19.10.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    31.03.2007     Om Shanti     Madhuban


தகுதிவாய்ந்தவராகி, உங்களின் முகத்தின் மூலம் தந்தையின் முகத்தை வெளிப்படுத்துங்கள். சேவை செய்வதில் ஆக்கபூர்வமாக (நிர்மாண்) இருப்பதுடன் கூடவே, தூய வார்த்தைகள் (நிர்மல்) பேசுவதற்கும் பணிவான ஸ்திதியைக் (நிர்மான்) கொண்டிருப்பதற்கும் இடையில் ஒரு சமநிலையையும் பேணுங்கள்.


இன்று, பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகளின் பாக்கிய ரேகைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். பிரகாசிக்கும் ஒளியின் ரேகைகள் குழந்தைகள் எல்லோருடைய நெற்றிகளிலும் ஜொலிக்கின்றன. அவர்களின் கண்களில் ஆன்மீகப் பாக்கியத்தின் ரேகைகள் புலப்படுகின்றன. வாய்களில் இருந்து மேன்மையான வார்த்தைகளின் பாக்கிய ரேகைகள் வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. அவர்களின் உதடுகளில், ஆன்மீகப் புன்னகைகளை பாபா பார்க்கிறார். அவர்களின் கைகளில், இறை பொக்கிஷங்கள் எல்லாவற்றினதும் ரேகைகள் புலப்படுகின்றன. அவர்களின் நினைவின் ஒவ்வோர் அடியிலும் பாபா பல மில்லியன்கள் ரேகைகளைப் பார்க்கிறார். ஒவ்வொருவரின் இதயத்திலும் தந்தையின் அன்பிலே திளைத்திருக்கும் ரேகையை பாபா பார்க்கிறார். குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் இத்தகைய மேன்மையான பாக்கியத்தை அனுபவம் செய்கிறீர்கள்தானே? தந்தையே ஒவ்வொருவரின் மேன்மையான செயல் என்ற பேனாவால் இந்த பாக்கிய ரேகைகளை வரைந்துள்ளார். இது அழியாதிருக்கும் அத்தகைய மேன்மையான பாக்கியம் ஆகும். இது ஒரு பிறவிக்கு மட்டுமல்ல, ஆனால், இவை பல பிறவிகளுக்கான அழியாத பாக்கிய ரேகைகள் ஆகும். தந்தை அழியாதவர், பாக்கிய ரேகைகளும் அழியாதவை. இந்த வேளையில், உங்களின் மேன்மையான செயல்களின் அடிப்படையிலேயே சகல ரேகைகளும் பெறப்படுகின்றன. இந்த வேளையில் செய்யப்படுகின்ற முயற்சியானது, பல பிறவிகளுக்கு வெகுமதியை உருவாக்குகிறது.

