21.08.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையே அனைவரிலும் அதிஇனிமையான சக்கரின் ஆவார். ஆகவே ஏனைய அனைத்தையும் துறந்து, ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள், நீங்களும் இனிமையான சக்கரின் ஆகுவீர்கள்.
கேள்வி:
தந்தையிடம் இருந்து ஸ்ரீமத்தைப் பெறுவதால், எந்த சம்ஸ்காரத்தை உங்களுக்குள் நீங்கள் நிரப்பிக் கொள்கின்றீர்கள்?பதில்:
எதிர்காலத்தில் ஓர் ஆலோசகரின் தேவை எதுவுமில்லாது முழு இராச்சியத்தையும் ஆட்சி செய்கின்ற சம்ஸ்காரத்தை ஆகும். உங்களுடைய எதிர்கால இராச்சியத்தை ஆட்சிசெய்வதற்கான ஸ்ரீமத்தைப் பெறுவதற்கே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். அரைக் கல்பத்துக்கு நீங்கள் எவரிடம் இருந்தும் ஆலோசனை பெற வேண்டிய தேவை இல்லாதவாறு அத்தகையதொரு ஸ்ரீமத்தைத் தந்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். பலவீனமான புத்தி உடையவர்களுக்கு ஆலோசனை பெறுவதற்கான தேவையுள்ளது.பாடல்:
நீங்களே தாயும், தந்தையும்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகள் என யார் கூறினார்? நிச்சயமாக ஒரேயொரு ஆன்மீகத் தந்தையே இவ்வாறு கூறியிருக்க வேண்டும். இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையின் முன்னால் நேரடியாக அமர்ந்திருக்கின்றீர்கள், அவர் உங்களுக்குப் பெருமளவு அன்புடன் விளங்கப்படுத்துகின்றார். ஆன்மீகத் தந்தையைத் தவிர, உலகிலுள்ள வேறெவராலும் அனைவருக்கும் சந்தோஷத்தையும், அமைதியையும் கொடுக்க முடியாது அல்லது அவர்களை அவர்களது துன்பத்தில் இருந்து விடுவிக்க முடியாது என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இதனாலேயே மக்கள் துன்ப நேரத்தில் தந்தையைத் தொடர்ந்தும் நினைவு செய்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் நேரடியாகவே அவர் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். பாபா உங்களைச் சந்தோஷ தாமத்திற்குச் செல்வதற்குத் தகுதியானவர்கள் ஆக்குகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களைச் சதா சந்தோஷமான உலகின் அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையின் முன்னால் நீங்கள் வந்துள்ளீர்கள். அவர் கூறுவதை நேரடியாகச் செவிமடுப்பதற்கும், தொலைவில் இருந்து செவிமடுப்பதற்கும் இடையில் பெருமளவு வித்தியாசம் உள்ளதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் மதுவனத்தில் அவருக்கு முன்னால் நேரடியாக வருகின்றீர்கள். மதுவனம் மிகவும் பிரபல்யமானது. அவர்கள் மதுவனத்திலும் பிருந்தாவனத்திலும் ஸ்ரீகிருஷ்ணரின் ரூபத்தைச் சித்தரித்துள்ளார்கள். எவ்வாறாயினும், ஸ்ரீகிருஷ்ணர் இங்கே இருப்பதில்லை. இங்கே, அசரீரியான தந்தையே, குழந்தைகளாகிய உங்களைச் சந்திக்கின்றார். நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையைத் தொடர்ச்சியாகக் கொண்டிருக்க வேண்டும். ஆத்மாவாகிய நான், தந்தையிடம் இருந்து, எனது ஆஸ்தியைக் கோரிக் கொள்கின்றேன். முழுக் கல்பத்திலும் இதைச் செய்வதற்கான நேரம் இது மாத்திரமே ஆகும். இதுவே சக்கரத்தின் அழகான சங்கமயுகம். இது அதிமேன்மையான