20.03.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்தப் பழைய உலகின் சந்தோஷம், கணப்பொழுதுக்கு உரியதே அன்றி, உங்களுடன் வரப்போவது அல்ல.இந்த ஞானத்தின் அழியாத இரத்தினங்களே உங்களுடன் வரும். ஆகவே உங்களுடைய அழியாத வருமானத்தைச் சேமியுங்கள்.
கேள்வி:
தந்தை உங்களுக்குக் கற்பிக்கும் கல்வியில், உங்களுக்குக் கற்பிக்கப்படாதது என்ன?பதில்:
மாயாஜால சக்தி உங்களுக்குக் கற்பிக்கப்படுவதில்லை. ஒருவரின் மனதிலுள்ள எண்ணங்களைத் தெரிந்து கொள்ளுதலே மாயாஜால சக்தியாகும். அந்த ஞானம் உங்களுக்குக் கற்பிக்கப்படுவதில்லை. தந்தை எண்ணங்களை அறிந்து கொள்பவரல்ல. அவர் ஜனிஜனன்ஹார் (அனைத்து இரகசியங்களையும் அறிந்தவர்) என்று அழைக்கப்படுகிறார். அதாவது அவர் ஞானம் நிறைந்தவராவார். இந்த ஆன்மீகக் கல்வியை உங்களுக்குக் கற்பிப்பதற்காகத் தந்தை வருகிறார். அதன் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கு உலக இராச்சியத்தைக் கோருகின்றீர்கள்.ஓம் சாந்தி.
ஆத்மாக்களும், பரமாத்மாவும் நீண்ட காலமாகப் பிரிந்திருந்தார்கள் என்று பாரத மக்கள் பாரதத்தில் பாடுகிறார்கள். ஆத்மாக்களாகிய எங்களுடைய தந்தையான, பரமாத்மா பரமதந்தை எங்களுக்கு இப்போது இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் தனது சொந்த அறிமுகத்தைக் கொடுப்பதுடன், உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி இறுதியின் அறிமுகத்தையும் எங்களுக்குக் கொடுக்கிறார். சிலர் புத்தியில் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள். எனினும் ஏனையோர் மிகக் குறைவாகவே புரிந்து கொள்கிறார்கள். அது வரிசைக்கிரமமாகும். நீங்கள் உயிர் வாழ்பவர்கள் என்பதும், பரமதந்தை, பரமாத்மாவிற்கு முன்னால் நீங்கள் நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்களும், பரமாத்மாவும் நீண்டகாலம் பிரிந்திருந்தார்கள் என்று பாடப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் அசரீரி உலகிலிருந்த போது, தந்தையிடம் இருந்து பிரிந்திருந்தார்கள் என்ற கேள்விக்கு இடமில்லை. இங்கு வந்து, ஜீவாத்மாக்கள் ஆகும்போதே (ஒரு சரீரத்தை எடுக்கும்போதே) அவர்கள் தந்தையான பரமாத்மாவிடம் இருந்து பிரிகிறார்கள். அவர்கள் பரமாத்மாவான பரமதந்தையிடம் இருந்து பிரிந்து, தங்களுடைய பாகத்தை நடிப்பதற்காக இங்கு வருகிறார்கள். முன்னர், இதன் அர்த்தம் புரியாமலே நீங்கள் இவ்வாறு பாடினீர்கள். தந்தை இப்போது இங்கமர்ந்திருந்து, அவை அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். நீங்கள் பரமாத்மாவான பரமதந்தையிடம் இருந்து பிரிந்து, உங்கள் பாகங்களை நடிப்பதற்காக இங்கு வருகின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்களே முதன் முதலில் பிரிந்தவர்கள். ஆகவே சிவபாபா முதன்முதலில் உங்களைச் சந்திக்கிறார். தந்தை உங்களுக்காக வரவேண்டியுள்ளது. முன்னைய