20.02.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, சகுனங்கள் நீக்கப்பட்டு இந்தத் தமோபிரதான் உலகம் சதோபிரதான் ஆகுமாறு இப்போது விகாரங்களைத் தானம் செய்யுங்கள்.
கேள்வி:
எந்த விடயத்தையிட்டுக் குழந்தைகளாகிய நீங்கள் ஒருபோதும் விரக்தி அடையக்கூடாது?பதில்:
நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை இட்டு ஒருபோதும் விரக்தி அடையக் கூடாது. ஏனெனில், இந்த வாழ்க்கையானது வைரம் போன்ற வாழ்க்கை எனப் புகழப்படுகிறது. நீங்கள் அதில் அக்கறை செலுத்த வேண்டும். நீங்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தால், தொடர்ந்தும் ஞானத்தைச் செவிமடுங்கள். நீங்கள் தொடர்ந்தும் இங்கு எவ்வளவு நாட்கள் வாழ்கிறீர்களோ, அந்தளவிற்கு தொடர்ந்தும் வருமானம் சம்பாதிக்கப்படுவதுடன் உங்களின் கணக்குகளும் தீர்க்கப்படும்.பாடல்:
ஓம் நமசிவாய….ஓம் சாந்தி.
இன்று வியாழக்கிழமை. ‘உண்மையான குருவிற்குரிய நாள்’ எனக் குழந்தைகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள். அவரே சத்திய பூமியை ஸ்தாபிப்பவர். அவர் நடைமுறையில் சத்திய நாராயணனின் கதையைக் கூறுகிறார். அவர் சாதாரண மனிதர்களை நாராயணன் ஆக்குகிறார். அவரே அனைவருக்கும் ஜீவன் முக்தியை அருள்பவர் என நினைவு கூரப்படுகிறார். அவர் விருட்சத்தின் பிரபு எனவும் அழைக்கப்படுகிறார். இது மனித உலக விருட்சமாகும். இது கல்ப விருட்சம் என அழைக்கப்படுகிறது. கல்பம் கல்பமாக, அதாவது, ஒவ்வொரு 5000 வருடங்களிலும், அது மீண்டும் அதேமாதிரியாகவே நிகழ்கிறது. ஒரு மரமும் அவ்வாறே மீண்டும் உருவாகிறது. ஒரு செடி ஆறு மாதங்களுக்கு வளர்கிறது. பின்னர் பூந்தோட்டக்காரர்கள் அதனை வேருடன் பிடுங்கி விடுகிறார்கள். பின்னர் மீண்டும் அவர்கள் அதனை நடும்போது, அது பூக்கின்றது. நாங்கள் அரைக் கல்பமாகத் தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம் என்றும் பின்னர் அரைக் கல்பத்திற்கு அதை மறந்து விடுகிறோம் என்றும் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிவீர்கள். பக்தி மார்க்கத்தில், நாங்கள் அவரை அரைக் கல்பத்திற்கு நினைவு செய்தோம். எப்போது தந்தை வந்து பூந்தோட்டத்தை ஸ்தாபிப்பார்? பல சகுனங்கள் உள்ளன. வியாழ சகுனமும், கீழிறங்கும் ஸ்திதிக்குரிய சகுனங்களும் உள்ளன. இந்த வேளையில், பாரதத்தின்மீது இராகுவின் சகுனம் படிந்துள்ளது. சந்திர கிரகணம் ஏற்படும்போது, அவர்கள் அழைக்கிறார்கள்: தானம் ஒன்றைச் செய்யுங்கள், அதனால் சகுனங்கள் நீக்கப்படும். இப்போது தந்தை கூறுகிறார்: சகுனங்களை நீக்குவதற்கு, இந்த ஐந்து விகாரங்களையும் தானம் செய்யுங்கள். முழு உலகத்தினையும் இப்போது கிரகணம் பீடித்துள்ளது. பஞ்ச பூதங்களும் தமோபிரதானாக உள்ளதால் கிரகணத்தால் மூடப்பட்டுள்ளன. புதியதாக இருக்கும் ஒவ்வொரு விடயமும் நிச்சயமாகப் பழையதாக மாறும். புதியது சதோபிரதான் என்றும், பழையது தமோபிரதான் என்றும் அழைக்கப்படுகின்றன. சிறிய குழந்தைகளும் சதோபிரதான் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் மகாத்மாக்களை விடவும் அதி மேன்மையானவர்களாகக் கருதப்படுகின்றனர். ஏனெனில் அவர்களிடம் ஐந்து