21.07.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    16.12.20     Om Shanti     Madhuban


தந்தை பிரம்மாவை ஒத்தவராக (சாக்சாத்), ஒரு தேவதை கர்மயோகி ஆகுங்கள். காட்சிகளை (சாக்சாத்கார்) ஆரம்பிப்பதற்கான சாவி திரும்பும்.


இன்று, பிராமண உலகைப் படைத்தவரான பாப்தாதா, தனது பிராமண உலகைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். இது சிறிய, அழகான உலகம் ஆகும். ஒவ்வொரு பிராமணரின் நெற்றியிலும் ஒரு பாக்கிய நட்சத்திரம் பிரகாசிக்கிறது. நீங்கள் வரிசைக்கிரமமாக இருந்தாலும், நட்சத்திரங்களான உங்கள் ஒவ்வொருவரிலும் இறைவனை இனங்கண்டு, அவருக்குச் சொந்தமாக இருக்கும் மேன்மையான பாக்கியத்தின் பிரகாசம் உள்ளது. ரிஷிகளும் முனிவர்களும் தபஸ்விகளும் ‘நெத்தி, நெத்தி’ (எமக்குத் தெரியாது, எமக்குத் தெரியாது) எனக் கூறிய தந்தை, பிராமண உலகின் கள்ளங்கபடமற்ற ஆத்மாக்களான உங்களால் இனங்காணப்பட்டு, அடையப்பட்டுள்ளார். எந்த ஆத்மாக்கள் இந்தப் பாக்கியத்தை அடைகிறார்கள்? சாதாரணமான ஆத்மாக்கள். தந்தை ஒரு சாதாரண சரீரத்திற்குள்ளேயே வருகிறார். அதனால், சாதாரணமான குழந்தைகளே அவரை இனங்காண்கிறார்கள். இன்று இந்த ஒன்றுகூடலைப் பாருங்கள்! இங்கே அமர்ந்திருப்பவர்கள் யார்? இங்கே யாராவது கோடீஸ்வரர் அல்லது பில்லியனர் அமர்ந்திருக்கிறாரா? சாதாரணமான ஆத்மாக்களே நினைவு கூரப்படுகிறார்கள். தந்தை ஏழைகளின் பிரபு என்றே நினைவுகூரப்படுகிறார். அவர் கோடீஸ்வரர்களின் அல்லது பில்லியனர்களின் பிரபு என நினைவுகூரப்படுவதில்லை. விவேகத்தின் புத்தியானவரால் கோடீஸ்வரர்களின் அல்லது பில்லியனர்களின் புத்திகளை மாற்ற முடியாதா? அது பெரிய விடயம் அல்ல. எவ்வாறாயினும், மிகவும் நல்லதொரு, நன்மை செய்யும் சட்டம் இந்த நாடகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால், இறை பணியானது துளித்துளியாக உருவாக்கப்படும் ஒரு ஏரியாலேயே நிறைவேறும். ஆத்மாக்கள் பலரின் எதிர்காலம் உருவாக்கப்பட வேண்டியுள்ளது. பத்து இருபது ஆத்மாக்கள் தம்மிடம் உள்ள எல்லாவற்றையும் பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதல்ல. ஆனால், ஆத்மாக்கள் பலர் தம்மிடம் உள்ள எல்லாவற்றையும் பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும். இதனாலேயே, துளித்துளியாக உருவாக்கப்படும் ஏரி என்பது நினைவுகூரப்படுகிறது. எந்தளவிற்கு நீங்கள் எல்லோரும் தொடர்ந்து உங்களின் மனங்களையும் சரீரங்களையும் செல்வத்தையும் பயனுள்ள முறையில் பயன்படுத்துகிறீர்களோ, அதற்கேற்ப நீங்கள் வெற்றி நட்சத்திரங்கள் ஆகுவீர்கள். நீங்கள் எல்லோரும் வெற்றி நட்சத்திரங்கள் ஆகிவிட்டீர்களா? நீங்கள் இப்படி ஆகிவிட்டீர்களா? அல்லது, இன்னமும் இப்படி ஆகவேண்டியுள்ளதா? நீங்கள் இன்னமும் அதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? சிந்திக்காதீர்கள்! ‘நான் அதைச் செய்வேன்! அதைப் பார்க்கிறேன்! எப்படியும் நான்தானே செய்ய வேண்டும்’ என நினைப்பது, உங்களின் நேரத்தை வீணாக்குவதாகும். அது உங்களின் எதிர்காலத்தையும் உங்களின் நிகழ்காலப் பேறுகளையும் வீணாக்குதல் என்று அர்த்தம்.

