20.01.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த ஞானத்தைக் கிரகித்து உங்களுடைய சத்தியயுக இராச்சியத்தை கோருங்கள், உங்கள் நினைவு சக்தியை அதிகரித்து உங்கள் தூய்மையை பலப்படுத்திக் கொள்ளுங்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது செய்கின்ற உங்கள் முயற்சியின் இலக்கு, எதுவாக இருக்க வேண்டும்?பதில்:
சதா சந்தோஷமாக இருப்பதும், மிகவும் இனிமையானவர்களாகி அனைவருடனும் அன்புடன் தொடர்பு கொள்வதுமாகும். இதுவே உங்கள் முயற்சிகளின் இலக்காக இருக்க வேண்டும். இதை நிறைவேற்றுவதன் மூலம், நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிரம்பியவர்களாகவும், 16 சுவர்க்கக் கலைகள் நிரம்பியவர்களாகவும் ஆகுவீர்கள்.கேள்வி:
மேன்மையான செயல்களைச் செய்பவர்களின் அடையாளம் என்ன?பதில்:
அவர்களால் எவரும் துன்பத்தை அனுபவம் செய்ய மாட்டார்கள். தந்தை துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருள்பவராக இருப்பதைப் போன்று, மேன்மையான செயல்களைச் செய்பவர்களும், துன்பத்தை அகற்றி, சந்;தோஷத்தை அருள்பவர்களாக இருக்கிறார்கள்.பாடல்:
உங்கள் ஆகாய சிம்மாசனத்தை விட்டு, கீழே பூமிக்கு இறங்கி வாருங்கள்.ஓம் சாந்தி.
இனிமையிலும், இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். “இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள்” என்று கூறியது யார்? இரு தந்தையரும் இதைக் கூறினார்கள். அசரீரியானவரும் அதைக் கூறினார், எனவே சரீரியானவரும் கூறினார். இதனாலேயே அவர்கள் பாப், தாதாவென அழைக்கப்படுகின்றனர். தாதா சரீரதாரியாவார். அப்பாடல்கள் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. உலகச் சக்கரத்தின் ஞானம் முழுவதையும் உங்கள் புத்தியில் பதியச் செய்வதற்காகத் தந்தை வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் 84 பிறவிகளைப் பூர்த்தி செய்கின்றீர்கள் என்பதும், இந்த நாடகம் இப்பொழுது முடிவடைய உள்ளது என்பதும் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் உள்ளது. நீங்கள் இப்பொழுது யோகத்தின் மூலம், அதாவது, நினைவைக் கொண்டிருப்பதால் தூய்மையாக வேண்டும். ஒவ்வொரு விடயத்திலும் நினைவும், ஞானமும் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர் ஒருவர் ஒரு சட்டநிபுணரை நினைவு செய்து நிச்சயமாக அவரிடமிருந்து அறிவைப் பெறுவார். அவையும் யோகத்தினதும், அறிவினதும் சக்திகள் என அழைக்கப்படுகின்றது. இங்கு இது ஒரு புதிய விடயமாகும். அவர்களது அந்த யோகத்தினதும், ஞானத்தினதும் சக்தியினால் அவர்கள் எல்லைக்குட்பட்ட சக்தியையே பெறுகின்றனர். ஆனால் இங்கு, இந்த யோகத்தினதும், ஞானத்தினதும் சக்திகள் மூலம், நீங்கள் பாபாவிடமிருந்து எல்லையற்ற சக்தியைப் பெறுகின்றீர்கள், ஏனெனில் அவர் சர்வசக்திவான் ஆவார். தந்தை கூறுகிறார்: நான் ஞானக்கடலாவேன். குழந்தைகளாகிய நீங்களும் இப்போது உலகச் சக்கரத்தை அறிவீர்கள். ‘அசரீரி உலகம், சூட்சும உலகம்’ ஆகிய அனைத்தையும் நீங்கள் நினைவு