யுகம் என்று அழைக்கப்படுகின்றது. இதுவே மனிதர்கள் அனைவரும் அதிமேன்மையானவர்கள் ஆகுகின்ற சங்கமயுகம் ஆகும். சகல மனித ஆத்மாக்களும் இப்பொழுது தமோபிரதானாக உள்ளனர், அவர்கள் மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகுகின்றார்கள். ஆத்மாக்கள் சதோபிரதானாக இருக்கின்ற பொழுது மக்கள் அதிமேன்மையானவர்களாக இருக்கின்றார்கள். ஆத்மாக்கள் தமோபிரதானாக இருக்கின்ற பொழுது, மக்கள் சீரழிந்தவர்களாக இருக்கின்றார்கள். ஆத்மாக்களின் தந்தை இங்கே அமர்ந்திருந்து நேரடியாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். சரீரம் அல்ல, ஆத்மாவே முழுப் பாகத்தையும் நடிக்கின்றார். ஆத்மா, சரீரம் இரண்டும் ஒன்றாக உள்ளபொழுதே, ஒரு பாகம் நடிக்கப்படுகின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் ஆதியில் அமைதி தாமமான, அசரீரி உலகவாசிகள் என்பது உங்கள் புத்திகளில் உள்ளது. வேறு எவருமே இதை அறிய மாட்டார்கள். அவர்கள் தாங்களாகவும் இதைப் புரிந்துகொள்ள மாட்டார்கள், மற்றவர்களுக்கும் அவர்களால் விளங்கப்படுத்த முடியாது. இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ள பூட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் உண்மையில் பரந்தாமத்தில் வசிக்கின்றார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அது அசரீரி உலகமாகும். இது பௌதீக உலகமாகும். இங்கே ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் நடிகர்கள். நாங்களே எங்களுடைய பாகங்களை நடிப்பதற்கு முதலில் வருபவர்கள். பின்னர் ஏனையோர் வரிசைக்கிரமமாகத் தொடர்ந்தும் கீழிறங்கி வருகின்றார்கள். ஒரேநேரத்தில் நடிகர்கள் அனைவரும் கீழிறங்கி வரமுடியாது; வெவ்வேறு விதமான நடிகர்கள் தொடர்ந்தும் வருகின்றார்கள். நாடகத்தின் முடிவின் பொழுதே அனைவரும் ஒன்றாக வருகின்றனர். ஆத்மாக்கள் ஆதியில் அமைதிதாம வாசிகள், அவர்கள் இங்கே தங்களது பாகங்களை நடிக்க வருகின்றார்கள் என்ற புரிந்துணர்வை நீங்கள் இப்பொழுது பெற்றுள்ளீர்கள். தந்தை தனது பாகத்தைச் சதாகாலமும் நடிப்பதற்கு வருவதில்லை. நாங்களே எங்களது பாகங்களை நடிக்கின்ற பொழுது தமோபிரதான் ஆகுபவர்கள். பாபா கூறுவதை நேரடியாகச் செவிமடுப்பதனால், குழந்தைகளான நீங்கள் இப்பொழுது பெருமளவு களிப்படைகின்றீர்கள். முரளியை வாசிக்கும் பொழுது அந்தளவு சந்தோஷம் அனுபவம் செய்யப்படுவதில்லை. இங்கே நீங்கள் அவரின் முன்னிலையில் இருக்கின்றீர்கள். சத்தியயுக ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்துக்குச் சொந்தமானவர்களே முதலில் வருகின்றார்கள். பாரதம் தேவதேவியரின் இடமாக இருந்தது என்பதையும், அது இப்பொழுது அவ்வாறில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அவர்களின் விக்கிரகங்களைப் பார்ப்பதால், அது நிச்சயமாக அவ்வாறு இருந்திருக்க வேண்டும். தேவர்களாகிய நாங்களே முதலில் இருந்தோம். நீங்கள் உங்களுடைய சொந்தப் பாகங்களை நினைவு செய்வீர்கள், இல்லையா? அல்லது நீங்கள் அவற்றை மறந்து விடுவீர்களா? தந்தை கூறுகின்றார்: நீங்கள் அந்தப் பாகங்களை நடித்தீர்கள். இதுவே நாடகமாகும். புதிய