21.02.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே திறமைச்சித்தி எய்த வேண்டுமாயின் உங்கள் புத்தியின் யோகம் சற்றேனும் அலைபாயக்கூடாது. ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். எவரது சரீரத்தையும் நினைவு செய்பவரால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது.

கேள்வி:
அதியுயர்ந்த இலக்கு என்ன?

பதில்:
ஆத்மாக்களாகிய நீங்கள் மரணித்து வாழ்ந்து ஒரேயொரு தந்தைக்கு மாத்திரமே உரியவர்களாக இருப்பதுடன் பிறர் எவரையும் நினைவு செய்யாது உங்கள் சரீர உணர்வை முற்றாக மறந்திருத்தலே அதியுயர்ந்த இலக்காகும். சதா ஆத்ம உணர்வு உடையவராக உங்கள் ஸ்திதியை உருவாக்குவதே அதியுயர்ந்த இலக்கு. இதன் மூலமே உங்கள் கர்மாதீத ஸ்திதியை நீங்கள் அடைவீர்கள்.

பாடல்:
நீங்களே அன்புக்கடல் நாங்கள் ஒரு துளிக்காக ஏங்குகின்றோம்..

ஓம் சாந்தி.
இப்பொழுது இப்பாடல் தவறானது. அன்பிற்குப் பதிலாக அது ஞானக்கடல் என்று இருக்க வேண்டும். உங்களால் ஒரு கலசத்தை அன்பினால் நிரப்ப முடியாது. உங்களால் ஒரு கலசத்தைக் கங்கை நீர் போன்றவற்றினால் நிரப்ப முடியும். எனவே அப்புகழ் பக்தி மார்க்கத்திற்கு உரியது. அது பிழையானது இது சரியானது. முதலில் தந்தையே ஞானக்கடல். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானம் சிறிதளவு இருந்தாலும் உங்களால் மிகவும் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும். இந்த நேரத்தில் குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக இந்த உயிருள்ள தில்வாலா ஆலயத்தின் அங்கத்தவர்கள் என்பதை அறிவீர்கள். அந்தத் தில்வாலா ஆலயம் உயிரற்றது. ஆனால் இதுவோ உயிருள்ள தில்வாலா ஆலயம். இதுவும் அற்புதமாகும். நீங்கள் இங்கே உயிருள்ள வடிவில் அமர்ந்திருக்கின்றீர்கள். ஆனால் அதுவே உங்கள் உயிரற்ற ஞாபகார்த்தம். எவ்வாறாயினும் மனிதர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் முன்னேறிச் செல்லும்பொழுது இது நிச்சயமாகத் தந்தையான கடவுளின் பல்கலைக்கழகம் என்பதையும் கடவுளே இங்கே கற்பிக்கின்றார் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். இதனை விடவும் மகத்தான பல்கலைக்கழகம் எதுவும் இருக்க முடியாது. இதுவே உயிருள்ள தில்வாலா ஆலயம் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். அந்தத் தில்வாலா ஆலயம் உங்களின் சரியான ஞாபகார்த்தம் ஆகும். மேலே கூரையில் அவர்கள் சூரிய வம்சத்தையும் சந்திர வம்சத்தையும் சித்தரித்துள்ளார்கள். அத்துடன் ஆதிதேவரும் ஆதிதேவியும் குழந்தைகளாகிய நீங்களும் தரையில் யோகத்தில் அமர்ந்திருப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளீர்கள். இவரது பெயர் பிரம்மா ஆகும். சரஸ்வதி பிரம்மாவின் புத்திரியாவார். பிரஜாபிதா பிரம்மா இருப்பதால் நிச்சயமாக கோபியரும் கோபிகைகளும் இருக்க வேண்டும். அந்த உருவங்கள் உயிரற்றவை. ஒருவர் மரணித்தவுடன் அவர்கள் மிக விரைவில் அவரது படம் ஒன்றை