21.03.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் யோக சக்தி மூலம் முழு உலகையும் தூய்மையாக்க வேண்டும். யோக சக்தி மூலம் மாயையை வெல்வதால், நீங்கள் உலகை வென்றவர்களாக முடியும்.

கேள்வி:
தந்தையின் பாகம் என்ன? எதன் அடிப்படையில் குழந்தைகளாகிய நீங்கள் அந்தப் பாகத்தை இனங்கண்டு கொண்டீர்கள்?

பதில்:
அனைவருடைய துன்பத்தையும் அகற்றிச் சந்தோஷத்தை அளிப்பதும், அனைவரையும் இராவணனின் சங்கிலிகளில் இருந்து விடுவிப்பதும் தந்தையின் பாகம் ஆகும். தந்தை வரும்பொழுது. பக்தியாகிய இருள் முடிவடைகிறது. தந்தையே உங்களுக்கு அவருடைய சொந்த அறிமுகத்தையும் அவருடைய சொத்தின் அறிமுகத்தையும் கொடுக்கிறார். ஒரேயொரு தந்தையை அறிந்துகொள்வதால், நீங்கள் அனைத்தையும் அறிகிறீர்கள்.

பாடல்:
நீங்களே தாயும், நீங்களே தந்தையும்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் “ஓம் சாந்தி” என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா எனவும், நீங்கள் இந்த உலக நாடகத்தில் பிரதான பாகங்களைக் கொண்டிருக்கிறீர்கள் எனவும் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். யாருக்கு இந்தப் பாகங்கள் உள்ளன? ஆத்மாக்கள் சரீரங்களை ஏற்று, தங்கள் பாகங்களை நடிக்கிறார்கள். ஆகவே அவர் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களை ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக்குகிறார். நீங்கள் நீண்டகாலமாகச் சரீர உணர்வுடையவர்களாக இருந்து வந்துள்ளீர்கள். இப்பொழுது உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். நாடகத் திட்டத்துக்கேற்ப இப்பொழுது எங்கள் பாபா வந்துள்ளார். தந்தை இரவில் வருகிறார். அவர் எப்பொழுது வருகிறார் என்பதற்கான திகதியோ அல்லது நேரமோ பதிவு செய்யப்படவில்லை. ஒரு லௌகீகப் பிறவியை எடுப்பவர்களுக்கு ஒரு திகதியும் நேரமும் உள்ளன. அந்த ஒரேயொருவர் பரலோகத் தந்தை. அவர் ஒரு லௌகீகப் பிறவியை எடுப்பதில்லை. அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்புக்கான திகதி, நேரம் போன்றவற்றைக் கொடுக்கிறார்கள். அந்த ஒரேயொருவருக்கு, (சிவன்) அவர் ஒரு தெய்வீகப் பிறவியை எடுக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. தந்தை இவரில் பிரவேசித்து, இது ஓர் எல்லையற்ற நாடகம் என்று எங்களுக்குக் கூறுகிறார். இந்நாடகத்தில், அரைக் கல்பமாக இரவே உள்ளது. இரவு உள்ளபொழுதே, காரிருள் உள்ளபொழுதே நான் வருகிறேன். அதற்கெனத் திகதியோ அல்லது நேரமோ கிடையாது. தற்பொழுது, பக்தியும் தமோபிரதானாக உள்ளது. அரைக் கல்பமாக எல்லையற்ற பகல் உள்ளது. தந்தையே கூறுகிறார்: நான் இவரில் பிரவேசித்துள்ளேன். “கடவுள் பேசுகிறார்” எனக் கீதையில் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், எம் மனிதரும் கடவுளாக இருக்க முடியாது. ஸ்ரீகிருஷ்ணரும் தெய்வீகக் குணங்களை உடையவர். இது மனிதர்களின் உலகம்; இது தேவர்களின் உலகம் அல்ல. பாடப்பட்டுள்ளது: “பிரம்ம தேவருக்கு வந்தனங்கள்”. அவர் சூட்சும உலகில் வசிப்பவர். அங்கு தசையோ அல்லது எலும்புகளோ கிடையாது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அங்கு சூட்சுமமான வெண்ணிற ஒளியின் நிழலே உள்ளது. ஆத்மாக்கள் அசரீரி உலகில் இருக்கும்பொழுது, அவர்களுக்குச் சூட்சும