இந்த வேளையிலும், குழந்தைகளான நீங்கள் எல்லோரும் பல பிறவிகளுக்குப் பெறப்போகின்ற வெகுமதியை, இந்த வேளையில் நீங்கள் செய்த முயற்சிகளுக்கான வெகுமதியின் பேற்றினை இப்போதே காண பாப்தாதா விரும்புகிறார். எதிர்காலத்தில் மட்டுமல்ல, இந்த ரேகைகள் அனைத்தும் இப்போதும் சதா அனுபவம் செய்யப்பட வேண்டும். ஏனென்றால், இந்த நேரத்திற்கான இந்த தெய்வீக சம்ஸ்காரங்கள், உங்களின் புதிய உலகை உருவாக்குகின்றன. சோதியுங்கள்! எப்படிச் சோதிப்பது என உங்களுக்குத் தெரியுமா? நீங்களே உங்களைச் சோதிப்பவர்கள் ஆகவேண்டும். சகல பாக்கிய ரேகைகளையும் நீங்கள் இப்போதும் அனுபவம் செய்கிறீர்களா? இந்த வெகுமதி இறுதியில்தான் புலப்படும் என நீங்கள் நினைக்கவில்லையே? பேறு இந்த நேரத்திற்கு உரியது. வெகுமதியும் இந்த நேரத்திலேயே அனுபவம் செய்யப்பட வேண்டும். எதிர்கால உலகிற்கான (சன்ஸார்) சம்ஸ்காரங்கள், இப்போது உங்களின் வாழ்க்கையில் நடைமுறைரீதியாக அனுபவம் செய்யப்பட வேண்டும். நீங்கள் எதைச் சோதிக்க வேண்டும்? எதிர்கால உலகில் ஒரே இராச்சியமே இருக்கும் என எதிர்கால உலகின் சம்ஸ்காரங்களை நீங்கள் புகழ்கிறீர்கள். நீங்கள் அந்த உலகை நினைக்கிறீர்கள்தானே? அந்த உலகை நீங்கள் எத்தனை தடவைகள் ஆண்டீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அல்லது, அதை பாபா உங்களுக்கு நினைவூட்டும்போது மட்டுமே நினைக்கிறீர்களா? அது எப்படி இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அது உங்களின் விழிப்புணர்வில் இருக்கிறதல்லவா? அந்த சம்ஸ்காரங்கள் இந்த வேளையில் உங்களின் நடைமுறை வாழ்க்கையில் இருக்கின்றனவா? சோதித்துப் பாருங்கள்: உங்களின் மனதில், உங்களின் புத்தியில், உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும், உங்களின் வாழ்க்கையில், உங்களிடம் ஒரே இராச்சியம் உள்ளதா? அல்லது, சிலவேளைகளில், ஆத்மாவின் ஆட்சியுடன் கூடவே, மாயையின் ஆட்சியும் நடக்கிறதா? உங்களின் எதிர்கால வெகுமதியில், ஒரேயொரு இராச்சியமே இருக்கும். இரண்டு அல்ல. அதேபோல், இப்போதும் இரண்டு இராச்சியங்கள் இல்லையல்லவா? எதிர்கால இராச்சியத்தில், ஓர் இராச்சியத்துடன் ஒரு தர்மம் இருக்கும். அது என்ன தர்மம்? அது சம்பூரணமான தூய்மை என்ற தாரணையின் தர்மம். எனவே, இப்போது சோதியுங்கள்: சம்பூரணமான தூய்மை இருக்கிறதா? உங்களின் கனவுகளிலேனும் தூய்மையின்மையின் பெயரோ அல்லது சுவடோ இருக்கக்கூடாது. தூய்மை என்றால், உங்களின் எண்ணங்களில், வார்த்தைகளில், செயல்களில் மற்றும் உறவுமுறைகள், தொடர்புகளில் சம்பூரணமான தூய்மை என்ற ஒரேயொரு தாரணையை மட்டும் கொண்டிருத்தல் என்று அர்த்தம். நீங்கள் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும். உங்களையே எப்படிச் சோதிப்பது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களை எப்படிச் சோதிப்பது என்பதை அறிந்தவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களை எப்படிச் சோதிப்பது என்பது உங்களுக்குத் தெரிந்துள்ளது. எனவே, நீங்கள் உங்களைச் சோதிக்கிறீர்களா? சோதிக்கிறீர்களா? ஆசிரியர்களான உங்களுக்கு எப்படிச் சோதிப்பது என்று தெரியுமா? இரட்டை வெளிநாட்டவர்களான உங்களுக்குத் தெரியுமா? ஏன்? ஏனென்றால், தற்சமயம் உள்ள தூய்மையினால், இன்றும் மக்கள் உங்களின் உயிரற்ற விக்கிரகங்களிடம் தூய்மையை வேண்டுகிறார்கள். தூய்மை என்றால் ஒரே தர்மம். அது இந்த வேளையில் ஸ்தாபிக்கப்பட்டு, எதிர்காலத்திலும் தொடர்கிறது. அதேபோல், எதிர்காலத்தின் புகழ் என்ன? ஒரே இராச்சியம், ஒரே தர்மம். அவற்றுடன்கூடவே, சதா சந்தோஷம், அமைதி மற்றும் செல்வம் இருக்கும். அகண்ட் (இடையில் நின்றுவிடாத) சந்தோஷம், அகண்ட் அமைதி, அகண்ட் செல்வம். எனவே, உங்களின் சுய இராச்சிய வாழ்க்கையில் - மற்றையது, உலக இராச்சியம் - ஆனால், இந்த வேளையில் உங்களிடம் சுய இராச்சியம் உள்ளது. உங்களையே சோதித்துப் பாருங்கள்! அழியாத சந்தோஷம், இறை சந்தோஷம்: நீங்கள் அதை அழியாததாக அனுபவம் செய்கிறீர்களா? ஏதாவது காரணங்கள் அல்லது வசதிகளின் அடிப்படையில் நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வதாக இருக்கக்கூடாது. எந்த வேளையிலும் எந்தக் காரணத்தினாலும் துன்ப அலை எதுவும் அனுபவம் செய்யப்படக் கூடாது. நீங்கள் பெயர், புகழ் அல்லது கௌரவத்தின் அடிப்படையில் சந்தோஷத்தை அனுபவம் செய்யவில்லை, அல்லவா? ஏன்? ஏனென்றால், பெயர், புகழ், கௌரவம், வழிமுறைகள், வசதிகள் போன்றவை அனைத்துமே அழியக்கூடியவை மற்றும் தற்காலிகமானவை. அழிகின்ற ஆதாரங்களின் அடிப்படையில் உங்களால் அழியும் சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியாது. தொடர்ந்து உங்களையே சோதித்துப் பாருங்கள். இப்போதும், தொடர்ந்து செவிமடுப்பதுடன் உங்களையே சோதித்துப் பாருங்கள். அப்போது தற்போதுள்ள சம்ஸ்காரங்களுக்கும் எதிர்கால உலகின் வெகுமதிக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் எல்லோரும் பிறப்பு எடுத்தவுடனேயே பாப்தாதாவிற்கு ஒரு சத்தியத்தைச் செய்துள்ளீர்கள். உங்களின் சத்தியம் என்னவென்று நினைவிருக்கிறதா? நினைக்கிறீர்களா? அல்லது, அதை நீங்கள் மறந்து விட்டீர்களா? நீங்கள் எல்லோரும் தந்தையின் சகபாடிகள் ஆகுவீர்கள், உலக உபகாரிகள் ஆகுவீர்கள், அமைதி மற்றும் சந்தோஷம் உள்ள புதிய உலகை உருவாக்குபவர்கள் ஆகுவீர்கள் என்று நீங்கள் தந்தைக்குச் சத்தியம் செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? உங்களின் சத்தியம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இது உறுதியான சத்தியமா? அல்லது, சிலவேளைகளில் ஏதாவது அதில் கலந்துவிடுகிறதா? நீங்களே இறை சம்ஸ்காரங்களின் அடிப்படையில் புதிய உலகை உருவாக்குபவர்கள். இது இந்த வேளையில் மட்டும் முயற்சி செய்கின்ற கேள்வி இல்லை. ஏனென்றால், இந்த வேளையிலும் நீங்கள் முயற்சிக்கான வெகுமதியை அனுபவம் செய்ய வேண்டும். சந்தோஷத்துடன் கூடவே, அமைதியையும் சோதித்துப் பாருங்கள். அமைதியற்ற சூழ்நிலைகள், அமைதியற்ற சூழல். அதிலும் நீங்கள் அமைதிக்கடலின் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் சதா தாமரை மலர்களைப் போன்றவர்கள். எனவே, உங்களால் அமைதியற்ற சூழலை அமைதியான சூழலாக மாற்ற முடியுமா? சூழல் அமைதிநிறைந்ததாக இருந்து, நீங்கள் அமைதியை அனுபவம் செய்தால், அது பெரிய விடயம் இல்லை. எவ்வாறாயினும், நீங்களே அமைதியின்மையை அமைதியாக மாற்றுபவர்கள் என்பதே உங்களின் சத்தியம் ஆகும். எனவே, சோதித்துப் பாருங்கள். நீங்கள் உங்களையே சோதிக்கிறீர்கள்தானே? நீங்கள் மாற்றுபவர்களா? நீங்கள் எதனுடைய ஆதிக்கத்திற்கும் உட்படவில்லை, அல்லவா? நீங்கள் மாற்றுபவர்கள். மாற்றுபவர்களால் ஒருபோதும் எதனுடைய ஆதிக்கத்திற்கும் உட்பட முடியாது. இந்த முறையில், செல்வம், எல்லையற்ற செல்வம், தனக்கே அதிபதியாக இருக்கும் ஒருவரின் செல்வம் என்ன? ஞானம், நற்குணங்கள், சக்திகள். இவையே தனக்கே அதிபதியாக இருக்கும் சுய இராச்சிய அதிகாரியின் செல்வத்தின் வகைகள் ஆகும். எனவே, சோதித்துப் பாருங்கள்! உங்களுக்கு இப்போது இந்த ஞானத்தின் முழுமையான விரிவாக்கத்தின் சாரம் என்னவென்று தெளிவாகத் தெரியும் அல்லவா? இந்த ஞானம் என்றால் நீங்கள் பாடநெறிகளையும் சொற்பொழிவுகளையும் வழங்குவது என்று அர்த்தமல்ல. ஆனால், ஞானம் என்றால் புரிந்துணர்வைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். எனவே, ஒவ்வோர் 0எண்ணமும் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு வார்த்தையும். ஞானம் என்றால் விவேகியாக இருத்தல் என்று அர்த்தம். நீங்கள் ஞானம் நிறைந்தவராக இருந்தவண்ணம் எல்லாவற்றையும் செய்கிறீர்களா? உங்களின் நடைமுறை வாழ்க்கையில் சகல நற்குணங்களும் வெளிப்பட்டு உள்ளனவா? உங்களிடம் சகல நற்குணங்களும் உள்ளனவா அல்லது உங்களின் கொள்ளவிற்கு ஏற்ப மட்டுமே உள்ளனவா? இந்த முறையில், சகல சக்திகளும், உங்கள் ஒவ்வொருவரின் பட்டமும் சகல சக்திகளின் அதிபதி என்பதே ஆகும். சில சக்திகளை மட்டும் கொண்டவர் அல்ல. எனவே, உங்களிடம் சகல சக்திகளும் முழுமையான அளவில் உள்ளனவா? இரண்டாவதாக, சகல சக்திகளும் சரியான வேளையில் வேலை செய்கின்றனவா? அவை சரியான வேளையில் பிரசன்னம் ஆகின்றனவா? அல்லது, அவற்றைப் பயன்படுத்துவதற்கான காலம் கடந்து சென்ற பின்னரே நீங்கள் அவற்றை நினைக்கிறீர்களா? எனவே, இந்த மூன்று விடயங்களையும் சோதித்துப் பாருங்கள். ஒரே இராச்சியம், ஒரு தர்மம் அத்துடன் அழியாத சந்தோஷம், அமைதி மற்றும் செழிப்பு. சுய இராச்சியத்தின் இந்த வேளையில், இப்போது நீங்கள் அனுபவிக்கும் இவை எல்லாமே, புதிய உலகில் அனுபவம் செய்யப்பட மாட்டாது. இவை எல்லாமே இந்த வேளையில் மட்டுமே அனுபவம் செய்யப்பட முடியும். இப்பொழுதில் இருந்தே இந்த சம்ஸ்காரங்கள் வெளிப்பட்டால் மட்டுமே அவை வெகுமதியின் வடிவத்தில் தொடரும். நீங்கள் இன்னமும் அவற்றைக் கிரகிக்கிறீர்கள், அது நடக்கும், அது இறுதிவரை நிச்சயமாக நடக்கும் என நீங்கள் நினைக்கவில்லைத்தானே?

