20.10.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    28.03.2002     Om Shanti     Madhuban


இந்த வருடத்தைப் பணிவானவராகவும் தூய்மையானவராகவும் சுத்தமானவராகவும் ஆகுவதற்கான வருடமாகவும் வீணானவற்றில் இருந்து விடுபட்டிருக்கும் வருடமாக, முக்திக்கான வருடமாகவும் கொண்டாடுங்கள்.


இன்று, பாப்தாதா நானா திசைகளிலும் உள்ள தனது குழந்தைகளின் நெற்றிகளில் பிரகாசிக்கும் மூன்று ரேகைகளைப் பார்க்கிறார். ஒரு ரேகை, இறை பராமரிப்பிற்கானது. இரண்டாவது ரேகை, மேன்மையான படிப்பிற்கானது. மூன்றாவது ரேகை, மேன்மையான வழிகாட்டல்களுக்கானது. இந்த மூன்று ரேகைகளும் பிரகாசிக்கின்றன. இந்த மூன்று ரேகைகளும் உங்கள் எல்லோருடைய பாக்கிய ரேகைகள் ஆகும். நீங்கள் எல்லோருமே உங்களின் மூன்று ரேகைகளையும் பார்க்கிறீர்கள்தானே? இறை பராமரிப்பிற்கான பாக்கியமானது, பிராமண ஆத்மாக்களான உங்களைத் தவிர வேறு எவராலும் பெறப்படுவதில்லை. இது இறைபராமரிப்பு. இதன் மூலம் நீங்கள் மேன்மையான பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்கள் ஆகுகிறீர்கள். உங்களின் கனவுகளிலேனும், இந்த ஆத்மாவான நான், இறை கல்விக்கான உரிமையைப் பெறுவேன் என நீங்கள் எப்போதாவது நினைத்தீர்களா? எவ்வாறாயினும், நீங்கள் இதை இப்போது பௌதீக ரூபத்தில் அனுபவம் செய்கிறீர்கள். சத்குருவே உங்களுக்கு அமிர்த வேளையில் இருந்து இரவுவரை ஒவ்வொரு செயலுக்குமான மேன்மையான வழிகாட்டல்களை வழங்குகிறார். அத்துடன் கர்ம பந்தனங்களை கர்ம உறவுமுறைகளாக மாற்றுவதற்கான கருவிகள் ஆகுவதற்கும் உங்களுக்கு ஸ்ரீமத்தை வழங்குகிறார். நீங்கள் கனவில் கூட இதை நினைத்ததில்லை. எவ்வாறாயினும், இப்போது அனுபவத்துடன் உங்களின் ஒவ்வொரு செயலும் ஸ்ரீமத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று சொல்கிறீர்கள். நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்களா? பாப்தாதாவும் ஒவ்வொரு குழந்தையின் மேன்மையான பாக்கியத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகிறார். ‘ஆஹா எனது மேன்மையான, பாக்கியசாலிகளே! ஆஹா!’. குழந்தைகளும், ‘ஆஹா பாபா! ஆஹா!’ எனச் சொல்கிறார்கள். தந்தையும், ‘ஆஹா குழந்தைகளே! ஆஹா!’ எனச் சொல்கிறார்.

