21.06.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.11.2010     Om Shanti     Madhuban


சுய மாற்றத்தின் வேகத்தைத் துரிதப்படுத்தி, உங்களின் சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களின் நிறைவு விழாவைக் கொண்டாடுங்கள். உங்களின் ஒவ்வோர் எண்ணத்திலும் வார்த்தையிலும் செயலிலும் தந்தை பிரம்மாவைப் பிரதி செய்யுங்கள்.


இன்று, பாப்தாதா ஒவ்வொருவரின் நெற்றியிலும் ஜொலிக்கும் பாக்கியத்தின் மூன்று அடையாளங்களைப் பார்க்கிறார். ஒன்று, தந்தையிடம் இருந்து நீங்கள் பெறுகின்ற பராமரிப்பின் பாக்கியம். இரண்டாவது, ஆசிரியரின் கற்பித்தல்களின் பாக்கியம். மூன்றாவது, சற்குருவின் ஆசீர்வாதங்களின் பாக்கியம். அவர் மூன்று வகையான பாக்கியங்களும் ஜொலிப்பதைப் பார்க்கிறார். ஒவ்வொருவரின் நெற்றியும் இந்த மூன்று வகையான பாக்கியங்களாலும் ஜொலிக்கின்றன. இத்தகைய பாக்கியம் வேறு எவரினதும் நெற்றியில் புலப்படும்படியாக ஜொலிப்பதில்லை. எவ்வாறாயினும், உங்கள் அனைவரினதும் நெற்றிகள் பாக்கியத்தால் ஜொலிக்கின்றன. உங்கள் அனைவராலும் உங்களின் பாக்கியத்தைப் பார்க்க முடிகிறதல்லவா? நீங்கள் ஒவ்வொருவரும் பாக்கியத்தைப் பெற்றுள்ளதையும் அனால் அனைவரின் பாக்கியத்தின் பிரகாசம் ஒரே மாதிரி இல்லாமல் இருப்பதையும் பாப்தாதா பார்த்தார். சிலரின் ஜொலிப்பு மிகவும் பிரகாசமாக இருந்தது. ஆனால் ஏனையோரின் ஜொலிப்பு சிறிது குறைவாகவே புலப்பட்டது. உண்மையில், பாப்தாதா உங்கள் அனைவருக்கும் ஒரே வேளையில் ஒரே பாக்கியத்தையே வழங்கி உள்ளார். அவர் அதே கல்வியையே கற்பிக்கின்றார். அவர் அதே பராமரிப்பையே உங்களுக்கு வழங்கி உள்ளார். அத்துடன் அதே ஆசீர்வாதங்களையே வழங்கி உள்ளார். ஆதி இரத்தினங்களும் பின்னர் வந்தவர்களும் ஒரே முரளியினூடாகவே பராமரிப்பையும் கற்பித்தல்களையும் பெறுகிறார்கள். அனைவரும் அதே ஆசீர்வாதங்களையே பெறுகிறார்கள். ஆதி இரத்தினங்களின் முரளிகள் வேறானவை அல்ல. அவையும் ஒன்றேயாகும். எவ்வாறாயினும், புலப்படுகின்ற பாக்கியம் வரிசைக்கிரமமாகவே ஜொலிக்கின்றது. அனைவரும் தந்தையின் அன்பெனும் அதே பராமரிப்பையே பெறுகிறார்கள். அனைவரின் உதடுகளில் இருந்து வெளிப்படும் ஒலி, ‘எனது பாபா’ என்பதே ஆகும். உங்களில் எவராவது ஆரம்பத்திலோ அல்லது பின்னரோ வந்திருந்தாலும் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் உரிமையுடனேயே ‘எனது பாபா’ எனக் கூறுகிறீர்கள். அவர்களிடம் தந்தையின் அன்பைப் பெற்றுள்ளீர்களா என்று நீங்கள் கேட்டால், அவர்கள் ஆன்மீக போதையுடன், நான் தந்தையிடம் இருந்து அதிகபட்ச அன்பைப் பெறுகிறேன் என்றே சொல்கிறார்கள். தமது இதயபூர்வமாக ‘எனது பாபா’ எனக் கூறுபவர்கள், அந்த ஆன்மீக போதையுடன் என்ன சொல்கிறார்கள்? எனது அன்பே அதிகமானது. பாபா என்னிடமே முதல் அன்பை வைத்திருக்கிறார். ஏனென்றால், அன்பே தந்தையின் பராமரிப்பு ஆகும். ‘எனது பாபா’ என்பதை நம்புவதன் மூலம் நீங்கள் பாபாவிற்குச் சொந்தம் ஆகியுள்ளீர்கள், தந்தையும் உங்களுக்குச் சொந்தம் ஆகியுள்ளார்.