தற்சமயம் நீங்கள் நீண்ட காலப் பகுதிக்குச் செய்யும் பயிற்சியே, நீண்ட காலத்திற்கு உங்களின் பேறுகளுக்கான அடிப்படை என பாப்தாதா ஏற்கனவே உங்களுக்கு சமிக்கை கொடுத்துள்ளார். அது இறுதியில் நடக்கும், அப்போது அது நடக்கும் என நினைக்காதீர்கள். இல்லை. அது இப்பொழுதே நடக்க வேண்டும். ஏன்? உங்களின் அதிபதியாக இருக்கும் உரிமையைக் கொண்டிருப்பதற்கு, இப்பொழுது நீங்கள் அதை நீண்ட காலத்திற்குப் பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். ஒரு பிறவியில் உங்களால் உரிமையைக் கொண்டிருக்க முடியாவிட்டால், நீங்கள் தங்கியிருப்பவர் ஆகினால், எப்படி உங்களால் பல பிறவிகளுக்கு உரிமைகளைக் கொண்டவராக ஆகமுடியும்? இதனாலேயே, எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும், இப்போது காலத்தின் வேகம் மிகத் துரிதமாக உள்ளது என பாப்தாதா மீண்டும் மீண்டும் சமிக்கை செய்கிறார். ஆகவே, குழந்தைகளான நீங்கள் எல்லோரும் வெறுமனே முயற்சியாளர்கள் ஆகக் கூடாது. ஆனால், நீங்கள் தீவிர முயற்சியாளர்களாகி, இப்போது முயற்சியின் வெகுமதியை நீண்ட காலப்பகுதிக்கு அனுபவம் செய்ய வேண்டும். தீவிர முயற்சியின் அடையாளங்கள் என்னவென்று பாப்தாதா உங்களுக்கு முன்னரே கூறியுள்ளார். ஒரு தீவிர முயற்சியாளர் சதா மாஸ்ரர் அருள்பவராக இருப்பார். அவர் எடுப்பவராக (லேவ்தா) இருக்க மாட்டார். ஆனால் கொடுக்கின்ற ஒரு தேவராக (தேவ்தா) இருப்பார். என்னிடம் இது இருந்தால், என்னால் முயற்சி செய்ய முடியும். இவர் இதைச் செய்தால், நானும் அதைச் செய்வேன். இவர் மாறினால், நானும் மாறுவேன். இவர் மாற வேண்டும். இவர் இதைச் செய்ய வேண்டும். இவை ஓர் அருள்பவரின் அடையாளங்கள் அல்ல. அதை ஒருவர் செய்தாலென்ன அல்லது செய்யா விட்டாலென்ன, நான் பாப்தாதாவைப் போல், பிரம்மா பாபாவைப் போல் தொடர்ந்து அதைச் செய்ய வேண்டும். நீங்கள் சாகார் ரூபத்தையும் கண்டீர்கள். அவர் ஒருபோதுமே, குழந்தைகள் அதைச் செய்தால், நான் அதைச் செய்வேன் எனக் கூறியதில்லை. நான் அதைச் செய்வேன், பின்னர் குழந்தைகளையும் அதைச் செய்ய வைப்பேன் என்பதாகவே எப்போதும் இருந்தது. தீவிர முயற்சியின் இரண்டாவது அடையாளம்: ஆக்கபூர்வமான பணியைச் செய்யும்போதும் சதா பணிவாக இருத்தல். இரண்டுக்கும் இடையில் ஒரு சமநிலை இருக்க வேண்டும்: ஆக்கபூர்வமாக இருத்தல் மற்றும் பணிவாக இருத்தல். ஏன்? நீங்கள் ஒரு பணியைப் பணிவுடன் செய்யும்போது, எல்லோருடைய இதயத்தில் இருந்தும் நீங்கள் அன்பையும் ஆசீர்வாதங்களையும் பெறுவீர்கள். ஆக்கபூர்வமாக இருப்பதில், அதாவது, சேவைக்களத்தில், எல்லோருமே இப்போது அதிகளவு ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் புதிய திட்டங்களைச் செய்வதை பாப்தாதா கண்டுள்ளார். இதற்காக, எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோரையும் பாப்தாதா பாராட்டுகிறார்.