உலகம் பின்னர் பழையதாக ஆகுகின்றது. ஆரம்பத்தில் மேலிருந்து கீழே வருகின்ற ஆத்மாக்கள், சத்தியயுகத்திற்குள் பிரவேசிக்கின்றார்கள். இவ் விடயங்கள் அனைத்தும் இப்பொழுது உங்கள் புத்திகளில் உள்ளன. நீங்களே சத்தியயுக ஆரம்பத்தில் அந்தப் பாகங்களை நடிக்க வந்தவர்கள். நீங்கள் உலக அதிபதிகளான, சக்கரவர்த்திகளாகவும், சக்கரவர்த்தினிகளாகவும் இருந்தீர்கள். அது உங்கள் இராச்சியமாக இருந்தது. இப்பொழுது எந்த இராச்சியமும் இல்லை. எவ்வாறு ஓர் இராச்சியத்தை ஆட்சிசெய்வது என நீங்கள் கற்கின்றீர்கள். அங்கே ஆலோசகர்கள் இருக்க மாட்டார்கள்; அங்கே எவருக்கும் ஆலோசனை கொடுக்க வேண்டிய தேவையும் இருக்காது. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் அதிமேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். எனவே அங்கே எவரிடமிருந்தும் ஆலோசனை பெற வேண்டிய தேவையில்லை. நீங்கள் எவரிடமாவது ஆலோசனை பெற வேண்டி இருந்திருப்பின், உங்களுடைய சொந்தப் புத்தி பலவீனமாக இருந்தது என்பது புரிந்து கொள்ளப்படும். இப்பொழுது நீங்கள் பெறுகின்ற ஸ்ரீமத், சத்தியயுகத்திலும் உங்களுடனேயே இருக்கும். ஆத்மாக்களான நீங்கள் இப்பொழுது புத்துணர்ச்சி உடையவர்கள் ஆகுகின்றீர்கள். குழந்தைகளான நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள்; ஆகவேண்டும். நீங்கள் அமைதி தாமத்தில் இருந்து இங்கே பேசும் உலகிற்குள் வந்துள்ளீர்கள். பேசும் உலகிற்கு நீங்கள் வரும்வரை செயல்கள் செய்யப்பட முடியாது. இந்த விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். தந்தை இந்த ஞானம் அனைத்தையும் கொண்டிருப்பது போன்று, ஆத்மாக்களாகிய நீங்களும் உங்களில் இந்த ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். ஆத்மா கூறுகின்றார்: நான் ஒரு சரீரத்தை விடுத்து, எனது சம்ஸ்காரங்களுக்;கு ஏற்ப இன்னொன்றை எடுக்கிறேன். நிச்சயமாக மறுபிறவி இருக்கின்றது. ஓர் ஆத்மா தான் பெற்றுள்ள பாகத்தைத் தொடர்ந்தும் நடிப்பதுடன், தனது சம்ஸ்காரங்களுக்கேற்ப தொடர்ந்தும் மறுபிறவி எடுக்கின்றார். நாளுக்கு நாள், ஒவ்வோர் ஆத்மாவினதும்; தூய்மையின் கலை தொடர்ந்தும் குறைவடைகின்றது. ‘தூய்மையின்மை’ என்ற வார்த்தை துவாபர யுகத்தின் பின்னரே பயன்படுத்தப்படுகின்றது. எவ்வாறாயினும், எவ்வாறு ஒரு புதிய கட்டடத்துக்கும், ஒரு மாதம் பழையதான கட்டடத்திற்கும் இடையில் சிறிது வித்தியாசம் இருக்கின்றதோ, அவ்வாறே இங்கும் ஏற்கனவே சிறிது வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. பாபா உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுப்பதற்கு வந்துள்ளேன். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப, ஓர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். தந்தை எவருக்கும் வித்தியாசம் காட்டுவதில்லை. அவர் ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை அறிவார். ஆத்மாக்களான நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காகவே முயற்சி செய்கின்றீர்கள். இங்கே ஆண் அல்லது பெண் என்ற பார்வை