செய்கின்றீர்கள். தந்தை தனக்குள்ளே இருக்கும் ஞானம் அனைத்தையும் உங்களுக்குக் கொடுத்துள்ளார். ஆகவே நீங்கள் இந்த ஞானத்தைக் கிரகிக்க வேண்டும். நீங்கள் உங்கள் இராச்சியத்தைக் கோருவதற்காக, குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை யோகத்தையும், தூய்மையையும் கற்பிக்கின்றார். நீங்கள் தூய்மையாகிய பின்னர், தந்தையிடமிருந்து உங்கள் இராச்சியத்தைக் கோருகிறீர்கள். தந்தை தனது அந்தஸ்தை விட, மேலான ஓர் அந்தஸ்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். நீங்கள் 84 பிறவிகளை எடுக்கும்போது, உங்கள் அந்தஸ்தை இழக்கிறீர்கள். இந்நேரத்திலேயே குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். அனைவரிலும் அதிமேலானவராகிய தந்தையின் மூலம், அனைவரிலும் அதிமேலானவர் ஆகுவது எவ்வாறு எனும் ஞானம் உங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அது நீங்கள் இப்பொழுது பாப்தாதாவின் வீட்டில் இருப்பதைப் போல் உள்ளது எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இந்த தாதாவும் உங்கள் தாய் ஆவார். உங்கள் தாயாகவும் இருக்கின்ற இந்த தாதாவிலிருந்து, தந்தை வேறுபட்டவர் ஆவார். எவ்வாறாயினும் இது ஓர் ஆணின் ஆடை ஆகையால், ஒரு தாய் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் தத்தெடுக்கப்பட்டுள்ளார். தாய் மூலமே படைப்பு நிகழ்கிறது. படைப்பும் தத்தெடுக்கப்படுகிறது. உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுப்பதற்கே தந்தை, குழந்தைகளாகிய உங்களைத் தத்தெடுக்கின்றார். பிரம்மாவும் தத்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்குள் பிரவேசிப்பதோ, அவரைத் தத்தெடுப்பதோ எல்லாம் ஒன்று தான். குழந்தைகளாகிய உங்களுக்கு இது புரிகிறது. ஆனாலும் உங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகவே குழந்தைகளாகிய நீங்கள் இதைப் பிறருக்கு விளங்கப்படுத்துகின்றீர்கள். நாங்கள் எங்கள் பரமாத்மாவாகிய பரமதந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றோம் என்றும், இப் பாரதத்தை மீண்டும் ஒருமுறை மிகமேன்மையான தேசம் ஆக்குகின்றோம் என்றும், அனைவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். நாங்கள் எங்களையும், அதேபோலாக்க வேண்டும். உங்களைப் பார்த்துக் கேளுங்கள்: நான் மேன்மையானவராகி விட்டேனா? நான் ஏதேனும் சீரழிந்த செயல்களைச் செய்கிறேனா? அல்லது எவருக்கேனும் துன்பம் விளைவிக்கின்றேனா? தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களைச் சந்தோஷமானவர்கள் ஆக்குவதற்கே வந்துள்ளேன். ஆகவே நீங்களும் ஏனைய அனைவரையும் சந்தோஷமானவர்கள் ஆக்க வேண்டும். தந்தையால் ஒருபொழுதும் எவரையும் சந்தோஷமற்றவர் ஆக்க முடியாது. “துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருள்பவர்” என்பதே அவரின் பட்டமாகும். குழந்தைகளாகிய நீங்கள் உங்களைச் சோதித்து, கேட்க வேண்டும்: எனது எண்ணம், வார்த்தை, செயல் மூலம் எவருக்கேனும் துன்பம் விளைவிக்கிறேனா? சிவபாபா