இன்று, அமிர்தவேளையில் இருந்து, குழந்தைகள் நினைவைக் கொண்டிருந்தபோது, பாப்தாதாவிடம் இரண்டு எண்ணங்கள் வந்தடைந்தன. முதலில், குழந்தைகள் பலரும் தமது கணக்குகளைக் கொடுக்க வேண்டும் என நினைத்தார்கள். இரண்டாவதாக, ஹோலியின் - தந்தையின் சகவாசத்தால் நிறமூட்டப்பட வேண்டும் என்ற நினைவு ஏற்பட்டது. நீங்கள் எல்லோரும் ஹோலியைக் கொண்டாடவே வந்துள்ளீர்கள், அப்படித்தானே? பிராமண மொழியில், கொண்டாடுதல் என்றால் அப்படி ஆகுதல் என்று அர்த்தம். நீங்கள் ஹோலியைக் கொண்டாடுகிறீர்கள். அதன் அர்த்தம் புனிதம் ஆகுதல். பிராமணக் குழந்தைகளுக்கு, அதிபுனிதமானவர் ஆகுவது மிகவும் தனித்துவமானதும் அழகானதுமாகும் என்பதை பாப்தாதா பார்த்தார். உண்மையில், துவாபர யுகத்தின் ஆரம்பத்தில் வந்த மகாத்மாக்களும் அவ்வப்போது வந்த மதங்களின் தந்தையரும் தூய்மையாகவும் புனிதமாகவுமே வந்தார்கள். எவ்வாறாயினும், உங்களின் தூய்மையே அதிமேன்மையானதும் தனித்துவமானதும் ஆகும். முழுக்கல்பத்திலும் எவருமே, அவர்கள் மகாத்மாக்களோ, மதம் சார்ந்த ஆத்மாவோ அல்லது மதத்தின் தந்தையோ யாராக இருந்தாலும் தூய்மையாக இல்லை. ஆத்மாக்களான நீங்கள் மட்டுமே தூய்மையானவர்கள், உங்களின் சரீரங்களும் தூய்மையானவை. அத்துடன் பஞ்ச பூதங்களும் சதோபிரதானாகவும் தூய்மையாகவும் உள்ளன. எவரும் இந்த முறையில் அதிபுனிதமானவர்கள் ஆகவில்லை. எவராலும் அப்படி ஆகவும் முடியாது. உங்களின் எதிர்கால ரூபத்தை உங்களின் முன்னால் கொண்டு வாருங்கள். எல்லோருக்கும் உங்களின் எதிர்கால ரூபம் உங்களின் முன்னால் வருகிறதா அல்லது நீங்கள் அப்படி ஆகுவீர்களா மாட்டீர்களா என உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் என்னவாகுவீர்கள்? நீங்கள் என்னவாகினாலும், தூய்மை ஆகுவீர்கள்தானே? உங்களின் சரீரங்கள் தூய்மையாகும். ஆத்மாக்களான நீங்கள் தூய்மையாக இருப்பீர்கள். பஞ்சபூதங்களும் தூய்மையாகி, சந்தோஷத்தைக் கொடுக்கும். உங்களின் நம்பிக்கை என்ற பேனாவால் உங்களால் உங்களின் எதிர்கால ரூபத்தை உங்களின் முன்னால் கொண்டு வரமுடியும். உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதல்லவா? ஆசிரியர்களான உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? அச்சா. உங்களால் உங்களின் எதிர்கால ரூபத்தை ஒரு விநாடியில் உங்களின் முன்னால் கொண்டு வர முடிகிறதா? ஓகே, நீங்கள் கிருஷ்ணர் ஆகாதிருக்கலாம். ஆனால், அவரின் நண்பர்கள் ஆகுவீர்கள்தானே? இது மிகவும் அழகானது! எப்படி ஓவியர்கள் ஆகுவது என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே? உங்களின் முன்னால் பாருங்கள், அவ்வளவுதான்! இப்போது, நீங்கள் சாதாரணமானவர்கள். நாளை, (நாடகத்தில் நாளை), நாளை என்பது வரப்போகும் நாளை அல்ல, ஆனால் நாளை, நீங்கள் நிச்சயமாகத் தூய சரீரங்களைக் கொண்டவர்கள் ஆகப் போகிறீர்கள். பாண்டவர்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது நிச்சயமல்லவா? உங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லையல்லவா? ‘நான் இப்படி ஆகுவேனா மாட்டேனா என எனக்குத் தெரியாது’. உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா? இல்லையல்லவா? நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். நீங்கள் இராஜயோகிகளாக இருப்பதனால், நீங்கள் இராச்சிய உரிமை உடையவர்கள் ஆகப் போகிறீர்கள். தந்தை உங்களுக்கு ஒரு பரிசைக் கொண்டு வந்துள்ளார் என பாப்தாதா பல தடவைகள் உங்களுக்கு நினைவூட்டுகிறார். எனவே, அவர் என்ன பரிசைக் கொண்டு வந்துள்ளார்? பொன்னுலகம். சதோபிரதான் உலகை அவர் பரிசாகக் கொண்டு வந்துள்ளார். உங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நம்பிக்கையின் அடையாளம், ஆன்மீக போதையாகும். நீங்கள் உங்களின் இராச்சியத்திற்கும் வீட்டிற்கும் நெருக்கமாகும் அளவிற்கு, மீண்டும் மீண்டும் உங்களின் இராச்சியத்திற்கு நீங்கள் நெருக்கமாகுவீர்கள். இனிய வீட்டினதும் இனிய இராச்சியத்தினதும் தெளிவான விழிப்புணர்வும் நினைவும் இருக்க வேண்டும். இதுவே நெருங்கி வருவதன் அடையாளமாகும். உங்களின் வீடும் உங்களின் இராச்சியமும் உங்களின் ஞாபகத்தில் மிகத் தெளிவாக இருக்கும். அது உங்களின் மூன்றாம் கண்ணால் உங்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும். இன்று, நீங்கள் இங்கே இருப்பதையும் நாளை நீங்கள் அங்கே இருப்பதையும் அனுபவம் செய்வீர்கள். உங்களின் பாகங்களை நீங்கள் எவ்வாறு பல தடவைகள் பூர்த்தி செய்தீர்கள் என்பதும் உங்களின் வீட்டுக்கும் இராச்சியத்திற்கும் திரும்பிச் சென்றீர்கள் என்பதும் உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்களுக்கு இது நினைவிருக்கிறதுதானே? இப்போது, நீங்கள் மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டும்.

