20.04.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 18.01.2005 Om Shanti Madhuban
ஒரு விநாடியில் சரீர உணர்வில் இருந்து விடுபட்டு, ஜீவன்முக்தி ஸ்திதியை அனுபவம் செய்வதன் மூலம் உங்களால் மாஸ்ரர் முக்தி மற்றும் ஜீவன்முக்தியை அருள்பவர் ஆக முடியும்.
இன்று, பாப்தாதா எங்கும் உள்ள தனது அதிர்ஷ்டமான, அன்பான குழந்தைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு குழந்தையும் அன்பிலே திளைத்திருக்கிறார். இந்த இறையன்பானது ஆன்மீக அன்பாகும். இந்த அன்பே, குழந்தைகளான உங்களைத் தந்தைக்குச் சொந்தமானவர்கள் ஆக்கியது. அன்பே உங்களை இலகுவாக வெற்றியாளர் ஆக்கியது. இன்று, அமிர்தவேளையில் இருந்து, ஒவ்வொரு குழந்தையும் தந்தைக்கு அன்பு மாலையைச் சூட்டினார்கள். ஏனென்றால், இறைவனின் அன்பானது குழந்தைகளான உங்களை நீங்கள் எப்படி இருந்தீர்களோ அப்படி ஆக்கும் என்பதை அறிவீர்கள். அன்பின் அனுபவம் எத்தகையது என்றால் அது உங்களை இறைவனின் பல பொக்கிஷங்களுக்கு அதிபதி ஆக்குகிறது. தந்தை குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் இறை பொக்கிஷங்கள் அனைத்தினதும் தங்கச் சாவியை வழங்கியுள்ளார். அந்தத் தங்கச் சாவி என்னவென்று உங்களுக்குத் தெரியும்தானே? ‘எனது பாபா’ என்பதே இந்தத் தங்கச் சாவி ஆகும். ‘எனது பாபா’ என நீங்கள் சொன்னவுடனேயே, நீங்கள் சகல பொக்கிஷங்களின் உரிமையையும் பெறுகிறீர்கள். உங்களுக்குச் சகல பேறுகளினதும் முழுமையான உரிமை உள்ளது. நீங்கள் சகல சக்திகளால் சக்திவாய்ந்தவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான் ஆத்மாக்கள் ஆகுகிறீர்கள். இத்தகைய சம்பூரணமான ஆத்மாக்களின் இதயங்களில் என்ன பாடல் வெளிப்படுகிறது? பிராமணர்களான எங்களின் பொக்கிஷக் களஞ்சியத்தில் எந்தவிதக் குறைவும் இல்லை.
இன்று, நினைவு தினம் என்று அழைக்கப்படுகிறது. இன்று, குழந்தைகள் எல்லோரும் குறிப்பாக ஆதிதேவ் தந்தை பிரம்மாவை அதிகளவில் நினைவு செய்கிறார்கள். பிராமணக் குழந்தைகளான உங்களைப் பார்ப்பதில் தந்தை பிரம்மா மகிழ்ச்சி அடைகிறார். ஏன்? ஒவ்வொரு பிராமணக் குழந்தையும் மில்லியன்களில் ஒருவரான பாக்கியசாலிக் குழந்தை ஆவார். உங்களின் பாக்கியத்தை நீங்கள் அறிவீர்கள்தானே? ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் ஒரு பாக்கிய நட்சத்திரம் ஜொலிப்பதைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். இந்த நினைவு நாளில், பாப்தாதா குழந்தைகளான உங்களுக்குக் குறிப்பாக உலக சேவையின் பொறுப்புக் கிரிடத்தை வழங்கினார். எனவே, இந்த நினைவு நாளே குழந்தைகளான உங்களின் முடிசூட்டு விழாவிற்கான தினம் ஆகும். இது குறிப்பாக பௌதீக ரூபத்தில் குழந்தைகளுக்கு அக சக்திகளை விரும்பி அளித்த நாள் ஆகும். இது, ‘மகன் தந்தையைக் காட்டுகிறார்’ எனக் கூறுவதை நடைமுறை வடிவில் இடுவதற்கான