20.07.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இராவணனின் சகவாசமான, மாயையினுள் அகப்பட்டு, அலைந்து திரிந்தீர்கள். தூய்மையான நாற்றுக்களான நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் தூய்மையானவர்கள் ஆகவேண்டும்.

பாடல்:
குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும், உங்களில் எதனைக் கண்டு, ஆச்சரியமடைந்தீர்கள்? குழந்தைகளாகிய உங்களில் எதனைக் கண்டு, தந்தை ஆச்சரியமடைந்தார்?

பதில்:
குழந்தைகள் தாங்கள் எவ்வாறாக இருந்தார்கள், தாங்கள் யாருடைய குழந்தைகளாக இருந்தார்கள் என்றும், மகத்துவமானதோர் தந்தையிடமிருந்து தாங்கள் ஆஸ்தியைப் பெற்றதாகவும், அத்தகைய தந்தையைத் தாங்கள் மறந்துவிட்டதாகவும் ஆச்சரியப்படுகிறார்கள். நீங்கள் படைப்பவரையும், அவரது படைப்புக்களையும் மறப்பதற்கு இராவணன் ஒரு பனிப்படலத்தைக் கொண்டு வந்தான். தந்தை, தான் மேன்மையானவர்களாக்கி, இராச்சிய பாக்கியத்தை எந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்தாரோ, அதே குழந்தைகளே தன்னை இழிவுபடுத்தத் தொடங்கியதையிட்டு தந்தை ஆச்சரியப்படுகிறார். அவர்கள் இராவணனின் சகவாசத்தினுள் சென்றதனால், அனைத்தையும் இழந்தார்கள்.

ஓம் சாந்தி.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மனிதர்களாகிய நீங்கள் உங்கள் முயற்சிக்கேற்ப, எவ்வாறு இருந்தீர்கள், யாருடைய குழந்தைகளாக இருந்தீர்கள், எவ்வாறு நீங்கள் நிச்சயமாக உங்கள் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெற்றீர்கள், எவ்வாறு அதனை மறந்தீர்கள் என்று வரிசைக்கிரமப்படி, உங்களையிட்டு ஆச்சரியமடைகிறீர்கள். நீங்கள் முழு உலகத்தின் அதிபதிகளாக, சதோப்பிரதானாக இருந்தீர்கள். நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்து, பின்னர் நீங்கள் ஏணியிலிருந்து இறங்கி வந்தீர்கள். இராவணன் வரும்போது, ஒரு பனிப்படலத்தைக் கொண்டுவந்ததால், நீங்கள் படைப்பவரையும், அவரது படைப்பையும் மறந்துவிட்டீர்கள். பனியில் மக்கள் தங்கள் பாதையைத் தவறவிட்டுவிடுகின்றனர். நீங்களும், உங்களது வீடு எங்கு இருந்தது என்பதையும், உங்களது வாசஸ்தலம் எதுவாக இருந்ததென்பதையும் மறந்துவிட்டீர்கள். 5000 வருடங்களுக்கு முன்னர் தான் யாருக்கு இராச்சியம் என்ற பாக்கியத்தைக் கொடுத்தாரோ, அக் குழந்தைகளை பாபா இப்போது பார்க்கிறார். அவர்கள் மிகுந்த சந்தோஷத்துடனும், உல்லாசமாகவும் வாழ்ந்தார்கள். அந்த பூமிக்கு இப்போது என்ன ஆகிவிட்டது? எவ்வாறு நீங்கள் இராவணனின் இராச்சியத்திற்குள் சென்றீர்கள் என்று பாருங்கள்! ஓர் அந்நிய இராச்சியத்தில் நீங்கள் நிச்சயமாகத் துன்பத்தையே பெறுவீர்கள். நீங்கள் அதிகளவு அலைந்து திரிந்தீர்கள். நீங்கள் குருட்டு நம்பிக்கையில் தொடர்ந்து தந்தையைத் தேடினீர்கள். ஆனால் அவரை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை. கற்களிலும், கூழாங்கற்களிலும் நீங்கள் இட்ட ஒருவரை எவ்வாறு உங்களால் கண்டுபிடிக்க