தற்சமயம் எல்லோருடைய பெறுபேற்றையும் பாப்தாதா பார்த்தார். அது இரட்டை வெளிநாட்டவர்களோ அல்லது பாரத மக்களோ, யாராக இருந்தாலும், தற்சமயம் குழந்தைகள் எல்லோரும் பல புதிய வழிமுறைகளில் கவனயீனமாக இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. கவனயீனங்களில் பல வகைகள் உள்ளன. உங்களின் மனங்களில், ‘எதுவும் சரிதான்!’ என நீங்கள் நினைக்கிறீர்கள். இந்த நாட்களில் சகல விடயங்களிலும் ‘எதுவும் சரிதான்!’ என்ற விசேடமான சுலோகன் காணப்படுகிறது. இதுவே கவனயீனமாகும். இத்துடன்கூடவே, சுய மாற்றத்திற்கான பல்வேறு முயற்சிகளிலும் சிறிது கவனயீனம் காணப்படுகிறது. சோம்பேறித்தனத்தின் சதவீதம் காணப்படுகிறது. ‘அது நடக்கும், நாங்கள் அதைச் செய்வோம்’. புது விதமான கவனயீனங்களை பாப்தாதா கண்டார். இதனாலேயே, நீங்கள் உங்களின் கணக்குகளை உண்மையான இதயத்துடன் நேர்மையாகப் பேண வேண்டும். கவனயீனமாக அல்ல.

பாப்தாதா உங்களுக்குப் பெறுபேற்றைக் கூறுகிறார். அவர் தொடர்ந்து சொல்லட்டுமா? அல்லது, பாபா அன்பை மட்டும் கொடுக்கட்டுமா? இதுவும் அன்பின் ஒரு விடயமே. பாப்தாதாவிற்குக் குழந்தைகளான உங்களிடம் அதிகளவு அன்பு உள்ளது. குழந்தைகளான நீங்கள் எல்லோரும் உங்களின் வீட்டுக்குத் தந்தை பிரம்மாவுடனேயே திரும்பிச் செல்ல வேண்டும் என அவர் நினைக்கிறார். அவருக்குப் பின்னால் செல்வதல்ல, ஆனால், சிவபாபாவின் சகபாடிகளாகி, பிரம்மாபாபாவுடன் திரும்பிச் செல்ல வேண்டும். அதற்கு, நீங்கள் சமமானவர்கள் ஆகவேண்டும்தானே? உங்களால் சமமானவர்கள் ஆகாமல், அவரின் சகபாடிகளாக அவருடன் திரும்பிச் செல்ல முடியாது. அதன்பின்னர், உங்களின் முதல் பிறவி முதல் இராச்சியத்தில் இருக்கும். முதல் பிறவி என்பது முதலாவதுதானே? நீங்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது பிறவியில் வரக்கூடும். நீங்கள் அரசன் ஆகக்கூடும். ஆனால், அது இரண்டாவது அல்லது மூன்றாவது என்றே அழைக்கப்படும், அப்படித்தானே? அவருடன் திரும்பிச் சென்று, தந்தை பிரம்மாவுடன் முதல் பிறவிக்கான உரிமையைப் பெறுவதென்றால், முதலாம் இலக்கத்தவர் ஆகுதல், திறமைச் சித்தி எய்துதல் என்று அர்த்தம். எனவே, நீங்கள் திறமைச் சித்தி எய்த விரும்புகிறீர்களா? அல்லது, சித்தி எய்தினால் மட்டும் போதுமா? நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றோ என்ன நடக்கிறது என்றோ பாப்தாதா பார்ப்பதில்லை என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். இந்த விடயத்தில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். குழந்தைகளான உங்களில் எவராவது உங்களின் இதயத்தின் அட்டவணை என்னவென்று பாப்தாதாவிடம் கேட்டால், அவரால் அதைச் சொல்ல முடியும். எவ்வாறாயினும், இப்போது அவர் அதை உங்களுக்குக் கூற விரும்பவில்லை. பாப்தாதா ஒவ்வொரு மகாராத்தியின், ஒவ்வொரு குதிரைவீரரின் அட்டவணையையும் பார்க்கிறார். பல தடவைகள், பாப்தாதா