சிலவேளைகளில், சில குழந்தைகளின் எண்ணங்கள் பாப்தாதாவை வந்தடைகின்றன. வெளியுலகில் இருப்பவர்கள் ஏழைகள், ஆதரவற்றவர்கள். ஆனால், பிராமண ஆத்மாக்கள் ஏழைகளும் இல்லை, ஆதரவற்றவர்களும் இல்லை. அவர்களிடம் சிறந்த யோசனைகளும் உள்ளன. அத்துடன் அவர்கள் விவேகிகள். எவ்வாறாயினும், சிலவேளைகளில், சில குழந்தைகளுக்குப் பலவீனமான எண்ணம் தோன்றுகிறது. பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? பாபா அவற்றைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். மிகவும் நல்லது! சிலவேளைகளில், விநாசம் நடக்கப் போகிறதா இல்லையா என நீங்கள் நினைக்கிறீர்கள். 1999 ஆம் ஆண்டு முடிந்துவிட்டது. 2000 ஆம் ஆண்டும் முடியப்போகும் தறுவாயில் உள்ளது. இப்போது, எத்தனை காலம் தொடர்வது? பாப்தாதாவிற்கு இது வியப்பாக உள்ளது. ஏனென்றால், விநாசத்தைப் பற்றி நினைப்பதென்றால், தந்தைக்கு விடை கொடுத்தல் என்று அர்த்தம். ஏனென்றால், விநாசம் நடக்கும்போது, அவர் பரந்தாமத்திற்குச் சென்றுவிடுவார். எனவே, நீங்கள் சங்கமயுகத்தையிட்டுக் களைப்படைந்துவிட்டீர்களா? இந்த யுகம் வைரம் போன்று பெறுமதிவாய்ந்தது என நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியிருந்தும், நீங்கள் அதிகமாகச் சத்தியயுகத்தையே நினைக்கிறீர்கள். அது நடக்க வேண்டும், ஆனால் நீங்கள் ஏன் காத்திருக்கிறீர்கள்? தம்மிடம் உள்ள எல்லாவற்றையும் தகுதியான முறையில் பயன்படுத்த வேண்டும் எனச் சில குழந்தைகள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், நாளையோ அல்லது நாளை மறுநாளோ, விநாசம் நடந்தால், தம்மிடமுள்ள எதுவும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். ‘என்னிடமுள்ள எதுவும் சேவைக்காகப் பயன்படுத்தப்பட மாட்டாது.’ ‘நான் அதைப் பற்றிச் சிந்தித்து அதன்பின் செய்கிறேன். முதலில் நான் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். ஒரு நேரத்தில் சிறிதளவை நான் செய்வேன்.’ இந்த எண்ணங்கள் எல்லாமே பாபாவை வந்தடைகின்றன. எவ்வாறாயினும், உதாரணத்திற்கு, நீங்கள் இன்று உங்களின் சரீரத்தைச் சேவைக்காக அர்ப்பணிக்கிறீர்கள், உலக மாற்றத்திற்காக அதிர்வலைகளைப் பரப்புவதில் நீங்கள் உங்களின் மனதை சதா பிஸியாக வைத்திருக்கிறீர்கள், உங்களிடன் என்ன செல்வம் உள்ளதோ - உங்களிடமுள்ள பேறுகளுடன் ஒப்பிடும்போது, அது எதுவுமேயில்லை - அதை நீங்கள் இன்று பயன்படுத்தினால், நாளையே விநாசம் நடக்குமாக இருந்தால், உங்களிடமுள்ள எல்லாமே தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தப்பட்டிருக்குமா அலலது அது வீணாகிப் போகுமா? அதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்! அதைச் சேவைக்காகப் பயன்படுத்தாவிட்டால், அது தகுதியான முறையில் பயன்படுத்தப்படுமா? நீங்கள் யாருக்காக அதைப் பயனுள்ள முறையில் பயன்படுத்தினீர்கள்? நீங்கள் அதை பாப்தாதாவிற்காகவே பயனுள்ள முறையில் பயன்படுத்தினீர்கள், அப்படித்தானே? எனவே, பாப்தாதா அநாதியானவர். அவர் ஒருபோதும் அழிவதில்லை. இன்று, அல்லது ஒரு மணிநேரத்திற்கு முன்னர், நீங்கள் பாப்தாதாவுடனான உங்களின் அழியாத கணக்கில் எதையாவது சேமித்தால், அதை நீங்கள் அழியாத தந்தையுடன் உங்களின் அழியாத கணக்கில் சேமித்துள்ளீர்கள். அத்துடன் ஒன்றிற்காகப் பலமில்லியன் மடங்க பலனையும் பெற்றுள்ளீர்கள். ஒன்றுக்காகப் பலமில்லியன் மடங்கு பலனைக் கொடுப்பதற்குத் தந்தை கட்டுப்பட்டுள்ளார். அவர் செல்லப் போவதில்லை. பழைய உலகமே அழிக்கப்படும், அப்படித்தானே? எனவே, நீங்கள் இதை உங்களின் இதயபூர்வமாக செய்திருக்க வேண்டும். கட்டாயத்தின் பேரில் அல்லது மற்றவர்களுடன் போட்டி போட்டு நீங்கள் எதையாவது செய்திருந்தால், முழுமையான பலனை நீங்கள் பெற மாட்டீர்கள். நிச்சயமாக உங்களுக்கு ஏதாவது கிடைக்கும். ஏனென்றால், நீங்கள் அதை