இன்று, வந்திருக்கும் நீங்கள் அனைவரும் அன்பெனும் விமானத்தில் வந்துள்ளீர்கள். அன்பே உங்கள் அனைவரையும் ஈர்த்துள்ளது, அத்துடன் இங்கே கொண்டு வந்துள்ளது. நீங்கள் அனைவரும் இங்கே அன்பினால் சௌகரியமாக வந்துள்ளீர்கள். இறைவனிடம் இருந்து பெறப்படுகின்ற இந்த அன்பு இப்போது இந்தச் சங்கமயுகத்தில் மட்டுமே பெறப்படுகிறது. நீங்கள் தேவாத்மாக்களிடம் இருந்து அன்பைப் பெறுவீர்கள். ஆனால் இறையன்பு இந்த ஒரு பிறவியில் மட்டுமே பெறப்படும். இத்தகைய தகுதிவாய்ந்த ஆத்மாக்களைப் பார்க்கும்போது பாப்தாதா என்ன கூறுகிறார்? ஆஹா குழந்தைகளே! ஆஹா! நீங்களே பலமில்லியன்களில் தகுதிவாய்ந்தவர்கள் ஆகியிருக்கும் கைப்பிடி அளவினர் ஆவீர்கள். அத்துடன் நீங்களே ஒவ்வொரு கல்பத்திலும் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பீர்கள். நீங்கள் நடக்கும்போதும் அசையும்போதும் உங்களுக்கு இந்த போதை இருக்கிறதா? உங்களின் இதயத்திலும் இந்தப் பாடல் ஒலிக்கிறதா: ஆஹா, எனது பாக்கியமே? நீங்கள் தொடர்ந்து இந்தப் பாடலைப் பாடுகிறீர்கள், அல்லவா? குழந்தைகளான நீங்கள் அனைவரும் உரிமையைக் கொண்டிருப்பவர்கள் என்பதனால் தந்தையும் மகிழ்ச்சி அடைகிறார். உங்களில் எவருமே இறையன்பைப் பெறுவதில் உங்களைக் குறைந்தவர்களாகக் கருதுவதில்லை. நீங்கள் அனைவருமே அன்பெனும் பாடத்தில் சித்தி அடைந்துள்ளீர்கள். யாருக்கு அதிகளவில் அன்பு இருக்கிறது என்று பாப்தாதா உங்களிடம் கேட்கிறார். யார் இதற்குப் பதில் அளிப்பீர்கள்? உங்களின் அன்பு சளைத்தது அல்ல என்பதை நீங்கள் அனைவருமே அறிவீர்கள். நீங்கள் அனைவரும் அன்பெனும் பாடத்தில் சித்தி அடைந்துள்ளதாகத் தந்தையும் கூறுகிறார். இதனாலேயே, நீங்கள் ‘எனது பாபா’ எனக் கூறுகிறீர்கள். நீங்கள் எவ்வளவு அன்பைக் கொண்டுள்ளீர்கள் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள். நீங்கள் அனைவரும் அன்பெனும் பாடத்தில் சித்தி அடைந்திருப்பதை பாப்தாதா பார்த்தார். ஆனால் இப்போது இந்த நேரத்திற்கேற்ப, சுய மாற்றத்திற்கான தேவை உள்ளது. சுய மாற்றம் மட்டுமே. சுய மாற்றத்திலும் இந்த நேரத்தில் உங்களின் சம்ஸ்காரங்கள் மற்றும் உங்களின் சுபாவங்களில் மாற்றம் ஏற்பட வேண்டிய தேவை உள்ளது என்று விசேடமாக உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது.