உருவாக்குவதைப் போன்றே அந்த உருவங்களும்; கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு உரியவை. அவர்களுக்கு அவரது பதவியோ அல்லது அவரது வாழ்க்கை வரலாறோ தெரியாது விட்டாலோ அல்லது அதில் அவரது தொழிலை அவர்கள் எழுதாது விட்டாலோ அந்தப் புகைப்படத்தினால் எப்பயனும் இல்லை. ஏனெனில் அதன் மூலமே நீங்கள் அவர் என்ன குறிப்பிட்ட வேலையைச் செய்தார் என்பதைக் கண்டறிந்து கொள்கின்றீர்கள். இப்பொழுது தேவர்களுக்கான ஆலயங்கள் இருந்த பொழுதிலும் எவருக்கும் அவர்களது தொழில்களையோ அல்லது வாழ்க்கை வரலாறுகளையோ தெரியாது. எவருக்கும் அதிமேலான சிவபாபாவைத் தெரியாது. இந்த நேரத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு அனைவரின் வாழ்க்கை வரலாறுகளும் தெரியும். கடந்த காலத்தில் பிரதானமானவர்களாக இருந்தவர்கள் யார் என்பதையும் அவர்கள் ஏன் பூஜிக்கப்பட்டார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். கடவுளே அதிமேலானவர். மக்கள் சிவராத்திரியைக் கொண்டாடுகின்றார்கள். ஆகையால் அவர் நிச்சயமாக அவதரித்திருக்க வேண்டும். எவ்வாறாயினும் அவர் எப்பொழுது அவதரித்தார் என்பதையோ அவர் வந்தபொழுது என்ன செய்தார் என்பதையோ எவரும் அறிய மாட்டார்கள். சிவனுடன் சேர்ந்து பிரம்மாவும் உள்ளார். ஆதிதேவரும் ஆதிதேவியும் யார்? அவர்கள் ஏன் அதிகளவு கரங்களுடன் காட்டப்பட்டுள்ளார்கள்? அது பின்னர் இடம்பெற்ற விரிவாக்கத்தின் அடையாளமாகும். பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் அதிகளவு விரிவாக்கம் இடம்பெறுகின்றது. பிரம்மாவிற்கு 100 கரங்கள் அல்லது 1000 கரங்கள் இருப்பதாக அவர்கள் அவரைப் பற்றிக் கூறுகின்றார்கள். அவர்கள் விஷ்ணு அல்லது சங்கரர் ஆகியோரின் பல கரங்களைப் பற்றிப் பேசுவதில்லை. அவர்கள் ஏன் பிரம்மாவையிட்டு இவ்வாறு கூறுகின்றார்கள்? முழுப் படைப்பும் பிரஜாபிதா பிரம்மாவை பற்றியது. பௌதீகமாக அந்தளவு கரங்கள் இருப்பது என்ற கேள்விக்கு இடமில்லை. அவர்கள் பிரம்மாவின் 1000 கரங்களைப் பற்றி பேசியபொழுதிலும் அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. இப்பொழுது பிரம்மாவிற்கு எத்தனை கரங்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் நடைமுறை ரீதியில் பார்க்க முடியும். இந்தக் கரங்கள் எல்லையற்றவை. அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவை ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் அவரது தொழில் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. ஓர் ஆத்மாவிற்குக் கரங்கள் இருக்க முடியாது. சரீரத்திற்கே கரங்கள் உள்ளன. மில்லியன் கணக்கான சகோதரர்கள் இருப்பதால் எத்தனை கரங்கள் இருக்கும்? முதலில் இந்த ஞானம் முழுவதையும் அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதே இவ்விடயங்கள் அனைத்தையும் பிறருக்குக் கூற முடியும். ஒரேயொரு தந்தை முதலாவதாகவும் பிரதானமாகவும் கூறுவது: என்னையும் உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். ஞானக் கடலும் நினைவு கூரப்பட்டுள்ளார். அவர் பல ஞானக் கருத்துக்களைக் கொடுக்கின்றார். இக் கருத்துக்கள் அனைத்தையும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியும் என்றில்லை. சாராம்சம் மாத்திரமே புத்தியில் இருக்கின்றது. இறுதியாக எஞ்சியுள்ள சாராம்சம் ‘மன்மனாபவ’ ஆகும். ஸ்ரீ கிருஷ்ணர் ஞானக்கடலாக இருக்க முடியாது. அவர் படைப்பில் ஒருவர். ஒரேயொரு தந்தை மாத்திரமே படைப்பவர். தந்தையே அனைவருக்கும் ஆஸ்தியைக் கொடுப்பதுடன் அனைவரையும் திரும்பவும் வீட்டிற்கு அழைத்தும் செல்கின்றார். தந்தையினது வீடும் ஆத்மாக்களின் வீடும் மௌன தாமம் ஆகும். விஷ்ணு தாமம் தந்தையின் வீடு என்று கூறப்படுவதில்லை. ஆத்மாக்கள் வாழ்கின்ற அசரீரி உலகமே (தந்தையின்) வீடாகும். விவேகமான குழந்தைகளால் இவ்விடயங்கள் அனைத்தையும் கிரகித்துக் கொள்ள முடியும். இந்த ஞானம் முழுவதும் எவரது புத்தியிலும் நிலைத்திருக்கவும் முடியாது அல்லது அவை அனைத்தையும் ஒரு தாளில் எழுதி விடவும் முடியாது. நீங்கள் இம்முரளிகள் அனைத்தையும் சேகரித்தால் முழு மண்டபமுமே அவற்றினால் நிறைந்து விடும். ஏனைய கல்விகளில் பல புத்தகங்கள் உள்ளன. மக்கள் தமது பரீட்சையில் சித்தி எய்தியதும் அவர்களின் புத்தியில் அதன் சாராம்சம் மாத்திரமே எஞ்சியிருக்கின்றது. அவர்கள் தமது சட்டக்கல்விப் பரீட்சையில் சித்தி எய்தியதும் அவர்களுக்கு ஒரு பிறவிக்கான தற்காலிகமான சந்தோஷம் உள்ளது. அது அவர்களுக்கு அழியக்கூடிய வருமானத்தை ஈட்டிக் கொடுக்கின்றது. இந்தத் தந்தை எதிர்காலத்துக்கான அழிவற்ற வருமானத்தை உங்களை ஈட்டச் செய்கின்றார். குருமார்கள் புனிதர்கள் போன்றோர் அழியக்கூடிய வருமானத்தை ஈட்டவே உதவி செய்கின்றார்கள். விநாசம் நெருங்கி வரும்பொழுது அந்த வருமானம் குறைவடையும். உண்மையில் வருமானம் அதிகரிக்கின்றது என நீங்கள் கூறுவீர்கள். ஆனால் அது அவ்வாறில்லை. இவை அனைத்தும் அழிக்கப்பட உள்ளன. முன்னர் அரசர்களிடம் தமது பயன்பாட்டிற்காகச் சொந்த வருமானம் போன்றவை இருந்தன. இக்காலத்தில் அவர்களிடம் அந்தளவு கூட இல்லை. உங்கள் வருமானம் அதிகளவு காலத்திற்கு நீடிக்கின்றது. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதும் உலகில் உள்ள எவருக்கும் இது தெரியாது என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒவ்வொருவரும் இதனை வரிசைக்கிரமமாகவே கிரகிக்கின்றீர்கள். உங்களிற் சிலருக்கு எதனையும் விளங்கப்படுத்த முடியாதுள்ளது. சிலர் தமது உறவினர்கள் நண்பர்கள் போன்றோருக்கு விளங்கப்படுத்துவதாகக் கூறுகின்றார்கள். ஆனால் அதுவும் தற்காலிகமானதே. கண்காட்சிகள் போன்றவற்றில் உங்களால் ஏன் இவ்விடயங்களைப் பிறருக்கு விளங்கப்படுத்த முடியாதுள்ளது? ஏனெனில் நீங்கள் அவற்றை மிகச்சரியாகக் கிரகிக்காததால் ஆகும். உங்களை மிகவும் திறமைசாலிகள் எனக் கருத வேண்டாம். நீங்கள் சேவை செய்வதில் உற்சாகம் கொண்டிருந்தால் நீங்கள் தெளிவாக