20.06.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே உங்களிடம் அழியாத இந்த ஞான இரத்தினங்களாகிய எல்லையற்ற பொக்கிஷம் இருக்கின்றது. அவற்றைத் தானம் செய்யுங்கள். உங்கள் வாயிலுக்கு வருபவர்கள் எவருமே வெறுங்கையுடன் திரும்பிச் செல்லக்கூடாது.

கேள்வி:
அனைத்து உறவுமுறைகளினதும் சக்கரீனாக இருக்கின்ற தந்தை தனது குழந்தைகளுக்குக் கொடுக்கும் ஸ்ரீமத் என்ன?

பதில்:
இனிய குழந்தைகளே உங்கள் புத்தியின் யோகத்தை ஏனைய அனைவரில் இருந்தும் நீக்கி தொடர்ந்தும் என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். இவ்வுலகின் எதுவுமே நண்பர்கள் உறவினர்கள் எவருமே நினைவு செய்யப்படக்கூடாது. ஏனெனில் இந்நேரத்தில் அனைத்தும் துன்பத்தையே விளைவிக்கின்றன. உலக அதிபதி ஆகுவதற்கு நீங்கள் நிச்சயமாக உங்கள் 63 பிறவிகளின் கர்மக் கணக்குகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அனைத்தையும் மறந்து சரீரமற்றவர்கள் ஆகுங்கள், அப்பொழுதே உங்கள் கணக்குகள் தீர்க்கப்படும். நானே அனைத்து உறவுமுறைகளினதும் சக்கரீன் ஆவேன்.

ஓம் சாந்தி.
பாப்தாதா குழந்தைகளாகிய உங்களிடம் வினவுகின்றார்: நீங்கள் யாருடைய நினைவிலே அமர்ந்திருக்கின்றீர்கள்? (சிவபாபாவின்). நீங்கள் உரத்த குரலில் கூறவேண்டும்: நாங்கள் சிவபாபாவின் நினைவிலே அமர்ந்திருக்கின்றோம். குழந்தைகளாகிய உங்களுக்கு அதாவது, ஆத்மாக்களாகிய உங்களுக்குச் சிவபாபாவுடன் ஒரு தொடர்புள்ளது. நீங்கள் இவர் மூலம் சிவபாபாவிற்கு உரியவர்கள் ஆகுகின்றீர்கள். ஏனெனில் சிவபாபா உங்களை இவர் மூலமாகவே சந்திக்கின்றார். இவர் இடையிலுள்ள முகவர் என்று அழைக்கப்படுகின்றார். உங்களுக்கு முகவருடன் எந்தத் தொடர்பும் இல்லை; அவரிடம் நீங்கள் செல்வதற்காக இடையில் இருப்பவரே இவர் ஆவார். தந்தையுடனேயே கொடுக்கல் வாங்கல் கணக்குகள் அனைத்தும் இருக்க வேண்டும், இவருடன் அல்ல. இவருடைய கொடுக்கல் வாங்கலும் தந்தையுடனேயே உள்ளது. இவரும் அந்தத் தந்தைக்குக் கூறுகின்றார்: பாபா என்னுடையவை அனைத்தும் உங்களுடையவை. முதலாவதாக, நீங்கள் ஆத்மாக்கள் என்பதிலே உங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இரண்டாவதாக, ஆத்மாக்களான நீங்கள் உங்களுடைய ஆஸ்தியைப் பரமாத்மாவாகிய பரமதந்தையிடம் இருந்து இப்பொழுது பெறுகின்றீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது. நீங்கள் உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களாலும் மற்றும் சரீரம், மனம், செல்வத்தாலும் சிவபாபாவின் உதவியாளர்கள் ஆகுகின்றீர்கள். அவை அனைத்தையும் நீங்கள் சிவபாபாவிடம் அர்ப்பணித்து விட்டீர்கள். பின்னர் சிவபாபா உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார்: இதை இவ்விதமாகச் செய்யுங்கள். இது ஸ்ரீமத் என்று அழைக்கப்படுகின்றது. தந்தையே கூறுகின்றார்: நான் இந்தப் பழைய சரீரத்தினுள் பிரவேசிக்கின்றேன். இவரும் தூய்மை அற்றவரிலிருந்து தூய்மையானவர் ஆகுகின்றார். இதைக் கூறியவர் யார்? சிவபாபா. இவரும் தூய்மையானவர் ஆகுகின்றார். இவருடைய கணக்கு இன்னமும் என்னிடமே இருக்கின்றது. இவரோடு எவரும் எந்தக் கணக்கையும் வைத்திருப்பதில்லை. “சிவபாபா, பிரம்மா