நாள் ஆகும். குழந்தைகள் கருவிகளாகி, தன்னலமற்ற முறையில் உலகச் சேவை செய்வதைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். கரன்கரவன்ஹாராக இருந்தவண்ணம், கரன்ஹார் குழந்தைகளின் ஒவ்வோர் அடியையும் பார்ப்பதில் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். ஏனென்றால், சேவையில் வெற்றி பெறுவதற்கான பிரதானமான அடிப்படை என்னவென்றால், ‘கரவன்ஹார் தந்தை, கரன்ஹார் ஆத்மாவான என்னைச் செய்ய வைக்கிறார். இந்த ஆத்மாவான நான், ஒரு கருவி ஆவேன்’ என்பதாகும். இது ஏனென்றால், கருவியாக இருக்கும் உணர்வுடன் நீங்கள் இயல்பாகவே பணிவாக இருக்கும் ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள். உங்களை இயல்பாகவே சரீர உணர்விற்குள் அழைத்து வருகின்ற ‘நான்’ என்ற உணர்வானது, கருவி என்ற உணர்வினால் முடிவடையும். இந்த பிராமண வாழ்க்கையில், ‘நான்’ என்ற இந்த சரீர உணர்வே மிகப்பெரிய தடையை உருவாக்குகிறது. ‘கரவன்ஹார் என்னைச் செய்ய வைக்கிறார், கரன்ஹாரான, கருவியான நான் அதைச் செய்கிறேன்’ என்ற அனுபவத்தை நீங்கள் கொண்டிருக்கும்போது, இலகுவாக உங்களால் சரீர உணர்வில் இருந்து விடுபட முடியும். நீங்களும் ஜீவன்முக்தி வாழ்க்கையின் மகிழ்ச்சியை அனுபவம் செய்வீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் எப்படியும் ஜீவன்முக்தியைப் பெறத்தான் போகிறீர்கள். ஆனால் இப்போது, சங்கமயுகத்தில், சங்கமயுகத்தின் அலௌகீக ஆனந்தம் உண்மையில் அலௌகீகமானது. உதாரணமாக, நீங்கள் தந்தை பிரம்மாவைக் கண்டீர்கள்: செயல்களைச் செய்யும்போது, அவர் செயலின் பந்தனத்திற்கு அப்பாற்பட்டிருந்தார். அவரின் வாழ்க்கையில் அவர் ஒரு தாமரையைப் போல், பற்றற்றவராகவும் அன்பானவராகவும் இருந்தார். பெரியதொரு குடும்பத்தின் பொறுப்பைக் கொண்டிருந்தபோதும், உங்களை யோகிகளாகவும் பின்னர் தேவதைகளாகவும் பின்னர் தேவர்களாகவும் ஆக்குகின்ற பெரும் பொறுப்பைக் கொண்டிருந்த போதிலும் அவர் கவலையற்ற சக்கரவர்த்தியாகவே இருந்தார். இதுவே ஜீவன்முக்தி ஸ்திதி எனப்படுகிறது. இதனாலேயே, பக்தி மார்க்கத்தில், அவர்கள் தாமரை மலரை பிரம்மாவின் ஆசனமாகக் காட்டியுள்ளார்கள். அவர் ஒரு தாமரையின் மீது வீற்றிருப்பதாகக் காட்டியுள்ளார்கள். எனவே, குழந்தைகளான நீங்கள் எல்லோரும் சங்கமயுகத்தில் ஜீவன்முக்தியை அனுபவம் செய்ய வேண்டும். இந்த வேளையில் மட்டுமே நீங்கள் பாப்தாதாவிடம் இருந்து முக்தி மற்றும் ஜீவன்முக்திக்கான ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். இந்த வேளையிலேயே நீங்கள் மாஸ்ரர் முக்தி மற்றும் ஜீவன்முக்தியை அருள்பவர்கள் ஆகவேண்டும். நீங்கள் இப்படி ஆகியுள்ளீர்கள். நீங்கள் இப்படி ஆகவேண்டும். முக்தியையும் ஜீவன்முக்தியையும் அருள்பவராக ஆகுவதற்கான வழிமுறை, ஒரு விநாடியில் சரீர உணர்வில் இருந்து விடுபட்டு இருப்பதாகும். இந்தப் பயிற்சி