எதுவும் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சகோதரர்கள், தந்தை உங்களுக்குக் கற்பித்து, ஓர் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். தந்தை மாத்திரமே ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுடன் பேசி, கூறுகின்றார்: ஓ எனது அன்பிற்கினிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளே, நீண்டகாலமாக உங்களது பாகங்களை நடித்து விட்டு, இப்பொழுது உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்காக, வந்து என்னைச் சந்தித்துள்ளீர்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே உங்கள் பாகங்கள் நிச்சயிக்கப்பட்டுள்ளன. நடிகர்களாகிய நீங்கள் தொடர்ந்தும் உங்கள் பாகங்களை நடிக்கின்றீர்கள். ஆத்மாக்கள் அழியாதவர்கள், அவர்களில் அழியாத பாகங்கள் பதியப்பட்டுள்ளன. சரீரங்கள் தொடர்ந்தும் மாற்றம் அடைகின்றன. ஆத்மாக்கள் தூய்மையானவர்களில் இருந்து தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றனர். சத்திய யுகத்தில் அவர்கள் தூய்மையாக உள்ளார்கள். இது தூய்மையற்ற உலகம் என்று அழைக்கப்படுகின்றது. இப்பொழுது சந்தோஷ தாமம் ஸ்தாபிக்கப்படுகின்றது. மீதி ஆத்மாக்கள் அனைவரும் முக்திதாமத்தில் வசிப்பார்கள். எல்லையற்ற நாடகம் இப்பொழுது முடிவிற்கு வந்து விட்டது. சகல ஆத்மாக்களும் நுளம்புக் கூட்டத்தைப் போன்று வீடு திரும்புவார்கள். இப்பொழுது கீழிறங்கி, தூய்மையற்ற உலகிற்குள் வருகின்ற ஆத்மாவுக்கு என்ன பெறுமதி இருக்கும்? உண்மையில் புதிய உலகில் முதலாவதாகக் கீழிறங்கி வருகின்ற ஆத்மாக்களுக்கே பெறுமதி உள்ளது. அந்தப் புதிய உலகம் இப்பொழுது பழையதாகி விட்டது. துன்பம் என்பதன் குறிப்பே இல்லாத, புதிய உலகில் தேவர்கள் இருந்தார்கள். இங்கே, முடிவற்ற துன்பமே உள்ளது. தந்தை வந்து, துன்பகரமான, பழைய உலகிலிருந்து உங்களை விடுவிக்கின்றார். எவ்வாறு பகலின் பின்னர் இரவும், இரவின் பின்னர் பகலும் இருக்கின்றனவோ, அவ்வாறே இந்தப் பழைய உலகமும் நிச்சயமாக மாற வேண்டும். நீங்கள் உண்மையில் சத்தியயுகத்தில் அதிபதிகள் ஆகுவீர்கள் எனப் புரிந்து கொள்வதால், நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையையும், தந்தையை நினைவுசெய்ய வேண்டும் என்ற நம்பிக்கையையும் ஏன் நீங்கள் கொண்டிருக்கக்கூடாது? முயற்சி செய்யப்படவே வேண்டும்! ஓர் இராச்சியத்தை அடைவது இலகுவானதல்ல, நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். உங்களை மீண்டும், மீண்டும் மறக்கச் செய்வது மாயையின் அற்புதமாகும். நீங்கள் இதற்கு ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும். நீங்கள் எனக்குச் சொந்தமாக ஆகுவதால் மாத்திரம், நினைவு ஸ்திரமாகி விடும் என்றில்லை, இல்லாவிடின், நீங்கள் என்ன முயற்சியைச் செய்வீர்கள்? இல்லை, நீங்கள் வாழும் வரைக்கும், தொடர்ந்தும் முயற்சி செய்து, இந்த ஞானாமிர்தத்தை அருந்த வேண்டும். இது உங்களின் இறுதிப்பிறவி என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். உங்களின் சரீர உணர்வைத் துறந்து ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். உங்கள் குடும்பங்களுடன் இல்லறத்தில் வாழுங்கள், ஆனால் நிச்சயமாக முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்து, தந்தையை நினைவு செய்யுங்கள். “நீங்களே தாயும், தந்தையும்”. அந்தப் புகழ் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியது. நீங்கள் அல்ஃபாவை நினைவு செய்ய வேண்டும். நான் மாத்திரமே சக்கரீன் ஆவேன். எனவே நீங்கள் அனைவரும் ஏனைய அனைத்தையும் துறந்து, மிக இனிமையான சக்கரீனாகவும் வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது தமோபிரதானாகி விட்டீர்கள். எனவே உங்களைச் சதோபிரதான் ஆக்குவதற்கு, நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். தந்தையிடம் இருந்து தங்கள் சந்தோஷம் எனும் ஆஸ்தியைப் பெறுமாறு அனைவருக்கும் கூறுங்கள். சத்தியயுகத்தில் சந்தோஷம் உள்ளது. தந்தை சந்தோஷ தாமத்தை ஸ்தாபிக்கின்றார். தந்தையை நினைவுசெய்வது மிக இலகுவானது, ஆனால் மாயையிடம் இருந்து பெருமளவு எதிர்ப்பு இருக்கின்றது. எனவே முயற்சி செய்து என்னை நினைவு செய்யுங்கள், கலப்படம் அகற்றப்படும். “ஒரு விநாடியில் ஜீவன்முக்தி” என்பது நினைவு கூரப்படுகின்றது. இந்த நாடகத்தில் ஒவ்வொருவரும் தனது பாகத்தை மீண்டும் மீண்டும் நடிக்க வேண்டும். இந்த நாடகத்தில் நாங்களே மிகப்பெரிய பாகத்தைக் கொண்டுள்ளோம். நாங்களே அதிகபட்ச சந்தோஷத்தைப் பெறுகின்றவர்கள். தந்தை கூறுகின்றார்: உங்களுடைய தேவ தர்மமே பெருமளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றது. மீதி அனைவரும் தங்களது கர்மக் கணக்குகளைத் தீர்த்த பின்னர், அமைதி தாமத்திற்குச் செல்வார்கள். நாங்கள் ஏன் அதிகளவு விரிவாக்கத்தினுள் செல்ல வேண்டும்? அனைவரையும் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு, தந்தை வருகின்றார். அவர் அனைவரையும் நுளம்புக் கூட்டம் போன்று திரும்பவும் அழைத்துச் செல்கின்றார். சரீரங்கள் அழிக்கப்படும், அழியாத ஆத்மாக்கள் தங்கள் கர்மக் கணக்குகளைத் தீர்த்து, வீடு திரும்புவார்கள். ஓர் ஆத்மா தீயில் இடப்படுவதால் தூய்மையாகுவார் என்றில்லை. நினைவு செய்தல் என்ற வடிவில், யோகத்தின் மூலமே ஆத்மாக்கள் தூய்மையாக வேண்டும். இதுவே யோகத் தீயாகும். சீதை அக்கினி பிரவேசம்; செய்ததாக அவர்கள் நாட்டிய நாடகம் ஒன்றை;த தயாரித்திருக்கிறார்கள், ஒருவர் மாத்திரம் அக்கினி பிரவேசம் செய்கின்றார் என்றில்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இந்நேரத்தில் சீதைகளாகிய நீங்கள் அனைவரும் தூய்மை அற்றுள்ளீர்கள். நீங்கள் இராவண இராச்சியத்தில் உள்ளீர்கள். இப்பொழுது ஒரேயொரு தந்தையின் நினைவின் மூலம் தூய்மை ஆகுங்கள். ஒரேயொரு இராமர் மாத்திரமே இருக்கின்றார். மக்கள் “தீ” என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே சீதை அக்கினிப் பிரவேசம் செய்ததாக நினைக்கின்றார்கள். அந்தத் தீயிற்கும் இந்த யோகத் தீயிற்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. பரமாத்மாவுடன் யோகம் செய்வதால் ஆத்மாக்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுகின்றார்கள்; பகலுக்கும், இரவுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் உள்ளது. ஆத்மாக்கள் அனைவரும் சீதைகள். அவர்கள் துன்பக் குடிலான, இராவணனின் சிறையில் உள்ளார்கள். இங்கேயுள்ள