19.09.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்களே இறை தந்தையின் மாணவர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உண்மையான ரூப்பும், பசந்தும் ஆகுவதுடன், சதா ஞான இரத்தினங்களை மாத்திரமே உங்கள் உதடுகளிலிருந்து வெளிவர அனுமதியுங்கள்.
கேள்வி:
குழந்தைகளான உங்களை மீண்டும் உணர்வுடையவர்கள் ஆக்குவதற்கு, குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா கொடுக்கின்ற உயிர்கொடுக்கும் மூலிகை எது?பதில்:
மன்மனாபவ, அதாவது, தந்தையை நினைவு செய்யுங்கள். இந்தப் போதையைப் பேணுங்கள்: தேவர்கள் ஆகுவதற்கு, அதாவது, ஓர் அரச அந்தஸ்தைக் கோருவதற்கு, நாங்கள் கடவுளுடன் இக்கல்வியைக் கற்கின்றோம். இவ்விழிப்புணர்வே உங்களை மீண்டும் உணர்வு உடையவர்கள் ஆக்குகின்ற, உயிர்கொடுக்கும் சஞ்சீவனி மூலிகை ஆகும். அத்தகைய குழந்தைகளின் ஸ்திதியானது என்றுமே வாட முடியாது. அவர்கள் எப்பொழுதும் தங்களைச் சோதிப்பதுடன், பிறரையும் தொடர்ந்தும் எச்சரிக்கிறார்கள்.ஓம் சாந்தி.
இது ஒரு கல்லூரி; இது பாடசாலையில், மாணவர்கள் தங்களுடைய ஆசிரியரின் முன்னிலையில் தாங்கள் அமர்ந்திருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பதைப் போன்றதாகும். தாம் என்ன பரீட்சையில் சித்தி எய்தப் போகின்றோம் என்பது அவர்களின் புத்திகளில் இருக்கிறது. வேதங்களும், சமயநூல்களும் உபதேசிக்கப்படுகின்ற, ஆன்மீகக் கூட்டங்களிலே எவ்விதமான இலக்கும் இல்லை. அந்தச் சமயநூல்கள் உங்கள் புத்தியிலிருந்து அகற்றப்பட்டு விட்டன. உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கு நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகிறீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். மாணவர்கள் வீட்டில் இருந்தாலும் அல்லது அவர்கள் எங்கு சென்றாலும் தாங்கள் இன்ன இன்ன பரீட்சையில் சித்தி எய்துவார்கள் என்பதை அறிந்திருக்கிறார்கள். வகுப்பில் அமர்ந்திருக்கின்ற குழந்தைகளாகிய உங்களுக்கும் நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பது தெரியும். நீங்கள் உங்களை மாணவர்கள் எனக் கருதுகிறீர்கள், அல்லவா? நாங்கள் ஆத்மாக்கள், எங்கள் சரீரங்களின் மூலம் நாங்கள் கற்கிறோம். நீங்கள் உங்களுடைய சரீரங்களை நீக்கி, எதிர்காலத்தில் வேறு சரீரங்களை எடுப்பீர்கள் என்பது ஆத்மாவிற்குத் தெரியும். அதன்பின்னர் நீங்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுவீர்கள். இங்குள்ள சரீரங்கள் விகாரமானவையும், தூய்மையற்றவையும் ஆகும், பின்னர் நீங்கள் புதிய சரீரங்களைப் பெறுவீர்கள். இந்நேரத்தில் நீங்கள் பெறுகின்ற புரிந்துணர்வு: ஆத்மாவாகிய நான் கற்கிறேன், ஞானக் கடலே எனக்குக் கற்பிக்கிறார். இங்கே உங்களுக்கு உங்கள் இல்லறத்தைப் பற்றிய எவ்விதமான கவலைகளும் இல்லை. நீங்கள் மனிதர்களில் இருந்து மாற்றம் அடைந்து, எதிர்காலத் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பது உங்கள் புத்திகளில் இருக்கின்றது. தேவர்கள் சுவர்க்கத்திலேயே இருக்கிறார்கள். இதனைப் பற்றிச் சதா சிந்திப்பதனால், குழந்தைகளான நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வதுடன், முயற்சியும் செய்வீர்கள். அத்துடன் நீங்கள் எண்ணங்களிலும், வார்த்தைகளிலும், செயல்களிலும் தூய்மையாக இருப்பதுடன், தொடர்ந்தும் அனைவருக்கும் சந்தோஷத்திற்கான செய்தியையும் கொடுப்பீர்கள். இப்பொழுது பிரம்மாகுமார்களாகிய உங்களில் பலர் இருக்கிறீர்கள், நீங்கள் அனைவரும் மாணவ வாழ்க்கையையே வாழ்கிறீர்கள். உங்கள் தொழில் முதலியவற்றில் ஈடுபடும்பொழுது, இந்த வாழ்க்கையை நீங்கள் மறந்து விடுகின்றீர்கள் என்பதல்ல. உதாரணமாக, இனிப்புக்களைத் தயாரிக்கும் இவரும் தான் ஒரு மாணவன் என்பதைப் புரிந்து கொள்கிறார். மாணவர்கள் இனிப்புக்களைத் தயாரிக்க வேண்டுமா? இங்கே, உங்களுடைய அனைத்தும் தனித்துவமானது. உங்கள் சரீரத்தின் வாழ்வாதாரத்திற்காக நீங்கள் வேலை செய்ய வேண்டும். அத்துடன் நீங்கள் பரமாத்மாவாகிய பரமதந்தையுடன் கற்கின்றீர்கள் என்பதனையும் நினைவுசெய்ய வேண்டும். இந்நேரத்தில், உலகிலுள்ள அனைவரும் நரகவாசிகளே என்பது உங்கள் புத்திகளில் உள்ளது. எவ்வாறாயினும், பாரத மக்களான நாங்களே நரகவாசிகளாக இருக்கின்றோம் என்பதையும், பாரத மக்களாகிய நாங்களே சுவர்க்கவாசிகளாக இருந்தோம் என்பதையும் எவருமே புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு நாள் முழுவதும் இந்தப் போதை இருப்பதில்லை; நீங்கள் மீண்டும் மீண்டும் இதனை மறக்கிறீர்கள். நீங்கள் பிரம்மாகுமாரிகளும், குமாரர்களுமாக இருப்பினும், நீங்கள் ஆசிரியர்களும் ஆவீர்கள். நீங்கள் மனிதர்களைத் தேவர்களாக அதாவது நரகவாசிகளைச் சுவர்க்கவாசிகளாக மாற்றுவதற்கான கற்பித்தல்களைக் கொடுக்கின்றீர்கள். இருப்பினும் நீங்கள் அதனை மறந்து விடுகிறீர்கள். இந்நேரத்தில் முழு உலகமும் அசுர சமுதாயமாக இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்கள் தூய்மை அற்றவர்கள், சரீரங்களும் தூய்மை அற்றவையாகவே உள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விகாரங்களை வெறுக்கிறீர்கள். காமம், கோபம் முதலிய அனைத்தும் வெறுப்பிற்குரிய விடயங்களே. விகாரங்களே அதிகளவு வெறுக்கத்தக்க விடயங்கள். சந்நியாசிகளும் சிறிதளவு கோபத்தைக் கொண்டிருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் உண்ணும் உணவு எவ்வாறோ, அவ்வாறே அவர்களின் மனங்களும் உள்ளன் அவர்கள் இல்லறத்தவர்களால் கொடுக்கப்பட்ட உணவையே உண்கிறார்கள். சிலர் அவர்களிடம் இருந்து உணவைப் பெறாது விட்டாலும், பணத்தைப் பெறுகின்றார்கள். அவற்றின் மீது தூய்மையின்மையின் தாக்கம் உள்ளது; தூய்மை அற்றவர்களிடம் இருந்து பெறப்படும் உணவு உங்களைத் தூய்மை அற்றவர்களாக மாத்திரமே ஆக்கும். நீங்கள் இப்பொழுது தூய்மையின் புரட்சியை ஏற்படுத்துகின்றீர்கள். இது தொடர்ந்தும் அதிகரிக்கும்; அனைவரும் தூய்மையாக வேண்டும் என்றே விரும்புவார்கள். இது அவர்களின் இதயங்களைத் தொடும். தூய்மை ஆகாமல் உங்களால் சுவர்க்க அதிபதிகளாக முடியாது. இது படிப்படியாக அனைவரது புத்தியிலும் பிரவேசிக்கும். சுவர்க்கவாசிகள் ஆகவுள்ளவர்கள் அவ்வாறே ஆகுவார்கள். தாங்கள் தூய்மையாகி, நிச்சயமாகத் தூய உலகின் அதிபதிகள் ஆகுவோம் என்று அவர்கள் கூறுவார்கள். இதுவே, தூய்மையற்ற