முடியும்? நீங்கள் அரைக் கல்பமாக அலைந்து திரிந்ததால் நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள். அறியாமையினால் நீங்கள் இராவணனின் இராச்சியத்தில் அதிகளவு துன்பத்தை அனுபவம் செய்தீர்கள். பக்தி மார்க்கத்தில் பாரதம் மிகவும் வறியதாகிவிட்டது. தந்தை குழந்தைகளைப் பார்த்து, நினைக்கின்றார்: பக்தி மார்க்கத்தில் நீங்கள் அதிகளவு அலைந்து திரிந்தீர்கள். அரைக் கல்பமாக நீங்கள் பக்தி செய்தீர்கள்? இது எதற்காக? கடவுளைச் சந்திப்பதற்காகவாகும். நீங்கள் பக்தி செய்ததன் பின்னரே கடவுள் அதற்கான பலனைக் கொடுக்கிறார். அவர் எதனைக் கொடுக்கிறார்? எவருக்கும் இது தெரியாது. அவர்கள் முற்றாக மூடர்கள் ஆகிவிட்டார்கள். இவ்விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் புகவேண்டும்: நாங்கள் எவ்வாறாக இருந்தோம், எவ்வாறு நாங்கள் இராச்சியத்தை ஆண்டோம், ஏணியில் இறங்கி வரும்போது, எவ்வாறு நாங்கள் தொடர்ந்து இராவணனின் சங்கிலியில் அகப்பட்டுக்கொண்டோம். அங்கு எல்லையற்ற துன்பம் இருந்தது. ஆரம்பத்தில் உங்களுக்கு எல்லையற்ற சந்தோஷம் இருந்தது. உங்களுடைய இராச்சியத்தில் அதிகளவு சந்தோஷம் இருந்ததென்பது உங்கள் இதயத்தில் பதியவேண்டும். பிரித்தானிய ஆட்சியில் தாங்கள் அதிகளவு துன்பத்தை அனுபவம் செய்ததாக மக்கள் நினைப்பதைப் போன்று, அந்நிய இராச்சியத்தில் நீங்கள் பின்னர் அதிகளவு துன்பத்தை அனுபவம் செய்தீர்கள். இப்பொழுது நீங்கள் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் யாராக இருந்தீர்கள், யாருடைய குழந்தைகளாக இருந்தீர்கள், முழு உலக இராச்சியத்தையும் எவ்வாறு தந்தை உங்களுக்குக் கொடுத்தார், எவ்வாறு நீங்கள் இராவணனின் இராச்சியத்தில் அகப்பட்டுக் கொண்டீர்கள் என்ற எண்ணங்களை நீங்கள் அகத்தே கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அதிகளவு துன்பத்தை அனுபவம் செய்ததுடன், பல கண்ணியமற்ற செயல்களையும் செய்தீர்கள். நாளுக்கு நாள், உலகம் தொடர்ந்து சீரழிந்துகொண்டே வருகிறது. நாளுக்கு நாள், மனிதர்களின் சம்ஸ்காரங்களும் அதிக குற்றமானதாகவே ஆகுகின்றன. ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் இந்த விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும். இராச்சியம் என்ற பாக்கியத்தைப் பெற்ற நீங்கள் தூய நாற்றுக்களாக இருந்ததையும், பின்னர் நீங்கள் அவரின் தொழிலை மறந்ததையும் தந்தை பார்க்கிறார். இப்பொழுது நீங்கள் தமோப்பிரதானிலிருந்து சதோப்பிரதான் ஆகுவதற்கு விரும்பினால், உங்களுடைய தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். உங்களுடைய பாவங்கள் அனைத்தும் வெட்டப்பட்டுவிடும். எவ்வாறாயினும், உங்களால் என்னை நினைவுசெய்ய முடியாதுள்ளது. நீங்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறீர்கள்: பாபா, நான் உங்களை மறந்துவிடுகிறேன். ஓ! நீங்கள் நினைவு செய்யாது விட்டால், எவ்வாறு