ஒருபொழுதும் எவரையும் புண்படுத்துவதில்லை. தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு ஒவ்வொரு கல்பத்திலும் இந்த எல்லையற்ற கதையைக் கூறுகின்றேன். நீங்கள் இப்பொழுது உங்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்று பின்னர் புதிய உலகிற்குச் செல்லவுள்ளீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் இப்பொழுது எவ்வளவு கற்கிறீர்கள் என்பதற்கேற்பவே இறுதியில் நீங்கள் இடமாற்றம் செய்யப்படுவீர்கள். நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச்சென்று, பின்னர் உங்கள் பாகங்களை நடிப்பதற்காக வரிசைக்கிரமமாகக் கீழே வருகின்றீர்கள். ஓர் இராச்சியம் உருவாக்கப்படுகிறது. நீங்கள் இப்போது எந்த முயற்சியைச் செய்கிறீர்களோ, அதே முயற்சி ஒவ்வொரு கல்பத்திலும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அனைத்துக்கும் முதலில், படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் ஞானத்தைத் தந்தையைத் தவிர, வேறெவரும் அறியார் என்பதை அனைவரது புத்தியும், புரிந்து கொள்ளும்படி செய்யவேண்டும். அவர்கள் அனைவரிலும் உயர்வானவரான தந்தையின் பெயரை மறைந்து போகுமாறு செய்து விட்டனர். “திரிமூர்த்தி” என்ற பதம் இருக்கின்றது. அத்துடன் திரிமூர்த்தி வீதி, திரிமூர்த்தி இல்லம் என்பனவும் உள்ளன. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகிய மூவரதும் படமே திரிமூர்த்தி என அழைக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அவர்கள் அந்த மூவரையும் படைக்கின்ற, பிரதானமானவரான சிவபாபாவின் பெயரை நீக்கிவிட்டார்கள். சிவபாபாவே அதிமேலானவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். பின்னர் திரிமூர்த்தி உள்ளனர். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகின்றீர்கள். தந்தையைப் பற்றியதும் உங்கள் ஆஸ்தியைப் பற்றியதுமான ஞானத்தை நினைவு செய்வதனால், நீங்கள் சதா முகமலர்ச்சியுடன் இருப்பீர்கள். தந்தையின் நினைவிலிருந்து நீங்கள் அம்புகளை எய்யும்பொழுது, அவை நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் சக்தியைப் பெறுகிறீர்கள். இந்த நினைவு யாத்திரையின் மூலம் மாத்திரமே நீங்கள் சக்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் முற்றிலும் தமோபிரதானாகவும் தூய்மையற்றவராகவும் ஆகியதால் ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சக்தி அனைத்தையும் இழந்தீர்கள். முற்றிலும் பழைய, தூய்மையற்ற நிலையிலிருந்து (தமோபிரதான்) முற்றிலும் தூய நிலையை (சதோபிரதான்) அடைய வேண்டும் என்பதே, இப்பொழுது உங்கள் அக்கறையாக இருக்கவேண்டும். இதுவே “மன்மனாபவ” என்பதன் அர்த்தம். கீதையைக் கற்பவர்களைக் கேளுங்கள்: “மன்மனாபவ” என்பதன் அர்த்தம் என்ன? “என்னை நினைவு செய்து ஆஸ்தியைக் கோருங்கள்” என்று கூறியவர் யார்? புதிய உலகைப் படைத்தவர் ஸ்ரீகிருஷ்ணரல்ல, அவர் புதிய உலகின் இளவரசராக இருந்தார். பிரம்மா மூலம் படைப்பு நடைபெறுவதாக நினைவு கூரப்படுகின்றது. கரன்கராவன்ஹார் யார்? அவர்கள் இதை