மிகுந்த இரக்கத்துடன் நினைக்கிறார்: அவர்கள் யார்? எனினும், அவர்கள் என்ன செய்கிறார்கள்? எவ்வாறாயினும், பிரம்மாபாபா கூறுவதுண்டு - அவர் என்ன சொல்வதுண்டு என உங்களுக்கு நினைவிருக்கிறதா? வெல்லப்பாகை வைத்திருக்கும் பாத்திரம் மட்டுமே, அந்த வெல்லப்பாகு எத்தனை இனிமையானது என்பதை அறியும். சிவபாபா அறிவார். பிரம்மா பாபாவும் அறிவார். பாப்தாதா மிகுந்த கருணை கொள்கிறார். எவ்வாறாயினும், இத்தகைய குழந்தைகளால் பாப்தாதாவின் கருணைநிறைந்த எண்ணங்களைத் தொட முடியவில்லை. அவர்களால் அவற்றைப் பிடிக்க முடியவில்லை. இதனாலேயே, பாப்தாதா கூறினார்: பாபா தொடர்ந்து பல்வகையான இராஜரீகமான கவனயீனத்தின் ரூபங்களைப் பார்க்கிறார். அதைப் பற்றி நினைக்காதீர்கள். எனினும், பாப்தாதா மிகுந்த கருணை கொள்கிறார் என்பதைப் பற்றி இன்று அவர் உங்களுக்குக் கூறப் போகிறார். பல குழந்தைகள் கூறுகிறார்கள்: ‘சத்தியயுகத்தில், யார் என்னவாக இருப்பார்கள் என எங்களுக்குத் தெரியாது. இப்போது நாம் வாழ்க்கையை இரசிப்போம், இப்போது நாம் விரும்பியதைச் செய்வோம். யாரும் எங்களைத் தடுக்கப் போவதில்லை. யாரும் அதைப் பார்க்கப் போவதும் இல்லை’. எவ்வாறாயினும், இது ஒரு தவறு. பாப்தாதா பெயர்களைக் குறிப்பிடப் போவதில்லை. அவர் பெயர்களைச் சொன்னால், நீங்கள் நாளையே சரியாகிவிடுவீர்கள்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? பாண்டவர்களே, நீங்கள் புரிந்து கொண்டீர்களா இல்லையா? அது நடக்கும். அது நடக்குமா? எவ்வாறாயினும், அது நடக்காது. ஏனென்றால், பாப்தாதா ஒவ்வொருவரின் ஒவ்வொரு நாளுக்குமான அறிக்கையைப் பெறுகிறார். பாபாவும் தாதாவும் ஒருவரோடு ஒருவர் உரையாடுகிறார்கள். பாப்தாதா மீண்டும் ஒருமுறை குழந்தைகள் எல்லோருக்கும் சமிக்கை கொடுக்கிறார் - அதாவது, காலம் சகல வழிகளிலும் அதன் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மாயையும் தனது இறுதிப்பாகத்தை நடிக்கிறாள். பஞ்சபூதங்களும் தமது இறுதி நேரப் பாகங்களை நடித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய வேளையில், பிராமணக் குழந்தைகளான நீங்கள், உங்களில் அதிகபட்ச கவனத்தைச் செலுத்த வேண்டும். அதாவது, உங்களின் மனங்களில், உங்களின் வார்த்தைகளில், உங்களின் செயல்களில் அதிகபட்ச கவனம் செலுத்துவது அவசியம். சாதாரணமான முயற்சி அல்ல! சேவை செய்வதில் உங்களுக்கு நல்ல விருப்பம் இருப்பதை பாப்தாதா பார்த்திருக்கிறார். நீங்கள் சேவைக்கு என்றும் தயாராக இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததும் நீங்கள் அன்புடன் சேவைக்கு என்றும் தயார் ஆகுகிறீர்கள். எவ்வாறாயினும், உங்களின் சேவையில் ஒன்றைச் சேர்க்க வேண்டும். வார்த்தைகளுடன் கூடவே, மனதாலும் சேவை செய்ய வேண்டும். உங்களின் ஆத்மாவை ஏதாவதொரு விசேடமான பேற்றின் ரூபத்தில் ஸ்திரப்படுத்தி, அதன்பின்னர் வார்த்தைகளால் சேவை