சரீரங்களோ அல்லது எலும்புகளாலான சரீரங்களோ கிடையாது. மனிதர்கள் இது எதனையும் அறியார்கள். இவை அனைத்தையும் தந்தை மட்டுமே வந்து, உங்களுக்குக் கூறுகிறார். வேறு எவருமன்றி, பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே இதைச் செவிமடுப்பவர்கள். பாரதத்தில் மட்டுமே பிராமணக் குலம் உள்ளது, பிரஜாபிதா பிரம்மாவினூடாக, பிராமண தர்மத்தை பரமாத்மாவாகிய, பரமதந்தை ஸ்தாபிக்கும் பொழுது மட்டுமே, பிராமண தர்மம் இருக்க முடியும். அவர் படைப்பவர் என்று அழைக்கப்பட முடியாது. அவர் ஒரு புதிய படைப்பைப் படைக்கிறார் என்பதல்ல. அவர் அதைப் புத்துயிர் பெறச் செய்கிறார். நீங்கள் அவரை அழைக்கிறீர்கள்: “ஓ பாபா, இத்தூய்மையற்ற உலகில் வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்.” அவர் இப்பொழுது உங்களைத் தூய்மை ஆக்குகிறார். நீங்கள் பின்னர் யோக சக்தி மூலம் இவ்வுலகைத் தூய்மை ஆக்குகிறீர்கள். மாயையை வெல்வதால், நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுகிறீர்கள். யோக சக்தியானது மௌன சக்தி எனவும் அழைக்கப்படுகிறது. ரிஷிகள், முனிவர்கள் போன்றவர்கள் அமைதியை வேண்டுகிறார்கள், ஆனால் அவர்கள் அமைதி என்பதன் அர்த்தத்தை அறிந்து கொள்வதில்லை. இங்கு, நிச்சயமாக நீங்கள் உங்களுடைய பாகங்களை நடிப்பது அவசியம். மௌன தாமமே உங்களுடைய இனிய, மௌனமான இல்லமாகும். மௌன தாமமே உங்கள் வீடு என்பதை இப்பொழுது ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். இங்கு எங்கள் பாகங்களை நடிப்பதற்கே நாங்கள் வந்துள்ளோம். அவர்களும் தந்தையை அழைக்கிறார்கள்: “ஓ தூய்மையாக்குபவரே, துன்பத்தை அகற்றுபவரே, சந்தோஷத்தை அளிப்பவரே, வந்து, இராவணனின் இச்சங்கிலிகளில் இருந்து எங்களை விடுவியுங்கள்!” பக்தி இரவும், ஞானம் பகலும் ஆகும். இரவு முடிவுக்கு வரும்பொழுது, இந்த ஞானத்துக்கு வெற்றி ஏற்படுகின்றது. இது சந்தோஷத்தையும் துன்பத்தையும் பற்றிய ஒரு நாடகம். ஆரம்பத்தில், நீங்கள் சுவர்க்கத்தில் இருந்தீர்கள் எனவும், படிப்படியாக நீங்கள் கீழே வந்து, பின்னர் நரகத்தை அடைந்தீர்கள் எனவும் இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். கலியுகம் எப்பொழுது முடிவுறும் அல்லது சத்திய யுகம் எப்பொழுது ஆரம்பமாகும் என்பதை எவரும் அறியார். தந்தையை அறிந்து கொள்வதால், நீங்கள் அவரிடமிருந்து அனைத்தையும் அறிந்து கொள்கிறீர்கள். மக்;கள் கடவுளைத் தேடுகையில், அதிகளவு தடுமாறித் திரிகிறார்கள். அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது. அவரே வந்து, அவருடைய சொந்த அறிமுகத்தையும், அவருடைய சொத்தின் அறிமுகத்தையும் கொடுக்கும்பொழுது மட்டுமே, அவர்களால் அவரை அறிய முடியும். தந்தையிடம் இருந்தே ஆஸ்தி பெறப்படுகிறது, தாயிடமிருந்து அல்ல. இவரும் தாயாகிய மம்மா என்று அழைக்கப்படுகிறார், ஆனால் நீங்கள் மம்மாவிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவதில்லை. நீங்கள் அவரை (மம்மா) நினைவு செய்யக்கூடாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரரும் சிவனின் குழந்தைகள். இது எவருக்கும் தெரியாது. ஒரேயொரு தந்தை மட்டுமே எல்லையற்ற முழு உலகையும் படைப்பவர். ஏனைய அனைவரும் அவரின் படைப்புக்கள்; அவர்கள் எல்லைக்கு உட்பட்ட