அருள்பவருக்கே கொடுக்கிறீர்கள். ஆனால், முழுமையான பலனை நீங்கள் பெற மாட்டீர்கள். ஆகவே, விநாசம் 2001 இலும் எங்கேயும் தென்படவில்லை, நிகழ்ச்சிகள் இன்னமும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன, கட்டடங்களும் இன்னமும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன, பல பெரிய திட்டங்கள் செய்யப்படுகின்றன, குறைந்தபட்சம் 2001 வரையாவது எதையும் காணவில்லை! என நினைக்காதீர்கள். அது ஒருபோதும் தென்படாது. இந்த விடயங்களில் ஆதாரத்தை எடுத்து, ஒருபோதும் கவனக்குறைவானவர் ஆகாதீர்கள். அது சடுதியாகவே நடக்கும். இன்று, நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். ஒரு மணிநேரத்தில் அது நடக்கக்கூடும். அது நடக்கப் போவதில்லை. ஒரு மணிநேரத்தில் என்ன நடக்குமோ என்று எனக்குத் தெரியவில்லையே என்று நினைத்துப் பயப்படாதீர்கள். அதற்கும் சாத்தியம் உண்டு. இந்தளவிற்கு நீங்கள் என்றும் தயாராக இருக்க வேண்டும். சிவராத்திரி வரை உங்களுக்கு நேரம் இருக்கிறது என நினைக்காதீர்கள். காலத்திற்காகக் காத்திருக்காதீர்கள். காலம் உங்களின் படைப்பு. நீங்கள் மாஸ்ரர் படைப்பாளிகள். படைப்பாளி ஒருவர் தனது படைப்பில் தங்கியிருக்க மாட்டார். உங்களின் படைப்பாக இருக்கும் காலம், உங்களின் கட்டளைகளைப் பின்பற்றப் போகிறது. நீங்கள் காலத்திற்காகக் காத்திருக்கக்கூடாது. ஆனால், காலம் இப்போது உங்களுக்காகக் காத்திருக்கிறது. பாப்தாதா ஆறு மாதங்களைப் பற்றிப் பேசினார், அதனால் நிச்சயமாக ஆறு மாதங்கள் இருக்கும், அது இருக்க வேண்டும்! எனச் சில குழந்தைகள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், பாப்தாதா கூறுகிறார்: எல்லைக்குட்பட்ட விடயங்களின் ஆதாரத்தை எடுக்காதீர்கள். என்றும் தயாராக இருங்கள்! எந்தவிதமான ஆதாரத்தில் இருந்தும் விடுபட்டிருங்கள்! ஒரு விநாடியில் ஜீவன்முக்தி! ஒரு விநாடியில் ஜீவன்முக்தியின் ஆஸ்தியைக் கோரும்படி நீங்கள் மற்றவர்களுக்குச் சவால் விடுக்கிறீர்கள். எனவே, உங்களால் ஒரு விநாடியில் ஜீவன்முக்தியை அடைய முடியாதா? அதனால், காத்திருக்காதீர்கள் (இந்தசார்). ஆனால், உங்களைச் சம்பூரணம் ஆக்குவதற்கான ஆயத்தங்களைச் (இந்தசாம்) செய்யுங்கள்.

பாப்தாதா குழந்தைகளின் விளையாட்டுக்களைப் பார்த்து வியப்படைகிறார். எந்த விளையாட்டைப் பார்த்து பாப்தாதா வியப்படைகிறார்? பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? இன்று, பாபா முரளி கூறவில்லை. ஆனால் செய்திகளைத்தான் சொல்கிறார். இப்போதும், குழந்தைகள் பலர் பொம்மைகளுடன் விளையாடுவதைப் போன்றே இருக்கிறார்கள். அற்பமான சூழ்நிலைகள் என்ற பொம்மைகளுடன் விளையாடுவதும் அற்பமான விடயங்களைச் செய்வதும் நேரத்தை வீணாக்குவதாகும். அவை பக்கக்காட்சிகள். ஒரு நிறுத்தத்திற்கு வருவதென்றால், அவற்றைப் பற்றி நினைப்பதும், அவற்றின் ஆதிக்கத்திற்கு உட்படுவதும், நேரத்தை வீணாக்குவதும் ஆர்வமாக அவற்றைக் கேட்பதும் கூறுவதும், ஒரு சூழலை உருவாக்குவதுமே ஆகும். அவை அனைத்தும் இருக்கின்றன என்றால் ஒரு நிறுத்தத்திற்கு வருதல் என்று அர்த்தம். இவ்வாறு செய்வதன் மூலம், முழுமையின் இலக்கில் இருந்து நீங்கள் தொலைவில் செல்வீர்கள். நீங்கள் அதிகளவு முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்காக மிகுந்த ஆசையைக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குள் இந்தத் தூய எண்ணம் அல்லது தூய விருப்பம் உள்ளது. எவ்வாறாயினும், நீங்கள் முயற்சி செய்தாலும், தடைகள் வரும். உங்களுக்கு இரண்டு காதுகள், இரண்டு கண்கள், ஒரு வாய் என்பவை இருக்கின்றன. எனவே, நீங்கள் எல்லாவற்றையும் பார்க்கிறீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் கேட்கிறீர்கள். நீங்கள் எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறீர்கள். எவ்வாறாயினும், தந்தையின் மிகப் பழைய சுலோகனை சதா நினைவு செய்ய வேண்டும். ‘பார்த்தும் பார்க்காதிருங்கள்! கேட்டும் கேட்காதிருங்கள்!’ நீங்கள் எதையாவது கேட்டாலும் எதையும் நினைக்காதீர்கள்! நீங்கள் எதையாவது கேட்கும்போது, அதை உங்களுக்குள் அமிழ்த்திக் கொள்ளுங்கள்! அதைப் பரப்பாதீர்கள்! இந்தப் பழைய சுலோகனை நினைவு செய்வது அத்தியாவசியம். ஏனென்றால், நாளுக்கு நாள், உங்களின் பழைய சரீரங்களின் கணக்குகள் எல்லாம் தீர்க்கப்படுவதைப் போல், உங்களின் பழைய சம்ஸ்காரங்களும் பழைய நோய்களும் வெளிப்பட்டு, முடிவிற்கு வரும். அதனால், என்ன நடக்கிறது என்று தெரியாததால் அல்லது முன்னர் இல்லாத விடயங்கள் இப்போது அதிகரிக்கிறது என நினைத்துப் பயப்படாதீர்கள். முன்னர் இல்லாத விடயங்கள் இப்போது வெளிப்படுகின்றன. அவை வெளிப்படும். இது உங்களின் ஏற்றுக் கொள்ளும் சக்தி, சகித்துக் கொள்ளும் சக்தி, விஸ்தாரத்தில் இருந்து விடுபடும் சக்தி, தீர்மானிக்கும் சக்திகளுக்காக வருகின்ற பரீட்சைத்தாள் ஆகும். உங்களுக்குப் பத்து வருடங்களுக்கு முன்னர் வந்த அதே பரீட்சைகள் இப்போதும் வருகின்றனவா? எம்ஏ (கலை முதுமாணி) வகுப்பில் இருப்பவர்களுக்கு பிஏ (கலைப் பட்டப்படிப்பு) இல் கற்பவர்களின் கேள்வித்தாளைக் கொடுப்பார்களா? அதனால், ‘என்ன நடக்கிறது? இது நடக்கிறது, அது நடக்கிறது!’ என நினைத்துப் பயப்படாதீர்கள். விளையாட்டை அவதானியுங்கள், அவ்வளவுதான். குறைந்தபட்சம் பரீட்சையில் சித்தி அடையுங்கள்! திறமைச்சித்தி பெறுங்கள்!

சித்தி அடைவதற்கான இலகுவான வழிமுறை, பாப்தாதாவிற்கு நெருக்கமாக (பாஸ்) இருத்தல் என பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார். உங்களுக்கு எந்தவிதத்திலும் பயனில்லாத காட்சிகள் கடந்துசெல்லட்டும். நீங்கள் நெருக்கமாக இருங்கள்! அவை கடந்து சென்று கொண்டே இருக்கட்டும்! இது கடினமா? ஆசிரியர்களே, பேசுங்கள்! மதுவனவாசிகளே, பேசுங்கள்! மதுவனத்தைச் சேர்ந்தவர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் கெட்டிக்காரர்கள், நீங்கள் முன்னால் வாருங்கள். நீங்கள் அப்படியே செய்யலாம். பாப்தாதாவும் களிப்படைகிறார். நீங்கள் உங்களின் உரிமைகளைப் பெறுகிறீர்கள்தானே? அது நல்லது! பாப்தாதா அதிருப்தி அடையவில்லை. நீங்கள் முன்னாலேயே அமருங்கள். நீங்கள் மதுவனத்தில் வசிக்கிறீர்கள். எனவே, நீங்கள் நெருக்கமாக இருப்பதற்கு ஏதாவது விசேடமான, முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், பாஸ் என்ற வார்த்தையை நினைவில் வைத்திருங்கள். மதுவனத்தில் பல புதிய விடயங்கள் நடக்கின்றன. கள்ளர்களும் வருகிறார்கள். பல புதிய விடயங்கள் நடக்கின்றன. இப்போது பொதுவில் தந்தை எதைப் பற்றிப் பேச முடியும்? பாபா சில விடயங்களை இரகசியமாகவே வைத்திருக்கிறார். ஆனால் மதுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவற்றைப் பற்றித் தெரியும். உங்களை நீங்களே களிப்பூட்டிக் கொள்ளுங்கள்! குழப்பம் அடையாதீர்கள்! நீங்கள் ஒன்றில் குழப்பம் அடைகிறீர்கள் அல்லது அதை ஒரு களிப்பான விடயமாகக் கருதி, நீங்களும் களிப்பாக இருந்து சித்தி அடைகிறீர்கள். குழப்பம் அடைவது நல்லதா? குழப்பம் அடைவது நல்லதா? அல்லது, மகிழ்ச்சியாக இருப்பது நல்லதா? சித்தி அடைவதே நல்லது, அப்படித்தானே? நீங்கள் சித்தி அடைய விரும்புகிறீர்கள்தானே? அப்படியானால், சித்தி அடையுங்கள்! இதில் என்ன கஷ்டம் இருக்கிறது? இது கஷ்டமான விடயமே இல்லை. எதையும் பெரியதாக்குவதோ அல்லது சிறியதாக்குவதோ உங்களின் புத்தியிலேயே தங்கியுள்ளது. அறியாமைப் பாதையில் சொல்வார்கள்: இவர் கயிற்றையே பாம்பு ஆக்குகிறார்! சிந்தியில், ‘ஒரு கயிற்றைப் பாம்பு ஆக்குதல்!’ எனச் சொல்வார்கள். இத்தகைய விளையாட்டுக்களை விளையாடாதீர்கள்!இப்போது இத்தகைய விளையாட்டுக்களை நிறுத்துங்கள்!