விளங்கப்படுத்துபவர்கள் கூறுவதைச் செவிமடுக்க வேண்டும். நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்கு உங்களுக்கு உதவி செய்யவே தந்தை வந்துள்ளார். எனவே நீங்கள் சில முயற்சிகளைச் செய்ய வேண்டும். எனினும் அது உங்கள் பாக்கியத்தில் இல்லாதிருந்தால் நீங்கள் ஸ்ரீமத்தை ஏற்றுக் கொள்ளவும் மாட்டீர்கள். அப்பொழுது உங்கள் அந்தஸ்தும் அழிக்கப்படுகின்றது. இந்த இராச்சியம் நாடகத் திட்டத்திற்கு ஏற்பவே ஸ்தாபிக்கப்படுகின்றது. இந்த இராச்சியத்திற்குப் பல்வேறு வகையினரும் தேவைப்படுகிறார்கள். சிலர் நல்ல பிரஜைகளாகவும் சிலர் இன்னமும் குறைவானவர்களாகவும் ஆகுகின்றார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்க வந்திருக்கின்றேன். தில்வாலா ஆலயத்தில் அரசர்களின் உருவங்களும் உள்ளன. பூஜிக்கத் தகுதியுடையவர்கள் ஆகுபவர்கள் பின்னர் பூஜிப்பவர்கள் ஆகுகின்றார்கள். அந்த அரசர்களினதும் அரசிகளினதும் அந்தஸ்து உயர்ந்தது. அவர்கள் பாவப் பாதையில் விழும்பொழுதும் செல்வந்தர்களைக் கொண்ட இராச்சியங்களும் இருந்தன. ஜெகநாதர் ஆலயத்தில் அனைவரும் கிரீடத்துடன் காட்டப்பட்டுள்ளார்கள். பிரஜைகள் கிரீடம் அணிவதில்லை. கிரீடம் அணிந்துள்ள அந்த அரசர்களும் அரசிகளும் விகாரத்தில் ஈடுபட்டிருப்பதைப் போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கும் பெருஞ் சந்தோஷமும் செல்வமும் உள்ளன. ஆனால் சிலரிடம் செல்வம் அதிகளவும் சிலரிடம் குறைவாகவும் இருக்கின்றன. வைரம் பதித்த மாளிகைகளுக்கும் வெள்ளி பதித்த மாளிகைகளுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. ஆகையால் குழந்தைகளான உங்களிடம் தந்தை கூறுகின்றார்: உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு நல்ல முயற்சி செய்யுங்கள். அரசர்கள் பெருஞ் சந்தோஷத்துடன் இருக்கின்றார்கள். அங்கு அனைவருமே சந்தோஷமாக இருக்கின்றார்கள். ஆனால் இங்கோ அனைவரும் சந்தோஷம் அற்றிருக்கின்றார்கள். இங்கே அனைவரும் சுகயீனம் போன்றவற்றை அனுபவம் செய்கின்றார்கள். அங்கு சந்தோஷம் மாத்திரமே உள்ளது. இருப்பினும் அவர்களது அந்தஸ்து வரிசைக்கிரமமாகவே உள்ளது. தந்தை கூறுகின்றார்: சதா தொடர்ந்தும் முயற்சியைச் செய்து கொண்டிருங்கள். சோம்பல் அடையாதீர்கள். நீங்கள் செய்கின்ற முயற்சிகளிலிருந்து நாடகத்திற்கு ஏற்ப நீங்கள் எத்தகைய சற்கதியைப் பெறுவீர்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. சற்கதியை அடைய வேண்டுமாயின் நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். ஒரு மாணவர் தனது ஆசிரியரின் வழிகாட்டல்களைப் பின்பற்றாமல் இருந்தால் அவர் பயனற்றவர் எனப்படுவார். நீங்கள் அனைவரும் நீங்கள் செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப வரிசைக்கிரமமாக இருக்கின்றீர்கள். உங்களால் ஏதோ ஒன்றைச் செய்ய முடியாதுள்ளது என்று நீங்கள் கூறினால் நீங்கள் எதனைக் கற்பீர்கள்? நீங்கள் நன்றாக