உங்கள் பாவங்கள் வெட்டப்படும்? முதலாவதாக, நீங்கள் விகாரங்களில் வீழ்ந்து, தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். இரண்டாவதாக, நீங்கள் தந்தையை இழிவுசெய்ய ஆரம்பித்தீர்கள். உங்களை ஆகாயம் அளவுக்கு உயர்த்திய ஒருவரை, கற்களிலும், கூழாங்கற்களிலும் போடுமளவிற்கு மாயையின் சகவாசத்தில் வீழ்ந்தீர்கள். மாயையின் சகவாசத்தில் நீங்கள் அவ்வாறான கருமங்களைச் செய்தீர்கள். இவை உங்கள் புத்தியில் புகவேண்டும். முற்றாகக் கல்லுப் புத்தி கொண்டவர்களாக நீங்கள் தொடர்ந்தும் இருக்கக்கூடாது. தந்தை ஒவ்வொருநாளும் உங்களுக்குக் கூறுகிறார்: நான் முதல் தரமான கருத்துக்களை உங்களுக்குக் கூறுகிறேன். மும்பாயில் ஒரு ஒன்றுகூடல் இருக்கும்போது, தந்தை கூறுகிறாரென நீங்கள் அவர்களுக்குக் கூறலாம்: ஓ, பாரத மக்களே, நான் உங்களுக்கு இராச்சியம் என்ற பாக்கியத்தைக் கொடுத்தேன். தேவர்களாகிய நீங்கள் சுவர்க்கத்தில் இருந்தீர்கள். பின்னர் எவ்வாறு நீங்கள் இராவணனின் இராச்சியத்தினுள் சென்றீர்கள்? இதுவும் நாடகத்தில் ஒரு பாகமாகும். படைப்பவரையும், படைப்பின் ஆரம்பம், மத்தி மற்றும் இறுதியையும் புரிந்துகொள்ளுங்கள். உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறமுடியும். என்னை நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் அனைவரும் இங்கு அமர்ந்திருந்தாலும், சிலருடைய புத்தி எங்கோ அலைந்துகொண்டு இருக்கிறது. வேறு சிலருடைய புத்தி வேறெங்கேயோ உள்ளது. நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்றும், இப்பொழுது நீங்கள் இராவணனின் அந்நிய இராச்சியத்தினுள் வீழ்ந்துவிட்டீர்கள் என்பதும் உங்கள் புத்தியில் பதியவேண்டும். அதனால் நீங்கள் மிகவும் சந்தோஷமற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். சிவாலயத்தில் நீங்கள் சந்தோஷமாக இருந்தீர்கள். இப்பொழுது உங்களை இந்த விலைமாதல் இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லவே தந்தை வந்திருக்கிறார். இருப்பினும் உங்களிற் சிலர் அதிலிருந்து வெளிவராதிருக்கின்றீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் சிவாலலயத்திற்குச் செல்வீர்களா? அங்கு நீங்கள் அந்த நஞ்சைப் பெறமாட்டீர்கள். அங்கு நீங்கள் அழுக்கான எதனையும் உண்பதற்கோ அல்லது பருகுவதற்கோ பெறமாட்டீர்கள். அவர்களே (இலக்ஷ்மியும், நாராயணனும்) உலக அதிபதிகளாக இருந்தார்கள். அவர்கள் எங்கு மறைந்தார்கள்? அவர்கள் இராச்சியம் என்ற தங்கள் பாக்கியத்தை மீண்டும் பெற்றுக்கொள்கிறார்கள். அது மிகவும் இலகுவானது. தந்தை இதனை விளங்கப்படுத்துகிறார். அனைவரும் ஒரேயளவுக்குச் சேவை செய்யக்கூடியவர்கள் அல்ல. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைப் போன்று, வரிசைக்கிரமமாக, இராச்சியம் ஸ்தாபிக்கப்படவேண்டும். நீங்கள் சதோப்பிரதான் ஆகவேண்டும். தந்தை கூறுகிறார்: இது ஒரு தமோப்பிரதான் பழைய உலகமாகும். அது முற்றாகப் பழையதாகும்போது, தந்தை வருகிறார். தந்தையைத் தவிர வேறு எவராலும் இதனை விளங்கப்படுத்த முடியாது. கடவுள் இந்த இரதம் மூலம் எங்களுக்குக் கற்பிக்கிறார். இதனை நீங்கள் நினைவில் வைத்திருக்கும்போது, இந்த ஞானம் அனைத்தையும் நீங்கள் உங்கள் புத்தியில் கொண்டிருக்கும்போது, உங்களால் அதனை மற்றவர்களுக்குக் கூறக்கூடியதாக இருப்பதுடன், அவர்களை உங்களைப் போன்று ஆக்கக்கூடியதாகவும் இருக்கும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: முன்னர் உங்களுடைய குணம் குற்றமுள்ளதாக இருந்ததுடன், சீர்திருத்துவதற்குக் கஷ்டமாகவும் இருந்தது. உங்களால் கண்களிலிருந்து குற்ற உணர்வை அகற்றமுடியாது இருந்தது. ஒன்று காமம் என்ற குற்றமாகும். அது மிகவும் சிரமத்துடன் நீக்கப்படுகிறது. அத்துடன் ஏனைய ஐந்து விகாரங்களும் உள்ளன. கோபம் என்ற குற்றச் செயலும் அதிகமுள்ளது. அவ்வாறு நீங்கள் எங்காவது அமர்ந்திருக்கும்போது, தீய ஆவி உங்களில் புகுந்துவிடுகிறது. அதுவும் குற்றச் செயலாகும். எவரும் இன்னும் நாகரீகமானவர்கள் ஆகவில்லை. ஆகவே அதன் முடிவு எவ்வாறிருக்கும்? நீங்கள் நூறு மடங்கு பாவத்தைச் சேமிப்பீர்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் கோபப்படுவீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இப்பொழுது நீங்கள் இராவணனின் இராச்சியத்தில் மேலும் இல்லை. நீங்கள் கடவுளுடன் அமர்ந்திருக்கிறீர்கள். ஆகவே, அவ்வாறான விகாரங்களிலிருந்து விடுபட்டிருப்பீர்கள் என்ற சத்தியத்தை நீங்கள் செய்யவேண்டும். தந்தை கூறுகிறார்: இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள். கோபப்படாதீர்;கள். அரைக் கல்பமாக ஐந்து விகாரங்களும் தொடர்ந்து உங்களை விழச் செய்துள்ளன. மிகவும் மேன்மையானவர்களாக இருந்தவர்கள் நீங்களே. அதிகளவு வீழ்ந்தவர்களும் நீங்களே. ஐந்து விகாரங்களுமே உங்களை விழச் செய்தன. சிவாலயத்திற்குச் செல்வதற்கு, நீங்கள் அந்த விகாரங்களை இல்லாதொழிக்க வேண்டும். தொடர்ந்து அந்தச் சாக்கடையிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களுடைய இறுதி எண்ணங்கள் நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு உங்களை எடுத்துச் செல்லும். நீங்கள் வீட்டை வந்தடைவீர்கள். வேறு எவராலும் உங்களுக்கு இந்தப் பாதையைக் காட்ட முடியாது. கடவுள் பேசுகிறார்: நான் சர்வ வியாபி என்று ஒருபோதும் கூறியதில்லை. நான் உங்களுக்கு இராஜ யோகத்தைக் கற்பித்து, உங்களை உலக அதிபதிகள் ஆக்குவேன் என்று கூறினேன். இந்த ஞானத்திற்கான தேவை அங்கில்லை. நீங்கள் மனிதர்களிலிருந்து, தேவர்களாகி, உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். இதில் ஹத்தயோகம் போன்றவற்றைப் பற்றிய கேள்விக்கே இடமில்லை. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். ஏன் நீங்கள் உங்களை ஒரு சரீரமெனக் கருதுகிறீர்கள்? நீங்கள் உங்களை ஒரு சரீரமெனக் கருதினால், உங்களால் ஞானத்தைக் கிரகித்துக் கொள்ள முடியாதிருக்கும். இதுவும் முன்னரே நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இராவணனின் இராச்சியத்தில் இருந்தீர்கள் என்பதையும், இப்பொழுது இராம இராச்சியத்திற்குச் செல்வதற்கான முயற்சியைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் புரிந்து கொள்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் மிகவும் மங்களகரமான சங்கமயுக வாசிகள் ஆவீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழவேண்டும். பலர் எவ்வாறு இங்கு தங்க முடியும்? பிராமணர்களாகிய அனைவரும் இங்கு பிரம்மாவுடன் இருக்க முடியாது. நீங்கள் உங்களுடைய வீடுகளில் இருக்க வேண்டும். ஆனால் உங்கள் புத்தி நீங்கள் சூத்திரர்கள் அல்ல, பிராமணர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பிராமணர்களாகிய உங்களுடைய உச்சிக் குடுமி மிகவும் சிறியது. ஆகவே வீடுகளில் உங்கள் குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டு, உங்கள் ஜீவனோபாயத்திற்காக வேலையும் செய்துகொண்டு, தந்தையை நினைவு செய்ய வேண்டும். முன்னர் நீங்கள் எங்கு இருந்தீர்கள்? இப்பொழுது நீங்கள் ஓர் அந்நிய இராச்சியத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் அதிகளவு சந்தோஷமற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். பாபா இப்பொழுது எங்களை மீண்டும் அழைத்துச் செல்கிறார். ஆகவே நீங்கள் உங்கள் வீட்டில் குடும்பத்துடன் வாழும்போது அந்த ஸ்திதியை உருவாக்க வேண்டும். பல பெரிய விருட்சங்கள் (குடும்பங்கள்) ஆரம்பத்தில் வந்தன. பின்னர், அவற்றுள் சிலர் எஞ்சியிருந்தனர். சிலர் விட்டுச் சென்றுவிட்டனர். நீங்கள் அந்த இராச்சியத்தில் இருந்தீர்கள் என்பது உங்கள் புத்தியிலுள்ளது. ஆனால் இப்போது உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டதென்று பாருங்கள்! இப்பொழுது நீங்கள் மீண்டும் உங்கள் இராச்சியத்திற்குச் செல்கின்றீர்கள். சிலர் பாபாவிற்கு எழுதிக் கூறுவார்கள்: பாபா, இன்னார், இன்னார் மிகவும் நன்றாக இருந்தார்கள். அவர் ஒழுங்காக வந்தார். இ;ப்போது அவர் வருவதில்லை. அவர் வரவில்லையென்றால், அவர் விகாரத்தில் வீழ்ந்துவிட்டார் என்பதே அர்த்தமாகும். ஆகவே அவரால் ஞானத்தைக் கிரகிக்க முடியாது. முன்னேறுவதற்குப் பதிலாக அவர் தொடர்ந்து வீழ்கிறார். அவர் ஒரு சதம் பெறுமதியான அந்தஸ்தையே பெறுவார். ஓர் அரசரின் அந்தஸ்திற்கும், ஒரு தாழ்ந்த அந்தஸ்திற்குமிடையே அதிகளவு வேறுபாடுள்ளது. ஆயினும் அங்கு சந்தோஷமிருக்கும். எவ்வாறாயினும் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு இப்பொழுது நீங்கள் முயற்சி செய்யவேண்டும். எவரால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறமுடியுமென்று, அனைவராலும் புரிந்துகொள்ள முடியும். இப்போது அனைவரும் முயற்சி செய்கிறார்கள். போபால் மன்னர் மகேந்திராவும் முயற்சி செய்கிறார். அந்த அரசர்கள் ஒரு சில சதங்கள் பெறுமதி வாய்ந்தவர்களே. ஆனால், நீங்களோ, சூரிய வம்ச இராச்சியத்திற்குள் செல்கின்றீர்கள். வெற்றி மாலையின் ஒரு மணியாக