இப்போது அவசியம். நீங்கள் விரும்பும்போது உங்களின் கைகள், கால்கள் போன்ற பௌதீக அங்கங்களை உங்களால் கட்டுப்படுத்தக் கூடியதாக இருப்பதைப் போல், உங்களின் மனதிலும் அந்தளவு கட்டுப்படுத்தும் சக்தி இருக்க வேண்டும். அதற்கு நேரம் எடுக்குமா? உங்களின் கையை உயர்த்த வேண்டும் என நீங்கள் நினைக்கும்போது, அதற்கு ஏதாவது நேரம் எடுக்குமா? உங்களால் அதைச் செய்ய முடியும்தானே? இப்போது உங்களின் கைகளை உயர்த்தும்படி பாப்தாதா உங்களிடம் கேட்டால், உங்களால் அதைச் செய்ய முடியும்தானே? அதை இப்போது செய்யாதீர்கள், ஆனால் உங்களால் அதைச் செய்ய முடியும். அதேபோல், நீங்கள் விரும்பும் இடத்தில் உங்களால் ஒருமுகப்படுத்தக்கூடிய வகையில் உங்களின் மனதின் மீது அதிகளவு கட்டுப்பாடு இருக்க வேண்டும். அது உங்களின் கைகள், கால்களை விடச் சூட்சுமமாக இருந்தாலும் அது உங்களுடையதுதானே? ‘எனது மனம்’ என்றே நீங்கள் சொல்கிறீர்கள், அப்படித்தானே? உங்களின் மனம் என நீங்கள் சொல்வதில்லை. அதனால் உங்களின் பௌதீக அங்கங்களை உங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதைப் போல், உங்களின் மனம், புத்தி, சம்ஸ்காரங்கள் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே நீங்கள் முதலாம் இலக்க வெற்றி பெறுகின்ற ஆத்மா என்று அழைக்கப்படுவீர்கள். விஞ்ஞானிகளால் அவர்களின் விண்வெளிக்கலன் மற்றும் ஏனைய வசதிகளால் மட்டுமே இந்த உலகில் பயணிக்க முடிகிறது. அதிகபட்சம் அவர்களால் ஏனைய கிரகங்களுக்கே செல்ல முடிகிறது. எவ்வாறாயினும், பிராமண ஆத்மாக்களான உங்களால் மூன்று உலகங்களையும் சென்று அடைய முடிகிறது. ஒரு விநாடியில், உங்களால் சூட்சும வதனம், அசரீரி உலகம், பௌதீக உலகில் குறைந்தபட்சம் மதுவனம் ஆகிய இடங்களுக்குச் செல்ல முடியும்தானே? ஒரு விநாடியில் உங்களின் மனதை மதுவனத்திற்குச் செல்லும்படி நீங்கள் கட்டளை இட்டால், உங்களால் அதைச் செய்ய முடியுமா? உங்களின் மனதால் அங்கே செல்லுங்கள். உங்களின் உடலால் அல்ல. ஆனால் உங்களின் மனதால் செல்லுங்கள். உங்களின் மனதிற்கு, ‘நீ சூட்சும வதனத்திற்கு அல்லது அசரீரி உலகிற்குச் செல்ல வேண்டும்’ என நீங்கள் கட்டளை இட்டால், நீங்கள் விரும்பிய இடத்திற்கு ஒரு விநாடியில் உங்களின் மனதை அங்கே செல்ல வைக்க முடியுமா? இந்தப் பயிற்சி உங்களுக்கு இருக்கிறதா? இப்போது இந்தப் பயிற்சிக்கே அதிக தேவை உள்ளது. நீங்கள் இதைப் பயிற்சி செய்வதை பாப்தாதா பார்த்திருக்கிறார். ஆனால், இப்போது நீங்கள் விரும்பும்போது, விரும்பிய அளவு நேரத்திற்கு, ஒருமுகப்பட்டு இருப்பதிலும் அசைக்க முடியாதவராக இருப்பதிலும் எந்தவிதமான குழப்பமும் இல்லாதிருப்பதிலும் அதிகளவு கவனம் செலுத்தப்பட வேண்டும். ஒரு கூற்று உள்ளது: தமது மனதை வென்றவர்கள், உலகையே வெல்வார்கள். ஆனால் இப்போதும் சிலவேளைகளில் மனம் உங்களை ஏமாற்றுகிறது.