இன்று, பாப்தாதா உங்களுக்கு இந்த விசேடமான செய்திகளைக் கூறியுள்ளார். இப்போது, பாப்தாதா நீங்கள் செய்யக்கூடிய ஓர் இலகுவான முயற்சியைப் பற்றிக் கூறப்போகிறார். அது கஷ்டமே இல்லை. நீங்கள் தந்தைக்குச் சமமாக வேண்டும் என்பதை நீங்கள் எல்லோரும் நம்புகிறீர்கள். இதை நீங்கள் நம்பினால், ஒரு கையைத் தட்டுங்கள் (உங்களின் கையை அசையுங்கள்). நீங்கள் இப்படி ஆகவேண்டும் என்பது உறுதிதானே? வெளிநாட்டவர்களே, நீங்கள் இப்படி ஆகவிரும்புகிறீர்கள்தானே? ஆசிரியர்களே - பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள்! இது ஆசிரியர்களின் அற்புதமாகும். இன்று, ஆசிரியர்களின் நல்ல செய்திகளை பாப்தாதா கேட்டார். அது என்ன நல்ல செய்தி? பாபாவிற்குச் சொல்லுங்கள்! ஆசிரியர்கள் இன்று தங்கப் பதக்கங்களைப் (பட்ஜ்) பெற்றுள்ளார்கள். தங்கப்பதக்கங்களைப் பெற்றவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பாண்டவர்கள் அதைப் பெற்றீர்களா? தந்தைக்குச் சமமாக இருப்பவர்கள் விடுபடக்கூடாது. பாண்டவர்கள் தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர்கள். அவர்கள் வெவ்வேறு வகையான தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளார்கள். பாண்டவர்கள் இராஜரீகமான, தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளார்கள். தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளவர்களுக்கு, பாப்தாதா பலமில்லியன், பில்லியன் தடவைகள் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்! வழங்குகிறார்.

இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து பாப்தாதா கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் அத்துடன் தங்கப்பதக்கங்களைப் பெற்றவர்களுக்கும், நீங்கள் பாண்டவர்களோ அல்லது சக்திகளோ, நீங்கள் எல்லோரும் பாப்தாதாவிடமிருந்து வாழ்த்துக்களைப் பெற்றதாகவே கருத வேண்டும். சிலவேளைகளில், உங்களில் சிலர் குறிப்பிட்டதொரு பணிக்குக் கருவிகள் ஆகியதும், உங்களின் சிறப்பியல்பினால் நீங்கள் வீட்டில் வசித்தாலும் தாதிகள் உங்களுக்குத் தங்கப்பதக்கம் வழங்குகிறார்கள். அதனால், ஒரு சிறப்பியல்பினால் அல்லது நீங்கள் அர்ப்பணித்திருப்பதனால் ஒரு தங்கப்பதக்கத்தைப் பெற்றிருந்தாலென்ன, அல்லது நீங்கள் சேவையில் முன்னேறிச் சென்றுள்ளதால் தாதிகளிடமிருந்து ஒரு தங்கப்பதக்கத்தைப் பெற்றிருந்தாலென்ன, தொலைவில் இருந்தவண்ணம் இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் உங்கள் எல்லோருக்கும் நிறைந்த வாழ்த்துக்கள். தொலைவில் இருந்தாலும் ஒரு தங்கப்பதக்கத்தைப் பெற்றிருக்கும் நீங்கள் எல்லோரும் உங்களின் கைகளை அசையுங்கள். நீங்கள் அசைப்பதை எல்லோராலும் பார்க்க முடியும். அவர்களும் சிரித்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

நீங்கள் செய்ய வேண்டிய இலகுவான முயற்சியைப் பற்றி பாப்தாதா கூறினார். இப்போது, நேரம் சடுதியாக வந்துவிடும். பாப்தாதா எதையும் அறிவிக்க மாட்டார். ஒரு மணிநேரத்திற்கு முன்னரும், பாப்தாதா அதை அறிவிக்க மாட்டார். பாபா அதை அறிவிக்க மாட்டார். எப்படி இலக்கங்கள் உருவாக்கப்படுகின்றன? அது சடுதியாக இடம்பெறாவிட்டால், அது எப்படி பரீட்சைத்தாளாக இருக்க முடியும்? இறுதிச் சான்றிதழ், திறமைச்சித்தி எய்துவதற்கான சான்றிதழ், சடுதியாகவே இடம்பெறும். இதனாலேயே, தாதிகளின் எண்ணம் பாப்தாதாவை வந்தடைந்துள்ளது. உங்களுக்கு இந்த எண்ணம் இருந்ததல்லவா? பாப்தாதா