19.10.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, எப்பொழுதுமே சந்தோஷமாக இருந்தால், நினைவு யாத்திரையும் இலகுவானதாகிவிடும். நினைவு செய்வதன் மூலமே நீங்கள் 21 பிறவிகளுக்கு தூய புண்ணியாத்மாக்கள் ஆகுவீர்கள்.

பாடல்:
உங்களுடைய மிகச் சிறந்த பணியாளர்களும், அடிமைகளும் யார்?

பதில்:
இயற்கை அனர்த்தங்களும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுமே உங்களின் மிகச் சிறந்த பணியாளர்களும், அடிமைகளும் ஆகும். அவையே முழு உலகத்தினதும் குப்பைகளை அகற்றுவதற்கும், அனைத்தையும் சுத்தப்படுத்துவதற்கும் உங்களுக்கு உதவுகின்றன. பின்னர் இயற்கைத் தத்துவங்கள் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? நீங்கள் யுத்தகளத்தில் நிற்கின்றீர்கள். நீங்கள் நிற்கவில்லை, அமர்ந்திருக்கின்றீர்கள். உங்கள் சேனை மிகவும் சிறந்தது! இதுவே ஆன்மீகத் தந்தையின் ஆன்மீகச் சேனை என்று அழைக்கப்படுகின்றது. இராவணனை வெற்றி கொள்வதற்காக, தந்தையுடன் யோகம் செய்யும் அத்தகைய இலகுவான முயற்சியைச் செய்யுங்கள் என்றே அவர் உங்களைத் தூண்டுகின்றார். நீங்கள் மறைமுகமான போராளிகள் என்றும் மறைமுகமான மகாவீர்கள் என்றும் அழைக்கப்படுகின்றீர்கள். நீங்கள் ஐந்து விகாரங்களையும் வெற்றி கொள்கின்றீர்கள். அதில் முதலாவது சரீர உணர்வாகும். உலகை வெற்றி கொண்டு, உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காகத் தந்தை உங்களுக்கு மிகவும் இலகுவான வழிமுறைகளைக் காட்டுகின்றார். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவருக்கும் இவற்றைத் தெரியாது. நீங்கள் உலகில் அமைதி இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். அங்கே அமைதியின்மை, துன்பம், விரக்தி போன்றவற்றின் பெயரோ சுவடோ இருக்க மாட்டாது. இந்தக் கல்வி உங்களைப் புதிய உலகின் அதிபதிகள் ஆக்குகின்றது. தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, காமத்தை வெற்றி கொள்வதன் மூலம். நீங்கள் 21 பிறவிகளுக்கு உலகை வென்றவர்கள் ஆகுகின்றீர்கள். இது மிகவும் இலகுவாகும். நீங்கள் சிவபாபாவின் ஆன்மீகச் சேனை ஆவீர்கள். இதில் இராமர் என்ற கேள்வியே இல்லை. கிருஷ்ணர் என்ற கேள்வியும் இல்லை. பரமாத்மாவான பரமதந்தையே இராமர் என்று அழைக்கப்படுகின்றார். மக்கள் காட்டியுள்ள இராமரின் சேனை போன்றவை தவறானது. ஞான சூரியன் உதிக்கும் போது, அறியாமை என்ற இருள் அகன்றது என்று நினைவு கூரப்பட்டுள்ளது. கலியுகம் காரிருளாகும். அதிகளவில் சண்டை சச்சரவும் மற்றும் வன்முறையும் இடம்பெறுகின்றன. சத்தியயுகத்தில் இவ்வாறு இடம்பெற மாட்டாது. நீங்கள் எவ்வாறு உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்று பாருங்கள்! இதற்கு உங்கள் கை கால்களை நீங்கள் பயன்படுத்துவதில்லை. இங்கே, உங்கள் சரீர உணர்வை நீங்கள் துண்டிக்க வேண்டும். நீங்கள் வீட்டில் வாழும் போதும் முதலில் நீங்கள் நினைவு செய்ய வேண்டியது: நான் ஓர் ஆத்மா, சரீரம் அல்ல. ஆத்மாக்களாகிய நீங்களே 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். இது இப்பொழுது உங்கள் இறுதிப் பிறவியாகும். இந்தப் பழைய உலகம் முடிவடைய வேண்டும். இதுவே அதி மங்களகரமான சங்கமயுகத்தின் லீப் யுகம் என அழைக்கப்படுகின்றது. உச்சிக் குடுமி சிறியதாகும். பிராமணர்களின் உச்சிக்குடுமி