இப்போது புதிய வருடம் ஆரம்பித்துள்ளதால், சுய மாற்றத்திற்கான வேகம் துரிதமாக்கப்பட வேண்டும். நீங்கள் இதைச் செய்கிறீர்கள், அத்துடன் கவனமும் செலுத்துகிறீர்கள். ஆனால் வேகம் துரிதமாக்கப்பட வேண்டும். புதிய வருடத்தில் நீங்கள் சுய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என முன்னரும் நீங்கள் சத்தியம் செய்திருப்பதை பாப்தாதா ஞாபகம் செய்கிறார். நீங்கள் உங்களின் சம்ஸ்காரங்களை மாற்ற வேண்டும். ஆனால், சுய மாற்றத்திற்குத் தேவையான வேகமான முயற்சிக்கு வேகத்தைத் துரிதமாக்க வேண்டிய தேவை இப்போது உங்களுக்கு இருப்பதையும் பாப்தாதா பார்த்தார். நீங்கள் அனைவரும் என்ன நினைக்கிறீர்கள்? இந்தக் காலத்திற்கேற்ப, நீங்கள் அனைவரும் காலத்தின் துரித வேகத்திற்கு ஏற்ப முயற்சி செய்கிறீர்கள் என்று நினைக்கிறீர்களா அல்லது அது இன்னமும் வேகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஏனென்றால், இந்தக் காலத்திற்கேற்ப, காலத்தின் மாற்றமும் வேகமாக இடம்பெற வேண்டும். ஆனால் உங்களிடம் உள்ள எண்ணங்கள் நடைமுறையில் இடம்பெறும் போதே உங்களின் மாற்றம் வேகம் அடையும். சரியற்ற எண்ணங்கள் முடிக்கப்பட வேண்டும். இது ஒரு கடதாசியில் நீங்கள் முற்றுப்புள்ளி வைத்ததைப் போன்று இருக்க வேண்டும். அதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? சரியற்ற எண்ணங்கள், அதாவது, பயனற்ற எண்ணங்கள் மிக விரைவாக மாற்றப்பட வேண்டும். பாப்தாதா விரும்புகின்ற வேகத்தை உங்களால் ஏற்படுத்த முடியுமா? உங்களுக்கு அந்தத் தைரியம் இருக்கிறதா? இப்பொழுதில் இருந்தே துரித கதியில் உங்களால் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று நினைப்பவர்கள், குழந்தைகள் தைரியத்தைக் கொண்டிருக்கும் போது, தந்தை உதவி செய்வார் என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களின் திடசங்கற்பமான எண்ணத்தைப் பார்க்கும்போது, பாப்தாதா குழந்தைகளான உங்களைப் பாராட்டுகிறார். இந்தத் திடசங்கற்பத்திற்கான எண்ணம், நான் நிச்சயமாக இதைச் செய்யவே வேண்டும் என்பதாகும் என்று பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார். எனவே, இன்றைய ஒன்றுகூடலில் உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருக்கிறீர்கள், அல்லவா? நீங்கள் அனைவரும் கண்டீர்கள் - தாதிகள் கண்டார்கள், நீங்கள் அனைவரும் கண்டீர்கள் - அதாவது பெரும்பாலானோர் தமது கைகளை உயர்த்தினார்கள், நீங்கள் அனைவரும் அதைக் கண்டீர்கள். எனவே நாளையில் இருந்து, உங்களின் சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களின் நிறைவு விழாவை நாங்கள் கொண்டாடுவோம். நாங்கள் அதைக் கொண்டாடுவோமா? முன்னர் தமது கைகளை உயர்த்தியவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நிறைவு விழாவைக் கொண்டாடுவோமா? மிகுந்த கோலாகலமாக இந்த விழாவைக் கொண்டாடுவோமா? எப்படி நீங்கள் தைரியத்திற்காக இந்த இலட்சியத்தை வைத்திருக்கிறீர்களோ, அதேபோல், தைரியத்துடன் கூடவே, நீங்கள் அதற்கான தகைமைகளையும் விருத்தி செய்தால், அது பெரியதொரு விடயமே இல்லை. தந்தைக்குச் சமமானவர் ஆகுகின்ற இலட்சியம் உங்களுக்கு இருப்பதனால், இப்போது நீங்கள் உங்களின் இலக்கையும் அதற்கான தகைமைகளையும் சமமாக ஆக்க வேண்டும். தந்தை பிரம்மாவைப் பின்பற்றுங்கள். உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் எவையாக இருந்தாலும் அவற்றை அனைத்திற்கும் முதலில் தந்தை பிரம்மாவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பிரதி செய்யுங்கள்! உலகில் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தந்தை பிரம்மாவைப் பிரதி செய்யும்படி பாப்தாதா உங்களுக்குக் கூறுகிறார். அசரீரியான தந்தைக்கு ஒரு சரீரம் இல்லை, அதனால் அவருக்கு சரீர உணர்வு என்ன? என்று நீங்கள் சொல்லக்கூடும். எவ்வாறாயினும் தந்தை பிரம்மா ஒரு சரீரதாரியே. உண்மையில், அர்ப்பணித்துள்ள நீங்கள் அனைவரும் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அர்ப்பணித்துள்ளவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் உங்களை அர்ப்பணிக்கும்போது உங்கள் அனைவருக்கும் இருந்த எண்ணம் என்ன? உங்களின் சரீரம், மனம், செல்வம் அனைத்தும் இப்போது தந்தைக்கே சொந்தம் என்பதே ஆகும். நீங்கள் இதைச் செய்தீர்கள், அல்லவா? நீங்கள் இதைச் செய்தீர்களா? இதற்காக உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எனவே, எவற்றை எல்லாம் நீங்கள் அர்ப்பணித்தீர்களோ, அவை உங்களுடையவை அல்ல: இந்தச் சரீரம் என்னுடையது இல்லை, இந்தச் செல்வம் என்னுடையது இல்லை. தந்தை பிரம்மா தனது சரீரத்தைச் சேவைக்காகத் தந்தைக்குக் கொடுத்தார். எனவே, அந்தச் சரீரம் தன்னுடையது அல்ல, ஆனால் அது சேவைக்கானது என்பதைத் தந்தை பிரம்மா அறிந்திருந்தார். அதனால், நீங்கள் உங்களின் மனம், சரீரம், செல்வம் என்ற மூன்றையும் அர்ப்பணித்திருப்பதனால், தந்தை பிரம்மாவின் சரீரம் சேவைக்காக இருந்ததைப் போல், உங்களின் சரீரமும் தந்தையின் சேவைக்கு ஒரு கருவியே ஆகும். எனவே, உங்களின் சரீரம் உங்களுடையது அல்ல. அது சேவைக்கானது. ஆகவே, சரீர அகங்காரம் மற்றும் சரீர உணர்வின் சம்ஸ்காரங்களை நீங்கள் கொண்டிருக்க முடியுமா? இதை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள்: இந்தச் சரீரம் உலக சேவைக்கு உரியது. இது என்னுடையது இல்லை, ஆனால் தந்தை அதைச் சேவைக்காக எனக்கு வழங்கி இருக்கிறார். சரீர உணர்வும் சரீர அகங்காரமும் அப்போது முடிவடைந்து விடும். சரீர அகங்காரம் அதிகளவில் இழப்பை ஏற்படுத்துகிறது. சரீர உணர்வானது அதைவிடச் சிறிதளவு குறைவானது. ஆனால் நீங்கள் அவை இரண்டையும் தந்தையிடம் ஒப்படைத்து விட்டதனால்.... நீங்கள் நிரப்புகின்ற படிவங்களில் என்ன எழுதுகிறீர்கள்? ஆசிரியர்களே, நீங்கள் படிவங்களை நிரம்பும்படி கேட்கிறீர்கள், அல்லவா? எனவே, அவற்றில் எதை எழுதும்படி நீங்கள் அவர்களிடம் கேட்கிறீர்கள்? அதாவது, இப்போது எனது இந்த வாழ்க்கை சேவைக்கு உரியது. பிராமணர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் தந்தையிடம் சத்தியம் செய்துள்ளீர்கள்: சரீரம், மனம், செல்வம் அனைத்தும் இப்போது தந்தைக்கு உரியது, அவை என்னுடையவை அல்ல. எனவே, தோன்றிய சம்ஸ்காரங்களும் சரீர அகங்காரம் அல்லது சரீர உணர்விற்கு உரியவை. இதனாலேயே, இன்று இந்த சம்ஸ்காரங்களை முடிப்பதற்காக நீங்கள் சத்தியம் செய்தீர்கள். ஏனென்றால், நீங்கள் தந்தையை வெளிப்படுத்துவதற்கு இவையே தடைகளை ஏற்படுத்துகின்றன. உங்கள் அனைவருக்கும் இந்த உற்சாகம் உள்ளது. பாப்தாதா தொடர்ந்து இதைக் கேட்கிறார். நீங்கள் தந்தையை வெளிப்படுத்த வேண்டும் என்று நீங்கள் அனைவரும் தொடர்ந்து கூறுகிறீர்கள். இதுவரை, பிரம்மாகுமாரிகளும் பிரம்மாகுமார்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளார்கள். கடவுள் வந்துள்ளார் என்ற தந்தையின் வெளிப்படுத்துகை இன்னமும் மறைமுகமாகவே உள்ளது. நீங்கள் இதற்காக முயற்சி செய்கிறீர்கள். ஆனால் வெளிப்படுத்துகைக்கான இந்த ஒலி இப்போது பரவ வேண்டும்: எமது தந்தை வந்துவிட்டார். இவை இறைவனின் வாசகங்கள். பிரம்மாகுமாரிகளின் வாசகங்கள் அல்ல. வெளிப்படுத்துகை இப்போது இடம்பெற வேண்டும். உங்களின் சுபாவங்களும் சம்ஸ்காரங்களும் மாற்றப்பட வேண்டும். உங்கள் ஒவ்வொருவரின் முகம் மற்றும் செயல்களின் ஊடாக வெளிப்படுத்துதல் இடம்பெறும். நீங்கள் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் அதைச் செய்கிறீர்கள். எனினும் இப்போது அனைவரின் காதுகளிலும் ‘கடவுள் வந்துவிட்டார், எமது தந்தை வந்துவிட்டார்’ என்பது எதிரொலிக்க வேண்டும். இது நிச்சயமாக நடக்கவே வேண்டும். இது நடக்கவே வேண்டும் என்பதைக் காட்டுவதற்கு உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இது நடக்க வேண்டும், அப்படித்தானே? நீங்கள் மிக நன்றாக உங்களின் கைகளை உயர்த்தினீர்கள். இது நடக்க வேண்டும், நிச்சயமாக அது நடக்கவே வேண்டும் என்பதில் ஆழமான அன்பை நீங்கள் அனைவரும் கொண்டிருப்பதை இட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். எனவே, நாளையில் இருந்து, உங்களின் சுபாவங்கள், சம்ஸ்காரங்களை எப்படி நீங்கள் மாற்றிக் கொள்வீர்களோ, அதேபோல், இதைச் செய்வதற்கான வழிமுறை, பிராமணர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருப்பதற்காக உங்களின் அட்டவணைகளில் விசேடமான கவனம் செலுத்துங்கள். எவ்வளவு காலத்திற்கு அவர்களால் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருக்க முடியும் என்பதைப் பார்ப்பதற்கு இந்தப் பணியை நீங்கள் உலகிலுள்ள மக்களுக்குக் கொடுத்துள்ளீர்கள். இதைச் செய்ய முடியும் என்று நீங்கள் அவர்களுக்குக் கூறியுள்ளீர்கள். ஆகவே, உங்களால் நிச்சயமாக இதைச் செய்ய முடியும். எந்தவொரு வேளையிலும், ஓர் ஆத்மாவிற்கு நீங்கள் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிராவிட்டால், அவரின் சுபாவம் அல்லது சம்ஸ்காரங்கள் உங்களை எதிர்க்கக்கூடும். எனவே, நான் நிச்சயமாக ஒவ்வோர் ஆத்மாவிற்கும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தை அமிர்த வேளையில் நீங்கள் கொண்டிருந்தால், அப்போது உங்களால் நீங்கள் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்ற முடியும். சூழ்நிலைகள் வரும். சூழ்நிலைகளின் கடமை வருவதே. அவை மாயை, அல்லவா? எனவே, வெற்றியாளர் ஆகுவது உங்களின் கடமை ஆகும். ஆகவே, நாளை கருவிகளாக இருப்பவர்களுடன் உங்களுக்கு இடையே ஒரு குழுவை உருவாக்கி, உங்களுக்கு ஏற்பட்ட எண்ணத்தை எப்படி நடைமுறை வடிவத்தில் கொண்டு வருவது என்பதற்காக கலந்துரையாடுங்கள். முடித்து விடுங்கள்! ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! நீங்கள் உங்களின் கைகளை உயர்த்தினீர்கள், அல்லவா? முன்னால் அமர்ந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். எனவே, நீங்கள் இதற்குக் கருவிகள் ஆகவேண்டும். ஆரம்பத்தில், தந்தை பிரம்மாவின் முன்னால் பலரும் பலவிதமான சம்ஸ்காரங்களுடன் வந்தார்கள். ஆரம்பத்தில், தந்தை பிரம்மா பலவிதமான சம்ஸ்காரங்களின் விளையாட்டுக்களைக் கண்டுள்ளார். எவ்வாறாயினும், தந்தையின் ஒத்துழைப்புடன் அவர் தொடர்ந்து முன்னேறியதுடன் மற்றவர்களையும் முன்னேறத் தூண்டினார். அதன் விளைவாக, இன்று பெரிய எண்ணிக்கை காணப்படுகிறது. குழப்பமான சூழ்நிலைகள் ஏற்பட்ட போதும் அவர் அசைக்க முடியாதவராக இருந்தார். அதன் பலனாகவே, பல நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன, பல நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