காட்சிகளின் சாவியைத் திருப்ப வேண்டும் என தாதிகள் இப்போது விரும்புகின்றனர். உங்களுக்கு இந்த எண்ணம் உள்ளது. நீங்கள் எல்லோரும் இதை விரும்புகிறீர்கள்தானே? பாப்தாதா சாவியைத் திருப்பட்டுமா அல்லது நீங்கள் எல்லோரும் இதற்குக் கருவிகள் ஆகுவீர்களா? அச்சா, பாப்தாதா சாவியைத் திருப்பினால் அது ஓகேயா? ‘ஹா ஜி’ என பாப்தாதா சொன்னால். (எல்லோரும் கைதட்ட ஆரம்பித்தார்கள்). முதலில் எல்லாவற்றையும் கேளுங்கள்! பாப்தாதாவிற்கு சாவியைத் திருப்புவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? எவ்வாறாயினும், அவர் யார் மூலம் அவர் அதைச் செய்வார்? யார் வெளிப்படுத்தப்பட வேண்டும்? குழந்தைகளா அல்லது தந்தையா? தந்தை குழந்தைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால், யாராவது ஒளிப்புள்ளியின் காட்சியைப் பெற்றால், சில அப்பாவி, ஆதரவற்ற மக்களால் - அவர்கள் ஆதரவற்றவர்கள், அப்படித்தானே - அது என்னவென்பதைப் புரிந்து கொள்ள முடியாது. இறுதியில், தந்தை குழந்தைகளினூடாக - சக்திகளும் பாண்டவர்களும் - வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆகவே, பாப்தாதா கூறுகிறார்: குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் தந்தைக்குச் சமமானவர் ஆகுகின்ற ஒரே எண்ணமே உள்ளது. உங்களுக்கு இதைப் பற்றிய வேறு எண்ணங்கள் இல்லையல்லவா? உங்களுக்கு ஒரேயொரு எண்ணமே உள்ளதல்லவா? நீங்கள் ஏற்கனவே இதற்காக உங்களின் கைகளை உயர்த்திவிட்டீர்கள். அதனால், பிரம்மாபாபாவைப் பின்பற்றுங்கள்! ஓகே, நீங்கள் இயல்பாகவே சரீரமற்ற புள்ளி ஆகுவீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எல்லோரும் பிரம்மாபாபாவை நேசிக்கிறீர்கள்தானே? எல்லோரும் பிரம்மாபாபாவை நேசித்தாலும், வெளிநாட்டவர்கள் அவரை அதிகளவில் நேசிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பெரும்பாலான வெளிநாட்டவர்கள் பிரம்மாபாபாவைத் தமது பௌதீகக் கண்களால் காணவில்லை. ஆனால் அவர்கள் அவரை அனுபவக்கண்ணால் பார்த்திருக்கிறார்கள். அத்துடன் அவரை மிகவும் நேசிக்கிறார்கள். பாரதத்தின் கோபிகைகளும் கோபர்களும் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், சிலவேளைகளில், பாப்தாதா வெளிநாட்டவர்களின் அனுபவக் கதைகளைக் கேட்கிறார். பாரத மக்கள் தங்களைச் சிறிது மறைமுகமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் வெளிநாட்டவர்கள் பிரம்மாபாபாவுடன் தமது கதைகளைக் கூறுகிறார்கள். எனவே, பாப்தாதாவும் அவற்றைக் கேட்டு, மற்றவர்களுக்கு அவற்றைக் கூறுகிறார். வெளிநாட்டவர்களுக்குப் பாராட்டுக்கள்! இலண்டன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, ஆசியா, ரஷ்யா, ஜேர்மனி போன்றவை. சாராம்சமாக, தொலைவில் இருந்தவண்ணம் கேட்டுக் கொண்டிருக்கும் வெளிநாட்டவர்களையும் பாப்தாதா பாராட்டுகிறார். பிரம்மாபாபா குறிப்பாக உங்களைப் பாராட்டுகிறார். பாரத மக்கள் தமது கதைகளைச் சிறிது இரகசியமாக வைத்திருக்கிறார்கள். அவர்களால் அந்தளவிற்குத் தங்களை வெளிப்படுத்த முடியவில்லை. அவர்கள் தங்களை மறைமுகமாகவே வைத்திருக்கிறார்கள். இப்போது, அவர்களை வெளிப்படுத்துங்கள்! பாரதத்திலும், மிக நல்ல குழந்தைகள் பலர் இருக்கிறார்கள். இன்றுள்ள பிரதம மந்திரியோ அல்லது ஜனாதிபதியோ அவர்களின் அனுபவங்களைக் கேட்டால், அவர்களின் கண்களில் கண்ணீர் வரும்வகையில் அத்தகைய கோபிகைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அத்தகைய