வரக்கூடியதாக உங்கள் முயற்சி இருக்கவேண்டும். தந்தை குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார்: உங்கள் கண்கள் எப்போதாவது குற்றம் இழைத்ததா என்று தொடர்ந்து உங்கள் இதயத்தைச் சோதனை செய்வதுடன், உங்களையே கேட்டும் பாருங்கள். அவை குற்றமற்ற கண்கள் ஆகிவிட்டால், வேறு என்னதான் வேண்டும்? நீங்கள் இப்போது விகாரத்தில் ஈடுபடாதுவிட்டாலும், உங்கள் கண்கள் ஏதோவொரு வகையில் உங்களைத் தொடர்ந்து ஏமாற்றுகின்றன. காமமே முதலாவது இலக்க விகாரமாகும். ஒரு குற்றமுள்ள பார்வை மிகவும் கெடுதலானது. இதனாலேயே “குற்றமுள்ள பார்வை” “குற்றமற்ற பார்வை” என்ற சொற்கள் உள்ளன. எல்லையற்ற தந்தைக்குக் குழந்தைகளைத் தெரியும். அவர்கள் என்ன செயல்களைச் செய்கிறார்கள், என்ன சேவையைச் செய்கிறார்கள் என்பன அவருக்குத் தெரியும். இன்னார், இன்னாருடைய குற்றமுள்ள பார்வை இன்னும் மாறவில்லையென்ற சூட்சுமமான செய்தியை இப்போதுகூட அவர் பெற்றுக்கொண்டிருக்கிறார். காலம் செல்லச் செல்ல, அவர்கள் இன்னும் சரியாக பாபாவிற்கு எழுதுவார்கள். அவர்கள் நீண்ட காலமாகத் தாங்கள் பொய் கூறிக்கொண்டிருந்ததாகவும், தொடர்ந்து தாங்கள் வீழ்ந்துகொண்டு இருப்பதாகவும் உணர்வார்கள். இந்த ஞானம் அவர்களின் புத்தியில் முற்றாகப் பதியவில்லை. அதனாலேயே அவர்களால் அந்த ஸ்திதியை உருவாக்க முடியாதுள்ளது. அவர்கள் தங்கள் தவறுகளைத் தந்தையிடம் மறைக்கிறார்கள். இவ்வாறாக பலர் தங்கள்; தவறுகளை அவ்வாறு மறைக்கிறார்கள். நீங்கள், ஐந்து விகாரங்களின் நோயை சத்திர சிகிச்சை நிபுணரிடம் மறைக்கக்கூடாது. நீங்கள் உண்மையைக் கூறவேண்டும்: எனது புத்தி சிவபாபாவிடம் செல்லாது, வேறு திசைகளில் செல்கின்றது. நீங்கள் உண்மையைக் கூறாதவிடத்து, உங்கள் நோய் தொடர்ந்து மோசமடையும். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகிறார்;: குழந்தைகளே, இப்போது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்! உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள்! அனைத்து ஆத்மாக்களும் சகோதரர்கள். நீங்கள் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாக இருந்தபோது, மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் சந்தோஷமற்றவர்களாகவும், பூஜிப்பவர்களாகவும் ஆகிவிட்டீர்கள். உங்களுக்கு என்ன நடந்தது? ஆரம்ப காலம் முதல் தூய இல்லறப்பாதை இருந்ததென அனைவரும் கூறுகிறார்கள். அவர்கள் கேட்கிறார்கள்: இராமருக்கும், சீதைக்கும் குழந்தைகள் இருக்கவில்லையா? எவ்வாறாயினும் அங்கு குழந்தைகள் பாவத்தின் மூலம் பிறப்பதில்லை. ஓ! அது முற்றிலும் விகாரமற்ற உலகமாக இருந்தது. அங்கு சீரழிவின் மூலம் குழந்தைகள் பிறப்பதில்லை. அங்கு விகாரம் இருக்கவில்லை. இராவண இராச்சியம் அங்கு இருக்கவில்லை. அது இராம இராச்சியமாகும். இராவணன் எவ்வாறு அங்கு வரமுடியும்? மனிதர்களின் புத்தி முற்றாக நிலைகுலைந்துவிட்டது. அவற்றை நிலைகுலையச் செய்தவர் யார்? நான் உங்களை