21.01.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, அதிகாலையில் எழுந்து தந்தையுடன் ஓர் இனிமையான ஆன்மீகச் சம்பாஷணையைச் செய்யுங்கள். தந்தை உங்களுக்குக் கொடுக்கும் கற்பித்தல்களைத் தொடர்ந்தும் ஜீரணித்துக் கொள்ளுங்கள்.
கேள்வி:
எவ்வழிமுறையை நீங்கள் ஏற்றுக் கொள்வதால், நீங்கள் நாள் முழுவதையும் சந்தோஷத்தில் கழிக்கிறீர்கள்?பதில்:
தினமும் காலையில் அமிர்தவேளையில் எழுந்திருந்து ஞானக் கருத்துக்களைக் கடையுங்கள். உங்களுடன் பேசுங்கள். முழு நாடகத்தினதும் ஆரம்பம், மத்தி, இறுதியைக் கடையுங்கள். தந்தையை நினைவுசெய்வதால், உங்கள் நாள் முழுவதையும் சந்தோஷத்தில் கழிப்பீர்கள். மாணவர்கள் தங்களுடைய கல்வியை அப்பியாசம் (மீட்டல்) செய்வது போல், குழந்தைகளாகிய நீங்களும் இந்த ஞானத்தை மீட்டல் செய்ய வேண்டும்.பாடல்:
மக்கள் இன்று இருளில் உள்ளனர்….ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, நீண்டகாலம் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். நீங்களே கடவுளின் குழந்தைகள் ஆவீர்கள். கடவுள் உங்களுக்குப் பாதையைக் காட்டுகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தாங்கள் இருளில் இருப்பதாகக் கூறி, மக்கள் தொடர்ந்தும் கடவுளை அழைக்கிறார்கள். அது ஏனெனில் பக்திமார்க்கம் இருண்ட பாதை என்பதால் ஆகும். பூஜிப்பவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் உங்களைத் தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கிறோம். சிலவேளைகளில், நாங்கள் யாத்திரைகள் செல்கிறோம், சிலவேளைகளில் நாங்கள் தானங்கள் கொடுத்துப் புண்ணியம் செய்து மந்திரங்களைச் செபிக்கிறோம். செபிப்பதற்கு அவர்களுக்குப் பல விதமான மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அப்பொழுதும், தாங்கள் இருளில் இருப்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் இருளில் இருக்கும் காரணத்தினால், எது ஒளி என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது இருளில் இருக்கவில்லை. நீங்களே விருட்சத்தில் முதலில் தோன்றப் போகின்றவர்கள். நீங்கள் சென்று புதிய உலகில் ஆட்சி செய்கிறீர்கள், பின்னர் நீங்கள் ஏணியில் கீழிறங்கி வருகிறீர்கள். இஸ்லாமிய, பௌத்த, கிறிஸ்தவ மக்கள் மத்திய காலத்திலேயே வர ஆரம்பிக்கிறார்கள். இப்பொழுது தந்தை மீண்டும் ஒருமுறை மரக்கன்றை நாட்டுகிறார். அதிகாலையில் எழுந்திருந்து இவ்விதமாக ஞானக் கருத்துக்களைக் கடையுங்கள். இது அத்தகையதோர் அற்புதமான நாடகம் ஆகும். இந்நாடகத்தின் படச்சுருளின் ஆயுட்காலம் 5000 வருடங்கள் ஆகும். சத்தியயுகத்தின் ஆயுட்காலம் இவ்வளவு, திரேதா யுகத்தின் ஆயுட்காலம் இவ்வளவு. பாபாவிடம் இந்த ஞானம் முழுவதும் உள்ளது. உலகில் உள்ள வேறு எவருக்கும் இது தெரியாது. ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள், அதிகாலையில் எழுந்து தந்தையை நினைவுசெய்து, இந்த ஞானத்தைச் சந்தோஷமாகக் கடைய வேண்டும். இப்பொழுது நாங்கள் முழு நாடகத்தினதும் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவோம். ஒவ்வொரு கல்பத்தினதும் ஆயுட்காலம் 5000 வருடங்கள் என்று தந்தை கூறுகிறார். ஏனையோர் அது நூறாயிரக்கணக்கான வருடங்கள் என்று கூறுகிறார்கள். இது அத்தகையதோர் அற்புதமான நாடகம் ஆகும்! தந்தை உங்களுக்குக் கொடுக்கும் கற்பித்தல்களை ஜீரணிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் கல்வியை அப்பியாசம் (மீட்டல்) செய்வதைப் போலவே, நீங்களும் அப்பியாசம் செய்ய வேண்டும். இனிமையிலும் இனிமையான, குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்நாடகம் முழுவதையும் அறிந்து கொள்கிறீர்கள். இந்நாடகம் எவ்வாறு அநாதியாகவும் அழிவற்றதாகவும் உள்ளது என்பதை பாபா உங்களுக்கு மிகவும் இலகுவான ஒரு வழியில் கூறியுள்ளார். இதில் வெற்றியும் தோல்வியும் உள்ளன. இப்பொழுது சக்கரம் முடிவுக்கு வருவதால், நாங்கள் வீடு திரும்ப வேண்டும். நாங்கள் தந்தையின் கட்டளையைப் பெற்றுள்ளோம்: உங்கள் தந்தையான, என்னை நினைவு செய்யுங்கள்! ஒரு தந்தை மாத்திரமே நாடகத்தின் ஞானத்தைக் கொடுக்கிறார். ஒருபொழுதுமே நூறாயிரக்கணக்கான வருடங்களாக ஒரு நாடகம் நடக்க மாட்டாது. அதை எவராலும் எப்பொழுதும் நினைவுசெய்ய இயலாதிருக்கும். 5000 வருடங்களுக்குரிய முழுச் சக்கரமும் உங்கள் புத்தியில் உள்ளது. வெற்றி தோல்வியைக் கொண்ட இந்நாடகம் மிகவும் சிறந்தது. அதிகாலையில் எழுந்து அத்தகைய எண்ணங்களைக் கொண்டிருங்கள். பாபா எங்களை இராவணனை வெற்றிகொள்ளச் செய்கிறார். அதிகாலையில் எழுந்து இவ்விதமாக உங்களுடனே பேசுவதால், நீங்கள் இப்பழக்கத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள். இந்த எல்லையற்ற நாடகம் பற்றி எவருக்கும் தெரியாது. நீங்கள் நடிகர்களாயினும், நாடகத்தின் ஆரம்பம், மத்தி, அல்லது இறுதியை அறியாமல் உள்ளீர்கள்! நாங்கள் இப்பொழுது பாபாவினால் தகுதியானவர்களாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது பாபா எங்களைத் தன்னைப் போன்றே ஆக்குகிறார். பாபா எங்களைத் தன்னைப் போன்றே ஆக்குவது மாத்திரமன்றி, எங்களை அவருடைய தோள்களில் அமரவும் வைக்கிறார். குழந்தைகளாகிய உங்களில் பாபா அதிகளவு அன்பு வைத்துள்ளார். அவர் உங்களுக்கு மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நான் உங்களை உலகின் அதிபதிகளாக ஆக்குகிறேன். நான் அவ்வாறு ஆகுவதில்லை, ஆனால் நான் குழந்தைகளாகிய உங்களை அவ்வாறு ஆக்குகிறேன். நான் குழந்தைகளாகிய உங்களை அழகாக்கி, உங்களுடைய ஆசிரியராகி, உங்களுக்குக் கற்பிக்கிறேன். சற்கதிக்காக நான் உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்து, அமைதி தாமத்தினதும், சந்தோஷ தாமத்தினதும் அதிபதிகள் ஆக்குகிறேன். பின்னர் நான் சத்தத்துக்கு அப்பாலுள்ள, நிர்வாணா தாமத்துக்குச் சென்று, அமர்கிறேன். ஒரு லௌகீகத் தந்தை தன்னுடைய குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு, பணம் சம்பாதிக்க முயற்சி செய்கிறார். பின்னர் அவர் ஓய்வுபெற்று, கடவுளுக்காகப் பக்திப் பாடல்களைப் பாடுகிறார். இங்கு, தந்தை கூறுகிறார்: நீங்கள் ஓய்வுபெற்றிருப்பின், இந்த ஞானத்தை உங்கள் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்த வேண்டும், உங்களை இச்சேவையில் மும்முரமாக வைத்திருக்க வேண்டும். உங்கள் இல்லறத்தில் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள்! நீங்கள் உங்களுக்கும் ஏனையோர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் அனைவருமே