தற்காலத்தில் எத்தனை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன? அவை இடம்பெறுகின்றன, அல்லவா? இவை அனைத்தும் தந்தை பிரம்மாவின் தைரியத்தின் பெறுபேறே ஆகும். ஆரம்பத்தில், தந்தை பிரம்மா தனியாகவே இருந்தார். நீங்கள் அனைவரும் பின்னரே வந்தீர்கள். ஆனால் அவர் தைரியத்தைப் பேணி, தானாகவே முன்னேறினார். நீங்கள் அனைவரும் சகபாடிகள் ஆகியதே நடைமுறை அத்தாட்சி என்ற விளைவு ஆகும். எனவே, இது அவரின் தைரியம், அப்படியல்லவா? தந்தை பிரம்மா தனியே தைரியத்தைப் பேணினார். ஆனால் இப்போது சகபாடிகளான நீங்கள் பலர் இருக்கிறீர்கள். எனவே, தந்தையைப் பின்பற்றுங்கள்! நீங்கள் அனைவரும் உங்களைத் தந்தை பிரம்மாவின் குழந்தைகளாகவும் அவரின் சகபாடிகளாகவும் கருதுகிறீர்கள், அல்லவா? நீங்கள் அவருடன் இருக்கிறீர்கள். நீங்கள் அவருடன் திரும்பிச் செல்வீர்கள். நீங்கள் தந்தை பிரம்மாவுடன் இராச்சியத்திற்குள் செல்வீர்கள். எனவே, இப்போதே அந்த நேரம் ஆகும். பிரம்மாபாபா தைரியத்தைப் பேணினார். நீங்கள் அந்தப் பெறுபேற்றைப் பார்த்தீர்கள். அதனால், இந்த ஒன்றுகூடலில் தைரியத்தின் பாதத்தை வைத்திருங்கள். அதன்பின்னர் எது முடியாத விடயம் என்பதைப் பாருங்கள்! ஒவ்வொரு கல்பத்திலும் அது நடக்கிறது, அது நிச்சயமாக நடக்கும்.