மறந்துவிட்டார்கள். கடவுள் சர்வியாபகரெனவும், அவர் பிரம்மா, விஷ்ணு, சங்கரிலும் ஏனைய அனைவரிலும் இருக்கிறாரெனவும் அவர்கள் கூறுகிறார்கள். இது அறியாமை என அழைக்கப்படுகின்றது. தந்தை கூறுகிறார்: ஐந்து விகாரங்களாகிய இராவணன் உங்களை மிகவும் விவேகமற்றவர் ஆக்கிவிட்டான்! முன்னரும் நீங்கள் நிச்சயமாக அதேவிதமாகவே இருந்தீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆம், நீங்கள் முன்னர் மிக மேன்மையானவராகவும் இருந்தீர்கள். பின்னர் நீங்கள் வீழ்ந்ததுடன், படிப்படியாக மிகவும் அதி தூய்மையற்றவர் ஆகினீர்கள். கடவுள் இராமர் ஒரு வானரப் படையை அழைத்துச் சென்றார் என அந்தச் சமயநூல்கள் கூறுகின்றன. அது சரியே! முன்னர் நீங்கள் உண்மையில் குரங்குகளைப் போன்றே இருந்தீர்கள். இந்த உலகம் எவ்வளவு சீரழிந்தது என இப்பொழுது நீங்கள் உணர்கிறீர்கள். அனைவரும் ஒருவரையொருவர் அவதூறுகள் மூலம் புண்படுத்துகிறார்கள். இதுவோ முட்காடு. அதுவோ பூந்தோட்டம். வழமையாக ஒரு காடு பெரிதாகவே இருக்கிறது. ஒரு பூந்தோட்டம் மிகவும் சிறிதாகவே இருக்கிறது. ஒரு பூந்தோட்டம் பெரிதாக இருப்பதில்லை. இவ்வேளையில் இந்த முட்காடு பெரியதாகவே உள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சத்தியயுகத்து பூந்தோட்டம் மிகவும் சிறிதாகவே இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்களும் உங்கள் முயற்சிக்கு ஏற்ப வரிசைக்கிரமமாகவே இவ்விடயங்களைப் புரிந்து கொள்கின்றீர்கள். ஞானம் அல்லது யோகம் இல்லாதவர்களும், சேவை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருக்காதவர்களும் அதிகளவில் உள்ளார்ந்த சந்தோஷத்தை அனுபவம் செய்வதில்லை. தானங்கள் வழங்குவதனாலேயே ஒருவர் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார். அவர் தனது முற்பிறப்பில், தானங்கள் வழங்கிப் புண்ணியச் செயல்களையும் புரிந்தமையாலேயே, அவரது இப்பிறப்பு இவ்வளவு சிறப்பாக உள்ளது எனப் புரிந்து கொள்ளப்படுகின்றது. தாங்கள் இப்பொழுது பக்தர்களாக உள்ளதால், ஒரு நல்ல பக்தரின் வீட்டில் அடுத்த பிறவியை எடுப்பார்கள் எனச் சில பக்தர்கள் நம்புகிறார்கள். நற்செயல்களின் பலன் எப்போதும் நல்லதாகவே இருக்கிறது. தந்தை இங்கமர்ந்திருந்து மேன்மையான செயல், நடுநிலைச் செயல், பாவச்செயலின் தத்துவத்தை விளங்கப்படுத்துகிறார். உலகில் வேறெவரும் இவ்விடயங்களை அறிய மாட்டார்கள். இது இப்பொழுது இராவண இராச்சியம் ஆகையால் மனிதர்களின் செயல்கள் எல்லாமே பாவகரமானவை ஆகிவிட்டன என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அனைவருமே தூய்மையற்றவர் ஆக வேண்டியிருந்தது. அனைவரிலும் ஐந்து விகாரங்கள் பிரவேசித்துள்ளன. அவர்கள் தானங்கள் வழங்கித் தர்மங்கள் செய்தபோதும் அவர்கள் பெறும் பலன் தற்காலிகமானதே. அவர்கள் தொடர்ந்தும் பாவம் செய்துகொண்டே இருக்கின்றனர். இராவண இராச்சியத்தில் இடம்பெறும் பரிமாற்றங்கள் அனைத்தும் பாவகரமானதாகும். தேவர்களின் உருவச் சிலைகளுக்கு மக்கள் அதிகளவு