உங்கள் ஓய்வுபெறும் ஸ்திதியில் இருக்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களைச் சத்தத்துக்கு அப்பால் அழைத்துச் செல்ல வந்துள்ளேன். தூய்மையற்ற ஆத்மாக்களால் அங்கு செல்ல முடியாது. தந்தை உங்களுக்குத் தனிப்பட்ட முறையில், நேரடியாகவே விளங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். நேரடியாகச் செவிமடுப்பதில் சந்தோஷம் உள்ளது. ஏனைய இடங்களில் ஏனைய குழந்தைகள் இந்த ஞானத்தைப் பேசுகிறார்கள். இங்கு, தந்தை நேரடியாக வந்து உங்களுடன் பேசுகிறார். இதனாலேயே மதுவனம் புகழப்படுகிறது. தந்தை கூறுகிறார்: அதிகாலையில் எழும் பழக்கத்தை உருவாக்குங்கள். மக்கள் அதிகாலையில் எழுந்திருந்து பக்தி செய்கிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் பக்தி செய்வதிலிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவதில்லை. நீங்கள் படைப்பவரான, தந்தையிடமிருந்தே ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் ஒருபொழுதும் படைப்பிலிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவதில்லை. அவர்களுக்குப் படைப்பவரையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, அல்லது இறுதியையோ தெரியாது என்று இதனாலேயே அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் இதை அறிந்திருப்பின், அவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே அனைத்தையும் அறிந்திருப்பார்கள். நீங்கள் எவ்வாறு உயர்ந்த தர்மத்துக்கு உரியவர்கள் ஆகினீர்கள் என்பதையும், பின்னர் எவ்வாறு உங்கள் தர்மத்திலும் செயல்களிலும் சீரழிந்தவர்கள் ஆகினீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். மாயை உங்கள் புத்தியின் மீது ஒரு கோத்ரெஜ் பூட்டைப் போடுகிறாள். இதனாலேயே நீங்கள் கடவுளிடம் வேண்டுகிறீர்கள்: நீங்களே புத்திசாலிகளிலும் புத்திசாலி (விவேகி), இவரது புத்தியின் பூட்டைத் திறவுங்கள்! இப்பொழுது தந்தை உங்களுக்கு நேரடியாக விளங்கப்படுத்துகிறார்: நானே ஞானக்கடல், நான் இவரினூடாக உங்களுடன் ஞானத்தைப் பேசிக் கொண்டிருக்கிறேன். எந்த ஞானத்தை? உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தை ஆகும். வேறு எவராலும் உங்களுக்கு இதைக் கொடுக்க முடியாது. தந்தை கூறுகிறார்: சமய ஒன்றுகூடல்களுக்குச் செல்வதை விடவும் ஒரு பாடசாலையில் கற்பது சிறந்தது. கல்வியே உங்கள் வருமானத்தின் மூலாதாரம். நீங்கள் சமய ஒன்றுகூடல்களில் எதையும் சம்பாதிப்பதில்லை. நீங்கள் தானம் கொடுக்கிறீர்கள், புண்ணியம் செய்கிறீர்கள். செலவைத் தவிர எதுவுமேயில்லை. நீங்கள் பணத்தைச் செலவிடுகிறீர்கள். நீங்கள் தலை குனிந்து வணங்கி உங்கள் நெற்றியும் தேய்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பெறும் ஞானத்தைக் கடையும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் ஏனையோர்களுக்கு விளங்கப்படுத்தவும் வேண்டும். தந்தை கூறுகிறார்: இப்பொழுது ஆத்மாக்களாகிய உங்களின் மீது வியாழ சகுனங்கள் உள்ளன. இப்பொழுது விருட்சத்தின் பிரபுவாகிய, கடவுள் உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். கடவுள் உங்களுக்குக் கற்பித்து