சதோப்பிரதான் ஆகச் செய்து, உங்களின் படகை அக்கரைக்கு இட்டுச் சென்றேன். உங்களைத் தமோப்பிரதான் ஆகச் செய்தவன் யார்? இராவணனாகும். நீங்களும் இதனை மறந்துவிட்டீர்கள். இது ஆரம்பகாலம் முதல் தொடர்ந்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள், உண்மையாகவா? அப்படியானால், ஆரம்ப காலம் என்றால் எப்போது? அதனைப் பற்றிய விபரத்தை எங்களுக்குத் தாருங்கள். அவர்கள் எதனையும் புரிந்துகொள்ளமாட்டார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நான் உங்களுக்கு, இராச்சியம் என்ற உயர்ந்த பாக்கியத்தைக் கொடுத்தேன். பாரத மக்களாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள். அக்காலத்தில் வேறு எவரும் இருக்கவில்லை. அங்கு சுவர்க்கம் இருந்ததாகக் கிறிஸ்தவர்களும் கூறுகிறார்கள். தேவர்களின் ரூபங்களும் உள்ளன. அவற்றைவிடப் பழையன எதுவுமில்லை. இலக்ஷ்மி, நாராயணனே அனைவரிலும் மூத்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்குச் சொந்தமானவை ஏதாவது இருந்தால், அவையும் பழையதாகும். ஸ்ரீகிருஷ்ணரே அவர்கள் அனைவரிலும் மூத்தவர். ஸ்ரீகிருஷ்ணரே அனைவரிலும் புதியவருமாவார். அவர் ஏன் மூத்தவர் என்று கூறப்படுகிறார்? ஏனெனில் அவர் கடந்த காலத்தில் இருந்ததாலாகும். நீங்கள் மிகவும் அழகானவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் அவலட்சணமானவர்கள் ஆகியிருக்கிறீர்கள். கிருஷ்ணரின் நீலமான வடிவத்தைப் பார்த்து, மக்கள் மிகவும் சந்தோஷமடைகிறார்கள். அவர்கள் அவரது குழந்தை உருவத்தைத் தொட்டிலிலிட்டு, ஆட்டுகின்றார்கள். அவர் அழகாக இருந்தார் என்பது எவ்வாறு அவர்களுக்குத் தெரியும்? அவர்களுக்கு கிருஷ்ணரின் மீது அதிகளவு அன்புள்ளது. ஆனால் ராதை என்ன செய்தார்? (ஏன் அவர்கள் அவர்மீது அதிகளவு அன்பு கொண்டிருக்கவில்லை). தந்தை கூறுகிறார்: நீங்கள் இங்கு சத்தியத்தின் சகவாசத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் தீய சகவாசத்துடன் இருக்கும்போது, என்னை மறந்துவிடுகிறீர்கள். மாயை மிகவும் சக்தி நிறைந்தவள். ஒரு பெரிய முதலையால் ஒரு யானையையே விழுங்கிவிட முடியும். ஓடிவிடுவதற்குத் தயாராகப் பலர் உள்ளனர். சிறிதளவு அகங்காரம் அவர்;களுக்கு இருந்தாலும், அவை அனைத்தையும் அழித்துவிடும். எல்லையற்ற தந்தை தொடர்ந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் இதில் நம்பிக்கை இழந்து கூறக்கூடாது: பாபா ஏன் இதனைக் கூறினார்? எனது நற்பெயரை இழந்துவிட்டேன். ஓ! நீங்கள் இராவணனின் இராச்சியத்திலேயே நற்பெயரை இழந்துவிட்டீர்கள். நீங்கள் சரீர உணர்வில் இருக்கும்போது, நீங்கள் உங்களுக்கு அதிக கெடுதலை ஏற்படுத்துவதுடன், உங்கள் அந்தஸ்தையும் அழித்துவிடுகிறீர்கள். குற்றப்பார்வை இருக்கும் போது, கோபமும், பேராசையும் இருக்கின்றன. நீங்கள் விரும்புகின்ற எவற்றையேனும் காணும்போதே பேராசை ஏற்படுகிறது. தந்தை வந்து, தனது தோட்டத்திலுள்ள பல வகையான மலர்களையும் பார்க்கிறார். இங்கு வந்த