சந்தோஷம் காக்கையின் எச்சம் போன்றது. சுவர்க்கத்தில் பெருமளவு சந்தோஷம் உள்ளது. ஆகவே குழந்தைகளாகிய நீங்கள், உங்களுடைய புத்தியை இந்த ஞான இரத்தினங்களால் நிரப்ப வேண்டும். நீங்கள் எவ்விதமான சந்தேகத்தையும் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் சரீர உணர்வு உடையவர் ஆகும்பொழுது, பலவிதமான கேள்விகள் எழுகின்றன. அப்பொழுது தந்தை உங்களுக்குச் செய்யக் கொடுத்த வியாபாரத்தை நீங்கள் செய்ய மாட்டீர்கள். நீங்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்களாக வேண்டும் என்பதே பிரதான விடயம். வேறெந்த எண்ணங்களையும் உருவாக்க வேண்டிய தேவையில்லை. இது தூய்மையற்ற உலகம், அது தூய உலகம் ஆகும். பிரதான விடயம் தூய்மை ஆகுவதாகும். உங்களை யார் தூய்மை ஆக்குகின்றார் என்பது எவருக்குமே தெரியாது. மக்களிடம், அவர்கள் தூய்மை அற்றவர்கள் என்று நீங்கள் கூறும்பொழுது, அவர்கள் குழப்பம் அடைகின்றார்கள். அவர்களில் எவரும் தங்களை விகாரமானவர்களாகக் கருதுவதில்லை. “அனைவருமே குடும்பத்தவர்கள். இராமர், சீதை, இலக்ஷ்மி, நாராயணன் ஆகியோருக்கும் குழந்தைகள் இருந்தனர். அங்கேயும் அவர்களுக்குக் குழந்தைகள் இருக்கின்றனர்” என்றே அவர்கள் கூறுகின்றனர். அது விகாரமற்ற உலகம் என்று அழைக்கப்படுவதை அவர்கள் மறந்துவிட்டார்கள். அது சிவாலயம் ஆகும். தந்தை தொடர்ந்தும் குழந்தைகளாகிய உங்களுக்குப் பல யுக்திகளைக் காட்டுகின்றார். அவர் தந்தையும், ஆசிரியரும், அத்துடன் அனைவருக்கும் சற்கதி அருள்கின்ற, குருவும் ஆவார். வெளியே ஒரு குரு மரணிக்கின்ற பொழுது, அவரது குழந்தையே கதியில் அமர வைக்கப்படுகின்றார். எவ்வாறு அவரால் உங்களை சற்கதிக்குள் அழைத்துச் செல்ல முடியும்? ஒரேயொருவர் மாத்திரமே அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஆவார். இராவண இராச்சியத்தில் சீரழிவும், இராம இராச்சியத்தில் சற்கதியும் உள்ளன. தந்தை அனைவரையும், தூய்மையாக்கி, திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார். பின்னர் எவருமே உடனடியாகத் தூய்மையற்றவர் ஆகுவதில்லை; அவர்கள் தொடர்ந்தும் வரிசைக்கிரமமாக, சதோபிரதான் ஸ்திதியிலிருந்து சதோ, ரஜோ, தமோ, ஸ்திதிகளுக்கூடாகக் கீழிறங்கி வருகின்றார்கள். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தை உங்கள் புத்தியில் கொண்டுள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது கலங்கரை விளக்கங்கள் போன்றவர்கள். இந்தச் சக்கரம் மற்றும், அது எவ்வாறு சுழல்கின்றது என்ற ஞானத்தை நீங்கள் இப்பொழுது கொண்டுள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது, ஏனைய அனைவருக்கும் பாதையைக் காட்ட வேண்டும். நீங்கள் அனைவரும் ஒரு சேனையினர். நீங்களே மற்றவர்களுக்கும் பாதையைக் காட்டுகின்ற விமானிகள். அனைவருக்கும் கூறுங்கள்: இப்பொழுது அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்து, இந்தத் துன்ப தாமமான, இந்தக் கலியுகத்தை மறந்து