உங்களைத் தேவ தேவியர்களாக ஆக்குகிறார்! அத்தகைய தந்தையை நீங்கள் எவ்வளவுக்கு அதிகமாக நினைவு செய்கிறீர்களோ, அந்தளவுக்கு அதிகமாக உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இவ்விதமாக ஞானக்கடலைக் கடையும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். தாதா (பாட்டனார்) எங்கள் ஆஸ்தியை இத்தந்தையினூடாக எங்களுக்குக் கொடுக்கிறார். அவரே கூறுகிறார்: நான் இந்த இரதத்தின் ஆதாரத்தைப் பெறுகிறேன். நீங்கள் ஞானத்தைப் பெறுகிறீர்கள், இல்லையா? ஞான கங்கை உங்களை ஞானத்தின் மூலம் தூய்மை ஆக்குகின்றதா அல்லது கங்கைநீர் தூய்மை ஆக்குகின்றதா? தந்தை கூறுகிறார்: இப்பொழுது உண்மையிலேயே குழந்தைகளாகிய நீங்கள் பாரதத்துக்குச் சேவை செய்கிறீர்கள். அச்சமூக சேவையாளர்கள் எல்லைக்குட்பட்ட சேவையையே செய்கிறார்கள். இது உண்மையான ஆன்மீகச் சேவை ஆகும். இவையே கடவுளின் வாசகங்கள் ஆகும். கடவுள் மறுபிறவிக்கு அப்பாற்பட்டவர் என்று தந்தை கூறுகிறார், ஸ்ரீ கிருஷ்ணர் முழுமையான 84 பிறவிகளை எடுக்கிறார். கீதையில் ஸ்ரீகிருஷ்ணரின் பெயர் போடப்பட்டுள்ளது. ஏன் நாராயணனின் பெயர் இடப்படவில்லை? ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீநாராயணர் ஆகுகிறார் என்பது எவருக்கும் தெரியாது. ஸ்ரீ கிருஷ்ணர் இராதையைத் திருமணம் செய்த ஓர் இளவரசர் ஆவார். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். சிவபாபா உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர் உங்கள் தந்தையும், உங்கள் ஆசிரியரும், சற்குருவும் ஆவார். அவர் உங்களுக்குச் சற்கதியை அருள்கிறார். கடவுள் சிவனே அதிமேன்மையானவர். அவர் கூறுகிறார்: என்னை அவதூறு செய்பவர்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது! மாணவர்கள் கற்காது விட்டால், அவர்களின் ஆசிரியர் அவருடைய கௌவரத்தை இழக்கிறார். தந்தை கூறுகிறார்: எனக்கு அகௌரவத்தை ஏற்படுத்த வேண்டாம்! தொடர்ந்தும் கல்வி பயிலுங்கள்! உங்கள் இலக்கும் இலட்சியமும் உங்கள் முன்னிலையில் உள்ளன. குருமார்கள் தங்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்கள் (குருவை அவதூறு செய்பவர்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது). இதனாலே மக்கள் பயப்பட்டு, அவர்களால் சபிக்கப்படுவதைத் தவிர்த்துக் கொள்கிறார்கள். தங்கள் குருவால் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை எவருக்கேனும் கூற அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் ஏன் தமது இல்லறத்தை விட்டுச் சென்றார்கள் என்று சந்நியாசிகளைக் கேட்கும்பொழுது, அவர்கள் பதில் அளிக்கிறார்கள்: அந்தத் தேவையற்ற மேலோட்டமான விடயங்கள் பற்றிக் கேட்க வேண்டாம். அவர்கள் ஏன் அவ்விடயங்களைப் பற்றி எங்களுக்குக் கூற விரும்புவதில்லை? அவர்கள் யார் என்பதை நாங்கள் எப்படி அறிந்து கொள்வது? உங்களில் கூர்மையான புத்தியை உடையவர்கள், அவர்களிடம் இக்கேள்விகளைக் கேட்பீர்கள். அறியாமைப் பாதையில், பலரும் போதையைக் கொண்டிருக்கிறார்கள். சுவாமி நாராயணன், இராம் திரத்தின் ஒரு விசேட சிஷ்யராக இருந்தார். பாபா அவருடைய புத்தகங்கள் போன்றவற்றை வாசித்தார். அப்புத்தகங்கள் அனைத்தையும் வாசிப்பதில் பாபா