ஆக்கபூர்வமான சேவைக்காக மிக நல்ல திட்டங்கள் பலவற்றை பாப்தாதா பெற்றுள்ளார். எவ்வாறாயினும், ஆக்கபூர்வமான பணிகள் மிக நன்றாக இருப்பதை பாப்தாதா பார்த்திருக்கிறார். எனினும், எந்தளவிற்கு உங்களிடம் சேவைக்கான ஊக்கமும் உற்சாகமும் உள்ளதோ, அந்தளவிற்கு பணிவு ஸ்திதியின் சமநிலை இருந்தால், ஆக்கபூர்வத்தில், அதாவது, சேவைப் பணியில் அதிகளவில் புலப்படத்தக்க மகத்தான வெற்றி ஏற்படும். பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார் - நீங்கள் பணிவான சுபாவத்தைக் கொண்டிருக்க வேண்டும், உங்களின் வார்த்தைகளில் பணிவு இருக்க வேண்டும், மற்றவர்களுடன் உறவுமுறைகளிலும் தொடர்பிலும் வரும்போது உங்களின் ஸ்திதியில் பணிவு இருக்க வேண்டும். இதுவே தேவர்களின் புகழ். ஆனால் உண்மையில், இது பிராமணர்களின் புகழே ஆகும். தேவதேவியர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவர்களின் உதடுகளில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் வைரங்களையும் முத்துக்களையும் போன்றவை, விலைமதிப்பற்றவை எனக் கூறப்படுகிறது. தூய, மென்மையான வார்த்தைகள், தூய, மென்மையான சுபாவம். பாப்தாதா இப்போது உங்களைப் பரிசோதிக்கிறார். எனவே, அவர் உங்களுக்குப் பெறுபேற்றைக் கொடுக்க வேண்டும், அல்லவா? ஏனென்றால், இதுவே இந்தப் பருவகாலத்தின் கடைசி முறை ஆகும். நீங்கள் தூய வார்த்தைகளைக் கொண்டிருப்பதிலும் உங்களின் ஸ்திதியில் பணிவு இருப்பதிலும் அதிக கவனம் தேவை என்பதை பாப்தாதா கண்டார்.