கல்பத்திலும் அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பித்தார். பின்னர் நீங்கள் உலக அதிபதிகள் ஆகினீர்கள். அந்த நேரத்தில் வேறு எத்தேசமும் இருக்கவில்லை. நீங்கள் ஆதிசனாதன தேவதர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அது தேவதர்மமென்றும், தேவர்களின் வம்சமென்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கென சொந்த தர்மம் உள்ளது. “தர்மமே சக்தியாகும்.” என்றும் கூறப்படுகின்றது. தர்மத்தில் சக்தியுள்ளது. இலக்ஷ்மியும், நாராயணனும் எந்தளவு சக்தியைக் கொண்டிருந்தார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பாரதத்திலுள்ள மக்களுக்குத் தங்களுடைய சொந்த தர்மத்தைப் பற்றித் தெரியாது. அதுவே பாரதத்தின் தமது உண்மையான தர்மம் என்பது அவர்கள் எவரது புத்தியிலும் புகுவதில்லை. அவர்கள் தமது சொந்தத் தர்மத்தையும் அறியாதிருப்பதால், அவர்கள் அதர்மம் நிறைந்தவர்கள் ஆகிவிட்டார்கள். நீங்கள் உங்கள் சொந்த தர்மத்திற்கு வந்திருப்பதால், உங்களிடம் அதிகளவு பலம் உள்ளது, எனவே நீங்கள் கலியுக மலையைப் பெயர்த்து, சத்தியயுக மலையாக மாற்றுகின்றீர்கள். நீங்கள் பாரதத்தை ஓர் தங்க மலையாக ஆக்குகிறீர்கள். அங்கு, சுரங்கங்கள் தங்கத்தினால் நிறைந்துள்ளன. அங்கு தங்க மலைகள் உள்ளன. அவை பின்னர் பிளக்கின்றன. தங்கம் உருக்கப்பட்டு, அவை தங்கக் கட்டிகள் ஆக்கப்படுகின்றன. பெரிய தங்கக் கட்டிகளினால் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. பூனையான மாயையைப் பற்றிய நாடகம் இங்கு காட்டப்படுகிறது. அவை அனைத்தும் கதைகளாகும். தந்தை கூறுகிறார்: நான் அவை அனைத்தினது சாரம்சத்தையும் உங்களுக்குக் கூறுகிறேன். ஒருவர் எவ்வாறு திரான்ஸில் சென்று தனது மடியில் தங்கத்தைக் கொண்டு வரலாம் என்று நினைக்கின்றாரென அவர்கள் காட்டுகின்றார்கள். எவ்வாறாயினும் அவர் திரான்ஸிலிருந்து மீளும் போது அங்கு எதுவுமிருக்காது. உங்களுக்கும் அவ்வாறே நடக்கிறது. அது தெய்வீகக் காட்சி என்று அழைக்கப்படுகிறது. அதிலிருந்து எதுவும் பெறப்படுவதில்லை. பலர் தீவிர பக்தி செய்கிறார்கள். அந்த பக்தி மாலை இந்த ஞான மாலையிலிருந்து வேறுபட்டதாகும். உருத்திரனினதும், விஷ்ணுவினதும் மாலைகளும் உள்ளன. பின்னர் அவை பக்தி மாலையாகின்றன. இப்போது நீங்கள் ஓர் இராச்சியத்திற்காகக் கற்கின்றீர்கள். உங்களுடைய புத்தியின் யோகம் ஆசிரியருடனும், இராச்சியத்துடனும் உள்ளது. நீங்கள் ஒரு கல்லூரியில் கற்கும்போது உங்களுடைய புத்தியின் யோகம் ஆசிரியருடன் இருக்கிறது. ஒரு சட்டநிபுணர் உங்களுக்குக் கற்பித்து, உங்களைத் தனக்கு நிகர் ஆக்குகின்றார். எவ்வாறாயினும், பாபா எங்களை எவ்வாறு ஆக்குகின்றாரோ, அவ்வாறு தான் ஆகுவதில்லை என்பதே இங்குள்ள அற்புதமாகும். இது உங்களுடைய ஆன்மீகக் கல்வியாகும். உங்களுடைய புத்தியின் யோகம் சிவபாபாவுடன் உள்ளது. அவர் மாத்திரமே ஞானம் நிறைந்த ஒருவரென்றும், ஞானக் கடலென்று