ஆர்வமாக இருந்தார். அவருடைய குழந்தைப் பருவத்தில் விருப்பமின்மையைக் கொண்டிருந்தார். ஆனால் பின்னர், ஒருநாள், அவருடைய விருப்பமின்மைக்குரிய மனோநிலையைச் சீர்கெடுத்த ஒரு திரைப்படத்தை அவர் பார்த்தார். அவருடைய துறவுக்குரிய விருப்பமின்மை மாற்றம் அடைந்தது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: அக்குருமார்கள் போன்றோர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்துக்கு உரியவர்கள். அனைவரும் நினைவுசெய்யும் ஒரேயொருவர் மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் ஆவார். ஒரு பாடல் உள்ளது: என்னுடையவர் கிரிதர கோபால் ஒருவர் (இடையரான கிருஷ்ணர்) மாத்திரமே ஆவார். ஸ்ரீகிருஷ்ணர் கிரிதரர் என்று அழைக்கப்படுகிறார். உண்மையில், அவதூறுகள் அனைத்தும் பிரம்மாவையே குறிப்பிடுகின்றன. இறுதியில், ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா முற்றிலும் தூய்மையற்ற, கிராமத்துக் குறும்புக்காரச் சிறுவனாகும்பொழுது, அவருக்கு அந்த அவதூறுகள் அனைத்தும் கொடுக்கப்படுகின்றன. உண்மையில், இவரே ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா ஆவார். அவரை ஒரு கிராமத்தில் வளர்த்து வந்தனர். தனது பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இப்பிராமணர் அகப்பட்டுக் கொண்டார். அதாவது, பாபா அவரில் பிரவேசித்தார். அவர் அதிகளவு அவதூறு செய்யப்பட்டார். இந்தச் செய்திகள் அமெரிக்காவை எட்டின. இது அத்தகையதோர் அற்புதமான நாடகம். இப்பொழுது நீங்கள் இவ்விடயங்களை அறிந்து கொள்வதால், சந்தோஷமாக இருக்கிறீர்கள். எவ்வாறு இச்சக்கரம் சுழல்கிறது என்பதையும், நீங்கள் எவ்வாறு பிராமணர்களாக இருந்து, பின்னர் தேவர்களாகவும் சத்திரியர்களாகவும் வைசியர்களாகவும் சூத்திரர்களாகவும் ஆகினீர்கள் என்பதையும் தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகிறார். இதுவே 84 பிறவிகளின் சக்கரம் ஆகும். உங்கள் விழிப்புணர்வில் இவை அனைத்தையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். படைப்பவரையும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது வேறு எவருக்கும் தெரியாது. நீங்கள் உலகின் அதிபதிகளாகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இதில் சிரமம் என்னும் கேள்வியே கிடையாது. உங்களை விசேடமான யோகாசன நிலைகளில் அமர்ந்திருக்கும்படி கேட்கவில்லை. ஹத்தயோகாவின் அத்தகைய வகைகளை மக்கள் கற்பிக்கிறார்கள், கேட்கவும் வேண்டாம்! அதனூடாக (சுவாசிக்காமல் இருப்பதால்) சிலர் தங்களின் மூளையையும் சேதமாக்கிக் கொள்கிறார்கள். தந்தை உங்களை மிகவும் இலகுவாக ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கச் செய்கிறார். இதுவே 21 பிறவிகளுக்கான உண்மை வருமானம் ஆகும். சுவர்க்கம் உங்கள் உள்ளங்கைகளில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்காகச் சுவர்க்கம் என்னும் வெகுமதியைத் தந்தை கொடுக்கிறார். இதை மனிதர் எவரும் கூற மாட்டார்கள். தந்தை மாத்திரமே இதைக் கூறுகிறார். இந்த ஆத்மாவும் செவிமடுத்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் அதிகாலையில் எழுந்திருந்து இந்த