செய்யுங்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றுகிறீர்கள். நீங்கள் வார்த்தைகளால் நல்ல உரையாற்றுகிறீர்கள். ஆனால், அந்த வேளையில், ஆத்ம உணர்வு ஸ்திதியில், உங்களை சக்தி ரூபத்தில் அல்லது, அமைதி ரூபத்தில் அல்லது இறையன்பின் ரூபத்தில் ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை ஏதாவதொரு விசேடமான அனுபவத்தில் ஸ்திரப்படுத்திக் கொண்டு, சூழலில் ஓர் ஆதிக்கத்தை ஏற்படுத்தியபின்னர், வார்த்தைகளால் செய்தியை வழங்குங்கள். ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருந்தவண்ணம் வார்த்தைகளாலும் மனதாலும் செய்தியை வழங்குங்கள். ஓர் அனுபவத்தைக் கொடுங்கள். சொற்பொழிவு ஆற்றும் வேளையில், உங்களின் வார்த்தைகளில் இருந்து, உங்களின் நெற்றியில் இருந்து, உங்களின் கண்களில் இருந்து, உங்களின் முகத்தில் இருந்து, அவர்கள் ஒரு சொற்பொழிவைக் கேட்பதன் புலப்படும் பண்புகளை அவர்கள் பார்த்து உணர வேண்டும். அத்துடன் அவர்களுக்கு இறையன்பின் நல்லதொரு அனுபவமும் ஏற்பட வேண்டும். சொற்பொழிவின் பெறுபேறாக, நீங்கள் மிக நன்றாகப் பேசினீர்கள், அது மிகவும் நன்றாக இருந்தது, நீங்கள் பல நல்ல விடயங்களைக் கூறினீர்கள் என அவர்கள் கூறுவார்கள். அதேபோல், அவர்கள் ஆத்ம ரூபத்தின் அனுபவத்தைப் பற்றியும் பேச வேண்டும். அதிர்வலைகள் மனித ஆத்மாக்களைச் சென்றடைய வேண்டும். அந்த சூழல் உருவாக்கப்பட வேண்டும். விஞ்ஞானத்தின் வசதிகளால் குளிர்ச்சியான சூழலை உருவாக்க முடியும். நல்லதொரு குளிர்மை இருக்கும்போது, எல்லோராலும் அதை உணர முடியும். அது வெப்பத்தின் அனுபவத்தையும் வழங்க முடியும். குளிர்காலத்தில், அதனால் சூட்டின் அனுபவத்தைக் கொடுக்க முடியும். வெப்பமான காலத்தில், அதனால் குளிர்ச்சியின் அனுபவத்தைக் கொடுக்க முடியும். உங்களின் மௌனத்தால், அன்பின் ரூபத்தின், சந்தோஷத்தின் ரூபத்தின், அமைதியின் ரூபத்தின் சூழலை வழங்க முடியாதா? இதை ஆராய்ந்து பாருங்கள்! ‘அது நன்றாக இருந்தது, அது நன்றாக இருந்தது’ என்று மட்டும் அவர்கள் சொல்லாமல், அவர்களே நல்லவர்கள் ஆகவேண்டும். அப்போது நீங்கள் காலத்தின் பூர்த்தியையும் உங்களின் இராச்சியத்தையும் கொண்டு வருவீர்கள். உங்களின் இராச்சியம் உங்களுக்கு நினைவில்லையா? சங்கமயுகம் மேன்மையானது. அது சரியே. அது வைரம் போன்று பெறுமதிவாய்ந்தது. எவ்வாறாயினும், ஓ கருணைநிறைந்த இதயங்களைக் கொண்டுள்ள குழந்தைகளே, உலக உபகாரிகளே, உங்களின் துன்பம் நிறைந்த, அமைதியற்ற, சகோதர, சகோதரிகளின் மீது உங்களுக்குக் கருணை பிறக்கவில்லையா? துன்ப உலகை மாற்றி, அதைச் சந்தோஷப்படுத்துவதற்கான உற்சாகம் உங்களிடம் இல்லையா? இந்த உற்சாகம் உங்களுக்குள் இல்லையா? நீங்கள் துன்பத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? நீங்கள் மற்றவர்களின் துன்பத்தைப் பார்க்கிறீர்கள். உங்களுடைய சகோதர, சகோதரிகள் துன்ப நிலையில் இருப்பதைக் காண