பின்னர், அவர் மற்றைய தோட்டத்திலுள்ள மலர்களையும் பார்க்கிறார். மக்களும் சிவபாபாவிற்கு மலர்களை அர்ப்பணிக்கிறார்கள். அவரே அசரீரியான, வாழும் மலராவார். அவ்வாறான மலர்கள் ஆகுவதற்கு நீங்களும் முயற்சி செய்கிறீர்கள். பாபா கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, கடந்தவை அனைத்தையும் நாடகமெனக் கருதுங்கள். அவற்றையிட்டு நினைத்துப் பார்க்கவேண்டாம். நீங்கள் அதிகளவு முயற்சி செய்கிறீர்கள். இருந்தபோதும், எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. எதுவும் எஞ்சுவதுமில்லை. ஓ! ஆனால் பிரஜைகளும் தேவை. யாராவது ஒரு சிறிதளவு ஞானத்தைக் கேட்டாலும், அவர் பிரஜைகளில் ஒருவர் ஆகுகின்றார். பல பிரஜைகள் உருவாக்கப்படுவார்கள். ஒரு தடவை இந்த ஞானத்தைச் செவிமடுத்தால், அது ஒருபோதும் அழியாது. இவர் சிவபாபா என்று அவர்கள் கேட்டதும், அவ்வளவுதான்! அவர்கள் பிரஜைகளின் ஒரு பகுதியாகுவார்கள். உங்களுக்கு முன்னர் உரியதாக இருந்த இராச்சியத்தை மீண்டும் ஒருமுறை பெறுகின்றீர்கள் என்ற விழிப்புணர்வை நீங்கள் உங்களுக்குள் கொண்டிருக்க வேண்டும். அதற்கு நீங்கள் முழு முயற்சி செய்யவேண்டும். சேவை மிகவும் சரியாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சிவாலயத்திற்குச் செல்வதற்கு, அனைத்து விகாரங்களையும் அகற்றிவிடுங்கள். தொடர்ந்து இந்த விலைமாதர் இல்லத்தில் இருந்து உங்கள் இதயத்தை விலக்கிவிடுங்கள். சூத்;திரர்களின் சகவாசத்திலிருந்து விலகியிருங்கள்.

2. கடந்தவை அனைத்தும் நாடகத்தில் உள்ளவையென்பதைப் புரிந்துகொள்வதுடன், அதனைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். ஒருபோதும் கர்வம் கொள்ளாதீர்கள். உங்களுக்கு திருத்தங்கள் கொடுக்கப்படும்போது, ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
சந்தோஷ பொக்கிஷம் நிறைந்தவர் ஆகி சந்தோஷமற்ற ஆத்மாக்களுக்கு சந்தோஷத்தை தானம் செய்வதன் மூலம் புண்ணியாத்மா ஆகுவீர்களாக.

இந்த நேரத்தில், உலகம் ஒவ்வொரு கணமும்; துன்பத்தில் உள்ளது, ஆனால் நீங்கள் ஒவ்வொரு கணமும் சந்தோஷத்தை கொண்டிருக்கின்றீர்கள். எனவே, இந்த சந்தோஷத்தை சந்தோஷமற்ற ஆத்மாக்களுக்குக் கொடுப்பதே அனைத்தி;லும் அதி சிறந்த தானமாகும். சந்தோஷமாக இருப்பதற்கான முயற்சியில் உலக மக்கள் நேரத்தையும் பணத்தையும் அதிகளவு செலவிடுகிறார்கள். ஆனால் நீங்கள் இந்த அழியாத சந்தோஷ பொக்கிஷத்தை இலகுவாகப் பெற்றிருக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் பெற்றிருப்பதை தொடர்ந்தும் பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்ந்து கொள்ளுதல் என்றால் அதிகரித்துக் கொள்வது என்று அர்த்தமாகும். உங்கள் தொடர்பில் யார் வந்தாலும் நீங்கள் சந்தோஷத்தைக் கொண்டிருக்கும் மேன்மையானதொரு பேற்றினை பெற்றிருக்கிறீர்கள் என்ற அனுபவத்தைப் பெறட்டும்.

சுலோகம்:
ஓர் அனுபவசாலி ஆத்மா எதனாலும் ஏமாற்றப்பட முடியாது, அத்தகைய ஆத்மா எப்பொழுதும் வெற்றிகரமானவர் ஆவார்.