மிகவும் பிரபல்யமானது. தந்தை மிகவும் இலகுவாகவே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுவதற்காக, 5000 வருடங்களுக்கு ஒருமுறை வந்து தந்தையிடம் இதனைக் கற்கின்றீர்கள். உங்கள் இலக்கும் இலட்சியமும் உங்கள் முன்னால் உள்ளது: நாங்கள் சிவபாபாவின் மூலம் இவ்வாறு ஆக வேண்டும். ஆம் குழந்தைகளே, ஏன் ஆகக் கூடாது? சரீர உணர்வைத் துறந்து. உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். அப்பொழுது உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இந்தப் பிறவியில் நீங்கள் தூய்மை ஆகுவதன் மூலம், ஆத்மாக்களாகிய நீங்கள் 21 பிறவிகளுக்கு தூய, புண்ணியாத்மாக்கள் ஆகுகின்றீர்கள். அதன் பின்னர் உங்கள் வீழ்ச்சி ஆரம்பமாகுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மாத்திரமே 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றிவருகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். முழு உலகமும் முழுச் சக்கரத்தையும் சுற்றிவருவதில்லை. 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்தவர்களும் இக் குலத்தைச் சேர்ந்தவர்களும் வருவார்கள். தந்தை மாத்திரமே சத்திய, திரேதாயுகங்களை ஸ்தாபிக்கின்றார். அதனை அவர் இப்பொழுது ஸ்தாபிக்கின்றார். பின்னர் துவாபர, கலியுகங்கள் இராவணனது ஸ்தாபனையாகும். இராவணனின் ரூபம் உள்ளது. அதில் கழுதையின் தலை உள்ளது. அவர்கள் விகாரமான கழுதைகள் ஆகுகின்றார்கள். நீங்கள் எவ்வாறிருந்தீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். இது பாவாத்மாக்கள் நிறைந்த உலகமாகும். பாவாத்மாக்கள் நிறைந்த உலகில் மில்லியன் எண்ணிக்கையான மனிதர்கள் உள்ளனர். தூய, புண்ணியாத்மாக்கள் நிறைந்த உலகில் ஆரம்பத்தில் 900,000 எண்ணிகையானோர் மாத்திரமே உள்ளனர். நீங்கள் இப்பொழுது முழு உலகிற்கும் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனனும் உலக அதிபதிகளாக இருந்தார்கள். நிச்சயமாகத் தந்தை மாத்திரமே உங்களுக்கு சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு உலக இராச்சியத்தை கொடுப்பதற்காகவே வந்துள்ளேன். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். அதிலும், மரண பூமியில் இந்த இறுதிப் பிறவியில் தூய்மை ஆகுங்கள். பழைய உலகின் விநாசம் உங்கள் முன்னால் ஆயத்தமாகுகின்றது. வீட்டில் இருந்து கொண்டே, அனைவரையும் அழித்துவிடக் கூடிய வகையில் அவர்கள் அத்தகைய குண்டுகள் போன்றவற்றை தயாரிக்கின்றார்கள். அவர்கள் மேலும் கூறுகின்றார்கள்: நாங்கள் வீட்டில் இருந்தவாறே பழைய உலகம் முழுவதையும் அழித்து விடுவோம். வீட்டில் இருந்தவாறே, முழு உலகமும் அழிந்து விடும் வகையில் அவர்கள் குண்டுகளை வீசுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் வீட்டில் இருந்தவாறே யோக சக்தியினால் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் யோக சக்தியினால் அமைதியை ஸ்தாபிக்கின்றீர்கள், அவர்களோ விஞ்ஞான சக்தியினால் முழு உலகையும் அழிப்பார்கள். அவர்களே உங்கள் சேவகர்கள். அவர்கள் உங்களுக்கு சேவை செய்கின்றார்கள். அவர்கள் பழைய உலகை அழிக்கின்றார்கள். இயற்கை அனர்த்தங்கள் போன்றவை உங்கள் அடிமைகள் ஆகுகின்றன. இயற்கை அனைத்துமே உங்கள் அடிமை