உங்களின் மூன்று பொக்கிஷக் கணக்குகளில் நீங்கள் சேமிக்க வேண்டும் என பாப்தாதா உங்களுக்கு ஏற்கனவே கூறியுள்ளார். பெறுபேற்றில் பாபா எதைக் கண்டார்? அந்த மூன்று கணக்குகளும் எவை? நீங்கள் அவற்றை நினைவு செய்திருப்பீர்கள்தானே? எப்படி இருந்தும், பாபா இப்போது அவற்றை மீட்டல் செய்கிறார். 1. உங்களின் முயற்சிகளால், உங்களின் சேமிப்புக் கணக்கை அதிகரியுங்கள். 2. சதா உங்களுடன் திருப்தியாக இருந்து, மற்றவர்களையும் திருப்திப்படுத்துங்கள். வெவ்வேறு சம்ஸ்காரங்களை அறிந்திருக்கும் அதேவேளை, திருப்தியாக இருந்து மற்றவர்களையும் திருப்திப்படுத்துங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், உங்களால் உங்களின் ஆசீர்வாதக் கணக்கில் சேமிக்க முடியும். எந்தவொரு காரணத்தினாலும், மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதில் ஏதாவது குறை இருக்குமாயின், அது உங்களின் புண்ணியக் கணக்கில் சேமிக்கப்பட மாட்டாது. அது உங்களுடன் திருப்தியாக இருப்பதோ அல்லது மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதோ எதுவாக இருந்தாலும், திருப்தியே புண்ணியத்திற்கான சாவி ஆகும். 3. சேவை செய்வதிலும் எப்போதும் தன்னலமற்றவராக இருங்கள்: நான் என்ற எந்தவிதமான உணர்வையும் கொண்டிராதீர்கள். நான் இதைச் செய்தேன் அல்லது எனது பெயர் குறிப்பிடப்பட வேண்டும். சேவை செய்வதில் ‘நான்’ அல்லது ‘எனது’ என்ற உணர்வு ஏதாவது இருக்குமாயின், உங்களால் புண்ணியக் கணக்கில் சேமிக்க முடியாதிருக்கும். ‘எனது’ என்ற உணர்வில் உங்களுக்கு அனுபவம் உள்ளது. இராஜரீகமான முறையிலும் அதிகளவில் ‘எனது’ என்ற உணர்வு காணப்படுகிறது. ‘எனது’ என்ற உணர்வின் இராஜரீகமான வடிவங்களின் பட்டியல், சாதாரணமான ‘எனது’ என்ற உணர்வின் வடிவங்களை விட நீண்டது. நான் அல்லது ‘எனது’ என்ற சுயநலமான நோக்கம் இருந்து, நீங்கள் தன்னலமற்றவராக இல்லாத போதெல்லாம், உங்களின் கணக்கில் மிகச் சிறிதளவு புண்ணியமே சேமிக்கப்படுகிறது. பாபா வேறொரு வேளையில் உங்களுக்கு ‘எனது’ என்ற பட்டியலைப் பற்றிக் கூறுவார். அது மிகவும் நீண்டது, அத்துடன் மிகவும் சூட்சுமமானது. எனவே, உங்களின் முயற்சிகளில், நீங்கள் எல்லோரும் உங்களின் கொள்ளளவிற்கேற்ப உங்களின் கணக்குகளில் சேமிக்கிறீர்கள் என்பதை பாப்தாதா பார்த்திருக்கிறார். எவ்வாறாயினும், இப்போது ஆசீர்வாதங்களின் கணக்கையும் புண்ணியக் கணக்கையும் அதிகரிப்பதற்கான தேவை உள்ளது. இதனாலேயே, இந்த மூன்று கணக்குகளைச் சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இப்போதும் பல்வகையான சம்ஸ்காரங்கள் புலப்படும். எவருடைய சம்ஸ்காரங்களும் இன்னமும் சம்பூரணம் ஆகவில்லை. எவ்வாறாயினும், இப்போது, நான் மற்றவர்களின் பலவீனமான சுபாவத்தால் அல்லது பலவீனமான சம்ஸ்காரங்களின் ஆதிக்கத்திற்கு உட்படக்கூடாது. நான் சகல சக்திகளையும் கொண்டுள்ள ஒரு மாஸ்ரர், மாஸ்ரர் சர்வசக்திவான் ஆவேன். பலவீனமான சம்ஸ்காரங்கள் சக்திவாய்ந்தவை அல்ல. பலவீனமான சம்ஸ்காரங்களால் சகல சக்திகளையும் கொண்டுள்ள மாஸ்ரர் சர்வசக்திவானான என்னை ஆதிக்கத்திற்கு உட்படுத்த முடியாது. பாப்தாதாவின் பாதுகாப்புக் குடையின் கீழ் இருப்பதே பாதுகாப்பிற்கான வழிமுறை ஆகும். பாப்தாதாவுடன் ஒன்றிணைந்து இருங்கள். ஸ்ரீமத்தே பாதுகாப்புக் குடை ஆகும்.