உலகமானது தூய்மையாகுகின்ற, நன்மை பயக்கின்ற, சங்கமயுகம் ஆகும். இதனாலேயே இது அதிமங்களகரமான யுகம் எனப்படுகிறது. இது மனித உலகம் நன்மையைப் பெறும் உபகாரமான யுகமாகும். தந்தை பரோபகாரி ஆதலால், அவர் குழந்தைகளாகிய உங்களையும் அவ்வாறே ஆக்குவார். அவர் வந்து, உங்களுக்கு யோகத்தைக் கற்பித்து, உங்களை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றுகிறார். இதுவே உங்கள் தலைமைப் பாடசாலை என்பது உங்களுக்குத் தெரியும். இங்கே எவருமே எவ்விதமான நாளாந்த உலக விடயங்களிலும் ஈடுபடுவதில்லை. நீங்கள் வெளியே செல்லும்பொழுது, உங்கள் தொழில் போன்றவற்றில் மும்முரமாகி விடுவதால், நீங்கள் மாணவர்கள் என்பதையும், நரகவாசிகளில் இருந்து சுவர்க்கவாசிகளாக மாறுகின்றீர்கள் என்பதையும் நினைவு செய்வதில்லை. உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது நீங்கள் இந்த எண்ணங்களை உங்கள் புத்திகளில் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நேரத்தை ஒதுக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுகின்றீர்கள் என்பதை உங்கள் புத்தி நினைக்க வேண்டும். நீங்கள் ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். உங்கள் வேலை நேரத்திலும் உங்களுக்குச் சிறிதளவு ஓய்வு நேரம் கிடைக்கின்றது. நீங்கள் இறை தந்தையின் மாணவர்கள் என்பதை நினைவில் வைத்திருப்பதற்கு, உங்கள் புத்தியை நீங்கள் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். உங்கள் வியாபாரம் போன்றவற்றை உங்கள் ஜீவனோபாயத்திற்காக மாத்திரமே நீங்கள் செய்கிறீர்கள். அது உலகாய வியாபாரம். இதுவும் உங்கள் வாழ்வாதாரத்திற்கு உரியதே. இது உங்கள் எதிர்காலத்திற்கான உண்மையான வருமானமாகும். இதற்கு மிகவும் சிறந்ததொரு புத்தி தேவைப்படுகின்றது. உங்களை ஆத்மாக்களாகக் கருதி, பரமாத்மாவாகிய பரமதந்தையை நினைவு செய்யுங்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்றும், பாபா எங்களைத் திரும்பவும் அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறார் என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இந்த ஞானத்தின் கடைதல், நாள் முழுவதும் உங்கள் புத்தியில் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். பசுவொன்று தான் உண்ட புல்லை இரை மீட்பதைப் போல், நீங்களும் அவ்வாறு செய்ய வேண்டும். குழந்தைகளான நீங்கள் அழிவற்ற பொக்கிஷங்களைப் பெறுகிறீர்கள். இது ஆத்மாக்களாகிய உங்களுக்கான உணவாகும். தேவர்களாகி, ஓர் அரச அந்தஸ்தைப் பெறுவதற்கே குழந்தைகளாகிய நீங்கள் பரமாத்மா பரமதந்தையுடன் கற்கிறீர்கள் என்பதை நீங்கள் நினைவு செய்ய வேண்டும். இதனை நீங்கள் நினைவு செய்ய வேண்டும். இதனை நீங்கள் மீண்டும் மீண்டும் மறந்து விடுகிறீர்கள். அப்பொழுது சந்தோஷத்தை உணர்வதற்குப் பதிலாக, உங்கள் ஸ்திதி வாடி விடுகின்றது. உயிர் காக்கும் சஞ்சீவனி மூலிகையான இதனை உங்களுடன் வைத்திருப்பதுடன், பிறரை உயிர்ப்பிப்பதற்கு, அவர்களுக்கும் இதனைக் கொடுக்க வேண்டும். அவர்கள் சமயநூல்களில் பல குழப்பமான, நீண்ட கதைகளை எழுதியுள்ளார்கள். இங்கே