விளங்கப்படுத்துகின்றீர்கள் என்று மக்கள் கூறும்வகையில் கற்று விவேகிகளாக வேண்டும். எனினும் ஆத்மாக்களாகிய நீங்கள் மரணித்து வாழ்ந்து ஒரேயொரு தந்தைக்கு மாத்திரமே உரியவர்களாக இருக்க வேண்டும். வேறு எவரையும் நினைவு செய்யாமல் உங்கள் சரீர உணர்வு அனைத்தையும் துண்டிப்பதே அதியுயர்ந்த இலக்காகும். நீங்கள் அனைத்தையும் மறக்க வேண்டும். உங்கள் ஸ்திதியை முற்றாக ஆத்ம உணர்வு உடையவராக்கி விடுவதே அதியுயர்ந்த இலக்காகும். அங்கு இருக்கின்ற ஆத்மாக்கள் சரீரமற்றவர்கள். அவர்கள் இங்கு வந்து சரீரங்களை ஏற்றுக் கொள்கின்றார்கள். இப்பொழுது நீங்கள் இங்கிருக்கும் பொழுது சரீரம் அற்றவர்களாகவே உங்களைக் கருத வேண்டும். இந்த முயற்சி மிகவும் சிறந்தது. நீங்கள் ஆத்மாக்களாக உங்களைக் கருதி உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைய வேண்டும். ஒரு பாம்பிற்குக் கூட தனது பழைய தோலை அகற்றி விடுகின்ற அறிவு உள்ளது. நீங்களும் உங்கள் சரீர உணர்வைத் துறக்க வேண்டும். நீங்கள் பரந்தாமத்தில் இருக்கும் பொழுது எவ்வாறாயினும் ஆத்ம உணர்வில் இருக்கின்றீர்கள். இங்கு நீங்கள் ஒரு சரீரத்தில் இருக்கும் பொழுதே உங்களை ஓர் ஆத்மாவென்று கருத வேண்டும். சரீர உணர்வு முடிக்கப்பட வேண்டும். இது கடவுளே வந்து கற்பிக்க வேண்டியதொரு மிகப் பெரிய பரீட்சைக்குரியது. ‘சரீரத்திற்கான சகல உறவுமுறைகளையும் துறந்து எனக்கு உரியவர்கள் ஆகுங்கள்’ என வேறு எவருமே கூற மாட்டார்கள். உங்களை அசரீரியான ஆத்மாக்கள் என்று கருதுங்கள். உங்களுக்கு ஏனைய எந்த உணர்வும் இருக்கக்கூடாது. மாயை ஒருவர் மற்றவரின் சரீர உணர்வில் உங்களைச் சிக்க வைக்கின்றாள். இதனாலேயே இந்தச் சரீரதாரியைக் கூட நீங்கள் நினைவு செய்யக்கூடாது என்று பாபா உங்களிடம் கூறுகின்றார். பாபா கூறுகின்றார்: உங்கள் சொந்த சரீரத்தைக் கூட நீங்கள் மறந்து ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்ய வேண்டும். இதற்கு அதிகளவு முயற்சி தேவையாகும். மாயை நல்ல குழந்தைகளைக் கூட பிறரின் பெயரிலும் வடிவிலும் சிக்க வைத்து விடுகின்றாள். அந்தப் பழக்கம் மிகவும் தீமையானது. ஒருவரது சரீரத்தை நினைவு செய்வது தீய ஆவிகளை நினைவு செய்வதைப் போன்றதாகும். ஒரேயொரு சிவபாபாவை மாத்திரம் நினைவு செய்யுமாறு நான் உங்களிடம் கூறுகின்றேன். ஆனால் நீங்கள் ஐந்து தீய ஆவிகளையே தொடர்ந்தும் நினைவு செய்கின்றீர்கள். எவரது சரீரத்தின் மீதும் எந்த பற்றும் இருக்கக்கூடாது. உங்கள் ஆசிரியருடன் நீங்கள் கற்க வேண்டும். ஆனால் அந்த ஆசிரியரின் பெயரிலோ வடிவத்திலோ நீங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது. ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்கு முயற்சி தேவை. பல குழந்தைகளும் தமது அட்டவணைகளை பாபாவிற்கு அனுப்புகின்றார்கள். ஆனால் அவர்களின் மீது பாபாவிற்கு நம்பிக்கை இல்லை. சிலர் கூறுகின்றார்கள்: நான் சிவபாபாவைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்வதில்லை. எவ்வாறாயினும் அவர்களது நினைவு ஒரு சதப் பெறுமதியும் அற்றது என்பது பாபாவிற்குத் தெரியும். நினைவு செய்வதற்கே அதிகளவு முயற்சி தேவையாகும். ஆத்மாக்கள் எவராவது ஒருவரிடம் சிக்கிக் கொள்கிறார்கள். சரீரதாரியை நினைவு செய்தல் என்றால் ஐந்து தீய ஆவிகளையும் நினைவுசெய்தல் என்றே அர்த்தமாகும். அது ஐந்து தீய ஆவிகளின் வழிபாடு என்றும் அழைக்கப்படுகின்றது. நீங்கள் தீய ஆவிகளை நினைவு செய்கின்றீர்கள். இங்கே நீங்கள் ஒரெயொரு சிவபாபாவையே நினைவு செய்கின்றீர்கள். வழிபாடு செய்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் பக்தியின் பெயர் சுவடு அனைத்தையும் முழுமையாக முடித்துள்ளீர்கள் என்பதால் நீங்கள் ஏன் அந்த விக்கிரகங்களை நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? அவையும் களிமண்ணாலேயே செய்யப்பட்டுள்ளன. தந்தை கூறுகின்றார்: இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. நான் உங்களைப் பூஜிப்பவர்களிலிருந்து பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக மாற்றுகின்றேன். நீங்கள் எந்தச் சரீரதாரியையும் நினைவு செய்யக்கூடாது. தந்தையைத் தவிர வேறு எவரையும் அல்ல. ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகும் பொழுது தூய்மையான சரீரங்களைப் பெறுவீர்கள். இப்பொழுது அந்தச் சரீரங்கள் தூய்மையானவை அல்ல. ஆத்மாக்கள் சதோபிரதானிலிருந்து சதோ ரஜோ தமோவாக மாறும்பொழுது அதற்கேற்ப சரீரங்களைப் பெறுகின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் சரீரங்கள் இங்கே தூய்மையாக மாட்டாது. இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இக்கருத்துகளை நன்றாகப் புரிந்துகொண்டு அதனைப் பிறருக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துபவர்களின் புத்தியிலேயே அவை நிலைத்திருக்கும். ஆத்மாக்களே சதோபிரதானாக வேண்டும். தந்தையை நினைவு செய்வதற்கே பெரும் முயற்சி தேவை. உங்களிற் சிலருக்கு சற்றேனும் நினைவுசெய்ய முடிவதில்லை. திறமைச்சித்தி எய்ந்த வேண்டுமாயின் உங்கள் புத்தியின் யோகம் எங்கேனும் சற்றும் அலைபாயக் கூடாது. ஒரேயொரு தந்தையின் நினைவு மாத்திரமே இருக்க வேண்டும். ஆனால் உங்களின் புத்தியின் யோகம் தொடர்ந்தும் அலைபாய்கின்றது. நீங்கள் பிறரை எந்தளவிற்கு அதிகமாக உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்குகின்றீர்களோ அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். பிறரது சரீரத்தை நினைவு செய்பவர்களால் ஒருபொழுதும் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது. இங்கேயே நீங்கள் திறமைச்சித்தி எய்த வேண்டும். இந்த முயற்சியை நீங்கள் செய்யாதிருந்தால் எவ்வாறு உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும்? பிறரது சரீரத்தை நினைவு செய்பவர்களால் எந்த முயற்சியையும் செய்ய முடியாது. தந்தை கூறுகின்றார்: முயற்சி செய்பவர்களைப் பின்பற்றுங்கள். இவரும் ஒரு