எனவே, இன்று இந்தச் சக்தி தினத்தில், பாப்தாதா குறிப்பாக இந்தச் சக்தியிடம் உங்களின் கவனத்தை ஈர்க்கிறார். ஓ சுய இராச்சிய அதிகாரிக் குழந்தைகளே, இப்போது நடக்கும்போதும் அசையும்போதும் இந்தப் பயிற்சியைச் சோதித்துப் பாருங்கள். காலத்திற்கேற்ப, சடுதியாகப் பல விடயங்களின் விளையாட்டுக்கள் இடம்பெறுவதை நீங்கள் காண்பீர்கள். இதற்கு ஒருமுகப்படுத்தும் சக்தி அவசியம். ஒருமுகப்படுத்தும் சக்தியால் உங்களால் இலகுவாக திடசங்கற்பத்தின் சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும். திடசங்கற்பம் இயல்பாகவே நீங்கள் வெற்றி பெறச் செய்யும். எனவே, குறிப்பாக சக்தி தினத்தில், குறிப்பாக இந்தச் சக்தியைப் பயிற்சி செய்வதில் கவனம் செலுத்துங்கள். இதனாலேயே, பக்தி மார்க்கத்திலும், ‘மனதினால் தோற்றவர்கள், உலகினாலும் தோற்கடிக்கப்படுவார்கள், ஆனால் மனதினை வென்றவர்கள், உலகையே வெல்வார்கள்’ எனக் கூறப்படுகிறது. எனவே, அது உங்களின் மனம் என நீங்கள் சொல்வதனால், உங்களின் மனதின் அதிபதியாகி, உங்களின் சக்திகள் என்ற கடிவாளங்களால் வெற்றி பெறுங்கள். இந்தப் புது வருடத்தில் இந்த வீட்டு வேலையில் விசேடமான கவனம் செலுத்துங்கள். இது யோகியாக இருத்தல் எனப்படுகிறது. ஆனால், பிரயோகியாகவும் (பரிசோதனை செய்கின்ற ஆத்மா) ஆகுங்கள்.
இன்று, அன்பான இதயபூர்வமான உரையாடல்கள், அன்பான முறைப்பாடுகள், சமமானவர் ஆகுவதற்கான ஊக்கமும் உற்சாகமும் என்ற மூன்று வகையான உரையாடல்களும் பாப்தாதாவை வந்தடைந்தன. அன்பு நிறைந்த நினைவும் எங்கும் உள்ள குழந்தைகளின் அன்பான நினைவுகளும் பாப்தாதாவை வந்தடைந்தன. கடிதங்களும் இதயபூர்வமான உரையாடல்களும் செய்திகளும் பாப்தாதாவை வந்தடைந்தன. பாப்தாதா குழந்தைகளின் அன்பை ஏற்றுக் கொண்டார். அதற்குப் பிரதிபலனாக, பாபாவும் தனது இதயபூர்வமான அன்பையும் நினைவுகளையும் வழங்கினார். பாபா தனது இதயபூர்வமான ஆசீர்வாதங்களையும் வழங்கினார். ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட முடியாது. உங்களில் பலர் இருக்கிறீர்கள். எவ்வாறாயினும், ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் உள்ள குழந்தைகளின், பந்தனத்தில் இருப்பவர்களினதும் அழைப்பவர்களினதும் அன்பும் நினைவுகளும் பாப்தாதாவை வந்தடைந்தன. பாப்தாதா கூறினார்: அன்பிற்குப் பிரதிபலனாக, இப்போது உங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள். அதாவது உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது, மேடையில் உங்களின் முழுமையான ரூபத்தை வெளிப்படுத்துங்கள். நீங்கள் சம்பூரணம் ஆகும்போது, துன்பமும் அமைதியின்மையும் முடிந்துவிடும். இப்போது, உங்களின் சகோதர, சகோதரிகள் மேலும் துன்பப்பட அனுமதிக்காதீர்கள். அவர்களை இந்தத் துன்பத்தில் இருந்தும் அமைதியின்மையில் இருந்தும் விடுபடச் செய்யுங்கள். அவர்கள் மிகுந்த பயத்துடன் இருக்கிறார்கள். ‘நான் என்ன செய்வது? என்ன நடக்கும்?’ என்ற இருளில் அவர்கள் அலைந்து திரிகிறார்கள். இப்போது, ஆத்மாக்களுக்கு ஒளிப் பாதையைக் காட்டுங்கள். உங்களுக்குள் இந்த உற்சாகம் இருக்கிறதா? உங்களுக்கு இந்தக் கருணை இருக்கிறதா? இப்போது, எல்லையற்றதைப் பாருங்கள். உங்களின் பார்வையை எல்லையற்றதை நோக்கிச் செலுத்துங்கள். அச்சா. நீங்கள் உங்களின் வீட்டுவேலையை நினைப்பீர்கள்தானே? அதை மறக்காதீர்கள். தமது மனங்களை, தமது மனங்களின் கட்டுப்படுத்தும் சக்தியால், முழுமையாக ஒரு மாதத்திற்கு, சம்பூரணமாகத் தாம் விரும்பும் இடத்தில், விரும்பும் நேர அளவிற்கு ஒருமுகப்படுத்தக் கூடியவர்களுக்கு பாபா ஒரு பரிசைக் கொடுப்பார். இந்தப் பெறுபேற்றை அடைபவர்களுக்கு பாபா ஒரு பரிசை வழங்குவார். இது ஓகேயா? யார் அந்தப் பரிசைப் பெறுவார்கள்? பாண்டவர்களா? பாண்டவர்கள் முதலில் பெறுவீர்களா? பாண்டவர்களுக்கு வாழ்த்துக்கள். எவ்வாறாயினும், சக்திகள் என்ன சொல்கிறீர்கள்? ஏ1. பாண்டவர்கள் முதலாம் இலக்கத்தவர்கள், சக்திகள் ஏ1. சக்திகள் ஏ1 ஆகாவிட்டால், பாண்டவர்கள் அப்படி ஆகுவார்கள். இப்போது உங்களின் வேகத்தைச் சிறிது அதிகரியுங்கள். அது சௌகரியமான ஒரு வேகமாக இருக்கக்கூடாது. நீங்கள் துரித கதியைக் கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே ஆத்மாக்களின் துன்பமும் அமைதியின்மையும் முடிவிற்கு வரும். ஆத்மாக்களின் மீது கருணைக் குடையைப் பிடியுங்கள். அச்சா.
இரட்டை வெளிநாட்டவர்கள்: இரட்டை வெளிநாட்டவர்கள் என்றால் தமது முயற்சிகளை இரட்டிப்பாக்குவதன் மூலம் முன்னேறுபவர்கள் என்று அர்த்தம் என பாப்தாதா கூறுகிறார். உங்களுக்கு இரட்டை வெளிநாட்டவர்கள் என்ற பட்டம் உள்ளது. அது உங்களின் பட்டம்தானே? அதேபோல், இரட்டை வெளிநாட்டவர்கள் என்றால் முதலாம் இலக்கத்தைப் பெறுவதில் இரட்டிப்பு வேகத்தில் முன்னேறிச் செல்பவர்கள். இது நல்லது. பாப்தாதா ஒவ்வொரு குழுவிலும் சில இரட்டை வெளிநாட்டவர்களைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறார். ஏனென்றால், உங்கள் எல்லோரையும் பார்ப்பதில் பாரதவாசிகளும் சந்தோஷப்படுகிறார்கள். உலக உபகாரிகள் என்ற பட்டத்தைக் காணும்போது பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகிறார். இப்போது, இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் என்ன திட்டங்களைச் செய்கிறீர்கள்? ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்களும் தீவிர முயற்சி செய்வதைப் பார்த்து பாப்தாதா களிப்படைகிறார். எனவே, இன்னமும் செய்தியைப் பெறவிருக்கும் உங்களின் சகோதர, சகோதரிகள் எல்லோருக்கும் செய்தியைக் கொடுப்பதில் உங்கள் எல்லோருக்கும் ஊக்கமும் உற்சாகமும் இருக்க வேண்டும். எவரிடம் இருந்தும் எந்தவிதமான முறைப்பாடுகளும் வரக்கூடாது. வளர்ச்சி ஏற்படுகிறது. அது தொடர்ந்து இடம்பெறும். ஆனால் இப்போது முறைப்பாடுகள் முடிவடைய வேண்டும். பாப்தாதா எப்போதும் இரட்டை வெளிநாட்டவர்களின் சிறப்பியல்பைக் கூறுகிறார். கள்ளங்கபடமற்ற தந்தையை மகிழ்விப்பதற்கான வழிமுறை, நேர்மையான இதயத்தால் பிரபு களிப்படைகிறார் என்பதேயாகும். இதுவே இரட்டை வெளிநாட்டவர்களின் சிறப்பியல்பு. தந்தையை எப்படி மகிழ்விப்பது என்பதை நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக அறிவீர்கள். தந்தை ஏன் நேர்மையான இதயத்தை விரும்புகிறார்? ஏனென்றால், தந்தை சத்தியம் என்று அழைக்கப்படுகிறார். கடவுள் சத்தியமானவர் எனக் கூறப்படுகிறது. எனவே, பாப்தாதா சுத்தமான, நேர்மையான இதயங்களைக் கொண்டவர்களை மிகவும் விரும்புகிறார். அப்படித்தானே? உங்களிடம் சுத்தமான இதயங்கள், நேர்மையான இதயங்கள் உள்ளன. சத்தியம் பிராமண வாழ்க்கையின் மகத்துவம். இதனாலேயே, பாப்தாதா எப்போதும் இரட்டை வெளிநாட்டவர்களை நினைக்கிறார். நீங்கள் வெவ்வேறு நாடுகளில் உள்ள ஆத்மாக்களுக்குச் செய்தியைக் கொடுப்பதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். பாருங்கள்! பல நாடுகளில் இருந்து குழந்தைகள் இங்கே வந்துள்ளார்கள். எனவே, அந்த நாடுகள் அனைத்தும் நன்மை பெற்றுள்ளன, அப்படித்தானே? கருவிகள் ஆகியவர்களும் இங்கே வந்துள்ளார்கள். ஆனால் பாப்தாதா எங்கும் உள்ள இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளையும் கருவிகள் ஆகியுள்ள குழந்தைகள் எல்லோரையும் பாராட்டுவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறார். தொடர்ந்து பறப்பதுடன் மற்றவர்களையும் பறக்கச் செய்யுங்கள். உங்களின் பறக்கும் ஸ்திதியால் எல்லோரும் நிச்சயமாக நன்மை பெறுவார்கள். நீங்கள் எல்லோரும் புத்துணர்ச்சி அடைந்தீர்களா? புத்துணர்ச்சி பெற்றீர்களா? சதா அது அமரத்துவமாக (என்றும் நிலைத்திருக்கும்) இருக்குமா? அல்லது, நீங்கள் அதன் அரைவாசியை மதுவனத்தில் விட்டுச் செல்வீர்களா? அது உங்களுடனேயே இருக்குமா? அது சதா உங்களுடன் இருக்குமா? உங்களிடம் அமரத்துவத்திற்கான ஆசீர்வாதம் இருக்கிறதல்லவா? எனவே, நீங்கள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அது எப்போதும் தொடர்ந்து வளரும். அது தொடர்ந்து வளரும், அத்துடன் அது அமரத்துவமாக இருக்கும். அச்சா. பாப்தாதா சந்தோஷமாக இருக்கிறார். நீங்களும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். நீங்கள் இப்போது மற்றவர்களுக்கு சந்தோஷத்தை வழங்க வேண்டும். அச்சா.
ஞான சரோவரின் 10 ஆம் ஆண்டுவிழா: அச்சா. இது நல்லது. ஞான சரோவர் ஒரு சிறப்பியல்பை ஆரம்பித்து வைத்தது. ஞான சரோவர் ஆரம்பித்தபோது விஐபிகளுக்கும் ஐபி களுக்கும் விசேடமான உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளும் ஆரம்பித்தன. ஒவ்வொரு பிரிவுகளுக்குமான நிகழ்ச்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து நடக்கின்றன. ஞான சரோவருக்கு வருகின்ற ஆத்மாக்களுக்கு பௌதீக சேவையும் ஆன்மீக சேவையும் மிகுந்த ஆர்வத்துடன் நடப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆகவே, ஞான சரோவரைச் சேர்ந்தவர்களுக்கு பாப்தாதா விசேடமான வாழ்த்துக்களை வழங்குகிறார். ஏனென்றால், உங்களின் சேவையின் பெறுபேறாக, அவர்கள் எல்லோரும் சந்தோஷமாகத் திரும்பிச் செல்கிறார்கள். அவர்கள் ஏனைய சகபாடிகளையும் சந்தோஷமாகத் தம்முடன் அழைத்து வருகிறார்கள். ஞான சரோவர் எங்கும் ஒலியைப் பரப்புவதற்குக் கருவி ஆகியுள்ளது. ஆகவே, பாராட்டுக்கள். நீங்கள் எப்போதும் தொடர்ந்தும் பாராட்டுக்களைப் பெறுவீர்களாக. அச்சா.