படைப்பவர்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். மனிதர்களுக்குத் தந்தையைத் தெரியாது, ஆகவே, அவர்கள் யாரை நினைவுசெய்வார்கள்? ஆகவே தந்தை கூறுகிறார்: அவர்கள் முழுமையாகவே அனாதைகள் ஆகியுள்ளார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தானங்கள் கொடுப்பதே பக்தியிலும், இந்த ஞானத்திலும் - இரண்டிலும் உள்ள அதிமேன்மையான செயல் ஆகும். பக்தி மார்க்கத்தில், மக்கள் கடவுளின் பெயரில் தானம் செய்கிறார்கள். எதற்காக? அவர்களுக்கு நிச்சயமாகச் சில விருப்பங்கள் உள்ளன. அவர்கள் என்னென்ன செயல்களைச் செய்தாலும், அடுத்த பிறவியில் அதன் பலனைப் பெறுவார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவும் செய்கிறார்கள். அவர்கள் எதையெல்லாம் அவர்களின் இந்தப் பிறவியில் செய்தாலும், அவர்களின் அடுத்த பிறவியில் அதன் பலனைப் பெறுவார்கள். அவர்கள் அதைப் பிறவிபிறவியாகப் பெற மாட்டார்கள். அவர்கள் ஒரு பிறவிக்கு மட்டுமே அதன் பலனைப் பெறுகிறார்கள். தானம் செய்வதே சிறந்த செயல். ஒரு தானி புண்ணியாத்மா என்று அழைக்கப்படுகிறார். பாரதம் மகாதானி என்று கூறப்படுகிறது. அவர்கள் பாரதத்தில் செய்வதைப் போன்று, பல்வேறு தானங்களை வேறு நாடுகளில் செய்வதில்லை. தந்தையும் வந்து, குழந்தைகளாகிய உங்களுக்குத் தானம் அளிக்கிறார். பின்னர் குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்குத் தானம் அளிக்கிறீர்கள். “பாபா, நீங்கள் வரும்பொழுது, நாங்கள் உங்களுக்குச் சரீரங்கள், மனங்கள், செல்வம், அனைத்தையும் கொடுப்போம். எங்களுக்கு உங்களைத் தவிர யாருமில்லை” என்று கூறப்பட்டுள்ளது. தந்தை கூறுகிறார்: எனக்கும் குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள். நீங்கள் என்னைத் தந்தையாகிய சுவர்க்கக் கடவுள், அதாவது, சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர் என்று அழைக்கிறீர்கள். நான் வந்து, சுவர்க்க இராச்சியத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன். குழந்தைகளாகிய நீங்கள் “பாபா, இவை அனைத்தும் உங்களுடையவை” என்று கூறி, அனைத்தையும் எனக்குக் கொடுக்கிறீர்கள். பக்தி மார்க்கத்திலும். நீங்கள் “பாபா, இவை அனைத்தும் உங்களால் எங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன” என்று கூறுவது வழக்கம். பின்னர், அவை பயன்படுத்தப்பட்டு முடிந்ததும், நீங்கள் சந்தோஷம் அற்றவர்கள் ஆகுகிறீர்கள். அதுவே பக்தியின் தற்காலிகச் சந்தோஷம். தந்தை விளங்கப்படுத்துகிறார்: பக்தி மார்க்கத்தில், நீங்கள் மறைமுகமாகத் தானம் அளித்துப் புண்ணியத்தைச் செய்வது வழக்கம். நீங்கள் தொடர்ந்தும் அதன் பலனைப் பெற்றீர்;கள். இப்பொழுது, இந்த நேரத்தில், நான் உங்களுக்குச் செயல், பாவச் செயல், நடுநிலைச் செயலின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்துகிறேன். பக்தி மார்க்கத்தில், நீங்கள் என்னென்ன செயல்களைச் செய்திருப்பினும், அதன் தற்காலிகச் சந்தோஷத்தை என் மூலம் பெற்றீர்கள். உலகில் உள்ள வேறு எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. தந்தை மட்டுமே வந்து, உங்களுக்குக் கர்ம தத்துவத்தின் ஆழமான கருத்துக்;களைக் கூறுகிறார். சத்திய யுகத்தில் எவரும் தீய செயல்களைப் புரிவதில்லை. அங்கு சந்தோஷம், சந்தோஷம் மட்டுமே