இன்று, பாப்தாதா உங்களுக்கு ஒரு சமிக்கை வழங்குகிறார்: நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயமாக உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், தொடர்புகள், உறவுமுறைகள் மற்றும் செயல்களில் புதுமையை ஏற்படுத்துவதற்காக ஒரு திட்டத்தைச் செய்ய வேண்டும். பாப்தாதா எல்லாவற்றுக்கும் முதலில் பெறுபேற்றைப் பார்ப்பார்: நீங்கள் என்ன புதுமையை ஏற்படுத்தினீர்கள்? உங்களின் திடசங்கற்பத்தால் எந்தப் பழைய சம்ஸ்காரத்தை நீங்கள் மாற்றினீர்கள்? பாப்தாதா முதலில் இந்தப் பெறுபேற்றைப் பார்ப்பார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாங்கள் இதைச் செய்ய வேண்டுமா? செய்ய வேண்டுமா? இதை நிச்சயமாகத் தாம் செய்வோம் எனச் சொல்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா, நீங்கள் இதைச் செய்வீர்களா? அல்லது, நீங்கள் மற்றவர்களைப் பார்ப்பீர்களா? நீங்கள் என்ன செய்வீர்கள்? மற்றவர்களைப் பார்க்காதீர்கள். பாப்தாதாவைப் பாருங்கள். உங்களின் மூத்த தாதியைப் பாருங்கள். அவரிடம் அன்பான மற்றும் பற்றற்ற ஸ்திதி இருந்தது. பாப்தாதா கூறுகிறார்: யாராவது ‘நான்’ என்ற உணர்வையும் எல்லைக்கு உட்பட்ட ‘எனது’ என்ற உணர்வையும் முடித்த ஒருவரைப் பார்க்க விரும்பினால், பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள எமது தாதிஜியைப் பாருங்கள். அவரின் வாழ்க்கை முழுவதும், அவர் எப்போதும் ‘நான்’ அல்லது ‘எனது’ என்ற எந்தவிதமான எல்லைக்கு உட்பட்ட உணர்விற்கும் அப்பாற்பட்டே இருந்தார். அதன் பெறுபேறு என்னவென்றால், அவருக்கு எவ்வளவுதான் நோய் இருந்தாலும், அவர் வலியின் உணர்விற்கு அப்பாற்பட்டே இருந்தார். ஒரு வார்த்தை உறுதியாக இருந்தது. உங்களுக்கு ஏதாவது வலி உள்ளதா? தாதி, உங்களுக்கு ஏதாவது நடந்ததா? என யாராவது கேட்டால், அவர்கள் என்ன பதிலைப் பெறுவார்கள்? அது எதுவும் இல்லை. இது ஏனென்றால், அவர் தன்னலமற்றவராகவும் பெரிய இதயத்தைக் கொண்டவராகவும் இருந்தார். அவர் எல்லோரையும் ஏற்றுக் கொண்டார், அத்துடன் எல்லோராலும் நேசிக்கப்பட்டார். நீங்கள் அதன் நடைமுறை அடையாளங்களைப் பார்த்தீர்கள். மக்கள் தந்தை பிரம்மாவைப் பற்றிப் பேசும்போது, தந்தை அவரில் இருந்தார் எனச் சொல்கிறார்கள். எவ்வாறாயினும், தாதி உங்களுடன் இறை பராமரிப்புடனும் இந்தக் கல்வியுடனும் வாழ்ந்தார். அவர் சேவை செய்வதில் உங்களின் சகபாடியாக இருந்தார். எனவே, ஒருவரால் அப்படி ஆகலாம் என்றால் - அவரின் ஸ்திதியில் தன்னலமற்றவராக இருந்தார் - உங்கள் எல்லோராலும் அப்படி ஆக முடியாதா? உங்களால் அப்படி ஆகமுடியும்தானே? நீங்களே அப்படி ஆகுபவர்கள் என்ற நம்பிக்கை பாப்தாதாவிற்கு உள்ளது. நீங்கள் எத்தனை தடவைகள் அப்படி ஆகினீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் பல கல்பங்களாகத் தந்தையைப் போல் ஆகினீர்கள். இப்போதும் நீங்களே அப்படி ஆகப்போகின்றவர்கள். இந்த ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் தொடர்ந்து பறவுங்கள். தந்தைக்கு உங்களின் மீது நம்பிக்கை உள்ளது. எனவே, நீங்கள் நிச்சயமாக அப்படி ஆகப் போகின்றீர்கள் என்ற நம்பிக்கையும் உங்களின் புத்திகளில் இருக்க வேண்டும். உங்களின் புத்திகளில் இத்தகைய நம்பிக்கை இருக்க வேண்டும், அத்துடன் தொடர்ந்து பறவுங்கள். உங்களுக்குத் தந்தையின் மீது அன்பு உள்ளது. அன்பெனும் பாடத்தில், உங்களிடம் 100 சதவீதத்திற்கு அதிகமான அன்பு உள்ளது எனச் சொல்கிறீர்கள். இது சரிதானே? நீங்கள் எல்லோரும் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். உங்களின் சொந்த இடங்களில் இருந்து கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்கும் எல்லோரும், அன்பெனும் பாடத்தில், நீங்கள் உங்களை 100 சதவீதம் அன்பு உடையவர்களாகக் கருதுகிறீர்களா? அப்படியாயின், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! 100 சதவீதம் (எல்லோரும் தமது கைகளை உயர்த்தினார்கள்.) அச்சா, பின்னால் அமர்ந்திருப்பவர்களே, உங்களின் கைகளை உயர உயர்த்துங்கள்! (22000 இற்கு மேற்பட்ட சகோதர, சகோதரிகள் வந்துள்ளார்கள்.) நீங்கள் எல்லோரும் இதற்காக உங்களின் கைகளை உயர்த்தினீர்கள். சமமானவர் ஆகுவதே அன்பின் அடையாளம் ஆகும். நீங்கள் நேசிக்கும் ஒரேயொருவர், உங்களின் பேச்சு அந்த ஒரேயொருவரைப் போல் இருக்க வேண்டும். நீங்கள் செயல்படும் முறையும் உறவுமுறைகளின் பொறுப்பை நிறைவேற்றும் முறையும் அந்த ஒரேயொருவரைப் போன்றே இருக்க வேண்டும். அதுவே அன்பின் அடையாளம் ஆகும்.