எனவே, தந்தை தனக்கு என்ன வேண்டும் என்பதை உங்களுக்குக் கூறியுள்ளார். நீங்கள் அனைவரும் இப்போது ஒரு விடயத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள், அதாவது, சாதாரணமான முயற்சிகளைத் தீவிர முயற்சிகளாக மாற்ற வேண்டும். சிலவற்றில் கவனயீனம் இருந்ததை பாப்தாதா கண்டார்: அது நடக்கும். வெற்றி எமது பிறப்புரிமை. இந்த ஞானத்தின் அடிப்படையில், இது நிச்சயிக்கப்பட்டது. ஆனால், வெற்றிக்கு எமக்கு உத்தரவாதம் உள்ளது என்ற இந்த வார்த்தைகளும் கவனக்குறைவான வார்த்தைகளே ஆகும். இன்னமும் எதுவும் நிறுத்தத்திற்கு வரவில்லை. அது நடக்கவே வேண்டும். இவை முயற்சிக்கான வார்த்தைகள். அதே வார்த்தைகள் கவனக்குறைவிற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன: எதுவும் நின்றுவிடப் போவதில்லை. அது நடக்கவே வேண்டும்..... அது கவனயீனம். எனவே, இந்த சம்ஸ்காரங்களையும் சோதித்துப் பாருங்கள். கவனயீனத்தின் அடையாளம், அவர்களின் வாழ்க்கைகளில் அற்ப விடயங்களிலும் களைப்புத் தென்படும். சந்தோஷப் பிரகாசம் அவர்களின் முகங்களில் புலப்படாது. நீங்கள் செய்யும் சேவையில் புண்ணியத்தைச் செய்தால், உங்களின் முகத்தில் அந்தச் சந்தோஷம் இருக்கும். ஏதாவதொரு வகையான களைப்பைக் கொண்டிருப்பது என்பது ஏதாவதொரு வகையான கவனக்குறைவின் அடையாளமே ஆகும். நீங்கள் அதைச் செய்ய வேண்டி இருப்பதனால், அதைச் சந்தோஷமாகச் செய்யுங்கள். உங்களின் முகம் சேவை செய்ய வேண்டும். உங்களின் செயல்கள் சேவை செய்ய வேண்டும். எனவே இன்று, அந்த சம்ஸ்காரங்களை முடிப்பதற்காக உங்களில் பெரும்பாலானோர் கைகளை உயர்த்தியதைப் பார்க்கும்போது, பாப்தாதா உங்களை மீண்டும் மீண்டும் பாராட்டுகிறார்.