உள்ளது. மக்கள் சுவர்க்கத்தைச் சந்தோஷ தாமமாக நினைவுசெய்கிறார்கள். அனைவரும் இப்பொழுது நரகத்தில் இருக்கிறார்கள், அப்பொழுதும், இன்ன இன்னார் சுவர்க்கத்துக்குச் சென்றதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆத்மாக்கள் சுவர்க்கத்தை அதிகளவு விரும்புகிறார்கள்! ஆத்மாவே கூறுகிறார்: “இன்ன இன்னார் சுவர்க்கத்துக்குச் சென்றார்”. எவ்வாறாயினும், ஆத்மாக்கள் இப்பொழுது தமோபிரதானாக இருப்பதால், சுவர்க்கம் என்றால் என்ன என்பதோ அல்லது நரகம் என்றால் என்ன என்பதோ அவர்களுக்குத் தெரியாது. எல்லையற்ற தந்தை கூறுகிறார்: நீங்கள் அனைவரும் மிகவும் தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். உங்களுக்கு இந்த நாடகம் பற்றித் தெரியாது. உலகச் சக்கரம் சுழல்கிறது என்பதையும், ஆகவே அது நிச்சயமாக அதேபோன்று சுழல வேண்டும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மக்கள் அதைக் கூறவேண்டும் என்பதற்காகவே கூறுகிறார்கள். இப்பொழுது சங்கம யுகம் உள்ளது. இந்த ஒரு சங்கமயுகத்தின் புகழ் மட்டுமே உள்ளது. தேவர்களின் இராச்சியம் ஒவ்வோர் கல்பத்திலும் அரைவாசிக்கு நீடிக்கிறது. பின்னர், அந்த இராச்சியம் எங்கே மறைகின்றது? யார் அதை வெல்கின்றார்;கள்? எவருக்கும் இது தெரியாது. தந்தை கூறுகிறார்: அதை இராவணன் வெற்றி கொள்கின்றான். அவர்கள் பின்னர் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மத்தியில் ஒரு போர் நடப்பதாகக் காட்டி உள்ளார்கள். இப்பொழுது தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் ஐந்து விகாரங்களாகிய, இராவணனால் தோற்கடிக்கப்படுகின்றீர்கள், பின்னர் நீங்கள் இராவணன் மீது வெற்றியும் அடைகின்றீர்கள். நீங்கள் பூஜிக்கத் தக்கவர்களாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள்; நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகினீர்கள். ஆகவே, நீங்கள் இராவணனால் தோற்கடிக்கப்பட்டீர்கள். இராவணன் உங்கள் எதிரி என்பதால், இதுநாள்வரை நீங்கள் அவனுடைய கொடும்பாவியை எரித்து வந்துள்ளீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் இதை அறிந்திருக்கவில்லை. இப்பொழுது தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இராவணனால், நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். இந்த விகாரங்கள் மாயை என்று அழைக்கப்படுகின்றன. மாயையை வெல்பவர்கள் உலகை வென்றவர்கள் ஆகுகின்றார்கள். இராவணனே உங்களுடைய மிகப்பழைய எதிரி. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், இப்பொழுது நீங்கள் இந்த ஐந்து விகாரங்களையும் வெற்றி கொள்கின்றீர்கள். உங்களை வெற்றியாளர்கள் ஆக்குவதற்குத் தந்தை வந்துள்ளார். இது ஒரு விளையாட்டு. மாயையிடம் இழப்பவர்கள் அனைத்தையும் இழக்கின்றார்கள், மாயையை வெல்பவர்கள் அனைத்தையும் வெல்கின்றார்கள். தந்தை மட்டுமே உங்களை வெல்லச் செய்கின்றார். இதனாலேயே அவர் சர்வசக்திவான் என்று அழைக்கப்படுகின்றார். இராவணனும் ஒரு சர்வசக்திவானுக்குக் குறைந்தவன் அல்லன். ஆனால் அவன் துன்பம் கொடுப்பதால், புகழப்படுவதில்லை. இராவணன் மிகவும் தீயவன். அவன் உங்கள் இராச்சியத்தை அபகரிக்கின்றான். எவ்வாறு நீங்கள் அதை இழக்கின்றீர்கள் என்பதையும், எவ்வாறு