இப்போது, ஒரு விநாடியில் உங்களால் உங்களின் மனதை ஸ்திரப்படுத்தவும் ஒருமுகப்படுத்தவும் முடிகிறதா? எல்லோரும் ஒரு விநாடியில் புள்ளி என்ற ஸ்திதியில் ஸ்திரமாகுங்கள். (பாபா அப்பியாசத்தைச் செய்வித்தார்.) அச்சா. அசையும்போதும் நடக்கும்போதும் தொடர்ந்து இதைப் பயிற்சி செய்யுங்கள்.
அன்பிலே திளைத்திருக்கும் எங்கும் உள்ள அன்பான ஆத்மாக்களுக்கும் சதா கருணை நிறைந்தவர்களாகி ஆத்மாக்களின் துன்பத்தையும் அமைதியின்மையையும் விடுவிக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும் கட்டுப்படுத்தும் சக்தியால் தமது மனங்கள், புத்திகள், சம்ஸ்காரங்களைச் சதா கட்டுப்படுத்தும் மகாவீர் ஆத்மாக்களுக்கும் தந்தைக்குச் சமமாக இருப்பதுடன் சங்கமயுகத்தில் சதா ஜீவன்முக்தி ஸ்திதியை அனுபவம் செய்யும் ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவின் பலமில்லியன் மடங்கு அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் கருணைநிறைந்த தந்தையின் கருணைநிறைந்த குழந்தைகளாகி எல்லோருக்கும் அவர்களின் இலக்கைக் காட்டுவீர்களாக.கருணைநிறைந்த தந்தையின் கருணைநிறைந்த குழந்தைகளான நீங்கள் யாராவது பிச்சைக்காரர் போல் செயல்படும்போது, அவர் நன்மை பெற்று அவரின் இலக்கை அடைய வேண்டும் என அந்த ஆத்மாவின் மீது கருணை கொள்வீர்கள். இத்தகைய ஆத்மாக்களின் தொடர்பில் உங்களில் எவராவது வரும்போது, நிச்சயமாக நீங்கள் அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பீர்கள். யாராவது உங்களின் வீட்டுக்கு வரும்போது, எல்லாவற்றுக்கும் முதலில் நீங்கள் அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பீர்கள். எதையும் ஏற்றுக் கொள்ளாமல் அந்த நபர் சென்று விட்டால், அது தவறாகவே கருதப்படும். அதேபோல், யார் உங்களின் தொடர்பில் வந்தாலும் நீங்கள் நிச்சயமாக அவர்களுக்குத் தந்தையின் அறிமுகம் என்ற தண்ணீரைக் கொடுக்க வேண்டும். அதாவது, அருள்பவரின் குழந்தைகளாக, அருள்பவர்களாகி நிச்சயமாக அவர்களுக்கு ஏதாவதொன்றைக் கொடுங்கள். அதன்மூலம் அவர்களால் அவர்களின் இலக்கைச் சென்றடைய முடியும்.
சுலோகம்:
‘விருப்பமின்மை என்பதன் மிகச்சரியான மனோபாவம்’ என்பதன் இலகுவான அர்த்தம் என்னவென்றால், நீங்கள் பற்றற்றவராக இருக்கும் அதேவேளை அன்பானவராகவும் இருப்பதே ஆகும்.அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வினால் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.
நானும் எனது பாபாவும். இந்த விழிப்புணர்வில் ஒன்றிணைந்தவராக இருங்கள், நீங்கள் மாயையை வென்றவர் ஆகுங்கள். கரன்கரவன்ஹார் என்ற வார்த்தையில் தந்தையும் குழந்தைகளான நீங்களும் ஒன்றிணைந்து இருக்கின்றீர்கள். குழந்தைகளின் கைகளும் தந்தையின் பணியும். குழந்தைகளான நீங்கள் மட்டுமே உங்களின் கைகளை நீட்டுவதற்கான பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள். எனினும், எல்லாவற்றையும் செய்விக்கின்ற ஒரேயொருவரே உங்களைச் செய்ய வைக்கிறார் என்பதே அனுபவமாக உள்ளது. அவர் உங்களைக் கருவிகள் ஆக்கி, எல்லாவற்றையும் உங்களைச் செய்ய வைக்கிறார். இதுவே சதா உங்களின் மனதில் வெளிப்படும் ஒலி ஆகும்.