அமர்ந்திருந்தவாறே பாபா அவை அனைத்தினதும் முக்கியத்துவத்தை உங்களுக்கு கூறுகிறார். “மன்மனாபவ” என்பதன் அர்த்தம் தந்தையை நினைவு செய்வதனால், உங்களால் சுவர்க்க அதிபதிகளாக முடியும் என்பதாகும். தொடர்ந்தும் உங்கள் இதயத்தை வினவி, சோதித்தவாறு இருங்கள். ஒருவரையொருவர் எச்சரியுங்கள். ஒரு முரண்பாடு இருக்கும் பொழுது, உங்களுக்கு யார் எதனைக் கூறினாலும் அது உங்களுக்கு இனிமையாக இருக்க முடியாத வகையில், உங்கள் புத்தி அதில் ஈடுபடுகின்றது. ஏனெனில் மாயையுடன் உங்கள் புத்தி முழுமையாக ஈடுபடுத்தப்பட்டிருப்பதால், அந்தக் கவலை மாத்திரமே இருக்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். தந்தையை நினைவு செய்யுங்கள்! எவ்வாறாயினும், உங்களுக்குள் உள்ள சொந்தக் குழப்பத்தினுள் நீங்கள் சிக்கிக் கொண்டிருந்தால், அந்த மருந்து வேலை செய்யாததுடன், நீங்கள் தொடர்ந்தும் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பீர்கள். இதனை நீங்கள் செய்யக்கூடாது. மாணவர்கள் தங்கள் கல்வியைக் கைவிடுவதில்லை. உங்களின் இக்கல்வி எதிர்காலத்திற்கானது என்றும், இதிலேயே உங்களுக்கு நன்மை உள்ளது என்றும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். உங்கள் தொழில் முதலியவற்றைச் செய்யும்பொழுது, இந்தப் பாடநெறியையும் கற்றிடுங்கள். அத்துடன் எவ்வாறு இவ்வுலகச் சக்கரம் சுழல்கின்றது என்பதைப் பற்றிய ஞானத்தையும் உங்கள் புத்தி கடைந்தவாறே இருக்க வேண்டும். நினைவே உயிர் கொடுக்கும் மூலிகை ஆகும். ஒருவருக்கொருவர் இதனை நினைவூட்டுங்கள். கணவர்கள், மனைவியர்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் இதனைத் தொடர்ந்தும் ஞாபகப்படுத்த வேண்டும். சிவபாபாவே இதனை எங்களுக்குப் பிரம்மாவின் மூலம் கற்பிக்கிறார். நீங்களே சிவபாபாவின் இரதத்தை அலங்கரிக்கிறீர்கள், ஆகவே நீங்கள் அந்த ஒரேயொருவரை நினைவுசெய்ய வேண்டும். நாள் முழுவதும் அவரை நினைவு செய்வது கடினமானது. இறுதியிலேயே நீங்கள் அந்த ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள். பலசாலிகள் தங்களுடைய கர்மாதீத நிலையை அடையும்வரை, மாயையும் அவர்களுடன் தொடர்ந்தும் யுத்தம் புரிந்தவாறே இருப்பாள். நீங்கள் ஒருவரை ஒருவர் எச்சரித்தவாறே முன்னேற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அலுவலக அதிகாரிகள் தமது பணியாட்களிடம் ஒன்றைச் செய்யத் தமக்கு ஞாபகப்படுத்துமாறு கூறுவதுண்டு. நீங்களும் கூட நினைவு செய்வதை ஒருவருக்கொருவர் நினைவுபடுத்த வேண்டும். இலக்கு மிக உயர்ந்தது. தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். தந்தை உங்களுக்கு எதனையும் புதிதாகக் கூறவில்லை. இந்த ஞானத்தை நீங்கள் நூறாயிரம் தடவைகள் செவிமடுத்துள்ளீர்கள், நீங்கள் மீண்டும் அதனைச் செவிமடுப்பீர்கள். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் இதனைச் செவிமடுக்கின்றீர்கள் எனவும், நீங்கள் இப்பொழுது இதனைச் செவிமடுக்கின்றீர்கள் எனவும், நீங்கள் மீண்டும் அதனைச் செவிமடுப்பீர்கள் எனவும் வேறு எந்த ஆன்மீகக் கூட்டத்தினரும் கூற மாட்டார்கள். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் இதனைச் செவிமடுக்கிறீர்கள் என வேறெவரும் கூற மாட்டார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் அரைக்கல்பமாகப் பக்தியைச் செய்து வருகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது சற்கதி அடைவதற்காக இந்த ஞானத்தைப் பெற்றிருக்கிறீர்கள். தந்தையை நினைவு செய்வதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும். முயற்சி செய்யுங்கள்! ஓர் நீதிபதியினதோ அல்லது ஒரு பிரமுகரினதோ குழந்தை தவறான ஒன்றைச் செய்தால், அவர் தனது குடும்பத்தின் பெயரையே அவதூறு செய்வார். இங்கேயும் நீங்கள் தந்தைக்கு உரியவர்கள், ஆகவே நீங்கள் அத்தகைய எச்செயல்களையும் செய்யக்கூடாது. இல்லாவிட்டால், தந்தையே இகழப்படுவார். சற்குருவை இழிவுபடுத்துபவர்களால் தங்களது இலக்கை அடைய முடியாது, அதாவது, அவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியாது. நீங்கள் கடவுளின் குழந்தையாக இருந்து கொண்டு, அசுரச் செயல்களையும் செய்வதையிட்டு உங்களுக்குள் அச்சம் இருக்க வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். உங்கள் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுவதால் நீங்கள் ஏமாற்றப்படுவதுடன், உங்கள் அந்தஸ்தும் அழிக்கப்படுகின்றது. நீங்கள் வினவலாம்: நான் உங்கள் வழிகாட்டல்களை மிகச்சரியாகப் பின்பற்றுகிறேனா? தந்தையின் முதலாவது வழிகாட்டல்: தந்தையை நினைவு செய்யுங்கள்! எவ்விதமான பாவச் செயல்களையும் செய்யாதீர்கள். பாபா நான் செய்கின்ற பாவங்கள் என்ன? உங்களுக்கு அது தெரிந்திருந்தால், தயவு செய்து அதை எனக்குக் கூறுங்கள்! அவருக்குத் தெரிந்திருந்தால், அவர் உங்களுக்குக் கூறுவார்: இவையே நீங்கள் செய்கின்ற தவறுகள், அவை பாவச் செயல்கள் ஆகும். காமம் எனும் விகாரமே மிக மோசமான பாவச்செயலாகும். இதனாலேயே பெருமளவு சண்டைகள் இடம்பெறுகின்றன. குழந்தைகளாகிய நீங்கள் தைரியத்துடன் இதனையிட்டுச் சிந்திக்க வேண்டும். “நாங்கள் திருமணம் செய்ய மாட்டோம்!” என்று கூறுகின்ற ஒரு குமாரிகளின் குழுவும் இருக்க வேண்டும். இதுவே சக்கரத்தின் சங்கமயுகம் ஆகும், இதிலேயே நாங்கள் அனைவரிலும் அதிமேன்மையானவர்கள் ஆக வேண்டும். இலக்ஷ்மியும், நாராயணனுமே அனைவரிலும் அதிமேன்மையானவர்கள் எனக் கூறப்படுகிறார்கள். விகாரமானவர்களை அதிமேன்மையானவர்கள் என்று அழைக்க முடியாது. நீங்கள் இப்பொழுது அனைவரிலும் அதி மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். அனைவருக்கும் இவ்வாறு ஆகுவதற்கான உரிமை இருக்கிறது. உங்களால் புண்ணிய, லீப் மாதத்தில் அதிகளவு சேவையைச் செய்ய முடியும். பெருமளவு ஆடம்பரத்துடனும், பகட்டுடனும் சேவையைச் செய்யுங்கள். இந்தச் சங்கமயுகமே மனிதர்கள் நரகவாசிகளில் இருந்து சுவர்க்கவாசிகள் ஆகுகின்ற, அதிமேன்மையான யுகமாகும். இது ஒரு பொதுவான விடயம். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். சத்திய யுகத்திலேயே அதிமேன்மையான மனிதர்கள் இருந்தார்கள். கலியுகத்திலே மேன்மையான மனிதர்கள் எவருமே இல்லை. இதுவே தூய்மையற்ற உலகாகும். அங்கே அனைவரும் தூய்மையானவர்களே. நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கே தந்தை இவ்விடயங்கள் அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். உங்களுக்கு எப்பொழுதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் விளங்கப்படுத்துங்கள். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் பொழுதே அசரீரியான பாபாவான, பரமாத்மா பரமதந்தை மாணவர்களாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இந்தக் கல்வியின் மூலமே நீங்கள் சுவர்க்கத்தின் தேவர்கள் ஆகுகின்றீர்கள். இவ் இராச்சியத்தை அடைவதே பரீட்சைகள் யாவற்றிலும் மிகப்பெரிய பரீட்சையாகும். பரமாத்மாவைத் தவிர, எவராலுமே உங்களுக்கு இதனைக் கற்பிக்க முடியாது. தந்தையே அனைவரையும் ஈடேற்றுபவர். அவர் சுவர்க்கத்தின் அதிபதி ஆகுவதில்லை. ஸ்ரீ கிருஷ்ணரே சுவர்க்கத்தின் இளவரசர் ஆகுகின்றார். பாபாவின் சேவையானது தன்னலமற்றது. அவர் கூறுகிறார்: நான் ஓர் அரசர் ஆகுவதில்லை. நான் உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆக்குகிறேன். இந்த விடயங்கள் வேறு எவரது புத்தியிலும் இல்லை. இங்கே செல்வந்தர்கள் பலர் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அங்கே ஏழைகள் ஆகுவார்கள். ஆனால் இப்பொழுது ஏழைகளாக இருப்பவர்கள் அங்கே மிகவும் செல்வந்தர்கள் ஆகுவார்கள். உலக அதிபதி ஆகுவது என்பது ஓர் எல்லையற்ற விடயம். (கீதையில்) நினைவுகூரப்பட்டுள்ளது: நான் உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆக்குகிறேன். அவர் உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகிறார். நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். ஆதலால், பரமாத்மா பரமதந்தையே உங்களுக்குக் கற்பிப்பவர் எனும் அதிகளவு போதையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது நரகவாசிகளில் இருந்து சுவர்க்கவாசிகளான தேவர்களாக மாறுகின்றோம். இதனை நீங்கள் நினைவு செய்யும்பொழுது, உங்கள் சந்தோஷப் பாதரசம் உயரும். “மாணவ வாழ்க்கையே மிகச் சிறந்தது”. நீங்கள் முயற்சி செய்து அரசர்களாகவும், அரசிகளாகவும் ஆகவேண்டும். நீங்கள் அரசர்களாகிப் பின்னர் பிச்சைக்காரர்கள் ஆகுவீர்கள் என மக்களுக்குக் கூறக்கூடாது; நீங்கள் இதனை மக்களுக்குக் கூறக்கூடாது. அவர்களிடம் கேளுங்கள்: நீங்கள் என்னவாக வர விரும்புகின்றீர்கள்? அவர்கள் அனைவருமே தாங்கள் உலகின் அதிபதிகள் ஆகுவோம் எனப் பதில் அளிப்பார்கள். தந்தையாகிய கடவுளால் மாத்திரமே உங்களை இவ்வாறு ஆக்க முடியும். அவர் கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள், இதனால் நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். இதுவே அத்தகைய இலகுவான விடயம்! ஒருவர் எவ்வளவு ஏழையாக இருப்பினும் பரவாயில்லை, எவராலும் இவ்வாறாக முடியும், ஏனெனில் இங்கே பணம் என்ற கேள்விக்கே இடமில்லை. இதனாலேயே தந்தை ஏழைகளின் பிரபு எனப்படுகிறார். தந்தையை நினைவுசெய்து, பாவக் கலசத்தை வெறுமை ஆக்குங்கள். நீங்கள் அனைவரும் செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்பவே, பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு ஏறியுள்ளீர்கள் என