விடுங்கள். நாங்கள் உங்களுக்கு மிக நல்ல பாதையைக் காட்டுகின்றோம். ஒரேயொரு அசரீரியான தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். அவரை நினைவு செய்வதால், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். ஆத்மாக்களான உங்களை மூடியிருக்கின்ற கறை அகற்றப்படும். கடவுள் பேசுகின்றார்: மன்மனாபவ! கடவுள் சிவன் பேசுகின்றார்: விநாச காலத்தில் அன்பற்ற புத்தியைக் கொண்டிருப்பவர்கள் விநாசத்திற்கு இட்டுச் செல்லப்படுவர், விநாச காலத்தில் பரமாத்மா பரமதந்தையிடம் அன்பான புத்தியைக் கொண்டுள்ளவர்கள் வெற்றிக்கு இட்டுச் செல்லப்படுவார்கள். எந்தளவிற்கு அதிகமாக உங்களின் புத்தியில் அன்புள்ளதோ, அந்தளவிற்கு நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். சரீர உணர்வு உடையவர் ஆகுவதால், உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாதிருக்கும். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியை இந்த ஞான இரத்தினங்களால் நிரப்புங்கள். எவ்விதமான சந்தேகமும் கொள்ளாதீர்கள். இயன்றளவிற்குத் தந்தையை நினைவுசெய்வதற்கு முயற்சி செய்து, தூய்மை ஆகுங்கள். கேள்விகள் என்ற விரிவாக்கத்தினுள் செல்லாதீர்கள்.2. ஒரேயொரு தந்தைக்கான உண்மையான அன்பைக் கொண்டிருந்து, அவரைப் போல் இனிமையான சக்கரீன் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
சதா ஞான சூரியனின் முன்னிலையில் இருப்பதால், சதா அகநோக்கு உடையவராக இருந்து, உங்கள் சுயமரியாதையில் நிலைத்திருப்பீர்களாக.நீங்கள் சூரியனைப் பார்க்கின்ற போது, நீங்கள் நிச்சயமாக சூரியக் கதிர்களை பெறுகிறீர்கள். அவ்வாறாகவே, சதா ஞான சூரியனான தந்தையின் முன்னிலையில் இருக்கின்ற குழந்தைகள், சகல தெய்வீகக் குணங்களையும் தாம் ஞான சூரியனிடம் இருந்து பெறுவதாக உணர்கின்றார்கள். உங்களால் அகநோக்கு என்ற பிரகாசத்தையும், சங்கமயுகத்தின் சுயமரியாதை என்ற ஆன்மிக போதையையும் அத்துடன் எதிர்காலத்தையும் அவர்களின் முகத்தில் பார்க்க முடியும். இதற்கு, எப்பொழுதும் இவை இறுதிக் கணங்கள் என்ற விழிப்புணர்வில் நிலைத்திருங்கள். எந்த நேரத்திலும் உங்கள் சரீரம் அழிந்துவிட முடியும்; என்பதால் சதா அன்பான புத்தியைக் கொண்டிருந்து ஞான சூரியனின் முன்னிலையில் இருந்து, அகநோக்கில் இருப்பதையும் சுயமரியாதையையும் அனுபவம் செய்யுங்கள்.
சுலோகம்:
சதா பறக்கின்ற ஸ்திதியில் பறப்பது என்றால், எந்தவொரு ஜமேலா (குழப்பங்கள்) என்ற மலையையும் கடப்பதாகும்.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
தூய்மை மகத்துவமானது. இதுவே யோகி வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ளது. எவரையிட்டும் தூய்மையின்மையின் சுவடு சிறிதளவு இருந்தாலும், தூய தந்தை யார் என்பதையோ அவர் எவ்வாறானவர் என்பதையோ அறிந்து அவரின் நினைவைக் கொண்டிருக்க முடியாது. ஆகையால் உங்கள் மனதிலுள்ள எந்தத் தூய்மையின்மையின் சுவடையும் முடித்து முற்றிலும் தூய்மையாகவும் சுத்தமாகவும் ஆகுங்கள். சதா நீங்கள் கொண்டிருக்க வேண்டிய விழிப்புணர்வு: நான் இந்தச் சரீரத்தில் வாழ்கின்ற பூஜிக்கத் தகுதிவாய்ந்த ஆத்மா.