ஆகுகின்றது. நீங்கள் தந்தையுடன் யோகம் செய்கின்றீர்கள். ஆகையால் குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்குள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய அன்பிற்கினிய தந்தையை நீங்கள் அதிகளவு நினைவு செய்ய வேண்டும். இந்த முழு பாரதமும் சிவாலயமாக இருந்தது. சத்தியயுகத்தில் மக்கள் முற்றிலும் விகாரமற்றவர்களாக இருந்தார்கள். ஆனால், இங்கோ, அவர்கள் விகாரமுடையவர்களாக இருக்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது தந்தை உங்களுக்குக் கூறியதை நினைவு கூருகிறீர்கள்: தீயதைக் கேட்காதீர்கள்! தீய விடயங்களைச் செவிமடுக்காதீர்கள். அத்தகைய விடயங்களையேனும் பேசாதீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் மிகவும் அழுக்காகி விட்டீர்கள். உங்களிடம் அதிகளவு செல்வம் இருந்தது. நீங்களே சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தீர்கள். சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருப்பதற்குப் பதிலாக நீங்கள் இப்பொழுது நரகத்தின் அதிபதிகள் ஆகியுள்ளீர்கள். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. 5000 வருடங்களுக்கு ஒருமுறை நான் குழந்தைகளாகிய உங்களை ஆழ்நரகத்தில் இருந்து மீட்டு, சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். ஆன்மீகக் குழந்தைகளே, எனது வழிகாட்டல்களுக்குக் கீழ்ப்படிய மாட்டீர்களா? பரமாத்மா கூறுகின்றார்: தூய உலகின் அதிபதிகள் ஆகுங்கள். எனவே, நீங்கள் அவ்வாறு ஆகமாட்டீர்களா? விநாசம் நிச்சயமாக இடம்பெறும். இந்த யோக சக்தியினால் பல பிறவிகளின் உங்கள் பாவங்கள் அழிந்துவிடும். எவ்வாறாயினும் பல பிறவிகளின் பாவங்கள் அழிவதற்கு அதிகளவு காலம் எடுக்கும். ஆரம்பத்திலிருந்து இங்குள்ள குழந்தைகளினால் 10 சதவீதமான நினைவையேனும் கொண்டிருக்க முடிவதில்லை. ஆகையாலேயே அவர்களின் பாவங்கள் அழிக்கப்பட முடியாதுள்ளது. புதிய குழந்தைகள் விரைவில் யோகிகள் ஆகுவதால் அவர்களின் பாவங்கள் அழிக்கப்பட்டு, அவர்கள் சேவை செய்யவும் ஆரம்பிக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டுள்ளீர்கள். தந்தை உங்களை மீண்டும் அழைத்துச் செல்வதற்கே வந்துள்ளார். பாவாத்மாக்களினால் அமைதி தாமத்திற்கோ அல்லது சந்தோஷ உலகிற்கோ செல்ல முடியாது. அவர்கள் துன்ப உலகிலேயே இருக்கின்றார்கள். ஆகையாலேயே தந்தை இப்பொழுது கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு விடும். ஒ குழந்தைகளே, அழகிய மலர்கள் ஆகுங்கள்! தெய்வீகக் குலத்தை அவதூறு செய்யாதீர்கள். விகாரமுடையவர் ஆகுவதால், நீங்கள் சந்தோஷமற்றவராக இருக்கிறீர்கள். இதுவும் நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும். நீங்கள் தூய்மை ஆகாமல் இருந்தால் உங்களால் தூய உலகமான சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. பாரதம் சுவர்க்கமாக இருந்தது. அது கிருஷ்ணரின் உலகமாக இருந்தது, ஆனால் இப்பொழுது அனைவருமே நரக வாசிகள் ஆவார்கள். எனவே குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷத்துடன் விகாரங்களைத் துறந்து விட வேண்டும். நீங்கள் நஞ்சு அருந்துவதை உடனடியாகவே கைவிட வேண்டும். நீங்கள் நஞ்சை அருந்தினால் வைகுந்தத்திற்குச் செல்ல முடியாது. அவ்வாறு ஆகுவதற்கு நீங்கள் இப்பொழுது தூய்மை ஆக வேண்டும். இராஜயோகத்தின் மூலம் அவர்கள் எவ்வாறு தமது இராச்சியத்தைப் பெற்றுக் கொண்;டார்கள் என்று