உங்களால் ஏணிப் படத்தில் காணக்கூடியதாக இருக்கிறது. யார் உயரே ஏறினார்களோ, அவர்கள் இராச்சியம் எனும் அமிர்தத்தைச் சுவைக்கின்றார்கள், வீழ்ந்தவர்கள் முற்றிலும் நொறுக்கப்படுகின்றனர். நீங்கள் விகாரத்தில் வீழ்ந்தாலோ அல்லது தந்தையை விட்டுச் சென்றாலோ பாபா கூறுகிறார்: நீங்கள் கீழே வீழ்ந்து விடுவீர்கள். தகுதி வாய்ந்த குழந்தைகள் முயற்சி செய்து, தங்கள் வாழ்வுகளை வைரத்தைப் போல் ஆக்குகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு முயற்சியைச் செய்ய வேண்டும். எதனையாவது செய்பவர்கள் அதற்கான வெகுமதியைப் பெற்றுக் கொள்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் தாயையும் தந்தையையும் பின்பற்றி, பிறரையும் உங்களுக்குச் சமமானவர்;கள் ஆக்கும்படி கூறப்பட்டுள்ளது. நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகக் கருணை உடையவர் ஆகுகின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் உங்களுக்கு நன்மை செய்வீர்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், ஆனால் இந்த வழிமுறைகளைத் தொடர்ந்தும் மற்றவர்களுக்கும் காட்டுங்கள். இல்லாவிடின் உங்களால் அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது. இறுதியில் நீங்கள் பல காட்சிகளைக் காண்பீர்கள், ஆயினும் அந்நேரத்தில் உங்களால் எதுவுமே செய்ய முடியாது. ஒருமுறை நீங்கள் பரீட்சையில் சித்தி அடையவில்லை எனில், அவ்வளவுதான்! நீங்கள் இறுதியில் மனவருத்தப்படுவதாக இருக்கக்கூடாது. இறுதியில் உங்களால் முயற்சி செய்யவும் முடியாது. ஆகவே, இயன்றவரையில், உங்களுக்கும், பிறருக்கும் நன்மை செய்யுங்கள். குருடர்களுக்கான கைத்தடிகள் ஆகுங்கள். நீங்கள் ஒவ்வொரு சக்கரத்திலும் சுவர்க்கத்தை ஸ்தாபித்திருக்கிறீர்கள், அதனை நீங்கள் நிச்சயமாக இப்பொழுதும் செய்வீர்கள்; இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஏதாவது ஒன்றைச் செய்பவர்கள் நிச்சயமாக அதற்கான வெகுமதியைப் பெற்றுக் கொள்கிறார்கள். பாபாவின் அன்பிற்கினிய குழந்தைகளால் மறைந்திருக்க முடியாது. ரூப்பையும், பசந்தையும் போல், இரத்தினங்களை மாத்திரமே உங்கள் உதடுகளிலிருந்து வெளிவர அனுமதியுங்கள். ஏமாற்றுப் பேர்வழிகள் ஆகாதீர்கள்! மற்றவர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தாதீர்கள். ஒருவர் தவறான விடயங்களை உங்களுக்குக் கூறும்பொழுது, அவர் ஓர் ஏமாற்றுப் பேர்வழி என்றே கருதி, அவரையிட்டு எச்சரிக்கையாக இருங்கள். தந்தையிடம் இருந்து உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுவதில் முழுமையாக, மும்முரமாக ஈடுபடுங்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுக்கும், பிறருக்கும் நன்மையையே செய்யுங்கள். குருடர்களுக்கான கைத்தடி ஆகுங்கள். எவராவது உங்களுக்குத் தவறான விடயங்களைக் கூறும்பொழுது, அந்த நபரையிட்டு எச்சரிக்கையாக இருங்கள்.2. உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் தூய்மையானவர்கள் ஆகுங்கள். “நான் ஒரு மாணவன், கடவுளே எனக்குத் தேவர்கள் ஆகுவதற்கான கல்வியைக் கற்பிக்கின்றார்” - இந்தச் சந்தோஷத்தைப் பேணுங்கள்.