அதைத் திரும்பவும் வெல்கின்றீர்கள் என்பதையும் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாக்களும் அமைதியை விரும்புகின்றார்கள்: “நான் எனது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகின்றேன.” பக்தர்கள் கடவுளை நினைவு செய்கின்றார்கள். ஆனால், அவர்களின் புத்தி கல்லைப் போன்று இருப்பதால், கடவுளே தந்தை என்பதையும், ஆகவே நிச்சயமாக அவரிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெற வேண்டும் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் நிச்சயமாக அதைப் பெறுகின்றீர்கள். ஆனால் நீங்கள் எப்பொழுது அதைப் பெறுகின்றீர்கள் அல்லது பின்னர் எவ்வாறு நீங்கள் அதை இழக்கின்றீர்கள் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதில்லை. தந்தை கூறுகின்றார்: பிரம்மாவின் இச்சரீரத்தில் நான் அமர்ந்திருந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். எனக்கும் பௌதீக அங்கங்கள் தேவை. எனக்கெனச் சொந்தமாகப் பௌதீக அங்கங்கள் இருப்பதில்லை. சூட்சும உலகிலும் புலன் அங்கங்கள் உள்ளன. ஒரு மௌனப் படத்தைப் போன்று அங்கு நீங்கள் நடந்தும் உலாவியும் திரிகின்றீர்கள். அந்தச் சலனப் படங்களும், பேசும் படங்களும் வெளிவந்துள்ளன. ஆகவே தந்தைக்கு அதை விளங்கப்படுத்துவது இலகுவாக உள்ளது. அவர்களுக்குப் பௌதீகச் சக்தி உள்ளது, உங்களுக்கோ யோக சக்தி உள்ளது. அந்த இரண்டு சகோதரர்களும் (ரஷ்யா, அமெரிக்கா) ஒன்றாகச் சேர்ந்தால், அவர்களால் முழு உலகையும் ஆட்சிசெய்ய முடியும். எவ்வாறாயினும், தற்சமயம், அவர்கள் பிரிந்தே இருக்கின்றனர். குழந்தைகளாகிய உங்களிடம் மௌனத்தின் தூய பெருமை இருக்க வேண்டும். நீங்கள் மௌனத்தின் மூலமும், “மன்மனாபவ” என்பதன் அடிப்படையிலும் உலகை வெல்கின்றீர்கள். அவர்கள் விஞ்ஞானத்தை இட்டுப் பெருமைப்படுகிறார்கள். ஆனால் உங்களுக்கோ மௌனத்தின் பெருமை உள்ளது. இதில் நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்கின்றீர்கள். இந்நினைவினூடாக நீங்கள் சதோபிரதான் ஆகுகின்றீர்கள். இதற்காக பாபா உங்களுக்கு மிகவும் இலகுவான வழிமுறையைக் காட்டுகின்றார். உங்கள் சுவர்க்க ஆஸ்தியைக் குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் ஒருமுறை கொடுப்பதற்கு சிவபாபா வந்து விட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் என்னென்ன கலியுகப் பந்தனங்களைக் கொண்டிருந்தாலும், தந்தை கூறுகின்றார்: அவற்றை மறந்து விடுங்கள். உங்களின் ஐந்து விகாரங்களையும் எனக்குத் தானம் செய்யுங்கள். நீங்கள் நீண்டகாலமாக, “எனது, எனது” என்று கூறி வந்துள்ளீர்கள்: “எனது கணவன், இது என்னுடையது, அது என்னுடையது”. அவை அனைத்தையும் மறந்து விடுங்கள். அனைத்தையும் பார்க்கையில், எதிலும் பற்று இல்லாதிருக்க வேண்டும். இவ்விடயங்களைக் குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டும் பாபா விளங்கப்படுத்துகின்றார். தந்தையை அறியாதவர்களால் இப்பாஷையைப் புரிந்துகொள்ள முடியாது. தந்தை வந்து, சாதாரண மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்றார். சத்திய யுகத்திலேயே தேவர்கள் உள்ளார்கள். கலியுகத்தில் சாதாரண மனிதர்களே உள்ளார்கள். இப்பொழுதும், இன்னமும் தேவர்களின் அடையாளங்கள் உள்ளன் விக்கிரகங்கள் உள்ளன. நீங்கள் என்னைத் “தூய்மையாக்குபவர்” என்று