அழைக்கப்படுகிறார். ஜனின்ஜனன்ஹார் என்பதன் அர்த்தம், அவர் ஒவ்வொருவருடைய இதயத்திலும் என்ன உள்ளது என்பதையும், ஒவ்வொருவருக்குள்ளும் என்ன நடக்கின்றது என்பதையும் அறிந்து கொள்கிறார் என்பதல்ல. மற்றவர்களின் எண்ணங்களை ஊகித்து அறிபவர்களே உங்களுக்கு அவற்றைக் கூறுகின்றார்கள். அது மாயாஜால சக்தி பற்றிய அறிவு என்று அழைக்கப்படுகிறது. இங்கு உங்களைச் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுவதற்குத் தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். ‘மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு அதிக காலம் எடுக்கவில்லை’ என்றொரு பாடலும் உண்டு. இப்பொழுது நீங்கள் பிராமணர்கள் என்பதையும்;, உங்களுடைய அடுத்த பிறவியில் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள் என்பதையும்; குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். ஆதிசனாதன தேவதேவியர்கள் நினைவு கூரப்படுகிறனர். சமய நூல்களில் அவர்களையிட்டுப் பல கதைகள் எழுதப்பட்டுள்ளன. தந்தை இங்கமர்ந்திருந்து, நேரடியாக உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். கடவுள் பேசுகிறார்: கடவுள் மாத்திமே ஞானக் கடலும், சந்தோஷக் கடலும், அமைதிக் கடலும் ஆவார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு உங்களுடைய ஆஸ்தியைத் தருகிறார். இந்தக் கல்வி உங்களுடைய எதிர்கால 21 பிறவிகளுக்கானது. ஆகவே நீங்கள் மிக நன்றாகக் கற்கவேண்டும். உங்களுக்கு இந்த ஆன்மீகக் கல்வியைக் கற்பித்து, புதிய உலகை ஸ்தாபிப்பதற்காகத் தந்தை சக்கரத்தில் ஒரு தடவை மாத்திரமே வருகிறார். புதிய உலகில் தேவர்களின் இராச்சியமே உள்ளது. தந்தை கூறுகிறார்: நான் பிரம்மாவின் மூலம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபிக்கிறேன். இந்த தர்மம் இருந்தபோது வேறு எந்தச் சமயங்களும் இருக்கவில்லை. இப்போது ஏனைய அனைத்துச் சமயங்களும் உள்ளன. இதனாலேயே நீங்கள் திரிமூர்த்தி படத்தை விளங்கப்படுத்தும்போது, இந்த ஒரு தர்மம் பிரம்மா மூலம் ஸ்தாபிக்கப்படுகிறது என்பதை விளங்கப்படுத்த வேண்டும். அந்த தர்மம் இப்போது இல்லை. ‘நான் நற்குணங்களின்றி இருக்கிறேன்! என்னிடம் நற்குணங்கள் இல்லை! ஆகவே என்மீது கருணை காட்டுங்கள்! என்னிடம் நற்குணங்கள் இல்லை!’ என்றெல்லாம் அவர்கள் பாடுகின்றார்கள். அவர்கள் இதனைப் பாடும்போது அவர்களின் புத்தி தந்தையாகிய கடவுளிடம் செல்கிறது. ‘அவர் கருணை நிறைந்த ஒருவர்’ என்று அழைக்கப்படுகிறார். குழந்தைகளின் துன்பங்கள் அனைத்தையும் அழித்து, அவர்களுக்கு நூறு வீதம் சந்தோஷத்தைக் கொடுப்பதற்காகத் தந்தை வருகிறார். அவரிடம் அந்தளவு கருணையுள்ளது! நீங்கள் தந்தையிடம் வந்துள்ளதால், நீங்கள் அவரிடமிருந்து முழுமையான சந்தோஷத்தையும் பெறவேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அது சந்தோஷ தாமமாகும். இது துன்ப பூமியாகும். நீங்கள் இந்தச் சக்கரத்தை மிக நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். மௌன தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்தால், உங்களுடைய இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். நீங்கள் மௌன தாமத்தை நினைவு செய்தால், நீங்கள் நிச்சயமாக உங்களுடைய சரீரத்தை விட்டு நீங்க வேண்டும். ஆத்மாக்கள் மௌன தாமத்திற்குத் திரும்புவார்கள். தந்தை ஒருவருடைய நினைவைத் தவிர வேறு எவருடைய நினைவும் இருக்கக்கூடாது. உங்களுடைய புத்தியின் இணைப்பு முற்றாகத் தெளிவாக இருக்க வேண்டும். தந்தை ஒருவரை நினைவு செய்வதன் மூலம் உங்களுக்குள் உள்ள சந்தோஷத்தின் பாதரசம் அதிகரிக்கும். இந்தப் பழைய உலகில் சந்தோஷமானது கணநேரத்திற்கு உரியது. அது உங்களுடன் வராது. அழியாத ஞான இரத்தினங்களே உங்களுடன் வரும். அதாவது அழியாத ஞான இரத்தினங்களின் வருமானத்தையே நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்கின்றீர்கள். இதன் பலனை நீங்கள் 21 பிறவிகளுக்கு அனுபவம் செய்வீர்கள். ஆம், அழியக்கூடிய செல்வமும் கூட தந்தைக்கு உதவி செய்பவர்களுடன் செல்லும். “பாபா, இந்தச் சிப்பிகளை எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டு, அதற்கு ஈடாக அங்கு எங்களுக்கு மாளிகைகளைத் தாருங்கள்”. சிப்பிகளுக்குப் பதிலாகத் தந்தை ஏராளமான இரத்தினங்களைத் தருகிறார். அமெரிக்கர்கள் புராதன பொருட்களுக்காக அதிகளவு பணத்தைச் செலவழிக்கிறார்கள். மக்கள் புராதன பொருட்களுக்கு அதிகளவு பணம் அறவிடுகின்றார்கள். அவர்கள் அமெரிக்கர்களிடம் ஒரு சதப் பெறுமதியான ஒன்றிற்கு, ஆயிரக்கணக்கான ரூபாய்களை வாங்குகிறார்கள். பாபாவும் ஒரு சிறந்த வாடிக்கையாளர். அவர் அப்பாவியான பிரபு என்று நினைவுகூரப்படுகிறார். மக்களுக்கு இது தெரியாது. அவர்களும் சிவனும் சங்கரனும் ஒன்றெனக் கருதி, ‘எங்களுடைய மடிகளை நிரப்புங்கள்!” என்று கூறுகிறார்கள். இப்பொழுது நீங்கள் ஞான இரத்தினங்களைப் பெற்று, உங்களுடைய புத்திகளை அவற்றால் நிரப்புகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவரே எல்லையற்ற தந்தை ஆவார். அவர் கசப்பான மலர்களை உட்கொண்டார் என்றும், போதை தரக்கூடிய பானத்தைப் பருகினாரென்றும் கூறும்போது மக்கள் சங்கரையே குறிக்கிறார்கள். அவர்கள் அமர்ந்திருந்து, பல்வேறு கதைகளை உருவாக்கி உள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது சத்கதிக்காகக் கற்கின்றீர்கள். இந்தக் கல்வி முழுமையான மௌனத்தில் நிலைத்திருப்பதற்கே ஆகும். நீங்கள் இந்த விளக்குகள் அனைத்தையும் ஏற்றி, காட்சிக்கு வையுங்கள். அப்போது மக்கள் வந்து, ஏன் சிவஜெயந்தியை இவ்வளவு கோலாகலமாகக் கொண்டாடுகிறீர்களென உங்களிடம் கேட்கலாம். சிவன் மாத்திரமே பாரதத்தைச் செல்வம் கொழிக்கச் செய்கிறார். இலக்ஷ்மி நாராயணனைச் சுவர்க்கத்திற்கு அதிபதிகள் ஆக்கியவர் யார்? உங்களுக்கு இது தெரியும். இலக்ஷ்மியும் நாராயணனும் முன்னைய பிறவியில் யாராக இருந்தார்கள்? இலக்ஷ்மி முன்னைய பிறவியில் உலக மாதாவாக, ஜெகதாம்பாளாக, ஞான சொரூபியாக இருந்தார். பின்னர் அவர் அந்த அரசகுமாரி ஆகினார். ஆகவே யாருடைய அந்தஸ்து உயர்ந்தது? பார்வைக்கு, இலக்ஷ்மி சுவர்க்கத்தின் அதிபதியாக உள்ளார். ஜெகதாம்பாள் எங்கு அதிபதியாக இருக்கிறார்? மக்கள் ஏன் அவரிடம் செல்கிறார்கள்? பிரம்மா நூறு, இருநூறு, அல்லது ஆயிரம் கரங்களுடன் சித்தரிக்கப்பட்டு உள்ளார்.குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, கரங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. பெண் தெய்வமான ஜெகதாம்பாளுக்கு இலக்ஷ்மியை விட அதிகளவான கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் அவரிடம் சென்று, அனைத்தையும் கேட்கிறார்கள். அவர்கள் ஒரு குழந்தை வேண்டும், இது வேண்டும் எனப் பல ஆசைகளுடன் அவரிடம் செல்கிறார்கள். இலக்ஷ்மியின் விக்கிரகத்திற்கு முன்னே செல்லும்போது அவர்கள் இவ்வாறான ஆசைகளுடன் ஒருபோதும் செல்வதில்லை. அவரிடம் அதிக செல்வம் மாத்திரமே உள்ளது. நீங்கள் உங்களுடைய சுவர்க்கம் என்ற இராச்சியத்தை ஜெகதாம்பாள் மூலம் பெறுகிறீர்கள். எவ்வாறாயினும் ஜெகதாம்பாளிடம் எதனைக் கேட்க வேண்டும் என்பது எவருக்கும் தெரியாது. இது ஒரு கல்வியாகும். ஜெகதாம்பாள் உங்களுக்கு என்ன கற்பிக்கிறார்? இராஜயோகம். இதுவே புத்தியின் யோகம் என அழைக்கப்படுகின்றது. உங்களுடைய புத்தியின் யோகம் ஏனைய திசைகளிலும் இருந்து அகற்றப்பட்டு, தந்தை ஒருவருடனேயே தொடர்பு கொள்கின்றது. சாதாரணமாக, புத்தி பல திசைகளிலும் செல்கிறது. தந்தை இப்போது கூறுகிறார்: உங்களுடைய புத்தியின் யோகத்தை என்னுடன் இணையுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் உங்களுடைய பாவங்கள் அழிய மாட்டாது. இதனாலேயே பாபா நீங்கள் புகைப்படம் எடுப்பதைத் தடைசெய்கிறார். இந்த சரீரம் இருவருக்கு உரியது. தந்தை தானே ஒரு முகவராகிக் கூறுகிறார்: உங்களுடைய அந்த ஒப்பந்தம் இப்பொழுது இரத்துச் செய்யப்பட்டுள்ளது. காமச் சிதையிலிருந்து இறங்கி, இந்த ஞானச் சிதையில் அமருங்கள். காமச் சிதையிலிருந்து இறங்குங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உங்களுடைய தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். உங்களுடைய பாவங்கள் அழிந்துவிடும். வேறு எந்த மனிதராலும் இதனைக் கூறமுடியாது. மனிதர்களைக் கடவுளென அழைக்க முடியாது. தந்தையே தூய்மையாக்குபவர் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் எங்களைக் காமச் சிதையிலிருந்து இறக்கி, இந்த ஞானச் சிதையில் அமரச் செய்கிறார். அவர் ஆன்மீகத் தந்தை ஆவார். அவர் இவருக்குள் அமர்ந்திருந்து கூறுகிறார்: நீங்களும் ஓர் ஆத்மா. தொடர்ந்து இதனை மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள். தந்தை கூறுகிறார்: மன்மனாபவ! மன்மனாபவ என்று கூறும்போது உங்களுடைய விழிப்புணர்வு விழிப்படைகிறது. இந்தப் பழைய