விரும்புகிறீர்களா? உங்களின் கனிவான, கருணைநிறைந்த ரூபங்கள் வெளிப்படட்டும். சேவை செய்வதில் மட்டும் மும்முரமாக இருக்காதீர்கள். ‘நாம் இந்த நிகழ்ச்சியைச் செய்தோம், நாம் அந்த நிகழ்ச்சியைச் செய்தோம்’. வருடம் முடிந்துவிட்டது. இப்போது, கருணைநிறைந்தவர் ஆகுங்கள்! உங்களின் திருஷ்டியால் அல்லது ஓர் அனுபவத்தைக் கொடுப்பதன் மூலம் அல்லது ஆத்ம ஸ்திதியால் ஓர் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் கருணைநிறைந்தவர் ஆகுங்கள். கருணைநிறைந்தவர் ஆகுங்கள். கருணைநிறைந்த இதயத்தைக் கொண்டிருங்கள். அச்சா.

பாப்தாதா மேலும் ஒரு விடயத்தையும் கண்டார். இதைப் பற்றிப் பேசுவதை பாபா விரும்பவில்லை. சில வேளைகளில், சில நல்ல குழந்தைகள், மற்றவர்களின் விடயங்களில் அதிகம் தலையிடுகிறார்கள். மற்றவர்களின் விடயங்களைப் பார்த்தல், மற்றவர்களைப் பற்றிய விடயங்களைப் பேசுதல்…. அவர்கள் பார்க்கும்போது, வீணானதையே பார்க்கிறார்கள். ஒருவர் மற்றவரின் சிறப்பியல்புகளைப் பற்றிப் பேசுவது குறைவாகவே உள்ளது. மற்றவர்களின் சிறப்பியல்புகளைப் பார்த்தல், சிறப்பியல்புகளைப் பற்றிப் பேசுதல், அவர்களின் சிறப்பியல்புகளின் அடிப்படையில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துதல் என்பவை குறைவாகவே உள்ளன. நீங்கள் உங்களின் சொந்த வீணான விடயங்களைக் கைவிட முயற்சி செய்கிறீர்கள். அதாவது, பாப்தாதா கூறிய விடயங்ளைக் கைவிட வேண்டும். ஆனால், மற்றவர்களின் வீணானவற்றைப் பார்க்கும் பழக்கம் உள்ளது. இதற்கு அதிகளவு நேரம் எடுக்கிறது. பாப்தாதா ஒரு விசேடமான ஸ்ரீமத்தை வழங்குகிறார். உண்மையில், அது ஒரு பொது விடயம். ஆனால் அது அதிகளவு நேரத்தை வீணாக்குகிறது. உங்களின் வார்த்தைகளில் பணிவானவராக இருங்கள். உங்களின் வார்த்தைகளில் உள்ள பணிவானது குறையக்கூடாது. நீங்கள் அதைச் சொல்லவே வேண்டும் என நினைத்து, சாதாரணமான வார்த்தைகளைப் பேசக்கூடும். எவ்வாறாயினும், அது பணிவாக இல்லாவிட்டால், ஒருவர் அதிகாரதோரணையில் பேசினால், ஒருவர் பணியின் அடிப்படையில் அல்லது தனது ஆசனத்திற்கேற்ப (பதவி) பேசினால், ஐந்து சதவீத அகம்பாவம் புலப்படும். பணிவே பிராமண வாழ்க்கையின் விசேடமான அலங்காரமாகும். உங்களின் மனங்களில், வார்த்தைகளில், பேச்சில், உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் பணிவு இருக்க வேண்டும். ‘நான் மூன்று விடயங்களில் பணிவாகவே இருக்கிறேன், ஒரு விடயத்தில் மட்டும் குறைவாக உள்ளது, அதனால் அது பரவாயில்லை’ என்பதாக இருக்கக்கூடாது. எவ்வாறாயினும், அந்த ஒரு பலவீனம், நீங்கள் திறமைச் சித்தி எய்துவதற்கு அனுமதிக்காது. பணிவு என்பது மகத்தானது. இது தலைவணங்குவதல்ல, ஆனால் மற்றவர்களைத் தலை வணங்கச் செய்வது. சில குழந்தைகள் நகைச்சுவையாகக் கேட்கிறார்கள்: ‘நான் மட்டுமே எப்போதும் தலைவணங்க வேண்டுமா? மற்றவரும் தலைவணங்க வேண்டும்’. எவ்வாறாயினும், இது தலைவணங்குவது