அச்சா. இந்தக் குழுவில் முதல் தடவை வந்திருப்பவர்கள், எழுந்து நில்லுங்கள்! எத்தனை பேர் இருக்கிறார்கள் எனப் பார்த்தீர்களா? பலர் இருக்கிறார்கள். உங்களின் கைகளை அசையுங்கள்! முதல் தடவை வந்திருப்பவர்கள், உங்களின் தந்தையைச் சந்திப்பதற்காகப் பாராட்டுக்கள். இப்போது குறிப்பாக இந்த நேரத்திற்கேற்ப, நீங்கள் வேகமான முயற்சிகளைச் செய்ய வேண்டும். பாப்தாதா கூறுகிறார்: வேகமான முயற்சிகளைச் செய்பவர்களும் குறைவான முறையில் முன்னேறாதவர்களும் நீங்கள் கடைசியாக வந்திருந்தாலும் உங்களால் வேகமாகச் செல்ல முடியும். வேகமாகச் செல்பவர்களால் முதலாவதாக வரமுடியும். இத்தகைய அற்புதத்தைச் செய்யுங்கள்! உங்களுக்கு இந்த வாய்ப்பு உள்ளது. நீங்கள் கடைசியாக வந்துள்ளீர்கள் என்று நினைக்காதீர்கள், இல்லை. உங்களால் வேகமாகச் செல்ல முடியும். எவ்வாறாயினும், நீங்கள் ஒவ்வொரு கணமும் நிச்சயமாக வேகமான முயற்சிகளைச் செய்ய வேண்டும். நீங்கள் நிச்சயமாக மாற வேண்டும். அதை எதிர்காலத்திற்காக விட்டுவிடாதீர்கள்: ‘நான் அதைப் பார்ப்பேன், நான் அதைப் பற்றிச் சிந்திப்பேன்’. இதைச் செய்யாதீர்கள். இது நல்லது. நீங்கள் உங்களின் வீட்டையும் அருள்பவரின் வீட்டையும் விரும்புகிறீர்கள், அல்லவா? சகோதர, சகோதரிகள் அனைவரும் உங்களை வரவேற்கிறார்கள். நல்லது.

