின்பற்றுவதைத் துறந்து, கடவுளின் வழிகாட்டல்களை மாத்திரமே பின்பற்றுங்கள். முற்றிலும் விகாரமற்றவர் ஆகுங்கள்.2. உங்கள் பழைய சரீரத்தில் இருக்கும் பொழுதே, தந்தையின் கற்பித்தல்களைக் கிரகித்து, ஒரு தேவர் ஆகுங்கள். இது மிகவும் பெறுமதிமிக்க வாழ்வு. நீங்கள் இந்த வாழ்க்கையில் பவுண்ட் பெறுமதி உடையவர்கள் ஆகவேண்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஆதார ரூபமாகவும், ஈடேற்றுகின்ற ரூபமாகவும் இருந்து, ஆத்மாக்கள் அனைவருக்கும் மிகச்சரியான அழிவற்ற ஆதாரத்தைக் கொடுப்பீர்களாக.தற்சமயம், உலகின் ஒவ்வொரு மூலையிலும், ஏதோவொரு குழப்பம் இருக்கின்றது. சில சந்தர்ப்பங்களில், மக்கள் மனங்களில் பதற்றத்தின் பல தளம்பல்கள் ஏற்படுகின்றன. வேறு சந்தர்ப்பங்களில், தமோபிரதான் சூழலினதும், பஞ்ச தத்துவங்களினதும் குழப்பம் காணப்படுகின்றது. எல்லைக்கு உட்பட்ட, தற்காலிக வசதிகள் அனைவரையும் கவலைச் சிதைக்குள் அழைத்துச் செல்கின்றன. ஆகவே, எல்லைக்கு உட்பட்ட ஆதாரங்கள், பேறுகள், வழிமுறைகளால் களைப்படைந்து விட்டதால், அவர்கள் உண்மையான ஆதாரத்தைத் தேடுகின்றனர். ஆதார ரூபமும் ஈடேற்றுகின்ற ரூபமுமான ஆத்மாக்களாகிய நீங்களே அவர்களுக்கு மேன்மையான, உண்மையான, அழிவற்ற பேறுகளினதும், உண்மையான, அழிவற்ற ஆதாரத்தினதும் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும்.
சுலோகம்:
காலம் ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷமாக இருப்பதால், அதனை வீணாக்குவதற்குப் பதிலாக, அனைத்தையும் தகுதிவாய்ந்த முறையில் உடனடியாகப் பயன்படுத்துவதற்கு உடனடியாகத் தீர்மானியுங்கள்.அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி, உங்கள் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.
எங்கும் சூரியனின் கதிர்கள் பரவி இருப்பதைப் போல், அதேவிதமாக, ஒரு மாஸ்டர் சர்வசக்திவானாக இருக்கின்ற ஸ்திதி மூலம் சக்திகளினதும், சிறப்பியல்புகளினதும் கதிர்கள் எங்கும் பரவுவதை அனுபவம் செய்யுங்கள். இதற்கு, இந்தச் சுய மரியாதையின் விழிப்புணர்வின் ஆசனத்தில் உங்களை ஸ்திரப்படுத்துங்கள்: “நான் ஒரு மாஸ்டர் சர்வசக்திவான், நான் தடைகளை அழிக்கின்ற ஆத்மா”. பின்னர் நீங்கள் செயல்களைச் செய்யும்பொழுது, உங்கள் முன்னிலையில் தடைகள் வர மாட்டாது.