ஞானத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அதிகாலையில் பக்தர்களும் மாலையின் மணிகளை ஒரு மறைமுகமான விதத்தில் ஒரு பையில் உருட்டுகிறார்கள். ஒரு கௌமுக் (ஒரு பசுவின் வாய்) என்று அந்தப் பை அழைக்கப்படுகிறது. தங்கள் கரத்தை ஒரு சிறிய துணிப்பையில் வைத்து மாலையின் மணிகளை உருட்டுகிறார்கள். ஒரு ஹார்மோனியத்தை வாசிப்பதைப் போல, அவர்கள் இராம நாமத்தைச் செபிக்கிறார்கள். உண்மையில், தந்தையை நினைவுசெய்வது மறைமுகமானதே. இது மௌன மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. சந்தோஷம் உள்ளது. நாடகம் மிகவும் அற்புதமானது. இந்நாடகம் எல்லையற்றது. இது உங்களைத் தவிர எவர் புத்தியிலும் இல்லை. எவ்வாறாயினும், உங்கள் முயற்சிகளுக்கேற்ப, நீங்களும் வரிசைக்கிரமமானவர்கள் ஆவீர்கள். இது மிகவும் இலகுவானது. இப்பொழுது கடவுள் எங்களுக்குக் கற்பிக்கிறார். நாங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும். நாங்கள் அவரிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறோம். இந்த பாபா அனைத்தையும் உடனடியாகவே துறந்தார், ஏனெனில் இடையில் பாபாவின் அவதாரம் நிகழ்ந்தது. நான் அனைத்தையும் இத்தாய்மார்களிடம் அர்ப்பணித்தேன். தந்தை கூறினார்: மிகப் பாரியதொரு ஸ்தாபனை நடைபெற வேண்டும். இச்சேவைக்காக, உங்களிடமுள்ள அனைத்தையும் பயன்படுத்துங்கள். எவருக்கும் ஒரு சதமேனும் கொடுக்க வேண்டாம். நீங்கள் அந்தளவுக்கு ஒரு பற்றை அழிப்பவராக இருக்க வேண்டும். இந்த இலக்கு மிகவும் உயர்ந்தது. மீராவின் விகாரமான குலத்தின் லௌகீக விதிகளுக்கு மீரா கீழ்ப்படியவில்லை. அவர் இப்பொழுது அதிகளவு புகழப்படுகிறார். ஒருவர் பல்கோடீஸ்வரராக அல்லது வேறு ஏதாவதாக இருந்தாலென்ன, தாங்கள் திருமணம் செய்ய மாட்டோம் என இப்புதல்விகளும் கூறுகிறார்கள். அவர்கள் தங்கள் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து கோருவார்கள். ஆகவே, அத்தகைய போதை இருக்க வேண்டும். இங்கு எல்லையற்ற தந்தை அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களை அலங்கரிக்கிறார். இதற்காக, உங்களுக்குப் பணம் போன்ற எதுவும் தேவையில்லை. ஒரு மணப்பெண்ணை அவளுடைய திருமணத்தின் முன்னர், அமர வைத்துப் பழைய ஆடைகளை அணிய வைக்கிறார்கள். அவள் கிழிந்த ஆடைகளை அணிய வைக்கப்படுகிறாள். அவளுடைய திருமணத்தின் பின்னர், அவள் நகைகள், புத்தாடைகள் போன்றவற்றை அணிகிறாள். இத்தந்தை கூறுகிறார்: நான் இப்பொழுது ஞான இரத்தினங்கள் மூலம் உங்களை அலங்கரிக்கிறேன், பின்னர் நீங்கள் இலக்ஷ்மி அல்லது நாராயணனாக ஆகுகிறீர்கள். வேறு எவருமே இதைக் கூற மாட்டார்கள். தந்தை மாத்திரமே வந்து தூய இல்லறப் பாதையை உருவாக்குகிறார். இதனாலேயே விஷ்ணு நான்கு கரங்களுடன் சித்தரிக்கப்படுகிறார். பார்வதி சங்கரருடனும் பிரம்மா சரஸ்வதியுடனும் சித்தரிக்கப்படுகிறார்கள். எவ்வாறாயினும், பிரம்மாவுக்கு மனைவி கிடையாது. இவர் தந்தைக்கு உரியவராக இருக்கிறார். இவை அத்தகைய அற்புதமான விடயங்கள் ஆகும். இவரே தாயும் தந்தையும் ஆவார். பிரஜாபிதா மூலமே தந்தை குழந்தைகளை உருவாக்குகின்றார். ஆகவே, அவரும் ஒரு தாய் ஆவார். பிரம்மாவின் புதல்வியாகவே சரஸ்வதி நினைவு கூரப்படுகிறார். தந்தை