உலகின் விநாசம் உங்கள் முன்னால் நிற்கிறது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: அதுவே மகாபாரதப் போராகும். அப்போது மக்கள் கூறுகிறார்கள்: வெளிநாடுகளிலும் யுத்தங்கள் நடைபெறுகின்றன. ஏன் அது மட்டுமே மகாபாரதப் போரென அழைக்கப்படுகிறது? இந்த யாகம் பாரதத்தில் மாத்திரமே உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் மாத்திரமே விநாசத்தின் சுவாலைகள் வெளிப்படும். உங்களுக்கு ஒரு புதிய உலகம் தேவை. ஆகவே இனிய குழந்தைகளே, பழைய உலகம் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். இங்குள்ள வேர்கள் மூலம் அந்தப் போர் வெளிப்படும். மகாபாரதப் போரின் அழிவுச் சுவாலைகள் இந்த ஞானம் என்ற இந்த யாகத் தீயிலிருந்து வெளிப்பட்டது. சமய நூல்களில் இவை அனைத்தும் எழுதப்பட்டிருந்தும், அதனை யார் கூறியதென்பது எவருக்கும் தெரியாது. தந்தை இப்போது புதிய உலகிற்காக உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இப்போது நீங்கள் ஓர் இராச்சியத்தைக் கோருகிறீர்கள். நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். உங்களுடைய இராச்சியத்தில் வேறு எவரும் இருக்கக்கூடாது. அசுர உலகம் அழிக்கப்படுகிறது. நேற்று நீங்கள் உலகை ஆட்சி செய்தீர்கள் என்பதை உங்களுடைய புத்தி நினைவு செய்யட்டும். தந்தை உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுத்தார். பின்னர் நீங்கள் உங்களுடைய 84 பிறவிகளை எடுத்தீர்கள். தந்தை இப்போது மீண்டும் ஒருமுறை வந்துள்ளார். குழந்தைகளாகிய உங்களிடம் இந்த ஞானம் உள்ளது. தந்தை உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்துள்ளார். தேவ தர்மம் ஸ்தாபிக்கப்படும்போது, முழு அசுர உலகமும் அழிக்கப்படுகிறது. தந்தை இங்கமர்ந்திருந்து, இவ்விடயங்கள் அனைத்தையும் பிரம்மா மூலம் விளங்கப்படுத்துகிறார். பிரம்மாவும் சிவனின் ஓர் குழந்தையாவார். விஷ்ணுவின் முக்கியத்துவமும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பிரம்மா, விஷ்ணு ஆகிறார். விஷ்ணு, பிரம்மா ஆகிறார். இப்போது நீங்கள் பிராமணர்கள் என்பதையும், பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள் என்பதையும், பின்னர் 84 பிறவிகளை எடுப்பீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை ஒருவர் மத்திரமே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். ஆகவே, எவ்வாறு உங்களால் இந்த ஞானத்தை ஒரு மனிதரிடமிருந்து பெற முடியும்? இவை அனைத்தும் புத்தியின் கேள்விகளாகும். தந்தை கூறுகிறார்: உங்களுடைய புத்தியை ஏனைய அனைத்து திசைகளிலிருந்தும் நீக்குங்கள். புத்தியே சீரழிகின்றது. தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள். உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் தொடர்ந்து உங்களுடைய குடும்பத்துடன் வாழலாம். உங்களுடைய இலக்கும், இலட்சியமும்; உங்கள் முன்னிலையில் உள்ளது. கற்பதன் மூலம் நீங்கள் என்ன ஆகுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சங்கம யுகத்திலேயே நீங்கள் கற்கின்றீர்கள். தற்போது நீங்கள் இந்தப் பக்கத்திலும் இல்லை, அந்தப் பக்கத்திலும் இல்லை. நீங்கள் வெளியில் இருக்கிறீர்கள். தந்தை படகோட்டி என்றும் அழைக்கப்படுகிறார். மக்கள் பாடுகிறார்கள்: எங்களுடைய படகை அக்கரைக்கு இட்டுச் செல்லுங்கள். இதனையிட்டு ஒரு கதையும் உள்ளது. சிலர் தொடர்ந்து பிரயாணம் செய்கிறார்கள். ஆனால் மற்றவர்களோ அங்கு நின்றுவிடுகிறார்கள். தந்தை இப்போது கூறுகிறார்: நான் இங்கே அமர்ந்திருந்து, பிரம்மாவின் வாய் மூலம் உங்களுடன் பேசுகிறேன். பிரம்மா எங்கிருந்து வந்தார்? மக்களின் தந்தையும் (பிரஜாபிதா) நிச்சயமாக இங்கு தேவைப்படுகிறார். நான் அவரைத் தத்தெடுத்து, அவருக்கு ஒரு பெயரைச் சூட்டுகிறேன். நீங்கள் பிராமணர்கள். பிரம்மாவின் வாய்வழிக் குழந்தைகள். இப்போது நீங்கள் கலியுகத்தின் இறுதியில் இருக்கிறீர்கள். சத்திய யுகத்தின் ஆரம்பத்திற்குச் செல்ல இருக்கிறீர்கள். நீங்களே முதலில் தந்தையிடமிருந்து பிரிந்து, உங்களுடைய பாகத்தை நடிப்பதற்காக இங்கு இறங்கி வந்தீர்கள். உங்களுக்கு இடையேயும் எல்லோரும் இதனைக் கூறமாட்டீர்கள். யார் முழுதாக 84 பிறவிகளையும் எடுக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இலக்ஷ்மி நாராயணனுக்கு இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பற்றி இவ்வாறு பாடப்படுகிறது: அவலட்சணத்தில் இருந்து அழகானவர்கள் ஆகுகிறார்கள். தேவர்கள் அழகானவர்களாக இருந்தார்கள். அவலட்சணமாக இருந்த அவர்கள் அழகானவர்கள் ஆகினார்கள். அவர் ஒரு கிராம சிறுவனிலிருந்து அழகிய இராஜகுமாரனாக மாறுகிறார். தற்போது அனைவரும் கிராமத்துச் சிறுவர்கள். இது எல்லைக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகும். எவருக்கும் இது தெரியாது. உங்களுக்கு அத்தகைய சிறந்த விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. அனைவருக்கும் ஒரேயொரு சத்திரசிகிச்சை நிபுணரே இருக்கிறார். அவரே அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர் ஆவார். இந்த ஞானத்தின் மூலமே ஆத்மாவிலுள்ள மாசு நீக்கப்படுவதாலேயே இந்த யோகம், அக்கினி என்று அழைக்கப்படுகிறது. யோக அக்கினியின் மூலமே தமோபிரதான் ஆத்மாக்கள் சதோபிரதான் ஆகுகிறார்கள். அக்கினி குளிர்மை அடைந்தால், மாசு நீக்கப்பட முடியாது. நினைவே யோக அக்கினி என்று அழைக்கப்படுகிறது. அதன் மூலம் உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படுகின்றன. ஆகவே தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்குத் தொடர்ந்து அதிகளவு விளங்கப்படுத்துகிறேன். நீங்களும் அதனைக் கிரகிக்கவேண்டும். நல்லது. மன்மனாபவ! இதனையிட்டுக் களைப்பு அடையாதீர்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்வதைக்கூட மறந்து விடுகிறீர்கள். கணவருக்கெல்லாம், கணவரானவர் உங்களை ஞானத்தால் மிக அழகாக