மேற்பார்த்து” என்று நீங்கள் கடிதத்தை எழுதுகிறீர்கள். எவ்வாறாயினும் மாயை உங்களை பாபாவைச் சதா நினைவுசெய்ய அனுமதிக்காத அத்தகையவள். உங்கள் புத்தியின் யோகத்தை அவள் மீண்டும் மீண்டும் துண்டிக்கின்றாள். இம்முயற்சியை உறுதியாக்குங்கள், நீங்கள் ஏனைய அனைத்தையும் மறந்து விடுவீர்கள். நீங்கள் உங்கள் சரீரத்தையுமே மறந்து விடுவீர்கள். இந்தச் சரீரம் இருக்கும், ஆனால் ஆத்மாவாகிய நீங்கள் இவ்விடயங்கள் அனைத்திலும் வெறுப்பைக் கொண்டிருப்பீர்கள். அந்த ஸ்திதியை உருவாக்குவதற்கு நீங்கள் இதைப் பயிற்சி செய்ய வேண்டும். இறுதியில் நாங்கள் எங்கள் சரீரங்களைக் கூட நினைவு செய்யக்கூடாது. தந்தை கூறுகின்றார்: உங்களைச் சரீரமற்றவர்களாகக் கருதி உங்கள் தந்தையான என்னை நினைவு செய்யுங்கள்! நான் சதா சரீரமற்றவர். நீங்களும் சரீரமற்றவர்களாகவே இருந்தீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் பாகங்களை நடித்தீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்கள் பாகங்களை நடிக்க வேண்டும். இதுவே முயற்சியாகும். உலக அதிபதி ஆகுவது ஒரு சிறிய விடயமல்ல! மனிதர்கள் மாத்திரமே உலக அதிபதிகள் ஆகமுடியும். இந்தத் தேவர்களும் மனிதர்களே. ஆனால் அவர்கள் தெய்வீகக் குணங்கள் நிறைந்த மனிதர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் உலக அதிபதிகளாக இருந்தார்கள். அவர்களுக்கு அவர்களுடைய சொந்தக் குழந்தைகள் இருந்தார்கள். அவர்கள் மாத்திரமே அவர்களை (இலக்ஷ்மி நாராயணனை) அம்மா, அப்பா என்று அழைப்பார்கள். ஆனால் இந்நாட்களிலே குருட்டு நம்பிக்கையால் மக்கள் இலக்ஷ்மி, நாராயணனை நோக்கிப் பாடுகின்றார்கள்: “நீங்களே தாயும் தந்தையும்”. உண்மையில் இது சிவபாபாவின் புகழே ஆகும். “நீங்கள் அனைத்துத் தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள்” என மக்கள் தேவர்களின் புகழைப் பாடுகின்றார்கள். ஆனால் தாங்கள் ஏன் அவர்களை வழிபடுகின்றார்கள் என்பது எவருக்குமே தெரியாது. நீங்கள் இப்பொழுது “நீங்களே தாயும் தந்தையும்” என்ற புகழைப் பாடுவதில்லை. ஆம், சிவபாபாவே அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தை என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் மூலமே நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். உங்கள் ஏனைய உறவினர்கள் அனைவரிடம் இருந்தும் துன்பதை மாத்திரமே பெறுகின்றீர்கள். அவர் ஒருவரே சக்கரின் ஆவார். அவரிடமிருந்தே நீங்கள் அனைத்து உறவுமுறைகளினதும் இனிமையையும் பெறுகிறீர்கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: உங்கள் புத்தியின் யோகத்தை உங்கள் தந்தை, மாமன்மார்கள் போன்றோரிடம் இருந்து அகற்றிச் சதா என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள். நீங்கள் பாடுகின்றீர்கள்: நீங்களே துன்பத்தை நீக்கி சந்தோஷத்தை அருள்பவர். ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதி அருள்பவர். அவரே எங்களுக்கு அனைத்தும் ஆவார். ஒரு லௌகீகத் தந்தையிடம் இருந்தும் துன்பமே பெறப்படுகின்றது. எவ்வாறாயினும் ஓர் ஆசிரியர் எவருக்கும் துன்பம் கொடுப்பதில்லை. ஓர் ஆசிரியருடன் கற்பதால் நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்காகச் சம்பாதிக்கின்றீர்கள். குறிப்பிட்ட திறமைகளைக் கற்பிப்பவர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் தற்காலிகமான ஒரு காலத்திற்குக் கற்பிக்கின்றார்கள். பக்தி மார்க்கத்திலும் அவர்கள் பரமாத்மாவாகிய பரமதந்தையான ஓர் இராமரையே புகழ்கின்றார்கள். அவர்கள் அனைவரும் அவரை மாத்திரமே நினைவு செய்கின்றார்கள். உண்மையில் ஒரேயொருவருக்காகவே பக்தி செய்யப்பட வேண்டும். அவரே உங்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றார். முதலில் நீங்கள் சிவபாபாவையே வழிபடுகிறீர்கள். அது சதோபிரதான் வழிபாடு என்று அழைக்கப்படுகிறது. பின்னர் சதோபிரதானாக இருப்பதிலிருந்து ஆத்மாக்கள் சதோ, ரஜோ, தமோ ஆகுகின்றார்கள். நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். ஆரம்பத்தில் நீங்கள் சிவபாபாவையே வழிபட்டீர்கள், பின்னர் உங்கள் கலைகள் குறைவடைந்தன. பக்தியும் சதோபிரதானில் இருந்து சதோ, ரஜோ, தமோ ஆகுகின்றது. முழு நாடகமும் உங்களையே அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்து பின்னர் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். முழு 84 பிறவிகளையும் எடுத்தவர்களைப் பற்றியதே கதையாகும். தந்தை இங்கே அமர்ந்திருந்து எவ்வாறு நீங்கள் 84 பிறவிகளை எடுத்தீர்கள் என்பதை உங்களிடம் கூறுகின்றார். முதலில் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்களாக இருந்து பின்னர் பூஜிப்பவர்களாகிய தேவர்களின் கணக்கே ஆகும். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுக்குக் கற்பிப்பதற்கும் தேவ தர்மத்தை ஸ்தாபிப்பதற்கும் வருகின்றேன். நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். ஒரேயொரு கடவுளே இருக்க முடியும். கடவுள் ஒவ்வொரு கல்லிலும் கூழாங்கல்லிலும் இருக்கின்றார் அல்லது அவர் ஒவ்வொரு துணிக்கையிலும் இருக்கின்றார் என அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அது அவ்வாறு இருக்க முடியாது. கடவுளின் புகழ் முடிவற்றது. நீங்கள் கூறுகின்றீர்கள்: ஓ பாபா! உங்கள் வழிமுறைகள் தனித்துவமானவை! அதாவது நீங்கள் அவரிடமிருந்து பெறுகின்ற ஸ்ரீமத் தனித்துவமானது என்பதே இதன் அர்த்தமாகும். தந்தை முக்தியையும் சற்கதியையும் அருள்பவரான பரமாத்மாவாகிய பரமதந்தை என்று அழைக்கப்படுகின்றார். புத்தி மேல் நோக்கிச் செல்கின்றது. அவர் மாத்திரமே துன்பவேளையில் நினைவு கூரப்படுகின்றார். இராமரும் சீதையும் உங்கள் புத்தியிலே இருந்தால் முழு இராமாயணமும் உங்களுடைய புத்தியிலே இருந்திருக்கும். நீங்கள் அந்த ஒரேயொரு தந்தையையே அழைக்கின்றீர்கள். உங்கள் புத்தியைச் சரீரதாரிகளுடனோ அல்லது சூட்சும தேவர்களுடனோ இணைக்கக்கூடாது, ஆனால் ஒரேயொரு தந்தையுடன் இணையுங்கள். ஒரேயொரு தந்தையே தூய்மையாக்குபவர். மக்கள் எந்த ஆன்மீக ஒன்றுகூடலிற்குச் சென்றாலும் “தூய்மையாக்குபவர் சீதையின் இராமரே!” என்றே பாடுகின்றார்கள். எவ்வாறாயினும் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. அவை அனைத்தும் பக்திமார்க்கத்தின் புகழேயாகும். அனைவரும் இராவணனின் சிறையிலே இருக்கின்றார்கள். பலர் பக்திமார்க்கத்திலே அலைந்து திரிகின்றார்கள். இங்கு அலைந்து திரிவதைப் பற்றிய கேள்விக்கே இடமில்லை. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளான நீங்கள் உங்களுடைய புத்தியிலே இக்கருத்துக்களை மிகவும் நன்றாகக் கிரகிக்க வேண்டும். ஒழுங்காகக் கற்றுக்கொள்ளுங்கள்! ஏதாவது காரணத்தினால் காலையில் உங்களால் வகுப்பிற்குச் செல்ல முடியாது விட்டால் மாலையில் செல்லுங்கள். எவருக்கும் தொந்தரவு கொடுக்க வேண்டாம். உங்களுக்கு முழு நாளும் இருக்கின்றது. எந்த நேரத்திலும் சென்று கற்றுக் கொள்ளுங்கள். இப்புதல்விகள் காலையிலிருந்து இரவு வரை சேவை செய்கின்றார்கள். சேவை நிலையங்கள் நாள் முழுவதும் திறந்திருக்கின்றன. வருபவர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள். முதலாவதாக எவ்வாறு அவர்களுக்கு இரண்டு தந்தையர் இருக்கின்றார்கள் என்பதைப் பற்றி அவர்களைச் சிந்திக்குமாறு சொல்லுங்கள். அவர்கள் துன்பவேளையில் இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட தந்தையை நினைவு செய்கின்றார்கள். இப்பொழுது சிவபாபா கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! மரணம் முன்னிலையில் உள்ளது. இது அதே மகாபாரத யுத்தமே. பல மில்லியன்களை உடையவர்களும் பில்லியன்களை உடையவர்களும் பெரும் கட்டடங்களைக் கட்டினாலும் அவற்றில் எதுவும் நிலைத்திருக்கப் போவதில்லை; அவை அனைத்தும் அழிக்கப்படும். கலியுகத்தின் கால எல்லை நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அது காரிருள் என்று அழைக்கப்படுகின்றது. தான் ஒரு கட்டடத்தைக் கட்டலாமா என்று மிகவும் செல்வந்தர் ஒருவர் வினவும் பொழுது பாபா பதிலளிக்கின்றார்: உங்களிடம் பணம் இருந்தால் அதை நீங்கள் செய்யலாம். இல்லாவிட்டால் அந்தப் பணமும் மண்ணோடு மண்ணாகி விடும். இவை அனைத்தும் தற்காலிகமானவை. அந்தப் பணம் அனைத்தும் வீணாக்கப்படும். எதுவுமே எஞ்சியிருக்காது. ஆகவே நீங்கள் அதைக் கட்டி ஒரு கீதைப் பாடசாலையை அங்கு ஒழுங்கு செய்யலாம். உங்கள் வாசலுக்கு வருபவர்களை உலக அதிபதிகள் ஆக்கும் வகையில் அத்தகைய தானத்தைக் கொடுங்கள். உங்களிடம் பெருமளவு இந்த ஞானச் செல்வம் உள்ளது. வேறு எவரிடமும் இந்தளவு இல்லை. தங்கள் புத்தியில் இந்த ஞான இரத்தினங்களை நிரப்பிக் கொண்டிருப்பவர்களே உங்கள் மத்தியில் உள்ள பெருஞ் செல்வந்தர்கள் ஆவார்கள். உங்களிடம் வருபவர்களின் புத்திகளை நிரப்புங்கள். உங்களிடம் பல்வேறு பொக்கிஷங்கள் இருக்கின்றன. ஒரு விளம்பர பலகையைப் போடுங்கள்: உள்ளே வாருங்கள், நாங்கள் உங்களுக்குச் சதா சுவர்க்க சந்தோஷம் எனும் ஆஸ்தியைப் பெறுவதற்கான பாதையைக் காட்டுவோம். எவ்வாறாயினும் குழந்தைகளுக்கு அந்தப் போதை இல்லை. இங்கே அவர்களுக்கு அந்தப் போதை இருக்கின்றது. ஆனால் அவர்கள் இங்கிருந்து சென்றவுடன் மறந்து விடுகின்றார்கள். வருபவர்களின் படகுகள் அக்கரையை அடையும் வகையில் அவர்களுக்குப் பாதையைக் காட்டுகின்ற அந்த ஆர்வம் இருக்க வேண்டும். உங்களிடம் பெருமளவு செல்வம் இருக்கின்றது. உங்களிடம் வருகின்ற ஒரு பிச்சைக்காரருக்கோ அல்லது கோடீஸ்வரருக்கோ உங்களால் பல இரத்தினங்களைக் கொடுக்க முடியும். இங்கு