முயற்சியாளர். இந்த ஞானம் தனித்துவமானது. இவ் உலகில் உள்ள எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. ஆத்மாக்கள் எவ்வாறு மாறுகின்றார்கள் என்பது எவரது புத்தியிலும் இல்லை. இவை அனைத்திற்கும் மறைமுகமான முயற்சி தேவை. பாபா மறைமுகமானவர். உங்கள் இராச்சியத்தை நீங்கள் எவ்வாறு பெறுகின்றீர்கள்? இதற்கு நீங்கள் சற்றேனும் சண்டை சச்சரவில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து விடயமும் இந்த ஞானத்தையும் யோகத்தையும் பற்றியது. இதற்காக நீங்கள் எவருடனும் சண்டையிடத் தேவையில்லை. ஆத்மாக்களைத் தூய்மையாக்கவே முயற்சி செய்யப்படுகின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகும்பொழுது நீங்கள் தூய்மையற்ற சரீரங்களை எடுக்க ஆரம்பிக்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் மீண்டும் ஒருமுறை தூய்மையாகி வீடு திரும்ப வேண்டும். இதற்குப் பெரும் முயற்சி தேவை ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் எத்தகைய முயற்சி செய்கின்றீர்கள் என்பதை பாபாவால் புரிந்துகொள்ள முடியும். இது சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியமாகும். நீங்கள் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் சேவை செய்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் சேவை செய்யாதிருந்தால் நீங்கள் சதப் பெறுமதியான அந்தஸ்தையே பெறுவீர்கள். நீங்கள் இங்கு தந்தையிடம் சேவை செய்வதற்காக வந்த பின்னர் சேவை செய்யாதிருந்தால் நீங்கள் எந்த அந்தஸ்தைக் கோரப் போகின்றீர்கள்? இங்கேயே ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. வேலையாட்கள் போன்றோரும் இங்கேயே உருவாக்கப்பட வேண்டும். இப்பொழுதே நீங்கள் இராவணனை வெற்றி கொள்கின்றீர்கள். வேறு எந்த யுத்தமும் இல்லை. இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்ற இந்த விடயம் மிகவும் மறைமுகமானது. நீங்கள் உங்களுடைய யோக சக்தியின் மூலம் உங்கள் உலக இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். நீங்கள் உங்களுடைய அமைதி தாமத்தில் வசிப்பவர்கள் என்பதை அறிவீர்கள். உங்கள் எல்லையற்ற வீட்டை மாத்திரமே குழந்தைகளாகிய நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். நாங்கள் எங்கள் பாகங்களை இங்கு நடிப்பதற்கு வந்துள்ளோம். பின்னர் நாங்கள் அந்த வீட்டிற்குத் திரும்பிச் செல்வோம். ஆத்மாக்கள் எவ்வாறு வீடு திரும்புகின்றார்கள் என்பதை எவரும் அறியார். அதன்பின்னர் ஆத்மாக்கள் மீண்டும் நாடகத் திட்டத்திற்கு ஏற்ப கீழே இங்கு வரவேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. எந்தச் சரீரதாரிகள் மீதும் பற்று வைக்காதீர்கள். ஒருவரது சரீரத்தை நினைவுசெய்தல் என்றால் தீய ஆவிகளை நினைவு செய்தலாகும். ஆகவே எவரது பெயரிலோ அல்லது வடிவத்திலோ சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் சொந்தச் சரீரத்தையும் மறந்து விட வேண்டும்.