அனுபவங்கள் உள்ளன! எவ்வாறாயினும், அவர்கள் தங்களை மறைவாகவே வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களை வெளிப்படுத்துவதில்லை. அத்துடன் அவர்களுக்கு அந்தளவு வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. ஆகவே, நீங்கள் எல்லோரும் பிரம்மாபாபாவை நேசிப்பதை பாப்தாதா பார்க்கிறார். இதனால் நீங்கள் உங்களை என்னவென்று அழைக்கிறீர்கள்? பிரம்மாகுமாரிகளா அல்லது சிவகுமாரிகளா? நீங்கள் உங்களை பிரம்மாகுமாரிகள் என்றே அழைக்கிறீர்கள், அப்படித்தானே? எனவே, நீங்கள் பிரம்மாபாபாவை நேசிக்கிறீர்கள், அப்படித்தானே? ஓகே, நீங்கள் சரீரமற்றவர்கள் ஆகுவதற்குச் சிறிதளவு முயற்சி செய்ய வேண்டும். எவ்வாறாயினும், பிரம்மாபாபா இப்போது என்ன ரூபத்தில் இருக்கிறார்? அவர் இப்போது என்ன ரூபத்தில் இருக்கிறார்? (தேவதை ரூபத்தில்) தந்தை பிரம்மாவிடம் அன்பு வைத்திருப்பதென்றால், தேவதை ரூபத்தின் மீது அன்பு வைத்தல் என்று அர்த்தம். ஓகே, ஒரு புள்ளி ஆகுவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கக்கூடும். ஆனால், ஒரு தேவதை ஆகுவது இலகுவானதுதானே? அது இலகுவானது என்றால் பாபாவிற்குச் சொல்லுங்கள்! தேவதை ரூபம் புள்ளி ரூபத்தைவிட இலகுவானதுதானே? உங்களின் கணக்குவழக்குகளைச் செய்யும்போது, உங்களால் ஒரு புள்ளி ஆகமுடியுமா? உங்களால் ஒரு தேவதை ஆகமுடியும்தானே? ஒரு புள்ளி ரூபத்தில் இருக்கும்போது, சிலவேளைகளில் நீங்கள் செயல்களைச் செய்வதற்காக உங்களின் பௌதீக சரீரத்திற்குள் வரவேண்டியுள்ளது. எவ்வாறாயினும், விஞ்ஞானிகள் மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஒரு ரோபோவைக் கண்டுபிடித்திருப்பதை பாப்தாதா கண்டுள்ளார். நீங்கள் இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? ஓகே, நீங்கள் அதைப் பார்க்காதிருக்கலாம். ஆனால், நீங்கள் அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? தாய்மார்களான நீங்கள் இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு இதன் படம் ஒன்று காட்டப்படும். எல்லாவற்றையும் செய்கின்ற ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது மின்சாரத்தில் இயங்கக்கூடியது. அது மின்சாரத்தின் அடிப்படையில் எல்லாவற்றையும் மிக விரைவாகச் செய்யக்கூடியது. இது விஞ்ஞானத்தின் நடைமுறை அத்தாட்சியாகும். ஆகவே, பாப்தாதா கேட்கிறார்: உங்களால் மௌன சக்தியாலும் மௌன ஒளியாலும் செயல்களைச் செய்ய முடியாதா? உங்களால் அதைச் செய்ய முடியாதா? இங்கே பொறியியலாளர்களும் விஞ்ஞானிகளும் அமர்ந்திருக்கிறார்கள்தானே? நீங்கள் ஆன்மீக ரோபோவின் ஸ்திதியை உருவாக்க வேண்டும். இதை ஆன்மீக கர்மயோகி என்று அழைக்க முடியும். ஒரு தேவதை கர்மயோகி! முதலில், நீங்கள் தயார் ஆகவேண்டும். பொறியியலாளர்களும் விஞ்ஞானிகளுமான நீங்கள் முதலில் இதை அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் இதைச் செய்வீர்களா? உங்களால் இதைச் செய்ய முடியுமா? அச்சா, இத்தகைய திட்டங்களைச் செய்யுங்கள்! இத்தகைய அசைகின்ற, ஆன்மீக, தேவதை கர்மயோகிகளை பாப்தாதா காண விரும்புகிறார். அமிர்தவேளையில் விழித்தெழுந்து, பாப்தாதாவுடன் ஒரு சந்திப்பைக் கொண்டாடுங்கள். இதயபூர்வமாக உரையாடி, பாபாவிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். ஆனால், ஒவ்வொரு நாள் அமிர்தவேளையிலும் ஒரு தேவதை கர்மயோகியாக இருக்கும் ஆசீர்வாதத்தை பாப்தாதாவிடமிருந்து பெற்று, பின்னர் உங்களின் செயல்களில் ஈடுபடுங்கள். இது சாத்தியமா?