பாபா உங்களை போதையுடையவர்கள் ஆக்குகின்றார். பின்னர் அது சோடாநீரைப் போல் ஆகுகின்றது. பாபா உங்கள் புத்திகளை இந்த அழியாத ஞான இரத்தினங்களால் நிரப்புகின்றார். எவ்வாறாயினும் அது வரிசைக்கிரமமானது; அது ஒருவருடைய பாக்கியத்திலே இருந்தால் அவர் அதை முழுமையாகக் கிரகித்துக் கொள்கின்றார். பாபா கூறுகின்றார்: சதா நினைவிலே நிலைத்திருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் நிலையத்திற்குச் சென்று ஓரிடத்திலே அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். இல்லை; நீங்கள் நடக்கும் பொழுதும் நடமாடும் பொழுதும் ஒரு கணப்பொழுது கிடைக்கும் பொழுதெல்லாம் சதா தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் கரங்கள் தொடர்ந்தும் வேலையைச் செய்யட்டும். உங்கள் இதயம், அதாவது, உங்கள் புத்தி தந்தையுடன் யோகத்திலே இணைந்திருக்கட்டும். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதனால் உங்களுக்குப் பெரும் நன்மை இருக்கும்; நீங்கள் 21 பிறவிகளுக்குச் செல்வந்தர்கள் ஆகுவீர்கள். எல்லையற்ற தந்தை உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைத் தருகின்றார். பாரதம் சுவர்க்கமாக இருந்தது ஆனால் இப்பொழுது அது நரகமாக இருக்கின்றது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள், ஆத்மாக்களான நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்யும் பொழுது உங்கள் போதை அதிகரிக்கின்றது. உலகிலுள்ள எவருமே எங்களைப் போல் செல்வந்தர்கள் அல்ல. நீங்கள் தந்தையை நினைவு செய்யாது விட்டால் எவ்வாறு நீங்கள் செல்வத்தைப் பெறுவீர்கள்? குழந்தைகளாகிய நீங்கள் சுவர்க்கத்திலே எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். அவர்கள் சமயநூல்களிலே பல்வேறு கட்டுக்கதைகளை எழுதியுள்ளனர். அவர்கள் பாடுகின்றார்கள்: இராமரே அரசர், இராமருக்கு உரியவர்களே பிரஜைகள் ஆவர். தர்மத்தில் நன்மை இருக்கின்றது. இராமரின் சீதை கடத்தப்பட்டார், இராமர் குரங்குப் படையை அழைத்துச் சென்றார் என அவர்கள் பின்னர் கூறுகின்றார்கள். முன்னர் நீங்களும் அவ்விடயங்களைப் புரிந்து கொள்ளாமல் கற்றீர்கள். இப்பொழுது நீங்கள் அனைத்தையும் மிக நன்றாகப் புரிந்து கொள்கின்றீர்கள். அவர்கள் அத்தகைய அற்புதமான விடயங்களை எழுதியுள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: நான் சடப்பொருளின் ஆதாரத்தை எடுக்க வேண்டியுள்ளது. அவர்கள் திரிமூர்த்திப் படத்திலே பிரம்மா, விஷ்ணு, சங்கரரைக் காட்டியுள்ளார்கள். ஆனால் விஷ்ணு யார் என்பதையோ அல்லது அவர் எங்கு வசிக்கிறார் என்பதையோ அவர்கள் புரிந்து கொள்வதில்லை. விஷ்ணு ஆலயமே நாராயணனுக்கான ஆலயம் என அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதே இல்லை. சத்தியயுகத்திலே ஆட்சிசெய்த இலக்ஷ்மி நாராயணனே விஷ்ணுவின் இரட்டை ரூபம் ஆவார்கள். நீங்கள் இப்பொழுது மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். வருபவர்கள் எவருக்கும் கூறுங்கள்: நாங்கள் பிரம்மாகுமார்களும் குமாரிகளும் என்பதால் பிரஜாபிதா பிரம்மா எங்கள் அனைவரினதும் தந்தை ஆவார். அவருக்குப் பல பிரஜைகள் இருக்கின்றார்கள். நீங்கள் அவருடைய பெயரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரம்மா மூலம் பிராமணர்களைக் கடவுள் உருவாக்கினார். தந்தை நிச்சயமாகக் குழந்தைகளாகிய உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுத்திருப்பார். அவர் குழந்தைகளான உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். நீங்கள் சிவபாபாவிடம் இருந்தே ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். ஒருவர் லௌகீகத் தந்தையும் மற்றவர் இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட தந்தையும் ஆவார்கள். இப்பொழுது நீங்கள் இந்த அலௌகீகத் (சூட்சும) தந்தையைக் கண்டுவிட்டீர்கள். இவர் ஒரு நகை வியாபாரியாக இருந்தார். இவர் முன்னர் எதையுமே அறிந்திருக்கவில்லை. இவரைப் பற்றியே கூறப்படுகின்றது: இவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியிலே நான் இவரினுள் பிரவேசிக்கின்றேன். பாரதத்திலேயே சத்தத்திற்கு அப்பாற் செல்கின்ற ஓய்வு நிலையை அடைதல் எனும் வழக்கம் இருக்கின்றது. 60 வயதுக்குப் பின்னர் அவர்கள் ஓய்வு பெற்று, ஒரு குருவிடம் செல்கின்றார்கள். தந்தை இவரினுள் பிரவேசித்துக் கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். அனைவரும்; முக்தியை வேண்டுகின்றார்கள், ஆனால் எவருக்கும் முக்தி என்றால் என்ன என்பது தெரியாது. எவராலும் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலக்க முடியாது. உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. அனைவரும் அவரவரின் சொந்தப் பாகத்தை நடிக்க வேண்டும். உலகின் வரலாறும் புவியியலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன எனக் கூறப்படுகின்றது. இந்நாடகம் அநாதியாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. உங்கள் 84 பிறவிகளின் பாகங்களை நீங்கள் நடிக்க வேண்டும். இதுவே ஞான நடனம் ஆகும். அம்மக்கள் பின்னர் உடுக்கைளைக் (சங்கரரின்) காட்டுகிறார்கள். சூட்சும உலகவாசியான சங்கரர் எவ்வாறு உடுக்கையை அடிக்க முடியும்? நீங்கள் குரங்குகளைப் போல இருந்தீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். ஆகவே அவர் குரங்குகளாகிய உங்களுடைய ஒரு சேனையை அழைத்துச் சென்றார். பாபா உங்களுக்கு முன்னால் இந்த ஞான முரசுகளை அடிக்கின்றார். அவர் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். இப்பொழுது அவர் உங்களுடைய முகச்சாயல்களையும் நடத்தையையும் மாற்றுகிறார். காமச்சிதையிலே அமர்ந்ததனால் நீங்கள் அவலட்சணமானவர்கள் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது பாபா உங்களை இந்த ஞானச்சிதையிலே அமரச் செய்து உங்கள் முகச்சாயல்களையும் நடத்தையையும் மாற்றி அவலட்சணமானவர்களில் இருந்து அழகானவர்கள் ஆக்குகின்றார். பாபா உங்களை இங்கே மிகவும் போதை நிறைந்தவர்கள் ஆக்குகின்றார். ஆகவே அது ஏன் மறைகின்றது? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பாபா உங்களுக்குக் கொடுக்கின்ற எல்லையற்ற இந்த ஞானப் பொக்கிஷத்தைக் கிரகித்து உங்களைச் செல்வந்தர்கள் ஆக்குங்கள். அவற்றை அனைவருக்கும் தானம் செய்யுங்கள். உங்களிடம் வருபவர்களின் புத்திகளை நிரப்புங்கள்.