ஆசீர்வாதம்:
உங்கள் சகபாடியை அறிந்திருப்பதன் மூலமும், பற்றற்ற பார்வையாளராக இருப்பதனாலும் சகல சக்திகளாலும் நிறைந்தவராகி, சகல பந்தனங்களில் இருந்தும் விடுபடுவீர்களாக.சகல சக்திகளாலும் நிறைந்தவராகி, தங்கியிருத்தலுக்கு அப்பால் இருப்பதற்கு இரு விடயங்களை நினைவு செய்யுங்கள்: 1) பற்றற்ற பார்வையாளர் (சாக்ஷி) 2) உங்கள் சகபாடி (சாத்தி). இதனைச் செய்வதனால், நீங்கள் விரைவில் உங்கள் ஸ்திதியை எந்தவொரு பந்தனத்தில் இருந்தும் விடுபட்டதாக ஆக்கிக் கொள்வீர்கள். சர்வசக்திவான் தந்தையின் சகவாசத்தை நீங்கள் கொண்டிருக்கும் போது, நீங்கள் இயல்பாகவே சகல சக்திகளையும் பெறுவதுடன், பற்றற்ற பார்வையாளராக வாழும் போது, நீங்கள் எந்தவொரு பந்தனத்திலும் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள். எந்தவொரு பணியையும் பெயரளவிற்கு உங்கள் சரீரத்தில் இருந்தவாறு மேற்கொள்ளுங்கள், அதன்பின்னர் பற்றற்ற பார்வையாளர் ஆகுங்கள். குறிப்பாக இந்தப் பயிற்சியை அதிகரியுங்கள்.
சுலோகம்:
தூய்மைக்கும் தூய்மை இன்மைக்கும் இடையில், உங்களுக்குள் ஒரு போராட்டம் நிகழுமாயின், பிராமணராக இருப்பதற்குப் பதிலாக, நீங்கள் ஒரு போராளியாக ஆகுகிறீர்கள்.அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
விரக்தியிலும் பசியிலும் தாகத்திலும் உள்ள ஆத்மாக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்கு, உங்களை அதீந்திரிய சுகத்தாலும், சகல சக்திகளாலும் நிரப்பிக் கொள்ளுங்கள். நீங்கள் எந்தளவிற்கு சகல சக்திகள் மற்றும் அதீந்திரிய சுகம் ஆகிய பொக்கிஷங்களால் உங்களை நிரப்பிக் கொள்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்கள் ஸ்திதி அதிகளவு ஸ்திரமாக இருப்பதால் உங்களால் பிற ஆத்மாக்களை பரிபூரணமானவர் ஆக்க முடியும். நீங்கள் அனைவரது புத்தியையும் நிரப்புகின்ற, அருள்பவரின் குழந்தைகள். ஆகையால், நீங்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். அனைவருக்கும் கொடுக்கின்ற இந்தக் காட்சி மிக விரைவில் உங்கள் முன்னால் வரும்.