எங்கும் உள்ள பிராமணக் குழந்தைகளான நீங்கள் அனைவரும் தயவு செய்து பாப்தாதாவின் அன்பு நிறைந்த நினைவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். சில குழந்தைகள் வெகு தொலைவில் இருந்தவண்ணம் பார்ப்பதுடன் சந்திப்பைக் கொண்டாடுகிறார்கள் என்பதை பாப்தாதா அறிவார். எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் பாப்தாதா கூறுகிறார்: எவ்வாறு பெரும்பாலான குழந்தைகள் தமது சம்ஸ்காரங்களை முடிப்பதற்காகத் தமது கைகளை உயர்த்தினார்களோ, அவ்வாறு நீங்கள் அனைவரும் ஒன்றுதிரட்டிய முறையில் உங்களின் கைகளையும் உயர்த்துகிறீர்கள். காலத்தின் நிறைவினை நெருக்கமாகக் கொண்டு வருகின்ற எண்ணத்தை நீங்களும் கொண்டிருக்கிறீர்கள். பின்னர், காலம் நிறைவு பெறும்போது, நீங்கள் தந்தை பிரம்மாவையும் தந்தை சிவனையும் ‘எமது தந்தை வந்து விட்டார்!’ எனக் கூறிய வண்ணம் எங்கும் வெளிப்படுத்துவீர்கள். எங்கும் அனைவரின் உதடுகளில் இருந்தும் தந்தையின் வெளிப்பாடு இடம்பெற வேண்டும். இப்போது இந்த வருடம், நீங்கள் நிச்சயமாகத் தந்தையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருங்கள். அரைவாசி வேலை பூர்த்தியாகி விட்டது. குழந்தைகளான உங்களைத் தந்தை உலகின் முன்னால் வெளிப்படுத்தி விட்டார். இப்போது, குழந்தைகளான உங்களின் பணி, ‘கடவுள் வந்து விட்டார்!’ என்ற இந்த ஒலி உலகிலுள்ள ஒவ்வொரு குழந்தையையும் சென்று அடைய வேண்டும். ஒவ்வொருவரைப் பார்க்கும்போதும், பாப்தாதா தனது இதயபூர்வாக உங்கள் ஒவ்வொருவருக்கும் அன்பை (சிநே மற்றும் பியார்) வழங்குவதுடன் ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். அச்சா.

இது கர்நாடகா பிராந்தியத்தின் சேவைக்கான முறை ஆகும்: சேவைக்காக இந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது என்றால், தந்தைக்கு நெருக்கமாக ஆகும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதே ஆகும். பாருங்கள், சேவையினால் பல மக்கள் வருவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள். கருவி ஆசிரியர்களான நீங்கள் அனைவரும் சேவைக்கான தைரியத்தைப் பேணுவதனால் அனைவரின் ஆசீர்வாதங்களையும் பெறுகிறீர்கள். அதனால் பல மக்கள் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். பல புதியவர்கள் முதல் தடவை வந்திருப்பதை பாப்தாதா கண்டார். கர்நாடகா பிராந்தியத்தில் இருந்து முதல் தடவை வந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயரே உயர்த்துங்கள்! பலர் முதல் தடவையாக வந்துள்ளார்கள். நல்லது. கர்நாடகாவின் வளர்ச்சி நன்றாக உள்ளது. இந்த வளர்ச்சி இருப்பதைப் போல், இப்போது தீவிர முயற்சி செய்வதற்கான வழிமுறையின் அலையை எங்கும் பரப்புங்கள். இந்த இலக்கத்தைக் கோருங்கள்! சம்ஸ்காரங்களை முடிப்பதில் ஓர் இலக்கத்தைக் கோருங்கள்! உங்களால் இதைச் செய்ய முடியுமா? முதல் இலக்கத்தைக் கோர முடியும் என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இது நல்லது. உங்களுக்கு இடையே ஓர் ஒன்றுகூடலை உருவாக்கி, ஒரு நிகழ்ச்சியைச் செய்யுங்கள். அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். வெவ்வேறு இடங்கள் உள்ளன, ஆனால் நீங்கள் அனைவரும் ஒன்றே ஆகும். இப்போது இந்த அற்புதத்தைச் செய்யுங்கள்! உங்களுக்கு இந்தத் தைரியம் உள்ளதல்லவா? உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? பாப்தாதா தொடர்ந்து செய்திகளைப் பெறுகிறார். எனவே, உங்களின் மாற்றத்தைப் பற்றி ஒவ்வொரு மாதமும் மதுவனத்திற்கு எழுதுங்கள். நீங்கள் எழுதுவீர்கள், அல்லவா? ஒவ்வொரு மாதமும்? கடந்து சென்றது கடந்ததாக இருக்கட்டும்! இப்போது முதல் இலக்கத்தைக் கோருவதன் மூலம் செய்து காட்டுங்கள். இது நல்லது. சேவை நன்றாக இருப்பதை பாப்தாதா கண்டார், இப்போது ஒன்றுகூடல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். ஓர் உதாரணம் ஆகுங்கள். தயாரா? நீங்கள் தயாரா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பாருங்கள், நீங்கள் ஒரு மாதத்தில் பெறுபேற்றைப் பெறுவீர்கள். அச்சா. அதிக, அதிகமான விசேடமான அன்பும் நினைவுகளும் உரித்தாகுக.