இன்று, எல்லோரும் இப்போது ஒரு விநாடியில், கட்டுப்படுத்தும் சக்தி மற்றும் ஆளும் சக்தி வெளிப்படும் சம்ஸ்காரங்களுடன் சுய இராச்சிய ஆசனத்தில் அமரக்கூடியதாக இருப்பதைக் காணவே பாப்தாதா விரும்புகிறார். ஒரு விநாடியில், இரண்டு தொடக்கம் மூன்று நிமிடங்களுக்கு, சுய இராச்சிய அதிகாரி என்ற ஆசனத்தில் அமர்ந்திருங்கள். (பாபா அப்பியாசத்தைச் செய்வித்தார்.) அச்சா.

எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோரிடம் இருந்தும் கடிதங்கள் மூலமும் விஞ்ஞானத்தின் வசதிகள் எல்லாவற்றின் மூலமும் பாபா அன்பையும் நினைவுகளையும் பெற்றுள்ளார். உங்களின் அன்பும் நினைவும் பாப்தாதாவை வந்து அடைந்துள்ளன. பல குழந்தைகள் தமது இதயத்தின் செய்திகளை எழுதுவதுடன், தமது இதயபூர்வமான உரையாடல்களிலும் பாப்தாதாவிற்குச் சொல்கிறார்கள். பாப்தாதா அந்தக் குழந்தைகள் எல்லோருக்கும் பதில் அளிக்கிறார்: பிரபு எப்போதும் நேர்மையான இதயத்தை இட்டுக் களிப்பு அடைகிறார். பாப்தாதாவின் இதயபூர்வமான அன்பும் அவரின் இதயபூர்வமான ஆசீர்வாதங்களும் குறிப்பாக அந்த ஆத்மாக்களுக்காகவே ஆகும். எங்கும் இருந்து உங்களின் செய்திகளையும் நீங்கள் மிகுந்த ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் செய்த திட்டங்களையும் வழங்கிய உங்கள் எல்லோருக்கும் அவற்றுக்காக பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார். அத்துடன் உங்களுக்கு இந்த ஆசீர்வாதத்தையும் வழங்குகிறார்: தொடர்ந்து முன்னேறுங்கள், அத்துடன் மற்றவர்களையும் முன்னேறச் செய்யுங்கள்.