அழைக்கின்றீர்கள். நான் சீரழிந்தவர் ஆகுவதில்லை. நீங்கள் கூறுகின்றீர்கள்: “நாங்கள் தூய்மையாக இருந்தோம், பின்னர் நாங்கள் சீரழிந்தவர்களாகவும், தூய்மை அற்றவர்களாகவும் ஆகினோம். இப்பொழுது, நீங்கள் வந்து, எங்களைத் தூய்மையாக்க வேண்டும், அதனால் நாங்கள் எங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியும்.” இது ஆன்மீக ஞானம். இவை இந்த ஞானத்தின் அழிவற்ற இரத்தினங்கள். இந்த ஞானம் புதியது. நான் இப்பொழுது உங்களுக்கு இந்த ஞானத்தைக் கற்பித்து, உங்களுக்குப் படைப்பவரினதும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் இரகசியங்களைக் கூறுகின்றேன். இது இப்பொழுது பழைய உலகம். உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உங்கள் சொந்தச் சரீரங்கள் உட்பட அனைவரிலிருந்தும் உங்கள் பற்று அனைத்தையும் அகற்றுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அனைத்தையும் தந்தைக்குக் கொடுக்கின்றீர்கள். தந்தை பின்னர் 21 பிறவிகளுக்கான உங்கள் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கின்றார். கொடுப்பதும் எடுப்பதும் நடைபெறுகின்றன. தந்தை 21 பிறவிகளுக்கான உங்கள் இராச்சியப் பாக்கியத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். மக்கள் 21 தலைமுறைகளாகிய, 21 பிறவிகளைப் பற்றிப் பேசுகின்றார்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கு முழு ஆயுளையும் கொண்டிருக்கின்றீர்கள் என்றே அர்த்தப்படும். அங்கு, உங்கள் சரீரத்தை மத்திய வயதிலே விட்டு நீங்க மாட்டீர்கள்; அங்கே அகால மரணம் கிடையாது. நீங்கள் அமரர்களாகி, அமரத்துவ தாமத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். அங்கு உங்களுக்கு ஒருபொழுதும் மரணம் வருவதில்லை. இப்பொழுது நீங்கள் மரணிப்பதற்கு முயற்சி செய்கின்றீர்கள். தந்தை கூறுகிறார்: உங்கள் சொந்தச் சரீரங்கள் உட்பட, சரீர உறவுமுறைகள் அனைத்தையும் துறவுங்கள், ஒரேயொரு தந்தையுடனேயே உங்கள் உறவுமுறைகள் அனைத்தையும் வைத்திருங்கள். இப்பொழுது நீங்கள் சந்தோஷ உறவுமுறைகளுக்குள் செல்ல வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் துன்ப பந்தனங்களை மறப்பீர்கள். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வசிக்கையில், நீங்கள் தூய்மையாக வேண்டும். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மட்டும் நினைவுசெய்யுங்கள். அத்துடன், தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். இத்தேவர்களைப் போன்று ஆகுங்கள். இது உங்கள் இலக்கும், இலட்சியமும் ஆகும். இலக்ஷ்மியும் நாராயணனும் சுவர்க்க அதிபதிகளாக இருந்தார்கள். அவர்கள் எவ்வாறு அந்த இராச்சியத்தைக் கோரினார்கள்? அவர்கள் பின்னர் எங்கு சென்றார்கள்? எவருக்கும் இது தெரியாது. இப்பொழுது இத்தெய்வீகக் குணங்களைக் குழந்தைகளாகிய நீங்கள் கிரகிக்க வேண்டும். ஒருபொழுதும் எவருக்கும் துன்பத்தை விளைவிக்காதீர்கள். தந்தையே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அளிப்பவர். ஆகவே, நீங்கள் அனைவருக்கும் இந்தச் சந்தோஷத்துக்கான பாதையைக் காட்ட வேண்டும். அதாவது, குருடர்களுக்கான கைத்தடிகளாக வேண்டும். நீங்களும் குருடர்களாக இருந்தீர்கள், நீங்கள் குருடர்களின் குழந்தைகளாக