விகாரங்களும் கிடையாது. சந்நியாசிகளும் குழந்தைப் பருவத்தில் பக்தி செய்கிறார்கள். உதாரணமாக, இராமாதிராத் ஸ்ரீகிருஷ்ணரின் பக்தராக இருந்தார். அவர் துறவறத்தை மேற்கொண்டதும், அவரைப் பூஜிப்பதை நிறுத்திவிட்டார். பூமியில் தூய்மை தேவைப்படுகிறது. முன்னர், பாரதமே அனைத்திலும் தூய்மையானதாக இருந்தது. பின்னர், தேவ தேவியர்கள் பாவப் பாதைக்குள் சென்றதும், சுவர்க்கத்தின் தங்க மாளிகைகள் போன்றவை அனைத்தும் பூமியதிர்ச்சி போன்றவற்றால் அழிக்கப்பட்டு விட்டன. அவை மீண்டும் புதிதாகக் கட்டப்படும். விநாசம் நிச்சயமாக இடம்பெறும். இராவண இராச்சியம் ஆரம்பமாகும்போதே, அனர்த்தங்களும், குழப்பங்களும் ஏற்படுகின்றன. இந்த வேளையில், அனைவரும் தூய்மை அற்றவர்களாக உள்ளனர். சத்திய யுகத்தில், தேவதேவியர்கள் ஆட்சி செய்கிறார்கள். அசுரர்களும் தேவர்களும் யுத்தம் செய்வதாகக் காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தேவர்கள் சத்திய யுகத்தில் மட்டுமே இருப்பார்கள். அங்கு எப்படி சண்டை செய்ய முடியும்? சங்கம யுகத்தில், தேவதேவியர்கள் இல்லை. உங்களுடைய பெயர் பாண்டவர்கள் ஆகும். பாண்டவர்களும் கௌரவர்களும் ஒருவரோடு ஒருவர் சண்டை செய்ய மாட்டார்கள். அவை அனைத்தும் கட்டுக்கதைகளே. விருட்சம் மிகப் பெரியது. பல இலைகள் காணப்படுகின்றன. அவை அனைத்தையும் எண்ணுவது என்பது சாத்தியமானதல்ல. தேவர்கள் சங்கம யுகத்தில் இருக்க மாட்டார்கள். பாபா இங்கிருந்து ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆத்மாக்களான நீங்களே அதனைச் செவிமடுத்து உங்களின் தலைகளை அசைக்கிறீர்கள். ‘நான் ஓர் ஆத்மா, பாபா எனக்குக் கற்பிக்கிறார்’. இதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தந்தை எங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆக்குகிறார். ஆத்மாவே நல்ல அல்லது தீய சம்ஸ்காரங்களைக் கொண்டுள்ளார். ‘பாபா எனக்குக் கற்பிக்கிறார்’ என இந்த ஆத்மா தனது அங்கங்களினூடாகக் கூறுகின்றார். தந்தை கூறுகிறார்: எனக்கும் விளங்கப்படுத்துவதற்கு அவயவங்கள் அவசியம். ஆத்மாவே சந்தோஷப்படுகிறார். தந்தை ஐயாயிரம் வருடங்களுக்கு ஒரு தடவை எங்களுக்கு ஞானத்தைக் கூறுவதற்காக வருகிறார். நீங்கள் எனக்கு முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். மதுவனம் மட்டுமே புகழப்படுகிறது. அவர் ஆத்மாக்களின் தந்தை ஆவார். அனைவரும் அவரை அழைக்கின்றனர். நீங்கள் அவருக்கு முன்னால் நேரடியாக அமர்ந்திருப்பதை இரசிக்கிறீர்கள். ஆனால் அனைவராலும் இங்கு வந்து வசிக்க முடியாது. நீங்கள் உங்களுடைய வியாபாரம், தொழில் போன்றவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் கடலிடம் வந்துள்ளீர்கள். நீங்கள் ஞானத்தைக் கிரகித்துப் பின்னர் சென்று மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துகிறீர்கள். இல்லாவிடின், எவ்வாறு உங்களால் மற்றவர்களுக்கு நன்மையை ஏற்படுத்த முடியும்? யோகி மற்றும் ஞானி ஆத்மாக்கள் இதனை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். இப்போது, சிவஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. கடவுள் பேசுகிறார். ‘கடவுள் பேசுகிறார்’ என ஸ்ரீகிருஷ்ணருக்குக் கூறமுடியாது. அவர் தெய்வீகக் குணங்களைக் கொண்ட ஒரு மனிதன் ஆவார். அது தேவதர்மம் என அழைக்கப்படுகிறது. இப்போது தேவதர்மம் இல்லை என்பதையும், அது ஸ்தாபிக்கப்பட உள்ளது என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் இப்போது தேவதர்மத்தைச் சார்ந்தவர்கள் எனக் கூறமாட்டீர்கள். இல்லை. நீங்கள் இப்போது பிராமண தர்மத்தைச் சார்ந்தவர்கள். நீங்கள் தேவ தர்மத்தைச் சார்ந்தவர்கள் ஆகுகிறீர்கள். தேவர்களின் நிழல் இந்தத் தூய்மையற்ற பூமியில் விழமுடியாது. தேவர்கள் இந்த உலகில் பிரவேசிக்க முடியாது. உங்களுக்குப் புதிய உலகம் தேவைப்படுகிறது. அவர்கள் இலக்ஷ்மி பூஜை செய்யும்போது, தமது வீட்டை அதிகம் சுத்தம் செய்கிறார்கள். இப்போது, இந்த உலகமும் மிகப் பெரிய அளவில் சுத்தம் செய்யப்பட உள்ளது. பழைய உலகம் முழுவதும் முடிவடையப் போகிறது. அவர்கள் இலக்ஷ்மியிடம் செல்வத்தை மட்டுமே வேண்டுகிறார்கள். இலக்ஷ்மியா அல்லது ஜெகதாம்பாளா மகத்தானவர்? (அம்பாள்). அம்பாளுக்குப் பல ஆலயங்கள் உள்ளன. மனிதர்களுக்கு எதுவும் தெரியாது. இலக்ஷ்மி சுவர்க்க அதிபதி என்றும், சரஸ்வதி என அழைக்கப்படும் ஜெகதாம்பாளே பின்னர் இந்த இலக்ஷ்மி ஆகுகின்ற அதே ஜெகதாம்பாள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். உங்களுடைய அந்தஸ்து தேவர்களுடையதை விடவும் அதிமேன்மையானது. அனைத்திலும் அதியுயர்ந்தது பிராமணர்களின் உச்சிக்குடும்;பி ஆகும். நீங்களே அனைவரிலும் அதியுயர்ந்தவர்கள். அவர் ‘சரஸ்வதி, ஜெகதாம்பாள்’ எனப் புகழப்படுகிறார். அவரினூடாக நீங்கள் எதனைப் பெறுகிறீர்கள்? உலக இராச்சியத்தை. அங்கு நீங்கள் செல்வந்தர்களாக இருப்பீர்கள். நீங்கள் உலக இராச்சியத்தைப் பெறுவீர்கள். பின்னர் நீங்கள் ஏழைகள் ஆகுவதுடன், பக்தி மார்க்கமும் ஆரம்பமாகின்றது. அதன் பின்னர் நீங்கள் இலக்ஷ்மியை நினைவு செய்கிறீர்கள். ஒவ்வொரு வருடமும் இலக்ஷ்மியும் பூஜிக்கப்படுகிறார். ஒவ்வொரு வருடமும் அவர்கள் இலக்ஷ்மியை அழைக்கிறார்கள். எவரும் ஜெகதாம்பாளை ஒவ்வொரு வருடமும் அழைப்பதில்லை. உண்மையில், ஜெகதாம்பாள் தொடர்ச்சியாகப் பூஜிக்கப்படுகிறார். அவர்கள் தாம் விரும்பிய போதெல்லாம் அம்பாளின் ஆலயத்திற்குச் செல்கிறார்கள். இங்கும், நீங்கள் விரும்பிய எந்த வேளையிலும் உங்களால் ஜெகதாம்பாளைச் சந்திக்க முடியும். நீங்களும் ஜெகதாம்பாள்கள் (உலகத் தாய்மார்), அல்லவா? நீங்களே உலக அதிபதிகள் ஆகுவதற்கான பாதையை அனைவருக்கும் காட்டுபவர்கள். அவர்கள் ஜெகதாம்பாளிடம் சென்று அனைத்தையும் வேண்டுகிறார்கள். இலக்ஷ்மியிடம் செல்வத்தை மட்டுமே வேண்டுகிறார்கள். அவர்கள் தமது ஆசைகள் அனைத்தையும் ஜெகதாம்பாளின் முன் வைப்பார்கள். நீங்கள் இப்போது வந்து தந்தையின் குழந்தைகள் ஆகியிருப்பதனால், உங்களுடைய அந்தஸ்து அனைத்திலும் அதியுயர்ந்ததாகும். தந்தை உங்களுக்கு ஆஸ்தியை வழங்குகிறார். நீங்கள் இப்போது இறை சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். பின்னர் நீங்கள் தேவ சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் ஆகுவீர்கள். இந்த