சுத்தத்துடன் “போக்” படைக்கிறார்கள். அவற்றின் முன் செல்லும் பொழுது, அவர்கள் மிகவும் சுத்தமாக இருந்தபோதிலும் அவர்கள் எதனையும் அறிந்து கொள்வதில்லை. அவர்கள் எல்லையற்ற தந்தையை அதிகளவு அவதூறு செய்துள்ளார்கள். சர்வசக்திவானை சர்வவியாபியெனக் கூறுவதன் மூலம் தாங்கள் கடவுளைப் போற்றுவதாக அவர்கள் கருதுகிறார்கள். எவ்வாறாயினும் தந்தை கூறுகிறார்: அவர்களுடைய கருத்துக்கள் தவறானவை. முதலில் நீங்கள் அவர்களுக்குத் தந்தையின் புகழைக் கூறுங்கள். கடவுளே அதிமேலானவர், அவரையே நாங்கள் நினைவு செய்கிறோம். இராஜயோகத்தின் இலக்கும், இலட்சியமும் உங்கள் முன்னே உள்ளன. தந்தை மாத்திரமே இந்த இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். ஸ்ரீகிருஷ்ணர் தந்தையாக இருக்கமுடியாது. அவர் ஒரு குழந்தை. சிவன் மாத்திரமே பாபா என அழைக்கப்படுகின்றார். அவருக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம், இல்லை. அவர் இவரைக் கடனாகவே ஏற்கிறார். இதனாலேயே அவர்கள் பாப்தாதா என்று ௮ழைக்கப்படுகின்றனர். அவர் அசரீரித் தந்தையான அதிமேன்மையானவர். படைப்பால் ஒரு படைப்பிலிருந்து ஆஸ்தியைப் பெற முடியாது. பௌதீக உறவுமுறையிலும், புதல்வர்கள் தங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறார்கள். புதல்விகள் அதைப் பெறுவதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் தனது புதல்வர்கள் என்றும், அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவின் புதல்வர்களும் புதல்விகளும் என்றும் தந்தை இப்பொழுது விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் பிரம்மாவிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவதில்லை. தந்தைக்கு உரியவர்களாகும் பொழுது மாத்திரமே உங்களால் இந்த ஆஸ்தியைப் பெறமுடியும். இத்தந்தை குழந்தைகளாகிய உங்கள் முன் நேரடியாக அமர்ந்திருந்து, இதை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இவற்றைப் பற்றிச் சமயநூல்கள் உருவாக்கப்பட்டிருக்க முடியாது. நீங்கள் அதை எழுதுகிறீர்கள், இலக்கிய நூல்களை அச்சடிக்கிறீர்கள், ஆனால், அவ்வாறிருந்தும் ஓர் ஆசிரியரைத் தவிர எவராலும் இதை விளங்கப்படுத்த முடியாது. ஆசிரியர் இல்லாது போனால், புத்தகங்களிலிருந்து எவரும் எதனையும் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் இப்பொழுது ஆன்மீக ஆசிரியர்கள். தந்தையே மனித உலக விருட்சத்தின் விதையாவார். அவர் முழு விருட்சத்தினதும் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொண்டுள்ளார். அவர் ஆசிரியரின் வடிவில் இங்கு அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பரமதந்தை உங்களைத் தன் குழந்தைகள் ஆக்குகிறார் எனவும், பின்னர் அவர் உங்கள் ஆசிரியராகி உங்களுக்குக் கற்பிக்கிறார் எனவும் குழந்தைகளாகிய நீங்கள் சதா சந்தோஷமாக இருக்கவேண்டும். அவர் உங்கள் உண்மையான சற்குருவும் ஆவார்: அவர் உங்களைத் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்கிறார். ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஆவார். தந்தையே அதிமேலானவர், அவர் 5000 வருடங்களுக்கு ஒருமுறை பாரத மக்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கிறார். சிவபாபாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. உண்மையில் “சிவஜெயந்திக்கு அடுத்ததாக “திரிமூர்த்தி” என்ற வார்த்தை இடப்படவேண்டும். நீங்கள் திரிமூர்த்தி சிவஜெயந்தியைக் கொண்டாடுகிறீர்கள். சிவஜெயந்தியைக் கொண்டாடுவதினால் மாத்திரம் எதுவும் நிரூபிக்கப்படுவதில்லை. தந்தை வரும்பொழுது பிரம்மா பிறப்பெடுக்கிறார். நீங்கள் அவரின் குழந்தைகள் ஆகுகிறீர்கள், நீங்கள் பிராமணர்கள் ஆகுகிறீர்கள். உங்கள் இலக்கும் குறிக்கோளும் உங்கள் முன் உள்ளன. தந்தையே வந்து ஸ்தாபனைப் பணியை மேற்கொள்கிறார். உங்கள் இலக்கு, குறிக்கோள் ஆகியன மிகத்தெளிவாக உள்ளன. கீதையினுள் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் புகுத்தும் பொழுது, கீதையின் முக்கியத்துவம் அழிக்கப்பட்டது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இத்தவறு மீண்டும் இடம்பெறும். இந்த நாடகம் முழுவதும் ஞானத்தையும், பக்தியையும் பற்றியதாகும். தந்தை கூறுகிறார்: அன்புக்குரிய குழந்தைகளே! அமைதி தாமமும் சந்தோஷதாமமும் ஆகிய அல்பாவையும், பீட்டாவையும் நினைவு செய்யுங்கள். இது மிகவும் இலகுவானதே! “மன்மனாபவ” என்பதன் அர்த்தத்தைப் பற்றி எவரிடமேனும் கேட்டு, அவர்கள் என்ன பதில் கூறுகிறார்கள் எனப் பாருங்கள். அவர்களிடம் கேளுங்கள்: கடவுளென்று அழைக்கப்படுபவர் யார்? கடவுளே அதிமேலானவர். அவர்கள் கூறுவது போல, அவர் சர்வவியாபகராக இருக்க முடியாது. அவர் அனைவரதும் தந்தையாவார். இங்கு விரைவில் திரிமூர்த்தி சிவஜெயந்தி வரும். திரிமூர்த்தி சிவனின் படமொன்றை உருவாக்குங்கள். அதிமேலானவர் சிவனே, அடுத்ததாக சூட்சுமதாம வாசிகளான பிரம்மா, விஷ்ணு, சங்கரர் உள்ளனர். சிவபாபாவே அதிமேலானவர். அவர் பாரதத்தைச் சுவர்க்கமாக மாற்றுகிறார். நீங்கள் ஏன் அவரது பிறப்பைக் கொண்டாடக்கூடாது? அவர் நிச்சயமாகப் பாரதமக்களுக்கு அவர்களின் ஆஸ்தியைக் கொடுத்தார். அது அவர்களுடைய இராச்சியமாக இருந்தது. ஆரிய சமாஜிகளும் சிவன்மீது நம்பிக்கை கொண்டிருப்பதால் இவ்விடயத்தில் உங்களுக்கு உதவுவார்கள். நீங்கள் உங்கள் கொடியை ஏற்ற வேண்டும். ஒருபுறத்தில் திரிமூர்த்தியுடன் உலகச்சக்கரம் இருக்கவேண்டும், மறுபக்கத்தில் விருட்சம் இருக்கவேண்டும். உண்மையில் இதுவே உங்கள் கொடியாக இருக்க வேண்டும். இதைத் தயாரிக்க முடியும். அனைவரும் பார்க்கக்கூடியதாக இக்கொடி ஏற்றப்படவேண்டும். அது முழு விளக்கத்தையும் கொண்டுள்ளது. கல்பவிருட்சமும் நாடகச் சக்கரமும் முற்றிலும் தெளிவாக இதில் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் தங்கள் சமயம் எக்காலத்தில் ஆரம்பமாகிறது என்பதைப் பார்க்கவேண்டும். அவர்களே அதைக் கணக்கிட முடியும். இந்தச் சக்கரத்தையும் விருட்சத்தையும் அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள். கிறிஸ்து, எப்போது