இருந்தீர்கள். இப்பொழுது தந்தை உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த ஞானமாகிய மூன்றாவது கண்ணைக் கொடுத்துள்ளார். எவ்வாறு தந்தை அவருடைய பாகத்தை நடிக்கின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இப்பொழுது தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்ற அனைத்தும் பின்னர் மறைந்து விடும். தேவர்களுக்கு இந்த ஞானம் கிடையாது. பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாகிய குழந்தைகளான, பிராமணர்களான நீங்கள் மட்டுமே படைப்பவரினதும், படைப்பினதும் இந்த ஞானத்தை அறிந்து கொள்கின்றீர்கள். இதை வேறு எவராலும் அறிய முடியாது. இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் இந்த ஞானம் இருந்திருப்பின், அது மிகவும் ஆதியான காலத்திலிருந்து தொடர்வதாக அர்த்தப்படும். அங்கு, இந்த ஞானத்துக்கான அவசியமில்லை. ஏனெனில் அங்கு அனைவரும் சத்கதியின் ஸ்திதியில் இருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் அனைத்தையும் தந்தைக்குக் கொடுக்கின்றீர்கள், பின்னர் தந்தை உங்களுக்கு அனைத்தையும் 21 பிறவிகளுக்குக் கொடுக்கின்றார். வேறு எவராலும் அத்தகையதொரு தானத்தைச் செய்ய முடியாது. நீங்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்பதை அறிவீர்கள். “பாபா, இவை அனைத்தும் உங்களுக்கு உரியவை. நீங்களே எங்களுக்கு அனைத்தும். நீங்களே தாயும், தந்தையும்”. அவர் தனது பாகத்தை நடிக்கின்றார். அவர் குழந்தைகளாகிய எங்களைத் தத்தெடுத்து, பின்னர் அவரே எங்களுக்குக் கற்பிக்கிறார். அதன்பின்னர், அவரே எங்கள் குருவாகி, எங்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அவர் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். பின்னர் நான் உங்களைத் திரும்பவும் என்னுடன் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன். உருவாக்கப்பட்டுள்ள இந்த யாகமானது, சிவனின் இந்த ஞான யாகம் ஆகும். இதில் நீங்கள் உங்களுடைய சரீரங்கள், மனங்கள், செல்வத்தை அர்ப்பணிக்கின்றீர்கள். நீங்கள் சந்தோஷமாக அனைத்தையும் அர்ப்பணிக்கின்றீர்கள். ஆத்மாக்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். “பாபா, நாங்கள் இப்பொழுது உங்கள் ஸ்ரீமத்தை மட்டுமே பின்பற்றுவோம்”. தந்தை கூறுகிறார்: வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வசிக்கையில், நீங்கள் தூய்மையாக வேண்டும். ஒருவர் 60 வயதை அடையும்பொழுது, ஓய்வுபெறும் ஸ்திதிக்குள் செல்வதற்கு முன்னேற்பாடுகளைச் செய்கின்றார். ஆனால், அவர் வீடு திரும்புவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதில்லை. நீங்கள் இப்பொழுது சற்குருவிடமிருந்து இந்த மந்திரத்தைப் பெறுகின்றீர்கள்: மன்மனாபவ! கடவுள் பேசுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அனைவருக்கும் கூறுங்கள்: இது இப்பொழுது உங்கள் அனைவருக்கும் ஓய்வுபெறும் வயது ஆகும். சிவபாபாவை நினைவு செய்யுங்கள்! நீங்கள் இப்பொழுது உங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியிலிருந்து உங்கள் கலியுகத்துக் கர்ம பந்தனங்கள் அனைத்தையும் அகற்றுவதனாலும், ஐந்து விகாரங்களைத் தானம் அளிப்பதாலும், உங்கள் ஆத்மாவைச் சதோபிரதான் ஆக்குங்கள். மௌனத்தின் தூய பெருமையைப் பேணுங்கள்.