2. தந்தையின் நினைவிலே நிலைத்திருப்பதாலேயே நன்மை இருக்கும். எனவே நடக்கும் பொழுதும் அசையும் பொழுதும் இயன்றவரை தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். ஒரேயொரு தந்தையுடன் அனைத்து உறவுமுறைகளினதும் இனிமையை அனுபவம் செய்யுங்;கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா மும்முரமாக உங்களை வைத்திருப்பதன் மூலம் வீணான எண்ணங்கள் என்ற உங்களின் முறைப்பாட்டை முடித்து அதனால் சம்பூரணமாக கர்மாதீத் ஆகுவீர்களாக.

வீணான எண்ணங்களின் புயல்கள் நீங்கள் சம்பூரணமாக கர்மாதீத் ஆகுவதைத் தடை செய்கின்றன. வீணான எண்ணங்களின் இந்த முறைப்பாட்டை முடிப்பதற்கு ஒவ்வொரு கணமும் உங்களின் மனதை மும்முரமாக வைத்திருங்கள். உங்களின் நேரத்தை முன்பதிவு செய்யும் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள். நாள் முழுவதும் உங்களின் மனதை மும்முரமாக வைத்திருப்பதற்கு ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை உருவாக்குங்கள். தினமும் நான்கு விடயங்களில் உங்களின் மனதை மும்முரமாக வைத்திருங்கள் 1. சந்தித்தல் (இதயபூர்வமான உரையாடல்) 2. பேசுதல் (சேவை செய்தல்) 3. அன்பிலே திளைத்திருத்தல் 4. ஆழ்ந்த அன்பைக் கொண்டிருத்தல். இதைச் செய்வதன் மூலம் உங்களின் நேரம் ஒரு தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தப்படும். வீணானவற்றின் முறைப்பாடும் முடிந்துவிடும்.

சுலோகம்:
வெற்றியைத் தமது இறை பிறப்புரிமையாகக் கருதுபவர்களால் சதா சந்தோஷமாக இருக்க முடியும்.

அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.

இலேசான தன்மையையும் எளிமையையும் கொண்டிருப்பதற்கு நிச்சயமாக ஒரு விடயத்தில் கவனம் செலுத்துங்கள் - உங்களின் ஸ்திதியானது புகழ்ச்சியில் தங்கியிருக்கக் கூடாது. சில குழந்தைகளுக்குத் தமது செயல்களின் பலனில் மிகுந்த ஆசை உள்ளது. அதனால் அவர்கள் புகழப்படாத போது அவர்களின் ஸ்திதியும் தளம்பல் அடைகிறது. அவர்கள் அவமதிக்கப்படும் போது அவர்கள் அனாதைகள் போல் ஆகிவிடுகிறார்கள். அவர்கள் தமது ஸ்திதியைக் கைவிடுவதுடன் தாங்கள் யாருக்கு உரியவர்களோ அந்த அதிபதியையும் மறந்து விடுகிறார்கள். ஆகவே உங்களின் ஸ்திதியை புகழ்ச்சியில் தங்கி இருப்பதற்கு அனுமதிக்காதீர்கள்.