நீங்கள் விளங்கப்படுத்தலாம். இது ஒரு கல்வியாகும். இதுவும் அதேபோன்று ஒரு சட்டநிபுணராகவோ அல்லது ஒரு சத்திரசிகிச்சை நிபுணராகவோ ஆகுவதற்கான யோகமே ஆகும். நீங்கள் சத்திரசிகிச்சை நிபுணருடன் யோகம் செய்தால், சத்திரசிகிச்சை நிபுணர் ஆகலாம். இவையோ கடவுளின் வாசகங்கள் ஆகும். அவர் எவ்வாறு இரதத்திற்குள் பிரவேசிக்கின்றார்? அவர் கூறுகின்றார்: அவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் நான் அவரில் இருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றேன். அவர் உலகின் தூய அதிபதியாக இருந்தார் என்பதை நான் அறிவேன். அவர் இப்பொழுது தூய்மையற்றவராகவும், ஏழையாகவும் உள்ளார். அதன் பின்னர் அவர் முதல் இலக்கத்தைக் கோருவார். நான் அவரில் பிரவேசித்து குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றேன். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, தூய்மை ஆகுங்கள், அப்பொழுது நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பீர்கள். சத்தியயுகம் அமரத்துவ பூமியாகும். துவாபரயுகமும், கலியுகமும் மரண பூமியாகும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இங்கே ஆத்ம உணர்வுடையவர் ஆகுகின்றீர்கள். ஆனால் பின்னர் நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகி, மாயையினால் தோற்கடிக்கப்படுகின்றீர்கள். மாயையினால் வீசப்படும் குண்டுகளில் ஒன்றினால் நீங்கள் சாக்கடையில் முற்றாக விழுந்து விடும் வகையில் தாக்கப்படுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இது ஒரு சாக்கடையாகும். இது சந்தோஷம் அல்ல. சுவர்க்கம் எவ்வாறு இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! தேவர்களின் வாழ்க்கை முறையைப் பாருங்கள்! அதன் பெயரே சுவர்க்கம்! நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆக்கப்படுகின்றீர்கள். இருப்பினும் நீங்கள் நிச்சயமாக நஞ்சை அருந்துவேன் என்றே கூறுகின்றீர்கள்! அவ்வாறாயின், உங்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. அதிகளவு தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். குழந்தைகளாகிய நீங்கள் மாயையுடன் போரிட வேண்டும். சிலர் சரீர உணர்வுடையவராகி மிகவும் தீய செயல்களைச் செய்கின்றார்கள். அவர்கள் தம்மை எவரும் கவனிக்கவில்லை என்று நினைக்கின்றார்கள். கோபமும் பேராசையும் வெளிப்படையானவை. காமத்தில் அந்தரங்கம் உள்ளது. அவர்கள் தங்கள் முகங்களை அழுக்காக்கிக் கொள்கின்றார்கள். உங்கள் முகங்களை அழுக்காக்கிக் கொள்வதால், நீங்கள் அழகானவரில் இருந்து அவலட்சணமானவர் ஆகுகின்றீர்கள். பின்னர் முழு உலகமும் உங்களைப் பின்பற்றுகின்றது. அத்தகைய தூய்மையற்ற உலகம் நிச்சயமாக மாற வேண்டும். தந்தை கூறுகின்றார்: ஒரேயொரு பிறவியிலேனும் நீங்கள் தூய்மை ஆகாததையிட்டு நீங்கள் வெட்கப்படவில்லையா? கடவுள் பேசுகின்றார்: காமமே கொடிய எதிரியாகும். உண்மையில், நீங்கள் சுவர்க்க அதிபதிகளாக இருந்த போது, நீங்கள் மிகவும் செல்வந்தராகவே இருந்தீர்கள். கேட்கவும் வேண்டாம்! குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா, எங்கள் நகரத்திற்கு வாருங்கள். நான் முட்காட்டில் உள்ள குரங்குகளைப் பார்ப்பதற்குச் செல்ல வேண்டுமா? நாடகத்திற்கு ஏற்ப குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்ய