இந்தப் புது வருடத்தில், உங்களின் சொந்த சம்ஸ்காரங்களை மாற்றுகின்ற இலட்சியத்தைக் கொண்டிருங்கள். அத்துடன் மற்றவர்கள் தங்களுடையதை மாற்றுவதில் அவர்களுடன் ஒத்துழையுங்கள். ஒருவர் பலவீனமாக இருந்தால், அவருக்கு உதவி செய்யுங்கள். அதைப் பற்றிப் பேசவோ அல்லது ஒரு சூழலை உருவாக்கவோ வேண்டாம். ஒத்துழைப்பைக் கொடுங்கள். ‘சம்ஸ்காரங்களின் மாற்றம்’ என்பதே இந்த வருடத்தின் தலைப்பாகும். தேவதையைப் போன்ற சம்ஸ்காரங்கள் மற்றும் தந்தை பிரம்மாவிற்குச் சமமான சம்ஸ்காரங்கள். எனவே, இது இலகுவா அல்லது கஷ்டமா? கொஞ்சம் கஷ்டமா? எதுவும் கஷ்டம் என்றில்லை. ஆனால் உங்களின் பலவீனங்களே அதைக் கஷ்டமானது ஆக்குகின்றன. இதனாலேயே பாப்தாதா கூறுகிறார்: ஹே, மாஸ்ர்ர சர்வசக்திவான் குழந்தைகளே, இப்போது சக்திகளின் சூழலைப் பரப்புங்கள். இப்போதுள்ள சூழலுக்கு நீங்கள் மிக, மிக, மிக அதிகம் தேவை. தற்காலத்தில், உலகில் மாசடைதல் என்ற பிரச்சனை காணப்படுகிறது. இத்தகைய உலகில், மக்களின் மனங்களில் ஒரு கணநேர அமைதியினதும் சந்தோஷத்தினதும் சூழல் தேவைப்படுகிறது. ஏனென்றால், காற்றின் மாசை விட, மனங்களின் மாசு அதிகளவில் காணப்படுகிறது. அச்சா.

நிச்சயமாகத் தந்தைக்குச் சமமானவர் ஆகுகின்ற இலட்சியத்தைக் கொண்டிருக்கும் எங்கும் உள்ள எல்லோருக்கும், நம்பிக்கையுள்ள புத்திகளால் வெற்றியடையும் ஆத்மாக்களுக்கும் பழைய உலகையும் பழைய சம்ஸ்காரங்களையும் மாற்றுகின்ற திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்ட மாஸ்ரர் சர்வசக்திவான் ஆத்மாக்களுக்கும் ஏதாவதொரு காரணம், சூழல், சுபாவம் அல்லது சம்ஸ்காரத்தால் பலவீனமாக இருக்கும் தமது சகபாடிகளுக்கு சதா ஒத்துழைப்பை வழங்கும் ஆத்மாக்களுக்கும் காரணங்களைப் பார்க்காமல் தீர்வைக் கண்டுபிடிக்கும் தைரியசாலி ஆத்மாக்களுக்கும் சதா தந்தை பிரம்மாவின் அன்பின் பிரதிபலனை வழங்கும் தேவதை கர்மயோகி ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவிடமிருந்தும் அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மற்றவர்களுக்காகத் தூய, சாதகமான எண்ணங்களின் ஸ்திதியைக் கொண்டிருந்து, எல்லோராலும் நேசிக்கப்படுவதன் மூலம் எல்லோருடைய ஒத்துழைப்பையும் பெறுவீர்களாக.

மற்றவர்களுக்காகத் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்காக எல்லோரும் தமது இதயங்களில் அன்பைக் கொண்டிருப்பார்கள். இத்தகைய அன்பே அவர்களை ஒத்துழைப்பவர்கள் ஆக்குகிறது. எங்கே அன்பு உள்ளதோ, அங்கே மக்கள் தமது நேரத்தையும் பணத்தையும் ஒத்துழைப்பையும் எப்போதும் கொடுப்பதற்குத் தயாராக இருப்பார்கள். எனவே, மற்றவர்களின் மீது நீங்கள் கொண்டிருக்கும் தூய, சாதகமான எண்ணங்கள், மற்றவர்களை உங்கள் மீது அன்பானவர்கள் ஆக்கும். அந்த அன்பானது, உங்களுக்குச் சகல வகையான ஒத்துழைப்பையும் பெற்றுத் தரும். ஆகவே, உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் சதா தூய, சாதகமான எண்ணங்களால் நிறைந்திருங்கள். அத்துடன், எல்லோரையும் அன்பானவர்களாகவும் ஒத்துழைப்பானவர்களாகவும் ஆகச் செய்யுங்கள்.

சுலோகம்:
இந்த வேளையில் அருள்பவர்கள் ஆகுங்கள். உங்களின் இராச்சியத்தில் உள்ள ஒவ்வோர் ஆத்மாவும் ஒவ்வொரு பிறவியிலும் நிரம்பியவர் ஆகுவார்.


அறிவித்தல்: இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை, உலக தியான யோகா தினம். பிராமணக் குழந்தைகள் எல்லோரும் ஒன்றுகூடி மாலை 6.30 இலிருந்து 7.30 வரை யோகா தபஸ்யாவில் அமருங்கள். குறிப்பாக, மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற ரூபத்தில் ஸ்திரமாக இருங்கள். இறைவனின் சக்திகளை அனுபவம் செய்யும் அதேவேளை, பலவீனமாகவும் சக்தியற்றும் இருக்கும் ஆத்மாக்களுக்கு உங்களின் நல்லாசிகளின் கதிர்களை வழங்குங்கள். அத்துடன் எங்கும் சக்திவாய்ந்த சூழலை உருவாக்கும் சேவையைச் செய்யுங்கள்.