வந்தார்? அதற்கு முன்னர் அந்த ஆத்மாக்கள் அனைவரும் எங்கே வசித்தனர்? அசரீரி உலகில் தாங்கள் வசித்திருக்க வேண்டும் என அவர்கள் கூறுவார்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் எங்கள் வடிவத்தை மாற்றுகின்றோம். நாங்கள் கீழிறங்கி வந்து சரீரங்களைப் பெறுகிறோம். மக்களும் தந்தைக்குக் கூறுகிறார்கள்: உங்கள் ரூபத்தை மாற்றி இந்தப் பௌதீக உலகிற்கு வாருங்கள். அவர் இங்கே கீழே வருகிறார். அவர் சூட்சும உலகில் வருவதில்லை. எங்கள் பாகங்களை நடிக்கும் போது, நாங்கள் எங்கள் ரூபங்களை மாற்றிக் கொள்வதுபோல, நாங்களும் அவரை மீண்டும் ஒருமுறை வந்து எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கும்படி கேட்கிறோம். பாரதத்தைச் சுவர்க்கமாக மாற்றுவதற்காகவே இராஜயோகம் கற்பிக்கப்படுகிறது. இவை புரிந்து கொள்வதற்கு மிக இலகுவான விடயங்கள். இதைச் செய்வதில் குழந்தைகளாகிய நீங்கள் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இந்த ஞானத்தைக் கிரகித்து ஏனையோரையும் இவ்வாறு செய்வதற்குத் தூண்டவேண்டும். இதையிட்டு நீங்கள் ஒருவரோடு ஒருவர் கடிதத் தொடர்பையும் மேற்கொள்ள வேண்டும். தந்தை வந்து பாரதத்தைச் சுவர்க்கமாக மாற்றுகிறார். கிறிஸ்துவிற்கு 3000 வருடங்களுக்கு முன் பாரதம் நிச்சயமாக வைகுந்தமாக இருந்தது எனக் கூறப்படுகிறது. ஆகவே நீங்கள் திரிமூர்த்தி சிவனின் படத்தை அனைவருக்கும் அனுப்ப வேண்டும். நீங்கள் திரிமூர்த்தி சிவனின் முத்திரையைத் தயாரியுங்கள். முத்திரைகள் தயாரிப்பதற்கான அரசாங்கத் துறையும் உள்ளது. டெல்லியில் கல்வியறிவுள்ள பலர் இருக்கிறார்கள். அவர்களால் இவ்வேலைகளைச் செய்ய முடியும். டெல்லியே உங்கள் தலைநகரமாகவும் விளங்கும். ஆரம்பத்தில் டெல்லி தேவதைகளின் பூமி (பரிஸ்தான்) என்று அழைக்கப்பட்டது. இது இப்பொழுது ஒரு சுடுகாடு (கப்ரிஸ்தான்) ஆகும். எனவே இவ்விடயங்கள் யாவும் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்கவேண்டும். இப்பொழுது நீங்கள் சதா சந்தோஷமானவராக இருக்கவேண்டும். மிக இனிமையானவர் ஆகுங்கள். அனைவருடனும் அன்புடன் பழகுங்கள். சகல தெய்வீகக் குணங்கள் நிறைந்தவராகவும், 16 சுவர்க்கக் கலைகளில் முழுமையானவராகவும் ஆகுங்கள். இதுவே உங்கள் முயற்சியின் இலக்காக இருக்கவேண்டும். எவ்வாறாயினும் இதுவரையில் எவரும் அவ்வாறு ஆகவில்லை. உங்கள் ஸ்திதி இப்போது மேலேறுகிறது. நீங்கள் படிப்படியாகவே மேலேறுகிறீர்கள். உங்களுடைய ஞானம் உண்மையிலேயே மகத்தானது என மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், சிவஜெயந்தியன்று சேவை செய்வது பற்றி பாபா பல விதங்களில் சமிக்ஞை கொடுத்துக் கொண்டிருக்கிறார். மனிதர்களுக்குப் புரிய வைப்பதற்கு அதிகளவு முயற்சி செய்ய வேண்டியுள்ளது. சில முயற்சிகளைச் செய்யாமல் ஓர் இராச்சியம் உருவாக்கப்பட முடியாது. நீங்கள் மேலே ஏறி, பின்னர் விழுந்து, மீண்டும் மேலேறுகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஏதோவொரு புயலை அனுபவம் செய்கிறீர்கள். நினைவு