வேண்டும். ‘தந்தை மகனை வெளிப்படுத்துகின்றார்’ என்பது நினைவு கூரப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்களே அனைவருக்கும் நன்மை அளிக்க வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் யுத்தகளத்தில் இருப்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் யுத்தம் ஐந்து விகாரங்களுடன் ஆகும். இந்த ஞான மார்க்கம் முற்றிலும் வேறுபட்டது. தந்தை கூறுகின்றார்: நான் உங்களை 21 பிறவிகளுக்கு சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்றேன். பின்னர் உங்களை நரகவாசிகள் ஆக்கியது யார்? இராவணன். உங்களால் வேறுபாட்டைக் காண முடியும். நீங்கள் பிறவி பிறவியாகப் பக்தி மார்க்கத்தில் குருமார்களை ஏற்றுக் கொண்டிருந்தீர்கள். ஆனால் நீங்கள் எதனையுமே பெறவில்லை. அவர் சற்குரு என அழைக்கப்படுகின்றார். சீக்கியர்கள் சற்குருவை அமரத்துவ உருவம் என்றே அழைக்கின்றார்கள். மரணம் அவருக்கு ஏற்படுவதில்லை. அந்த சற்குருவே மகா காலன் ஆவார். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்கள் அனைவரையும் மரணப் பிடியில் இருந்து விடுவிக்கவே வந்துள்ளேன். பின்னர் சத்தியயுகத்தில் மரணம் வருவதே இல்லை. அதுவே அமரத்துவ பூமி என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் அமரத்துவ பூமியின் அதாவது சத்திய உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். உங்கள் யுத்தம் எத்தகையது என்று பாருங்கள்! முழு உலகமுமே ஒன்றோடொன்று சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுள்ளன. உங்கள் யுத்தம் ஐந்து விகாரங்களான இராவணனுடன் ஆகும். நீங்கள் அவற்றை வெற்றி கொள்கின்றீர்கள். இது உங்கள் இறுதிப் பிறவியாகும். தந்தை கூறுகின்றார்: நான் ஏழைகளின் பிரபு ஆவேன். இங்கே ஏழைகள் மாத்திரமே வருகின்றார்கள். செல்வந்தர்களின் பாக்கியத்தில் இது இல்லை. அவர்கள் தமது செல்வத்தின் மீது பெருமையும் போதையும் கொண்டுள்ளார்கள். அவை யாவும் முடிவடைய உள்ளன. இப்பொழுது மிகக் குறுகிய காலமே எஞ்சியுள்ளது. நாடகத்திட்டமும் உள்ளது. தயாரிக்கப்பட்டுள்ள குண்டுகள் அனைத்தும் நிச்சயமாக உபயோகிக்கப்படுத்தப்படும். முன்னர் யுத்தம் வில்லுகள், அம்புகள், வாள்களாலும் பின்னர் துவக்குகள் போன்றவற்றைப் பயன்படுத்தியும் இடம்பெற்றது. இப்பொழுது அவர்கள் வீட்டில் இருந்தவாறே அனைவரையும் அழித்துவிடக் கூடிய வகையான குண்டுகளைத் தயாரித்துள்ளார்கள். அவை வெறுமனே வைத்திருப்பதற்காகத் தயாரிக்கப்படவில்லை. அவற்றை அவர்கள் எவ்வளவு காலத்திற்கு வைத்திருப்பார்கள்? தந்தை வந்துள்ளார், ஆகையால் நிச்சயமாக விநாசம் இடம்பெறும். நாடகச் சக்கரம் தொடர்ந்தும் சுழலும். நிச்சயமாக உங்கள் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட உள்ளது. இலக்ஷ்மியும் நாராயணனும் என்றுமே யுத்தம் புரிவதில்லை. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் இடம்பெற்றதாக அவர்கள் சமயநூல்களில் காட்டியுள்ளார்கள். ஆனால் யுத்தம் ஒன்று இடம்பெறுவதற்கு சத்தியயுகத்தில் உள்ளவர்கள் எவ்வாறு கலியுகத்தில் உள்ளவர்களைச் சந்திக்க முடியும்? நீங்கள் ஐந்து விகாரங்களுடனேயே யுத்தம் புரிகின்றீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். நீங்கள் அவற்றை வெற்றி கொண்டு, முற்றிலும் விகாரமற்றவர்கள் ஆகி, பின்னர் நீங்கள் விகாரமற்ற உலகிற்கு அதிபதிகள் ஆகுவீர்கள். நீங்கள் நடந்து உலாவித் திரியும்போதும், அல்லது அமர்ந்திருக்கும்போதும் தந்தையை நினைவு செய்ய வேண்டும். நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. சிலரின் பாக்கியத்தில் இது சற்றும் இல்லை. யோக சக்தி உங்களுக்கு இருக்கும்போது மாத்திரமே உங்கள் பாவங்கள் அழியும். நீங்கள் சம்பூரணம் அடைந்தால் மாத்திரமே உங்களால் சம்பூரணமான உலகிற்குச் செல்ல முடியும். தந்தை தொடர்ந்தும் சங்கை ஊதுகின்றார். பின்னர் பக்தி மார்க்கத்தில் அவர்கள் சங்கு, புல்லாங்குழல் போன்றவற்றை உருவாக்கியுள்ளார்கள். தந்தை அனைத்தையும் இந்த வாயின் ஊடாகவே விளங்கப்படுத்துகின்றார். இது இராஜயோகத்திற்கான கல்வியாகும். கல்வி மிகவும் இலகுவானது: தந்தையை நினைவு செய்வதுடன் உங்கள் இராச்சியத்தையும் நினைவு செய்யுங்கள். எல்லையற்ற தந்தையை இனங்கண்டு, இராச்சியத்தை பெற்றுக் கொள்ளுங்கள். இந்த உலகை மறந்து விடுங்கள். நீங்கள் எல்லையற்ற சந்நியாசிகள். பழைய உலகம் முழுவதும் அழிக்கப்பட உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியத்தில் பாரதம் மாத்திரமே இருந்தது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் தேவ குலத்திற்கு அவதூறு ஏற்படுத்தாதீர்கள். அழகான மலர்கள் ஆகுங்கள். பல ஆத்மாக்களுக்கு நன்மை அளிக்கும் சேவையைச் செய்து, தந்தையை வெளிப்படுத்துங்கள்.

2. முற்றிலும் விகாரமற்றவர்கள் ஆகுவதற்கு, தீய விடயங்களைப் பேசாதீர்கள் அல்லது அவற்றைச் செவிமடுக்காதீர்கள். தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப் பேசாதீர்கள்…. சரீர உணர்வின் ஆதிக்கத்தில் எந்தத் தீய செயல்களிலும் ஈடுபடாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மன்மனாபவ ஆகுவதன் மூலம், உங்களின் மனதின் எந்தவிதமான பந்தனம் உட்பட எந்தவொரு பந்தனத்தில் இருந்தும் விடுபட்டுள்ள ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகுவீர்களாக.

எந்தவொரு பந்தனமும் ஒரு கூண்டு போன்றது. ஒரு கூண்டில் உள்ளதொரு கிளி, இப்போது பறக்கும் பறவையாகி, எந்தவிதமான பந்தனத்தில் இருந்தும் விடுபட்டுள்ளது. உங்களின் சரீரத்தில் ஏதாவது பந்தனம் இருந்தாலும், உங்களின் மனம் ஒரு பறக்கும் பறவை. ஏனென்றால், மன்மனாபவ ஆகுவதன் மூலம், நீங்கள் உங்களின் மனதின் எந்தவிதமான பந்தனங்களில் இருந்தும் விடுபடுகிறீர்கள். உங்களின் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளும் பந்தனமும் உங்களுக்குக் கிடையாது. எல்லாவற்றையும் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாகப் பார்த்துக் கொள்பவர்கள், எந்தவிதமான பந்தனத்தில் இருந்தும் சதா விடுபட்டிருப்பார்கள். இல்லறத்தவர் என்றால், ஒரு சுமையைக் கொண்டிருப்பவர் என்று அர்த்தம். சுமையைக் கொண்டிருக்கும் ஒருவரால் ஒருபோதும் பறக்க முடியாது. எவ்வாறாயினும், நீங்கள் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக இருந்தால், நீங்கள் எந்தவிதமான பந்தனத்தில் இருந்தும் விடுபட்டிருப்பீர்கள். அத்துடன் உங்களின் பறக்கும் ஸ்திதியால் உங்களால் ஒரு விநாடியில் இனிய வீட்டைச் சென்றடைய முடியும்.

சுலோகம்:
சோகத்தை உங்களின் பணியாள் ஆக்கி, உங்களின் முகத்திலும் அதைத் தோன்ற அனுமதிக்காதீர்கள்.