2. இந்த உருத்திர யாகத்தில் சந்தோஷமாக உங்கள் சரீரம், மனம், செல்வத்தை அர்ப்பணிப்பதன் மூலம், அவற்றை ஒரு தகுதிவாய்ந்த வழியில் பயன்படுத்துங்கள். தற்சமயம், தந்தைக்கு அனைத்தையும் கொடுத்து, தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கு உங்கள் இராச்சியத்தைக் கோருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் அதிகார தோரணையின் எந்தவொரு சுவட்டையும் துறப்பதனால், சுய மரியாதை உடைய, ஒரு புண்ணியாத்மா ஆவீர்களாக.

சுய மரியாதை உடைய குழந்தைகளே அனைவருக்கும் மரியாதை கொடுக்கின்ற, அருள்பவர்கள். ஓர் அருள்பவர் என்றால், கருணை நிறைந்தவரும், எந்த ஆத்மா மீதும் சிறிதளவு அதிகாரதோரணையின் எண்ணத்தைக் கூட கொண்டிராதவரும் ஆவார். “இது ஏன் இப்படி இருக்கிறது?” “நீங்கள் இதனைச் செய்திருக்கக் கூடாது” “இது இப்படி இருக்கக்கூடாது” “ஞானம் இதனைக் கூறுகின்றதா?” இவ்விடயங்கள் அனைத்தும் சூட்சும வடிவிலுள்ள அதிகார தோரணையின் சுவடுகள். எவ்வாறாயினும், சுய மரியாதை உடைய புண்ணியாத்மாக்கள், வீழ்ந்து விட்டவர்களை ஈடேற்றி, அவர்களை ஒத்துழைக்கச் செய்வார்கள். ஒருவர் தனது சொந்தச் செயல்களின் விளைவாக வேதனைப்படுகின்றார் அல்லது எதனையாவது செய்பவர்கள் அதன் விளைவை நிச்சயமாகப் பெற்று, விழ வேண்டும் என்று அவர்கள் ஒருபொழுதும் சிந்திக்க மாட்டார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு அத்தகைய எண்ணங்கள் வரக்கூடாது.

சுலோகம்:
திருப்தி, சந்தோஷம் எனும் சிறப்பியல்புகளே நீங்கள் பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு உதவுகின்றன.

அவ்யக்த சமிக்ஞை: சத்தியத்தினதும், நல்ல பண்புகளினதும் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.

பயமின்மையே சத்தியத்தின் சக்தியின் அடையாளம் ஆகும். கூறப்படுகின்றது: “சத்தியம் இருக்கும் பொழுது, ஆத்மா நடனம் ஆடுகின்றார்”- ஏனெனில் சத்தியத்தின் சக்தியைக் கொண்டவர்கள் சதா கவலை அற்றவர்களாகவும், பயம் அற்றவர்களாகவும் உள்ளனர், அவர்கள் தொடர்ந்தும் சந்தோஷத்தில் நடனம் ஆடுகின்றார்கள். உங்கள் சம்ஸ்காரங்களும், எண்ணங்களும் பலவீனமாக உள்ளபொழுது, அந்தப் பலவீனம் உங்கள் மனதில் குழப்பத்தை விளைவிக்கும். ஆகவே, அனைத்திற்கும் முதலில் உங்கள் சூட்சுமமான பலவீனங்களை அழிவற்ற உருத்திர யாகத்தில் அர்ப்பணியுங்கள்.