இங்கமர்ந்திருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். பாபா அதிகாலையில் எழுந்து ஞானக்கடலைக் கடைவதைப் போலவே, குழந்தைகளாகிய நீங்கள் அவரைப் பின்பற்ற வேண்டும். இது ஓர் அற்புதமான, வெற்றி தோல்வி பற்றி முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட நாடகம் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் அதைப் பார்க்கும்பொழுது, சந்தோஷம் அடைகிறீர்கள். நீங்கள் அதை வெறுப்பதில்லை. இந்த எல்லையற்ற நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்வதால், வெறுப்பது பற்றிய கேள்வியே கிடையாது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வசிப்பதுடன், தூய்மை ஆகுவதற்குரிய பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: “தம்பதிகளாகிய நாங்கள் ஒன்றாக வாழும்போது, தூய்மையாக இருந்து, தூய உலகின் அதிபதிகள் ஆகுவோம்”. இருப்பினும், சிலர் சித்தி அடைவதில்லை. தன்னுடைய கரங்களில் பாபா சமயநூல்கள் எவற்றையும் கொண்டிருப்பதில்லை. சிவபாபா கூறுகிறார்: ஸ்ரீகிருஷ்ணர் அன்றி, நானே பிரம்மாவினூடாக வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை உங்களுக்குக் கூறுகிறேன். அத்தகையதொரு வித்தியாசம் உள்ளது! அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இக்கல்வியில் முழுக் கவனத்தையும் செலுத்துங்கள். தந்தையையோ, ஆசிரியரையோ சற்குருவையோ அவதூறு செய்யக்கூடிய செயல்கள் எவற்றையும் செய்யாதீர்கள். தந்தைக்கு அகௌவரம் அளிக்கக்கூடிய செயல்கள் எவற்றையும் செய்யாதீர்கள்.2. ஞானக்கடலைக் கடையும் பழக்கத்தை உருவாக்குங்கள். தந்தை உங்களுக்குக் கொடுக்கும் ஞானத்தைக் கடைந்து, எல்லையற்ற சந்தோஷத்தில் நிலைத்திருங்கள். எவரையும் வெறுக்க வேண்டாம்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் முழுமை ஒளியால் அறியாமைத் திரை அகற்றப்படும் வகையில் தேடும் விளக்காக (சேர்ச்லைட்) ஆகுவீர்களாக.வெளிப்படுத்துகைக்கான நேரம் இப்போது நெருங்கி வருகிறது. ஆகவே, அகநோக்கு உடையவராகி, உங்களை ஆழ்ந்த அனுபவங்கள் என்ற இரத்தினங்களால் நிரப்புங்கள். உங்களின் முழுமை ஒளியால் அறியாமைத் திரை நீக்கப்படும் வகையில் ஒரு சேர்ச்லைட் ஆகுங்கள். நீங்கள் உலகைக் குழப்பத்தில் இருந்து பாதுகாத்து, உலகைச் சந்தோஷமாகவும் தங்கமாகவும் ஆக்குகின்ற பூமியின் நட்சத்திரங்கள் ஆவீர்கள். நீங்கள் உலகிற்கு சந்தோஷம் மற்றும் அமைதியின் மூச்சை வழங்கும் ஒரு கருவியான, அதி மேன்மையான ஆத்மா ஆவீர்கள்.
சுலோகம்:
மாயை மற்றும் சடப்பொருளின் எந்தவிதமான கவர்ச்சியில் இருந்தும் விலகியிருங்கள். நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பீர்கள்.உங்களின் சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.
உங்களின் மனதில் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருக்கும் இயல்பான பயிற்சியை விருத்தி செய்தால், உங்களின் மனம் மும்முரமாக இருக்கும். நீங்கள் உங்களின் மனதின் எந்தவிதமான குழப்பத்தில் இருந்தும் இயல்பாகவே அப்பால் செல்வீர்கள். சிலவேளைகளில், உங்களின் முயற்சிகளை இட்டு நீங்கள் இப்போது மனச்சோர்வு அடையக்கூடும். ஆனால் அது இனிமேலும் நடக்காது. மந்திரவித்தைக்குரிய மந்திரம் இருக்கும்.