பலமில்லியன்களில் கைப்பிடி அளவினரான, அந்தக் கைப்பிடியிலும் வெகுசில அதி மேன்மையான, பாக்கியசாலிகளாக உள்ள பாப்தாதாவின் குழந்தைகள் எல்லோருக்கும் பாப்தாதாவின் விசேடமான அன்பும் நினைவுகளும். பாப்தாதா குழந்தைகள் எல்லோருக்கும் அவர்களின் தைரியம் மற்றும் ஊக்கம், உற்சாகத்திற்காகப் பாராட்டுக்களை வழங்குகிறார். பாபா எதிர்காலத்திற்காகவும், தீவிர முயற்சியாளர் ஆகுவதற்காகவும் ஒரு சமநிலையைப் பேணுவதற்காகவும் பலமில்லியன் மடங்கு ஆசீர்வாதங்களை வழங்குகிறார். உங்கள் எல்லோருடைய பாக்கிய நட்சத்திரம் சதா பிரகாசிக்க வேண்டும் என்றும் நீங்கள் தொடர்ந்தும் மற்றவர்களின் பாக்கியத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் பாபா உங்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்குகிறார். உங்களின் சொந்த இடங்களில் இருந்து பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கும் எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோரையும் பாப்தாதாவும் பார்க்கிறார், அத்துடன் உங்களையிட்டு மகிழ்ச்சியும் அடைகிறார். தொடர்ந்தும் பார்ப்பதுடன் மதுவனத்தின் அழகை அதிகரியுங்கள். குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் இதயபூர்வமான ஆசீர்வாதங்களுடன் கூடிய நமஸ்தே.

ஆசீர்வாதம்:
நீங்கள் கவனம் செலுத்துதல் என்ற எண்ணெய் மூலம் உங்களின் ஆத்ம உணர்வு ரூபத்தின் பிரகாசத்தை அதிகரிப்பதன் மூலம் கவர்கின்ற ரூபம் ஆகுவீர்களாக.

இந்த ஞானத்தால் தந்தை, ஒரு தடவை ஆத்ம உணர்வு ரூபத்தின் நட்சத்திரத்தைப் பிரகாசிக்கச் செய்த பின்னர், அதை அணைக்க முடியாது. எவ்வாறாயினும், அந்தப் பிரகாசத்தின் சதவீதம் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். ஒவ்வொரு நாளும் அமிர்த வேளையில் நீங்கள் தீபத்திற்கு கவனம் செலுத்துதல் என்ற எண்ணெயைத் தொடர்ந்து ஊற்றினால், பிரகாசிக்கும் நட்சத்திரம் எல்லோரையும் கவரும். எண்ணெயைத் தீபத்தில் ஊற்றும்போது, அது சதா எரிந்துகொண்டே இருக்கும். இந்த முறையில் கவனம் செலுத்துதல் என்றால், தந்தையின் நற்குணங்களையும் சக்திகளையும் உங்களுக்குள் பதித்துக் கொள்ளுதல் என்று அர்த்தம். இத்தகைய கவனத்தைச் செலுத்துவதன் மூலம் நீங்கள் கவர்கின்ற ரூபம் ஆகுவீர்கள்.

சுலோகம்:
எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய மனோபாவத்தைக் கொண்டிருந்து, ஆன்மீக முயற்சியின் விதையை வெளிப்படுத்துங்கள்.

அவ்யக்த சமிக்கை: உங்களின் மனதாலும் யோக சக்திகளாலும் உங்களிலும் மற்றவர்களிலும் பரிசோதனை செய்யுங்கள்.

யோக சக்தியைச் சேமிப்பதற்கு, கர்மத்திற்கும் யோகத்திற்கும் இடையிலான சமநிலைக்கான உங்களின் பயிற்சியை அதிகரியுங்கள். செயல்களைச் செய்யும்போது, சக்திவாய்ந்த யோக ஸ்திதி இருக்க வேண்டும். இந்தப் பயிற்சியை அதிகரியுங்கள். சேவை செய்வதற்காக நீங்கள் எப்படி புதிதாகக் கண்டுபிடிக்கிறீர்களோ, அதேபோல், இந்த விசேடமான அனுபவங்களின் பயிற்சிக்கும் நேரத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். புதுமையை ஏற்படுத்துவதுடன் எல்லோருக்கும் ஓர் உதாரணம் ஆகுங்கள்.

அறிவித்தல்: இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை, உலக தியானத்திற்கான நாள். இதில் சகல இராஜயோகி தபஸ்வி சகோதர, சகோதரிகளும் மாலை 6.30 இலிருந்து 7.30 வரை ஒன்றுகூடித் தியானத்தில் இருப்பார்கள். இந்த விசேடமான யோகம் செய்யும் வேளையில், ஒரு மாஸ்ரர் சர்வசக்திவானாக இருக்கும் சக்திவாய்ந்த ரூபத்தில் ஸ்திரமாக இருந்து, சகல பஞ்ச பூதங்களுக்கும் அத்துடன் ஆத்மாக்களுக்கும் தூய்மைக் கதிர்களை வழங்கி, எல்லோரையும் அத்துடன் எல்லாவற்றையும் சதோபிரதான் ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.