செய்தலே பிரதான விடயமாகும். சதோபிரதான் ஆகுவதற்கு நீங்கள் நினைவு செய்ய வேண்டும். ஞானம் இலகுவானது. குழந்தைகளாகிய நீங்கள் அனைவரிலும் இனிமையானவர் ஆக வேண்டும். உங்கள் இலக்கும் குறிக்கோளும் உங்கள் முன் உள்ளன. அவர்கள் (இலக்ஷ்மியும் நாராயணனும்) மிக இனிமையானவர்கள். அவர்களைக் காண்பதில் நீங்கள் அதிக சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்கள். இதுவே மாணவர்களாகிய உங்கள் இலக்கும், குறிக்கோளும் ஆகும். கடவுளே உங்களுக்குக் கற்பிப்பவர் ஆவார். அச்சா.இனிமையிலும் இனிமையான, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்குத் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடமிருந்து நீங்கள் பெறுகின்ற ஞானத்தையும், ஆஸ்தியையும் உங்கள் விழிப்புணர்வில் வைத்திருந்து, சதா முகமலர்ச்சியுடன் இருங்கள். உங்களிடம் ஞானமும், யோகமும் இருப்பதனால், சேவைக் களத்தில் சதா தயாராக இருங்கள்.2. அமைதிதாமத்தையும், சந்தோஷதாமத்தையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் அத்தேவர்களைப் போல இனிமையானவராக வேண்டும். எல்லையற்ற சந்தோஷத்தில் நிலைத்திருங்கள். ஓர் ஆன்மீக ஆசிரியராகி, இந்த ஞானத்தை ஏனையோருக்கும் வழங்குங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையைப் போல் கர்மாதீத் ஆகி, உங்களின் சரீரம், உறவுகள் மற்றும் பௌதீக சௌகரியங்களில் இருந்து விடுபட்டு இருப்பீர்களாக.தமது இல்லறங்களைப் பற்றினால் அன்றி, வழிகாட்டல்களுக்கேற்பக் கருவிகளாக இருந்து பராமரிக்கும்போது, தமது ஆத்ம உணர்வு ரூபத்தைப் பேணுபவர்கள், இப்போதே செல்ல வேண்டும் என்ற கட்டளையைப் பெற்றால், அவர்கள் அப்படியே செய்வார்கள். ஊதுகுழல்கள் ஒலிக்கும்போது, அதைப் பற்றிச் சிந்திப்பதில் நீங்கள் உங்களின் நேரத்தைச் செலவிடாமல் இருந்தால், நீங்கள் பற்றை வென்றவர் எனப்படுவீர்கள். ஆகவே, உங்களின் சரீரம், உறவுகள், பௌதீக வசதிகளின் பந்தனம் ஏதாவது உங்களை ஈர்க்கிறதா எனச் சோதித்துப் பாருங்கள். ஏதாவது பந்தனம் இருந்தால், கவர்ச்சி இருக்கும். ஆனால், விடுபட்டிருப்பவர்கள் தந்தையைப் போல் கர்மாதீத் ஸ்திதிக்கு நெருக்கமாக இருப்பார்கள்.
சுலோகம்:
அன்பையும் ஒத்துழைப்பையும் கொடுப்பதுடன்கூடவே, சக்தி ரூபமாகவும் ஆகுங்கள். நீங்கள் இராச்சியத்தில் முன்னால் ஓரிலக்கத்தைப் பெறுவீர்கள்.உங்களின் சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.
தற்சமயம், உங்களின் சரீரம், மனம், செல்வம், நேரத்தைப் பயன்படுத்தும் அளவிற்கு, உங்களின் மனதின் சக்தியால் சேவை செய்வதன் மூலம், நீங்கள் குறுகிய காலத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். தற்சமயம், உங்களின் சுபாவத்தை மாற்றுவதற்கும் ஒன்றுகூடலில் பழகுவதற்கும் அல்லது, சிலவேளைகளில் சேவையில் அந்தளவிற்கு வெற்றி ஏற்படாதபோதும், மனச்சோர்வு அடையாமல் இருப்பதற்கும் நீங்கள் சிலவேளைகளில் உங்களில் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. எனவே, அவை அனைத்தும் முடிவடையும்.