அலங்கரிக்கிறார். அசரீரியான தந்தை கூறுகிறார்: ஏனைய அனைவரிடம் இருந்தும் உங்களுடைய புத்தியின் யோகத்தைத் துண்டித்து, உங்களுடைய தந்தையான என்னை நினைவு செய்யுங்கள். அனைவருடைய தந்தையும் ஒருவரே. இப்போது இது உங்களுடைய ஏறும் ஸ்திதியாகும். ‘உங்களால் அனைவரும் நன்மை அடைகிறார்கள்’ என்று கூறப்படுகின்றது. அனைவருக்கும் நன்மை அளிப்பதற்காகத் தந்தை வந்துள்ளார். இராவணன் அனைவரையும் சீரழிவடையச் செய்கின்றான், இராமரோ அனைவரையும் சத்கதிக்கு அழைத்துச் செல்கிறார். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் அன்பான நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்வதற்கு, நீங்கள் உங்களுடைய புத்தியின் இணைப்பைத் தெளிவாக வைத்திருக்க வேண்டும். அக்கினி வடிவில் நினைவைக் கொண்டிருக்கும்போது ஆத்மாக்கள் சதோபிரதான் ஆகுகிறார்கள்.2. உங்களுடைய சிப்பிகளுக்குப் பதிலாக, தந்தை உங்களுக்கு இரத்தினங்களைக் கொடுக்கின்றார். அத்தகைய அப்பாவிப் பிரபுவிடமிருந்து உங்களுடைய மடியை நிரப்புங்கள். மௌனமாக இருத்தல் என்ற கல்வியைக் கற்பதன் மூலம் சத்கதியை அடையுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் யோகியுக்த் ஆகி, பந்தனத்தில் இருந்து விடுபடுவதுடன் சதா பொறுப்புக்களின் பந்தனத்தில் இருந்தும் மாயையிடம் இருந்தும் விடுபட்டு இருப்பீர்களாக.பந்தனத்தில் இருந்து விடுபட்டிருப்பதன் அடையாளம், சதா யோகியுக்தாக இருப்பதாகும். யோகியுக்த் குழந்தைகள் பொறுப்புக்களின் எந்தவிதமான பந்தனத்தில் இருந்தும் மாயையில் இருந்தும் விடுபட்டிருப்பார்கள். மனதின் எந்தவிதமான பந்தனமும் இருக்கக்கூடாது. உலகப் பொறுப்புக்கள் ஒரு விளையாட்டே. எனவே, நீங்கள் இந்த விளையாட்டை வழிகாட்டல்களுக்கேற்ப சந்தோஷமாக விளையாட வேண்டும். அப்போது அற்ப விடயங்களால் நீங்கள் ஒருபோதும் களைப்படைய மாட்டீர்கள். நீங்கள் அதை ஒரு பந்தனமாகக் கருதினால், மனவிரக்தி அடைந்து, ‘என்ன? ஏன்?’ என்ற கேள்விகள் உங்களுக்குள் தோன்றும். எவ்வாறாயினும், தந்தையே பொறுப்பானவர். நீங்கள் வெறும் கருவிகளே. இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் பந்தனத்தில் இருந்து விடுபடுங்கள். நீங்கள் யோகியுக்த் ஆகுவீர்கள்.
சுலோகம்:
கரன்கரவன்ஹார் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் அகங்காரத்தினதும் ஆணவத்தினதும் உணர்வை முடித்துவிடுங்கள்.அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.
தூய்மையின்மை என்பது எவருக்கும் துன்பம் கொடுப்பதோ அல்லது பாவம் செய்வதோ அல்ல. ஆனால், தூய்மை என்பது உங்களுக்குள் ஒழுங்குமுறையுடன் சத்தியத்தையும் சுத்தத்தையும் அனுபவம் செய்வதாகும். சத்தியப் படகு ஆடும், ஆனால் அமிழாது என்ற கூற்று உள்ளதைப் போல், நம்பிக்கைப் படகானது சத்தியமும் நேர்மையும் ஆகும். இது ஆடக்கூடும், ஆனால் அமிழாது. ஆகவே, சத்தியத்தின் தைரியத்துடன் இறைவனை வெளிப்படுத்துவதற்கான கருவி ஆகுங்கள்.