அல்ல. உண்மையில், இது ஆத்மாக்களை மட்டுமன்றி, இறைவனையும் உங்களுக்குத் தலைவணங்கச் செய்வதாகும். பணிவானது இயல்பாகவே உங்களை அகங்காரம் அற்றவர் ஆக்குகிறது. அகங்காரமற்றவர் ஆகுவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை. பணிவானது எல்லோருடைய இதயத்திலும் உங்களுக்கு அன்பான ஓரிடத்தைக் கொடுக்கும். பணிவானது, எல்லோருடைய இதயங்களில் இருந்தும் ஆசீர்வாதத்தைப் பெறச் செய்யும். நீங்கள் ஆசீர்வாதங்கள் பலவற்றைப் பெறுவீர்கள். உங்களின் முயற்சிகளில், உயர்த்தியில் இருந்து, ஆசீர்வாதங்கள் ஓர் ஏவுகணை போன்று ஆகிவிடும். பணிவென்பது இத்தகையதே. மற்றவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் பிஸியாக இருந்தாலும், அவர்கள் கடின இதயத்தைக் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்கள் கோபமாக இருந்தாலும், பணிவானது நீங்கள் எல்லோருடைய ஒத்துழைப்பையும் பெறுவதற்குக் கருவி ஆகும். பணிவானவர்கள், ஒவ்வொருவரின் சம்ஸ்காரங்களுக்கேற்ப நடந்து கொள்வார்கள். அவர்கள் நிஜத் தங்கமாக இருப்பதனால், தங்களை வளைத்துக் கொள்ளும் சிறப்பியல்பை அவர்கள் கொண்டிருப்பார்கள். பணிவான சுபாவம், உங்களின் வார்த்தைகளிலும் உங்களின் தொடர்பாடலிலும் உங்களின் தொடர்புகள் மற்றும் உறவுமுறைகளிலும் நீங்கள் செய்யும் சேவையிலும் வெற்றி பெறச் செய்வதை பாப்தாதா பார்த்திருக்கிறார். இதனாலேயே, இந்த வருடத்திற்கு, ‘பணிவாகவும் தூய்மையாகவும் சுத்தமாகவும் ஆகுவதற்கான வருடம்’ என்ற பட்டத்தைக் கொடுக்க பாப்தாதா விரும்புகிறார். நீங்கள் இந்த வருடத்தைக் கொண்டாடுவீர்கள்தானே?

இந்த வருடம், பாப்தாதா ஒவ்வொரு குழந்தையும் வீணானவற்றில் இருந்து விடுபட்டிருப்பதைக் காண விரும்புகிறார். இந்த வருடத்தைச் சுதந்திரமாக இருக்கும் வருடமாகக் கொண்டாடுங்கள். உங்களிடம் என்ன பலவீனம் இருந்தாலும், அந்தப் பலவீனத்தில் இருந்து விடுபடுங்கள். ஏனென்றால், நீங்கள் உங்களை அதில் இருந்து விடுவிக்கும் வரை, நீங்கள் முக்தி தாமத்திற்குத் தந்தையுடன் திரும்பிச் செல்ல மாட்டீர்கள். எனவே, நீங்கள் உங்களுக்கே அதில் இருந்து விடுதலை அளிப்பீர்களா? நீங்கள் முக்தி வருடத்;தைக் கொண்டாடுவீர்களா? அதைக் கொண்டாடுவீர்கள் எனச் சொல்பவர்கள், உங்களின் கையை அசையுங்கள்! நீங்கள் அதைக் கொண்டாடுவீர்களா? நீங்கள் ஒருவரையொருவர் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் அதைக் கொண்டாடுவீர்கள்தானே? நல்லது. நீங்கள் முக்தி வருடத்தைக் கொண்டாடினால், பாப்தாதா உங்களுக்குத் தட்டு நிறைந்த இரத்தினங்களுடன் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பார். இது நல்லது. உங்களை விடுவியுங்கள்! உங்களின் சகோதர, சகோதரிகளையும் துன்பத்தில் இருந்து விடுவியுங்கள்! இந்தச் சந்தோஷ ஒலி அந்த அப்பாவிகளின் இதயங்களில் இருந்து வெளிப்பட வேண்டும்: எமது தந்தை வந்துவிட்டார். ஓகே. அச்சா.