நேரத்தில், மனதின் ஆசைகள் அனைத்தும் எதிர்காலத்திற்காகப் பூர்த்தி செய்யப்படுகின்றன. மனிதர்கள் தொடர்ந்து ஆசைகளைக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஆசைகள் யாவும் பூர்த்தி செய்யப்படுகின்றன. இது ஓர் அசுர உலகம். அவர்கள் எவ்வாறு பல குழந்தைகளை உருவாக்குகிறார்கள் எனப் பாருங்கள். சத்திய யுகத்தில் எவ்வாறு ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு இடம்பெறுகின்றது என்பதன் காட்சியைக் குழந்தைகளாகிய நீங்கள் பெற்றுள்ளீர்கள். அங்கு, அனைத்தும் சட்டதிட்டங்களுக்கு ஏற்பவே நிகழும். துன்பத்திற்கான வார்த்தை அங்கு இருக்காது. அது நிச்சயமாக சந்தோஷ பூமி என அழைக்கப்படுகிறது. நீங்கள் பல தடவைகள் சந்தோஷத்தைக் கடந்து வந்துள்ளீர்கள். நீங்கள் பல தடவைகள் தோற்கடிக்கப்பட்டதுடன், பல தடவைகள் வெற்றியையும் பெற்றுள்ளீர்கள். பாபாவே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற விழிப்புணர்வை நீங்கள் இப்போது கொண்டிருக்கிறீர்கள். ஒரு பாடசாலையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. அத்துடன் கூடவே, பண்புகளும் கற்பிக்கப்படுகின்றன. அங்கு, எவரும் இலக்ஷ்மி, நாராயணனைப் போன்ற பண்புகளைக் கற்றுக் கொள்வதில்லை. இப்பொழுதே நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கிறீர்கள். சகல நற்குணங்களாலும் நிறைந்தவர்கள்…. என அவர்களைப் பற்றிய புகழ் பாடப்படுகிறது. எனவே, நீங்கள் இப்போது அவர்களைப் போன்று ஆகவேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் ஒருபோதும் உங்களுடைய இந்த வாழ்க்கையை இட்டு விரக்தி அடையக் கூடாது. ஏனெனில், இந்த வாழ்க்கை வைரம் போன்றதெனப் புகழப்படுகிறது. நீங்கள் அதில் அக்கறை செலுத்த வேண்டும். நீங்கள் ஆரோக்கியமானவராக இருந்தால், தொடர்ந்தும் ஞானத்தைச் செவிமடுப்பீர்கள். சுகயீனத்தின் போதும் உங்களால் செவிமடுக்க முடியும். உங்களால் தந்தையையும் நினைவு செய்ய முடியும். இங்கு நீங்கள் எவ்வளவு நாட்கள் வாழ்ந்தாலும், நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் தொடர்ந்தும் வருமானத்தைச் சம்பாதிப்பீர்கள். நீங்கள் தொடர்ந்தும் கணக்குகளைத் தீர்ப்பீர்கள். சில குழந்தைகள் கேட்கிறார்கள்: பாபா, சத்தியயுகம் எப்போது ஆரம்பமாகும்? இது மிகவும் அழுக்கான உலகம். தந்தை கூறுகிறார்: அனைத்திற்கும் முதலில், குறைந்தது உங்களின் ஸ்திதியைக் கர்மாதீத் ஆக்குங்கள். இயன்றவரை தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள். குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டும்: சிவபாபாவை நினைவு செய்யுங்கள். இது கலப்படமற்ற நினைவாகும். ஒரேயொரு சிவபாபாவினை வழிபடுவது, கலப்படமற்ற வழிபாடும், சதோபிரதான் பக்தியும் ஆகும். பின்னர், தேவர்களை நினைவு செய்வது சதோ பக்தியாகும். தந்தை கூறுகிறார்: நிற்கும்போதும், அமர்ந்திருக்கும் போதும், தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். குழந்தைகள் மாத்திரமே அழைக்கிறார்கள்: ஓ தூய்மை ஆக்குபவரே! ஓ விடுதலை ஆக்குபவரே! ஓ வழிகாட்டுபவரே! ஆத்மாவே இதனைக் கூறுகிறார். குழந்தைகள் பாபாவை நினைவு செய்கிறார்கள். தந்தை இப்போது, நீங்கள் எவ்வாறு அவரை நினைவு செய்தீர்கள் என உங்களுக்கு நினைவூட்டுகிறார்: ‘ஓ துன்பத்தை நீக்கி சந்தோஷத்தை அருள்பவரே, வாருங்கள்! வந்து எங்களைத் துன்பத்தில் இருந்து விடுவியுங்கள்! எங்களை விடுதலை ஆக்குங்கள்! எங்களை சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்!’ தந்தை கூறுகிறார்: நான் உங்களை சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்வேன். ஆனால், நான் சந்தோஷ தாமத்தில் உங்களுடன் வரமாட்டேன். இப்பொழுது மட்டுமே நான் உங்களுக்கு சகவாசத்தை வழங்குகிறேன். நான் ஆத்மாக்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். நான் இப்போது கல்விக்காக எனது சகவாசத்தை உங்களுக்கு வழங்குகிறேன். பின்னர், நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது என்னுடன் வருவீர்கள். அவ்வளவுதான். நான் இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு எனது அறிமுகத்தை மிகத் தெளிவாக வழங்குகிறேன். எந்தளவிற்கு நீங்கள் ஒவ்வொருவரும் முயற்சி செய்கிறீர்களோ, அதற்கேற்ப அங்கு நீங்கள் வெகுமதியைப் பெற்றுக் கொள்வீர்கள். தந்தை அதிகளவு புரிந்துணர்வினை வழங்குகிறார். இயன்றவரை என்னை நினைவு செய்யுங்கள். உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படுவதுடன், நீங்கள் பறப்பதற்கான இறக்கைகளையும் பெற்றுக் கொள்வீர்கள். ஆத்மாவிடம் அந்த இறக்கைகளைப் போன்ற இறக்கைகள் இருப்பதில்லை. ஆத்மா சின்னஞ் சிறியதொரு புள்ளி ஆவார். ஆத்மாவில் எவ்வாறு 84 பிறவிகளுக்குரிய பாகம் பதிந்துள்ளது என்பதை எவரும் அறிய மாட்டார்கள். எவரும் ஆத்மாவை இனங்கண்டு கொள்வதும் இல்லை, பரமாத்மாவையும் இனங்கண்டு கொள்வதில்லை. இதனாலேயே தந்தை கூறுகிறார்: எவராலும், நான் எத்தகையவர் என்றோ, நான் என்ன செய்கிறேன் என்றோ அறியமுடியாது. எனது படைப்பைப் பற்றியும், என்னைப் பற்றியும் என்னிடமிருந்து மட்டுமே அறியமுடியும். நான் மட்டுமே வந்து என்னைப்பற்றிய அறிமுகத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்கு வழங்குகிறேன். ஆத்மா எத்தகையவர் என்றும் நான் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். இது ‘ஆத்மாவைப் புரிந்துகொள்ளல்’ எனக் கூறப்படுகிறது. ஆத்மா நெற்றியின் மத்தியில் வசிக்கிறார். நெற்றியின் புருவ மையத்தில் வியப்பான, தனித்துவமான நட்சத்திரம் பிரகாசிக்கிறதென அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த ஆத்மா என்றால் என்ன? எவருக்கும் இது தெரியாது. யாராவதொருவர் ஆத்மாவின் காட்சியைக் காண விரும்புவதாகக் கூறினால், அவருக்கு விளங்கப்படுத்துங்கள்: நெற்றியின் மத்தியில் நட்சத்திரம் இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். நட்சத்திரத்தைப் பார்ப்பதன் நோக்கம் என்ன? புள்ளியும் (திலகம்) நட்சத்திரமாகவே காட்டப்படுகிறது. பிறைச் சந்திரனின் மத்தியில் ஒரு நட்சத்திரத்தையும் அவர்கள் காட்டுகிறார்கள். உண்மையில், ஒவ்வோர் ஆத்மாவும் நட்சத்திரமே ஆவார். நீங்கள் ஞான நட்சத்திரங்கள் எனத் தந்தை இப்போது விளங்கப்படுத்தி உள்ளார். சூரியன், சந்திரன், மற்றும் நட்சத்திரங்களே மேடைக்கு ஒளியேற்றும் விளக்குகள் ஆகும். அவை தேவர்கள் அல்ல. பக்தி மார்க்கத்தில், அவர்கள் சூரியனுக்கு நீரையும் படைக்கிறார்கள். இந்த பாபாவும் பக்தி மார்க்கத்தில் அனைத்தையும் செய்தார். ‘சூரிய தேவனுக்கு வந்தனங்கள், சந்திர தேவனுக்கு வந்தனங்கள்’ எனக் கூறி சூரியனுக்கு நீர் படைப்பார். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. இவர் அதிக பக்தி செய்துள்ளார். முதலாம் இலக்க பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர், பின்னர் முதலாம் இலக்கப் பூஜிப்பவர் ஆகினார். உருத்திராட்ச மாலையில் இலக்கங்கள் இருப்பதைப் போல், இந்த இலக்கங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவரே அதிக பக்தி செய்துள்ளார். தந்தை இப்போது கூறுகிறார்: இளையவரோ வயோதிபரோ, இப்போது அனைவரினதும் ஓய்வு ஸ்திதியாகும். நான் இப்போது அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்வேன். பின்னர் நீங்கள் இங்கே திரும்பி வரமாட்டீர்கள். சமய நூல்களில் குறிப்பிட்டுள்ளவாறு, பிரளயம் நடக்கும் என்பதோ, உலகமே வெள்ளத்தில் மூழ்கி, ஸ்ரீகிருஷ்ணர் அரசமிலையில் மிதந்து வருவார் என்பதோ உண்மையில் நிகழாது. அது கடலைப் பொறுத்த விடயமல்ல எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். அங்கு, அது கர்ப்ப மாளிகை. அதில் குழந்தைகள் மிகவும் சந்தோஷமாகவே வாழ்வார்கள். இங்கு, இது கர்ப்பச் சிறை எனப்படுகிறது. கர்ப்பத்திலேயே ஒருவர் பாவங்களுக்கான தண்டனையைப் பெறுகிறார். எவ்வாறாயினும், தந்தை கூறுகிறார்: மன்மனாபவ! என்னை நினைவு செய்யுங்கள்! ‘ஏணிப் படத்தில் ஏனைய மதங்கள் ஏன் காட்டப்படவில்லை?’ என மக்கள் கண்காட்சிகளில் வினவினால், அவர்களுக்கு இவ்வாறு கூறுங்கள்: ஏனைய மதங்களைச் சார்ந்தவர்கள் 84 பிறவிகள் எடுப்பதில்லை. ஏனைய மதங்கள் அனைத்தும் கல்பவிருட்சத்தில் காட்டப்பட்டுள்ளன. அதிலிருந்து, நீங்கள் எத்தனை பிறவிகளை எடுப்பீர்கள் என்பதை உங்களால் கணக்கிட முடியும். நாங்கள் 84 பிறவிகளுக்குரிய ஏணிப் படத்தைக் காட்ட வேண்டும். ஏனைய அனைத்தும் கல்பவிருட்சத்திலும் சக்கரத்திலும் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் அனைத்தும் விளங்கப்படுத்தப்படுகின்றது. நீங்கள் ஒரு வரைபடத்தைப் பார்க்கும்போது, இலண்டன் எங்குள்ளது என்றும், இன்ன நகரம் எங்குள்ளது என்றும் உங்களுடைய புத்தி அறிந்து கொள்கிறது. நீங்கள் விளங்கப்படுத்துவதற்குத் தந்தை அதனை மிகவும் இலேசாக்கி உள்ளார். எவ்வாறு 84 பிறவிகளின் சக்கரம் சுழல்கிறது என அனைவருக்கும் காட்டுங்கள். இப்போது, நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக விரும்பினால், எல்லையற்ற தந்தையை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். பின்னர், தூய்மை ஆகியதும், நீங்கள் தூய உலகிற்குச் செல்வீர்கள். இது சிரமமான விடயமல்ல. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், தந்தையை நினைவு செய்யுங்கள். அது சக்திமிக்க பழக்கமாக மாறிவிடும். தந்தையின் நினைவில் இருந்தவாறு நீங்கள் டெல்கிக்கு நடந்துசெல்ல நேரிட்டாலும், உங்களுக்கு எந்தவிதமான களைப்பும் இருக்காது. உண்மையான நினைவு இருக்குமாயின், சரீர உணர்வு துண்டிக்கப்படும். அப்பொழுது களைப்பு இருக்காது. இறுதியில் வருபவர்களால் நினைவில் மேலும் விரைவாகச் செல்ல முடியும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரேயொரு தந்தையின் கலப்படமற்ற நினைவில் நிலைத்திருந்து சரீர உணர்வினை முடித்து விடுங்கள். கர்மாதீதம் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் சரீரத்தில் இருக்கும்வரை, அழியாத வருமானத்தை நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.2. ஞானி ஆத்மாவாகி மற்றவர்களுக்குச் சேவை செய்யுங்கள். தந்தையிடமிருந்து நீங்கள் செவிமடுப்பவற்றைக் கிரகித்துப் பின்னர் மற்றவர்களுக்கு விவரியுங்கள். ஐந்து விகாரங்களையும் தானம் செய்து, இராகுவின் சகுனங்களில் இருந்து விடுபடுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் நிலையான, ஸ்திரமான ஸ்திதியின் மூலம் ஒரு வழிகாட்டலைப் பின்பற்றுவதில் தைரியசாலியாகி, நிலத்தை பலனுள்ளது ஆக்குவீர்களாக.குழந்தைகளான நீங்கள் ஓர் ஒன்றுகூடலில் ஒரே வழிகாட்டலைப் பின்பற்றுவதில் உங்களின் நிலையான, ஸ்திரமான ஸ்திதி மூலம் தைரியசாலிகளாக இருக்கும்போது, ஒரே பணியைச் செய்வதில் நீங்கள் ஈடுபட்டிருக்கும்போது, நீங்கள் சதா பூத்துக் குலுங்குவதுடன் அந்த நிலமும் நல்ல விளைச்சலைத் தரும். தற்காலத்தில், விஞ்ஞானத்தின் மூலம் நீங்கள் எதையாவது நட்டு, உடனடியாக அதன் பலனைப் பெறுகிறீர்கள். அதேபோல், மௌன சக்தியால் நீங்கள் இலகுவாகவும் விரைவாகவும் வெளிப்படுத்தலைக் காண்பீர்கள். நீங்கள் தடைகளில் இருந்து விடுபட்டு, ஒரேயொரு தந்தையின் அன்பில் திளைத்திருக்கும்போது, ஒரேயொருவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதுடன் நிலையாகவும் ஸ்திரமாகவும் இருந்தால், ஏனைய ஆத்மாக்கள் பலரும் இயல்பாகவே உங்களுடன் ஒத்துழைப்பார்கள். அத்துடன் நிலமும் நல்ல விளைச்சலைத் தரும்.
சுலோகம்:
தமது அகங்காரத்தைத் தமது பெருமையாகக் கருதுபவர்களால் பணிவாக இருக்க முடியாது.ஏகாந்தத்தின் மீது அன்பு வைத்து, ஒற்றுமையையும் ஒருமுகப்படுதலையும் கிரகியுங்கள்.
ஏகாந்தத்தில் இருங்கள். அத்துடன் அதேயளவு களிப்பூட்டும் சுபாவத்தையும் கொண்டிருங்கள். இந்த இரு வார்த்தைகளில் பெரிய வேறுபாடு உள்ளது. ஆனால் முழுமை ஸ்திதியில் இந்த இரண்டு ஸ்திதிகளும் சமமாக இருக்க வேண்டும். எந்தளவிற்கு நீங்கள் ஏகாந்தத்தில் இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு களிப்பூட்டுபவராகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள். ஏகாந்தத்தில் இருக்கும்போது உங்களின் களிப்பூட்டும் சுபாவம் மறைந்து விடக்கூடாது. ஒரே நேரத்தில் இரண்டும் சமமாக இருக்க வேண்டும். ஒரு கணம், ஏகாந்தத்தில் இருங்கள். அடுத்த கணம், மகிழ்வாகவும் களிப்பூட்டுபவராகவும் இருங்கள். எந்தளவிற்கு நீங்கள் முதிர்ச்சியாகவும் சீரியஸாகவும் இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு ஒத்திசைபவராகவும் ஆகுங்கள். ஒத்திசைபவர் என்றால், சுபாவத்திலும் சம்ஸ்காரங்களிலும் ஒத்திசைபவர் என்று அர்த்தம்.