2. எதிர்காலத்திற்கான அழியாத வருமானத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். விவேகிகளாகி உங்கள் புத்தி இந்த ஞானக் கருத்துக்களைக் கிரகிக்குமாறு செய்யுங்கள். தந்தை விளங்கப்படுத்துகின்ற விடயங்களைப் புரிந்துகொண்டு பின்னர் அவற்றைப் பிறருக்கும் விளங்கப்படுத்துங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களின் வெற்றியின் விழிப்புணர்வுடன் உங்களின் எதிரியான மாயையை வரும்படி அழைக்கின்ற ஒரு வெற்றிபெற்ற மகாவீர் ஆகுவீர்களாக.

வெற்றிபெற்ற மகாவீர்க் குழந்தைகள் தமது பரீட்சைத்தாளைப் பார்த்துப் பயப்பட மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் திரிகாலதரிசிகளாக இருப்பதனால் ஒவ்வொரு கல்பத்திலும் தாம் வெற்றியாளர்கள் ஆகுவதை அவர்கள் அறிவார்கள். மகாவீர் குழந்தைகளால் ஒருபொழுதும் ‘பாபா மாயையை எங்களிடம் அனுப்பாதீர்கள். கருணை காட்டுங்கள். எனக்கு ஆசீர்வாதங்களைக் கொடுங்கள். எனக்குச் சக்தி கொடுங்கள். நான் என்ன செய்வது? எனக்குப் பாதையைக் காட்டுங்கள்!’ என்று சொல்ல முடியாது. இது பலவீனம் ஆகும். மகாவீர் குழந்தைகள் தமது எதிரியை நோக்கி அழைப்பார்கள்: வாருங்கள் அப்போது தான் என்னால் வெற்றி பெற முடியும்.

சுலோகம்:
நீங்கள் சமமாகவும் சம்பூரணமாகவும் ஆகவேண்டும் என்ற எச்சரிக்கையைக் காலம் உங்களுக்கு விடுக்கிறது.

ஏகாந்தத்தின் மீது அன்பு வைத்து ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.

எந்த வகையான வெற்றி பெறுவதற்கும் முதலில் உங்களுக்கு ஏகாந்தமும் ஒருமுகப்படுதலும் தேவை. இந்த இரண்டு விடயங்களையும் பயன்படுத்துவதன் மூலம் உங்களால் வெற்றி பெற முடியும். உங்களின் ஞாபகார்த்தப் படங்களின் மூலம் வெற்றி பெறுவதற்காக இரண்டு விசேடமான குணவியல்புகளை மக்கள் கடைப்பிடிக்கிறார்கள்: ஏகாந்தம் மற்றும் ஒருமுகப்படுத்தல். நீங்கள் பௌதீக ரூபத்திலும் இந்த வழிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ஒருமுகப்படுத்தல் குறைவடைவதால் உங்களின் திடசங்கற்பமான நம்பிக்கையும் குறைவடைகிறது. நீங்கள் ஏகாந்தத்தில் இருப்பது குறைவதனால் சாதாரணமான எண்ணங்கள் விதையைப் பலவீனமாக்கி விட்டன. ஆகவே இந்த வழிமுறையைப் பயன்படுத்தி ஒரு வெற்றி சொரூபம் ஆகுங்கள்.