நானா திசைகளிலும் உள்ள அதிபுனிதமான ஆத்மாக்கள் எல்லோருக்கும் சதா பணிவாக இருந்து, புதுப்பித்தலைச் செய்பவர்களுக்கும் பாப்தாதாவிற்கு நெருக்கமான ஆத்மாக்களுக்கும் தமது முயற்சியின் வழிமுறையை சதா துரிதமாகவும் தீவிரமாகவும் சம்பூரணமாகவும் ஆக்கும் அன்பான ஆத்மாக்களுக்கும் சதா தமது சேமிப்புக் கணக்குகளில் சேகரிக்கும் தீவிர முயற்சியாளர்களுக்கும் கூர்மையான புத்திகளைக் கொண்டுள்ள குழந்தைகளுக்கும் உங்களின் பரந்த, எல்லையற்ற புத்திகளுக்குப் பாராட்டுக்கள். குழந்தைகள் எல்லோருக்கும் அன்பும் நினைவுகளுடன் நமஸ்காரங்கள்.

ஆசீர்வாதம்:
ஒரே பலம், ஒரே ஆதாரம் என்பதன் அடிப்படையில் மாயையைச் சரணடையச் செய்யும் சக்திசாலி ஆத்மா ஆகுவீர்களாக.

ஒரே பலம் மற்றும் ஒரே ஆதாரத்தைக் கொண்டிருத்தல் என்றால், சதா சக்திசாலியாக ஆகுதல் என்று அர்த்தம். எங்கு ஒரே பலமும் ஒரே ஆதாரமும் உள்ளனவோ, அங்கே எவராலும் உங்களை அசைக்க முடியாது. இத்தகைய ஆத்மாக்களின் முன்னால் மாயை மயக்கம் அடைந்து, சரணடைந்து விடுகிறாள். மாயை சரணடையும்போது, நீங்கள் சதா வெற்றியாளர் ஆகுவீர்கள். எனவே, சதா வெற்றி உங்களின் பிறப்புரிமை என்ற போதையைக் கொண்டிருங்கள். யாராலும் இந்த உரிமையைப் பறிக்க முடியாது. இந்த விழிப்புணர்வு உங்களின் இதயங்களில் வெளிப்பட வேண்டும்: பாண்டவர்களும் சக்திகளுமான நாங்கள், ஒவ்வொரு கல்பத்திலும் வெற்றியாளர்களாக இருந்தோம், நாம் வெற்றியாளர்களாக இருக்கிறோம், நாம் சதா வெற்றியாளராக இருப்போம்.

சுலோகம்:
புதிய உலகின் விழிப்புணர்வுடன் சகல நற்குணங்களையும் வரவழைத்து, விரைவாக முன்னேறுங்கள்.

அறிவித்தல்: இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை, உலக தியான வேளையில் பிராமணக் குழந்தைகள் எல்லோரும் ஒன்றுகூடி மாலை 6.30 இலிருந்து 7.30 வரை தியானம் செய்வார்கள். குறிப்பாகத் தந்தையுடன் சேர்ந்து உங்களின் கருணைநிறைந்த மற்றும் கனிவான ரூபத்தில் அமர்ந்திருந்து, ஒவ்வோர் ஆத்மாவிற்கும் கருணை மற்றும் கனிவின் திருஷ்டியை வழங்குங்கள். எல்லோருக்கும் நல்லாசிகளைக் கொடுத்து, எல்லோரிடமிருந்தும் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.