ஆசீர்வாதம்:
உங்களைச் சம்பூரணமாக அர்ப்பணித்து அதனால் சமமான சகபாடி ஆகும் வழிமுறையால் ‘எனது’ என்ற உணர்வின் சகல உரிமைகளையும் முடிப்பீர்களாக.   

நீங்கள் இந்தச் சத்தியத்தைச் செய்தீர்கள்: நான் உங்களுடனேயே இருப்பேன், நான் உங்களுடனேயே திரும்பிச் செல்வேன், நாங்கள் ஒன்றாக ஆட்சி செய்வோம். நீங்கள் உங்களின் சகபாடிக்குச் சமமாகும் போதே உங்களால் இந்தச் சத்தியத்தை நிறைவேற்ற முடியும். நீங்கள் உங்களை அர்ப்பணிக்கும்போது சமமான தன்மை ஏற்படும். நீங்கள் அனைத்தையும் அர்ப்பணிக்கும்போது, அந்த விடயங்களுக்கான உங்களின் உரிமைகள் அனைத்தும் ஏனைய அனைவரின் விடயங்களும் முடிவிற்கு வந்துவிடும். உங்களுக்கு அதில் உரிமை இருக்கும் அளவிற்கு, உங்களின் முழுமையான அர்ப்பணிப்பில் ஏதாவது குறைவாக இருக்கும். அதனால் உங்களால் சமமானவர் ஆக முடியாதிருக்கும். அதனால், ஒன்றாக இருந்து, ஒன்றாகப் பறந்து செல்வதற்கு, விரைவாக சமமானவர் ஆகுங்கள்.

சுலோகம்:
உங்களின் நேரம், மூச்சு, எண்ணங்களைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதே வெற்றியின் அடிப்படை ஆகும்.

அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.

உங்களிடம் இலகுவான சுபாவம் இருக்கும்போது, நீங்கள் இயல்பாகவே விஸ்தாரத்தில் இருந்து விடுபடும் சக்தியைக் கொண்டிருப்பீர்கள். உங்களிடம் இலகுவான சுபாவம் இருக்கும்போது நீங்கள் அனைவருடனும் அன்பாகவும் ஒத்துழைப்பவராகவும் இருப்பீர்கள். எந்தளவிற்கு உங்களிடம் இலகுவான சுபாவம் இருக்கிறதோ, அதற்கேற்ப, மாயை அந்தளவிற்கு உங்களை எதிர்க்க மாட்டாள். உங்களிடம் இலகுவான சுபாவம் இருக்கும்போது, உங்களிடம் வீணான எண்ணங்கள் எவையும் இருக்க மாட்டாது, நீங்கள் உங்களின் நேரத்தையும் வீணாக்க மாட்டீர்கள். உங்களின் புத்தி எல்லையற்றதாகவும் தொலை நோக்காகவும் இருக்கும். இதனாலேயே, எந்தவொரு பிரதிகூலமான சூழ்நிலையும் உங்களை எதிர்ப்பதற்கு வரமாட்டாது.

விசேட அறிவித்தல்: மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை உலக தியானத்திற்கான பயிற்சி.

இன்று இந்த மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. சகல சகோதர, சகோதரிகளும் மாலை 6.30 இலிருந்து 7.30 வரை ஒன்றுதிரட்டிய யோகத்தில் அமர்ந்திருக்க வேண்டும். உங்களின் தேவதை ரூபத்தால் சந்தோஷம் அற்றிருக்கும், அமைதி அற்றிருக்கும் அலைந்து திரியும் ஆத்மாக்களுக்கு சந்தோஷம் மற்றும் அமைதியின் தூய கதிர்களை வழங்கி, ஆதாரத்தை அருள்பவரான கடவுளை அவர்களுக்கு நினைவுபடுத்தும் சேவையையும் செய்யுங்கள்.